Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • திருத்தணி முருகன் கோவிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம்.

    அறுபடை வீடுகளில் சிறந்து விளங்கி ஐந்தாம் வீடாக போற்றப்படும் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி என அழைக்கப்படும் முருகன் கோயிலில் மாசி பிரம்மோற்சவம் விழா கடந்த 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இயக்குனர், நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திருத்தணி முருகன் கோவில் கோயிலுக்கு வருகை தந்து மூலவருக்கு நடைபெற்ற அபிஷேக நிகழ்வில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

    சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற அபிஷேகத்தில் கலந்து கொண்டார். பின் அவருக்கு அச்சகர்கள் கோவில் நிர்வாகத்தின் சார்பில் மலர் மாலை மற்றும் பிரசாதங்கள் வழங்கினர்.

  • 33 அடி ஸ்ரீ குழந்தை முனீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா…

    ஆம்பூர் அருகே வெகுவிமர்சையாக நடைபெற்ற 33 அடி  ஸ்ரீ குழந்தை  முனீஸ்வரர் ஆலய  கும்பாபிஷேக விழாவில் சாமி வந்து ஆடிய பக்தர்கள்.

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வெங்கிளி கிராமத்தில் உள்ள பாலாற்றங்கரையோ ரம் எழுந்தருளியுள்ள அருள்மிகு பெரிய முழு உருவ குழந்தை முனீசுவரர் ஆலயத்தில் இன்று 11 மணிக்கு திருக்குட முழுக்கு நன்னீராட்டு விழா நடைப்பெற்றது,

     கும்பாபிஷேக விழா முன்னிட்டு நேற்று மங்கள வாத்தியத்துடன் ஸ்ரீ கணபதி ஹோமம் பூஜை தொடங்கப்பட்டு தொடர்ந்து ஸ்ரீ லட்சுமி ஹோமம், ஸ்ரீ நவக்கிரக ஹோமம், பூர்ணாஹுபதி, வாஸ்து சாந்தி பிரவேச பலி அங்குரார்பணம், நாடி சந்தானம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது இதனைத் தொடர்ந்து இன்று கோவில் வளாகத்தில் யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு அதனை தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க  புனிதநீர்  ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு வேதங்கள், மற்றும் மந்திரங்கள் ஓத குழந்தை  மூலவர் முனீசுவரர் சிலை மீது புனித நீர் ஊற்றப்பட்டு, திருக்குட முழுக்கு நன்னீராட்டு விழா நடைப்பெற்றது, அப்போது பக்தர்கள் மீது சாமி வந்து ஆடினர்

     பின்னர் புனித நீர் பக்தர்கள் தெளிக்கக்பட்டு அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    மேலும் இந்த திருக்குட முழுக்கு நன்னீராட்டு விழாவில் சுற்றுவட்டார 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

  • பிப்ரவரி 22 – மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ராசிபலன்….

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     – செலவு
    ரிஷபம்         – இன்பம்
    மிதுனம்     –  நட்பு  
    கடகம்         –  நலம்
    சிம்மம்         –   ஜெயம்   
    கன்னி         –    களிப்பு
    துலாம்         –     பரிசு  
    விருச்சிகம்     –  செலவு  
    தனுசு         –     கவலை
    மகரம்         –    உயர்வு
    கும்பம்         –      பரீதி
    மீனம்         –      முயற்சி
    சந்திராஷ்டமம்    –       கேட்டை, மூலம்

  • பிப்ரவரி 22 – வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 10.30 – 12.00)

    பிப்ரவரி 22 = வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 10.30 – 12.00)
    சோபகிருது வருடம் – மாசி 10
    சுபமுகூர்த்த நாள்
    22-பிப்-2024 வியாழன் ஷாபான் 11
    திருகண்ணபுரம் சவுரிராஜ பெருமாள்,
    கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் தேர்
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 10.30 – 12.00)
    நல்ல நேரம் : 10.30 – 12.00
    ராகு : 1.30 – 3.00
    குளிகை : 9.00 – 10.30
    எமகண்டம் : 6.00 – 7.30
    திதி : அதிதி
    திதி நேரம் : திரையோதசி ம 3.14
    நட்சத்திரம் : பூசம் மா 6.26
    யோகம் : அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : கேட்டை,மூலம்
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்

     

  • கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் மாசி மாத பிரதோஷ விழா…

    கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் மாசி மாத பிரதோஷ விழா நந்தி பகவானுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம்.

    தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் மாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம்,தேன், நெய், இளநீர் எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, அரிசி மாவு, பன்னீர், விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    அதை தொடர்ந்து ஆலயத்தின் சிவாச்சாரியார் நந்தி பகவானுக்கு பட்டாடை உடுத்தி , வெள்ளி கவசம் சாத்தப்பட்டு பல்வேறு வண்ண மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்ட பிறகு உதிரி பூக்களால் நாமாவளிகள் கூறினார்.

     அதை தொடர்ந்து சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய் வைத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன்  மகா தீபாராதனை நடைபெற்றது.  கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற மாசி மாத பிரதோஷ விழாவை முன்னிட்டு ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.

     நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.

  • ஆறடி உயர நந்தி பகவானுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனை

    தேனியில் பிரதோஷத்தை முன்னிட்டு ஆறடி உயர நந்தி பகவானுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர்

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மலை மேல் ஈச்சமலை மகாலட்சுமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தத் திருக்கோயிலில் இன்று பிரதோஷத்தை முன்னிட்டு தனி சன்னதியில் அருள்பாளிக்கும் ஆறடி உயரம் கொண்ட நந்தி பகவானுக்கும், ஐந்து தலை நாக குடை சூழ லிங்க வடிவில் காட்சி தரும் சிவபெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது

    முன்னதாக சிவபெருமானுக்கும் நந்தி பகவானுக்கும் பால், தயிர், சந்தனம், தேன், இளநீர், மஞ்சள் உள்ளிட்டா அபிஷேக பொருட்கள் கொண்டு சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து சிவபெருமானுக்கும், நந்தி பகவானுக்கும் வண்ண மலர் மாலைகளால் மற்றும் வெள்ளி கவசம் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்தார்.பின்னர் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்த நந்தி பகவானுக்கும் சிவபெருமானுக்கும் சோடச உபச்சாரம் நடத்தி மகா தீபாராதனை மற்றும் பஞ்ச கற்பூர ஆரத்தியுடன் தீபாராதனை காட்டப்பட்டது,

    இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு பிரதோஷ தினத்தில் சிவபெருமானுக்கும் நந்தி பகவானுக்கும் நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தை கண்டு தரிசித்துச் சென்றனர்

  • பிப்ரவரி 21 – பிரதோஷ நாள் ராசிபலன்….

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     – தேர்ச்சி
    ரிஷபம்         – மறதி
    மிதுனம்     –  இன்பம்
    கடகம்         –  நன்மை
    சிம்மம்         –   உதவி  
    கன்னி         –    மேன்மை  
    துலாம்         –     ஊக்கம்
    விருச்சிகம்     –  துயரம்
    தனுசு         –     ஏமாற்றம்
    மகரம்         –    பரிவு
    கும்பம்         –      சுகம்
    மீனம்         –      கவனம்  
    சந்திராஷ்டமம்    –       அனுஷம், கேட்டை

  • பிப்ரவரி 21 – வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 9.00 – 10.30)

    பிப்ரவரி 21 – வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 9.00 – 10.30)
    சோபகிருது வருடம் – மாசி 9
    பிரதோஷம்
    சுபமுகூர்த்த நாள்
    21-பிப்-2024 புதன்
    காங்கேயம் முருகன் தேர்,
    ஸ்ரீஅன்னை பிறந்தநாள்
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 9.00 – 10.30)
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 12.00 – 1.30
    குளிகை : 10.30 – 12.00
    எமகண்டம் : 7.30 – 9.00
    திதி : திரையோதசி
    திதி நேரம் : துவாதசி ம 1.58
    நட்சத்திரம் : புனர்பூசம் மா 4.37
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : அனுஷம்,கேட்டை
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

  • ஸ்ரீ கோட்டை மாரியம்மன் திருக்கோவில் மாசிமாத பொங்கல் பூச்சாட்டு திருவிழா!

    திருப்பூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கோட்டை மாரியம்மன் திருக்கோவில் மாசிமாத பொங்கல் பூச்சாட்டு திருவிழா!ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு பூவோடு எடுத்து நேர்த்திக்கடன்!!ஆதிபராசக்தி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாவித்தார்.

    திருப்பூர் தாராபுரம் சாலையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கோட்டை மாரியம்மன் திருக்கோவிலில் வருடாவருடம் மாசிமாதம் பொங்கல் திருவிழா நடைபெறுவது வழக்கம்.இந்நிலையில் பொங்கல் திருவிழா கடந்த வாரம் 13 ம் தேதி செவ்வாய்க்கிழமை பூச்சாட்டுடன் துவங்கியது.

    அதனை தொடர்ந்து நேற்று இரவு பார்க் சாலையில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரா திருக்கோவிலில் இருந்து கம்பம் எடுத்து வரப்பட்டு அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் முன்பு நடப்பட்டது.அதனை தொடர்ந்து தீச்சட்டி எடுக்கும் பக்தர்கள் விரதம் இருந்து பழைய பேருந்து நிலையம்,ஷரீப் காலனி,ஆகிய பகுதிகளில் உள்ள காமாட்சியம்மன் கோவிலில் இருந்து வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக கையில் தீச்சட்டி எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக சென்று தாராபுரம் சாலையில் உள்ள ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர்.

    தொடர்ந்து ஸ்ரீ கோட்டை மாரியம்மனுக்கு ஆதிபராசக்தி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.இந்த பூச்சாட்டு விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெரியவர்களும்,சிறியவர்களுக்கு பூச்சட்டி எடுத்தும் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

  • திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவில் தெப்போற்சவம்….

    திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவில் தெப்ப உற்சவத்தின் நான்காம் நாள் ஆன இன்று இரவு உற்சவர், ஆண்டாள் சமேதராக கிருஷ்ணர் அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

     ஐந்து நாட்கள் நடக்கும் தெப்போற்சவத்தின் நான்காம் நாளான இன்று உற்சவர் கிருஷ்ண அலங்காரத்தில் ஆண்டாள் சமேதராக கோவிலில் இருந்து புறப்பட்டு ஊர்வலமாக திருக்குளத்தை அடைந்தார்.

    தொடர்ந்து தெப்பத்தில் எழுந்தருளிய உச்சவர்கள் தெப்போற்சவம் கண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கோவிந்தராஜரின் தெப்போற்சவத்தை ஏராளமான பக்தர்கள் கண்டு வழிபட்டனர்.