Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • கல்வியில் சிறக்க செல்ல வேண்டிய கோயில்கள்…

    கல்வியில் சிறக்க செல்ல வேண்டிய கோயில்கள்…

    ஓமாம்புலியூர்

    சிதம்பரத்திற்கு தெற்கே 3 கி.மீ. தொலைவில் உள்ள தலம் இது. எங்குமில்லாத புதுமையாக தட்சிணாமூர்த்தி, கோஷ்ட தேவதையாக மட்டுமின்றி, கோயில்  மூலவர் கர்ப்ப கிரகத்திற்கும், அம்பாள் சந்நதிக்கும் இடையில் ஐந்தரை அடி உயரத்தில் தனித்தும் அமர்ந்திருக்கிறார். அம்பாள் சிவ தத்துவத்தை உணர  தவமிருந்த தாயும், அம்பாளுக்கு சிவபிரான் உபதேசம் செய்ததாகவும் வரலாறு உண்டு. வியாக்ரபுரீஸ்வரர் வந்து வணங்கியதால், அம்பாளுக்கு பிரணவ  உபதேசம் செய்யப்பட்டதாலும் இத்தலத்திற்கு ‘ப்ரணவ வ்யாக்ரபுரம்’ என்றொரு பெயரும் உண்டு.

    லால்குடி

    திருச்சிக்கு அருகேயுள்ளது. இங்குள்ள சப்தரிஷீஸ்வரர் கோயில் புராதனமானது. இது ஒரு தேவார வைப்புத் தலம். இங்குள்ள வீணா தட்சிணாமூர்த்தி பெரும்  அனுக்கிரக மூர்த்தியாக கொண்டாடப்படுகிறார்.

    ஆரணி

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் லட்சுமி ஹயக்ரீவருக்கு தனிச் சந்நதி உள்ளது. கல்வியில் சிறக்க   மாணவர்கள் இக்கோயிலுக்கு வந்து சிறப்பு வழிபாடுகள் செய்து செல்கின்றனர்.

    திருஇந்தளூர்

    இத்தலம் மயிலாடு துறைக்கு வெகு அருகில் உள்ளது. நூற்றியெட்டு திவ்யதேசங்களில் ஒன்று. இங்குள்ள பெருமாளின் திருப்பெயர் பரிமளரங்கநாதர்   என்பதாகும். இக்கோயிலினுள்ளும் லட்சுமி ஹயக்ரீவருக்கென்று தனிச் சந்நதி உள்ளது.

    திருவையாறு

    இத்தலத்திலுள்ள ஐயாறப்பர் ஆலயத்தின் கருவறையின் பின்பகுதியைக் காணமுடியாது. சடாபாரத்தோடு திகழும் ஈசனாதலால் தட்சிணா மூர்த்தியின்  சந்நதியோடு திரும்ப வேண்டியதுதான். குருபகவான் ஐம்புலன்களை அடக்கிய ஆமையை தமது வலது காலால் அழுத்தி மாபெரும் தத்துவ த்தை சொல்லாமல்  சொல்கிறார். திருமாலே இவரிடம் உபதேசம் பெற்றதால் ஹரிகுரு சிவயோக தட்சிணாமூர்த்தி என்று பெயர். ஏதோ நேற்றுதான்  செதுக்கியது போன்ற பேரழகும்,  முகத்தில் பொலியும் அமைதியும் கண்கொள்ளா அற்புதம். தஞ்சையிலிருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ளது.  

    தஞ்சாவூர்

    தஞ்சை-திருவையாறு பாதையில் நகரத்தின் எல்லையிலேயே வெண்ணாற்றங் கரையில் மாமணிக்கோயில் அமைந்துள்ளது. அசுரர்களை அழித்த  மகாவிஷ்ணு  நீலமேகர், மணிக்குன்றப் பெருமாள், வீர நரசிம்மர் என்று மூன்று வடிவங்களில் தனித்தனி கோயில்களில் அருள்கிறார். பூதத் தாழ்வாரும், திருமங்கையாழ்  வாரும் மூவரையும் சேர்த்தே மங்களாசாஸனம் செய்துள்ளனர். ஹயக்ரீவர் இங்கு லட்சுமியுடன் வடக்கு திக்கு  நோக்கியிருப்பது சிறப்பாகும். கல்விக்கு  ஹயக்ரீவரும், செல்வத்திற்கு லட்சுமியுமாக அருள்பாலிக் கின்றனர். இவர்கள் இருவருக்கும் ஏலக்காய் மாலை  சாற்றி, நெய் விளக்கு, கற்கண்டு நிவேதனம்  படைத்து வணங்கினால் கல்வியும், செல்வமும் நிறையும்.

