Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • திருமலையில் ரத சப்தமி உற்சவம்…. சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளினார் உற்சவர் மலையப்ப சுவாமி…..

    ரதசப்தமி  உற்சவத்தின் முதல் வாகன புறப்பாடாக மலையப்ப சுவாமியின் சூரிய பிரபை வாகன புறப்பாடு இன்று காலை திருப்பதி மலையில் நடைபெற்றது.சூரிய பிரபை வாகன புறப்பாட்டை முன்னிட்டு கோவிலிலிருந்து எழுந்தருளிய உற்சவர் மலையப்ப சுவாமி வாகன மண்டபத்தை அடைந்து சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளினார்.

    தொடர்ந்து நடத்தப்பட்ட தீப தூப நைவேத்தியங்களுக்கு பின் கோவில் மாட வீதிகளில் பக்தர்களின் பக்தி கோஷங்களுக்கிடையே அதிகாலை முதல் ஏழுமலையானின் சூரிய பிரபை வாகன சேவை நடைபெற்றது.அப்போது மாட வீதிகளில் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு மேற்கொண்டனர்.

    தட்ஷிணாயன காலம் முடிந்து உத்தராயன காலம் துவங்கி உள்ள நிலையில் உத்தராயன காலத்தில்  இன்று சூரிய பகவான் வடதிசை நோக்கி தன்னுடைய பயணத்தை துவக்கும் நாள் ஆகும்.  இன்றைய நாளை சூரிய ஜெயந்தி நாள் என்றும் கூறுவார்கள்.

  • பிப்ரவரி 16 – ரதசப்தமி நாள்… இன்றைய ராசிபலன்….

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –     சுகம்
    ரிஷபம்         – ஆக்கம்
    மிதுனம்     –   அசதி  
    கடகம்         –  வேலை  
    சிம்மம்         –   செலவு
    கன்னி         –    சினம்
    துலாம்         –     புகழ்
    விருச்சிகம்     –  வெற்றி
    தனுசு         –     முயற்சி
    மகரம்         –    ஊக்கம்  
    கும்பம்         –      லாபம்  
    மீனம்         –      அறிவு
    சந்திராஷ்டமம்    –       உத்திரம், ஹஸ்தம்

  • பிப்ரவரி 16 – கார்த்திகை

    பிப்ரவரி 16 – கார்த்திகை
    சோபகிருது வருடம் – மாசி 4
    கார்த்திகை
    16-பிப்-2024 வெள்ளி
    ரத சப்தமி
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 10.30 – 12.00
    குளிகை : 7.30 -9.00
    எமகண்டம் : 3.00 – 4.30
    திதி : திதித்துவயம்
    திதி நேரம் : சப்தமி ம 3.04
    நட்சத்திரம் : பரணி ம 2.34
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : உத்திரம்,அஸ்தம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

  • திருத்தணி சுப்பிரமணி சாமி திருக்கோயில் மாசி பெருவிழா கொடியேற்றம்….

    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருக்கோயில் ஆகும். இந்த திருக்கோயிலில் மாசி பெருவிழா பிரம்மோற்சவ நிகழ்ச்சி இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது இந்நிகழ்வு10 நாட்களுக்கு நடைபெற உள்ளது இந்த நாட்களில் காலை மற்றும் மாலை வேலைகளில் உற்சவர் முருகப்பெருமான் புலி வாகனம் யானை வாகனம் திருத்தேர் போன்ற வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

    இதனைத் தொடர்ந்து மாசி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான வள்ளியம்மை திருக்கல்யாணம் பிப்ரவரி 22ஆம் தேதி வெள்ளிக்கிழமை மலைக்கோயில் பக்தர்கள் முன்னிலையில் அதிகாலை ஐந்து மணிக்கு நடைபெற உள்ளது.

    இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என்பதால் மகிழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகம் செய்து வருகின்றனர்.

  • திருப்போரூர் முருகன் கோயிலில் மாசி பிரம்மோற்சவ திருவிழா… தங்க கொடி மரத்தில் கொடியேற்றம்…

    திருப்போரூர் முருகர் கோயிலில் மாசி பிரம்மோற்சவ திருவிழா தங்க கொடி மரத்தில் கொடியேற்றி பக்தர்கள் அரோகரா முழக்கங்களுடன் துவங்கியது. மாசி மாதம் முருக பெருமானுக்கு பிரம்மோற்சவ திருவிழா நடைப்பெருவது வழக்கம்.

    அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் பிரசித்தி பெற்ற ஶ்ரீ கந்தசாமி திருக்கோயிலில் மாசி பிரம்மோற்சவ திருவிழாவின் துவக்க விழா நடைபெற்றது. இந்து அறநிலையத் துறை சார்பில் நடைபெற்ற திருவிழாவின் முதல் நாளான இன்று அதிகாலை சுமார் 5:30 மணியளவில் தங்க கொடி மரத்தில் பக்தர்களின் அரோகரா அரோகரா என்ற கோஷம் வின்னை முட்ட கொடியேற்றம் நடைபெற்றது.

    அதை தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் முருக பெருமான் வள்ளி தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த மாசி பிரம்மோற்சவ திருவிழாவின் துவக்க நாளில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வள்ளி தெய்வானை முருகப் பெருமானை வழிபட்டனர்.

    இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 21ம் புதன்கிழமையும், வள்ளி முருகப்பெருமான் திருக்கல்யாணம் வரும் 27ம் தேதியும் நடைபெறவுள்ளது.

  • பிப்ரவரி 15 – 12 ராசிகளுக்கும் இன்றைய ராசிபலன்….

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –     லாபம்
    ரிஷபம்         – அமைதி
    மிதுனம்     –   உயர்வு
    கடகம்         –  களிப்பு
    சிம்மம்         –   வரவு  
    கன்னி         –    பெருமை
    துலாம்         –     பரிவு
    விருச்சிகம்     –  அசதி
    தனுசு         –     களிப்பு
    மகரம்         –    பொறுமை
    கும்பம்         –      நன்மை
    மீனம்         –      புகழ்
    சந்திராஷ்டமம்    –       பூரம், உத்திரம்

  • பிப்ரவரி 15 – சஷ்டி விரதம்

    பிப்ரவரி 15 – சஷ்டி விரதம்
    சோபகிருது வருடம் – மாசி 3
    15-பிப்-2024 வியாழன்
    நல்ல நேரம் : 10.30 – 12.00
    ராகு : 1.30 – 3.00
    குளிகை : 9.00 – 10.30
    எமகண்டம் : 6.00 – 7.30
    திதி : சஷ்டி
    திதி நேரம் : சஷ்டி மா 4.36
    நட்சத்திரம் : அசுவினி ம 3.30
    யோகம் : அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : பூரம்,உத்திரம்
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்

     

  • பிப்ரவரி 14 – வசந்த பஞ்சமி நாள் ராசிபலன்….

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –     நட்பு
    ரிஷபம்         – இன்பம்
    மிதுனம்     –   ஆக்கம்
    கடகம்         –  மறதி
    சிம்மம்         –   வலிமை
    கன்னி         –    மேன்மை   
    துலாம்         –     பக்தி    
    விருச்சிகம்     –  புகழ்
    தனுசு         –     வெற்றி
    மகரம்         –    செலவு  
    கும்பம்         –      உயர்வு   
    மீனம்         –      நன்மை
    சந்திராஷ்டமம்    –       மகம், பூரம்

  • பிப்ரவரி 14 – வசந்த பஞ்சமி

    பிப்ரவரி 14 – வசந்த பஞ்சமி
    சோபகிருது வருடம் – மாசி 2
    14-பிப்-2024 புதன்
    வசந்த பஞ்சமி
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 12.00 – 1.30
    குளிகை : 10.30 – 12.00
    எமகண்டம் : 7.30 – 9.00
    திதி : பஞ்சமி
    திதி நேரம் : பஞ்சமி மா 6.28
    நட்சத்திரம் : ரேவதி மா 4.39
    யோகம் : மரணயோகம்
    சந்திராஷ்டமம் : மகம்,பூரம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

     

  • கோட்டை மாரியம்மன் திருக்கோவிலின் மாசி திருவிழா கொடியேற்றம்…

    திண்டுக்கல்லில் பிரசித்தி பெற்ற அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோவிலின் மாசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கொடியேற்றம் வெகு விமர்சையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்பு

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 23ஆம் தேதி பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் அன்று மாலை திருத்தேர் உலாவும்

    24 ஆம் தேதி தசாவதாரம்

    25ஆம் தேதி மஞ்சள் நீராட்டுதல் நடைபெறும்

    27 ஆம் தேதி தெப்ப உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது