Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • karthigai-month-special

    கார்த்திகை மாதம் கருமையான மேகங்களைக் கொண்டு அதிகளவு மழைபொழியும் கார் காலம் ஆகும். காந்தள் பூக்கள் அதிகம் மலரும் மாதம். ஆதலால் இம்மாதம் கார்த்திகை எனப் பெயர் பெற்றது.

    கார்த்திகை மாதத்தில் சிவலிங்கத்தை நெய்யினால் அபிஷேகம் செய்து வில்வம் மற்றும் மரிக்கொழுந்தால் அர்ச்சனை செய்து வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

    விருச்சிக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் இம்மாதத்தில் மனசேர்க்கை, உடல் சேர்க்கை, கர்ப்பதானம் ஆகிய இவற்றில் பிரச்சினைகள் வராது. எனவே, கார்த்திகை மாதத்தைத் திருமண மாதம் என்று இந்து சாஸ்திரம் கூறுகிறது.

    கார்த்திகை மாதத்தில் நாள்தோறும் சூரிய உதயத்தின் போது நீராடுபவர்கள், சகல புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடிய புண்ணிய பலனை அடைவார்கள்.

    கார்த்திகை மாதத்தில் விளக்கு தானம் செய்பவர்கள் பிரம்ம ஹத்தி முதலான தோஷங்களிலிருந்தும் விடுபடுவார்கள்.

    கார்த்திகை மாதத்தில் மது, மாமிசம் முதலானவைகளை ஒழித்து விரதம் அனுஷ்டிப்பவர் சகல பாவங்களிலிருந்தும் விடுபட்டு விஷ்ணு பாதத்தை அடைவார்கள். கார்த்திகை மாதத்தில் மாமிச ஆகாரத்தைக் கைவிடாதவர்கள் புழுப் பூச்சிகளாய் பிறவி எடுப்பார்கள் என்று பத்மபுராணம் கூறுகிறது.

    கார்த்திகை, திருவோணம் ஆகிய இரு நட்சத்திரங்களும் நல்ல நட்சத்திர சக்தி தருவதால் இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் விரதங்கள் இருக்க வேண்டும் என்றுஇந்து மதம் கூறுகிறது.

    கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் திபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இரு வேளைகளில் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.

    கார்த்திகை மாதம் தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகிய மூன்ற தினங்களில் மட்டுமாவது கண்டிப்பாக தீபம் ஏற்ற வேண்டும்.

    கார்த்திகை மாதத்தின் தொடக்கத்திலும், முடிவிலுமாக இரு நாட்களில் கார்த்திகை நட்சத்திரம் வருமானால் இரண்டாவதாக வரும் நாளில் கொண்டாடுவது மரபு.

  • thiruparamkunrathi-thirukarthigai-kodi

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கார்த்திகை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். முருகப் பெருமானின் முதல் படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கார்த்திகை திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.

    இந்தாண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா இன்று காலை 10.45 மணிக்கு மேல் 11.15 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி இன்று காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

    நவ.22ம் தேதி பட்டாபிஷேகமும், முக்கிய நிகழ்ச்சியாக நவ.23ம் தேதி மாலை 6 மணிக்கு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுதலும் நடைபெறுகிறது. நவ.24ம் தேதி தீர்த்தவாரி உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது. கொடியேற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ”’திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. உள்படம்: சிறப்பு அலங்காரத்தில் தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி.

  • indraya-naal

    நவம்பர் 16
    விளம்பி வருடம் – ஐப்பசி 30
    சபரிமலையில் இன்று நடை திறப்பு
    16-நவ-2018 வெள்ளி
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 10.30 – 12.00
    குளிகை : 7.30 -9.00
    எமகண்டம் : 3.00 – 4.30
    திதி : நவமி
    திதி நேரம் : அஷ்டமி கா 8.44
    நட்சத்திரம் : அவிட்டம் கா 11.21
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : ஆயில்யம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – உழைப்பு
    ரிஷபம் – ஊக்கம்
    மிதுனம் – வாழ்வு
    கடனம் – புகழ்
    சிம்மம் – சிந்தனை
    கன்னி – நட்பு
    துலாம் – நற்செயல்
    விருச்சிகம் – ஜெயம்
    தனுசு – பெருமை
    மகரம் – கவலை
    கும்பம் – லாபம்
    மீனம் – பகை

  • thirupathiyil-viraivaga-darisanam-seyya

    திருப்பதி ஏழுமலையானை வழிபட பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கூட்டநெரிசலை தடுக்க தேவஸ்தான அதிகாரிகள் புதிய திட்டத்தை அமல்படுத்தவுள்ளனர்.

    இதற்காக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், வைகுண்டம் கியூ காம்பிளக்ஸ் யானை தடுப்பு முதல் ஏழுமலையான் கோயில் மகா துவாரம் வரை பக்தர்கள் பல நேரங்களாக காத்திருப்பதாக தேவஸ்தான முதன்மை செயல் அதிகாரி அனில்குமார் தெரிவித்தார்.

    பக்தர்களின் கூட்ட நெரிசலை தடுக்க, ஏழுமலையான வழிபட அமைக்கப்பட்டுள்ள தரிசன வரிசையில் புதிய மாற்றங்களை தேவஸ்தான நிர்வாகம் அமல்படுத்தவுள்ளதாக இந்த கூட்டத்தில் அனில்குமார் பேசினார்.

    மேலும், திருப்பதி கோயிலுக்கு உகந்த லட்டு அருட்பண்டத்தை கூடுதலாக தயாரிக்க, மேலும் ஒரு பூந்தி தயாரிக்கும் கூடம் கட்டப்பட்டு வருவதாக அவர் கூறினார். இதுதவிர, தமிழகத்தின் கன்னியாகுமாரியில் வெங்கடேஸ்வரா கோயில் சிமெண்டு சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக பேசிய திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல அதிகாரி அனில்குமார், சிமெண்டு சாலை உடன் குடிநீர் வசதி நிலையங்கள், கழிவறைகள் கட்டும் பணி ஆகியவையும் நடைபெற்று வந்தது. இவை அனைத்தும் விரைவில் முடிக்கப்படும் என்று தெரிவித்தார்.

  • sabarimalai-nadai-nalai-thirappu

    மண்டலகால பூஜைகளுக்காக சபரிமலை நடை நாளை மாலை திறக்கப்படுகிறது.

    கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் 41 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் பூஜை சபரிமலையில், ‘ஒரு மண்டல காலம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு, நவ. 17-ம் தேதி கார்த்திகை முதல் தேதி முதல் மண்டலகாலம் தொடங்குகிறது.

    இதற்காக சபரிமலை நடை நாளை மாலை 5:00 மணிக்கு திறக்கிறது. கடந்த ஒரு ஆண்டு காலமாக சபரிமலையில் தங்கி பூஜைகள் செய்து வரும் மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடைதிறந்து தீபம் ஏற்றுவார்.அதை தொடர்ந்து கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் ஒரு ஆண்டு காலத்துக்கான மேல்சாந்திகளாக தேர்வு செய்யப்பட்டுள்ள சபரிமலை- வாசுதேவன் நம்பூதிரி, மாளிகைப்புறம் -நாராயணன் நம்பூதிரி இருமுடி கட்டு ஏந்தி கோயில் முன்புறம் வருவர். மாலை 6:30 மணிக்கு புதிய மேல்சாந்திகளுக்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு அபிஷேகம் நடத்தி, ஐயப்பன் மூலமந்திரம் சொல்லிக்கொடுத்து கோயிலுக்கு அழைத்து செல்வார். வேறு விசேஷபூஜைகள் எதுவும் நடைபெறாது.

    இரவு 11:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.17-ம் தேதி அதிகாலை 3:00 மணிக்கு புதிய மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடைதிறந்ததும் இந்த ஆண்டுக்கான மண்டலகாலம் தொடங்கும். தொடர்ந்து தந்திரி கண்டரரு ராஜீவரரு ஐயப்பனுக்கு அபிஷேகம் நடத்தி பிரசாதம் வழங்கியதும், நெய்யபிஷேகம் தொடங்கும். அன்றிலிருந்து தொடர்ச்சியாக 41 நாட்களும் அதிகாலை 3:00 மணிக்கு நடை திறந்து பூஜைகள் நடைபெறும். டிச., 27-ம் தேதி மண்டலபூஜை நடைபெறும்.ஏற்பாடுகள் தயார்மண்டல காலத்தில் வரும் பக்தர்களை வரவேற்க சன்னிதானம் தயாராகி விட்டது.

