Kanchi Elephant Vinayakar chadurthi

குளித்து அலங்கரித்து பட்டாடை உடுத்தி மாலை அணிந்து குதூகலமாய் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய கோதை யானை.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் ஸ்ரீ ராமானுஜர் ஆலயத்தில் கோதை என்ற 25 வயது உடைய பெண் யானை ஒன்று உள்ளது. இந்த யானைக்கென ரசிகர் பட்டாளமே உள்ளன. ஏனென்றால் இந்த கோதையானை எல்லோரிடமும் அன்பாய் பழகும். குழந்தையைப் போல சொல்வது அனைத்தும் செய்யும்.

 இந்நிலையில் இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோதை யானைக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனால் நீண்ட நேரம் தண்ணீர் தொட்டியில் ஜாலியாக கோதை யானையை குளிக்க வைத்து, அலங்காரம் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து புத்தாடை அணிவித்தனர் அப்பொழுது குழந்தைகளுக்கு தங்கள் பெற்றோர் புத்தாடை உடுத்தும் போது குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சியோடு இருப்பது போல தன் கால்களை மடக்கி கீழே அமர்ந்து புத்தாடைகளை பெற்றுக் கொண்டது.

 பின்னர் மலர் மாலைகளால் அலங்கரித்து கற்பூரம் ஏற்றினர். பின்பு அங்கு கூடியிருந்த பொதுமக்கள் கோதை யானைக்கு பழங்கள் வழங்கி சாஷ்டாங்கமாய் முகம் குப்புற விழுந்து கோதையை வணங்கி கோதையின் தும்பிக்கையால் ஆசிர்வாதம் பெற்று போட்டோ எடுத்து மகிழ்ந்தனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *