Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • noi-theerkum-danvanthri-bagavan

    தாடிக்கொம்பு சவுந்தரராஜப் பெருமாள் கோவில் தன்வந்திரி பகவானுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட தீர்த்தத்தை உட்கொண்டால் நோய்களில் இருந்து நிவாரணம் பெறலாம் என்பது உண்மையாகும்.

    உலகில் வாழும் மக்களை காத்தருள திருமால் எடுத்த அவதாரங்கள் 24 ஆகும். இதில் மிக முக்கியமான 10 அவதாரங்கள் தசாவதாரம் என அழைக்கப்படுகிறது. அவை மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனம், பரசுராமர், ராமர், பலராமர், கிருஷ்ணர், கல்கி ஆகியவை ஆகும். இவை தவிர தத்தாத்தரேயர், வியாசர், கபிலர், தன்வந்திரி போன்ற பல்வேறு அவதாரங்களை திருமால் எடுத்து தன் அடியார்களை காத்து வருகிறார்.

    பாற்கடலில் உதித்தவர் :
    ஒருமுறை துர்வாச முனிவரால் சாபத்திற்குள்ளானார் தேவேந்திரன். இதன் காரணமாக தேவேந்திரன் அனைத்து செல்வங்களையும் இழந்தார். இதனையடுத்து திருமாலின் அறிவுரையை ஏற்று தேவர்கள், அசுரர்கள் கூட்டு சேர்ந்து திருப்பாற் கடலை கடைந்தனர்.

    அப்போது மிகக்கொடூரமான ஆலகால விஷம் தோன்றியது. இதனை சிவபெருமான் தன் கண்டத்தில் இருத்தி கொண்டார். எனவேதான் சிவபெருமான் நீலகண்டன் ஆனார். தொடர்ந்து திருப்பாற்கடலை கடைந்தபோது காமதேனு, கற்பகவிருட்சம், ஐராவதம் என்ற யானை உள்ளிட்ட பல புனிதமான பொருட்கள் வந்தன.

    இறுதியாக திருமாலே தன்வந்திரியாக அமிர்த கலசத்தினை ஏந்தியவாறு பாற்கடலில் இருந்து தோன்றினார். தேவேந்திரனும் சாகா மருந்தான அமிர்த கலசத்தினை பெற்றுக்கொண்டு தான் இழந்த அனைத்தையும் பெற்று தேவலோகம் சென்றார். இவ்வாறு திருப்பாற்கடலை கடைந்தபோதுதான் திருமால் தேவர்களை காக்கும் பொருட்டு தன்வந்திரியாக அவதாரம் எடுத்தார். திருமால் தன்வந்திரியாக அவதரித்த நாள் தீபாவளிக்கு 2 நாள் முந்தையதாக வரும் திரயோதசி நாளாகும். திருமாலின் 24 அவதாரங்களில் 17-வதாக தன்வந்திரி அவதாரம் உள்ளது.

    மருத்துவத்தின் கடவுள் :

    ரிக், யசூர், சாமம் மற்றும் அதர்வணம் போன்ற 4 வேதங்களையும் பிரம்மன் படைத்து அதன் சாரமாகிய ஆயுர் வேதத்தையும் படைத்தார். ஆயுர்வேதம் தழைத்தோங்கி வளர முதலில் பிரம்மன் சூரியபகவானுக்கு உபதேசித்தார். சூரிய பகவானிடமிருந்து ஆயுர்வேதத்தினை படித்த பதினாரு மாணவர்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர் தன்வந்திரி ஆவார் என வைவர்த்த புராணம் கூறுகிறது. இவரை வைத்திய ராஜா ஆதர்ச மருத்துவர் என்றும் புராணங்களில் குறிப்பிடப்படுகிறது.

