Vaitheeswaran Koil Sirappu Abishegam

ஐப்பசி மாத கார்த்திகையை முன்னிட்டு  வைத்தீஸ்வரன்கோவில் செல்வ முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.  தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட திரெளான பக்தர்கள்  வழிபாடு செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவிலில் தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற இக்கோவிலில் நவகிரகங்களில் செவ்வாய்,அறுபடை வீடுகளுக்கு இணையாக போற்றப்படும் செல்வ முத்துக்குமாரசுவாமி தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

இத்தகைய சிறப்பு பெற்ற கோவிலில் ஐப்பசி மாத கார்த்திகையான இன்று  செல்வ முத்துக்குமார சுவாமி சன்னதியில் இருந்து புறப்பட்டு சண்முகர் சன்னதி அருகே உள்ள உற்சவ மண்டபத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் முருக பெருமானுக்கு  சந்தனம், பால், இளநீர் மற்றும் 16 வகை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. பின்னர் மலர்களால் அலங்காரம் சேவிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரெளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷமிட்டு தரிசனம் செய்தனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *