செப்டம்பர் 18 – விநாயகர் சதுர்த்தி
சோபகிருது வருடம் – புரட்டாசி 1
18-செப்-2023 திங்கள் ரபியுல்
விநாயகர் சதுர்த்தி
நல்ல நேரம் : 6.00 – 7.30
ராகு : 7.30 – 9.00
குளிகை : 1.30 – 3.00
எமகண்டம் : 10.30 – 12.00
திதி : சதுர்த்தி
திதி நேரம் : திரிதியை கா 11.38
நட்சத்திரம் : சித்திரை கா 11.57
யோகம் : சித்த-அமிர்த யோகம்
சந்திராஷ்டமம் : உத்திரட்டாதி,ரேவதி
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
Category: அவசியம் படிக்க
அவசியம் படிக்க
-
September 18 Vinayakar Chadurthi
-
Vinayakar chadurthi kozhukattai
உணவு பிரியரான விநாயகருக்கு படைக்கும் பொருட்களில் கூட அர்த்தம் இருக்கிறது. அப்பம், கொழுக்கட்டை, மோதகம், அவல், பொரி, சர்க்கரைப் பொங்கல், சுண்டல், கொய்யாப்பழம், விளாம்பழம் போன்றவற்றை விநாயகருக்கு படைத்து வழிபட வேண்டும்.
அவருக்கு பிடித்த இலைகள் அருகம்புல், வன்னி இலை, வில்வ இலை. பிடித்த மலர்கள், தும்பைப்பூ, மல்லிகைப்பூ, செண்பகப்பூ, செம்பருத்திப்பூ, எருக்கம்பூ. இவற்றில் ஏதாவது ஒன்றை விநாயகருக்கு சூட்டி வழிபடலாம்.
விநாயகருக்கு கொழுக்கட்டை படைப்பது ஏன்?
விநாயகர் சதுர்த்தி நாளில், பிள்ளையாருக்கு செய்யப்படும் பிரசாதங்களில் முக்கியமானது, 'மோதகம்" மற்றும் கொழுக்கட்டை. தேங்காய், வெல்லப்பாகு, அரிசி மாவால் செய்யப்படும் இந்த நிவேதன பொருளில் ஒரு உண்மை உள்ளது. மோதும் அகங்கள் இருக்கக்கூடாது. எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை வலியுறுத்திதான் மோதகத்தை படைக்கின்றோம்.
மேல் தோலாக இருக்கும் மாவு பொருள், அண்டம்;. அதன் உள்ளே இருக்கும் பூரணம், பிரம்மம். நமக்குள் இருக்கும் பூரணம் போன்ற நல்ல பண்புகளை மூடி மறைப்பது, மாயை. இந்த மாயை-யை அகற்றிவிட்டால், பூர்ணத்துவமான நல்ல பண்புகள் வெளியாகும். இதுவே, கொழுக்கட்டை உணர்த்தும் தத்துவம்.
கொழுக்கட்டையின் கூர்மையான முன் பகுதி, விநாயகர் கூரிய புத்தியை அருள்வார் என்பதை தெரிவிக்கிறது. கொழுக்கட்டையின் வெள்ளை நிற வெளிப்பகுதி, எல்லோருக்கும் தெளிவான உள்ளம் தருவார் என்பதை தெரிவிக்கிறது. கொழுக்கட்டையின் உட்புறத்தில் இனிப்பான பகுதியோ, கணபதி எப்போதும் இனிய அருள் வழங்குவார் என்பதை சொல்லாமல் சொல்கிறது.
-
Vinayakar chadurthi viradha murai
விநாயகர் சதுர்த்தி அன்று விடியற் காலையிலேயே எழுந்து, சுத்தமாக குளித்துவிட்டு, வீட்டையும் சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும். வாசலில் மாவிலைத் தோரணம் கட்டலாம். முடிந்தால், இரண்டு வாழைக் கன்றுகளையும் வாசலின் இருபுறங்களிலும் கட்டி வைக்கலாம். பிறகு, பூஜையறையில் சுத்தம் செய்த ஒரு மணையை வைக்க வேண்டும்.
அதன்மேல் ஒரு கோலம் போட்டு, அதன்மேல் ஒரு தலை வாழை இலையை வைக்க வேண்டும். இலையின் நுனி வடக்கு பார்த்ததுபோல இருப்பது நல்லது. இந்த இலையின் மேல் பச்சரிசியைப் பரப்பி வைத்து, நடுவில் களிமண்ணாலான பிள்ளையாரை வைக்க வேண்டும்.
பூமியிலிருந்து உருவான எதுவும் பூமிக்கே திரும்பப் போகவேண்டும் என்ற தத்துவம்தான் களிமண் பிள்ளையார். களிமண் மட்டும்தான் என்றில்லாமல், உலோகம், கற்சிலை விக்ரகங்களையும் வைக்கலாம்.
பத்ர புஷ்பம் எனப்படும் பல்வகைப் பூக்கள் கொண்ட கொத்து, எருக்கம்பூ மாலை, அருகம்புல், சாமந்தி, மல்லி என்று எத்தனை வகை பூக்களை வாங்க முடியுமோ, அவரவர் வசதிக்கேற்ப வாங்கிக் கொள்ளலாம்.
அதேபோல முடிந்த அளவுக்கு சில வகை பழங்களையும் வாங்கிக் கொள்ளலாம். இவை எல்லாவற்றையும் விட, விநாயகருக்கு மிகவும் பிடித்தமான மோதகத்தை செய்து கொள்ளலாம்.
அதாவது கொழுக்கட்டை. தேங்காய் பூர்ணத்தை உள்ளே வைத்து செய்யப்படுவது. இதிலும் ஒரு தத்துவம் இருக்கிறது. மேலே இருக்கும் மாவுப் பொருள்தான் அண்டம்.
உள்ளே இருக்கும் வெல்லப் பூர்ணம்தான் பிரம்மம். அதாவது நமக்குள் இருக்கும் இனிய குணங்களை மாயை மறைக்கிறது. இந்த மாயையை உடைத்தால் அதாவது வெள்ளை மாவுப் பொருளை உடைத்தால், உள்ளே இனிய குணமான வெல்லப் பூர்ணம் நமக்குக் கிடைக்கும்.
பிள்ளையாருக்கு பூக்களால் அலங்காரம் செய்து விட்டு, பிறகு விநாயகர் பாடல்கள் எதை வேண்டுமானாலும் பாடலாம். அவ்வையார் தந்த விநாயகர் அகவல், காரிய சித்தி மாலை படிப்பது விசேஷமான பலன்களைத் தரும். பிள்ளையாருக்கு கொழுக்கட்டை மட்டுமில்லாமல், அவரவர் வசதிக்கேற்ப எள்ளுருண்டை, பாயசம், வடை என்றும் நைவேத்யம் செய்யலாம்.
பால், தேன், வெல்லம், முந்திரி, அவல் என்று ஒவ்வொன்றிலும் சிறிதளவு எடுத்து ஒன்றாகக் கலந்து அதையும் நைவேத்யம் செய்யலாம். நிவேதனப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் 21 என்ற கணக்கில் சிலர் வைப்பார்கள். ஆனால், எண்ணிக்கை முக்கியமில்லை; ஈடுபாடுதான் முக்கியம். பிறகு கற்பூரம் காட்டி விரதத்தை முடிக்கலாம்.
இந்த விரதத்தை காலையிலிருந்தே உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் அனுஷ்டிப்பது மிகவும் விசேஷம். பூஜை நேரம் வரை பட்டினியாக இருப்பது சிறப்பு. சம்பிரதாயம் பார்க்கக் கூடியவர்கள் இந்த விநாயகர் சதுர்த்திக்குப் பிறகும் தொடர்ந்து விரதத்தை அனுசரிப்பார்கள். அப்படித் தொடர்ந்து, பௌர்ணமிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினத்தோடு விரதத்தை நிறைவு செய்வார்கள்.