    இவர் சுருண்டு காணப்படும் மென்மையான திருமுடி, செவ்வரியோடிய கண்கள், வெண்சங்குக் கோடுகளுடன் கூடிய கழுத்து, பரந்த மார்பு, பட்டுப் பீதாம்பம், மலர் மாலைகள் தரித்த ஆபரணத்திருமேனி, 4 கரங்களில் இரு திருக்கரங்களில் சங்கு சக்கரம், கீழ் இரு திருக்கரங்களில் ஒன்றில் அட்டை பூச்சியும், மற்றொன்றில் அமிர்த கலசத்தினையும் தாங்கி காட்சியருள்வார்.

    தாடிக்கொம்பு :

    திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு சவுந்தரராஜப் பெருமாள் திருக்கோவிலில் பரிவார மூர்த்திகளில் ஒருவராக தன்வந்திரி பெருமாள் அருள்பாலிக்கிறார். இவருக்கு ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தில் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த பூஜையின்போது தன்வந்திரி பகவானை மனமுருக பிரார்த்தனை செய்து பூஜையில் அபிஷேகம் செய்யப்பட்ட தீர்த்தம் உள்ளிட்ட பிரசாதத்தினை உட்கொண்டாலே நோய்களில் இருந்து நிவாரணம் பெறலாம் என்பது கண்கூடான உண்மையாகும்.

    இந்த திருக்கோவிலில் பூஜையின்போது சந்தனாதி தைலத்தினை அமிர்த கலசத்தில் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டும், திருக்கோவிலின் மடப்பள்ளியில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டு பூஜிக்கப்பட்ட லேகியமும் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. உடலின் வெளிப்புறத்தில் ஏற்படும் சுக வீனங்களுக்கு பூசிக்கொள்ள அமிர்த கலசத்தில் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்ட தைலத்தினையும், உடலின் உள்பகுதியில் ஏற்படும் சுகவீனங்களுக்கு பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட லேகியத்தினை உட்கொள்வதன் மூலம் உடல் நோய்களிடமிருந்து முழுநிவாரணம் பெறலாம்.

    பிரசாதம் :

    தீராத வியாதிகளை உடையோர் அமாவாசை தினத்தில் மாலை சுமார் 6 மணியளவில் நடைபெறும் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜையில் கலந்து கொண்டு லேகியம் மற்றும் சந்தனாதி தைலம் போன்றவற்றை கோவிலில் வாங்கி பட்டாச்சாரியார்களிடம் கொடுத்து அபிஷேகம் செய்து வீட்டிற்கு எடுத்துச் சென்று தினமும் பயன்படுத்தி நலம்பெற்று வருகின்றனர்.

    அதுமட்டுமின்றி இந்த தைலம், லேகியம் போன்றவை தீர்த்தத்துடன் பூஜையில் கலந்து கொள்வோர் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. துளசி, ஆலிலை, அரசஇலை, வில்வ இலை, விஷ்ணுகிராந்தி, நாயுருவி, மரிக்கொழுந்து, பூர்ஜ இலை, தேவதாரு இலை போன்ற இலைகளையும், செவ்வந்திப்பூ, செண்பகம், பிச்சி, பாரிஜாதம், தாமரை, அரளி, புன்னகைப்பூ, மந்தாரை போன்ற பூக்களும் இவரது பூஜைக்கு உரியவை.

  • indraya-rasi-palan

    டிசம்பர் 8
    விளம்பி வருடம் – கார்த்திகை 22
    08-டிச-2018 சனி
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 9.00 – 10.30
    குளிகை : 6.00 – 7.30
    எமகண்டம் : 1.30 – 3.00
    திதி : அதிதி
    திதி நேரம் : பிரதமை ம 2.23
    நட்சத்திரம் : கேட்டை கா 6.57
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : ரோகிணி
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – பாராட்டு
    ரிஷபம் – பணிவு
    மிதுனம் – ஆக்கம்
    கடனம் – பரிசு
    சிம்மம் – செலவு
    கன்னி – மேன்மை
    துலாம் – ஆர்வம்
    விருச்சிகம் – முயற்சி
    தனுசு – உதவி
    மகரம் – பக்தி
    கும்பம் – தாமதம்
    மீனம் – வீம்பு

  • doshangalai-neekum-jambukeswarar-koil

    பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்கள் வரிசையில் 60-வது தலமாக இருக்கும் திருவானைக்காவல், பஞ்சபூதத் தலங்களில் நீர் தலம். தமிழ்நாட்டில் உள்ள பெரிய சிவாலயங்களில் திருவானைகாவல் தலமும் ஒன்று.

    ஆறு ஆதாரத் தலங்களில் இத்தலம் சுவாதிஷ்டானத் தலம். தேவாரம் பாடிய மூவராலும் பதிகம் பாடப்பெற்ற சிறப்புடைய தலங்களில் ஒன்று. இத்தல இறைவனையும், இறைவியையும் வழிபட்டு வர சகல தோஷங்கள் நீங்கும். திருமணத் நடை விலகும், குழந்தை பாக்கியம் கிடைக்கும்

    தல வரலாறு
    புராண காலத்தில் வெண் நாவல் மரங்கள் நிறைந்த காடாக இத்தலம் இருந்தது. அங்கே ஒரு வெண் நாவல் மரத்தடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. சிவகணங்களில் இருவர், தாங்கள் பெற்ற சாபம் காரணமாக இக்காட்டில் ஒரு யானையாகவும், சிலந்தியாகவும் பிறந்தனர்.

    சிவலிங்கம், கூரையில்லாமல் வெய்யில் மழையில் கிடந்தது. சிலந்தி, சிவலிங்கத்தின் மேல் வலை பின்னி வெய்யில், மழை மற்றும் மரத்தின் சருகுகள் லிங்கத்தின் மேல் விழாமல் காத்தது. யானை காவிரியில் இருந்து தன் துதிக்கை மூலம் நீரும், மற்றும் பூவும் கொண்டுவந்து வழிபட்டது.

    யானை, சிலந்தி பின்னிய வலையை அசிங்கமாகக் கருதி அதை அழித்துவிட்டுச் செல்லும். சிலந்தி மறுபடியும் வலை பின்னி தன் வழிபாட்டைத் தொடரும். தினந்தோறும் இது தொடர, யானையை தண்டிக்க நினைத்த சிலந்தி, யானையின் துதிக்கையில் புக, யானையும் சிலந்தியும் போராட, கடைசியில் இரண்டும் மடிந்தன.

    இவற்றின் பக்திக்கு மெச்சிய சிவபெருமான், யானையை சிவகணங்களுக்குத் தலைவனாக ஆக்கினார். சிலந்தி, மறுபிறவியில் கோச்செங்கட் சோழன் என்ற அரசனாகப் பிறந்தது. பூர்வஜென்ம வாசனையால் கோச்செங்கட் சோழன், யானை ஏற முடியாதபடி குறுகலான படிகளைக் கொண்ட கட்டுமலை மீது சிவலிங்கம் ஸ்தாபித்து 70 கோவில்கள் கட்டினான். அவை யாவும் மாடக்கோவில் என்று அழைக்கப்படுகின்றன. கோச்செங்கட் சோழன் கட்டிய முதல் மாடக்கோவில் திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயமாகும்.

     

    இந்த தல வரலாற்றை திருநாவுக்கரசர் தனது திருக்குறுக்கை சிவஸ்தலம் பதிகத்தில் (4-ம் திருமுறை – “ஆதியில் பிரமனார் தாம்” என்று தொடங்கும் பதிகம் – (4-வது பாடலில்) தெரிவிக்கிறார்.

    சிலந்தியும் ஆனைக்காவில் திருநிழல் பந்தர் செய்து
    உலந்து அவண் இறந்த போதே கோச்செங்கணானும் ஆகக்
    கலந்த நீர்க் காவிரீ சூழ் சோணாட்டுச் சோழர் தங்கள்
    குலந்தனில் பிறப்பித்திட்டார் குறுக்கை வீரட்டனாரே
    எப்படிப் போவது
    திருவானைக்கா, திருச்சி நகரின் ஒரு பகுதியாகும். நகரின் பல பகுதிகளில் இருந்தும் திருவானைக்காவல் வர பேருந்து வசதிகள் இருக்கின்றன. இவ்வாலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

  • indraya-rasi-palangal

    டிசம்பர் 7
    விளம்பி வருடம் – கார்த்திகை 21
    07-டிச-2018 வெள்ளி
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 10.30 – 12.00
    குளிகை : 7.30 -9.00
    எமகண்டம் : 3.00 – 4.30
    திதி : பிரதமை
    திதி நேரம் : அமாவாசை ம 1.28
    நட்சத்திரம் : கேட்டை முழுவதும் 0.00
    யோகம் : மரண யோகம்
    சந்திராஷ்டமம் : கார்த்திகை
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – நலம்
    ரிஷபம் – பயம்
    மிதுனம் – பக்தி
    கடனம் – சாந்தம்
    சிம்மம் – சந்தேகம்
    கன்னி – செலவு
    துலாம் – நன்மை
    விருச்சிகம் – ஆர்வம்
    தனுசு – ஊக்கம்
    மகரம் – உறுதி
    கும்பம் – முயற்சி
    மீனம் – பாசம்

  • selvangalai-allitharum-kuberan-koil

    சென்னை வண்டலூரை அடுத்து கேளம்பாக்கம் செல்கிற வழியில் ரத்தினமங்கலம் என்கிற அழகிய கிராமத்தில் அமைந்திருக்கிறது ஸ்ரீ லக்ஷ்மி குபேரர் கோயில்.

    இந்த லக்ஷ்மி குபேரர் கோயில்தான் குபேரனுக்கு என்று தனிப்பட்ட முறையில் அமைக்கப் பட்ட உலகின் முதல் கோயில் என்றும் சொல்லப்படுகிறது.

    வடக்கு நோக்கிய ஸ்தலம்: ஸ்ரீ லக்ஷ்மி குபேரர் ஆலையம் வடக்கு நோக்கிய ஸ்தலமாக இருக்கிறது. காரணம் வடக்கு திசையே குபேரனுக்குரிய திசை என்பதாலேயே என்றும் சொல்கிறார்கள். கோயிலுக்குள் நுழைந்து இடது புறமாகப் பார்த்தால் ஷோடஷ கணபதி ஆலயம். இதில் 16 கணபதிகள் அருள்பாலிக்கிறார்கள்.

    ஈசான மூலை குபேரர்: இதை அடுத்து ஈசான குபேரர் இருக்கிறார். இந்த ஈசான குபேரர் லிங்கவடிவில் இருக்கிறார். ஈசான்ய குபேரர் லிங்க வடிவத்தில் இருப்பவரை வழிபடும் போது, சிவனின் அருள் விரைவில் கிடைக்கும் என்றும் சொல்கிறார்கள். பின்னர் நவக்கிரகங்கள் வழிபாடு, அடுத்து அக்னி மூலையில் ஸ்தலவிருட்சமான வில்வ மரத்திஞ் கீழ் அக்னி லிங்கம் உள்ளது. இந்த அக்னி லிங்கத்திற்கு சான தீபம் ஏற்றப் படுவது புனிதமாகவும் நமது வேண்டுதலுக்கு வெற்றியாகவும் கருதப் படுகிறது. மேலும் மகாலக்ஷ்மியின் அருள் கிடைக்கவும், கடன்கள் தீரவும் இங்கு சானதீபம் ஏற்றப்படுகிறது.
    குபேரனிடம் கடன் வாங்கிய வெங்கடாசலபதி: அடுத்து வெங்கடாசலபதி திருத்தலம் உள்ளது. இவர் தனது திருமணத்திற்கு குபேரனிடம் கடன் வாங்கியதாகவும், இந்த கலியுகம் முடியும் போதுதான் அசல் கட்டி முடியும் என்று குபேரன் கூறியதாகவும் ஐதீகம்.

    காவல்காக்கும் ஸ்வர்ண ஆகர்ஷன பைரவர் : அடுத்து காவல்காக்கும் ஸ்வர்ண ஆகர்ஷன பைரவர் சன்னதி இருக்கிறது. மொத்தம் 64 வகை பைரவர்களில் இவர் தங்கம் போன்ற செல்வங்கள் கொடுத்து அதற்கு காவல்காக்கும் தெய்வமாகவும். குபேரனின் காவல் தெய்வமாக இங்கு வீற்றிருக்கிறார். சனி பகவானால் ஏதும் பிரச்சனைகள் ஏற்பட்டால் இவருக்கு பூசணி தீபம், அல்லது மிளகு மூட்டை தீபம் ஏற்றி வழிபட்டால் சனி பகவானால் உண்டாகும் தொல்லைகள் மாறி நன்மைகள் கிட்டுமாம். இவரை வழிபட உகந்த நேரம், ராகுகாலம், எமகண்டம், அஷ்டமி, நவமி தினங்கள்.

    கன்னி மூலையில் பிரம்மா சரஸ்வதி தம்பதியர்: அடுத்து கன்னி மூலையில் பிரம்மா சரஸ்வதி தம்பதியர் சகிதமாக உள்ளனர். இவருக்கு மஞ்சள் காப்பு நெஞ்சில் சாத்தி வழிபாட்டு அந்த மஞ்சளை தினம் நெற்றியில் இட்டுவர நமது தலை எழுத்து மிக நன்றாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அடுத்து ஹேப்பி மேன் என்று சொல்லப்படும் சீன வாஸ்து பொம்மையான லாபிங் குப்தா. இவரை கிச்சு கிச்சு மூட்டுவது போல வயிற்றில் தடவினால் அவர் மகிழ்ச்சியில் சிரிப்பார், நமக்கும் தினம் மகிழ்ச்சியை அள்ளித் தருவார் என்பது சீன மக்களின் ஐதீகம்.

    நமது குபேரனை சீன மக்கள் லாபிங் குப்தாவாக வழிபடுகிறார்கள் என்பதை உணர்த்தவே இங்கு இந்த லாபிங் குப்தா பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள். அடுத்து 18 படிகள் கொண்ட சன்னதியில் ஐயப்பன். அறுபடை வீடு கொண்ட முருகன் அனைவரையும் தரிசித்து விட்டு சென்றோமானால் குபேரன் கருவறை.

    குபேரன் சன்னதி: கண்களைக் கொள்ளை கொள்ளும் விதமாக பணமாலையோடு லக்ஷ்மி. அதற்கும் சற்று கீழே குபேரன் தனது மனைவி சித்ரலேகாவுடன் கிழக்கு நோக்கி அமர்ந்திருக்கிறார் செல்வத்தை தரும் மகாலக்ஷ்மி ஆனால் நிலையாகத் தங்கவிடமாட்டார ன்பதும் ஐதீகம். ஆனால் லக்ஷ்மியின் அருளால் பெற்ற செல்வத்தை குபேரனை வழிபட்டுத் தக்கவைத்துக் கொள்ளலாம். குபேரன் மடியில் கீரிப்பிள்ளை வைத்திருப்பார், நோயற்ற வாழ்வையும், நோயற்று செல்வத்தையும் தருபவர் குபேரன் என்பது பொருள்.

    குபேரனுக்கு பூஜை செய்யும் போது, நாணயங்களால் ஓங்கி சப்தம் எழுப்பும் படி குபேர மந்திரங்களை கூறி, வழிபடவேண்டுமாம். காரணம் அவர்களிடம் இருக்கும் செல்வத்தை விட நாணயங்கள் மூலம் நாம் அர்ச்சனை செய்யும் ஒலி கேட்டால் மிக சீக்கிரம் நம் வேண்டுதலுக்கு செவி சாய்ப்பார்கள் என்கிறார்கள்

    நவநிதி அதிபதி என்று சொல்லப்படும் குபேரனின் எதிர்புறம் மச்சநிதியும், கச்சபம் நிதியும் வளர்க்கிறார்கள். தாவது, மீனும் ஆமையும்.மேலும் குபேரர் சங்கநிதி, பதும நிதி எனப்படும் தேவர்காலத்து பணத்திற்கும், காமதேனு, கற்பக விருட்சம் என்று சொல்லக் கூடிய மாடு, கரப்பக விருட்ச மரத்துக்கும், நீலநிதி என்று சொல்லக் கூடிய கடல் செல்வத்துக்கும், நந்தநிதி, முகுந்த நிதி சுக்கிரன் என்று சொல்லக் கூடிய அ திர்ஷ்ட தேவதைக்கும் அதிபதியாக இருக்கிறாராம் குபேரன்.

  • thirumana-thadaai-neekum-durgai-vazhipadu

    துர்க்கை அம்மன் சன்னதியில், சுத்தமாக மஞ்சள், சந்தனம் இட்டு மெழுகி, அதில் திருவிளக்கு ஏற்ற வேண்டும். திருவிளக்கு ஏற்றும் போது, விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து விளக்கில் ஊற்றி, தீக்குச்சியினால் தீபம் ஏற்றாமல், பத்தியை எண்ணையில் நனைத்து அதில் தீயை கொளுத்தி, விளக்கை ஏற்ற வேண்டும்.

    விளக்கின் முன்பு அருகம்புல் துளசி கலந்த தீர்த்தம் வைக்க வேண்டும். மேலும் திருவிளக்குக்கு முன்பு ஒரு பழுத்த நல்ல எழுமிச்சம்பழம் படைக்கவும்.

    இரண்டு எழுமிச்சம்பழம் வாங்கி ஒவ்வொன்றையும் பாதியாக வெட்டி சாறு எடுத்து, அதில் தேனும் சர்க்கரையும் கலந்து படைக்கவும். எழுமிச்சம் பழத்தோலை வெளிப்புறத்தை உள்புறமாக்கி மொத்தம் 3 அகல் விளக்குகளைப் போலச் செய்து ராகு காலங்களில் விரதமிருந்து வழிபட வேண்டும். இவ்வாறு விரதமிருந்து வழிபட்டு வந்தால் திருமணத் தடை சீக்கிரமே சரியாகிவிடும்.

  • thirupathy-laddu-ingayum-kidaikum

    திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதம் தேவைப்படும் பக்தர்கள், இனி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலிலும் பெற்றுக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. பத்மாவதி தாயார் கோவில் உள்ளே டோக்கன் பெற்று, கோவிலுக்கு வெளியே உள்ள கவுண்ட்டர்களில் திருப்பதி லட்டு பிரசாதத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா கோலாகலமாக தொடங்கி நடந்து வருகிறது. அதையொட்டி பக்தர்களுக்கு திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதத்தை விற்பனை செய்வதற்காக, திருமலையில் இருந்து நேற்று முன்தினம் இரவு 10 ஆயிரம் லட்டுகள் வாகனத்தில் திருச்சானூருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதம் தேவைப்படும் பக்தர்கள், பத்மாவதி தாயார் கோவில் உள்ளே டோக்கன் பெற்று, கோவிலுக்கு வெளியே உள்ள கவுண்ட்டர்களில் லட்டு பிரசாதத்தைப் பெற்றுக்கொள்ளலாம். அத்துடன் பத்மாவதி தாயார் கோவில் லட்டு பிரசாதமும் விற்பனை செய்யப்படுகிறது, என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • indraya-rasi-palan

