Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • Gaja vaganathil thirupathy ezhumalayan

    திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் ஆறாம் நாளான இன்று இரவு மலையப்பர் கஜ (யானை) வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    திருப்பதி ஏழுமலையான் கோயில் சாலகட்ல பிரம்மோற்சவம் கடந்த -18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பிரம்மோற்சவத்தில் ஆறாம் நாளான இன்று இரவு தங்க கஜ வாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    இந்த வீதிஉலாவில் யானை, குதிரை, காளைகள் அணிவகுத்து வர அன்னமைய்யா சங்கீதங்கள்,பஜனை பாடல்கள் கோலாட்டம் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் மகா விஷ்ணுவின் பல்வேறு அவதாரங்களை குறிக்கும் விதமாக வேடமணிந்தும், கோலாட்டம், தப்பாட்டம் ஆடியபடி வீதிஉலாவில் பங்கேற்றனர்.இதனை கான ஆயிரக்கணக்கான பக்தர்கள் நான்கு மாட வீதியில் அமர்ந்து கோவிந்தா கோஷம் எழுப்பி தரிசித்தனர்,

  • Thirupathy Golden Car Festival

    திருப்பதி பிரம்மோற்சவத்தின் 6-ம் நாளான இன்று மாலை, ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் மலையப்பர் தங்கத் தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாலகட்ல பிரம்மோற்சவம் கடந்த 18 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் 6-ம் நாளான இன்று மாலை, ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் மலையப்பர் தங்கத் தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாட வீதிகளில் தங்கத் தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

    இதில் பெண்கள் தேரின் வடம் பிடித்து இழுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். மாடவீதியில் காத்திருந்த திரளான பக்தர்கள் திரண்டிருந்து தேரோட்டத்தைக் கண்டு களித்தனர். மாட வீதிகள் எங்கும் 'கோவிந்தா… கோவிந்தா' எனும் பக்தி பரவச கோஷம் விண்ணைப் பிளந்தது. இதனை கான ஆயிரக்கணக்கான பக்தர்கள் நான்கு மாட வீதியில் அமர்ந்து கோவிந்தா கோஷம் எழுப்பி தரிசித்தனர்.

  • September 23 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம் –  வெற்றி
    ரிஷபம் –    ஆதரவு
    மிதுனம் –   அசதி
    கடகம் –    நன்மை
    சிம்மம் –    வருத்தம்
    கன்னி –    அமைதி
    துலாம் –     செலவு   
    விருச்சிகம் – பயம்  
    தனுசு –     கவலை
    மகரம் –    உயர்வு
    கும்பம் –     வரவு
    மீனம் –      தாமதம்
    சந்திராஷ்டமம்    – ரோகிணி, மிருகஷீருஷம்

  • September 23 2023 saturday

    செப்டம்பர் 23 – புரட்டாசி சனி
    சோபகிருது வருடம் – புரட்டாசி 6
    23-செப்-2023 சனி
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 9.00 – 10.30
    குளிகை : 6.00 – 7.30
    எமகண்டம் : 1.30 – 3.00
    திதி : நவமி
    திதி நேரம் : அஷ்டமி கா 8.10
    நட்சத்திரம் : மூலம் கா 11.48
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : ரோகிணி,மிருகசீரிசீ டம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

     

  • Thirupathy mohini avatharam

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி  பிரம்மோற்சவத்தின் 5 வது நாள் மோகினி அவத்தாரத்தில் மலையப்ப சுவாமி.

    திருப்பதி எழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் கடந்த 18 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளான இன்று காலை பார்கடலில் மந்திரகிரி என்ற மலையை வாசுகி என்னும் பாம்பை கொண்டு  தேவர்களும் அசுரர்களும் இணைந்து கடைந்து எடுத்து அமிர்தத்தை அசுரர்களிடம் இருந்து தேவர்களுக்கு மட்டும் கிடைக்க செய்யும் விதமாக மகா விஷ்ணு பெண் வேடத்தில் நாச்சியார் திருக்கோலத்தில் ( மோகினி அலங்காரத்தில் ) தோன்றி அமிர்தத்தை தேவர்களுக்கு கிடைக்க செய்தார்.

    இந்த அவதாரத்தில்   இன்று  காலை நாட்ச்சியார் திருக்கோலத்தில் ( மோகினி அலங்காரத்தில் ) மாய மோகத்தை போக்கும் விதமாக கோயிலில் உள்ள கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி  பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேலும் நாச்சியர் திருகோலத்தில் உள்ள தனது உருவத்தை ( மகாவிஷ்ணு ) கிருஷ்ணராக தோன்றி அவரது அழகை அவரே ரசித்து வருவதாக மற்றொரு பல்லக்கில் நாட்சியாருடன் ஸ்ரீ கிருஷ்ணரும்  அருள் பாலித்தார்.

  • September 22 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம் –  சிரமம்
    ரிஷபம் –    அசதி
    மிதுனம் –   லாபம்
    கடகம் –    செலவு
    சிம்மம் –    சுகம்
    கன்னி –    கவலை   
    துலாம் –     வெற்றி  
    விருச்சிகம் – நன்மை
    தனுசு –     பயம்  
    மகரம் –    நிம்மதி
    கும்பம் –     மேன்மை
    மீனம் –      புகழ்
    சந்திராஷ்டமம்    – கார்த்திகை, ரோகிணி

  • September 22 2023 Rasipalan

    செப்டம்பர் 22 – அஷ்டமி
    சோபகிருது வருடம் – புரட்டாசி 5
    22-செப்-2023 வெள்ளி
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 10.30 – 12.00
    குளிகை : 7.30 -9.00
    எமகண்டம் : 3.00 – 4.30
    திதி : அஷ்டமி
    திதி நேரம் : சப்தமி கா 9.42
    நட்சத்திரம் : கேட்டை ம 12.40
    யோகம் : மரண-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம் : கார்த்திகை,ரோகிணி
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

  • Annamalayar koil festival

    அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா பூர்வாங்க பணிகள் மேற்கொள்ள பந்தக்கால் முகூர்த்த விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.உலக பிரசித்தி பெற்ற திருத்தலமாகவும் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா உலக பிரசித்தி பெற்றது.

    ஊர்காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் வரும் நவம்பர் 14ம் தேதி தொடங்கி 17 நாட்கள் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறும். இவ்விழாவுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிநாடு, வெளி மாநிலத்திலிருந்து பல லட்சம் பக்தர்கள் வருகை புரிவார்கள்.

    கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் கோவிலின் பின்புறம் உள்ள மலை உச்சியில் வரும் நவம்பர் 26ம்தேதி மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்படும்.

    அண்ணாமலையார் கோவில் அதிகாலை நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர், சம்பந்த விநாயகர் சன்னதி முன்பு பந்தக்காலுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்து பஞ்ச முக தீப ஆராதனை செய்யப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து வந்த கால் கோவில் உட்பிரகாரத்தில் சுற்றி வந்து ராஜகோபுரம் எதிரே பந்தக்கால் முகூர்த்தம் நடப்பட்டது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

  • kalpa virutcha vaganam

    திருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்சவ விழாவின் நான்காம் நாளான இன்று காலையில் மலையப்ப சுவாமி கல்ப விருட்ச வாகனத்தில் திருவீதி உலா வந்தார்.

    திருப்பதி ஏழுமலையான் கோயில் சாலகட்ல பிரம்மோற்சவம் கடந்த 18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தினமும் திருமலையில் காலையும் இரவும் வாகன சேவை நடந்து வருகிறது. கடந்த மூன்று நாட்களில் பெரிய சேஷம், சின்ன சேஷம், அன்னம், சிம்ம வாகனங்களில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    மூன்றாவது நாளான நேற்று இரவு முத்துப் பந்தலில் மலையப்ப சுவாமி தாயார்களுடன் கோவிந்தா கோஷத்துக்கு மத்தியில் நான்கு மாடவீதிகளை வலம் வந்தார். மலையப்ப சுவாமி வீதி உலாவில் யானை, குதிரை, காளைகள் அணிவகுத்து வந்தன. இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் மகா விஷ்ணுவின் பல்வேறு அவதாரங்களை குறிக்கும் விதமாக வேடமணிந்தும், கோலாட்டம், தப்பாட்டம் ஆடியும் வந்தார்கள். லம்பாடிகள் நடனம் ஆடியபடி வீதி உலாவில் பங்கேற்றனர்.

    இதனைத் தொடர்ந்து நான்காம் நாளான இன்று காலை கல்ப விருட்ச வாகனத்தில் மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். சொர்கத்தில் தேவர்கள் கேட்கும் வரங்களை தருவது கல்ப விருட்ச மரம். அது போன்று கலியுகத்தில் தனது பக்தர்களுக்கு கேட்கும் வரங்களை தரக்கூடிய வகையில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி தயார்களுடன் பிரம்மோற்சவத்தின் நான்காவது நாளில் ராஜமன்னார் அலங்காரத்தில் கல்ப விருட்ச வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வெகு விமர்சியாக நடந்த இந்த வாகன சேவையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

  • aandal soodi kodutha maalai

    திருப்பதி ஏழுமலையான் கோயில் மோகினி அலங்காரத்திற்காக ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்து வந்த  ஆண்டாள் சூடி கொடுத்த மாலைக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
     
    திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் கடந்த 18 தேதி  கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தொறும் காலை இரவு நேரங்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதிஉலா  வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளான நாளை காலை மோகினி அலங்காரமும், முக்கிய வாகன சேவையான கருட சேவை இரவு நடைபெறவுள்ளது. இதையொட்டி விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து ஆண்டாள் சூடி கலைத்த கிளியுடன் கூடிய மாலை இன்று திருப்பதிக்கு கொண்டு வரப்பட்டது.

    ஆண்டாள் மாலைக்கு ஏழுமலையான் கோயில் பெரிய ஜீயர் மடத்தில் வைத்து தமிழக இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் செல்லத்துறை  முன்னிலையில் ஜீயர்கள் தலைமையில்  சிறப்பு பூஜை செய்யப்பட்டு திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா ரெட்டியிடம் வழங்கினர். பின்னர் ஊரவலமாக   யானைகள் அணிவகுத்து முன் செல்ல நாதஸ்வர வாத்தியங்களுக்கு மத்தியில் ஆண்டாள் மாலை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஏழுமலையான் கோயில் அதிகாரிகளிடம்  வழங்கப்பட்டது.

    இதில் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் செயல் அதிகாரி முத்துராஜா, ஸ்தலத்தார்  ரங்கராஜன், டிரஸ்ட்டி  மனோகரன்  உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த மாலை நாளை காலை ஏழுமலையானுக்கும், மோகினி அலங்காரத்தில் எழுந்தருளும் மலையப்ப சுவாமி கிளியுடன் கூடிய மாலை அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார்.