Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • Devotees’ Paal Kudam procession at the Renuka Devi Amman Temple.

    ரேணுகா தேவி அம்மன் கோவிலில் பால்குடம் எடுத்து நேர்த்தி கடன் செலுத்திய மக்கள்

     

    காரைக்கால் மாவட்டத்தில் உள்ள காரைக்கால்மேடு மீனவ கிராமத்தில் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் உலக நன்மை வேண்டி ரேணுகா தேவி அம்மனுக்கு பால்குடம் எடுக்கும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 22ஆம் ஆண்டு பால் குட திருவிழாவில் 1000-க்கும் மேற்பட்ட மீனவ பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்துகொண்டு பால்குடம், அலகு காவடி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

  • January 04 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  மகிழ்ச்சி
    ரிஷபம்         –  ஆக்கம்
    மிதுனம்     –   ஆதரவு  
    கடகம்         –  இன்பம்
    சிம்மம்         –   பாசம்
    கன்னி         –    அன்பு
    துலாம்         –     தொல்லை  
    விருச்சிகம்     –  போட்டி
    தனுசு         –     வெற்றி
    மகரம்         –    லாபம்  
    கும்பம்         –      நன்மை
    மீனம்         –      சோதனை
    சந்திராஷ்டமம்    –      சதயம் , பூரட்டாதி

  • January 4 2023 Indrayanaal

    ஜனவரி 4 – மார்கழி 19
    சோபகிருது வருடம் – மார்கழி 19
    04-ஜன-2024 வியாழன்
    நல்ல நேரம் : 10.30 – 12.00
    ராகு : 1.30 – 3.00
    குளிகை : 9.00 – 10.30
    எமகண்டம் : 6.00 – 7.30
    திதி : அஷ்டமி
    திதி நேரம் : அஷ்டமி இ 7.47
    நட்சத்திரம் : அஸ்தம் ம 3.51
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : சதயம்,பூரட்டாதி
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்

     

  • Vallalar and Samarasa Suddha Sanmargam!

    வள்ளலாரும் சமரச சுத்த சன்மார்க்கமும்!

     

    ஆன்மிகம், அறம், சமத்துவம், கல்வி, தியானம் ஆகியவற்றை மக்களிடை பரப்பி சேவை உணர்வை போதித்த வள்ளலாரை பற்றி ஆய்வாளரும் மூத்த பத்திரிக்கையாளருமான விஷ்வா தரும் சுவாரஸ்யமான தகவல்கள் இந்த தொடரில் பார்ப்போம்…

     

     

  • Special Abhishekam in Thanjavur Big Temple on the evening of New Year

    புத்தாண்டை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் சிறப்பு அபிஷேகம்

     

  • January 3 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  பாராட்டு
    ரிஷபம்         –  புகழ்
    மிதுனம்     –   ஜெயம்
    கடகம்         –  அசதி
    சிம்மம்         –   தனம்  
    கன்னி         –    அமைதி
    துலாம்         –     ஆதரவு
    விருச்சிகம்     –  சோதனை
    தனுசு         –     ஓய்வு
    மகரம்         –    தொல்லை
    கும்பம்         –      முயற்சி
    மீனம்         –      ஊக்கம்
    சந்திராஷ்டமம்    –      அவிட்டம், சதயம்

  • January 03 2024 Indrayanaal

    ஜனவரி 3 – இன்றைய நல்லநேரம்
    சோபகிருது வருடம் – மார்கழி 18
    03-ஜன-2024 புதன்
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 12.00 – 1.30
    குளிகை : 10.30 – 12.00
    எமகண்டம் : 7.30 – 9.00
    திதி : சப்தமி
    திதி நேரம் : சப்தமி மா 6.04
    நட்சத்திரம் : உத்திரம் ம 1.39
    யோகம் : அமிர்த-மரணயோகம்
    சந்திராஷ்டமம் : அவிட்டம்,சதயம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

  • Meenam Sakthionline January 2024 Monthly Prediction

    மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

    கிரகநிலை:

    ராசியில் ராஹூ – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு  – களத்திர ஸ்தானத்தில் கேது – பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன்,  புதன் – தொழில் ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய் – அயன சயன போக ஸ்தானத்தில் சனி என கிரக நிலைகள் உள்ளன.