    டிசம்பர் 6
    விளம்பி வருடம் – கார்த்திகை 20
    அமாவாசை
    06-டிச-2018 வியாழன்
    நல்ல நேரம் : 10.30 – 12.00
    ராகு : 1.30 – 3.00
    குளிகை : 9.00 – 10.30
    எமகண்டம் : 6.00 – 7.30
    திதி : அமாவாசை
    திதி நேரம் : சதுர்த்தசி ம 1.02
    நட்சத்திரம் : அனுஷம் அ.கா 5.30
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : பரணி
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – அச்சம்
    ரிஷபம் – சோர்வு
    மிதுனம் – பயம்
    கடனம் – பக்தி
    சிம்மம் – கவனம்
    கன்னி – சுகம்
    துலாம் – கவலை
    விருச்சிகம் – வெற்றி
    தனுசு – நன்மை
    மகரம் – சாதனை
    கும்பம் – லாபம்
    மீனம் – ஜெயம்

  • indraya-rasi-palan

    டிசம்பர் 5
    விளம்பி வருடம் – கார்த்திகை 19
    05-டிச-2018 புதன்
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 12.00 – 1.30
    குளிகை : 10.30 – 12.00
    எமகண்டம் : 7.30 – 9.00
    திதி : சதுர்த்தசி
    திதி நேரம் : திரையோதசி ம 1.07
    நட்சத்திரம் : விசாகம் அ.கா 4.44
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : அசுவினி
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – சிக்கல்
    ரிஷபம் – பக்தி
    மிதுனம் – எதிர்ப்பு
    கடனம் – வெற்றி
    சிம்மம் – விருப்பம்
    கன்னி – ஜெயம்
    துலாம் – பாசம்
    விருச்சிகம் – சாந்தம்
    தனுசு – மகிழ்ச்சி
    மகரம் – தாமதம்
    கும்பம் – சுகம்
    மீனம் – வரவு

  • chidambaram-nataraja-koil-arudhra-fest

    உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா வருகிற 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் ஆனி திருமஞ்சனமும், மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த 2 திருவிழாக்களின் போதும் மூலவரே உற்சவராக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது சிறப்பாகும்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான மார்கழி மாத ஆருத்ரா தரிசனவிழா வருகிற 14-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனையொட்டி அன்று அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு நடராஜருக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. அதனை தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர். தொடர்ந்து காலை 8.30 மணி முதல் 9.30 மணிக்குள் நடராஜர் சன்னதி எதிரே உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. இரவு தங்கம், வெள்ளி வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடக்கிறது.

    தொடர்ந்து 15-ந்தேதியில் இருந்து 21-ந்தேதி வரை தினமும் காலை பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும், இரவில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதிஉலாவும் நடைபெற உள்ளது.

    விழாவில் முக்கிய நிகழ்ச்சிகளின் ஒன்றான தேரோட்டம் வருகிற 22-ந்தேதி நடக்கிறது. அன்றைய தினம் அதிகாலை 5 மணிக்கு மேல் நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் தனித்தனி தேரில் எழுந்தருளி தேரோட்டம் நடக்கிறது.

    சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் 23-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதனையொட்டி அன்று அதிகாலை 3 மணி முதல் 6 மணிவரை ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் சிவகாமசுந்தரி அம்பாளுக்கும், நடராஜருக்கும் மகாஅபிஷேகம் நடைபெறும். பின்னர் காலை 6 மணி முதல் 10 மணிவரை திருவாபரண அலங்காரமும், சித்சபையில் ரகசிய பூஜை, பஞ்சமூர்த்திகள் வீதிஉலா காட்சியும், 1 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும் நடக்கிறது. 24-ந்தேதி பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கில் வீதிஉலா நடக்கிறது.