Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்…

    ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில் அமைந்துள்ளது மாசாணியம்மன் கோவில். இங்கு வாரம்தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அதிகளவிலான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்கின்றனர். அம்மாவாசை உள்ளிட்ட நாட்களில் பக்தர்களின் வருகை அளவுக்கு அதிகமாக இருக்கும்.

    உள்ளூர் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகள், கோவை, திருப்பூர், உடுமலை, பழனி, திண்டுக்கல், மதுரை ஈரோடு, கரூர், திருச்சி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். இதுபோன்ற விஷேச நாட்களில் பக்தர்களின் வசதிக்காக பொள்ளாச்சியில் இருந்து ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

    இக்கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் துவங் கியது. சர்க்கார்பதியில் இருந்து  பிரத்யோகமாக சேகரிக்கப்பட்ட 85 அடி உயரமான  மூங்கில்  சேத்துமடைக்கு கொண்டு வரப்பட்டு அங்குள்ள காளியம்மன் கோவிலில் பூஜை செய்யப்பட்டு அதன் பிறகு அங்கிருந்து மாசாணியம்ம கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.

    குண்டம் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மயான பூஜை  வருகிற 22ம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு மேல் நடைபெற உள்ளது.  விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் 25ம் தேதி காலை 9 மணிக்கு மேல் துவங்கும்.

  • பிப்ரவரி 10 – திருவள்ளூர் வீரராகவர் தேர்

    பிப்ரவரி 10 – திருவள்ளூர் வீரவீராகவர் தேர்
    சோபகிருது வருடம் – தை 27
    10-பிப்-2024 சனி
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 9.00 – 10.30
    குளிகை : 6.00 – 7.30
    எமகண்டம் : 1.30 – 3.00
    திதி : பிரதமை
    திதி நேரம் : அமாவாசை அ.கா 4.34
    நட்சத்திரம் : திருவோணம் அ.கா 12.23
    யோகம் : சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம் : திருவாதிரை,புனர்பூசம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

     

  • பிப்ரவரி 09 – தை அமாவாசை நாள் ராசிபலன்….

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     – செலவு
    ரிஷபம்         – ஓய்வு
    மிதுனம்     –   சிக்கல்
    கடகம்         –  தோல்வி
    சிம்மம்         –   சுகம்
    கன்னி         –    இன்பம்
    துலாம்         –     நலம்   
    விருச்சிகம்     –  பிரீதி
    தனுசு         –     வெற்றி
    மகரம்         –    தனம்
    கும்பம்         –      ஆதரவு
    மீனம்         –      லாபம்
    சந்திராஷ்டமம்    –      மிருகசீருஷம், திருவாதிரை

  • பிப்ரவரி 9 – தை அமாவாசை

    பிப்ரவரி 9 – தை அமாவாசை
    சோபகிருது வருடம் – தை 26
    அமாவாசை
    09-பிப்-2024 வெள்ளி
    தை அமாவாசை
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 10.30 – 12.00
    குளிகை : 7.30 -9.00
    எமகண்டம் : 3.00 – 4.30
    திதி : அமாவாசை
    திதி நேரம் : சதுர்த்தசி கா 7.52
    நட்சத்திரம் : உத்திராடம் அ.கா 1.50
    யோகம் : மரண-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : மிருகசீரிசீ டம்,திருவாதிரை
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

  • முன்னோர்களின் ஆசி கிடைக்க தை அமாவாசை அன்று செய்ய வேண்டிய தானம்…..

    தை அமாவாசை தினத்தில் கருப்பு உளுந்து, கருப்பு எள், வெல்லம், உப்பு, உடைகள், பார்லி ஆகியவற்றை நாம் தானம் அளிப்பது மிகவும் நல்லது. இதனால் நம் முன்னோர்களின் ஆசி கிடைக்கும்.

    இதனால் கிடைக்கும் பலன்கள் :

    தை அமாவாசை வழிபாடு செய்வதன் மூலம் பித்ருக்கள் நற்கதியை அடைவதும், திருப்தி அடைவதும் மட்டுமல்லாமல்… நம் வாழ்வில் நற்பலன்களும் பெருகும். மேலும் கடன் பிரச்சனைகளிலிருந்தும் விடுபடலாம்.

    தானம் கட்டாயம்!

    தை அமாவாசை அன்று கருப்பு உளுந்து, கருப்பு எள், வெல்லம், புத்தாடைகள் போன்ற பொருள்களை தானம் கொடுக்கலாம். இதன் மூலம் முன்னோர் ஆசீர்வாதம் கிடைக்கும். இந்த நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதோடு பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களுக்கு தானம் கொடுக்க வேண்டியதும் கட்டாயம். அவரவர் நிலைமைக்கு ஏற்ப தர்ப்பணம் செய்யலாம்.

    தெரிந்து கொள்ள வேண்டியது!

    தர்ப்பணம் கொடுப்பவர்கள் தனது கோத்திரம், குலதெய்வம், மூன்று தலைமுறை முன்னோரின் பெயர்களை அறிந்து வைத்திருக்க வேண்டும். நீர் நிலைகளில் தர்ப்பணம் செய்து முடித்து வீட்டிற்கு வந்ததும் சுத்தம் செய்த முன்னோரின் படத்தை வடகிழக்கு திசையில் வைத்து, தர்ப்பணம் கொடுத்தவர் தெற்கு பார்த்து நின்று துளசிமாலை போட வேண்டும். படத்திற்கு குங்குமம், சந்தனம் பூச வேண்டும்.

    வீட்டில் இருக்கும் முன்னோர் பயன்படுத்திய பொருள்களை வைத்து குத்து விளக்கு ஏற்ற வேண்டும். அவர்களுக்கு பிடித்தமான உணவு பதார்த்தங்களைப் படைக்க வேண்டும். இதைத் தொடர்ந்து கோதுமை தவிடு, அகத்திக்கீரை ஆகியவற்றை பசுவிற்கு தானமாக கொடுக்க வேண்டும். முன்னோருக்கு தர்ப்பணம் செய்து முடிக்கும் வரைக்கும் வீட்டில் தெய்வ வழிபாடு பூஜைகளை ஒத்தி வைக்க வேண்டும். தர்ப்பணம் முடிந்த பிறகு தான் தினசரி வழிபாடுகளை செய்ய வேண்டும்.

  • இல்லத்திலும், உள்ளத்திலும் சந்தோஷமும் மனநிறைவும் தரும் தை அமாவாசை விரதம்…

    தமிழ் மாதங்களில் வரும் எல்லா அமாவாசை நாட்களும் சிறப்பானவை தான். ஆனால் குறிப்பிட்ட சில மாதங்களில் வரும் அமாவாசை நாட்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. அவற்றில் முக்கிய இடம் வகிப்பது ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை ஆகும். தை அமாவாசையான நாளை ஆறு, கடல் போன்ற புனித நீர்நிலைகளில் குளித்து மூதாதையர்களுக்கு படையல் செய்து சிறப்பு பூஜை செய்வர்.

    தை அமாவாசை நாள் அன்று நம் முன்னோருக்கு உணவு, புத்தாடை படைத்து வழிபாடு செய்யலாம். வழிபாடு முடித்தப்பின்  அந்த ஆடை, உணவை ஏழைகளுக்கு தானமாக கொடுப்பதன் மூலம் அளவற்ற நன்மைகள் நம் வாழ்வில் உண்டாகும்.

    தடைபட்ட திருமணம், நீண்ட நாள்பட்ட நோய் நொடிகள், மன வருத்தம் ஆகியவை விலகி சந்தோஷமும் மனநிறைவும் நம் இல்லத்திலும், உள்ளத்திலும் ஊற்றெடுக்கும். பிதுர் வழிபாட்டில் காகத்திற்கு முக்கியத்துவம் உண்டு. காகம் எமலோகத்தின் வாசலில் இருக்கும் என்றும், எமனின் தூதுவன் என்றும் சொல்வதுண்டு.

    காகத்திற்கு சாதம் வைத்தால் எமலோகத்தில் வாழும் நம் முன்னோர் அமைதி பெற்று நமக்கு ஆசியளிப்பார் என்பது நம்பிக்கை. வானவியல் கணிப்பின் படி சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் கூடுகின்ற போதுள்ள காலம் அமாவாசை ஆகும். சூரிய பகவான் ஆண்மை, ஆற்றல், வீரம் என்பவற்றை எல்லாம் எமக்குத் தரவல்லவர், சந்திரன் எமது மனதுக்கு திருப்தியானவர். இதனால் மகிழ்ச்சி தெளிவான தெளிந்த அறிவு, இன்பம், உற்சாகம் என்பவற்றை எல்லாம் தரவல்லவர்.

  • தஞ்சை பெருவுடையார் கோயில் மஹா நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்!

    தஞ்சை பெருவுடையார் கோயில் மஹா நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்!

    தஞ்சை பெரியக்கோவில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனாகிய பெருவுடையார் ஆலயத்தில் உள்ள மஹா நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

  • அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோயிலில் பெரிய நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்!

    அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோயிலில் பெரிய நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்!

    தை மாத பிரதோஷத்தை முன்னிட்டு அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் பெரிய நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக மகா தீபாராதனை நடைபெற்றது.

  • லலிதாம்பிகை அம்மன் ஆலயத்தில் இரத ஸ்ப்தமி கொடியேற்ற உற்சவம்!

    லலிதாம்பிகை அம்மன் ஆலயத்தில் இரத ஸ்ப்தமி கொடியேற்ற உற்சவம்! 

    திருவாரூர் மாவட்டம், திருமீயச்சூர் பகுதியில் அமைந்துள்ள லலிதாம்பிகை அம்மன் சமேத மேகநாத சுவாமி ஆலயத்தில் இரத ஸ்ப்தமியையொட்டி கொடியேற்றம் விமர்சையாக நடைபெற்றது.

  • அம்பகரத்தூர் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயிலில் லட்சார்ச்சனை!

    அம்பகரத்தூர் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயிலில் லட்சார்ச்சனை!

    காரைக்கால் அடுத்த அம்பகரத்தூரில் அமைந்துள்ள புகழ் பெற்ற அம்பகரத்தூர் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயிலில் தை மாத கடைசி செவ்வாய்க்கிழமையை யொட்டி லட்சார்ச்சனை நடைபெற்றது.