இன்றைய ராசிபலன்
மேஷம் – குழப்பம்
ரிஷபம் – நற்செயல்
மிதுனம் – ஏமாற்றம்
கடகம் – வெற்றி
சிம்மம் – உதவி
கன்னி – சினம்
துலாம் – மறதி
விருச்சிகம் – ஓய்வு
தனுசு – துயரம்
மகரம் – போட்டி
கும்பம் – சுகம்
மீனம் – இன்பம்
சந்திராஷ்டமம் – கேட்டை
Category: அவசியம் படிக்க
அவசியம் படிக்க
-
November 03 2023 Rasipalan
-
November 03 2023 Indrayanaal
நவம்பர் 3 – இன்றைய நல்லநேரம்
சோபகிருது வருடம் – ஐப்பசி 17
03-நவ-2023 வெள்ளி
நல்ல நேரம் : 9.00 – 10.30
ராகு : 10.30 – 12.00
குளிகை : 7.30 -9.00
எமகண்டம் : 3.00 – 4.30
திதி : சஷ்டி
திதி நேரம் : சஷ்டி ந.இ 1.41
நட்சத்திரம் : திருவாதிரை கா 9.8
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : கேட்டை
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம் -
November 02 2023 Rasipalan
இன்றைய ராசிபலன்
மேஷம் – நன்மை
ரிஷபம் – லாபம்
மிதுனம் – அமைதி
கடகம் – ஆர்வம்
சிம்மம் – இன்பம்
கன்னி – நட்பு
துலாம் – நலம்
விருச்சிகம் – எதிர்ப்பு
தனுசு – ஆக்கம்
மகரம் – பரிசு
கும்பம் – உயர்வு
மீனம் – அன்பு
சந்திராஷ்டமம் – அனுஷம் -
November 02 2023 indrayanaal
நவம்பர் 2 – இன்றைய நல்லநேரம்
சோபகிருது வருடம் – ஐப்பசி 16
02-நவ-2023 வியாழன்
நல்ல நேரம் : 10.30 – 12.00
ராகு : 1.30 – 3.00
குளிகை : 9.00 – 10.30
எமகண்டம் : 6.00 – 7.30
திதி : பஞ்சமி
திதி நேரம் : பஞ்சமி ந.இ 12.31
நட்சத்திரம் : மிருகசீரிசீ டம் கா 7.45
யோகம் : மரணயோகம்
சந்திராஷ்டமம் : அனுஷம்
சூலம் : தெற்கு
பரிகாரம் : தைலம்
-
Kumbham Sakthi Online November Monthly Prediction
கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)
கிரகநிலை:
தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு – தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு(வ) – சப்தம ஸ்தானத்தில் சுக்ரன் – அஷ்டம ஸ்தானத்தில் கேது – பாக்கிய ஸ்தானத்தில் சூர், செவ்வாய், புதன் – அயன சயன் போக ஸ்தானத்தில் சனி என கிரகநிலைகள் உள்ளது.கிரக மாற்றங்கள்:
1ம் தேதி புதன் பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
2ம் தேதி சுக்கிரன் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17ம் தேதி சூர்யன் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17ம் தேதி செவ்வாய் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
30ம் தேதி சுக்கிரன் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.பலன்:
உண்மையினாலும் உழைப்பினாலும் வாழ்வில் வெற்றி பெறும் கும்ப ராசிக்காரர்களே, இந்த மாதம் பொன், பொருள் சேரும். வாகன யோகம் உண்டாகும். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் கிடைக்கும். புதிய தொடர்புகள் ஏற்படும். மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கும். பயணங்கள் ஏற்படும்.தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். முன்னேற்றம் காணப்படும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். தொழில் விரிவாக்கத்திற்கான பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை சுமை குறையும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கடினமாக காரியங்களையும், திறமையாக செய்து முடிப்பீர்கள்.
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குடும்பத்தினருக்காக பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வாழ்க்கையில் புதிய முன்னேற்றம் ஏற்படும்.
