Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • arudhra-darisana-endral-enna

    மாதங்கள் போற்றும் மாதமான மார்கழியின் மற்றொரு இனிய அங்கம், திருவாதிரைப் பண்டிகை. ஆருத்ரா தரிசனம் என்று அழைக்கப்படும், சிவனுக்கு உகந்த நாள். பனி சூழ்ந்த ஹேமந்த ருதுவாகிய மார்கழி மாதத்தில், சிவபெருமானுக்கு உரிய திருவாதிரை நட்சத்திரம் இணையும் நாள்.

    “கர்மாவே பெரிது, கடவுள் இல்லை” என்று கூறிய முனிவர்களின் அறியாமையை நீக்கிட வந்த ஈசன் தனக்கு எதிராக ஏவப்பட்ட யானையை தன் ஆடையாக்கி, உடுக்கு, தீ, பாம்பு முதலியவற்றை ஆபரணமாகக் கொண்டு நடராஜராக ஆருத்ரா தரிசன காட்சி தந்த நாள்தான் மார்கழித் திருவாதிரை. அன்று தான் தில்லையில் நடராஜர் வ்யாகரபாத முனிவருக்கு நடன தரிசனம் தந்தாராம்.

    ஆருத்ரா என்பது, திருவாதிரை நட்சத்திரத்தை குறிக்கும். மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தில், நடராஜரின் திருநடனம் கண்டால், “ஆ…ருத்ரா’ என்று, மூக்கில் விரலை வைக்கச் சொல்லும். அத்தகைய அழகு கோலத்தில், அவர் காட்சி தருகிறார். அவர் இடது காலை, தூக்கி வைத்துக் கொண்டிருக்கிறார்… ஏன் தெரியுமா? மனைவி மேல் கொண்ட பாசத்திற்காக.

    சிவபக்தரான மார்க்கண்டேயருக்கு, 16 வயதில், ஆயுள் முடிந்து விடும் என்ற நிலை இருந்தது. இதனால், அவரது தந்தை, மிகுந்த வருத்தத்தில் இருந்தார். குறிப்பிட்ட நாளில், எமன் வர, தன் பிரிவால், தந்தை துக்கப்படக் கூடாதே என்பதற்காக, சிவலிங்கத்தை கட்டி அணைத்துக் கொண்டார். லிங்கத்தில் இருந்து வெளிப்பட்ட சிவனின் இடது கால், எமனை எட்டி உதைத்தது. மார்க்கண்டேயன் தப்பித்தார்.

    அந்த திருவடி பட்டதால், எமனுக்கும் மீண்டும் உயிர் கிடைத்தது.திருவாதிரைக் களி‘திருவாதிரைக்கு ஒருவாய்க்களி’ என்பது பழமொழி. எனவேதான் மார்கழி திருவாதிரை அன்று விரதம் உள்ள பக்தர்கள் அன்று ஒரு வாய்களி தின்று மகிழ்கின்றனர். இதே திருவாதிரை நாளன்று ஒருவாய் களி தின்றால், அதன்பலன் அளவிடற்கரியது.

  • thirichanoor-latcha-kungumarchanai

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் லட்ச குங்குமார்ச்சனை உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் இன்று முதல் 12-ஆம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. வருடாந்திர பிரம்மோற்சவத்துக்கு முன் தினம் தாயாருக்கு லட்ச குங்குமார்ச்சனையை தேவஸ்தானம் நடத்தி வருகிறது.

    அதன்படி, திங்கள்கிழமை காலை 8 முதல் மதியம் 12 மணி வரை திருச்சானூரில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் மண்டபத்தில் தாயாரை எழுந்தருளச் செய்து அர்ச்சகர்கள் லட்ச குங்குமார்ச்சனையை நடத்தினர். குங்குமார்ச்சனை நடத்துவதால் வருடாந்திர பிரம்மோற்சவம் எவ்வித தடங்கலும் இல்லாமல் நடைபெறும் என்பது ஐதீகம்.

