Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • November 06 2023 indrayanaal

    நவம்பர் 6 – திருநெல்வேலி காந்திமதியம்மன் தேர்
    சோபகிருது வருடம் – ஐப்பசி 20
    06-நவ-2023 திங்கள்
    திருநெல்வேலி காந்திமதியம்மன் தேர்
    கரிநாள்
    நல்ல நேரம் : 6.00 – 7.30
    ராகு : 7.30 – 9.00
    குளிகை : 1.30 – 3.00
    எமகண்டம் : 10.30 – 12.00
    திதி : நவமி
    திதி நேரம் : நவமி முழுவதும்0.00
    நட்சத்திரம் : ஆயில்யம் ம 3.35
    யோகம் : சித்த-மரணயோகம்
    சந்திராஷ்டமம் : பூராடம்,உத்திராடம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

     

  • gayathri mandiram

    காயத்ரி மந்திரம் எல்லா மந்திரங்களிலும் மிகச் சிறந்த மந்திரம் மற்றும்  பெரியது ஆகும்.  இது அனைத்து வேத மந்திரங்களின் சக்தி மற்றும் ஆற்றலைத் தன்னுள்  கொண்டுள்ளது. இது மற்ற எல்லா மந்திரங்களுக்கும் சக்தியை அளிக்கிறது.

    அன்னை காயத்ரி

    காயத்ரியை வேதங்களின் தாய் என்றும் அனைத்து பாவங்களையும் அழிப்பவர் என்றும் வேதங்கள் அறிவிக்கின்றன. அவள் அன்னபூரணியாக விளங்குபவள். தெய்வீகத் தாயாகப் போற்றப்படுபவள். அனைத்து உயிர்களுக்கும் உயிரூட்டும் தாயாக அன்னை காயத்ரி விளங்குகிறாள். பூமியை தூய்மை படுத்துவதில் காயத்ரி மந்திரத்தைப் போல சுத்திகரிப்பு எதுவுமில்லை. காயத்ரி மந்திரத்தை விட பெரிய செல்வம் எதுவும் இல்லை. ஒரு மனிதன் தான் விரும்பியதை அடைய காயத்ரி மந்திரம் பெரிதும் உதவுகின்றது.

    காயத்ரி மந்திரம் என்றால் என்ன?

    மந்திரத்திலேயே காயத்ரி மந்திரம் சக்தி வாய்ந்த தலையாய மந்த்ரம். காயத்ரி மந்திரம் என்பது 24 எழுத்துக்களைக் கொண்ட ஒரு பிரபஞ்ச  தாளமாகும். அவை ஒவ்வொன்றும் எட்டு எழுத்துக்களின் மும்மடங்காக அமைக்கப்பட்டுள்ளன. பிரம்ம வடிவான காயத்ரி மந்திரம்  அனைத்து மந்திரங்களிலும்  மிகப்பெரியது.

    இது அனைத்து தீமைகளிலிருந்தும் ஜீவன்களை  பாதுகாக்கும் ஆன்மீக கவசமாக செயல்படுகிறது. இது மிக உயர்ந்த ஆன்மீக வெளிச்சத்தின் பிரகாசமான ஒளியாக இருந்து மனிதர்களுக்கு ஆசிகளை வழங்குகின்றது.

    உடலுக்கு தூய்மை எப்படி தேவையோ அது போல உள்ளத்துக்கு தூய்மை தேவை. அந்த உள்ளத் தூய்மையை  வழங்குவதி இந்த காயத்ரி மந்திரம் ஆகும்.

    காயத்ரி ஜெபம்:

    காயத்ரி ஜெபம் என்பது அனைத்து மாயைகளையும் அழிக்கும், பிராணனை உற்சாகப்படுத்தும், நீண்ட ஆயுள், ஆரோக்கியம், புத்திசாலித்தனம் மற்றும் ஞானத்தை அளிக்கும் தியானத்தின் மிக உயர்ந்த வடிவமாகும்.

    இது ஞானம், செழிப்பு, தூய்மை மற்றும் வீடுபேற்றை  வழங்கும்  ஒளியைப் பற்றிய ஒரு தியானமாகும்.காயத்ரி மந்திரத்தை 108 முறை உச்சரிப்பவர்கள் மந்திரத்தின் மாய சக்தி மூலம் வாழ்வில் பிரகாசத்தை அடைவார்கள். இது எல்லா அச்சங்களையும் நீக்குகிறது மற்றும் அனைத்து நோய்களுக்கும் சிறந்த நிவாரணியாக விளங்குகின்றது.

    காயத்ரி மந்திர ஜெபத்தின் பலன்:
    காயத்ரி மந்திரம் வாழ்வில் ஏற்படும் அனைத்து தடைகளையும் சமாளிக்க வலிமையை அளிக்கின்றது. வாழ்வில் வளமை மற்றும் செழுமை அளிக்கின்றது. இந்த மந்திரம் அனைத்து ஆபத்துகளிலிருந்தும் பாதுகாக்கிறது மற்றும் எட்டு வகையான செல்வங்களை அல்லது அஷ்ட ஐஸ்வர்யத்தை வழங்குகிறது.
    காயத்ரி மந்திரம்

    "ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் ஸவிதுர் வரேண்யம்
    பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன ப்ரசோதயாத்."

    காயத்திரி மந்திரத்தின் விளக்கம்: பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்க காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப்பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும். ஒவ்வொரு கடவுளரை தியானிக்க தனித்தனி காயத்திரி மந்திரங்கள் உள்ளது.காயத்ரி மந்திரம் பற்றி மேலும் அறிய .

  • Sabari nadai thirappu

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடப்பு ஆண்டு மண்டல மகரவிளக்கு சீசனை முன்னிட்டு கோவில் நிர்வாகம் சார்பில் அட்டவணை வௌயிடப்பட்டு உள்ளது. அதன்படி வருகிற 16-ந் தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். 17-ந் தேதி முதல் டிசம்பர் 27-ந் தேதி வரை 41 நாட்கள் மண்டல பூஜை நடைபெறும். 27-ந் தேதி இரவு நடை அடைக்கப்படும்.

    மீண்டும் மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் மாதம் 30-ந் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். 31-ந் தேதி முதல் அடுத்த ஆண்டு (2024) ஜனவரி 15-ந் தேதி வரை மகரவிளக்கு பூஜைகள் நடைபெறும். அன்று மாலை 6.30 மணிக்கு மகர ஜோதி தரிசனம் நடைபெறும்.

    தொடர்ந்து 19-ந் தேதி வரை பூஜைகள் நடைபெறும். 20-ந் தேதி காலையில் பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதி தரிசனத்திற்கு பின்னர் கோவில் நடை அடைக்கப்படும். அன்றுடன் நடப்பு மண்டல மகரவிளக்கு சீசன் நிறைவுபெறும்.

  • November 05 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  ஊக்கம்
    ரிஷபம்         –    சிந்தனை
    மிதுனம்     –   ஆர்வம்
    கடகம்         –  நிறைவு
    சிம்மம்         –   மறதி   
    கன்னி         –    மேன்மை  
    துலாம்         –     யோகம்
    விருச்சிகம்     – சலனம்
    தனுசு         –     ஆதாயம்
    மகரம்         –    மகிழ்ச்சி
    கும்பம்         –     தேர்ச்சி
    மீனம்         –      பரிசு
    சந்திராஷ்டமம்    –   மூலம், பூராடம்

  • November 05 2023 Indrayanaal

    நவம்பர் 5 – அஷ்டமி
    சோபகிருது வருடம் – ஐப்பசி 19
    05-நவ-2023 ஞாயிறு
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 4.30 – 6.00
    குளிகை : 3.00 – 4.30
    எமகண்டம் : 12.00 – 1.30
    திதி : அஷ்டமி
    திதி நேரம் : அஷ்டமி அ.கா 5.5
    நட்சத்திரம் : பூசம் ம 1.7
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : மூலம்,பூராடம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

  • November 04 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  மேன்மை
    ரிஷபம்         –    நலம்  
    மிதுனம்     –   சினம்
    கடகம்         –  வரவு  
    சிம்மம்         –   இரக்கம்   
    கன்னி         –    நட்பு
    துலாம்         –     எதிர்ப்பு  
    விருச்சிகம்     – லாபம்
    தனுசு         –     சிரமம்
    மகரம்         –    அசதி  
    கும்பம்         –     புகழ்
    மீனம்         –      பெருமை
    சந்திராஷ்டமம்    –   கேட்டை, மூலம்

  • Anjaneyar gayathri mandiram

    சிரம் மேல் கரம் குவித்து மனம் உருகி நீர் சொரிந்து ஆனந்தத்தில் மூழ்கி இருக்கும் ஆஞ்சநேயா! உன்னைப் பணிகிறோம்.

    அசாத்ய சாதக ஸ்வாமிந்

    அசாத்யம் தவகிம்வத

    ராம தூத க்ருபாசிந்தோ

    மத் கார்யம் சாதய ப்ரபோ

    ஆஞ்சநேயர் காயத்திரி மந்திரம்….

    ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே,

    வாயுபுத்ராய தீமஹி

    தந்தோ ஹனுமன் ப்ரசோதயாத்

    அதர்மத்தை அயோத்தி சென்று ஸ்ரீராமர் அகிலம் புகழ ஆட்சி செய்தான். அவனை சரண் அடைந்தோருக்கு அவன் அருள் என்றும் உண்டு. எங்கே எங்கே ரகுநாத கீர்த்தனமோ அங்கே அங்கே. சிரம் மேல் கரம் குவித்து மனம் உருகி நீர் சொரிந்து ஆனந்தத்தில் மூழ்கி இருக்கும் ஆஞ்சநேயா! உன்னைப் பணிகிறோம்.

  • Mahalakshmi vazhipada etra porul

    மஹாலட்சுமியை வணங்கி வழிபடுவதற்கு ஏற்ற பொருட்களாக இருப்பது தங்க தாமரை பூ, சந்தனம், குங்குமம், வெற்றிலை, உலர் பழங்கள், பழங்கள் மற்றும் வெல்லம் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவு பொருட்கள், அரிசி மற்றும் தேங்காய்.

    வியாழக்கிழமைகளில் மற்றும் முழு நிலவு நாளான பெளர்ணமியில் இலட்சுமி பூஜை செய்வது மிகவும் உகந்ததாகும். இலட்சுமியின் திருவுருவத்தை வடிக்கிற போது, தங்க காசுகள் அள்ளி வழங்குவதை போலவும், அவருக்கு பின் யானைகள் இருப்பது போலவும் உருவகப்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம் அவரின் ஐஸ்வர்யத்தை வழங்கும் பலத்தை உலக மக்களுக்கு புலப்படுத்துவதாக உள்ளது.

    இலட்சுமி தேவி வழங்க கூடிய ஐஸ்வர்யம் என்பது வெறும் பணம் செல்வத்தை மட்டும் குறிப்பதல்ல. இலட்சுமி தேவியின் அருள் இருப்பவர்களுக்கு புகழ், பலம், வெற்றி, தங்கம், நவதானியங்கள், நல்ல புத்திரர்கள், மகிழ்ச்சி, ஆனந்தம், புத்தி, அழகு, உயர்ந்த இலட்சியம், உயர் தவம், அறம், நல்ல பண்புகள், ஆரோக்கியம், ஆயுள் ஆகிய பதினாறு விஷயங்களும் அவர்களுக்கு கிடைக்கும்.மேலும் இலட்சுமி தேவி பல ரூபங்களில் அருள் பாலிக்கிறார் உதாரணமாக ஶ்ரீதேவி, பூதேவி மற்றும் நீலா தேவி .

    மஹாலட்சுமிய அஷ்ட இலட்சுமி என 8 வகையாக வழிபடுகின்றனர். ஒரு மனிதனுக்கு அஷ் லட்சுமி கடாச்சம் அவசியம் தேவை வாழ்வில் உயர்வதர்க்கு. . இந்த பூவை காலையில் தினசரி 8 மகாலட்சுமி (அஷ்டலட்சுமி) பெயரை சொல்லி மகாலட்சுமி படத்தின் முன் அர்ச்சனை செய்ய வேண்டும். ஒரு முக்கிய குறிப்பு தங்கத்திலும் தாமரையிலும் கட்டாயம் வாசம் செய்வால். எனவே தான் இந்த தங்க பூவால் அர்சனை செய்வது மிக மிக விஷேஷமானது.

  • November 04 2023 Saturday

    நவம்பர் 4 – சனிக்கிழமை
    சோபகிருது வருடம் – ஐப்பசி 18
    04-நவ-2023 சனி
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 9.00 – 10.30
    குளிகை : 6.00 – 7.30
    எமகண்டம் : 1.30 – 3.00
    திதி : சப்தமி
    திதி நேரம் : சப்தமி ந.இ 3.13
    நட்சத்திரம் : புனர்பூசம் கா 10.56
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : கேட்டை,மூலம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

     

  • Lakshmi Narashimmar vazhipadu

    கடன் தொல்லையில் இருந்து விடுபட எதிரிகளின் பிரச்சனையில் இருந்து வெளியேற ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் 108 போற்றியை தினமும் கூறி வந்தால் அனைத்தும் தொல்லைகளும் பறந்து போய் விடும். மேலும் இது தைரியத்தை அளிப்பதோடு பல காலமாக தடை பட்ட காரியம் கை கூட வழி வகுக்கும்.

    1. ஓம் திருக்கடிகைத் தேவா போற்றி
    2. ஓம் திருமாமகள் கேள்வா போற்றி
    3. ஓம் யோக நரசிங்கா போற்றி
    4. ஓம் ஆழியங்கையா போற்றி
    5. ஓம் அக்காரக் கனியே போற்றி
    6. ஓம் அனுமனுக்கு ஆழி அளித்தாய் போற்றி
    7. ஓம் எக்காலத்தும் எந்தாய் போற்றி
    8. ஓம் எழில் தோள் எம்மிராமா போற்றி
    9. ஓம் சங்கரப்ரியனே போற்றி
    10. ஓம் சார்ங்க விற்கையா போற்றி

    11. ஓம் உலகமுண்ட வாயா போற்றி
    12. ஓம் உவப்பில் கீர்த்தியம்மா போற்றி
    13. ஓம் அடியவர்க்கருள்வாய் போற்றி
    14. ஓம் அனைத்துலக முடையாய் போற்றி
    15. ஓம் தாமரைக் கண்ணா போற்றி
    16. ஓம் காமனைப் பயந்தாய் போற்றி
    17. ஓம் ஊழி முதல்வா போற்றி
    18. ஓம் ஒளி மணிவண்ணனே போற்றி
    19. ஓம் ராவணாந்தகனே போற்றி
    20. ஓம் இலங்கை எரித்த பிரான் போற்றி

    21. ஓம் பெற்ற மாளியே போற்றி
    22. ஓம் பேரில் மணாளா போற்றி
    23. ஓம் செல்வ நாரணா போற்றி
    24. ஓம் திருக்குறளா போற்றி
    25. ஓம் இளங்குமார போற்றி
    26. ஓம் விளக்கொளியே போற்றி
    27. ஓம் சிந்தனைக்கினியாய் போற்றி
    28. ஓம் வந்தெனை ஆண்டாய் போற்றி
    29. ஓம் எங்கள் பெருமான் போற்றி
    30. ஓம் இமையோர் தலைவா போற்றி

    31. ஓம் சங்கு சக்கரத்தாய் போற்றி
    32. ஓம் மங்கை மன்னன் மனத்தாய் போற்றி
    33. ஓம் வேதியர் வாழ்வே போற்றி
    34. ஓம் வேங்கடத்துறைவா போற்றி
    35. ஓம் நந்தா விளக்கே போற்றி
    36. ஓம் நால் தோளமுதே போற்றி
    37. ஓம் ஆயர்தம் கொழுந்தே போற்றி
    38. ஓம் ஆழ்வார்களுயிரே போற்றி
    39. ஓம் நாமம் ஆயிரம் உடையாய் போற்றி
    40. ஓம் வாமதேவனுக்கு அருளினாய் போற்றி

    41. ஓம் மூவா முதல்வா போற்றி
    42. ஓம் தேவாதி தேவா போற்றி
    43. ஓம் எட்டெழுத்திறைவா போற்றி
    44. ஓம் எழில்ஞானச் சுடரே போற்றி
    45. ஓம் வரவரமுனி வாழ்வே போற்றி
    46. ஓம் வட திருவரங்கா போற்றி
    47. ஓம் ஏனம்முன் ஆனாய் போற்றி
    48. ஓம் தானவன் ஆகம் கீண்டாய் போற்றி
    49. ஓம் கஞ்சனைக் கடிந்தாய் போற்றி
    50. ஓம் நஞ்சரவில் துயின்றாய் போற்றி

    51. ஓம் மாலே போற்றி
    52. ஓம் மாயப் பெருமானே போற்றி
    53. ஓம் ஆலிலைத் துயின்றாய் போற்றி
    54. ஓம் அருள்மாரி புகழே போற்றி
    55. ஓம் விண் மீதிருப்பாய் போற்றி
    56. ஓம் மண்மீது உழல்வோய் போற்றி
    57. ஓம் மலைமேல் நிற்பாய் போற்றி
    58. ஓம் மாகடல் சேர்ப்பாய் போற்றி
    59. ஓம் முந்நீர் வண்ணா போற்றி
    60. ஓம் முழுதும் கரந்துறைவாய் போற்றி

    61. ஓம் கொற்றப் புள்ளுடையாய் போற்றி
    62. ஓம் முற்ற இம் மண்ணளந்தாய் போற்றி
    63. ஓம் அனைத்துலக முடையாய் போற்றி
    64. ஓம் அரவிந்த லோசன போற்றி
    65. ஓம் மந்திரப் பொருளே போற்றி
    66. ஓம் இந்திரனுக்கருள்வாய் போற்றி
    67. ஓம் குரு பரம்பரை முதலே போற்றி
    68. ஓம் விகனைசர் தொழும் தேவா போற்றி
    69. ஓம் பின்னை மணாளா போற்றி
    70. ஓம் என்னையாளுடையாய் போற்றி

    71. ஓம் நலம்தரும் சொல்லே போற்றி
    72. ஓம் நாரண நம்பி போற்றி
    73. ஓம் பிரகலாதப்ரியனே போற்றி
    74. ஓம் பிறவிப் பிணியறுப்பாய் போற்றி
    75. ஓம் பேயார் கண்ட திருவே போற்றி
    76. ஓம் ஏழு மாமுனிவர்க்கு அருளே போற்றி
    77. ஓம் ஏமகூட விமானத்து இறைவா போற்றி
    78. ஓம் ஆனையின் நெஞ்சிடர் தீர்த்தாய் போற்றி
    79. ஓம் கல்மாரி காத்தாய் போற்றி
    80. ஓம் கச்சி யூரகத்தாய் போற்றி
    81. ஓம் வில்லியறுத்த தேவா போற்றி
    82. ஓம் வீடணனுக்கருளினாய் போற்றி
    83. ஓம் இனியாய் போற்றி
    84. ஓம் இனிய பெயரினாய் போற்றி
    85. ஓம் புனலரங்கா போற்றி
    86. ஓம் அனலுருவே போற்றி
    87. ஓம் புண்ணியா போற்றி
    88. ஓம் புராணா போற்றி
    89. ஓம் கோவிந்தா போற்றி
    90. ஓம் கோளரியே போற்றி

    91. ஓம் சிந்தாமணி போற்றி
    92. ஓம் சிரீதரா போற்றி
    93. ஓம் மருந்தே போற்றி
    94. ஓம் மாமணி வண்ணா போற்றி
    95. ஓம் பொன் மலையாய் போற்றி
    96. ஓம் பொன்வடிவே போற்றி
    97. ஓம் பூந்துழாய் முடியாய் போற்றி
    98. ஓம் பாண்டவர்க் கன்பா போற்றி
    99. ஓம் குடந்தைக் கிடந்தாய் போற்றி
    100. ஓம் தயரதன் வாழ்வே போற்றி

    101. ஓம் மதிகோள் விடுத்தாய் போற்றி
    102. ஓம் மறையாய் விரிந்த விளக்கே போற்றி
    103. ஓம் வள்ளலே போற்றி
    104. ஓம் வரமருள்வாய் போற்றி
    105. ஓம் சுதாவல்லி நாதனே போற்றி
    106. ஓம் சுந்தரத் தோளுடையாய் போற்றி
    107. ஓம் பத்தராவியே போற்றி
    108. ஓம் பக்தோசிதனே போற்றி.