பெண்களுக்கு: புதிய தொடர்புகள் மூலம் லாபம் உண்டாகும். மனம் மகிழும்படியான நிகழ்ச்சிகள் நடக்கும்.
அரசியல்துறையினருக்கு உங்களின் செல்வம், செல்வாக்கு உயரக்கூடிய காலமாகும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்பு உண்டாகும். கௌரவமிக்க பதவிகள் கிடைக்கும். மக்களின் ஆதரவுகள் அதிகரிப்பதால் நினைத்த காரியங்கள் நிறைவேறும். முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றமுடியும்.
கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடிவந்து கதவைத்தட்டும். தடைப்பட்ட பணவரவுகள் யாவும் தடையின்றிக் கிடைக்கும். தொழிலில் இருந்த போட்டி பொறாமைகள் விலகி உடனிருக்கும் கலைஞர்களின் ஒத்துழைப்புக் கிடைக்கும். நீங்கள் நடித்து வெளிவந்த படங்களும் வெற்றியடைவதால் ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருக்கும். வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்பு அமையும்.
மாணவர்களுக்கு: கல்வியில் முன்னேற்றம் காணப்படும். பாடங்கள் படிப்பது பற்றிய கவலை நீங்கும். புதிய நட்பால் மகிழ்ச்சி அடைவீர்கள்.
அவிட்டம்:
இந்த மாதம் தாய்மாமனிடம் கருத்து மோதல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமான உழைப்பினை கொடுக்க வேண்டி வரலாம். வேலையில் கவனமுடன் செல்வது நல்லது.ஸதயம்:
இந்த மாதம் எல்லா நன்மைகளையும் தடையின்றி அடைவீர்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். இதுவரை தொந்தரவு கொடுத்துவந்த நோய் விலகும். அதனால் ஏற்பட்ட மனபாரம் குறையும். வரக்கூடிய உபரி வருவாயால் கடன் அடைபடும். தொழிலதிபர்கள் எதிர்பார்த்தபடி வரவுகள் வந்துசேரும்.பூரட்டாதி:
இந்த மாதம் புதிய ஒப்பந்தங்கள் கைகொடுக்கும். தொழிலதிபர்கள் பங்குதாரர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். கணவன்- மனைவி ஒற்றுமை சுமுகமாக இருக்கும். மனைவி வழியில் வரவேண்டிய சொத்துகள் கிடைக்கும். வியாபாரிகள் எந்தக் கொள்முதலையும் தயக்கமின்றிச் செய்யலாம். வியாபாரம் பெருகும். போட்டியாளர்கள் விலகிச்செல்வார்கள்.அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி
பரிகாரம்: பிரதோஷ காலத்தில் நந்தி தேவரையும், சிவனையும் வணங்கி சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது துன்பங்களை போக்கும். மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.சந்திராஷ்டம தினங்கள்: 9, 10, 11
அதிர்ஷ்ட தினங்கள்: 24, 25-பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA
-
Meenam Sakthi Online November Monthly Prediction
மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
கிரகநிலை:
ராசி ஸ்தானத்தில் ராகு – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு(வ) – ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன் – களத்திர ஸ்தானத்தில் கேது – அஷ்டம ஸ்தானத்தில் சூர், செவ்வாய், புதன் – லாப ஸ்தானத்தில் சனி என கிரகநிலைகள் உள்ளது.கிரக மாற்றங்கள்:
1ம் தேதி புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
2ம் தேதி சுக்கிரன் சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17ம் தேதி சூர்யன் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17ம் தேதி செவ்வாய் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
30ம் தேதி சுக்கிரன் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.பலன்:
சுயநலமில்லாமல் பொது நலத்துடன் வாழும் மீன ராசியினரே, இந்த மாதம் பல வழியிலும் பணவரத்து இருக்கும்.காரியத் தடைகள் நீங்கும். மற்றவர்களின் மீது இரக்கம் ஏற்பட்டு உதவிகள் செய்வீர்கள். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். பெரியோர்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். பெரும் புள்ளிகளின் அறிமுகம் கிடைக்கும்.தொழில், வியாபாரம் மூலம் லாபம் அதிகம் வரும். வாக்குவன்மையால் தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். கடன் வசதி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கும். அந்தஸ்து உயரும். நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும். குடும்ப சுகம் பூரணமாக கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே திருப்தியான நிலை காணப்படும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சுப காரியங்களில் குடும்பத்தினருடன் கலந்து கொள்வீர்கள். வாய்க்கு ருசியான இனிப்பு மற்றும் உணவு கிடைக்கும்.
பெண்கள் எடுத்த வேலையை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பெரியோர் மூலம் அனுகூலம் உண்டாகும். பணவரத்து திருப்தி தரும்.
அரசியல்வாதிகள் மக்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்தால் மட்டுமே மக்களின் ஆதரவைப் பெறுவீர்கள். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் தடைகள் நிலவும் என்பதாலும் எதையும் முழுமையாக முடிக்க முடியாத சூழ்நிலைகளும் உண்டாகும்.
கலைஞர்கள் கையிலிருக்கும் வாய்ப்புக்களை நழுவவிடாமல் பார்த்துக்கொள்வது நல்லது. தொழிலில் போட்டி பொறாமைகள் அதிகரிக்கும். வரவேண்டிய சம்பள பாக்கிகள் கிடைக்காமல் இழுபறி நிலையில் இருக்கும். பொருளாதாரநிலையிலும் தடைகள் உண்டாகும். தேவையற்ற இடமாற்றங்களால் உடல்நிலை பாதிப்படையும். சேமிப்புக் குறையும்.
மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் காணப்படும். கல்வியில் வெற்றி பெற தேவையான உதவிகள் கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள்.
பூரட்டாதி:
இந்த மாதம் ஊழியர்களுக்கு வரவேண்டியவை அனைத்தும் வந்துசேரும். கேட்ட இடத்திற்கு மாறுதல் கிட்டும். மகான்களின் சந்திப்பு ஏற்படும். தங்கள் பிள்ளைகளுக்கு வரன் தேடும் பெற்றோர்களுக்கு நல்ல சம்பந்தம் வந்துசேரும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் நல்ல வாய்ப்புகளைப் பெற்றுத்தரும். உங்களை ஒதுக்கியவர்களே உங்களைத் தேடிவருவார்கள்.உத்திரட்டாதி:
இந்த மாதம் தொழிலாளர்கள் ஓய்வில்லாமல் உழைக்க நேரும். அதற்கேற்றவாறு கூடுதல் வருமானமும் வரும். தொழிலதிபர்கள் நினைத்தபடி உற்பத்தி கூடும். புதிய ஒப்பந்தங்கள் வரும். லாபம் பெருகும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். உடல்நிலையில் இருந்துவந்த சிரமங்கள் முற்றிலும் நீங்கும்.ரேவதி:
இந்த மாதம் நீண்ட நாட்களாக தொல்லை கொடுத்துவந்த நோய் மருந்துக்கு கட்டுப்பட்டு விடும். அரசுப்பணியில் உள்ளவர்கள் உடன் பணிபுரிகின்றவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். உடன்பிறந்த சகோதரர்கள் ஒன்றுசேர்வார்கள். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வந்து சேரும்.அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி
பரிகாரம்: ருத்ர ஜெபம் செய்வதும் குருவுக்கு வியாழக்கிழமையில் கொண்ட கடலை நிவேதனம் செய்து வணங்குவதும் வருமானத்தை உயர்த்தும். மன அமைதி கிடைக்கும்.
சந்திராஷ்டம தினங்கள்: 12, 13
அதிர்ஷ்ட தினங்கள்: 26, 27-பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA
-
Kadagam Sakthi Online November Monthly Prediction
கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)
கிரகநிலை:
தனவாக்கு ஸ்தானத்தில் சுக்ரன் – தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது – சுக ஸ்தானத்தில் சூர், செவ்வாய், புதன் – களத்திர ஸ்தானத்தில் சனி – தொழில் ஸ்தானத்தில் குரு(வ) – பாக்கிய ஸ்தானத்தில் ராகு என கிரகநிலைகள் உள்ளது.
கிரக மாற்றங்கள்:
1ம் தேதி புதன் பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
2ம் தேதி சுக்கிரன் தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17ம் தேதி சூர்யன் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17ம் தேதி செவ்வாய் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
30ம் தேதி சுக்கிரன் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.பலன்:
குடும்ப பாசத்திற்கு கட்டுப்பட்டு நடக்கும் குணம் கொண்ட கடக ராசிக்காரர்களே, நீங்கள் புதுமை படைக்க எண்ணுபவர்கள். இந்த மாதம் எதிர்ப்புகள் விலகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் தீரும். பல வகையான யோகங்கள் ஏற்படும். உடல் நோய்கள் நீங்கி ஆரோக்கியம் உண்டாகும். மன குழப்பம் நீங்கும். ஆனால் பிறருடன் பழகும் போது நிதானம் தேவை.
தொழில், வியாபாரம் முன்னேற்றம் காணப்படும். தொழில் தொடர்பான காரியங்கள் வெற்றி பெறும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலிப்பது வேகம் பிடிக்கும். வியாபாரம் தொடர்பான பிரச்சனைகளில் சாதகமான நிலையே உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நன்மை தீமை பற்றிய கவலைபடாமல் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை திறம்பட செய்வார்கள். போட்டிகள் மறையும்.
குடும்பத்தில் திருமணம் தொடர்பான காரியங்கள் சாதகமாக பலன் தரும். குடும்பத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். உங்களது வார்த்தைக்கு மதிப்பு கூடும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன கசப்பு நீங்கும். பிள்ளைகள் உங்களது பேச்சுக்கு செவி சாய்ப்பார்கள். வாய்க்கு ருசியான உணவும் கிடைக்கும்.
பெண்களுக்கு: கடன் தொடர்பான பிரச்சனைகள் தீரும். பணவரத்து கூடும். மன குழப்பம் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும்.
அரசியல்வாதிகள் மக்களின் ஆதரவைப்பெற அவர்களின் தேவை அறிந்து செயல்படுவது உத்தமம். அமைச்சர்களின் கெடுபிடிகள் அதிகரிப்பதால் கட்சி மாறக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். உடனிருப்பவர்கள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். எந்தவொரு காரியத்திலும் வெற்றி கிட்டும்.
கலைத்துறையினர் எதிர்பார்க்கும் வாய்ப்புகள் தடையின்றிக் கிட்டும். வரவேண்டிய பணத்தொகைகளும் எதிர்பார்த்தபடி வந்து சேரும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகளும் அதன்மூலம் அனுகூலமான பலன்களும் உண்டாகும். சக கலைஞர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். கடன்கள் குறையும்.
மாணவர்களுக்கு: கல்வி தொடர்பான விஷயங்களில் சாதகமான நிலை காணப்படும். திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவீர்கள்.
புனர்பூசம்:
இந்த மாதம் குடும்பத்தில் ஒருவரை ஒருவர் அனுசரித்து பேசுவது நல்லது. எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. பேச்சு திறமையால் காரியங்களை எளிதாக செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். சின்ன விஷயங்கள் கூட மன நிறைவு தரும்படி நடக்கும்.பூசம்:
இந்த மாதம் எதையும் செய்து முடிக்கும் துணிச்சல் அதிகரிக்கும். எதிலும் வெற்றியும் சந்தோஷத்தையும் தரும். பணம் வருவது அதிகரிக்கும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகளில் தீர்வு கிடைக்கும்.ஆயில்யம்:
இந்த மாதம் தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் நன்மை உண்டாகும். தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும். துணிச்சலாக முயற்சிகள் மேற்கொண்டு வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். மேல் அதிகாரிகளால் நன்மை ஏற்படும்.அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்
பரிகாரம்: திங்கள் கிழமைகளில் சோமவார விரதம் அனுஷ்டிப்பது கஷ்டங்களை போக்கும்.
சந்திராஷ்டம தினங்கள்: 21, 22
அதிர்ஷ்ட தினங்கள்: 8, 9-பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA
-
Shimmam Sakthi Online November Monthly Prediction
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
கிரகநிலை:
ராசியில் சுக்கிரன் – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது – தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர், செவ்வாய், புதன் – ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி – பாக்கிய ஸ்தானத்தில் குரு(வ) – அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் ராகு என கிரகநிலைகள் உள்ளது.
கிரக மாற்றங்கள்:
1ம் தேதி புதன் பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
2ம் தேதி சுக்கிரன் தனவாக்கு ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17ம் தேதி சூர்யன் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17ம் தேதி செவ்வாய் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
30ம் தேதி சுக்கிரன் தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.பலன்:
எந்த சூழ்நிலையிலும் தன்மானத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் சிம்ம ராசியினரே, இந்த மாதம் சின்ன விஷயத்துக் கூட கோபம் வரலாம் நிதானமாக இருப்பது நன்மை தரும். பணவரத்து உண்டாகும். வேற்று மொழி பேசும் நபரால் நன்மை உண்டாகும். புத்தி சாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள். வீண் அலைச்சல் ஏற்படும். நீங்கள் நினைப்பது படி மற்றவர்கள் நடந்து கொள்ளாததால் டென்ஷன் ஏற்படலாம்.
தொழில், வியாபாரம் தொடர்பான பயணங்கள் அதனால் அலைச்சல் ஏற்படலாம். வியாபார விரிவாக்கம் தொடர்பான பணிகளில் இடையூறுகள் ஏற்படலாம். பழைய பாக்கிகள் வசூலில் தாமதமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை சுமை அதிகரிப்பதுடன் அலைச்சலும் அதனால் சோர்வும் உண்டாகும்.
குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் வருமானம் வரும். சொன்ன சொல்லை எப்பாடு பட்டாவது காப்பாற்றுவீர்கள். ஒரு சில பணி காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவது மூலமும் விருந்தினர் வருகையாலும் செலவு உண்டாகும்.
பெண்களுக்கு: திடீர் கோபங்கள் உண்டாகலாம். நிதானமாக இருப்பது நல்லது. புத்திசாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள்.
அரசியல்வாதிகள் போட்டி பொறாமைகளை எதிர்கொண்டாலும் மக்களின் ஆதரவைப் பெறமுடியும். கட்சிகளில் உட்பூசல்கள் ஏற்பட்டாலும் உங்களின் வார்த்தைகளுக்கு மதிப்பும் மரியாதையும் உயரும். நினைத்த காரியங்களை நிறைவேற்றிக்கொள்ள முடியும். எதிலும் சற்றுச் சிந்தித்துச் செயல்படுவது நல்லது.
கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் சற்று தாமதமாகக் கிடைத்தாலும் நல்ல வாய்ப்புகளாக அமையும். வெளியூர், வெளிநாட்டுப் பயணங்கள் உற்சாகத்தை ஏற்படுத்தினாலும் உடல்நலக் குறைவுகளையும் உண்டாக்கும்.
மாணவர்களுக்கு: திறமையாக செயல்பட்டு கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். கூடுதல் நேரம் படிக்க வேண்டி இருக்கும்.
மகம்:
இந்த மாதம் உறவினர்கள் வகையில் தவிர்க்கமுடியாத சுபச் செலவுகளை சுமக்க நேரும். முக்கியமான பயணமும், முக்கிய பிரமுகர்களின் சந்திப்பும் உண்டாகும். அது உங்கள் எதிர்காலத்துக்கு நல்ல அஸ்திவாரமாக இருக்கும். சிலர் கூட்டு முயற்சிகளில் லாபம் தேடலாம். சிலர் குடும்பத்தினரோடு கூட்டுச் சேர்ந்து தொழில் செய்து லாபம் பார்க்கலாம்.பூரம்:
இந்த மாதம் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தொழில், வேலை, உத்தியோகம் ஆகியவற்றில் வெற்றி அடையலாம். சேமிப்பும் அடையலாம். உங்கள் உழைப்பும் நம்பிக்கையும் உங்களுக்கு முழுமையான பலனையும் திருப்தியையும் தரும். எதிர்ப்பும் இடையூறும் ஒருபுறம் இருந்தாலும், உங்களின் தன்னம்பிக்கையாலும் தைரியத்தாலும் அவற்றைப் போராடி எதிர்த்துநின்று வெற்றிகொள்வீர்கள்.உத்திரம்:
இந்த மாதம் கடமைகளைக் காப்பாற்றுவீர்கள். பொருளாதாரத்தில் பிரச்சினை இருக்காது என்றாலும், வைத்தியச் செலவும் அல்லது வீண்விரயச் செலவும் தவிர்க்க முடியாததாக இருக்கும். அதனால் சிலசமயம் விரக்தி ஏற்படலாம். ஜாதக தசாபுக்தியை அனுசரித்து தேவையான பரிகாரங்களைச் செய்து கொள்வதால், மனதில் ஆறுதலும் நம்பிக்கையும் உண்டாகும். தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் பிரச்சனை இருக்காது.அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் சிவன் வழிபாடு செய்வதும் செம்பருத்தி, அரளிமலர்களால் சூரியனை அர்ச்சனை செய்வதும் வெற்றிக்கு வழி வகுக்கும். எதிர்ப்புகள் நீங்கும்.
சந்திராஷ்டம தினங்கள்: 23, 24
அதிர்ஷ்ட தினங்கள்: 10, 11, 12-பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA
-
Kanni Sakthi Online November Monthly Prediction
கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)
கிரகநிலை:
ராசியில் கேது – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர், செவ்வாய், புதன் – பஞ்சம ஸ்தானத்தில் சனி – சப்தம ஸ்தானத்தில் ராகு – அஷ்டம ஸ்தானத்தில் குரு(வ) – விரைய ஸ்தானத்தில் சுக்ரன் என கிரகநிலைகள் உள்ளது.
கிரக மாற்றங்கள்:
1ம் தேதி புதன் பகவான் தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
2ம் தேதி சுக்கிரன் ராசி ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17ம் தேதி சூர்யன் தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17ம் தேதி செவ்வாய் தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
30ம் தேதி சுக்கிரன் தனவாக்கு ஸ்தானத்திற்கு மாறுகிறார்.பலன்:
உழைப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வாழ்வில் வெற்றி பெறும் கன்னி ராசிக்காரர்ளே, இந்த மாதம் தெளிவான சிந்தனை தோன்றும். எந்த காரியத்தையும் செய்யும் முன் ஆலோசனை செய்து அதில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். சாமர்த்தியமான உங்களது செயல் கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள். முக்கிய நபர்கள், அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் நட்பு கிடைக்கும். அதனால் கவுரவம் அதிகரிக்கும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தரும்.தொழில், வியாபாரம் தொடர்பாக புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அதனால் நன்மை உண்டாகும். உங்கள் கீழ் பணியாற்றுபவர்கள் சிறப்பாக பணிபுரிந்து உங்கள் நிலையை உயரச் செய்வார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்பு கிடைக்கப்பெறுவார்கள். சக பணியாளர்கள் மூலம் நன்மை உண்டாகும். அலுவலகம் மூலம் வாகனம் கிடைக்கலாம். என்றோ செய்த ஒரு வேலைக்கு இப்போது பாராட்டு கிடைக்கலாம்.
குடும்பத்தில் உள்ளவர்களால் வருமானம் கிடைக்கலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் குடும்ப முன்னேற்றமடைய உதவும். பிள்ளைகளின் நலனின் அக்கறை காட்டுவீர்கள்.திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும்.
பெண்களுக்கு அடுத்தவர் ஆச்சரியபடும் வகையில் சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவார்கள். புதிய நட்பு மூலம் மகிழ்ச்சி கிடைக்கும்.
அரசியல்வாதிகளின் பெயர், புகழ் அதிகரிக்கக்கூடிய காலமாகும். எடுக்கும் காரியங்களில் வெற்றி கிட்டும். மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். பதவிக்கு இருந்த இடையூறுகள் விலகி எதிர்பார்க்கும் உயர்வுகளை அடைவீர்கள். உங்களின் வார்த்தைகளுக்கு மதிப்பும், மரியாதையும் உயரும்.
கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். இதுவரை வராமல் தடைப்பட்ட பணத்தொகை கைக்கு வந்துசேரும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகளும் அதன்மூலம் மேன்மைகளும் உண்டாகும். உடனிருக்கும் சக கலைஞர்களின் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியளிக்கும்.
மாணவர்களுக்கு: படிப்பில் முன்னேற்றம் காணப்படும். விளையாட்டு மற்றும் பொழுது போக்குகளில் ஆர்வம் உண்டாகும்.
உத்திரம்:
இந்த மாதம் கடந்தகாலத்தில் உங்களை விட்டுச் சென்றவர்கள் விரும்பிவந்து சேரும் நாள். உறவு பலப்படும். தொலைபேசித் தொடர்பு மூலமாக சிலர் புதிய தொழில் ஒப்பந்தங்களை ஏற்படுத்தி லாபம் தேடும் முயற்சியில் ஈடுபடலாம். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. சுபநிகழ்ச்சிகள் இடம்பெறும்.ஹஸ்தம்:
இந்த மாதம் சில அத்தியாவசிய தேவைகளுக்கு செலவு செய்ய பணப்பற்றாக் குறையை சந்திக்கலாம். சனி சஞ்சாரத்தால் ஒரு பிரச்சினை முடிந்ததும் இன்னொரு பிரச்சினை உருவாகலாம். ஆனாலும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். குருவின் பார்வையால் உங்கள் பிரச்சினைகள் எவ்வளவு இருந்தாலும் தோல்வியும் தொய்வும் இல்லாமல் சமாளித்து ஜெயிக்கலாம்.சித்திரை:
இந்த மாதம் எடுத்த காரியங்களில் உடனே வெற்றி ஏற்படும். சில காரியங்களில் தாமதமாக வெற்றி ஏற்படும். உங்கள் விடாமுயற்சிதான் உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். பழகும் நண்பர்களை எடைபோட முடியாது. வெளுத்தது எல்லாம் பால் என்று நம்பும் உங்கள் பெருந்தன்மையை கொஞ்சம் ஒதுக்கி வைக்கவும்.அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்
பரிகாரம்: நாலாயிர திவ்ய பிரபந்தங்களைப் பாராயணம் செய்து வர எல்லா நன்மைகளும் உண்டாகும்.
சந்திராஷ்டம தினங்கள்: 25, 26
அதிர்ஷ்ட தினங்கள்: 13, 14-பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA
-
Thulam Sakthi Online November Monthly Prediction
துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)
கிரகநிலை:
ராசியில் சூர், செவ்வாய், புதன் – சுக ஸ்தானத்தில் சனி – ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு – களத்திர ஸ்தானத்தில் குரு(வ) – லாப ஸ்தானத்தில் சுக்ரன் – அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரகநிலைகள் உள்ளது.கிரக மாற்றங்கள்:
1ம் தேதி புதன் பகவான் தனவாக்கு ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
2ம் தேதி சுக்கிரன் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17ம் தேதி சூர்யன் தனவாக்கு ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17ம் தேதி செவ்வாய் தனவாக்கு ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
30ம் தேதி சுக்கிரன் ராசி ஸ்தானத்திற்கு மாறுகிறார்.பலன்:
அனைவரையும் எளிதில் வசப்படுத்தும் வித்தை அறிந்த துலா ராசியினரே, இந்த மாதம் எல்லா விதத்திலும் நன்மை உண்டாகும். எதையும் துணிச்சலுடன் எதிர் கொள்வீர்கள். தடைபட்டு வந்த காரியங்களில் தடை நீங்கும். சாமர்த்தியமான பேச்சால் ஆதாயம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். உங்கள் செயல்களுக்கு தடைகளை ஏற்படுத்தியவர்கள் தாமாகவே விலகி செல்வார்கள்.தொழில், வியாபாரம் போட்டிகள் நீங்கி நன்கு நடக்கும். உங்களது வியாபாரத்திற்கு பக்கபலமாக ஒருவரது உதவி கிடைக்கும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாதுரியமான பேச்சால் மேல் அதிகாரிகளின் கட்டளைகளை நிறைவேற்றி பாராட்டு பெறுவார்கள். நீண்ட நாட்களாக நின்ற பதவி உயர்வு உங்களை தேடி வரலாம்.
