Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • Murugaperuman 16 vagai Kolangal

    ஞானசக்திதரர் கோலம்:
    இந்த முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் வெற்றியுடன் முடியும். திருத்தணிகையில் எழுந்தருளியிருக்கும் மூலவர் திருவடிவம் ஹஞானசக்திதரர்’ திருக்கோலமாகும்.

    கந்தசாமி கோலம்:
    இவரை வழிபட்டால் சகல காரியங்களும் சித்தியாகும். பழனிமலை ஆண்டவர் திருவடிவம் இது.

    ஆறுமுக தேவசேனாபதி கோலம்:
    இவரை வழிபட்டால் மங்களகரமான வாழ்வு கிடைக்கும். சென்னிமலையாண்டவர் திருக்கோயிலில் கர்ப்பக்கிரக மாடம் ஒன்றில் இந்த திருவுருவம் உள்ளது.

    சுப்பிரமணியர் கோலம்:
    இவர் தன்னை வழிபடும் பக்தர்களின் வினைகளை நீக்கி ஆனந்தப் பேற்றினை அளிக்கக் கூடியவர். நாகை மாவட்டத்திலுள்ள திருவிடைகழி முருகன் கோயில் மூலவர் சுப்பிரமண்யர் ஆவார்.

    கஜவாகனர் கோலம்:
    இவரை வழிபட்டால் துன்பங்கள் விலகி ஓடும். திருமருகல், மேல்பாடி, சிதம்பரம் நடராஜர் கோயில் கீழைக் கோபுரம் ஆகிய இடங்களில் யானை மீதிருக்கும் இவரது திருவுருவம் உள்ளது.

    சரவணபவர் கோலம்:
    தன்னை வழிபடும் அடியவர்களுக்கு மங்கலம், ஒலி, கொடை, சாத்வீகம், வீரம் முதலிய குணங்களை அளிப்பவர். சென்னிமலை, திருப்போரூர் ஆகிய இடங்களில் இவரது திருவடிவம் இருக்கிறது.

    கார்த்திகேயர் கோலம்:
    இவரை வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் வந்து சேரும். கார்த்திகை நட்சத்திர நாட்களில் இவரை வழிபடுவது விஷேசமான பலன்களைத் தரும். கும்பகோணத்தில் உள்ள கும்பேஸ்வரர் கோயிலிலும், தாராசுரம் ஐராவதீச்வரர் கோயிலிலும் கார்த்திகேயர் திருவுருவம் உள்ளது.

    குமாரசாமி கோலம்:
    இவரை வழிபட்டால் ஆணவம் அடியோடு நீங்கும். நாகர்கோவில் அருகில் இருக்கும் குமாரகோவிலில் இவரது திருவடிவம் உண்டு. கங்கை கொண்ட சோழபுரத்தில் இவருக்குப் பஞ்சலோக விக்கிரகம் இருக்கிறது.

    சண்முகர் கோலம்:
    இவரை வழிபட்டால் சிவசக்தியை வழிபட்ட பலன் கிடைக்கும். திருச்செந்தூரில் உள்ள முருகன் அருட்கோலம் சண்முகர் திருவடிவமாகும்.

    தாரகாரி கோலம்:
    தாரகாசுரன்’ என்னும் அசுரனை அழித்ததால் முருகப்பெருமான் இத்திரு நாமத்தைப் பெற்றார். உலக மாயைகளில் இருந்து விடுபட வழிசெய்யும் திருக்கோலம் இது. விராலி மலையில் உள்ள முருகன் கோயிலில் தாரகாரி இருக்கிறார்.

    சேனானி கோலம்:
    இவரை வழிபட்டால் பகை அழியும். போட்டிகளில் வெற்றிகிடைக்கும். பொறாமை நீங்கும். தேவிகாபுரம் ஆலயத்தில் சேனானி திருவுருவம் இருக்கிறது.

    பிரம்மசாஸ்தா கோலம்: இவரை வழிபட்டால் எல்லா வகைவித்தைகளிலும் தேர்ச்சி பெறலாம். சகலவித கலையறிவும் அதிகரிக்கும். கல்வியில் தேர்ச்சி கிட்டும். காஞ்சிபுரத்தில் உள்ள குமரக்கோட்டம் ஆனூர், பாகசாலை, சிறுவாபுரி ஆகிய இடங்களில் பிரம்மசாஸ்தா திருக்கோலம் உள்ளது.

    வள்ளிகல்யாணசுந்தரர் கோலம்:
    இவரை வழிபட்டால் திருமணத்தடைகள் விரைவில் அகலும், கன்னிப் பெண்களுக்குக் கல்யாண பாக்கியம் கிடைக்கும். திருப்போரூர் முருகன் கோயில் தூண் ஒன்றில் இவர் திருவுருவம் இருக்கிறது.

    பாலசுவாமி கோலம்:
    இவர், உடல் ஊனங்களையும், குறைகளையும் அகற்றும் தெய்வம். இவரை வழிபடுபவர்களுக்கு உடல் நலம் கிடைக்கும். திருச்செந்தூர், திருக்கண்டிர், ஆண்டாள் கும்பம் கோயில்களில் பாலசுவாமி திருவுருவம் இருக்கிறது.

    சிரவுபஞ்சபேதனர் கோலம்:
    இவரை வழிபட்டால் துன்பங்கள் விலகும். மனச்சஞ்சலம் அகலும். திருநெல்லிக்கா, திருக்குறங்குடி, திருநளி பள்ளி ஆகிய இடங்களில்இவரது திருவுருவம் உண்டு.

    சிகிவாகனர் கோலம்:
    மயில் மீது இருக்கும் முருகன் அருட்கோலம் இது. ஆலயம் பலவற்றில் அழகுற அமையும் திருவடிவம். தன்னை வழிபடுபவர்களுக்கு இன்பமான வாழ்வு அளிப்பவர்.

     

  • Nellaippar koil kodiyetram

    நெல்லையப்பர் திருக்கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது.இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை நெல்லையப்பர் திருக்கோவிலில் நடைபெறும் பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் ஒன்றான ஐப்பசி திருக்கல்யாணம் திருவிழா இன்றைய தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிகழ்வுக்காக அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு ஸ்வாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

    பின்னர் சுவாமி கோவிலில் இருந்து திருகல்யாண திருவிழாவிற்காக அம்பாள் கோவில் எழுந்தருளியுள்ள காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.தொடர்ந்து தங்க பூங்கோவில் சப்பரத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட காந்திமதி அம்பாள் திருக்கோவில் யானை காந்திமதி முன் செல்ல கோவில் கொடிமரம் முன்பு எழுந்தருள செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் கொடி பட்டம் பல்லக்கில் கோவில் உப்பிரகாரத்தில் வலம் வர எடுத்துவரப்பட்டு திருக்கொடியேற்றம் வேத மந்திரங்கள் முழங்க பஞ்சவாத்தியம் இசைக்க நடைபெற்றது.

    பின்னர் கொடி மரத்திற்கு பால்,தயிர்,மஞ்சள் இளநீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேக திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மஹாதீபாரதனை நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 15 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் காந்திமதி அம்பாளுக்கு காலை மாலை இரண்டு வேலைகளையும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.ஒவ்வொரு நாளும் மாலை பல்வேறு வாகனங்களில் காந்திமதி அம்பாள் எழுந்தருளி சிறப்பு திருவீதி உலாவும் நடைபெறுகிறது.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கம்பா நதியில் தபஸ் இருக்கும் காந்திமதி அம்பாளுக்கு சுவாமி நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் வைபவம் வரும் 8ம் தேதியும் .,சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கல்யாண உற்சவம் கோவில் ஆயிரம் கால் மண்டபத்தில் 9ம் தேதி அதிகாலையும் நடைபெறுகிறது.

  • Vaitheeswaran Koil Sirappu Abishegam

    ஐப்பசி மாத கார்த்திகையை முன்னிட்டு  வைத்தீஸ்வரன்கோவில் செல்வ முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.  தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட திரெளான பக்தர்கள்  வழிபாடு செய்தனர்.

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவிலில் தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற இக்கோவிலில் நவகிரகங்களில் செவ்வாய்,அறுபடை வீடுகளுக்கு இணையாக போற்றப்படும் செல்வ முத்துக்குமாரசுவாமி தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

    இத்தகைய சிறப்பு பெற்ற கோவிலில் ஐப்பசி மாத கார்த்திகையான இன்று  செல்வ முத்துக்குமார சுவாமி சன்னதியில் இருந்து புறப்பட்டு சண்முகர் சன்னதி அருகே உள்ள உற்சவ மண்டபத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் முருக பெருமானுக்கு  சந்தனம், பால், இளநீர் மற்றும் 16 வகை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. பின்னர் மலர்களால் அலங்காரம் சேவிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரெளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷமிட்டு தரிசனம் செய்தனர்.

  • October 30 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  நன்மை
    ரிஷபம்         –    உதவி
    மிதுனம்     –   ஆர்வம்  
    கடகம்         –  நட்பு
    சிம்மம்         –   வெற்றி
    கன்னி         –    கவனம்
    துலாம்         –     நலம்
    விருச்சிகம்     – வெற்றி
    தனுசு         –     சுகவீனம்  
    மகரம்         –    ஏமாற்றம்
    கும்பம்         –     பாராட்டு
    மீனம்         –      சிக்கல்
    சந்திராஷ்டமம்    –   சித்திரை

  • October 30 2023 Karthigai

    அக்டோபர் 30 – கார்த்திகை
    சோபகிருது வருடம் – ஐப்பசி 13
    கார்த்திகை
    30-அக்-2023 திங்கள்
    நல்ல நேரம் : 6.00 – 7.30
    ராகு : 7.30 – 9.00
    குளிகை : 1.30 – 3.00
    எமகண்டம் : 10.30 – 12.00
    திதி : துவிதியை
    திதி நேரம் : துவிதியை ந.இ 12.15
    நட்சத்திரம் : பரணி கா 6.40
    யோகம் : சித்த-மரணயோகம்
    சந்திராஷ்டமம் : சித்திரை
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

     

  • October 29 2023 Indraya nallaneram

    அக்டோபர் 29 – இன்றைய நல்லநேரம்
    சோபகிருது வருடம் – ஐப்பசி 12
    29-அக்-2023 ஞாயிறு
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 4.30 – 6.00
    குளிகை : 3.00 – 4.30
    எமகண்டம் : 12.00 – 1.30
    திதி : பிரதமை
    திதி நேரம் : பிரதமை ந.இ 1.8
    நட்சத்திரம் : அசுவினி கா 7.12
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : அஸ்தம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

  • October 29 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  வரவு
    ரிஷபம்         –    பயம்
    மிதுனம்     –   செலவு
    கடகம்         –  வெற்றி
    சிம்மம்         –   குழப்பம்
    கன்னி         –    பொறுமை
    துலாம்         –     நலம்
    விருச்சிகம்     – உதவி
    தனுசு         –     தனம்
    மகரம்         –    கவலை
    கும்பம்         –     உயர்வு
    மீனம்         –      முயற்சி
    சந்திராஷ்டமம்    –   ஹஸ்தம்

     

  • October 28 2023 Pournami

    அக்டோபர் 28 – பவுர்ணமி
    சோபகிருது வருடம் – ஐப்பசி 11
    பவுர்ணமி
    28-அக்-2023 சனி ரபியுல் ஆகிர் 12
    சிவன் கோயிலில் அன்னாபிஷேகம்,
    சந்திர கிரகணம்
    வாஸ்து நாள்(காலை 7.44 – 8.20)
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 9.00 – 10.30
    குளிகை : 6.00 – 7.30
    எமகண்டம் : 1.30 – 3.00
    திதி : பவுர்ணமி
    திதி நேரம் : பவுர்ணமி ந.இ 2.27
    நட்சத்திரம் : ரேவதி கா 8.9
    யோகம் : மரண-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : உத்திரம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

     

  • October 28 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  நன்மை
    ரிஷபம்         –    லாபம்   
    மிதுனம்     –   பொறுமை
    கடகம்         –  முயற்சி
    சிம்மம்         –   வரவு
    கன்னி         –    செலவு
    துலாம்         –     பயம்
    விருச்சிகம்     – அச்சம்   
    தனுசு         –     கவனம்
    மகரம்         –    கீர்த்தி
    கும்பம்         –     சிரமம்
    மீனம்         –      சுகம்
    சந்திராஷ்டமம்    –   உத்திரம்

  • October 27 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  வெற்றி
    ரிஷபம்         –    துணிவு  
    மிதுனம்     –   பாராட்டு
    கடகம்         –  பொறுமை
    சிம்மம்         –   ஆதரவு
    கன்னி         –    நன்மை  
    துலாம்         –     அசதி
    விருச்சிகம்     – மகிழ்ச்சி  
    தனுசு         –     பேராசை  
    மகரம்         –    லாபம்
    கும்பம்         –     எதிர்ப்பு  
    மீனம்         –      சினம்
    சந்திராஷ்டமம்    –   பூரம்