Meenatchi amman koil masi thiruvizha

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி இருக்கிறது. 

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் தெப்பத் திருவிழா நிறைவடைந்த நிலையில் தற்போது மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.

திருவிழாவை முன்னிட்டு சுவாமி சன்னதி முன்புள்ள கம்பத்தடி மண்டபத்தில் தங்கக் கொடிமரத்தில் ரிஷப உருவம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. அப்போது அருள்மிகு மீனாட்சியம்மன், பிரியாவிடையுடன் சுவாமி எழுந்தருளினார்.
 
கொடியேற்றத்தை தொடர்ந்து தினந்தோறும் சுவாமி, அம்மன் கோயில் 2ம் பிரகாரத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். கொடியேற்ற நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர். 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *