Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • December 26 2023 Pournami

    டிசம்பர் 26 – பவுர்ணமி
    சோபகிருது வருடம் – மார்கழி 10
    பவுர்ணமி
    26-டிச-2023 செவ்வாய்
    சிதம்பரம் நடராஜர்,
    சங்கரன்கோவில் சிவன் தேர்
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 3.00 – 4.30
    குளிகை : 12.00 – 1.30
    எமகண்டம் : 9.00 – 10.30
    திதி : பவுர்ணமி
    திதி நேரம் : பவுர்ணமி கா 6.7
    நட்சத்திரம் : மிருகசீரிசீ டம் இ 10.57
    யோகம் : சித்த-மரணயோகம்
    சந்திராஷ்டமம் : சுவாதி,விசாகம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

  • Alangudi Iyappa swamy aradhanai

    ஆலங்குடி ஐயப்பன் கோயிலில் மார்கழி மாத ஐய்யப்ப சுவாமி உற்சவர் மூர்த்தி வீதியுலா காட்சிகள் மற்றும் தொட்டில் ஆராதனை நிகழ்வுகள் மிக விமர்சியாக நடைபெற்றது.

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் அமைந்துள்ள ஐயப்பன் கோயிலில் கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் கூட்டு வழிபாட்டு பிரார்த்தனைகள் மண்டல பூஜைகள் நடைபெறுவது ஆண்டுதோறும் வழக்கமாக உள்ளது.

    அதேபோல் மார்கழி  1-ம் தேதி  இக்கோயிலில் கொடியேற்ற நிகழ்வு மிகவும் விமர்சியாக நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து இக்கோயிலில் உற்சவர் மூர்த்தி வீதி உலா காட்சிகளும் தொட்டிலில் சுவாமியை வைத்து சிறப்பு ஆராதனை நிகழ்வுகளும் கூட்டு அபிஷேக பூஜைகளும் வழிபாட்டு பிரார்த்தனைகளும் மிகவும் விமர்சியாக நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு இக்கோயிலில் அமைந்துள்ள 18 படிகளுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு படி பூஜையும் விமர்சியாக நடைபெற்றது. இதில் திரளான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டு பஜனை பாடல்கள் பாடி சாமி தரிசனம் செய்தனர்.

  • December 25 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  உயர்வு
    ரிஷபம்         –  பக்தி
    மிதுனம்     –   தனம்
    கடகம்         –  நலம்
    சிம்மம்         –   சோர்வு
    கன்னி         –    சிரமம்  
    துலாம்         –     ஆதரவு
    விருச்சிகம்     –  பாசம்  
    தனுசு         –     முயற்சி
    மகரம்         –    மேன்மை
    கும்பம்         –      சினம்
    மீனம்         –      பயம்  
    சந்திராஷ்டமம்    –      சித்திரை, சுவாதி

  • December 25 2023 Indrayanaal

    டிசம்பர் 25 – இன்றைய நல்லநேரம்
    சோபகிருது வருடம் – மார்கழி 9
    25-டிச-2023 திங்கள்
    கிறிஸ்துமஸ்
    கரிநாள்
    நல்ல நேரம் : 6.00 – 7.30
    ராகு : 7.30 – 9.00
    குளிகை : 1.30 – 3.00
    எமகண்டம் : 10.30 – 12.00
    திதி : சதுர்த்தசி
    திதி நேரம் : சதுர்த்தசி அ.கா 5.55
    நட்சத்திரம் : ரோகிணி இ 10.22
    யோகம் : அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம் : சித்திரை,சுவாதி
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

     

  • December 24 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  மகிழ்ச்சி
    ரிஷபம்         –   மறதி
    மிதுனம்     –   பொறுமை   
    கடகம்         –  எதிர்ப்பு
    சிம்மம்         –   ஆதரவு
    கன்னி         –    சலனம்
    துலாம்         –     முயற்சி
    விருச்சிகம்     –  பெருமை
    தனுசு         –     நிறைவு
    மகரம்         –    ஓய்வு   
    கும்பம்         –      நட்பு  
    மீனம்         –      சிரமம்
    சந்திராஷ்டமம்    –      ஹஸ்தம், சித்திரை

  • December 24 2023 Karthigai

    டிசம்பர் 24 – கார்த்திகை
    சோபகிருது வருடம் – மார்கழி 8
    கார்த்திகை
    24-டிச-2023 ஞாயிறு
    நாச்சியார்கோவில் பெருமாள் தெப்பம்
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 4.30 – 6.00
    குளிகை : 3.00 – 4.30
    எமகண்டம் : 12.00 – 1.30
    திதி : திரையோதசி
    திதி நேரம் : துவாதசி கா 7.13
    நட்சத்திரம் : கார்த்திகை இ 10.14
    யோகம் : சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம் : அஸ்தம்,சித்திரை
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

  • Srivilliputhur sorgavasal thirappu

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் சொர்க்கவாசல் எனும் பரமபதவாசல் இன்று காலை திறக்கப்பட்டது ஸ்ரீ ஆண்டாள் பிறந்த ஊர் என்பதால் பல்வேறு மாநிலத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்.

    கோதை பிறந்தஊர் கோவிந்தன் வாழும் ஊர் என்று பெயர் பெற்றது ஸ்ரீவில்லிபுத்தூர் கோதையாகிய ஸ்ரீ ஆண்டாள் பிறந்த ஊராகிய இந்த ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடிப்பூரம் தேரோட்டம் மிகமுக்கியமான நிகழ்ச்சியாகும் அதற்கு அடுத்தபடியாக மார்கழி தமிழ்த்திருவிழாவாகிய பகல் பத்து மற்றும் இராப்பத்து என்றநிகழ்சிகள் வருடந்தோறும் இங்கு சிறப்பாக நடைபெற்று வருகிறது

    இந்நிலையில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாணதும் ஸ்ரீஆண்டாள் பிறந்த ஊருமாகிய ஸ்ரீவில்லிபுத்தூரில் பகல்பத்து முடித்து இராப்பத்து ஆரம்பிக்கும் நாளான இன்று வைகுண்டஏகாதசி என்று அழைக்கப்படும் இந்நாளில் திருக்கோவிலில் அமைந்திருக்கும் பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்படும் வருடம் ஒருமுறை மட்டுமே இந்த பரமபதவாசல் திறக்கப்படுவதால் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது இன்று திறக்கப்பட்ட இந்த பரமபதவாசல் வழியாக முதலில் பெரியபெருமாளும் பின்னர் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்கமன்னார் உள்ளிட்டவர்களும் வெளியில் வருவர்.

    அதன் பின்னர் பக்தர்கள் கூட்டம் வெளியேறுவர் இன்று திறக்கப்படும் இந்த பரமபதவாசல்வழியாக வருபவர்கள் வைகுண்டத்திற்க்கு சென்று வருவதாக ஜதீகம் எனவே உள்ளுர் பக்தர்கள் மட்டுமின்றி வெளியூர் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் இந்த வைபவத்தில் கலந்து கொண்டனர் ஸ்ரீரங்கத்திற்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் வாய்ந்த கோவிலாக ஸ்ரீ ஆண்டாள் கோவில் உள்ளதால் அங்குசென்று தரிசனம் செய்ய முடியாதவர்கள் இங்கு சாமி தரிசனம் செய்தனர்பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டதால் பாதுகாப்பு வசதிகளை காவல்துறையினரும் கோவில் நிர்வாகத்தினரும் சிறப்பாக செய்திருந்தனர்.

  • Ulagalandha perumal koil sorgavasal

    திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு வெகு விமரிசையாக நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியில் 2000 ஆண்டுகள் பழமையான உலகளந்த பெருமாள் என அழைக்கப்படும் திரு விக்ரம சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் இன்று வைகுண்ட வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

     இதில்  ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ தேகளீச பெருமாள் எழுந்தருளி பக்த்தர்களுக்கு அருள் பாலித்தார். சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை காண திருக்கோவிலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சார்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் வைகுண்ட வாசலின் வழியே பெருமாள்  வருவதைக் கண்டு கோவிந்தா கோவிந்தா என ஆரவாரம் செய்து வழிபட்டுச் சென்றனர்.

     

  • Srirangam sorga vasal thirappu

    108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படுவதுமான திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் வருடம் தோறும் நடைபெறும் விழாக்களில், மிகவும் சிறப்பு வாய்ந்தாக கருதப்படும் வைகுந்த ஏகாதசி விழாவில் பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி மிகவும் கோலாகலமாக இன்று நடைபெற்றது.

    கடந்த டிசம்பர் 12 ஆம் தேதியன்று திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது .. அதனைத் தொடர்ந்து  13 ஆம் தேதி பகல் பத்து விழா தொடங்கியது .. பகல் பத்து பத்தாவது நாளான நேற்று நம் பெருமாள் மோகினி அலங்காரத்தில் காட்சி அளித்தார்

    மூலஸ்தானத்திலிருந்து பல்வேறு அலங்காரங்களில் ஆழ்வார்கள், ஆச்சார்யார்களுடன் கோவில் பிரகாரங்களில் வலம் வந்து பின்னர் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.இராப்பத்து திருவிழாவின் முதல் நாளான 23 ஆம் தேதி  இன்று அதிகாலை 3 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு எனப்படும் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி அதிகாலை 4 மணியளவில் விருச்சிக லக்னத்தில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்ட நம்பெருமாள் ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை, வைர அபயஸ்தம் உட்பட பல்வேறு திரு ஆபரணங்கள் அணிந்து திருச்சுற்றில் உள்ள தங்க மரத்தை சுற்றி வந்து பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் வழியாக கடந்து வந்தார்.

    அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் ரெங்கா, ரெங்கா என பக்திகோஷமிட்டவாறு பரமபதவாசலைக் கடந்துச்சென்றனர். பின்னர் நம்பெருமாள் பக்தர்களுக்கு நேரடியாகச் சென்று காட்சி தரும் திருகொட்டகை பிரவேசம்  கண்டருளினார். ஆயிரங்கால் மண்டபத்திற்கு வந்தடைந்து பக்தர்களுக்கு பொதுஜனசேவை கண்டருளினார்.

    அதனை தொடர்ந்து  வரும் டிசம்பர் 29 ஆம் தேதி கைத்தல சேவையும்,  30ம் தேதி திருமங்கை மன்னன் வேடுபறி வைபவமும் நடைபெறும். அப்போது நம்பெருமாள் தங்க குதிரையில் வலம் வருவார். குறிப்பாக வேடுபறி நிகழ்வு பரமபத வாசல் திறப்பு கிடையாது

    வரும் 2024 ஜனவரி மாதம் 1 ஆம் தேதி தீர்த்தவாரி நம்பெருமாள் கண்டருளுவார். 2 ஆம் தேதி நம்மாழ்வார் மோட்சத்துடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவுறும். 21 நாட்கள் நடைபெறும் இந்த வைபவத்தின் போது மூலஸ்தானத்தில் இருக்கும் மூலவர் பெருமாளுக்கு முத்தங்கியுடன் சேவை சாதித்து அருள் புரிவார்.

     

  • Vaikunda egadasi perumal slogam

    ஸ்ரீய காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தினாம்
    ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்
    ஸ்ரீ வேங்கடாசலாதீஸம் ஸ்ரீயாத்யாஸித வக்ஷஸம்
     ஸ்ரிதசேதன மந்தாரம் ஸ்ரீநிவாஸமஹம் பஜே !

    பொதுப்பொருள் :

    திருவேங்கடமலையில் வாசம் செய்யும் ஸ்ரீநிவாஸப் பெருமாளே, நமஸ்காரம். அனைத்து மங்கலங்களையும் அளிப்பவரே, வேண்டும் வரங்களையெல்லாம் வழங்குபவரே, மதிப்பிட முடியாத பெரும் புதையல் போன்றவரே நமஸ்காரம். மகாலட்சுமி வசிக்கும் அழகு மார்புடையவரே, துதிப்போர் அனைவருக்கும் கற்பக விருட்சம்போல நன்மைகளை பொழிபவரே, ஸ்ரீநிவாஸா, நமஸ்காரம்.

    இத்துதியால் ஏழுமலையானைப் பாடி வணங்க, ஏழ்மை விலகி, சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும். தவிர புதன், சனி கிரக பாதிப்புகளும் விலகும்.