குடும்பத்தில் வாழ்க்கை துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார். பிள்ளைகளின் நலனுக்காக பாடுபடுவீர்கள். விருந்தினர் வருகை இருக்கும். தடைபட்டு வந்த திருமண காரியங்கள் சாதகமாக நடக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் வீண் விவாதங்கள் தோன்றும். கவனம் தேவை.
பெண்களுக்கு:சாதுரியமான பேச்சால் ஆதாயம் உண்டாகும். பணவரத்து கூடும். காரிய தடைகள் நீங்கும்.
அரசியலில் மற்றும் பொதுப்பணிகளில் ஈடுபட்டிருப்போருக்கு தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள முடியாத சூழ்நிலைகள் உண்டாகும். முடிந்தவரை மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவது நல்லது. எடுக்கும் காரியங்களில் தடைகளுக்குப் பின்பே வெற்றி பெறமுடியும். உடனிருப்பவர்களை அனுசரித்துச்செல்வது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. பொருளாதாரநிலை ஏற்ற இறக்கமாக இருக்கும்.
கலைத்துறையினர் கிடைத்த வாய்ப்புக்களை நழுவவிடாமல் பாதுகாத்துக்கொள்வது உத்தமம். புதிய வாய்ப்புகள் கிடைப்பதில் சிக்கல்கள் உண்டாகும். நெருக்கடியான சூழ்நிலைகளால் உடல்நிலை பாதிப்புகள் ஏற்பட்டு மனஅமைதி குறையும். உடன் இருப்பவர்களாலே வீண் பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும்.
மாணவர்களுக்கு: ஆசிரியர்கள், சக மாணவர்கள் உதவிகள் கிடைக்கும். பாடங்களை நன்கு படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற உதவும்.
சித்திரை:
இந்த மாதம் சில காரியங்கள் எதிர்மறையாக நடக்கும். நீங்கள் இதுவரை எதிர்பார்த்த காரியங்கள் எல்லாம் இழுபறியாக நிறைவேறாமல் இருந்தாலும், ஏதோவொரு வகையில் எப்படியும் நடந்துவிடும் என்று நம்பிக்கை இருக்கும்.ஸ்வாதி:
இந்த மாதம் பழகும் மனிதர்களின் வார்த்தைகளை நம்புவதா வேண்டாமா என்று சமயத்தில் சந்தேகம் ஏற்படலாம். சந்திரன் சஞ்சாரத்தால் வாழ்க்கையில் பிடிப்பும் ஆர்வமும் இல்லாமல் சலிப்பை உண்டாக்கினாலும், நக்ஷத்ராநாதன் ராகுவின் பலத்தால் பாதிப்பை உண்டாக்காமல் காப்பாற்றி வருவார். இனிப்பும் கசப்பும் மாறிமாறி இன்றைய பலன்கள் இருக்கும்.விசாகம்:
இந்த மாதம் குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சனைகள் மறையும். சிலருக்கு திருமணம் மற்றும் சுபநிகழ்ச்சிகள் நடப்பதில் தாமதம் ஏற்படும். யாருக்கும் வாக்கு கொடுக்கும் முன் ஆலோசனைகள் செய்து கொள்ளவும்.அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி
பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் ராஜராஜேஸ்வரியை அர்ச்சனை செய்து வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். செல்வம் சேரும். செல்வாக்கு உயரும்.
சந்திராஷ்டம தினங்கள்: 1, 27, 28
அதிர்ஷ்ட தினங்கள்: 15, 16, 17-பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA