இன்றைய ராசிபலன்
மேஷம் – எதிர்ப்பு
ரிஷபம் – போட்டி
மிதுனம் – நன்மை
கடகம் – சிக்கல்
சிம்மம் – புகழ்
கன்னி – உயர்வு
துலாம் – இன்பம்
விருச்சிகம் – அமைதி
தனுசு – எதிர்ப்பு
மகரம் – ஊக்கம்
கும்பம் – சாதனை
மீனம் – அலைச்சல்
சந்திராஷ்டமம் – பரணி, கார்த்திகை
Category: அவசியம் படிக்க
அவசியம் படிக்க
-
September 21 2023 Rasipalan
-
September 21 2023 Sasti Viradham
செப்டம்பர் 21 – சஷ்டி விரதம்
சோபகிருது வருடம் – புரட்டாசி 4
21-செப்-2023 வியாழன்
நல்ல நேரம் : 10.30 – 12.00
ராகு : 1.30 – 3.00
குளிகை : 9.00 – 10.30
எமகண்டம் : 6.00 – 7.30
திதி : சப்தமி
திதி நேரம் : சஷ்டி கா 10.52
நட்சத்திரம்: அனுஷம் ம 1.10
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : பரணி,கார்த்திகை
சூலம் : தெற்கு
பரிகாரம் : தைலம் -
malayappa samy thiruveedhi ula
மேட்டுப்பாளையம் அருகே ஜடையம்பாளையத்தில் தென் திருப்பதி ஸ்ரீவாரி ஆலயத்தில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவை ஒட்டி மலையப்பசாமி திருவீதி உலா நடைபெற்றது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஜடையம்பாளையத்தில் அமைந்துள்ள தென்திருப்பதி ஸ்ரீவாரி ஆலயத்தில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று மலையப்பசாமி கோவில் முன் மண்டபத்தில் எழுந்தருளும் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. முன்னதாக காலை மலையப்ப சாமி சின்னசேஷ வாகனம் ஸ்தாபன திருமஞ்சனம் அன்னபட்சி வாகனம் ஆகியவற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்த நிலையில் மாலை வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் மலையப்ப சாமி அலங்கார கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
ஊஞ்சல் உற்சவத்தின் போது வேத விற்பனர்கள் மந்திரங்கள் ஓதி மலையப்ப சாமியான ஸ்ரீ வெங்கடேச பெருமாளை வழிபட்டனர். தொடர்ந்து அண்ண பட்ஷி வாகனத்தில் எழுந்தருளி மலையப்பசாமி திருவீதி உலாவும் நடைபெற்றது. கோவில் முன்பு இருந்து துவங்கிய திருவீதி உலா நான்கு மாட வீதிகளின் வழியாக வலம் வந்து மீண்டும் கோவிலில் முடிவுற்றது.
-
Shimma vaganathil thirupathy perumal
திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் வருடாந்திர பிரம்மோற்சவம் சிறப்பு கொடியேற்றத்துடன் சிறப்பாக துவங்கி நடைபெற்று வருகிறது.
பிரம்மசாத்தை ஒட்டி பல்வேறு வாகன சேவைகள் திருமலை மாட வீதிகளில் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் மூன்றாம் நாளான இன்று காலை மலையப்ப சுவாமி யோக நரசிம்ம அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் வாகன மண்டபத்தில் எழுந்தருளச் செய்தனர். தொடர்ந்து சுவாமிக்கு கற்பூர ஆரத்தி அளித்து வாகன சேவையைத் துவக்கி வைத்தனர்.
தொடர்ந்து தேவஸ்தான ஜீயர் சுவாமிகள் தலைமையில் கோஷ்டி பிரபந்த பாசுரங்கள் சொல்லியபடி முன் செல்ல உயர் அதிகாரிகள் ஆங்காங்கே ஆரத்தி அளித்து சுவாமி அருள் பெற்றனர் தொடர்ந்து மாடவீதி முழுவதும் பல்வேறு கலைஞர்கள் தங்களது கலையை சுவாமிக்கு சமர்ப்பித்துச் சென்றனர்.
மேலும் ஒரு குழுவினர் நரசிம்மர் வேடமணிந்து மாட வீதிகளில் வலம் வந்தது கண்ணுக்கு விருந்தாக அமைந்தது மாட வீதி முழுவதும் கோவிந்த நாமம் சொல்லியபடி பக்தர்கள் ஆரத்தி அளித்து மலையப்ப சுவாமியை வணங்கினர்.
-
September 20 2023 Rasipalan
இன்றைய ராசிபலன்
மேஷம் – ஆதாயம்
ரிஷபம் – கவலை
மிதுனம் – சிக்கல்
கடகம் – சுகம்
சிம்மம் – நன்மை
கன்னி – லாபம்
துலாம் – முயற்சி
விருச்சிகம் – பக்தி
தனுசு – அன்பு
மகரம் – அச்சம்
கும்பம் – தனம்
மீனம் – போட்டி
சந்திராஷ்டமம் – அஸ்வினி, பரணி -
anna vaganam thirupathy ezhumalayan
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தில் சரஸ்வதி அலங்காரத்தில் அன்ன வாகனத்தில் வீதிஉலா வந்த மலையப்ப சுவாமி.
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் இரண்டாவது நாளான இரவு சரஸ்வதி அலங்காரத்தில் அன்ன வாகனத்தில் மலையப்ப சுவாமி பக்தர்களின் கோவிந்தா கோஷத்திற்கு மத்தியில் நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அன்ன பறவை பால், தண்ணீரை வேறு செய்வது போல் பக்தர்களின் தீய எண்ணங்களை அகற்றி நல்ல எண்ணங்களை சுவாமி தனது பக்தர்களுக்கு அருள் புரிவதாக நம்பிக்கை. சுவாமி வீதிஉலாவில் பக்தர்களின் கோலாட்டம், பஜனைகள் மற்றும் பல்வேறு வேடம் அணிந்து வந்த பக்தர்கள் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
பிரம்மோற்சவத்தின் மூன்றாவது நாளான நாளை காலை சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கவுள்ளார். விலங்குகளுக்கு அரசனாக விளங்கும் சிங்கமும் நானே என்று உணர்த்தும் விதமாக மனிதர்களிடம் உள்ள விலங்களுக்குன்டான தீய எண்ணங்களை போக்கி கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக சுவாமி சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார்.
-
thirupathy chinna sesha vaganam
திருமலை ஏழுமலையான் பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று காலை சின்ன சேஷ வாகனத்தில் மயிலிறகை சூட்டிக்கொண்டு வேணு கோபாலன் அலங்காரத்தில் மாட வீதிகளில் மலையப்ப சுவாமி வலம் வந்தார். மாட வீதிகளில் திரண்டு இருந்த பக்தர்கள் கற்பூர ஆரத்தி அளித்து சுவாமி தரிசனம் செய்தனர். திருமலை மாட வீதிகளில் பல்வேறு விதமான நடன கலைஞர்கள் ஆந்திரா தமிழ்நாடு கேரளா கர்நாடகா மட்டுமின்றி இதர மாநிலங்களிலிருந்து வந்து பிரம்மோற்சவத்தில் கலந்துகொண்டு தங்களது கலையை ஏழுமலையானுக்கு சமர்ப்பித்தனர்.
-
thirupathy periya sesha vaganam
திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் சாலக்கட்ல பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் விமர்சையாக துவங்கியது ஒன்பது நாட்கள் பிரம்மோற்சவத்தின் முதல் நாளான இன்று இரவு மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவியுடன் மாட வீதிகளில் வலம் வந்தார். கோலாட்டங்கள் பஜனை குழுவினர் வாத்திய கச்சேரிகள் என்று மாடவீதிகளில் வாகன சேவை வைபவமாக நடைபெற்றது.
-
Thirupathy bramorchavam starts
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாலக்கட்ல பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் வைபவமாக துவங்கியது.
இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை தெலுங்கு பஞ்சாங்கப்படி அதிக மாசம் வருவதால் இரண்டு பிரம்மோசங்கள் நிகழ்த்துவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு புரட்டாசி மாதத்தின் துவக்கத்தில் சாலக்கட்ல பிரம்மோற்சவம் விமர்சையாக துவங்கியது. ஸ்ரீதேவி பூதேவி சமேதராக மலையப்ப சுவாமியை கொடி மரத்தின் அருகே எழுந்தருள ச் செய்து கொடி மரத்திற்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது.
தொடர்ந்து கருடக்கொடி ஏற்றி வைத்து விமர்சையாக துவங்கியது பத்து நாட்கள் ஏழுமலையானின் வாகன சேவைகள் காலை மாலை இரண்டு வேளைகளிலும் நடைபெறும். பிரம்மோற்சவ வாகன சேவைகளை காண ஏராளமான பக்தர்கள் திருமலைக்கு வந்து குவிந்துள்ளனர்.
-
then thirupathy bramorchavam
சிறுமுகை அருகே ஜடையம்பாளையத்தில் தென் திருப்பதி ஸ்ரீவாரி ஆலயத்தில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவை ஒட்டி ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஜடையம்பாளையத்தில் அமைந்துள்ள தென்திருப்பதி ஸ்ரீவாரி ஆலயத்தில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது
இதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று மலையப்பசாமி கோவில் முன் மண்டபத்தில் எழுந்தருளும் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
முன்னதாக காலை மலையப்ப சாமி சின்னசேஷ வாகனம் ஸ்தாபன திருமஞ்சனம் அன்னபசி வாகனம் ஆகியவற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்த நிலையில் மாலை வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் மலையப்ப சாமி அலங்கார கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்
ஊஞ்சல் உற்சவத்தின் போது வேத விற்பனர்கள் மந்திரங்கள் ஓதி பக்தர்கள் மலையப்ப சாமியான ஸ்ரீ வெங்கடேச பெருமாளை வழிபட்டனர்.