Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • January 02 2024 Indrayanaal

    ஜனவரி 2 – இன்றைய நல்லநேரம்
    சோபகிருது வருடம் – மார்கழி 17
    02-ஜன-2024 செவ்வாய்
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 3.00 – 4.30
    குளிகை : 12.00 – 1.30
    எமகண்டம் : 9.00 – 10.30
    திதி : சஷ்டி
    திதி நேரம் : சஷ்டி மா 4.06
    நட்சத்திரம் : பூரம் கா 11.12
    யோகம் : சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம் : அவிட்டம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

  • Anjaneyar rupees alangaram

    ஜோலார்பேட்டை அருகே ஸ்ரீ வீரஆஞ்சநேயர் ஆலயத்தில் புத்தாண்டு  முன்னிட்டு ரூபாய் 5 லட்சம் புதிய கரன்சி நோட்டுகளால் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள்  நடைபெற்றது.

    ஜோலார்பேட்டை அருகே அம்மையப்பன் நகர் பகுதியில் உள்ள வி.எம்.வட்டத்தில்  அமைந்துள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில் ஆலயத்தில் 2024 ம் ஆண்டு புதிய ஆண்டு முன்னிட்டு புத்தாண்டு விழா சிறப்பு அலங்காரம் நடைபெற்றது  கோவில் ஆலயத்தில் ஸ்ரீ வீர ஆஞ்சநேயருக்கு ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ளான புதிய கரன்சி 500, 200, 100,  50, 20, புதிய நோட்டுகளால் சிறப்பு அலங்காரம் செய்திருந்தனர்.

    மேலும் புத்தாண்டு முன்னிட்டு ஸ்ரீ வீர ஆஞ்சநேயருக்கு  சிறப்பு அபிஷேகம் ஆராதனையும் பூஜைகளும் தீபாராதனையும் சிறப்பாக நடைபெற்றது மேலும் புதிய கரன்சி நோட்டுகளால் அலங்காரத்தை காண ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், ஆம்பூர், நாட்டறம்பள்ளி, பெங்களூர் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி எக்ஸெல் ஜி. குமரேசன் மற்றும் கோயில் நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.

  • Thiruverkadu karumari amman temple newyear celebration

    திருவேற்காடு கருமாரியம்மன் ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு இரவு 12 மணிக்கு அம்மனுக்குசிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    2024 ஆம் ஆண்டு பிறந்த ஆங்கில புத்தாண்டு தினத்தை உலக நாடுகள் முழுவதும் கொண்டாடி வரும் நிலையில்  சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த திருவேற்காடு கருமாரியம்மன் ஆலயத்தில் இரவு 12 மணிக்கு அம்மன் கருவறையில் இரண்டு பசுகளுக்கு மஞ்சள் குங்குமம் வைத்து பட்டு ஆடை  அணிவித்துகோமாதா பூஜை நடைபெற்றது.

    பின்பு கருவறையில் அமைந்துள்ள ஸ்ரீதேவி கருமாரி அம்மனுக்கு மஞ்சள் அபிஷேகம் பால் அபிஷேகம் தேன் சந்தன அபிஷேகம்அபிஷேகம் இளநீர் அபிஷேகம் போன்றபல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றன பின்பு பல்வேறு மலர்களால்அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு  பல்வேறு வகையான பழங்கள் படையல் இட்டு நெய்வேத்தியம் காண்பிக்கப்பட்டு சிறப்பு பூஜைகளும் தீப ஆராதனை நடைபெற்றது.

    இந்த புத்தாண்டு சிறப்பு பூஜையில் முன்னாள் அதிமுக நகர மன்ற தலைவர் மகேந்திரன் கலந்து கொண்டார் இந்த புத்தாண்டு சிறப்பு பூஜையில்ஆயிரக்கணக்கான பக்தர்களும்  கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் பின்பு தரிசனம் செய்து முடித்த வந்த அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கினார்.   

  • Thiruthani yogibabu swamydharshan

    திருத்தணி முருகன் கோயிலில் பிரபல திரைப்பட நடிகர் யோகி பாபு நள்ளிரவு புத்தாண்டு சிறப்பு தரிசனம் செய்தார்.

    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருக்கோயில் ஆகும் இந்த திருக்கோயிலில் 2024 ஆங்கில புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி நள்ளிரவு மூலவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு மகா தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது

    இந்நிகழ்ச்சியில் நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார் பிரபல திரைப்பட நடிகர் யோகி பாபு அவருக்கு திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன் அறங்காவலர்கள்- சுரேஷ் பாபு, நாகன், ஆகியோர்கள் மலர்மாலை மற்றும் பிரசாதங்கள் வழங்கி கௌரவம் செய்தனர்

    இதனைத் தொடர்ந்து திரைப்பட நடிகர் யோகி பாபு உடன் முருக பக்தர்கள் செல்பி எடுத்துக் கொண்டு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் கோரி மகிழ்ந்தனர். இந்த சிறப்பு நள்ளிரவு நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகப்பெருமானை தரிசனம் செய்ய மலைக்கோவிலில் குவிந்தனர் இரண்டு மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்..