  • pradhosha-naal

    டிசம்பர் 4
    விளம்பி வருடம் – கார்த்திகை 18
    பிரதோஷம்
    04-டிச-2018 செவ்வாய்
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 3.00 – 4.30
    குளிகை : 12.00 – 1.30
    எமகண்டம் : 9.00 – 10.30
    திதி : திரையோதசி
    திதி நேரம் : துவாதசி ம 1.16
    நட்சத்திரம் : சுவாதி அ.கா 4.24
    யோகம் : சித்த-மரண யோகம்
    சந்திராஷ்டமம் : ரேவதி
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – அன்பு
    ரிஷபம் – செலவு
    மிதுனம் – புகழ்
    கடனம் – பகை
    சிம்மம் – முயற்சி
    கன்னி – உதவி
    துலாம் – சுகம்
    விருச்சிகம் – பிரிவு
    தனுசு – பெருமை
    மகரம் – சிக்கல்
    கும்பம் – சினம்
    மீனம் – தனம்

  • thirupathy-senior-citizen-dharshan-rathu

    கூட்ட நெரிசல் அதிகம் இருக்கும் என்பதால் இம்மாதம் (டிசம்பர்) மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர் ஆகியோருக்கு வழங்கப்படும் தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருப்பதி திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    டிசம்பர் மாதம் வைகுண்ட ஏகாதசி, துவாதசி மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு, மார்கழி மாத உற்சவங்கள், அரையாண்டு விடுமுறை உள்ளிட்டவற்றால் திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதனால் இந்த மாதத்தில் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர் ஆகியோருக்கு வழங்கப்பட்ட இலவச தரிசனங்களை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர் ஆகியோருக்கு பக்தர்களின் கூட்டம் குறைவாக உள்ள நாட்களில் மாதத்திற்கு இருமுறை தரிசனம் அளிக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் 8 ஆயிரம் பேருக்கு மாதத்தில் இரு நாட்களும், 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளின் பெற்றோருக்கு சுபதம் பகுதி வழியாக காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் மாதந்தோறும் இரு நாட்களும் தரிசனம் செய்ய அனுமதி வழங்கிவந்தது. இந்த தரிசன முறையை தான் இம்மாதம் திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்து இருக்கிறது.

  • sri-rangam-vaikunda-egadisi

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா டிசம்பர் 7 ஆம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது. 108 திவ்ய தேசங்களில் முதன்மையானது என போற்றப்படுகிறது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில்.

    ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் எல்லாம் முதன்மையானது வைகுண்ட ஏகாதசி திருவிழாவாகும். பகல் பத்து, ராப்பத்து, இயற்பா என மொத்தம் 21 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறப்பு சிகர நிகழ்ச்சியாகும்.

    இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழா வருகிற 7-ந்தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது. அன்றைய தினம் இரவு 7 மணிக்கு கோவில் மூலஸ்தானத்தில் ஆரம்பமாகும் திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சி தொடர்ந்து சந்தனு மண்டபத்தில் நடைபெறும். அப்போது அரையர்கள் அபிநயம் வியாக்யானத்துடன் பாடல்களை பாட நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.

    மறுநாள் பகல்பத்து உற்சவத்தின் முதல் நாள் நிகழ்ச்சியாகும். அன்று காலை 7 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி 7.45 மணிக்கு அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருள்வார். பகல் பத்து இரண்டாம் நாளில் இருந்து நம்பெருமாள் காலை 6.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து வெவ்வேறு சிறப்பு அலங்காரத்தில் புறப்படுவார்.

    பகல் பத்து உற்சவத்தின் 10-வது நாளான டிசம்பர் 17-ந்தேதி நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் காட்சி அளிப்பார். மறு நாள் (18-ந்தேதி) பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்படும். அன்று அதிகாலை 4.15 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்படும் நம்பெருமாள் அதிகாலை 5.30 மணிக்கு சொர்க்க வாசலை கடந்து திருக்கொட்டகையில் பக்தர்கள் மத்தியில் எழுந்தருள்வார். அன்று முதல் பத்து ( ராப்பத்து) நாட்கள் தொடர்ந்து ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். 28-ந்தேதி நம்மாழ்வார் மோட்சத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெறும்.

  • somavara-siva-pooja-sangabishegam

    மகாலட்சுமிக்கு ஒப்பான சங்கு எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கு லட்சுமி வசிக்கிறாள். பூஜைக்கு உகந்ததாக வலம்புரி பெருமை பெற்றது.

    பூவுலகம் தோன்றிய நாள் முதல் ஏற்பட்ட ஒலி அலைகளும், ஒளி அலைகளும், பஞ்ச பூதங்களின் மூலமாக தமது அதிர்வுகளை வெளிப்படுத்தியவாறு இருக்கின்றன. சாதாரணமாக நமக்கிருக்கும் கேட்கும் சக்தி மற்றும் பார்க்கும் திறம் ஆகியவற்றால் மட்டுமே அவற்றை அறிவது சிரமமான ஒன்று. இயற்கையில் உள்ள பல பொருட்களில், ஒலி அலைகளின் மூலாதாரமாக இருக்கும் ஓம்கார ஸ்வரூபம் தாமாக வெளிப்படுவதாக பல ஆன்மிக பெரியோர்கள் கண்டறிந்துள்ளார்கள். குறிப்பாக சங்கின் மூலம் ஓம்காரம் வெளிப்படுவதை பலரும் அறிந்துள்ளனர்.

    சங்கு பொதுவாகவே லட்சுமியின் அம்சத்தை தாங்கி இருக்கிறது. சங்குகளில் பல இனங்கள் உண்டு. அவற்றில் பால் சங்கு என்றொரு இனம் உண்டு. வெண்சங்கு என்றும் கூறுவார்கள்.

    இந்தச் சங்கே அபிஷேகங்களிலும் சங்கொலி எழுப்புவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. சாதாரணமாக உள்ள சங்கில் அதன் சுழற்சி இடப்புறம் நோக்கிக் காணப்படும்.

    அபூர்வமாக சில சங்குகளில் அது வலமாக ஓடும். அந்த மாதிரியான அபூர்வமான சங்குகளை வலம்புரிச் சங்கு என்பார்கள்.

    தமிழ் மக்களின் ஆதி கலாச்சாரத்தில் ஒன்று இந்த சங்கு ஊதுதல்.சங்கு ஊதினால் அபசகுணம் என்று தற்போது நம் மக்களை நம்ப வைத்துள்ளனர். ஆனால் சங்கின் மகத்துவம் நம்மில் யாருக்கும் தெரியாமல் இப்படி மழுவியது.

    சங்கின் குணம் நுண் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. இதனை அறிந்த நம் முன்னோர்கள் வீட்டு வாசலில் சங்கை பாதி பூமிக்கு அடியிலும் மீது மேலே தெரியும் படியும் பதித்திருப்பார்கள்.

    இதனால் வெளியில் இருந்து வரும் காற்று சங்கின் ஊது துவாரம் வழியாக உள்ளே சென்று சங்கின் உள்ளே கிருமிகள் அழிக்கப்பட்டு சுத்தமான காற்றாக வீட்டுக்குள்ளே வருகிறது.

    இதனால் தான் இன்று வரை சங்கை வீட்டு வாசலில் கட்டி தொங்க விடுகின்றனர். பழங்காலங்களில் அரண்மனைகளில் அரச விழாக்கள் ஆரம்பிக்கும் முன்பும், போருக்கு தயாராகும் போது சங்கினை ஒலிக்க வைப்பார்கள். இப்படி ஓசை தரும் சங்கு பாசம் தரும் சங்காக குழந்தைகளுக்கு பால் பருகுவதற்கும் அந்நாளில் பயன்படுத்தினர்.

    சங்கு ஒலியில் தீய சக்திகள் நீங்கி நல்ல சக்திகள் உருவாகிறது. ஆலயங்களில் பூஜைகள் ஆரம்பிக்கப்படும் போது சங்கு முழங்கும் செய்து பூஜைகள் செய்யப்படும்.

    மகாலட்சுமிக்கு ஒப்பான சங்கு எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கு லட்சுமி வசிக்கிறாள். பூஜைக்கு உகந்ததாக வலம்புரி பெருமை பெற்றது.

    வலம்புரிசங்கில் நீர்விட்டு கும்பத்தின் மேல் வைத்து புஸ்பங்களினால் பூஜை செய்து ஆராதனை செய்து அதன் பரிசுத்தமான தீர்த்தம் சுவாமி சிலைகளில் அபிஷேகிக்கும் போது அத்தீர்த்தம் மகாபுண்ணிய தீர்த்தமாக விளங்குகிறது.

    ஆலயங்களில் பிரதான சங்காக வலம்புரிச் சங்கு இடம் பெறும். சங்கின் அமைப்பு, அந்தப் பிரணவத்தை உணர்த்துகிறது. வலம்புரி கணபதியின் தும்பிக்கையைப் போல் தோற்றம் அமைந்திருக்கும்.

    பாற்கடலைக் கடைந்த போது வந்த பல மங்கலப் பொருட்களில் இந்தச் சங்கும் ஒன்று.

    இந்தச் சங்கு உதயம் ஆனதும் மஹாவிஷ்ணு, அதைத் தன் கரத்தில் வைத்துக்கொண்டு சங்கு சக்ரதாரி ஆனார். சங்கு ஐஸ்வர்யம், வீரம், மங்கலம் இவற்றைப் பிரதிபலிக்கும் பொருளாக அமைகிறது. வலம்புரிச் சங்கில் லட்சுமி, குபேரன் ஆகியோர் வாசம் செய்கிறார்கள்.

    இதை வைத்துப் பூஜை செய்ய, சுபீட்சம் பெருகும். வியாதிகள் நீங்கும்.

    ஒரு வலம்புரி சங்கு, கோடி இடம்புரி சங்குகளுக்கு சமம். எனவே, சுவாமிக்கு வலம்புரி சங்கினால் அபிஷேகம் செய்தால், விசேஷமானது.

    அதிலும் கோடி வலம்புரி சங்குகளுக்கு சமமானதாக கருதப்படும். கோடி சங்கு அபிஷேகம் செய்வது மிகவும் விஷேசம். இதனை, அம்பிகையின் வடிவமான பசுவின் மடியில் இருந்து நேரடியாக சிவனுக்கு அபிஷேகம் செய்யப்படுவது என்பர்.

    கார்த்திகை மாதத்தில், பவுர்ணமியுடன் கிருத்திகை நட்சத்திரம் கூடும் நேரத்தில், சிவபெருமான் அக்னி பிழம்பாக காட்சி தருகிறார்.

    அதனால், கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமைகளில் (சோமவாரம்), சிவன் கோவில்களில் இறைவனை குளிர்விக்க, சங்காபிஷேக பூஜைகள் நடத்தப்படுகிறது. இந்த சங்காபிஷேகம் சிவ பூஜையில் சிறப்பானதாக கருதப்படுகிறது. இத்தகைய சிறப்பு மிக்க சங்கை வழிபட்டு ஐஸ்வர்யம், லட்சுமி கடாட்சம் பெறுவோம்.

  • thiru-gnayana-sampandha-swamigal-devaram

    ” உயிர்க்கு உயிராய் …. நின்றான் “
    உரைசேரும் எண்பத்து நான்குநூ
    றாயிரமாம் யோனிபேதம்
    நிரைசேரப் படைத்தவற்றின்
    உயிர்க்குயிராய்
    அங்கங்கே நின்றான் கோயில்
    வரைசேரும் முகில்முழவ மயில்கள்
    பல நடமாட வண்டு பாட
    விரைசேர்பொன் இதழிதர மென்
    காந்தள் கை ஏற்கும் மிழலையாமே .

    நூல்களாலே சொல்லப்படுகிற எண்பத்து நான்கு லட்சம் யோனி பேதங்களையும் முறையாக ஒருங்கே படைத்து, அந்த யோனி பேதங்களில் உள்ள உயிர்களுக்கு எல்லாம் தானே உயிர் ஆதாரம் ஆகி, அந்தந்த உயிர்கள் தோறும் தங்கியுள்ள பெருமானது கோயில், மலையிலே தங்கும் மேகங்கள் மத்தள ஓசையைச் செய்யப் பல மயில்கள் நர்த்தனமாட, வண்டுகள் பண்பாட, இவற்றைக் கண்டும், கேட்டும் அனுபவித்த கொன்றை மரங்கள், மணமுடைய பூக்களாகிய பொன்னைப் பரிசாகக் கொடுக்க, அதனை மெல்லிய காந்தள் செடிகள் தம் பூவாகிய கைகளால் ஏற்றுக் கொள்ளும் வளம்மிக்க திருவீழிமிழலை ஆகும்

  • dhina-pala

    டிசம்பர் 3
    விளம்பி வருடம் – கார்த்திகை 17
    சிவன் கோயிலில் சங்காபிஷேகம்
    03-டிச-2018 திங்கள்
    கரிநாள்
    நல்ல நேரம் : 6.00 – 7.30
    ராகு : 7.30 – 9.00
    குளிகை : 1.30 – 3.00
    எமகண்டம் : 10.30 – 12.00
    திதி : திதித்துவயம்
    திதி நேரம் : ஏகாதசி ம 2.43
    நட்சத்திரம் : சித்திரை அ.கா 4.30
    யோகம் : சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம் : உத்திரட்டாதி
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – முயற்சி
    ரிஷபம் – இன்பம்
    மிதுனம் – புகழ்
    கடனம் – செலவு
    சிம்மம் – சுகம்
    கன்னி – வெற்றி
    துலாம் – உறுதி
    விருச்சிகம் – சுபம்
    தனுசு – தனம்
    மகரம் – பக்தி
    கும்பம் – தாமதம்
    மீனம் – அன்பு

  • indru-suba-muhurtha-naal

    டிசம்பர் 2
    விளம்பி வருடம் – கார்த்திகை 16
    02-டிச-2018 ஞாயிறு
    சுபமுகூர்த்த நாள் (காலை 7.30 – 9.00)
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 4.30 – 6.00
    குளிகை : 3.00 – 4.30
    எமகண்டம் : 12.00 – 1.30
    திதி : தசமி
    திதி நேரம் : தசமி மா 4.30
    நட்சத்திரம் : அஸ்தம் அ.கா 5.04
    யோகம் : அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : பூரட்டாதி
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – ஊக்கம்
    ரிஷபம் – அமைதி
    மிதுனம் – ஓய்வு
    கடனம் – பக்தி
    சிம்மம் – தனம்
    கன்னி – சாந்தம்
    துலாம் – அசதி
    விருச்சிகம் – சினம்
    தனுசு – நற்செயல்
    மகரம் – பணிவு
    கும்பம் – ஆர்வம்
    மீனம் – சாதனை

  • thirupathiyil-ladduku-pudhiya-cover

    திருமலையில் பிளாஸ்டிக் பயன்படுத்த கடந்த 1 ஆம் தேதி முதல் தடை திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்தது. தேவஸ்தானம் முதல் கட்டமாக லட்டுக்கு பிளாஸ்டிக்கிற்கு பதில் அட்டை பெட்டியில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் உலகப்புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களுக்காக தினந்தோறும் 2 முதல் 3 லட்சம் லட்டுகள் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த லட்டுகளை கொண்டு செல்ல 50 மைக்ரான் கொண்ட பிளாஸ்டிக் கவர்களை ரூ 3 விலைக்கு தேவஸ்தானம் விற்பனை செய்து வருகிறது.

    அக்டோபர் 2 தேதி முதல் திருப்பதி மாநகராட்சியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நவம்பர் 1 ஆம் தேதி முதல் திருமலையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த திருமலை-திருப்பதி தேவஸ்தானமும் தடை விதித்துள்ளது. திருமலையில் உள்ள கடைகள், ஓட்டல்களில் உணவுப் பொருட்கள் மற்றும் பொம்மைகள் பிளாஸ்டிக் பையில் அடைத்து விற்பனை செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளை எடுத்து செல்ல அதிகளவில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கவர்களையும் பயன்படுத்துவதை தவிர்க்கும் விதமாக அட்டைப்பெட்டியில் லட்டை அடைத்து வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதனை தொடர்ந்தும் முதல் கட்டமாக ஒரு லட்சம் அட்டைப்பெட்டிகளை சோதனை முறையில் பயன்படுத்தி லட்டு வழங்க உள்ளனர்.

    முதல் கட்டமாக வி.ஐ.பி. தரிசனம் மற்றும் கல்யாண உற்சவத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு அட்டை பெட்டியில் லட்டு பிரசாதம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சோதனை முயற்சி வெற்றிபெறும் பட்சத்தில் வருங்காலங்களில் அட்டைப் பெட்டியில் அடைத்து லட்டு பிரசாதங்களை வழங்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.