Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • thiruvannamalai-karthigai-car-festival

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவின் 7ம் நாளான இன்று காலை தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது. இதில் லட்சக்கணக்கில் பக்தர்கள் கலந்துகொண்டு பக்தி கோஷங்கள் எழுப்பினர்.

    விநாயகர், சுப்பிரமணியர், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய தேர்கள் என 5 தேர்கள் இன்று ஒரே நாளில் வலம் வரும். இன்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு, பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து மேளதாளம் முழங்க, கோயிலில் இருந்து எடுத்து வரப்பட்டு, தேரடி வீதியில் அலங்கரித்து நிறுத்தப்பட்ட தேர்களில் எழுந்தருளினர்.

    முதலாவதாக விநாயகர் தேர் காலை 6.45 மணிக்கு புறப்பட்டது. அப்போது ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என்ற பக்தி முழக்கத்துடன் பக்தர்கள் வடம் பிடித்து தேரை மாடவீதிகளில் இழுத்துச்சென்றனர். விநாயகர் தேர் நிலைக்கு வந்து சேர்ந்ததையடுத்து சுப்பிரமணியர் தேர் புறப்பட்டது. இதில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் எழுந்தருளினர்.

    சுப்பிரமணியர் தேர் நிலைக்கு வந்ததும் ‘மகாரதம்’ என அழைக்கப்படும் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் தேர் புறப்பட்டது. இந்த தேர் நிலைக்கு வந்தபிறகு பராசக்தியம்மன் தேர் புறப்படும். இந்த தேரை விரதம் இருக்கும் பெண்கள் மட்டுமே மாட வீதிகளில் இழுத்து வருவார்கள் என்பது சிறப்பாகும்.

    இதையடுத்து சண்டிகேஸ்வரர் தேர் மாடவீதியில் பவனி வரும். தேர் திருவிழாவின்போது தங்களுக்கு குழந்தை வரம் அருளிய சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் தம்பதியினர் இன்று காலை முதலே கரும்பு தொட்டிலில் குழந்தையை வைத்து மாடவீதியை வலம் வந்தனர்.

  • kaigasi-egadasi-vizha

    திருப்பதிக்கும், ஸ்ரீரங்கத்திற்கும் நீண்டகாலமாக மங்கலப் பொருட்கள் பரிவர்த்தனை இருந்து வருகிறது. திருப்பதி வேங்கடமுடையான் கோயிலில் இருந்து புதிய பட்டு வஸ்திரங்கள், மாலை, பச்சை கற்பூரம் உள்ளிட்ட மங்கலப்பொருட்கள் ஸ்ரீரங்கம் கொண்டு வரப்பட்டு கார்த்திகை மாதம் நடக்கும் கைசிக ஏகாதசி விழாவில் ரங்கநாதருக்கும், நம்பெருமாளுக்கும், தாயாருக்கும், உடையவருக்கும் காணிக்கையாக சமர்ப்பிக்கப்படும்.

    இதேபோல் ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து பட்டுவஸ்திரம், மாலை, சந்தனம், பழங்கள் உள்ளிட்ட பிரசாதங்கள் திருப்பதி வேங்கடமுடையான் கோயிலுக்கு எடுத்துச்செல்லப்பட்டு ஆண்டுதோறும் ஆடி மாதப்பிறப்பன்று திருப்பதியில் நடக்கும் ஆனிவார ஆஸ்தான உற்சவத்தன்று சமர்ப்பிக்கப்படும்.

    ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் கைசிக ஏகாதசி விழா கொண்டாடப்படவுள்ளதால் திருப்பதி கோயிலில் இருந்து வஸ்திர மரியாதை நேற்று காலை 6.30 மணிக்கு எடுத்து வரப்பட்டது. திருப்பதி கோயில் நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால், பொக்கிஷ அதிகாரி குருரா ஜன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் இந்த வஸ்திர மரியாதையை கொண்டு வந்தனர்.

    திருப்பதி வஸ்திர மரியாதைக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் நிர்வாகம் சார்பில் இணை ஆணையர் ஜெயராமன் தலைமையில் சுந்தர் பட்டர், அறங்காவலர் குழுத் தலைவர் வேலுசீனிவாசன், அறங்காவலர்கள் சீனிவாசன், ரங்கச்சார்யா, கவிதா ஜெகதீசன் உள்ளிட்டோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

  • vasthu-dosham-parigarangal

    சில பரிகாரங்கள் மூலம் வாஸ்துவினால் ஏற்படும் தோஷம் விலகி நலன் பெறலாம் என்பது நம்பிக்கை.

    வீட்டின் அமைப்பு சரியில்லை, வாசற்கதவு வைத்தது சரியில்லை என பல பிரச்சனை ஏற்படுகிறது. இதையெல்லாம் எப்படி சரிசெய்வது என்று ஒரே குழப்பம். எல்லாவற்றிற்கும் பரிகாரம் உள்ளது.

    பரிகாரங்களை சரிவர செய்து வந்தால் வாஸ்துவினால் ஏற்படும் தோஷம் விலகி நலன் பெறலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. எனவே அவ்வாறு வாஸ்து தோஷம் உள்ள வீட்டில் செய்ய வேண்டிய சில விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்.

    காளஹஸ்தி சென்று சிவனை தரிசனம் செய்து விட்டு அதன் பின்னர் ராகுவுக்கு நாக சாந்தி செய்வதும் பலன் தரும்.

    வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை பழத்தில் தீபம் ஏற்றுவது நலம் தரும்.

    பவுர்ணமி தினத்தில் அழகர் கோவிலில் உள்ள தீர்த்த தொட்டியில் குளித்து ராக்காயி அம்மனுக்கு எலுமிச்சை பழம் மாலை அணிவிப்பது சிறப்பு தரும்.

    தினமும் 27 முறை வாஸ்து காயத்திரி மந்திரம் ஜெபித்தால் வீட்டில் உள்ள அனைத்து தோஷங்களும் விலகும். ருநாகேஸ்வரம் சென்று ராகுகாலத்தில், ராகுவுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுவது நன்மை தரும். ராகுவுக்கு மந்தாரை மலர் வைத்து வழிபாடு செய்யலாம்.

  • sabari-malai-iyappan-ariya-thagavalgal

    சபரிமலை அய்யப்பன் கோவில் சுயம் புலிங்க பூமி, யாக பூமி, பலி பூமி, யோக பூமி, தபோ பூமி, தேவ பூமி, சங்கமம் பூமி என்ற 7 சிறப்புகளைக் கொண்டது.

    ஓம் சுவாமியே சரணம் அய்யப்பா என்றால் நம் பாவங்களை அழித்து ஞானத்தைப் பெற அய்யப்பனை சரண் அடைகிறோம் என்று பொருள்.

    சபரிமலைக்கு முதன் முதலில் மாலை அணிந்து செல்பவர்கள் 48 மைல் கொண்ட பெரிய பாதையில் செல்ல வேண்டும் என்பது மரபு.

    சபரிமலையை அடைந்ததும் சரணம் கூறியபடி செல்ல வேண்டும். உங்கள் கழுத்தில் உள்ள மாலை நெஞ்சில் அடிபடும் போதெல்லாம் அய்யப்பன் உங்கள் மனசாட்சியை தட்டிக் கொண்டே இருக்கிறார் என்பதை மறந்து விடாதீர்கள்.

    மகிஷியை வதம் செய்த மணிகண்டன் அவன் உடல் வளர்ந்து பூமிக்கு மேல் வரக்கூடாது என்பதற்காக கனமான கல்லை வைத்ததாக வரலாறு.

    இதை நினைவு கூறும் வகையில் அழுதையில் எடுத்த கற்களை கல்லிடும் குன்று பகுதியில் பக்தர்கள் போடுகிறார்கள்.

    நம்மிடம் உள்ள ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று அகந்தைகளையும் விரட்டவே சபரிமலை பதினெட்டாம் படியில் மூன்று கண்களை உடைய தேங்காயை உடைக்கிறார்கள்.

    பதினெட்டாம் படியில் ஏறும் போது பக்தர்கள் தங்கள் கோரிக்கையை அய்யப்பனிடம் வைக்க வேண்டும் என்பது ஐதீகமாகும். படியில் ஏறும் போது, நெரிசல் ஏற்படும் பட்சத்தில் உங்கள் கவனம் சிதறி விடக்கூடாது. எனவே பதினெட்டாம் படிகளில் இருமுடியுடன் ஏறும் போது, என்னதான் நெரிசல் ஏற்பட்டாலும் உங்கள் வேண்டுதலை விட்டு விடாதீர்கள். இது ரொம்ப முக்கியம்.

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் “தத்துவமசி” எனும் தத்துவம் எழுதப்பட்டுள்ளது. தத்துவமசி என்றால், “நீ எதை நாடி வந்தாயோ, அது நீயாக உள்ளாய்” என்று பொருள்.

    அய்யப்பனின் படையில் சேனாதிபதியாக இருந்த கடுத்த சுவாமி (கருப்பசாமி) பதினெட்டுப் படிக்கு அருகில் பிரதிஷ்டை செய்துள்ளார். அவருக்கு முந்திரி, திராட்சை, சுருட்டு படைத்து வழிபட்டால் தோஷங்கள் விலகி நன்மை உண்டாகும்.

    சபரிமலையில் உள்ள பஸ்ம குளத்தில் குளித்தால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    திருப்பதி லட்டு, பழனி பஞ்சாமிர்தம் போல சபரிமலை அரவனை பாயசம் புகழ்பெற்றது. அரிசி, நெய், சர்க்கரை, ஏலக்காய் கலந்து அரவனைப் பாயசம் தயாரிக்கப்படுகிறது.

    சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகர சங்கராந்தியன்று தோன்றும் ஜோதியை அப்பாச்சிமேடு, பம்பை, பெரியானை வட்டம், புல்மேடு ஆகிய இடங்களில் இருந்தும் காணலாம். புல்மேடு பகுதியில்தான் இந்த ஜோதி நன்றாக தெரியும்.

    சபரிமலையில் தினமும் அதிகாலை 3 மணிக்கு கோவில் திறந்ததும் சுப்ரபாதம் பாடப்படும்.

    அய்யப்பனுக்கு தினமும் இரவு 8 மணிக்கு புஷ்பாஞ்சலி நடத்தப்படும். பக்தர்களே பூக்களை கூடையில் எடுத்து வந்து கொடுக்கலாம்.

    அய்யப்பனுக்கு விபூதி, சந்தனம், பால், பன்னீர், 108 ஒரு ரூபாய் நாணயம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர் ஆகிய எட்டும் கொண்டு செய்யப்படும் அபிஷேகத்துக்கு அஷ்டாபிஷேகம் என்று பெயர்.

    சபரிமலை அய்யப்பன் உற்சவர் ஆண்டுக்கு ஒரு தடவை பம்பை ஆற்றுக்கு கொண்டு வரப்பட்டு ஆராட்டு உற்சவம் நடைபெறும். பிறகு அய்யப்பனை அலங்கரித்து பம்பா விநாயகர் கோவில் முன்பு மக்கள் தரிசனத்துக்காக 3 மணி நேரம் வைப்பார்கள். சபரிமலை வர இயலாத 50 வயதுக்குட்பட்ட பெண்கள் இந்த சமயத்தில் அய்யப்ப உற்சவரை தரிசிக்கலாம்.

    சபரிமலை செல்லும் வழியில் ஒரு பள்ளிவாசல் உள்ளது. பக்தர்கள் இங்கு சென்று தாங்கள் விரதத்தையும், பிரம்மச்சர்யத்தையும் முழுமையாக கடைப்பிடித்தோம் என்று உறுதி செய்துவிட்டுத்தான் சபரிமலைக்கு செல்லவேண்டும் என்பது ஐதீகம்.

    ராமபிரான் தனது தந்தைக்காகவும், மூதாதையர்களுக்காகவும் பம்பைக்கரையில் தர்ப்பணம் செய்ததை அடிப்படையாக கொண்டே இப்போதும் பக்தர்கள் தங்களது மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    பரசுராமர் தர்மசாஸ்தாவின் கோயிலை சபரிமலையில் அமைத்தார். அப்போது மேற்கூரையோ, சுற்றுப்புற சுவர்களோ இல்லை. சாஸ்தாவின் சிலையை மட்டுமே பிரதிஷ்டை செய்தார். இதன்பிறகு மறு அவதாரம் எடுத்த தர்மசாஸ்தா பூமியில் ஐயப்பன் என்ற பெயரில் வளர்ந்து, தர்மசாஸ்தாவின் விக்கிரகத்தில் ஐக்கியமாக தவம் செய்தார். அப்போது சின்முத்திரையுடன் அமர்ந்தார். ஆத்மா, பரமாத்மாவுடன் இணை வதை சுட்டிக்காட்டுவதே சின்முத்திரையின் தத்துவமாகும்.

    வாழும் காலத்தில் நல்லவனாய் வாழ்ந்துவிட்டால் மீண்டும் இந்த பிறவிப் பெருங்கடலை நீந்தவேண்டாம் என்ற அரிய தத்துவங்களை உணர்த்தும் தலம் சபரிமலை.

    சபரி மலையில் ஐயப்பன் தவமிருக்கும்போது தனது வஸ்திரத்தை முழங்காலை சுற்றி கட்டிக்கொண்டு அமர்ந்தார். தியானத்தில் இருக்கும்போது தன்னை வளர்த்த தந்தை வந்தால்கூட தியானத்திலிருந்து எழக்கூடாது என்ற நோக்கத்திலேயே எழ முடியாத நிலையில் குத்துக்காலிட்டு அமர்ந்துள்ளார் என்று சொல்வதுண்டு.

    ஐயப்பன் சிவனின் உடுக்கையை படுக்கவைத்த நிலையில் உள்ள பீடத்தில், சிவனைப்போல் தியான கோலத்திலும் (முக்தி தருவது), விஷ்ணுவை போல் விழித்த நிலையிலும் (காத்தல் தொழில்) அருள்பாலிப்பது மிகவும் விசேஷமாகும்.

    ஐயப்பன் தன் வலது கையில் பரமாத்மாவுடன் ஜீவாத்மா கலக்கும் முத்திரையையும், இடது கையில் ஜீவாத்மா பரமாத்மாவின் பாதத்தை சரணடையும் தத்துவத்தையும் குறிக்கிறார். அதாவது, மனிதன் இறைவனை சரணடைந்தால் அவனுடன் கலந்து விடலாம் என்பதை ஐயப்பனின் முத்திரை குறிக்கிறது. இந்த ஆசனத்தை சாதாரண மனிதர்கள் செய்வது கடினம்.

    ஸ்ரீகிருஷ்ண அவதாரத்திற்குப் பிறகு இறைவன் மனித அவதாரம் எடுத்தது ஸ்ரீ ஐயப்பன் அவதாரம் தான் என்று ஆன்மிகப் பெரியோர் கூறுவர்.

    குளத்து புழா அய்யப்பன் கோவிலுக்குச் சென்று வழிபட்டு குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்தால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

  • maha-sastha-astothram

    ஓம் மஹாசாஸ்த்ரே நம
    ஓம் விச்வசாஸ்த்ரே நம
    ஓம் லோகசாஸ்த்ரே நம
    ஓம் தர்மசாஸ்த்ரே நம
    ஓம் வேத சாஸ்த்ரே நம

    ஓம் காலசாஸ்த்ரே நம
    ஓம் கஜாதி பாய நம
    ஓம் கஜாரூடாய நம
    ஓம் கணாத் யக்ஷõய நம
    ஓம் வ்யாக்ரா ரூடாய நம

    ஓம் மஹாத்யுதயே நம
    ஓம் கோப்த்ரே நம
    ஓம் கீர்வாண ஸம்ஸேவ்யாய நம
    ஓம் கதா தங்காய நம
    ஓம் கதா க்ரண்யை நம

    ஓம் ரிக்வேத ரூபாய நம
    ஓம் நக்ஷத்ராய நம
    ஓம் சந்த்ர ரூபாய நம
    ஓம் வலாஹகாய நம
    ஓம் தூர்வாச்யாமாய நம

    ஓம் மஹா ரூபாய நம
    ஓம் க்ரூரத் ருஷ்டயே நம
    ஓம் அனாமயாய நம
    ஓம் த்ரிநேத்ராய நம
    ஓம் உத் பலாகாராய நம

    ஓம் காலஹந்த்ரே நம
    ஓம் நராதிபாய நம
    ஓம் கண்டேந்துமௌளிதநயாய நம
    ஓம் கல்ஹாரகுஸும ப்ரியாய நம
    ஓம் மதனாய நம

