Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • bullet vinayakar

    விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விவசாயம் செய்யும் விநாயகர் புல்லட்டில் அமர்ந்த விநாயகர் என அற்புதமான சிலைகள் அமைத்து விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை மதுரை ஆதீனம் கொடியசைத்து துவக்கி வைத்தார் …

    விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரமாண்டமான விநாயகர் சிலைகள் கடந்த இரண்டு மாதங்களாக தயார் செய்யப்பட்டு விநாயகர் சதுர்த்தி ஆன வீதி உலா வந்தது.

     விநாயகர் விவசாயத்திற்கு உரம் போடுவது உரம் போடுவது போலவும், புல்லட்டில் விநாயகர் வலம் வருவது போன்ற விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு இராஜபாளையம் வடக்கு காவல் நிலையம் அருகே தர்மாபுரம் மாப்பிள்ளை விநாயகர் கோவிலில் இருந்து ஊர்வலம் புறப்பட்டது

    ஊர்வலத்தை மதுரை ஆதீனம் கொடியசைத்து துவக்கி வைத்தார்  மழையிலும் இருபறமும் பொதுமக்கள் கூடி நின்று விநாயகரை வழிபட்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வனத்தில் பங்கேற்றனர் .

    விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் உத்தவரின் பெயரில் இராஜபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ப்ரீத்தி தலைமையில் 3 டிஎஸ்பிகள் 10 ஆய்வாளர்கள் என 100க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

  • September 20 2023 Sasti

    செப்டம்பர் 20  – சஷ்டி
    சோபகிருது வருடம் – புரட்டாசி 3
    20-செப்-2023 புதன் ரபியுல்
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 12.00 – 1.30
    குளிகை : 10.30 – 12.00
    எமகண்டம் : 7.30 – 9.00
    திதி : சஷ்டி
    திதி நேரம் : பஞ்சமி கா 11.36
    நட்சத்திரம் : விசாகம் ம 1.5
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : அசுவினி,பரணி
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

  • September 19 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம் –  எதிர்ப்பு
    ரிஷபம் –    தடங்கல்  
    மிதுனம் –   வெற்றி
    கடகம் –    மகிழ்ச்சி
    சிம்மம் –    பரிசு
    கன்னி –    சுகம்  
    துலாம் –     தாமதம்
    விருச்சிகம் – வரவு  
    தனுசு –     சிக்கல்
    மகரம் –    வாழ்வு   
    கும்பம் –     விவேகம்
    மீனம் –      நன்மை
    சந்திராஷ்டமம்    – ரேவதி, அஸ்வினி

  • September 19 2023 Calendar

    செப்டம்பர் 19 – இன்றைய நல்லநேரம்
    சோபகிருது வருடம் – புரட்டாசி 2
    19-செப்-2023 செவ்வாய்
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 3.00 – 4.30
    குளிகை : 12.00 – 1.30
    எமகண்டம் : 9.00 – 10.30
    திதி : பஞ்சமி
    திதி நேரம் : சதுர்த்தி ம 11.50
    நட்சத்திரம் : சுவாதி ம 12.51
    யோகம் : சித்த-மரணயோகம்
    சந்திராஷ்டமம் : ரேவதி,அசுவினி
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

  • trichy 150 kg kozhukattai

    விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டையில் 150 கிலோ கொழுக்கட்டை படையல் செய்யப்பட்டது..

    திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா 18/09/2023 முதல் 01/10/2023 முடிய சிறப்பாக நடைபெற உள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மாணிக்க விநாயகருக்கும், உச்சி விநாயகருக்கும் காலை 9.00 மணிக்கு மேல்  10.00 மணிக்குள் பிரம்மாண்டமான கொழுக்கட்டை  மாணிக்க விநாயகர் சன்னதியில் 75 கிலோ,  உச்சி விநாயகர் சன்னதியில் 75 கிலோ  150 கிலோ எடையில் நிவேத்தியம் செய்யப்படுகிறது. இந்த கொழுக்கட்டை பச்சரிசி மாவு, உருண்டை வெல்லம், ஏலக்காய், ஜாதிக்காய், எள்ளு, நெய், தேங்காய் ஆகிய பொருட்களைக் கொண்டு திருக்கோயில் மடப்பள்ளியில் தயாரிக்கப்பட்டது..

    மேலும் 2004 ஆம் ஆண்டு  முதல் பெரிய கொழுக்கட்டை தயார் செய்து படையல் செய்யும் வழக்கம் இருந்து வருகிறது. பெரிய கொழுக்கட்டையானது நிவேத்தியம் செய்யப்பட்டு சேவார்த்திகளுக்கு விநியோகம் செய்யப்படும். இன்று தொடங்கி  14 தினங்கள் நடைபெறும் திருவிழாவில் உச்சிப்பிள்ளையார் ,மாணிக்க விநாயகர் சன்னதி மூலவருக்கு தினந்தோறும் சந்தன‌காப்பு அலங்காரம் நடைபெறும். மாலை பக்தி இன்னிசை நிகழ்ச்சி நாட்டிய நிகழ்ச்சி ஆன்மீக சொற்பொழிவு போன்ற கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

    மாணிக்க விநாயகர் உற்சவர் திருவிழா நாட்களில் மாலை 4 மணிக்கு பாலகணபதி, நாகாபரண கணபதி, லெஷ்மி கணபதி, தர்பார் கணபதி, பஞ்சமுக கணபதி, மூஷிக கணபதி, ராஜகணபதி, மயூர கணபதி, குமார கணபதி, வல்லப கணபதி, ரிஷபாரூடர்கணபதி, சித்திபுத்தி கணபதி மற்றும் நர்த்தன கணபதி ஆகிய பல்வேறு விஷேச அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சி தருவார்.  மெகா சைஸ் கொழுக்கட்டை தோளில் சுமந்து படையிலிட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கபடும்.

    ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே சாமி தரிசனம் செய்வார்கள்.விழாவிற்கான ஏற்பாடுகளை மலைக்கோட்டை கோயில் உதவிஆணையர் ஹரிஹர சுப்பிரமணியன் உள்ளிட்ட கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.  மலைக்கோட்டை கோயிலில் விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாப்படுகிறது.

     

  • Vinayakar rupees alangaram

    காஞ்சிபுரத்தில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி ஏலேல சிங்க விநாயகர் கோவிலில் ரூ.15 லட்சம் மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் ஏராளமான பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

    காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் சன்னதி தெருவில் புகழ்பெற்ற ஏலேல சிங்க விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி ரூபாய் நோட்டுகளால் சன்னதி கருவறை முழுவதும் அலங்காரம் செய்யப்படும். பின்னர் பொது மக்கள் வழிபட்டு செல்வர். தொடர்ந்து இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக ஏலேல சிங்க விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    அதை தொடர்ந்து வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு தீபாரதனை நடைபெற்றது. பின்னர் ரூபாய் நோட்டுகளால் சன்னதி கருவறை முழுவதும் அலங்கரிக்கப்பட்டது.

     ரூ.15 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரூ.50, ரூ.100, ரூ. 200, ரூ.500 என புதிய ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டு வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இதனை வழியாக வரும் பொதுமக்கள் பக்தர்கள் என ஏராளமான வழிபட்டுச் சென்று வருகின்றனர்.

  • Karur temple kodiyetram

    தமிழகத்தின் தென் திருப்பதியான கரூர் தான்தோன்றிமலை கல்யாண வெங்கட்ரமணசுவாமி கோவில் புரட்டாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தமிழகத்தின் தென் திருப்பதி என்றழைக்கப்படும் கரூர் தான்தோன்றிமலை கல்யாண வெங்கட்ரமணசுவாமி கோவில் புரட்டாசி பெருந்திருவிழா ஆண்டு தோறும் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான கல்யாண வெங்கட்ரமணசுவாமி கோவில் புரட்டாசி பெருந்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொடி கம்பத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து கோவில் பட்டாச்சாரியார் கொடியை ஏற்றி வைத்து தீபாராதனை காண்பித்தார். பின்னர் சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்பட பல்வேறு வாசனை பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    வருகின்ற 24-ம் தேதி திருக்கல்யாண உற்சவம் தொடர்ந்து 26 ஆம் தேதி திருத்தேர் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • Kanchi Elephant Vinayakar chadurthi

    குளித்து அலங்கரித்து பட்டாடை உடுத்தி மாலை அணிந்து குதூகலமாய் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய கோதை யானை.

    காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் ஸ்ரீ ராமானுஜர் ஆலயத்தில் கோதை என்ற 25 வயது உடைய பெண் யானை ஒன்று உள்ளது. இந்த யானைக்கென ரசிகர் பட்டாளமே உள்ளன. ஏனென்றால் இந்த கோதையானை எல்லோரிடமும் அன்பாய் பழகும். குழந்தையைப் போல சொல்வது அனைத்தும் செய்யும்.

     இந்நிலையில் இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோதை யானைக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனால் நீண்ட நேரம் தண்ணீர் தொட்டியில் ஜாலியாக கோதை யானையை குளிக்க வைத்து, அலங்காரம் செய்தனர்.

    அதனைத் தொடர்ந்து புத்தாடை அணிவித்தனர் அப்பொழுது குழந்தைகளுக்கு தங்கள் பெற்றோர் புத்தாடை உடுத்தும் போது குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சியோடு இருப்பது போல தன் கால்களை மடக்கி கீழே அமர்ந்து புத்தாடைகளை பெற்றுக் கொண்டது.

     பின்னர் மலர் மாலைகளால் அலங்கரித்து கற்பூரம் ஏற்றினர். பின்பு அங்கு கூடியிருந்த பொதுமக்கள் கோதை யானைக்கு பழங்கள் வழங்கி சாஷ்டாங்கமாய் முகம் குப்புற விழுந்து கோதையை வணங்கி கோதையின் தும்பிக்கையால் ஆசிர்வாதம் பெற்று போட்டோ எடுத்து மகிழ்ந்தனர்.

  • Thirupathy bramorchavam

    திருப்பதி ஏழுமலையானின் வருடாந்திர பிரம்மோற்சவம் இன்று மாலை கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது.

    திருப்பதி ஏழுமலையானின் வருடாந்திர பிரம்மோற்சவம் இன்று முதல் வரும் 26ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு இன்று மாலை கருடன் ஓவியத்துடன் ஏற்பாடு செய்த பல்லாக்கில் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசுவாமி  தங்க திருச்சி வாகனத்தில் திருமாடவீதிகளில் ஊர்வலமாக வந்து கோவிலுக்குள் சென்றார்.

    பின்னர் கோவிலுக்குள் இருக்கும் கொடிமரத்தின் வேத பண்டிதர்கள் மற்றும் கோவில் அர்ச்சகர்கள் ஆகம சகிஸ்திரத்தின்படி பூமாலைக்கு கருடஓவியம் கொண்ட துணியை சுற்றி சிறப்பாக கொடியேற்றத்தை நடத்தினர். இந்த கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்கியது.

  • September 18 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம் –  புகழ்
    ரிஷபம் –    வெற்றி
    மிதுனம் –   அசதி
    கடகம் –    நன்மை
    சிம்மம் –   அமைதி
    கன்னி –    செலவு
    துலாம் –     தாமதம்
    விருச்சிகம் – ஆதரவு
    தனுசு –     உயர்வு
    மகரம் –    முயற்சி  
    கும்பம் –     ஆக்கம்  
    மீனம் –      ஆதாயம்
    சந்திராஷ்டமம்    – உத்திரட்டாதி, ரேவதி