Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • vaikunda egadasi viradham

    ஏகாதசி விரதம் இருப்பவர்கள், அதற்கு முன்தினமான தசமி நாளில் ஒருவேளை மட்டும் சாப்பிட்டு, மறுநாள் ஏகாதசியன்று முழுமையாக உண்ணாவிரதம் இருக்க வேண்டும். இரவில் கண்விழித்து பெருமாளின் பெருமையைப் பேசுவதும், விஷ்ணு சகஸ்ர நாமம், ரங்கநாதர் ஸ்துதி முதலியவற்றை ஓதுவதுமாக இருக்க வேண்டும். ‘கண் விழிக்கிறோம்’ என்ற பெயரில் சினிமா, டிவி பார்க்கக்கூடாது. மறுநாள் துவாதசி அன்று காலை 21 வகை காய்கறிகளை சமைத்து உண்ண வேண்டும். இதில் அகத்திக் கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் அவசியம் இடம்பெற வேண்டும்.

    துவாதசியன்று காலையில் சாப்பிட்ட பிறகு பகலில் உறங்கக்கூடாது. விரதத்தின் போது எக்காரணம் கொண்டும் துளசி பறிக்கக்கூடாது. பூஜைக்கான துளசியை முதல்நாளே பறித்து விடவேண்டும். ஏகாதசி விரதம் 10-வது திதியாகிய தசமி, 11-வதாகிய ஏகாதசி, 12-ம் திதியாகிய துவாதசி என்று 3 திதிகளிலும் மேற்கொள்ளும் விரதமாக அமைந்துள்ளது. ஏகாதசி விரதம் இருப்பவர்கள் சகல சவுபாக்கியங்களையும் அடைவர். இவ்விரதத்தால் உடல்நலமும் ஆரோக்கியத்துடன் திகழும். ‘வைகுண்ட ஏகாதசியன்று விரதம் இருப்பவர்கள், இறந்த பிறகு நேரே வைகுண்டம் செல்வார்கள். அவர்களுக்கு மறுபிறப்பே இல்லை’ என்று பக்தர்கள் மத்தியில் கூறப்படுகிறது.

    அனுஷ்டிப்பது எப்படி?

    மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த ஏகாதசியை ‘வைகுண்ட ஏகாதசி’ உற்சவமாகக் கொண்டாட திருமங்கையாழ்வார் ஏற்பாடு செய்தார். ஞானேந்திரியங்கள் ஐந்து, கர்மேந்திரியங்கள் (வாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம்) ஐந்து, மனம் ஒன்று ஆகிய பதினொன்றையும் பெருமாளுடன் ஐக்கியப்படுத்தி தியானம் செய்வதே ஏகாதசி விரதம். உடலாலும் உள்ளத்தாலும் பெருமாளுடன் ஒன்றியிருப்பதே உபவாசம்.

  • Thirupathy malar alangaram

    வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு  பத்து டன் எடையுள்ள மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருப்பதி ஏழுமலையான் கோவில். மலர் அலங்கார வேலைபாடுகளை கண்டு ஒரே நேரத்தில் அகல திறக்கும் பக்தர்களின் வாய் மற்றும் கண்கள்.

     நாளை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவில் சொர்க்கவாசல் நாளை அதிகாலை ஒரு மணி அளவில் திறக்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு ஏழுமலையான் கோவில் முழுவதையும் தேவஸ்தான நிர்வாகம் சுமார் 10 டன் எடையுள்ள இந்திய மலர்கள், இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு மலர்கள் ஆகியவற்றால் கண் கவரும் வகையில் அலங்கரித்துள்ளது.

    கோவில் முன் வாசல் துவங்கி, தங்க கொடிமரம்,பலிபீடம், சொர்க்கவாசல், துணை சன்னதிகள்,கோவிலில் உள்ள பல்வேறு மண்டபங்கள் ஆகிய அனைத்து பகுதிகளும் மலர் அலங்காரம் கண்டு பக்தர்களின் கண்களுக்கு விருந்தளித்து வருகின்றன.

    சாமி தரிசனத்திற்காக வந்திருக்கும் பக்தர்கள் கோவிலில் செய்யப்பட்டுள்ள மலர் அலங்கார வேலைபாடுகளை பார்த்து மெய்மறந்து செல்கின்றனர். பூலோக வைகுண்டம் என்று கூறப்படும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செய்யப்பட்டுள்ள மலர் அலங்கார மற்றும் மின்சார சரவிளக்கு அலங்கார வேலைப்பாடுகளை பார்த்து ரசிக்கும் பக்தர்களின் கண்களும் வாயும் ஒரே நேரத்தில் அகல திறக்கின்றன.

     

  • December 23 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  போட்டி
    ரிஷபம்         –   பக்தி
    மிதுனம்     –   பரிவு   
    கடகம்         –  நிறைவு   
    சிம்மம்         –   சுகம்
    கன்னி         –    தனம்
    துலாம்         –     சினம்
    விருச்சிகம்     –  மறதி
    தனுசு         –     எதிர்ப்பு
    மகரம்         –    மேன்மை  
    கும்பம்         –      அசதி
    மீனம்         –      ஆர்வம்
    சந்திராஷ்டமம்    –      உத்திரம், ஹஸ்தம்

  • December 23 2023 vaikunda egadasi

    டிசம்பர் 23 – வைகுண்ட ஏகாதசி
    சோபகிருது வருடம் – மார்கழி 7
    23-டிச-2023 சனி
    வைகுண்ட ஏகாதசி
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 9.00 – 10.30
    குளிகை : 6.00 – 7.30
    எமகண்டம் : 1.30 – 3.00
    திதி : துவாதசி
    திதி நேரம் : ஏகாதசி கா 6.27
    நட்சத்திரம் : பரணி இ 10.34
    யோகம் : சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம் : உத்திரம்,அஸ்தம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

     

  • December 22 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  வெற்றி
    ரிஷபம்         –    தனம்
    மிதுனம்     –   அச்சம்  
    கடகம்         –  லாபம்  
    சிம்மம்         –   புகழ்
    கன்னி         –    முயற்சி
    துலாம்         –     கவலை
    விருச்சிகம்     –  பயம்
    தனுசு         –     நட்பு
    மகரம்         –    தடங்கல்
    கும்பம்         –      எதிர்ப்பு  
    மீனம்         –      மகிழ்ச்சி  
    சந்திராஷ்டமம்    –      பூரம், உத்திரம்

  • December 22 2023 Indrayanaal

    டிசம்பர் 22 – குற்றாலம் குற்றாலநாதர் தேர்
    சோபகிருது வருடம் – மார்கழி 6
    22-டிச-2023 வெள்ளி
    குற்றாலம் குற்றாலநாதர் தேர்
    கரிநாள்
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 10.30 – 12.00
    குளிகை : 7.30 -9.00
    எமகண்டம் : 3.00 – 4.30
    திதி : ஏகாதசி
    திதி நேரம் : தசமி கா 10.0
    நட்சத்திரம் : அசுவினி இ 10.54
    யோகம் : அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : பூரம்,உத்திரம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

  • Morattandi sani peyarchi vizha

    புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டியில் உலகிலேயே மிக உயரமான 27 அடி உயரம் கொண்ட சனீஸ்வர பகவான் கோவிலில் சனி பெயர்ச்சி விழா, 800-கிலோ எள்ளு,800-கிலோ காட்டன் துணி 8 ஆயிரம் லிட்டர் எண்ணெய் பயன்படுத்தி 80 அடி உயரத்தில் ஏற்றப்பட்ட மகர கும்ப தீபம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    உலகிலேயே மிக உயரமான 27 அடி உயர சனீஸ்வர பகவான் புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டியில் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு கிரக பெயற்சியின் போது விசேஷ பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம், அதன்படி இன்று நடைபெற்ற சனி பெயர்ச்சியை முன்னிட்டு சனி பகவானுக்கு ஒன்பது வகையான பூக்கள் மற்றும் ஒன்பது வகையான வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டது.

    தொடர்ந்து 5:23 மணிக்கு மகர ராசியில் இருந்து சனி பகவான் கும்ப ராசிக்கு பிரவேசித்தார். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் பஞ்ச தீபங்கள் ஏற்றி சனி பகவானை நல்லெண்ணெயால் குளிர வைத்து தோஷங்கள் நீங்க பரிகாரம் செய்து மனம் உருகி வேண்டினர்.

    மேலும் நாடு நலம் பெற நல்லது நடக்க வேண்டும் என 800 கிலோ எள்ளு 800 கிலோ காட்டன் துணி மற்றும் 8-ஆயிரம் லிட்டர் எண்ணெய் பயன்படுத்தி 80 அடி உயரத்தில் மகரகும்ப தீபம் ஏற்றப்பட்டது. இதில் புதுச்சேரி மட்டும் இன்றி தமிழகத்தை சேர்ந்த பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டு சனி பகவானை வணங்கி சென்றனர்.

    இதனை தொடர்ந்து முதல் முறையாக சனிபகவானுக்கு இடைவிடாமல் 44 நாட்கள் நல்லெண்ணெய் அபிஷேகம்,மகா யாகம் செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • December 21 2023 Indrayanaal

    டிசம்பர் 21 – இன்றைய நாள் எப்படி?
    சோபகிருது வருடம் – மார்கழி 5
    21-டிச-2023 வியாழன்
    நல்ல நேரம் : 10.30 – 12.00
    ராகு : 1.30 – 3.00
    குளிகை : 9.00 – 10.30
    எமகண்டம் : 6.00 – 7.30
    திதி : தசமி
    திதி நேரம் : நவமி கா 11.53
    நட்சத்திரம் : ரேவதி ந.இ 12.20
    யோகம் : சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம் : மகம்,பூரம்
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்

     

  • Deceember 21 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  ஆர்வம்
    ரிஷபம்         –    சினம்
    மிதுனம்     –   பாசம்  
    கடகம்         –  உயர்வு  
    சிம்மம்         –   இன்பம்  
    கன்னி         –    இரக்கம்
    துலாம்         –     லாபம்
    விருச்சிகம்     –  செலவு
    தனுசு         –     சாதனை
    மகரம்         –    நலம்
    கும்பம்         –      சிந்தனை
    மீனம்         –      பாராட்டு
    சந்திராஷ்டமம்    –      மகம், பூரம்

  • Gangai amman ther thiruvizha

    ஆம்பூரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு கெங்கையம்மன் எல்லையம்மன் கோயில் மார்கழி திருத்தேர் திருவிழா. 30 அடி உயரம் கொண்ட திருத்தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மேல் கிருஷ்ணாபுரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கெங்கையம்மன் மற்றும் எல்லையம்மன் திருக்கோயில் மார்கழி மாத திருத்தேர் திருவிழா வருடா வருடம் மார்கழி முதல் வாரத்தில் நடைபெறுவது வழக்கம்.

    இந்த நிலையில் இன்று பிரசித்தி பெற்ற இந்த திருவிழாவில் அதிகாலை முதல் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆலங்கார ஆராதனை பூஜைகளும், கூழ் ஊற்றுதல் மற்றும் பொங்கல் வைத்து பெண்கள் அங்க பிரதட்சணம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பூஜைகளை தொடர்ந்து தாரை தப்பட்டை நாதஸ்வரம் முழங்க, வாணவேடிக்கை, கரகாட்டம், மயிலாட்டத்துடன்  அருள்மிகு கெங்கையம்மன் திருத்தேர் வீதி உலா கெங்கையம்மன் கோவில் அருகில் இருந்து புறப்பட்டு பஜார், எஸ்.கே ரோடு, கிருஷ்ணாபுரம் , பெருமாள்கோவில்வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக திருத்தேர் ஊர்வலமாக சென்றது அப்போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்ற முழக்கத்துடன் திருத்தேர் மீது தங்களின் வேண்டுதல்கள் நிறைவேற வேண்டி உப்பு, மிளகு ,பொறி ஆகியவற்றை போட்டு வடம் பிடித்து இழுத்தனர்.

    இதில் ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.