  • ஜூன் 08 – இன்றைய ராசிபலன்…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         – ஆர்வம்
    ரிஷபம்         – தோல்வி
    மிதுனம்     – பயம்
    கடகம்         –  பெருமை
    சிம்மம்         –   அச்சம்
    கன்னி         –    உதவி
    துலாம்         –     சினம்   
    விருச்சிகம்     –  யோகம்
    தனுசு         –     சோதனை
    மகரம்         –    ஆக்கம்
    கும்பம்         –      பரிவு
    மீனம்         –      நன்மை
    சந்திராஷ்டமம்    –        சுவாதி, விசாகம்

  • ஜூன் 8 – இன்றைய நல்லநேரம்

    ஜூன் 8 – இன்றைய நல்லநேரம்
    குரோதி வருடம் – வைகாசி – 26
    ஜூன் 8, 2024
    சனி
    நல்ல நேரம் : 7.30 – 8.30
    எமகண்டம் : 1.30 – 3.00
    குளிகை : 6.00 – 7.30
    ராகு : 9.00 – 10.30
    திதி : துவிதியை
    திதி நேரம் :  துவிதியை மா 5.26
    நட்சத்திரம் :  திருவாதிரை இ 9.21
    யோகம் : சித்த
    சந்திராஷ்டமம் : சுவாதி
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

  • சகல ஐஸ்வர்யங்கள் கிட்டும் நந்தி பகவான் அபிஷேகம்….

    தஞ்சை பெருவுடையார் கோயில் வைகாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு மஹாநந்தியம் பெருமானுக்கு பல்வேறு வகையான அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது.  ஏராளமானவர்கள் நந்தியம் பெருமானை வழிபட்டனர்.

    உலகப் பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோவிலில் மூலவர் சன்னதிக்கும், கொடிமரத்துக்கும், முன்பு நந்தி மண்டபம் அமைந்துள்ளது. இன்று  வைகாசி மாத செவ்வாய்க்கிழமை பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் எழுந்தருளி இருக்கும் மஹா நந்தியம் பெருமானுக்கு பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட விபூதி, மஞ்சள், அரிசிமாவு, பஞ்சாமிர்தம், எலுமிச்சம்பழம், பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    அருகம்புல், வில்வ இலை, பூக்களால் நந்தியம் பெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாரதனை காட்டப்பட்டது, பிரதோஷம் அன்று நந்தியும் பெருமானை வழிப்பட்டால் சகல ஐஸ்வர்யங்கள் கிட்டும், தோஷங்கள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருப்பதால் ஏராளமானவர்கள் நந்தியம் பெருமானை வழிப்படடனர்.

  • மேல்மலையனூர் |எழிலரசி அலங்காரத்தில் காட்சியளித்த ஸ்ரீ அங்காளம்மன் | வைகாசி அமாவாசை ஊஞ்சல் உற்சவம்

    மேல்மலையனூர் |எழிலரசி அலங்காரத்தில் காட்சியளித்த ஸ்ரீ அங்காளம்மன் | வைகாசி அமாவாசை ஊஞ்சல் உற்சவம்

  • ஜூன் 07 – இன்றைய ராசிபலன்…

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         – உறுதி
    ரிஷபம்         – அலைச்சல்
    மிதுனம்     – சோர்வு
    கடகம்         –  துன்பம்
    சிம்மம்         –   களிப்பு
    கன்னி         –    தனம்
    துலாம்         –     பரிவு  
    விருச்சிகம்     –  உதவி   
    தனுசு         –     சினம்
    மகரம்         –    பகை
    கும்பம்         –      ஆர்வம்  
    மீனம்         –      தோல்வி
    சந்திராஷ்டமம்    –        சித்திரை, சுவாதி

  • ஜூன் 7 – சந்திர தரிசனம்

    ஜூன் 7 – சந்திர தரிசனம்
    குரோதி வருடம் – வைகாசி – 25
    ஜூன் 7, 2024
    வெள்ளி
    சந்திர தரிசனம்
    நல்ல நேரம் : 9.30 – 10.30
    எமகண்டம் : 3.00 – 4.30
    குளிகை : 7.30 -9.00
    ராகு : 10.30 – 12.00
    திதி : பிரதமை
    திதி நேரம் :  பிரதமை மா 5.30
    நட்சத்திரம் :  மிருகசீரிடம் இ 8.35
    யோகம் : சித்த
    சந்திராஷ்டமம் : சித்திரை
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

  • ஜூன் 06 – இன்று இந்த ராசிக்கு இன்பமான நாள்…!!!

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         – திடம்
    ரிஷபம்         – நிறைவு
    மிதுனம்     – ஆர்வம்   
    கடகம்         –  ஆக்கம்  
    சிம்மம்         –   சோர்வு
    கன்னி         –    பயம்   
    துலாம்         –     தடை
    விருச்சிகம்     –  இன்பம்  
    தனுசு         –     வாழ்வு
    மகரம்         –    சினம்
    கும்பம்         –      பரிவு
    மீனம்         –      பக்தி
    சந்திராஷ்டமம்    –        அஸ்தம், சித்திரை

  • வீடு, நிலம் வாங்க காயத்ரி மந்திரம்…

    பகமாளினி
    (சுக பிரசவத்திற்காக)
     
    ஓம் பகமாளிணி வித்மஹே
    சர்வ வசங்கர்யை தீமஹி
    தன்னோ நித்ய ப்ரசோதயாத்
     
    பகளாதேவி
     
    ஓம் ஜம்பகளாமுகீ வித்மஹே
    ஓம் க்ளீம் காந்தேஸ்வரீ தீமஹி
    தன்னோ ஸெளஹ் தந்தஹ் ப்ரஹ்லீம் ப்ரசோதயாத்
     
    ஓம் குலகுமாரை வித்மஹே
    பீதாம்பராயை தீமஹி
    தன்னோ பகளா ப்ரசோதயாத்
     
    பகளாமுகி
     
    ஓம் பகளாமுக்யை ச வித்மஹே
    சதம்பின்யை ச தீமஹி
    தன்னோ தேவ ப்ரசோதயாத்
     
    ஓம் ப்ரஹ்மாஸ்த்ராய வித்மஹே
    மஹாஸ்தம்பிணி தீமஹி
    தன்னோ பகளா ப்ரசோதயாத்
     
    ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
    பகளாமுகி தீமஹி
    தன்னோ அஸ்த்ரஹ் ப்ரசோதயாத்
     
    பாரதிதேவி
     
    ஓம் நாகாராயை ச வித்மஹே
    மஹா வித்யாயை தீமஹி
    தன்னோ பாரதீ ப்ரசோதயாத்
     
    புவனேஸ்வரி தேவி
     
    ஓம் நாராயந்யை வித்மஹே
    புவநேஸ்வர்யை தீமஹி
    தன்னோ தேவி ப்ரசோதயாத்
     
    பூமா தேவி
    (வீடு, நிலம் வாங்க)
     
    ஓம் தநுர்தராயை ச வித்மஹே
    சர்வஸித்தைச தீமஹி
    தன்னோ தராஹ் ப்ரசோதயாத்
     
    பைரவி தேவி
     
    ஓம் த்ரிபுராதேவி வித்மஹே
    காமேஸ்வரி ச தீமஹி
    தன்னோ பைரவீ ப்ரசோதயாத்
     
    ஓம் த்ரிபுராயை வித்மஹே
    பைரவைச தீமஹி
    தன்னோ தேவி ப்ரசோதயாத்

     

  • ஜூன் 6 – அமாவாசை

    ஜூன் 6 – அமாவாசை
    குரோதி வருடம் – வைகாசி – 24
    ஜூன் 6, 2024
    வியாழன்
    அமாவாசை
    நல்ல நேரம் : 10.30 – 11.30
    எமகண்டம் : 6.00 – 7.30
    குளிகை : 9.00 – 10.30
    ராகு : 1.30 – 3.00
    திதி : அமாவாசை
    திதி நேரம் :  அமாவாசை மா 6.40
    நட்சத்திரம் :  ரோகிணி இ 9.00
    யோகம் : மரண
    சந்திராஷ்டமம் : அஸ்தம்
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்