    ஓம் மாதவஸுதாய நம
    ஓம் மந்தார குஸுமார்சிதாய நம
    ஓம் மஹா பலாய நம
    ஓம் மஹாத் ஸாஹாய நம
    ஓம் மஹாபாப விநாசநாய நம

    ஓம் மஹா சூராய நம
    ஓம் மஹா தீராய நம
    ஓம் மஹாஸர்ப விபூஷணாய நம
    ஓம் அஸி ஹஸ்தாய நம
    ஓம் சரதராய நம

    ஓம் ஹாலாஹல தராத்மஜாய நம
    ஓம் அர்ஜுநேசாய நம
    ஓம் அக்னிநயநாய நம
    ஓம் அநங்க மதனாதுராய நம
    ஓம் துஷ்டக்ரஹாதிபாய நம

    ஓம் ஸ்ரீ தாய நம
    ஓம் சிஷ்டரக்ஷண தீக்ஷிதாய நம
    ஓம் கஸ்தூரி திலகாய நம
    ஓம் ராஜசேகராய நம
    ஓம் ராஜ ஸத்தமாய நம

    ஓம் ராஜ ராஜார்சிதாய நம
    ஓம் விஷ்ணு புத்ராய நம
    ஓம் வநஜனாதிபாய நம
    ஓம் வர்சஸ்கராய நம
    ஓம் வரருசயே நம

    ஓம் வரதாய நம
    ஓம் வாயுவாஹனாய நம
    ஓம் வஜ்ர காயாய நம
    ஓம் கட்க பாணயே நம
    ஓம் வஜ்ரஹஸ்தாய நம

    ஓம் பலோத்ததாய நம
    ஓம் த்ரிலோகஞாய நம
    ஓம் அதிபலாய நம
    ஓம் புஷ் கலாய நம
    ஓம் வ்ருத்த பாவநாய நம

    ஓம் பூர்ணாதவாய நம
    ஓம் புஷ்கலேசாய நம
    ஓம் பாசஹஸ்தாய நம
    ஓம் பயாபஹாய நம
    ஓம் பட்கார ரூபாய நம

    ஓம் பாபக்னாய நம
    ஓம் பாஷண்டருதி ராகனாய நம
    ஓம் பஞ்சபாண்டவஸந்த்ராத்ரே நம
    ஓம் ப்ரபஞ்சாக்ஷ ராச்ரிதாய நம
    ஓம் பஞ்சவக்த்ர ஸுதாய நம

    ஓம் பூஜ்யாய நம
    ஓம் பூதசாஸ்த்ரே நம
    ஓம் பண்டிதாய நம
    ஓம் பரமேச் வராய நம
    ஓம் பலதா பூஷ்ட ப்ரதாய காய நம

    ஓம் கவயே நம
    ஓம் கவீ நாமதிபாய நம
    ஓம் க்ருபாளவே நம
    ஓம் க்லேசநாசனாய நம
    ஓம் ஸமாய நம

    ஓம் அரூபாய நம
    ஓம் ஸேநான்யை நம
    ஓம் பக்தஸம்பத் ப்ரதாயகாய நம
    ஓம் வ்யாக்ரசர்மதராய நம
    ஓம் சூலிணே நம

    ஓம் கபாலினே நம
    ஓம் வேணுவாதநாய நம
    ஓம் கலாரவாய நம
    ஓம் கம்புகண்டாய நம
    ஓம் கிரீடாதி விபூஷிதாய நம

    ஓம் தூர்ஜடவே நம
    ஓம் விரநிலாய நம
    ஓம் வீராய நம
    ஓம் விரேந்த்ர வந்திதாய நம
    ஓம் விச்வரூபாய நம

    ஓம் வ்ருஷபதயே நம
    ஓம் விவிதார்த்த பலப்ரதாய நம
    ஓம் தீர்க்கநாஸாய நம
    ஓம் மஹாபாஹவே நம
    ஓம் சதுர்பாகவே நம
    ஓம் ஜடாதராய நம

    ஓம் ஸநகாதிமுநிச்ரேஷ்ட ஸ்துத்யா நம

    ஓம் ஹரிஹராத்மஜாய நம

    நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி

  • indru-pradosha-naal

    நவம்பர் 20
    விளம்பி வருடம்
    கார்த்திகை 4
    பிரதோஷம்
    திருவண்ணாமலை சிவன் தேர்
    20-நவ-2018 செவ்வாய்
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 3.00 – 4.30
    குளிகை : 12.00 – 1.30
    எமகண்டம் : 9.00 – 10.30
    திதி : திரையோதசி
    திதி நேரம் : துவாதசி ம 1.30
    நட்சத்திரம் : ரேவதி மா 6.11
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : உத்திரம்,அஸ்தம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்
    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – சா ந்தம்
    ரிஷபம் – பொறுமை
    மிதுனம் – லாபம்
    கடனம் – செலவு
    சிம்மம் – சுபம்
    கன்னி – சினம்
    துலாம் – மேன்மை
    விருச்சிகம் – பாசம்
    தனுசு – வரவு
    மகரம் – எதிர்ப்பு
    கும்பம் – தடங்கல்
    மீனம் – புகழ்

  • indraya-naal

    நவம்பர் 19

    விளம்பி வருடம் 

    கார்த்திகை 3

    சிவன் கோயிலில் சங்காபிஷேகம்

    19-நவ-2018 திங்கள் 

    கரிநாள்

    நல்ல நேரம் : 6.00 – 7.30

    ராகு : 7.30 – 9.00

    குளிகை : 1.30 – 3.00

    எமகண்டம் : 10.30 – 12.00

    திதி : துவாதசி

    திதி நேரம் : ஏகாதசி ம 12.57

    நட்சத்திரம் : உத்திரட்டாதி மா 5.09

    யோகம் : சித்த யோகம்

    சந்திராஷ்டமம் : பூரம்,உத்திரம்

    சூலம் : கிழக்கு

    பரிகாரம் : தயிர்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – லாபம்
    ரிஷபம் – தனம்
    மிதுனம் – சுகம்
    கடனம் – நட்பு
    சிம்மம் – வெற்றி
    கன்னி – போட்டி
    துலாம் – அசதி
    விருச்சிகம் – பாராட்டு
    தனுசு – பொறுமை
    மகரம் – நற்செயல்
    கும்பம் – புகழ்
    மீனம் – நன்மை

  • karthigai-thulasi-ilai-archanai

    விஷ்ணு பகவானை கார்த்திகை மாதத்தில் புஷ்பங்களால் அர்ச்சித்து பூஜை செய்பவர்கள் தேவர்களும் அடைய அரிதான மோட்ச நிலையை அடைவார்கள்.

    கார்த்திகை மாதத்தில் விஷ்ணு பகவானை துளசி இலையால் அர்ச்சனை செய்பவர்கள் பகவானுக்கு சமர்ப்பிக்கும் ஒவ்வொரு துளசி இலைகளுக்கும் ஒவ்வொரு அசுவமேதயாகம் செய்த பலனை அடைவார்கள்.

    கார்த்திகை மாதத்தில் ஏகாதசிக்கு அடுத்த நாள் துளசி தேவியை மகாவிஷ்ணு மணந்ததாகப் புராணம் சொல்கிறது. மகாவிஷ்ணு நெல்லி மரமாகத் தோன்றியவர் என்பதால், கார்த்திகை ஏகாதசி அன்று துளசிச் செடியுடன், நெல்லி மரத்தடியில் பூஜை செய்ய வேண்டும்.

    நெல்லி மரம் இல்லாத பட்சத்தில் வீட்டில் உள்ள துளசி மாடத்தில் நெல்லி மரத்தின் ஒரு சிறிய கிளையை வைத்துப் பூஜித்து துளசி கல்யாணம் செய்தால் திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.

    ஸ்ரீரங்கத்தில் பெருமாள் சக்கரத்தாழ்வார் சந்தியில் எழுந்தருளி, கார்த்திகைக் கோபுர வாசல் பக்கம் கட்டப்பட்டிருக்கும் சொக்கப்பனை ஏற்றப்படும் காட்சியைக் கண்டு மகிழ்வார்.

    கார்த்திகை மாத துவாதசி நாளில், ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால், கங்கைக் கரையில் ஆயிரம் பேருக்கு அன்னமிட்ட பலன் கிடைக்கும் என்பர். மகாவிஷ்ணுவை கஸ்தூரியால் அலங்கரித்து, தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் தேவாதிதேவர்களால் பெற முடியாத பாக்கியத்தைக் கூட பெறலாம் என்பர்.

    கார்த்திகையில் விஷ்ணுவின் சந்நிதிக்கு நேரே அமர்ந்து கொண்டு, பகவத் கீதையின் விபூதி யோகம், பக்தி யோகம், விஸ்வரூப யோகம் ஆகியவற்றை பாராயணம் செய்தால், சகல பாவங்களும் நீங்குவதுடன் புண்ணியங்களும் நம்மை வந்து சேரும்.

    கார்த்திகை மாதம் லட்சுமி ப்ரபோதன தினத்தன்று மாலை லட்சுமி பூஜை செய்வதன் மூலம் இழந்த செல்வத்தை மீண்டும் பெறலாம்.

  • kedhara-gowri-viradham

    கடுமையான விரதம் மேற்கொண்டே உமையம்மை கார்த்திகை பௌர்ணமி அன்று இறைவனின் இடப்பாகத்தைப் பெற்றார். அவ்வாறாக அம்மையும் அப்பனும் இணைந்து உமையொரு பாகனாக அர்த்தநாரீஸ்வராக காட்சியருளிய தலம் திருவண்ணாமலை என்று அருணாசல புராணம் குறிப்பிடுகிறது.

    எனவே கார்த்திகை பௌர்ணமி அன்று அம்மை மற்றும் அப்பனை நினைத்து விரதமுறை மேற்கொள்ளும் இவ்விரத முறை உமாகமேஸ்வர விரதம் என்று அழைக்கப்படுகிறது.

    இவ்விரத்தில் காலையில் மட்டும் உண்ணா நோன்பு மேற்கொள்ளப்படுகிறது. இவ்விரத முறை மேற்கொள்ளுவதால் குடும்ப ஒற்றுமை ஏற்படும். கணவன் மனைவி சண்டை சச்சரவுகள் தீரும்.

  • karthigai-deepathin-sirappugal

    கார்த்திகை தீபம் தமிழர்களின் பராம்பரிய திருவிழாவாகும். கார்த்திகை தீபம் கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமியோடு கூடிய கார்த்திகை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. இவ்விழா திருக்கார்த்திகை என்றும் தீபத்திருவிழா என்றும் சிறப்பிக்கப்படுகிறது.

    கார்த்திகை தீப வழிபாடு பற்றி சங்கநூலான புறநானூற்றில் கூறப்பட்டுள்ளது. ஒளவையார் மற்றும் திருஞானசம்பந்தர் கார்த்திகை தீப வழிபாடு பற்றி தமது பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர்.

    சிவபெருமான் ஜோதிப்பிழம்பாக திருமால், நான்முகன் உள்ளிட்ட உலக உயிர்களுக்கு காட்சியருளிய நாளாகக் கருதப்படுகிறது.

    முருகப்பெருமானை வளர்த்த கார்த்திகைப் பெண்களின் நினைவாகவும் இவ்விழா கொண்டாடப்படுகிறது.

    மகாபலிச் சக்கரவர்த்தி ஆணவத்தால் உடலில் பெற்ற புண்கள் குணமாக நெய் தீபம் ஏற்றி வந்தார். கார்த்திகை தீபத்தன்று நெய் தீபம் ஏற்றியபோது மாபலியின் புண்கள் குணமாகின. அது முதல் திருகார்த்திகை அன்று தீபம் ஏற்றும் வழக்கம் ஏற்பட்டதாகவும் கருதப்படுகிறது.

    திருக்கார்த்திகை அன்று எல்லா இடங்களிலும் தீபங்கள் ஏற்றப்படுகின்றன. அன்றைய தினம் விரதமுறை பின்பற்றப்படுகிறது.

    வழிபாட்டில் பொரி உருண்டை அல்லது கார்த்திகைப் பொரி இடம் பெறுகிறது. அன்றைய தினம் சிவாலயங்களில் சொக்கப்பனை ஏற்றும் வழக்கம் உள்ளது.