இத்தனை நாள் விரதத்துக்குப் பிறகுதான் பிள்ளையாரை கிணற்றிலோ அல்லது ஏதாவது நீர்நிலையிலோ கொண்டுபோய் போடுவது வழக்கம்.
பதினைந்து நாள் அனுசரித்தாலும் சரி, விநாயகர் சதுர்த்தி அன்றைக்கு ஒரே ஒருநாள் மட்டும் அனுசரித்தாலும் சரி, மேற்கொள்ளும் விரதத்தை உளப்பூர்வமாகக் கடைப்பிடிக்க வேண்டியதுதான் முக்கியம்.
வருடத்திற்கு ஒருமுறை இப்படி விநாயகர் சதுர்த்தி அனுசரிப்பதுபோல மாதந்தோறும் பௌர்ணமிக்கு அடுத்த சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தியாக அனுஷ்டிக்கப்படுகிறது.
இந்த நாளிலும் விரதம் இருப்பது சிலருடைய வழக்கம். அன்றைக்கு முழுவதும் பட்டினி இருந்து, விநாயகர் சிலை அல்லது படத்துக்கு முன்னால் தீபமேற்றி, விநாயகர் பாடல்கள், ஸ்தோத்திரங்களை பாடி, மாலையில் கொழுக்கட்டை நைவேத்யம் செய்து, பிறகு சந்திர தரிசனம் செய்துவிட்டு எளிமையான உணவை எடுத்துக்கொண்டு விரதத்தை முடிப்பதும் சிலர் வழக்கம்.
இந்த விரதங்களால் உள்ளம் மேன்மைஅடையும்; உடல் ஆரோக்கியம் வளரும்; எல்லா வளங்களும் நிறையும். விரதம் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, அவர்கள் குடும்பத்தினருக்கும், அவர்களை சார்ந்த அனைவருக்கும் விநாயகர் நல்லன எல்லாம் அருள்வார்.
-
Vinayaka peruma arpudhangal
விநாயகர் ஒரு கொம்பு, இரு காதுகள், மூன்று கண்கள், நான்கு தோள்கள், ஐந்து கைகள் ஆறெழுத்துக்கள் உடையவர். விநாயகர் பூதமாய், தேவராய், விலங்காய், ஆணாய், பெண்ணாய், உயர்திணையாய், அக்திணையாய் எல்லாமாய் விளங்குகிறார்.
யானையை அடக்கும் கருவிகள் பாசமும் அங்குசமும், விநாயகர் தன் கையில் பாசாங்குசத்தை ஏந்தி இருக்கின்றார். தன்னை அடக்குவார் ஒருவரும் இலர் என்ற குறிப்பை இதன் மூலம் உணர்த்துகிறார். அகில உலகங்களும் விநாயகருடைய மணி வயிற்றில் அடங்கிக் கிடப்ப என்ற குறிப்பை அவருடைய மத்தள வயிறு புலப்படுத்துகின்றது.
விநாயகர் இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என்ற மும்மதங்களைப் பொழிகின்றார். கும்பம் ஏந்திய கை படைக்கும் தொழிலையும், மோதகம் ஏந்தியகை காத்தல் தொழிலையும், அங்குசம் ஏந்திய கரம் அழித்தல் தொழிலையும், பாசம் ஏந்திய கரம் மறைத்தல் தொழிலையும், தந்தம் ஏந்திய கரம் அருளல் தொழிலையும் புரிகின்றன. எனவே விநாயகர், சிருஷ்டி, திதி, சங்காரம், திரௌபவம், அனுக்கிரகம் என்ற ஐம்பெருந் தொழில்களை ஐந்து கரங்களால் புரிந்து ஆன்மாக்களுக்கும் அருள் புரிகின்றார்.
விநாயகர் தாய் தந்தையரை அன்புடன் வழிபட்டதால் பிள்ளை என்ற பெயருடன் ஆர் என்ற பன்மை விகுதி பெற்றுப் பிள்ளையார் என்று பேர் பெற்றார். முருகர், அம்பிக்கை ராமர், கிருஷ்ணர் முதலிய உருவங்கள் சிற்ப முறைப்படி செய்து வழிபட வேண்டியவை. அவை சிற்ப லட்சணத்திற்கு மாறுபட்டிருந்தால் வழிபாடு செய்பவருக்கு நன்மை கிடைக்காது. ஆனால் பிள்ளையார் உருவம் அப்படி அல்ல. மஞ்சளை அரைத்து ஒரு சிறு குழந்தை கூட பிடித்து வைத்தால் போதும் பிள்ளையார் தயார். பிள்ளையார் அவ்வடிவில் எழுந்தருளி அருள்புரிவார்.
சந்தனம், களிமண், மஞ்சள், சாணம் இப்படி எளிதாகக் கிடைக்க கூடிய பொருளில் விநாயகரை செய்து வழிபடு வார்கள். விநாயகருக்கு எளிதாக கிடைக்கக் கூடிய அருகம்புல் மிக விருப்பம். அருகு வைத்து விநாயகரை வழிபட்டால் பிறவிப் பிணி நீங்கி, இன்பம் பெருகும்.
விநாயகருக்கு கரும்பு, அவரை, பழங்கள், சர்க்கரை, பருப்பு, நெய், எள், பொரி, அவல், துவரை, இளநீர், தேன், பயறு, அப்பம், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம், கிழங்கு, அன்னம், கடலை முதலியன வைத்து நிவேதனம் செய்ய வேண்டும். விநாயக சதுர்த்தி அன்று நாம் பூஜை செய்யும் விநாயகர் சிலை மண்ணினால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். நம் கட்டை விரல் அளவைப் போல பன்னிரண்டு மடங்கு அளவில் இருக்க வேண்டும்.
புரட்டாசி மாத சதுர்த்தி வரை நம் இல்லத்துப் பூஜையில் இருக்க வேண்டும். இந்த 30 நாட்கள் தினந்தோறும் பூஜைகளை முறையாகச் செய்து வருவதுடன் நைவேத்தியங்களும் செய்ய வேண்டும். புரட்டாசி சதுர்த்திக்கு மறுநாள் பூஜை முடிந்து சிலையை நதியிலோ, குளத்திலோ, கடலிலோ அல்லது ஏதாவது நீர்நிலைகளிலோ சேர்த்து விட வேண்டும்.
சாணம், புற்றுமண், மஞ்சள், வெல்லம், எருக்கம் வேர், சந்தனம் ஆகியவற்றில் பிள்ளையார் உருவம் செய்து வழிபட்டால் அனைத்துவிதமான நலன்களும் பெற்று மோட்சம் அடைவர் என்று விநாயக புராணம் கூறுகின்றது. தும்மைப்பூ, செம்பருத்தி மலர், சங்கு புஷ்பம், எருக்கம்பூ, மா விலை, அருகம்புல், வில்வ இலை ஆகியவை விநாயகரை அர்ச்சனை செய்யவும் மாலையாக அணிவிக்கவும் மிகவும் உகந்தவையாக கருதப்படுகிறது.
விநாயகர் பக்தர்களில் தலைசிறந்தவர் புருசுண்டி முனிவர். விநாயகரை நோக்கித் தவமிருந்து விநாயகரை நேரே தரிசனம் செய்தவர். தேவேந்திரனுடைய விமானம் சங்கடஹர சதுர்த்தி விரதப் பலனாலேயே மீண்டும் விண்ணில் பறக்க ஆரம்பித்தது.
கிருதவீர்யன் இந்த விரதத்தின் பலனால் உத்தமமான குழந்தைச் செல்வமடைந்தான். சூரசேனன் என்னும் மன்னன் விநாயகர் விரதத்தைத் தான் கடைப்பிடித்ததோடு தன் நாட்டு மக்கள் அனைவரும் இதைக் கடைப்பிடிக்கும்படி செய்து சகல செல்வங் களையும் பெற்றான்.
திண்டிவனம்-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் 12 கி.மீ. மேற்கே அமைந்துள்ள கிராமம் தீவனூர். அந்த கிராமத்தில் உள்ள பொய்யாமொழிப் பிள்ளையார் கோவிலில் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு முதல் குழந்தை ஆண் குழந்தையாகப் பிறக்கும் என்பது அங்குள்ளவர்களின் நம்பிக்கை.
-
Vinayakar Gayathri mandiram
விநாயகர் சகஸ்ரநாமம்:
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயேவிநாயகர் காயத்ரி மந்திரம்:
வக்ரதுண்டாய ஹீம்
ஓம் நமோ ஹேரம்ப மதமோதித
மம சர்வ சங்கடம் நிவாரயே ஸ்வாஹா
ஓம் கம் க்ஷிப்ரப்ரசாதனாய நமஹ.
விநாயகர் ஸ்லோகங்கள்….1) கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்
2) ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத்.
3) ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப்
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.
4) மூஷிக வாகன மோதக ஹஸ்த
சாமர கர்ண விளம்பித சூத்ர
வாமன ரூப மஹேஸ்வர புத்ர
விக்ன விநாயக பாத நமஸ்தே.
5) அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற்றில் பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம்போம் நல்ல
குணமதிக மாம் அருணைக் கோபுரத்தில் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்.
விநாயகர் மந்திரத்தை படித்து அருகம்புல்லால் விநாயகரை வழிபட்டு வந்தால் விநாயகரின் அருள் நமக்குக் கிடைக்கும். பிள்ளையாரை வணங்கி நெற்றியில் குட்டிக் கொண்டு எந்த ஒரு காரியத்தையும் ஆரம்பிக்க வேண்டும். -
Sirkazhi narayana perumal koil kumbabishegam
சீர்காழி அருகே 19 ஆண்டுகளுக்கு பிறகு பழமை வாய்ந்த 108 திவ்ய தேசங்கள் ஒன்றான ஸ்ரீ நாராயண பெருமாள் கோவிலில் மகா கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நாங்கூரில் 108 திவ்ய தேசங்களில் 39வது திவ்ய தேசமாக இக்கோவில் அமைந்துள்ளது. புண்டரீகவல்லி தாயார் சமேத நாராயண பெருமாள் கோவில் அமைந்துள்ளது. திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற ஸ்தலமான இங்கு 11 கருட சேவை நிகழ்ச்சி உலக பிரசித்தி பெற்றதாக திகழ்கிறது இத்தகைய சிறப்புமிக்க கோவிலில் இன்று காலை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இங்கு கடந்த 13 ஆம் தேதி பூர்வாங்க பூஜைகளும், 14 ஆம் தேதி யாகசாலை பூஜைகளும் தொடங்கி நடைபெற்றன 17 ஆம் தேதியான இன்று காலை ஏழாம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து பூர்ணாஹூதி மற்றும் மகா அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பின்னர் யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு கோவிலை வலம் வந்து விமானத்தை அடைந்தனர் பின்னர் பட்டாச்சாரியார் விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி மகா சம்ப்ரோக்ஷணத்தை நடத்தி வைத்தனர். கும்பாபிஷேகத்தையொட்டி மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி. மீனா தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
-
Vinayakar Temple viswakarma jayanthi
கரூரில் உள்ள விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் ஸ்ரீ விஸ்வகர்மா ஜெயந்தி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்து. ஸ்ரீ விஸ்வகர்மா தொழில் கடவுளாக அனைவராலும் பூஜிக்கப்பட்டு வருகிறார்.
இந்தியா முழுவதும் ஸ்ரீ விஸ்வகர்மா ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. கரூரில் தேர்வீதி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் கோயிலில் இன்று சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு விஸ்வகர்மா ஜெயந்தி திருநாள் காரணமாக விஸ்வகர்மா ஹோமம், கணபதி ஹோமம், பஞ்சபிரம்ம ஹோமம், நவக்கிரக ஹோமம், காயத்ரி ஹோமம், மகாலட்சுமி ஹோமம் போன்றவை நடத்தப்பட்டன.
அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சுவாமிக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், அரிசி மாவு, கரும்பு சாறு, பஞ்சாமிர்தம், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர் பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சுவாமிகளுக்கு தீபாராதனை கும்பா ஆரத்தி, கற்பூர ஆரத்தி,மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்றனர்.
இந்த சிறப்பு நிகழ்ச்சியானது விஷ்வகர்மா சித்தி விநாயகர் அறக்கட்டளை தலைவர் கருப்புசாமி மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
-
Sivan Parvathy Kalyanam
தேனி அருகே மலை மேல் அமைந்திருக்கும் சிவன் திருக்கோயிலில் அரசமரமாக காட்சிதரும் சிவனுக்கும் வேப்பமர வேப்பிலைகாரி தேவிக்கும் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது.
தேனி அருகே கருவேல்நாயக்கன்பட்டியில் மலை மேல் பழமைவாய்ந்த சிவன் கோயில் அமைந்திருக்கிறது. இந்தத் திருக்கோயிலில் சிவன் பார்வதி திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது முன்னதாக புனித கலச குண்டத்திற்கு பூஜைகள் செய்யப்பட்டு கோவில் வளாகத்தில் யாக குண்டம் அமைக்கப்பட்டு நெய் வஸ்திரம் உள்ளிட்டவற்றை கொண்டு பூர்ணஹூதி சமர்ப்பிக்கப்பட்டு யாகம் சிறப்பாக வளர்க்கப்பட்டது.
கோயிலில் எழுந்தருளிருக்கும் அரசமரத்தை சிவனாகவும் வேப்பமரத்தை பார்வதி ஆகவும் பாவித்து அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும் திருக்கல்யாண வைபவம் தொடங்கியது. சிவன் பார்வதிக்கு தீபாராதனை காட்டப்பட்ட பின் திருக்கல்யாண சேவை சிறப்பாக நடைபெற்றது பின்னர் மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டது.
அதைத்தொடர்ந்து மேளதாளம் முழங்க வண்ணமலர் மாலைகளால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்த மூலவர் சிவலிங்கத்திற்கு தீபாராதனை காட்டப்பட்ட இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிவன் பார்வதிக்கு நடைபெற்ற திருக்கல்யாணத்தை கண்டு களித்தனர்.
-
September 17 2023 Rasipalan
இன்றைய ராசிபலன்
மேஷம் – அசதி
ரிஷபம் – சினம்
மிதுனம் – வரவு
கடகம் – நட்பு
சிம்மம் – நலம்
கன்னி – நன்மை
துலாம் – முயற்சி
விருச்சிகம் – வீரம்
தனுசு – அன்பு
மகரம் – நிறைவு
கும்பம் – கவலை
மீனம் – அமைதி
சந்திராஷ்டமம் – பூரட்டாதி, உத்திரட்டாதி -
September 17 2023 calander
செப்டம்பர் 17 – வளர்பிறை சுபமுகூர்த்த நாள்
சோபகிருது வருடம் – ஆவணி 31
சுபமுகூர்த்த நாள்
17-செப்-2023 ஞாயிறு
உப்பூர் விநாயகர் தேர்
வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 7.31 – 9.00)
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 4.30 – 6.00
குளிகை : 3.00 – 4.30
எமகண்டம் : 12.00 – 1.30
திதி : திரிதியை
திதி நேரம் : துவிதியை கா 10.47
நட்சத்திரம்: அஸ்தம் கா 10.33
யோகம் : அமிர்த-சித்த யோகம்
சந்திராஷ்டமம் : பூரட்டாதி,உத்திரட்டாதி
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்