    பக்தர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு வசதி விரிவு படுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்கும் அறைகளையும் ஆன்லைனில் புக்கிங் செய்ய முடியும். கடந்த 15 நாட்களாக அப்பம் – அரவணை தயாரித்து ஸ்டாக் செய்யப்பட்டுள்ளது. 50 லட்சம் டின் அரவணை ஸ்டாக் செய்யப்பட்டுள்ளது. பாட்டில் குடிநீர் தடை செய்யப்பட்டுள்ளதால் ஆங்காங்கே பாதுகாக்கப்பட்ட குடிநீர் பிளான்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.

  • indraya-rasi-palan

    நவம்பர் 15
    விளம்பி வருடம் – ஐப்பசி 29
    15-நவ-2018 வியாழன்
    நல்ல நேரம் : 10.30 – 12.00
    ராகு : 1.30 – 3.00
    குளிகை : 9.00 – 10.30
    எமகண்டம் : 6.00 – 7.30
    திதி : அஷ்டமி
    திதி நேரம் : சப்தமி கா 6.40
    நட்சத்திரம் : திருவோணம் கா 8.49
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : பூசம்
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – பாராட்டு
    ரிஷபம் – வெற்றி
    மிதுனம் – தடங்கல்
    கடனம் – இன்சொல்
    சிம்மம் – பரிசு
    கன்னி – பக்தி
    துலாம் – பொறுமை
    விருச்சிகம் – பேராசை
    தனுசு – செலவு
    மகரம் – தனம்
    கும்பம் – உயர்வு
    மீனம் – புகழ்

  • thirukalyanathudan-mudindhathu-kandha-sasti-vizha

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3ஆம் படை வீடான பழனியில் கந்த சஷ்டி விழா சண்முகர்-வள்ளி-தெய்வானை திருக்கல்யாணத்துடன் நிறைவடைந்தது.

    முருகனின் அறுபடை வீடுகள் உட்பட தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் கடந்த 8ம் தேதி கந்தசஷ்டி விழா தொடங்கியது. அதன் ஒரு பகுதியாக பழனியிலும் கடந்த 8ம் தேதி காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா ஆரம்பமானது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் மலைக்கோயிலில் நேற்று மாலை விமரிசையாக நடைபெற்றது.

    தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களிலிருந்தும் வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்த சூரசம்ஹார நிகழ்ச்சியில் பங்கேற்றனர். விழாவின்போது, அசுரர்களை முத்துக்குமாரசாமி வதம் செய்ததை பக்தர்கள் அரோகரா கோஷமிட்டு வணங்கி வழிப்பட்டு, சஷ்டி விரதத்தை நிறைவு செய்தனர்.

    இதனையடுத்து இன்று காலை மலைக்கோவிலில் சண்முகர் -வள்ளி, தெய்வயானை ஆகியோருக்கு திருக்கல்யாண உற்சவம் வெகுசிறப்பாக நடைபெற்றது. அதில், பால் பஞ்சாமிர்தம். தேன்.பன்னீர்.இளநீர். தயிர் மற்றும் 16 வகையான வாசனைதிரவியப்பொடிகள்கொண்டு முத்துக்குமார சாமிக்கு சிறப்பு அபிசேகங்கள் செய்யப்பட்டன.

    இதேபோல், திருஆவினன்குடியில் சின்னக்குமாரர்-வள்ளி, தெய்வயானைக்கும் திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் பெண்கள் உட்பட ஆயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

  • valarpirai-suba-muhurtha-naal

    நவம்பர் 14
    விளம்பி வருடம் – ஐப்பசி 28
    சுபமுகூர்த்த நாள்
    14-நவ-2018 புதன்
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள் (காலை 9.00 – 10.30)
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 12.00 – 1.30
    குளிகை : 10.30 – 12.00
    எமகண்டம் : 7.30 – 9.00
    திதி : சப்தமி
    திதி நேரம் : சப்தமி முழுவதும் 0.00
    நட்சத்திரம் : உத்திராடம் கா 6.15
    யோகம் : அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : புனர்பூசம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – நன்மை
    ரிஷபம் – அமைதி
    மிதுனம் – பெருமை
    கடனம் – பாராட்டு
    சிம்மம் – இன்பம்
    கன்னி – பக்தி
    துலாம் – லாபம்
    விருச்சிகம் – ஆக்கம்
    தனுசு – உற்சாகம்
    மகரம் – ஜெயம்
    கும்பம் – ஏமாற்றம்
    மீனம் – போட்டி

  • thiruparankundram-soorasamharam

    திருப்பரங்குன்றத்தில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், இன்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர் அரோகரா கோஷம் விண்ணைப் பிளந்தது.

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்தசஷ்டி திரு விழாவின் 6 ஆம் நாள் நிகழ்ச்சியாக சூரசம்ஹார லீலை இன்று நடைபெறுகிறது. நிறைவுநாளான நாளை தேரோட்டம் நடைபெறும்.
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழாவின் 5 ஆம் நாள் நிகழ்ச்சியாக வேல்வாங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரம்சம்ஹார லீலை இன்று நடை பெற்றது. முருகன் தங்கமயில் வாகனத்திலும், வீரபாகுத்தேவர் வெள்ளைக்குதிரை வாகனத்திலும் மேலரத வீதி,கீழரத வீதி வழியாக சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோயில் முன்பு அசுரனான பத்மாசூரனை வதம் செய்யும் சூரசம்ஹார லீலை மாலை 6 மணிக்கு நடைபெறும்.

    இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்பு முருகன் தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்று மாலை மாற்றப்பட்டு மகா தீபாராதனை நடைபெறும்.

    பின்பு சுவாமி அம்பாளுடன் பூச்சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். விழாவில் மதுரை, சிவகங்கை, விருதுநகர் உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்வர்.

    கந்தசஷ்டி விழாவின் 7.ம் நாள் நிகழ்ச்சியாக நாளை காலை 8 மணியளவில் முருகன் தெய்வானையுடன் தங்கமயில் வகனத்தில் எழுந்தருளி கிரிவலப்பாதை வழியாக சுற்றி நகர் உலாவந்து அருள்பாலிக்கிறார். சஷ்டி விரதமிருந்த பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து வருவர். பின்பு தங்களது காப்புக்களைகழற்றி விரதத்தை முடித்துக்கொள்வார்கள். மாலை 3 மணிக்கு பாவாடை தரிசனம் நடைபெறும் தொடர்ந்து மூலஸ்தானத்தில் உள்ள முலவர் முருகனுக்கு தங்ககவசம் சாற்றப்படும்.

  • thiruthani-kandha-sasti-pushpanja-vizha

    திருத்தணி, முருகன் கோயில் கந்த சஷ்டி விழாவில் புஷ்பாஞ்ச- நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ஆறுமுக சுவாமியை வழிபட்டனர்.

    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள ஆறுபடை வீடுகளில் 5ஆம் படைவீடாக திகழும் திருத்தணி முருகன் கோயில் கந்த சஷ்டி விழா கடந்த 08ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று காலை 11 மணிக்கு மலைக்கோயில் உள்ள மூலவ முருகப்பெருமானுக்கு தங்க கவசமும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்று சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

    மாலை 5மணிக்கு முருகன் கோயிலின் உபக்கோயிலான ஆருள்மிகு ஸ்ரீ சுந்தர விநாயகர் திருக்கோயில் இருந்து பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட மலர்களை கோயில் ஊழியர்கள் மற்றும் முருக பக்தர்கள் ஊர்வலமாக சரவணப்பொய்கை வழியாக மலைக்கோயிலுக்கு கொண்டுவந்தனர்.

    பின்னர் காவடி மண்டபத்தில் எழுந்தருளியிருந்த சண்முக பெருமானுக்கு அனைத்து வகையான மலர்களால் புஷ்பாஞ்ச- மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. விழாவில் சென்னை, அரக்கோணம், திருவள்ளூர், திருத்தணி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.