  • January 1 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  ஆர்வம்
    ரிஷபம்         –  நன்மை
    மிதுனம்     –   பெருமை
    கடகம்         –  பக்தி
    சிம்மம்         –   அமைதி
    கன்னி         –    முயற்சி
    துலாம்         –     தனம்
    விருச்சிகம்     –  அசதி
    தனுசு         –     பாசம்
    மகரம்         –    பொறுமை
    கும்பம்         –      வரவு
    மீனம்         –      இன்பம்
    சந்திராஷ்டமம்    –      திருவோணம்

  • January 01 2023 New Year

    ஜனவரி 1 – ஆங்கில புத்தாண்டு
    சோபகிருது வருடம் – மார்கழி 16
    01-ஜன-2024 திங்கள்
    ஆங்கில புத்தாண்டு
    நல்ல நேரம் : 6.00 – 7.30
    ராகு : 7.30 – 9.00
    குளிகை : 1.30 – 3.00
    எமகண்டம் : 10.30 – 12.00
    திதி : அதிதி
    திதி நேரம் : பஞ்சமி ம 2.08
    நட்சத்திரம் : மகம் கா 8.36
    யோகம் : மரண-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : திருவோணம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

     

  • December 31 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  மேன்மை
    ரிஷபம்         –  விவேகம்
    மிதுனம்     –   உற்சாகம்
    கடகம்         –  பெருமை
    சிம்மம்         –   அன்பு
    கன்னி         –    இன்சொல்
    துலாம்         –     புகழ்
    விருச்சிகம்     –  வெற்றி
    தனுசு         –     செலவு
    மகரம்         –    வருத்தம்
    கும்பம்         –      பக்தி
    மீனம்         –      ஆர்வம்
    சந்திராஷ்டமம்    –      உத்திராடம்

  • December 31 2023

    டிசம்பர் 31 – இன்றைய நல்லநேரம்
    சோபகிருது வருடம் – மார்கழி 15
    31-டிச-2023 ஞாயிறு
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 4.30 – 6.00
    குளிகை : 3.00 – 4.30
    எமகண்டம் : 12.00 – 1.30
    திதி : பஞ்சமி
    திதி நேரம் : சதுர்த்தி கா 11.51
    நட்சத்திரம் : மகம் முழுவதும்0.00
    யோகம் : மரணயோகம்
    சந்திராஷ்டமம் : உத்திராடம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

  • Natarajar gopura dharisanam

    காரைக்கால் அடுத்த திருநள்ளாறிலுள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தானத்தில் ஆருத்ரா தரிசன விழாவில் நடராஜர் கோபுர தரிசனம் அருளினார். இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்.  

    புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தானத்தில் ஆண்டு தோறும் ஆருத்ரா உற்சவம் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதைப்போல் இந்த ஆண்டு ஆருத்ரா உற்சவத்தை முன்னிட்டு 10 நாட்களும் தினமும் திருவெம்பாவையின் 21 பாடல்களையும் பாடி சிவனுக்கு வழிபாடு நடைபெற்றது.

    சிவன், அம்பாள் பொன்னூஞ்சல் உற்சவம் நேற்று இரவு மிக விமரிசையாக நடைபெற்றது. ஆருத்ரா உற்சவத்தை முன்னிட்டு சிவன்,அம்பாள் மற்றும் மாணிக்கவாசகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இன்று காலை ஸ்ரீநடராஜர் மற்றும் ஸ்ரீசிவகாமி தாயாருக்கும் மகா அபிஷேகம் நடைபெற்றது. இன்று பிற்பகல் ஸ்ரீநடராஜர் ஆருத்ரா கோபுர தரிசனம் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக கோ பூஜையும் விமரிசையாக நடைபெற்றது.

    தொடர்ந்து ஸ்ரீநடராஜர்,ஸ்ரீசிவகாமி அம்பாள் சமேதராக எழுந்தருளி வீதியுலா  வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீலஸ்ரீ கந்தசாமி தம்பிரான் சுவாமிகள்,ஆலய நிர்வாக அதிகாரி அருணகிரிநாதர் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

  • December 30 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  சுகம்
    ரிஷபம்         –  உதவி
    மிதுனம்     –   பயணம்  
    கடகம்         –  ஆக்கம்
    சிம்மம்         –   குழப்பம்
    கன்னி         –    வெற்றி
    துலாம்         –     பரிவு
    விருச்சிகம்     –  புகழ்  
    தனுசு         –     அமைதி
    மகரம்         –    நன்மை
    கும்பம்         –      ஓய்வு
    மீனம்         –      சலனம்
    சந்திராஷ்டமம்    –      பூராடம்