    கிரகமாற்றங்கள்:

    08-01-2024 அன்று புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    15-01-2024 அன்று சூர்ய பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    18-01-2024 அன்று சுக்ர பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    27-01-2024 அன்று புதன் பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    பிறரையும் தன்னைப் போல் நேசிக்கும் மீன ராசியினரே இந்த மாதம் துணிச்சலாக எதையும் செய்து முடித்து காரிய வெற்றி அடைவீர்கள். மற்றவர்களுடன் இருந்த பகை நீங்கும்.  பூர்வீக சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும். பணவரத்து கூடும். அரசாங்கம் மூலம் லாபம் உண்டாகும். நீண்ட தூர பயணங்களால் சாதகமான பலன் கிடைக்கும். சுணங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பெறும். பூமி – வீடு – வாகனம் சம்பந்தமான இனங்களில் அதிக லாபம் பெறுவீர்கள்.

    தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி விறுவிறுப்படையும். வசூலாக வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பான பிரச்சனைகள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி தொடர்பான கஷ்டங்கள் குறையும்.

    குடும்பத்தில் மரியாதை கூடும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு இருக்கும். கணவன், மனைவிக்கிடையில் மனம்விட்டு பேசி எடுக்கும் முக்கிய முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

    பெண்களுக்கு கடிதம் மூலம் வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். வர வேண்டிய பணம் வந்து சேரும். கஷ்டங்கள் குறையும்.

    மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் சாதகமாக பலன் தரும். எதிலும் வேகமாக செயலாற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.

    கலைத்துறையினருக்கு தொழிலில் சிக்கல்கள் உருவாகாது என்றாலும் சிற்சில வாக்குவாதங்கள் இருக்கும். எதிலும் அளவோடு ஈடுபட்டு வந்தால் தொல்லைகள் இராது. அடுத்தவர்களுடைய விவகாரங்களில் வீணாக தலையிட வேண்டாம். பகைவர்கள் பணிந்து போகவும் வாய்ப்புகள் உண்டு.

    அரசியல் துறையினருக்கு விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும்.

    பூரட்டாதி:

    இந்த மாதம் பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மதிப்பு மரியாதை சிறப்படையும். செல்வாக்கு ஓங்கும். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். தம்பதிகளிடையே அன்பு மேலோங்கும். பிரிந்த குடும்பம் ஒன்றுசேரும்.

    உத்திரட்டாதி:

    இந்த மாதம் பொதுவாக நற்பலன்கள் கூடுதலாக கிடைக்கும். எதிலும் சிறிதளவு ஆதாயம் ஏற்படும். முன்விரோதம் காரணமாக சில சங்கடங்கள் உருவாகலாம், என்றாலும் அவற்றை சமாளிக்கும் வழிகள் உங்களுக்கு புலப்படும். இயந்திரங்களைப் பிரயோகிக்கும் பணியாளர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். தெய்வப்பணி, தருமப்பணி போன்ற நற்காரியங்களில் ஈடுபடவும் வாய்ப்புகள் உண்டு.

    ரேவதி:

    இந்த மாதம் தொழிலில் சிக்கல்கள் உருவாகாது என்றாலும் சிற்சில வாக்குவாதங்கள் இருக்கும். எதிலும் அளவோடு ஈடுபட்டு வந்தால் தொல்லைகள் இராது. அடுத்தவர்களுடைய விவகாரங்களில் வீணாக தலையிட வேண்டாம். பகைவர்கள் பணிந்து போகவும் வாய்ப்புகள் உண்டு.

    பரிகாரம்: விநாயக பெருமானை தீபம் ஏற்றி வழிபட காரியங்கள் கைகூடும். மன கஷ்டம் நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
    அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்
    சந்திராஷ்டம தினங்கள்: 5, 6, 7
    அதிர்ஷ்ட தினங்கள்: 25, 26, 27

    -பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

     

  • Kumbham Sakthionline January 2024 Monthly Prediction

    கும்பம்  (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதங்கள்)

    கிரகநிலை:

    ராசியில் சனி – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராஹூ – தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு  – அஷ்டம ஸ்தானத்தில் கேது – தொழில் ஸ்தானத்தில் சுக்ரன்,  புதன் – லாப ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய் என கிரக நிலைகள் உள்ளன.

    கிரகமாற்றங்கள்:

    08-01-2024 அன்று புதன் பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    15-01-2024 அன்று சூர்ய பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    18-01-2024 அன்று சுக்ர பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    27-01-2024 அன்று புதன் பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    வாழ்க்கையில் மனிதர்களுக்கு முக்கியவத்துவம் அளிக்கும் கும்ப ராசியினரே நீங்கள் உதவிக்கரம் நீட்டுவதில் ஆர்வம் மிக்கவர். இந்த மாதம் சுபகாரியங்களில் கலந்து கொள்ள நேரலாம். சனியின் பார்வை ராசியின் மீது பதிவதால் பணம் வரவு நன்றாக இருக்கும். இழுபறியாக இருந்தவை சாதகமாக முடியக்கூடும். தேவையற்ற கவலைகள் நீங்கும்.  உங்களை பற்றி விமர்சனம் செய்து வந்தவர்கள் அதனை விட்டு விடுவார்கள். வழக்குகளில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். எதிர்காலத்திற்கு தேவையான பணிகளை திட்டமிடுவீர்கள்.

    தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். கடன் பிரச்சனை தீரும். ஆர்டர் பிடிப்பதில் இருந்த கஷ்டம் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாக பணிகளை செய்து முடிப்பார்கள்.  மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

    பாதியில் நின்ற வீடுகட்டும் பணியை மீண்டும் தொடருவீர்கள். சிலர் புதிய வீட்டிற்கு குடிபுகுவார்கள். கணவன் மனைவிக்கிடையில் திடீரென்று கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகள் கல்வியில் முன்னேற்றம் அடைய தேவையான உதவிகளை செய்வீர்கள். வழக்குகளில் நல்ல தீர்ப்பு வரும்.

    பெண்களுக்கு மற்றவர்களிடம் கவனமாக பேசுவது கருத்து வேற்றுமை வராமல் தடுக்கும். வீண் அலைச்சல் குறையும்.

    மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற் றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். விளையாட்டு போட்டிகளில்  பங்கேற்கும் போது கவனம் தேவை.

    கலைத்துறையினருக்கு புதிய மாற்றம் உருவாகும். அரசாங்க அனுகூலம் ஏற்படும். வாகனங்களைப் பிரயோகப்படுத்தும் போது மிகவும் கவனம் தேவை. வெளியூர் வெளிநாடு செல்ல வேண்டி வரலாம்.

    அரசியல் துறையினருக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மதிப்பு மரியாதை சிறப்படையும். செல்வாக்கு ஓங்கும். நட்பு வட்டாரத்தில் குதூகலம் ஏற்படும்.

    அவிட்டம்:

    இந்த மாதம் பிரிந்துசென்ற தம்பதியினர் ஒன்றுசேர்வார்கள். குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் வருவாய் உண்டு. மருத்துவத் தொழில்புரிவோருக்கு அதிக வருவாய் வரும் மாதம். சோதனைகள் வெற்றியாக மாறும்.

    சதயம்:

    இந்த மாதம் காரியங்கள் அனைத்தும் கைகூடும். உங்கள் செயல்பாடுகள் மற்றவர்களைக் கவரும். உல்லாசப் பயணங்களில் நாட்டம் செல்லும். மனஅடக்கம் பெற தியானம் செய்யுங்கள். படிப்பில் நாட்டம் கூடும். பெற்றோர்கள், பிள்ளைகள் விரும்பியதை  வாங்கிக்கொடுப்பார்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வந்துசேரும். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்திகள் வரும்.

    பூரட்டாதி:

    இந்த மாதம் கல்வியில் புதிய மாற்றம் உருவாகும். அரசாங்க அனுகூலம் ஏற்படும். வாகனங்களைப் பிரயோகப்படுத்தும் போது மிகவும் கவனம் தேவை. செய்யும் உத்தியோகத்தில் இடமாற்றமோ அல்லது பணி நிரந்தரமோ ஏற்படலாம்.

    பரிகாரம்:  சனிக்கிழமையில் விஷ்ணு சகஸ்ர நாமம் படித்து பெருமாளை வழிபட எல்லா பிரச்சனைகளும் தீரும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.
    அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி;
    சந்திராஷ்டம தினங்கள்: 3, 4, 30, 31
    அதிர்ஷ்ட தினங்கள்: 23, 24

    -பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

     

  • Maharam Sakthionline January 2024 Monthly Prediction

    மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள் திருவோணம் அவிட்டம் 1,2 பாதங்கள்)

    கிரகநிலை:

    தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி – தைரிய வீரிய ஸ்தானத்தில் ராஹூ – சுக ஸ்தானத்தில் குரு  – பாக்கிய ஸ்தானத்தில் கேது – லாப ஸ்தானத்தில் சுக்ரன்,  புதன் – அயன சயன போக ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய் என கிரக நிலைகள் உள்ளன.

    கிரகமாற்றங்கள்:

    08-01-2024 அன்று புதன் பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    15-01-2024 அன்று சூர்ய பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.
    18-01-2024 அன்று சுக்ர பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    27-01-2024 அன்று புதன் பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.

    பலன்:

    சொல்லில் நேர்மையை கடைபிடிக்கும் மகர ராசியினரே நீங்கள் காரியங்களை சாதிக்கும் ஆற்றல் மிக்கவர். இந்த மாதம் சாமர்த்தியமாக பேசி காரியத்தை  வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். நீண்ட தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நன்மையாக இருக்கும். கூர்மையான மதி நுட்பத்தால் எந்த பிரச்சனையையும் எளிதாக தீர்த்து விடுவீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த தகராறுகள் நல்லமுடிவுக்கு வரும்.

    தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். பார்ட்னர்கள் ஒத்துழைப்புடன் வியாபாரத்தை விரிவாக்கம் செய்ய முற்படுவீர்கள். ஏற்றுமதி சம்பந்தமான துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்பட்டாலும் எடுத்த வேலையை  எப்பாடுபட்டாவது செய்து விடுவீர்கள். புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு சாதகமான பலன்தரும்.

    குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி ஒற்றுமை உண்டாகும்.  பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பது மனதிருப்தியை தரும். உறவினர் நண்பர்களிடம் நற்பெயர் எடுப்பீர்கள்.

    பெண்களுக்கு உங்களது ஆலோசனை கேட்டு குடும்பத்தில் இருப்பவர்கள் செயல்படுவார்கள். ஆன்மீக நாட்டம் உண்டாகும். வீண் அலைச்சல் ஏற்படலாம்.

    மாணவர்களுக்கு தொழில்நுட்ப கல்வியில் ஆர்வம் உண்டாகும். புதிய வகுப்புகளில் சேர முயற்சிகள் மேற்கொள்வீர்கள்.

    அரசியல் துறையினருக்கு எடுக்கக் கூடிய ஒப்பந்தகளை நன்றாக ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டும். வெளிநாட்டு ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். லாபம் பெருகும். மேலிடத்தின் கனிவான பார்வை கிடைக்கப் பெறுவீர்கள்.

    கலைத்துறையினருக்கு நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் வருவாய் உண்டு. சோதனைகள் வெற்றியாக மாறும். உங்கள் செயல்பாடுகள் மற்றவர்களைக் கவரும். உல்லாசப் பயணங்களில் நாட்டம் செல்லும்.

    உத்திராடம்:

    இந்த மாதம் பொறுமையுடன் செயல்பட வேண்டிய மாதம். வியாபாரிகள் மறைமுக போட்டிகளால் நெருக்கடிகளைச் சந்திக்கலாம். கவனமாகச் செயல்பட்டால் லாபம் பெறலாம். இதுவரை குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்த பிள்ளைகள் வந்துசேர்வார்கள். அயல்நாட்டில் இருந்து நல்ல செய்திகள் வந்துசேரும். தந்தை, மகன் உறவு சுமுகமாகும்.

    திருவோணம்:

    இந்த மாதம் ஊழியர்கள் நினைத்த இடத்திற்கு மாறுதல் பெறுவார்கள். தங்க நகை வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். அதேநேரம் பணியாளர்களிடம் கவனமாக இருக்கவேண்டும். வியாபாரிகள் நல்ல நிலையை அடைவார்கள். வேலைதேடும் இளைஞர்களுக்கு எதிர்பார்த்தபடி வேலைவாய்ப்புகள் வந்துசேரும்.

    அவிட்டம்:

    இந்த மாதம் திருமணத்திற்கு வரன் தேடுவோர் வரக்கூடிய வரன்களை நன்றாக ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டும். தொழிலதிபர்கள் வெளிநாட்டு ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். லாபம் பெருகும். வியாபாரிகள் போட்டியின்றி வியாபாரம் செய்து லாபத்தைப் பெறுவார்கள்.

    பரிகாரம்: ஆஞ்சநேயரை வியாழக்கிழமையில் வெண்ணெய் சாற்றி வழிபட நன்மைகள் சேரும். வாக்குவாதங்கள் நீங்கும்.
    அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி;
    சந்திராஷ்டம தினங்கள்: 1, 2, 28, 29
    அதிர்ஷ்ட தினங்கள்: 21, 22

    -பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்