Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • Suba mhoortha naal

    ஜனவரி 30 
    விளம்பி வருடம் – தை 16
    காந்திஜி நினைவு நாள்
    30-ஜன-2019 புதன்  
    சுபமுகூர்த்த நாள் (காலை 9.00 – 10.30)
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    12.00 – 1.30    
    குளிகை    :    10.30 – 12.00
    எமகண்டம்    :    7.30 – 9.00                          
    திதி    :    தசமி          
    திதி நேரம்    :    தசமி    இ    8.06
    நட்சத்திரம்    :    அனுஷம்    இ    8.58
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    பரணி, கார்த்திகை
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • Sevvai Gragam

    ராசியில் செவ்வாய் கிரகத்துடன் சூரியன் சேர்ந்து இருந்தால் நிறைகுறைகள் சில இருக்கும். உடல் திறன் மிக்கவர்களாக இருப்பார்கள். கால சூழ்நிலைக்கு ஏற்ற தொழில்களைச் செய்வார்கள். அடிக்கடி தொழில் மாற்றம் இருக்கும். விளையாட்டுத் துறையில் யோகம் உண்டு. இவர்கள் உஷ்ணதேக அமைப்பு உடையவர்களாக இருப்பர்.

     செவ்வாயுடன் சந்திரன் சேர்ந்திருந்தால் அவர்கள் கைராசி மிக்கவர்களாக இருப்பார்கள். தாயார் வழியில் சொத்து சேரும். வாக்குபலிதம் உள்ளவர்களாக இருப்பர். உணர்ச்சிவசப்பட்டாலும் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்வார்கள். நண்பர்களால் அவ்வப்போது பிரச்னைகளை சந்திப்பார்கள்.

    செவ்வாய் கிரகத்துடன் புதன் கிரகம் சேர்ந்திருந்தால் விதண்டாவாதம், கூடாநட்பு உண்டாகும். ஸ்திரத்தன்மை அற்றவராக இருப்பார்.  இவர்களின் உடலில் தீக்காயங்கள், வெட்டுக்காயங்கள் ஏற்படும். முன்யோசனை இல்லாமல் எதையும் செய்வார்கள். 

    இதேபோல செவ்வாயுடன் சுக்கிரன் சேர்ந்திருந்தால் சாதக, பாதகங்கள் உண்டு. கலைத்துறையில் இவர்களின்  ஜீவனம் அமையும். சாகசச் செயல்களில் வெற்றி அடைவார்கள். முரட்டு பிடிவாதம் அதிகம் இருக்கும். காம இன்பத்தில் மூழ்கிக் கிடப்பார்கள். தகாத சேர்க்கைகள், பழக்கவழக்கங்கள் இருக்கும். 

    செவ்வாயுடன் குரு சேர்ந்திருந்தால் எதிலும் நிபுணத்துவம் உண்டாகும். வாக்குபலிதம், சாஸ்திர ஆராய்ச்சி, ஜோதிடம், குறி சொல்லுதல், ஆசிரியர் பணி, வக்கீல், நிதி  நீதித்துறையில் ஜீவனம் அமையும். பிராமண நேசம், விவசாய நிலங்கள் சொத்து சேர்க்கை உண்டு.

    செவ்வாயுடன் சனி சேர்ந்திருந்தால் இரும்பு, இயந்திரங்கள் சம்பந்தமான வகையில் ஜீவனம் அமையும். ஏதாவது வழக்கு, பஞ்சாயத்து என்று அலைந்து கொண்டிருப்பார்கள். முரண்பாடான கருத்துகள் இருக்கும். உடல்திறன் மிக்கவர்களாக இருப்பார்கள். சங்கீத ரசனை இருக்கும். 

    செவ்வாய் கிரகத்துடன் ராகு சேர்ந்திருந்தால் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று எதையும் செய்வார்கள். சினிமா துறையில் ஜீவனம் அமையும். விளையாட்டில் ஆர்வம் இருக்கும். தகாத சேர்க்கை, நீச்ச பழக்க வழக்கங்கள் உண்டாகும். 

    செவ்வாயுடன் கேது சேர்ந்திருந்தால் மருத்துவம், ரசாயனம் சம்பந்தமாக படிப்பு, ஜீவனம் அமையும். ஆன்மிக விஷயங்களில் நாட்டம் உண்டாகும். உற்சாகமாக செயல்பட்டாலும் மனச்சோர்வு அடைவார்கள். விவசாய விஷயங்களில் ஈடுபாடு ஏற்படும். 

  • Meenatchi amman koil masi thiruvizha

    உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி இருக்கிறது. 

    மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் தெப்பத் திருவிழா நிறைவடைந்த நிலையில் தற்போது மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.

    திருவிழாவை முன்னிட்டு சுவாமி சன்னதி முன்புள்ள கம்பத்தடி மண்டபத்தில் தங்கக் கொடிமரத்தில் ரிஷப உருவம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. அப்போது அருள்மிகு மீனாட்சியம்மன், பிரியாவிடையுடன் சுவாமி எழுந்தருளினார்.
     
    கொடியேற்றத்தை தொடர்ந்து தினந்தோறும் சுவாமி, அம்மன் கோயில் 2ம் பிரகாரத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். கொடியேற்ற நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர். 

  • Palani Murugan koil Hundiyal vasool

    பழனி முருகன் கோயிலில் நடைபெற்ற தைப்பூச விழாவின்போது பக்தர்கள் ரூ. 2 கோடியே 71 லட்சத்து, 48 ஆயிரத்து 680 ரொக்கமாக காணிக்கை செலுத்தி இருக்கின்றனர். 627 கிராம் தங்கம், 26,190 கிராம் வெள்ளி ஆகியவற்றை உண்டியலில் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

    பழனி முருகன் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதலை மலைக் கோயிலில் உள்ள உண்டியலில் ரொக்கம், தங்கம் மற்றும் வெள்ளிப் பொருள்களைக் காணிக்கையாக செலுத்துகின்றனர்.

    அந்த வகையில், கடந்த 15 நாள்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது. இதில்  ரூ. 2 கோடியே 71 லட்சத்து, 48 ஆயிரத்து 680 ரொக்கமாக காணிக்கை செலுத்தி இருக்கின்றனர். 627 கிராம் தங்கம், 26,190 கிராம் வெள்ளி மற்றும் 371 வெளிநாட்டு கரன்சிகள் ஆகியவை இருந்தன என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
     

  • Chandrastama Vilaivugal Thaniya

    சந்திராஷ்டமம்….. ஒவ்வொரு ராசிக்கும் எட்டாமிடத்தில் சந்திரம் வரும் பொழுது அதைச் சந்திராஷ்டமம் என்கிறோம்.  பொதுவாக ஒரு ராசிக்கு சந்திராஷ்டம தினத்தில் மனம் நிலைபாடு இல்லாமல் இருக்கும். அலைச்சல்கள், எதிர்ப்புகள் இருக்கும். 

    காரியத்தடை போன்றவற்றால் அவதி உண்டாகும். இதுபோன்று சந்திராஷ்டமத்தின் விளைவுகள் தணிய வலம்புரி சங்குகளில் குங்குமத்தை பூஜித்து, பவனானுக்குரிய மந்திரங்கள் ஓதி நெற்றியில் இட வேண்டும். அரிசியை சங்கில் வைத்து வழிப்பட்டு அதை எடுத்து இருக்கும் அரிசியுடன் சேர்த்து தானம் செய்தாலும் நல்லது.

    அதுமட்டுமல்ல தினமும் காலையில் எழுந்தவுடன் குளித்து முடித்து பூஜை அறைக்குச் சென்று நேற்று சங்கில் ஊற்றி உள்ள நீரை வீட்டின் வாசல்படி மற்றும் முக்கிய இடங்களில் தெளிக்க வேண்டும். சங்கை மலர்களால் அர்ச்சித்து ஓம்,ஓம்,ஓம் என்று கூறி தூப தீபம் காட்டி வணங்க வேண்டும். 

    இதேபோல வெள்ளிக்கிழமைகளில் பசும்பால், துளசி இலைகளைப் போட்டு வைத்து பூஜை  செய்ய வேண்டும். மறு நாள் சனிக்கிழமை அந்தப் பசும்பாலையும், துளசியையும் சாப்பிட்டு வந்தால் எப்படி நாள்பட்ட வியாதியும் குணமாகும்.

     இந்த சங்கு பூஜையை 48 நாட்கள் தொடர்ந்து செய்து வழி பட்டு வந்தால் பல்வேறு நன்மைகள் நாடி வரும். தினம் தினம் சங்கு பூஜை செய்பவர் இல்லத்தில் எல்லா எதிர்ப்புகளும் நீங்கி, அதிர்ஷ்ட தேவதை அடியெடுத்து வைக்கும் வாய்ப்பு கிட்டும்.
     

  • Indraya Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   பொறாமை 
    ரிஷபம் – பாராட்டு 
    மிதுனம் – லாபம் 
    கடனம் –  செலவு  
    சிம்மம் – நஷ்டம் 
    கன்னி – உழைப்பு 
    துலாம் –  மகிழ்ச்சி 
    விருச்சிகம் – நற்செயல் 
    தனுசு – வெற்றி 
    மகரம் – நன்மை 
    கும்பம் – ஜெயம் 
    மீனம் – ஆதரவு

  • Indraya Nalla Neram

    ஜனவரி 29
    விளம்பி வருடம் – தை 15
    29-ஜன-2019 செவ்வாய்  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    3.00 – 4.30    
    குளிகை    :    12.00 – 1.30
    எமகண்டம்    :    9.00 – 10.30                          
    திதி    :    நவமி          
    திதி நேரம்    :    நவமி    இ    8.06
    நட்சத்திரம்    :    விசாகம்    இ    8.22
    யோகம்    :    மரண-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    அசுவினி,பரணி
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • Archanaiku Ugandha Pookal

    கடவுளுக்கு மிக நெருக்கமான விஷயம் பூக்கள். பூக்கள் இல்லாமல் கடவுள் பூஜை நிறைவு பெறுவது இல்லை. அதனால் தான் இறைவனை அர்ச்சிக்க நாம் பூக்களை பயன்படுத்துகின்றோம். எத்தனையோ பூக்கள் உலகத்தில் இருந்தாலும் தெய்வ வழிபாட்டுக்கு உகந்த  குறிப்பட்ட பூக்களை தான் நாம் பயன்படுத்துகின்றோம். அதுவும் குறிப்பிட்ட கடவுளுக்கு குறிப்பிட்ட பூக்களால் தான் அர்ச்சிக்க வேண்டும் என்பதே ஐதீகம்.

    விநாயகருக்கு, அருகம்புல் கொண்டே அர்ச்சனை செய்வார்கள். அதேபோல செம்பருத்தி, தாமரை, ரோஜா ஆகிய பூக்கள் மட்டுமே விநாயகர் வழிபாடுக்கு பயன்படுத்தப்படுகிறது. 

    முருக பெருமானுக்கு மல்லிகை, முல்லை, சாமந்தி, ரோஜா ஆகிய பூக்களுடன் சூரியகாந்தி பூவும் உகந்தவை. 

    துர்க்கை அம்மனுக்க்கு மல்லிகை, முல்லை, செவ்வரளி, செம்பவளமல்லி, சூரியகாந்தி, வெண்தாமரை ஆகிய பூக்களால் அர்ச்சனை செய்யப்படும்.

    அஷ்ட புஷ்பங்கள் எனப்படும் தும்பை, வில்வம், செந்தாமரை, செம்பருத்தி, புன்னை, வெள்ளெருக்கு, நந்தியாவட்டம், செண்பகம் என்பவற்றால் அர்ச்சனை செய்யப்படும்விஷ்ணுவிற்கு தாமரை, பவளமல்லி, மருக்கொழுந்து, ஆகிய பூக்களால் அர்சனை செய்யப்படும். 
     

  • Ganapathi Homam Payangal

    காரிய தடை நீங்க  கணபதி ஹோமம் செய்து அக்காரியத்தைத் தொடங்கினால் தடைகளின்றி சிறப்பாக நடைபெறும் என்பது ஐதீகம். கணபதி ஹோமத்தை எல்லா நேரத்திலும் செய்து விட முடியாது. அதிகாலை நேரத்தில், அதாவது பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லப்படும் நேரத்தில் செய்வது தான் கணபதி ஹோமத்திற்கு பலன்களைத்தரும். 

    கணபதி ஹோமத்தின் பலன்கள்…
    அரசு பதவிகள், ராஜ வசியம் பெற தேன், பால், நெய் கலந்த கலவையை கணபதி ஹோமத்தில் இட வேண்டும். தேன் கொண்டு ஹோமம் செய்தால் கடன் தொல்லைகள் நீங்குவதுடன், செல்வச் சிறப்போடு சகல பாக்கியங்களும் கிடைக்கும்.
     
    அதேபோல திருமணத் தடை நீங்கவும், வாழ்க்கை வளமோடு இருக்கவும் நெல் பொரி, திருமதுரம் கொண்டு வேள்வி செய்ய வேண்டும். 

    நீங்கள் எடுத்துக் கொண்ட காரியம் வெற்றி பெற நெய் அப்பத்தினால் ஹோமம் செய்ய வேண்டும். தொட்டதெல்லாம் ஜெயமாக கொழுக்கட்டையினால் ஹோமம் செய்தல் நல்லது. பொருள் வளம் பெற வேண்டுமெனில் கரும்புத் துண்டால் ஹோமம் செய்ய வேண்டும். நெய், தேங்காய்த்துண்டு, சத்துமாவு, அப்பம், மோதகம், கரும்புத்துண்டு, எள்ளுருண்டை, நெல் பொரி, அவல், வாழைப்பழம், வில்வ சமித்து, அருகம்புல், சர்க்கரைப் பொங்கல் இவைகளால் ஹோமம் செய்தால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.

    கருங்காலிக் குச்சியால் வேள்வி செய்தால் கடன் தொல்லை, வறுமையிலிருந்து விடுபடலாம். 

    பவுர்ணமி, மாதப் பிறப்பு, சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கணபதி ஹோமத்தை செய்தால், நாம் வேண்டும் பலன்கள் நிச்சயம் கிட்டும்.
     

  • January 28 – Rasi Palangal

    ஜனவரி 28
    விளம்பி வருடம் – தை 14
    28-ஜன-2019 திங்கள் 
    நல்ல நேரம்    :    6.00 – 7.30    
    ராகு    :    7.30 – 9.00    
    குளிகை    :    1.30 – 3.00
    எமகண்டம்    :    10.30 – 12.00                          
    திதி    :    அஷ்டமி          
    திதி நேரம்    :    அஷ்டமி    இ    8.36
    நட்சத்திரம்    :    சுவாதி    இ    8.16
    யோகம்    :    அமிர்த-மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    ரேவதி,அசுவினி
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   செலவு 
    ரிஷபம் – வரவு 
    மிதுனம் – லாபம் 
    கடனம் –  ஜெயம் 
    சிம்மம் – பயம் 
    கன்னி – ஆதரவு 
    துலாம் –  உதவி
    விருச்சிகம் – பெருமை 
    தனுசு – போட்டி
    மகரம் – ஆக்கம் 
    கும்பம் – உழைப்பு 
    மீனம் – மகிழ்ச்சி