Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • December 20 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  பெருமை
    ரிஷபம்         –    பொறுமை
    மிதுனம்     –   நன்மை
    கடகம்         –  சிரமம்
    சிம்மம்         –   ஆக்கம்
    கன்னி         –    சிக்கல்  
    துலாம்         –     தேர்ச்சி
    விருச்சிகம்     –  தெளிவு
    தனுசு         –     நிறைவு
    மகரம்         –    நிம்மதி
    கும்பம்         –      அமைதி
    மீனம்         –      பணிவு  
    சந்திராஷ்டமம்    –      ஆயில்யம், மகம்

  • December 20 2023 Indrayanaal

    டிசம்பர் 20 – இன்றைய நல்லநேரம்
    சோபகிருது வருடம் – மார்கழி 4
    20-டிச-2023 புதன்
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 12.00 – 1.30
    குளிகை : 10.30 – 12.00
    எமகண்டம் : 7.30 – 9.00
    திதி : திதித்துவயம்
    திதி நேரம் : அஷ்டமி ம 1.59
    நட்சத்திரம் : உத்திரட்டாதி ந.இ 1.39
    யோகம் : சித்த-மரணயோகம்
    சந்திராஷ்டமம் : ஆயில்யம்,மகம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

  • Thirunallaru sani peyarchi guru maha sanidhanam

    திருநள்ளாறு சனி பெயர்ச்சி முன்னேற்பாடுகளை தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்மந்த சுவாமிகள் நேரில் ஆய்வு செய்தார்.

    காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானம் ஸ்ரீ சனி பகவான் ஆலயத்தில் 20ம் தேதி சனி பெயர்ச்சி வெகு விமர்சையாக நடைபெற உள்ள நிலையில் தருமபுரம் ஆதீனம் 27வது குருமா சந்நிதானம் ஸ்ரீலஶ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் திருநள்ளாறு கோவிலுக்கு  வருகை புரிந்தார். தொடர்ந்து மூலவர் ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் தரிசனம் செய்த ஆதீனம் பின்னர் சனீஸ்வர பகவானை தரிசனம் செய்து எள் தீபம் ஏற்றி வழிபட்டார்.

      அதனைத் தொடர்ந்து கோவிலில் செய்யப்பட்டு வரும் சனி பெயர்ச்சி ஏற்பாடுகள் மற்றும் கோவில் உள்துறை செயல்பாடுகள் குறித்து ஆதின கட்டளை கந்தசாமி தம்பிரான் சுவாமிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் சனி பெயர்ச்சி ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கனிடம் கேட்டறிந்தார். நிகழ்வின் போது கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதர் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

  • Sani peyarchi palangal

    சனி பகவான் நாளை (20/12/2023) மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். மாலை சரியாக 5:20 மணிக்கு இந்த பெயர்ச்சி நடைபெற உள்ளது. இந்நிலையில் சனி பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

    கும்பம் ராசியில் ஆட்சி செய்யப்போகும் சனிபகவான் என்ன பலன்களை கொடுக்கப்போகிறார்.

    மேஷம் – லாப சனி
    ரிஷபம் – தொழில் சனி
    மிதுனம் – பாக்ய சனி
    கடகம் – அஷ்டமத்து சனி
    சிம்மம் – கண்டச்சனி
    கன்னி – ருண ரோக சத்ரு சனி
    துலாம் – புண்ணிய சனி
    விருச்சிகம் – அர்த்தாஷ்டம சனி
    தனுசு – தைரிய சனி
    மகரம் – பாத சனி
    கும்பம் – ஜென்ம சனி
    மீனம் – விரைய சனி

    தனுசு ராசிக்காரர்கள் ஏழரை சனியில் இருந்து விடுபடுகிறீர்கள். மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலமாகும்.  இந்த சனிப்பெயர்ச்சியால் பாதிப்புகள் குறைய கடகம், சிம்மம், விருச்சிகம், மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்ய வேண்டும்.

    இந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம்…

    மேஷ ராசிக்காரர்களுக்கு 2024 ஆண்டு முதல் சனி பகவான் லாபத்தை அள்ளித்தரப்போகிறார். தொட்டதெல்லாம் இனி பொன்னாகும். அசையும் அசையா சொத்துக்கள் மூலம் அமோக லாபம் வரும். வெளிநாடு போகும் யோகம் வரும். வியாபாரம் தொழிலில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

    ரிஷப ராசிக்காரர்களுக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சரிப்பதால் செய்யும் தொழில் வளர்ச்சியடையும். பட்டம், பதவி, புகழ் தேடி வரும். சுப காரியங்கள் அதிகம் நடைபெறும். இனி வரும் காலம் அற்புதமான காலமாக அமையும்.

    மிதுன ராசிக்காரர்களுக்கு பாக்ய சனி காலம். சனிபகவான் உங்களுக்கு யோகங்களை அள்ளித்தரப்போகிறார். பாக்யசனி காலம் தொடங்குகிறது என்பதால் ஸ்ரீ விநாயகரை வணங்கலாம். உங்களின் குல தெய்வத்தை விடாமல் கும்பிடுங்கள். வாலாஜாபேட்டையில் எழுந்தருளும் லட்சுமி வராகப்பெருமாளை வணங்க மேலும் நன்மைகள் நடைபெறும்.

    சிம்ம ராசிக்காரர்களுக்கு சனி பகவான் கண்டச்சனியாக பயணம் செய்தாலும் ஆட்சி பெற்ற சனி சச மகா யோகத்தை தரப்போகிறார். வாலாஜாபேட்டையில் அருள்பாலிக்கும் பாதாள சொர்ண சனீஸ்வரரை வணங்கினால் நன்மைகள் நடைபெறும். சனிக்கிழமைகளில் சனிபகவானையும், பைரவரை தினமும் வழிபட்டு வருவது நல்லது.

    கன்னி ராசிக்காரர்களுக்கு இது பொன்னான காலம். கன்னி ராசிக்காரர்களுக்கு முழு அதிகாரத்தையும் சனி தருவார். விபரீத ராஜயோகம் கிடைக்கப்போகிறது. ஆறாம் வீட்டில் அமரும் ருண ரோக சத்ரு ஸ்தான சனி என்பதால் விநாயகர், ஸ்ரீ சக்கரத்தாழ்வார் ஆகியோரை தினமும் வழிபட்டு வருவது நல்லது.

     

  • thiruvabaran petti enna irukkum

    பலரும் நினைப்பது போல இது ஐயப்பன் அணிந்து கொண்டிருந்த ஆபரணங்கள் இல்லை. சபரிமலையில் கோயில் கொண்ட தர்ம சாஸ்தாவுக்காக பந்தள ராஜனால் உருவாக்கப்பட்ட ஆபரணங்கள்.

    திருவாபரணப் பெட்டி ஊர்வலமாக வரும் போது பார்த்திருப்போம்… மொத்தம் மூன்று பெட்டிகளைக் கொண்டது திருவாபரணப் பெட்டி.

    1. திருவாபரணப் பெட்டி

    2. வெள்ளிப் பெட்டி

    3. கொடிப் பெட்டி

    இந்த திருவாபரணப் பெட்டி மட்டுமே ஐயப்பன் சந்நிதியை அடைகிறது. மற்ற இரண்டு பெட்டிகளும் மாளிகைப்புரத்தம்மன் சந்நிதிக்குச் சென்று விடும்.

    திருவாபரணப் பெட்டி – பெட்டி 1

    ஐயப்பன் சந்நிதியில் கொடுக்கப்படும் முக்கியமான திருவாபரணப் பெட்டியில் தர்மசாஸ்தாவை அலங்கரிக்க கீழ்க்காணும் ஆபரணங்கள் உள்ளன.

    – திருமுகம் – (சாஸ்தாவின் முகக் கவசம்)

    – (மீசையுடன் ராஜ கோலத்தில் காணப்படும் முகம்)

    – ப்ரபா மண்டலம் (ப்ரபாவளி-திருவாச்சி)

    – வலிய சுரிகை (பெரிய கத்தி)

    – செறிய சுரிகை (சிறிய கத்தி)

    – யானை – யானை விக்ரஹம் 2

    – கடுவாய் – புலி விக்ரஹம் 1

    – வெள்ளி கட்டிய வலம்புரி சங்கு

    – பூர்ணா – புஷ்கலா (நிற்கும் கோலத்தில் தேவியர் உருவம்)

    – பூத்தட்டம் (பூக்களை வைக்கும் தங்கத் தட்டு)

    – நவரத்தின மோதிரம்

    – சரப்பளி மாலை

    – வில்வ மாலை (தங்க இதழ்களால் ஆனது)

    – மணி மாலை (நவரத்னங்களால் ஆனது)

    – எருக்கம் பூ மாலை (தங்க எருக்கம்பூக்களால் ஆனது)

    வெள்ளி பெட்டி (பெட்டி 2)

    வெள்ளிப்பெட்டி என்று அழைக்கப்படும் இந்தப் பெட்டியில்,

    தங்கக் குடம் ஒன்றும், மற்ற பூஜா பாத்திரங்களும் இருக்கின்றன.

    இந்த தங்கக்குடத்தால் ஸ்வாமிக்கு பின்னர் நெய்யபிஷேகம் செய்யப்படும்.

    கொடிப்பெட்டி (பெட்டி 3)

    மாளிகைப்புரம் சந்நிதிக்குச் செல்லும் இந்தக் கொடிப்பெட்டியில்,

    யானைக்கான நெற்றிப் பட்டம், தலைப்பாறை மற்றும் உடும்பாறை மலைக்கான கொடிகள், குடை மற்றும் யானை ஊர்வலத்துக்கானப் பொருட்கள் உள்ளன.

    கொடிப்பெட்டியில் உள்ளவைகளால் மறுநாள் யானை அலங்கரிக்கப்பட்டு மறுநாள் மணிமண்டபத்தில் இருந்து சரம்குத்தி வரை யானையில் ஊர்வலம் வரும்.

    இந்த திரு ஆபரணங்கள் சபரிமலையில் கோயில் கொண்டுள்ள பகவானுக்கு அணிவிக்கவேயன்றி ஐயப்பன் தானே அணிந்து கொண்டிருந்தவையல்ல.

    திருவாபரணத்தில் வரும் சாஸ்தாவின் திருமுகத்தில், அழகான முறுக்கு மீசை தெரிவதைக் காணலாம். அத்துடன் பூர்ணா புஷ்கலா தேவியரின் உருவமும் உடன் இருப்பதைக் காணமுடியும்.

    வானில் மாமலை மேலே மகர நக்ஷத்ரம் உதித்து நிற்க, கொடிமரத்தை கருடன் வட்டமிட, அந்த ஆபரணங்கள் சந்நிதானத்துக்குள் சென்று, ஐயப்பனுக்கு சார்த்தி தீபாராதனை நடக்கும் அந்த நொடி, பொன்னம்பல மேட்டில் ஜோதி தெரிய … மனம், உடல், இடம், காலம் என அனைத்தும் மறக்கும் பேரானந்தம்; அது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ஒன்று.

  • December 19 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  போட்டி
    ரிஷபம்         –    வெற்றி
    மிதுனம்     –   செலவு
    கடகம்         –  சினம்
    சிம்மம்         –   தடங்கல்  
    கன்னி         –    தாமதம்
    துலாம்         –     நிறைவு
    விருச்சிகம்     –  எதிர்ப்பு
    தனுசு         –     வரவு
    மகரம்         –    புகழ்   
    கும்பம்         –      முயற்சி
    மீனம்         –      பாராட்டு
    சந்திராஷ்டமம்    –      ஆயில்யம்

  • December 19 2023 Indrayanaal

    டிசம்பர் 19 – இன்றைய நல்லநேரம்
    சோபகிருது வருடம் – மார்கழி 3
    19-டிச-2023 செவ்வாய்
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 3.00 – 4.30
    குளிகை : 12.00 – 1.30
    எமகண்டம் : 9.00 – 10.30
    திதி : சப்தமி
    திதி நேரம் : சப்தமி மா 4.16
    நட்சத்திரம்: பூரட்டாதி ந.இ 3.10
    யோகம் : மரண-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம் : ஆயில்யம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

  • acchankoil thiruvabaranam

    செங்கோட்டையில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் கேரள மாநிலத்தின் அடர்ந்த வனப்பகுதியில் கேரள மாநிலத்தில் அச்சன்கோவிலில் ஸ்ரீதர்மசாஸ்தா திருக்கோயில் அமைந்துள்ளது. பரசுராமரால் தோற்று விக்கப்பட்ட இந்த கோயிலின் விக்ரகம் மட்டுமே பழமை மாறாதது என்கிறார்கள். இங்கு வனராஜனாக அமர்ந்த நிலையில் கையில் அமுதமும் கருப்ப னின் காந்தமலை வாளும் ஏந்திய திருக்கோலத்தில் அய்யப்பனை தரிசிக்கலாம். இவருக்கு இருபுறமும் பூர்ணா, புஷ்கலை தேவியர் மலர் தூவுவது போல் காட்சி தருகின்றனர். இங்குள்ள ஐயப்பனை ‘கல்யாண சாஸ்தா‘ என்று அழைக்கிறார்கள். இதனால், திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு அதிகம் வந்து வழிபடுகின்றனர்.

    சிறப்புகள் வாய்ந்த இத் திருக்கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் பிரம்மோஸ்தவ விழா நடைபெறுவது வழக்கம். திருவிழாவிற்காக புனலூர் கருவூலத்திலிருந்து கேரள தமிழ்நாடு இரு மாநில போலீஸார் பலத்த பாதுகாப்புடன் ஐயப்பனுக்கு அணிவிப்பதற்காக பல கோடி ரூபாய் மதிப்புள்ள திரு ஆபரணங்கள் அடங்கிய ஆபரணப்பெட்டி ஊர்வலமாக தென்காசி அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில் முன்பு கொண்டுவரப்பட்டது.  

    அங்கு திருஆபரணப்பெட்டிக்கு மேள தாள தாரை தப்பட்டைகள் வெடிகள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.  இந்த ஊர்வலமானது கடந்த 30 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது . திருஆபரண பெட்டிக்குள் ஸ்ரீ ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர, வைடூரிய ஆபரணங்கள் உள்ளன. இவற்றில் முக்கியமாக ஐயப்பனின் தலை, முகம், மார்பு, கைகள் மற்றும் கால்கள் கவசம் மற்றும் 18 இஞ்ச் நீளம் உடைய தங்க வாளும் உள்ளது. இதனால் அந்த ஐயப்பனே வருவது போல ஐதீகம் . இந்நிகழ்ச்சியில் தென்காசி  சுற்று வட்டார மற்றும் தமிழக கேரளத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக வந்திருந்து திருஆபரண பெட்டியை வழிபட்டனா்.

  • December 18 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  வெற்றி
    ரிஷபம்         –    பாராட்டு
    மிதுனம்     –   சிரமம்
    கடகம்         –  தேர்ச்சி
    சிம்மம்         –   நன்மை
    கன்னி         –    உதவி
    துலாம்         –     ஆக்கம்
    விருச்சிகம்     –  நலம்
    தனுசு         –     ஆதாயம்
    மகரம்         –    கவலை  
    கும்பம்         –      இன்பம்
    மீனம்         –      பயம்  
    சந்திராஷ்டமம்    –      பூசம்

  • December 18 2023 Sasti viradham

    டிசம்பர் 18 – சஷ்டி விரதம்
    சோபகிருது வருடம் – மார்கழி 2
    18-டிச-2023 திங்கள்
    நல்ல நேரம் : 6.00 – 7.30
    ராகு : 7.30 – 9.00
    குளிகை : 1.30 – 3.00
    எமகண்டம் : 10.30 – 12.00
    திதி : சஷ்டி
    திதி நேரம் : சஷ்டி மா 6.36
    நட்சத்திரம் : அவிட்டம் கா 6.26
    யோகம் : சித்த-மரணயோகம்
    சந்திராஷ்டமம் : பூசம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்