Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • Kanchi varadaraja perumal

    ஸ்ரீ தாத தேசிகன் சாற்று முறை உற்சவத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ரத்ன அங்கி சேவை உற்சவம். நவரத்ன அங்கி அணிந்து ஸ்ரீதேவி,பூதேவி, பெருந்தேவி தாயாருடன், பக்தர்களுக்கு காட்சி அளித்த வரதராஜ பெருமாள்.

    108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான உலகப் பிரசித்தி பெற்ற அத்தி வரதர் கோவில் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ தாத தேசிகன் சாற்று முறை உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

    விஜயநகர பேரரசின் ராஜ குருவாக விளங்கியவரும், காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலின் ஆதிகால தர்மகத்தாவாக இருந்த ஸ்ரீதாத தேசிகனின் சேவையை போற்றும் வகையில் அவரது பிறந்த நட்சத்திரத்தில் வரதராஜ பெருமாள் ரத்ன அங்கி அணிந்து  ஸ்ரீதாத தேசிகன் சன்னதிக்கு எழுந்தருளி அருள்பாலிப்பது வழக்கம்.

    அதன்படி ஸ்ரீ தாத தேசிகன் பிறந்த நட்சத்திரமான கார்த்திகை மாதம் அனுஷ நட்சத்திரத்தை ஓட்டி காஞ்சி வரதராஜ பெருமாள் இன்று நவரத்தினங்களால் ஆன அங்கி அணிந்து ரோஜா பூ மலர் மாலை சூடி, ஸ்ரீதேவி,பூதேவி, பெருந்தேவி தாயாருடன், டமாரம்மேளம், ஒலிக்க தவில்,நாதஸ்வர, வாத்தியங்கள் இசைக்க கோவில் வளாகத்தில் உலா வந்து ஸ்ரீ தாத தேசிகன் சன்னதிக்கு எழுந்தருளி சேவை சாதித்தார்.

    பின்னர் வேத பாராயணம் மந்திரங்கள் ஒலிக்க பெருந்தேவி தாயார்,வரதராஜ பெருமாள், அணிந்து வந்த ரோஜா பூ மாலைகளை வழங்கி ஸ்ரீ தாத தேசிகனுக்கு  அணிவித்து சிறப்பு செய்தார்.

    தாத தேதிகன் சாற்று முறை உற்சவத்தில் நவரத்தினங்கள் பதித்த ரத்தின அங்கியில் வரதராஜ பெருமாள் சேவை சாதிக்கும் காட்சியைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து வரதராஜ பெருமாளையும், பெருந்தேவி தாயாரையும் தரிசனம் செய்து வணங்கி வழிபட்டு சென்றனர்.

  • darbar kolathil mel malayanur angalamman

    மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்தில் கார்த்திகை மாத அமாவாசை தினத்தில்  அங்காளம்மன் தர்பார் திருக்கோலத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    விழுப்புரம் மாவட்டம்  மேல்மலையனூர் பகுதியில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் திருக்கோயிலில் மாதந்தோறும் அமாவாசை தினத்தில் ஊஞ்சல் உற்சவம் வெகு விமர்ச்சையாக நடைபெறுவது வழக்கம்

    இந்நிலையில் கார்த்திகை மாத அமாவாசை தினமான நேற்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உற்சவர்  அங்காளம்மனுக்கும் பால்,பழம், சந்தனம், பழச்சாறு ஆகியவைகளை கொண்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து  உற்சவர் அம்மன் அங்காளம்மன் தர்பார் திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்

    பின்னர் நள்ளிரவு 10.30 மணி அளவில் அங்காளம்மன் தர்பார் திருக்கோலத்தில் உள்ள உற்சவர் அங்காளம்மனை கோவிலின் வடக்கு வாயில் வழியாக பூசாரிகள் தாலாட்டியவாறு தோளில் சுமந்து வந்து ஊஞ்சல் மண்டபத்தில் உள்ள ஊஞ்சலில் அமர வைத்து பூசாரிகள் தாலாட்டு பாடல்களை பாடினர்.

    நள்ளிரவில் நடைபெற்ற ஊஞ்சல் உற்சவத்தை காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாமல் ஆந்திரா,கர்நாடகா, தெலுங்கான, பாண்டிச்சேரி உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமிதரிசனம் செய்தனர்.

  • srirangam pagal pathu

    திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருந்திருவிழா கோலாகலமாக துவங்கியது – பகல் பத்து முதல் நாள் உற்சவத்தில் கொள்ளை கொள்ளும் பேரழகுடன் ராஜ நடை போட்டு வலம் வந்த திருவரங்கன்.

    108 வைணவ  திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் அன்போடு அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயிலில் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம் என்றழைக்கப்படும் முதல் விழாவுடன்  நேற்று தொடங்கியது.

    இந்நிலையிப் பகல் பத்து வைபவத்தின் முதல் நாளான இன்று நம்பெருமாள் காலை 7.00 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டார். பாண்டியன்  கொண்டை அலங்காரத்தில் ரத்தின காது காப்பு, வைர அபயஹஸ்தம்,லட்சுமி பதக்கம், பவளமாலை, முத்து சரம்,அடுக்கு பதக்கம் உள்ளிட்ட எழில் மிகு திருக்கோலத்தில் புறப்பட்ட நம்பெருமாள் ராஜ நடைப்போடு வலம் வந்து சரியாக 7.30 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தை வந்தடைந்தார்.

    நம்பெருமாள் புறப்பாடின் போது ரங்கப்பிரபு … ரெங் நாதா என்று பக்தி பரவசத்துடன் பக்தர்கள் கோஷங்களை எழுப்பினர். நம்பெருமாள் அர்ஜுன மண்டபத்தில் மாலை வரை பக்தர்களுக்கு சேவை சாதிப்பார் – பின்னர் இரவு 9 மணிக்கு அங்கிருந்து புறப்படும் நம்பெருமாள் இரவு 10 மணிக்கு மூலஸ்தானம் சேர்கிறார்.

    வைகுண்ட ஏகாதேசி பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கருதப்படும் நம்பெருமாள்  நாச்சியார் திருக்கோலம் வருகின்ற 22ஆம் தேதியும் – வைகுண்ட ஏகாதேசி சொர்க்கவாசல் திறப்பு வருகின்ற 23ஆம் தேதி சனிக்கிழமையும்  நடைபெற உள்ளது.

  • December 14 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  வெற்றி
    ரிஷபம்         –    வாழ்வு
    மிதுனம்     –   தனம்
    கடகம்         –  லாபம்
    சிம்மம்         –   வரவு
    கன்னி         –    ஆதரவு  
    துலாம்         –     வாழ்வு
    விருச்சிகம்     –  நட்பு
    தனுசு         –     பணிவு
    மகரம்         –    நன்மை  
    கும்பம்         –      ஓய்வு
    மீனம்         –      நற்செயல்
    சந்திராஷ்டமம்    –      ரோகிணி, மிருகசீருஷம்

     

  • December 14 2023 Subamuhurthanaal

    டிசம்பர் 14 – வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 10.30 – 12.00)
    சோபகிருது வருடம் – கார்த்திகை 28
    சுபமுகூர்த்த நாள்
    14-டிச-2023 வியாழன்
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 10.30 – 12.00)
    நல்ல நேரம் : 10.30 – 12.00
    ராகு : 1.30 – 3.00
    குளிகை : 9.00 – 10.30
    எமகண்டம் : 6.00 – 7.30
    திதி : துவிதியை
    திதி நேரம் : துவிதியை ந.இ 3.3
    நட்சத்திரம் : மூலம் கா 11.42
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : ரோகிணி,மிருகசீரிசீ டம்
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்

     

  • December 13 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  உற்சாகம்
    ரிஷபம்         –    போட்டி
    மிதுனம்     –   பொறுமை
    கடகம்         –  ஓய்வு
    சிம்மம்         –   ஆதாயம்
    கன்னி         –    நட்பு
    துலாம்         –     சிரமம்
    விருச்சிகம்     –  செலவு
    தனுசு         –     வருத்தம்
    மகரம்         –    பெருமை
    கும்பம்         –      எதிர்ப்பு   
    மீனம்         –      பயம்
    சந்திராஷ்டமம்    –      கார்த்திகை, ரோகிணி

  • December 13 2023 Indrayanaal

    டிசம்பர் 13 – இன்றைய நல்லநேரம்
    சோபகிருது வருடம் – கார்த்திகை 27
    13-டிச-2023 புதன்
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 12.00 – 1.30
    குளிகை : 10.30 – 12.00
    எமகண்டம் : 7.30 – 9.00
    திதி : பிரதமை
    திதி நேரம் : பிரதமை அ.கா 4.35
    நட்சத்திரம் : கேட்டை ம 12.18
    யோகம் : சித்த-மரணயோகம்
    சந்திராஷ்டமம் : கார்த்திகை,ரோகிணி
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

  • Iyappan thiruvabaram

    சபரிமலையில் துறவு பூண்ட யோக நிலையில் ஐயப்பன் எழுந்தருளியிருக்கிறார். அப்படி இருந்தும் மகர விளக்கின் போது பந்தள மகா ராஜாவின் அரண்மனையிலிருந்து ஆபரணங்கள் வருவதும் அதை அணிவதும் அவர் காட்சித் தருவதும் சிறப்புப் பூஜை நிகழ்ச்சிகளாகும்.

    துறவியான சுவாமி ஆபரணங்கள் பூண்டு காட்சி தருவதேன்?

    அதற்கு ஓர் அபூர்வக் காரணம் உண்டு.
    ஐயப்பன் தன் அவதார நோக்கத்தின் நிமித்தம் பந்தள நாட்டை விட்டு சபரிமலைக்குப் புறப்படும் போது எல்லாரிடமும் தனித்தனியாக விடை பெற்றுக் கொண்டு வந்தார். அவர்களுள் பந்தள நாட்டில் நமக்குக் குருவாக இருந்த குருவும் ஒருவர்.

    அந்தக் குருவிடம் சுவாமி உங்களுக்கு நான் குருதட்சனையாக என்ன தர வேண்டும் என்று கேட்டார் ஐயப்பன்.

    குரு நெகிழ்ந்து போய் பெருமானே நீர் எனக்கு இப் பிறவியில் மாணாச்சுர் என்று கூறும் பேறே எனக்கு குருதட்சனை என்றார். அவருடைய மனைவியோ ஊமையாகவும், குருடனாகவுமிருந்த தங்கள் குழந்தையைக் குணப்படுத்தித் தரவேண்டும் என்று வேண்டினார்.

    குரு பத்தினியின் கோரிக்கைப்படி அந்த குழந்தை பிணிக்கு நீங்கச் செய்தார் ஐயப்பன். அப்பொழுது தம் முன் நிற்பது தெய்வம் என்று உணர்வைக் கடந்து நெகிழ்ச்சியுற்ற நிலையில் அய்யனே நீ தங்கமும் ரத்தினமும் ஜொலிக்க மகராஜனாய் இருக்க வேண்டும், என்று ஆசீர்வதித்து விட்டார் குரு.

    எல்லாவற்றையும் கடந்த சுவாமிக்கு ஏன் சுவர்ண ரத்ன ஆபரணங்கள் என்ற உணர்வு அந்த குருவுக்கு அப்பொழுது தோன்றவில்லை. எனினும் குருவின் ஆசி ஆசிதானே.

    அது பொய்ந்து விடக் கூடாதே அதனால் தான் ஆண்டுக்கு ஒரு முறை அதாவது மகர விளக்கு விழாவின் போது தை 1-ம் தேதி முதல் தை 4-ம் தேதி வரை சுவாமி பந்தள ராஜன் பரம்பரையினர் கொண்டு வரும் ஆயிரம் சவரனுக்கு மேற்பட்ட தங்க ரத்ன ஆபரணங்களை அணிந்து காட்சி தருகிறார் ஸ்ரீ ஐயப்பன்.

  • Selvam peruga anjaneyar vazhipadu

    திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே கொத்தப்புள்ளி கிராமத்தில் உள்ள கதிர்நரசிங்க பெருமாளை வழிபட்டால், ஜாதக ரீதியாக ஏற்படும் சூரியதிசை தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். ஆலயத்தில் சக்கரத்தாழ்வார் சன்னிதி உள்ளது. சதுரபலகை வடிவ கல்லில் தேவர்களுடன் சக்கரத்தாழ்வார் இருப்பது சிறப்பாகும்.

    கோர்ட்டு வழக்கு, வாகனத்தினால் வரும் விபத்து ஆகிய வற்றில் இருந்து பக்தர்களை காப்பாற்றுவதாக பக்தர்கள் நம்புகின்றனர். சக்கரத்தாழ்வார் சன்னிதியின் பின்புறத்தில் நரசிம்மர் உள்ளார். நரசிம்மரை வழிபட்டால் எதிரியின் பலம் குறையும். செல்வம் பெருகும். வெள்ளிக்கிழமை தோறும் மஞ்சள்பொடி, சந்தனம், இளநீர், பால் ஆகியவை மூலம் அபிஷேகம் செய்தால் காரிய தடைகள் அனைத்தும் நீங்கும்.

    மூலஸ்தானத்தின் கருவறையில் கமலவல்லி தாயார், லட்சுமி சமேத கதிர்நரசிங்க பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களை தன்வசப்படுத்தி, அவர்கள் கேட்ட வரங்களை பெருமாள் நிறைவேற்றி கொடுக்கிறார். அக்னி மூலைப் பகுதியில் வீரமகா ஆஞ்சநேயர் இருப்பது இங்குதான். பெருமாளை விட 6 மடங்கு பலம் கொண்டவராக ஆஞ்சநேயர் கருதப்படுகிறார். ஆஞ்சநேயரின் உடல்பகுதி கிழக்கு நோக்கியும், தலை வடக்கு நோக்கியும் உள்ளது.

    என்னிடம் வாருங்கள், அனைத்து காரியத்தையும் நான் பார்த்து கொள்கிறேன் என்று சொல்லும் வகையில் வீர நடைபோட்டபடி ஆஞ்ச நேயர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். சனிக்கிழமை தோறும் 9 வாரங்கள், 9 முறை தொடர்ச்சியாக ஆஞ்சநேயரை சுற்றி வலம் வந்தால், தாங்கள் நினைத்த காரியம் வெற்றி பெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும். திருமணமாகாத பெண்கள், ஆஞ்சநேயர் சன்னிதியில் நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால் திருமண தடை நீங்கும்.

    ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை, வடைமாலை, வெண்ணெய் காப்பு, புஷ்ப அலங்காரம், காய்கறி அலங்காரம், பழவகைகள் அலங்காரம் ஆகியவற்றை நேர்த்திக்கடனாக பக்தர்கள் செலுத்தி வருகின்றனர். வாகனங்களுடன் கூடிய பைரவர் சன்னிதி இங்கு தான் உள்ளது. தொழில் ரீதியாக வேண்டுதல்களை நிறைவேற்ற பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர்.

    ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை ராகு காலத்திலும், பகல் 10.30 மணி முதல் 12 மணி வரை வெள்ளிக்கிழமை ராகு காலத்திலும் 12 விளக்குகள் ஏற்றி வழிபடுவது சிறப்பு அம்சமாகும். ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவருக்கு பூசணிக்காய் படைத்து, தேங்காய் எண்ணெய் ஊற்றி வழிபட்டால், அனைத்து தொழில்களும் சிறந்தோங்கும். வாகன விபத்து, நான்கு கால் ஜீவன்களால் ஏற்படும் ஆபத்து ஆகியவை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

  • Narashimmar vazhipadu

    நரசிம்ம பகவானை பக்தியுடன் மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளின் தொல்லை விலகும். தசாவதாரங்களில் நரசிம்ம அவதாரமே திடீரென தோன்றிய அவதாரமாகும். நரசிம்மன் என்றால் ‘ஒளிப்பிழம்பு’ என்று பொருள். மகாவிஷ்ணு எடுத்த இந்த அவதாரம் உக்கிரமானதாக கருதப்பட்டாலும், பக்தர்கள் அவரை விரும்பி வணங்குகிறார்கள்.

    நரசிம்ம பகவானை பக்தியுடன் மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளின் தொல்லை விலகும். எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும். நரசிம்மனிடம் பிரகலாதன் போல் நாம் பக்தி கொண்டிருக்க வேண்டும். அத்தகைய பக்தியுடன் வழிபடும் பக்தர்களுக்கு, நரசிம்மர் நன்மைகளை வாரி வழங்குவார்.

    நரசிம்மரை ‘மருத்யுவேஸ்வாகா’ என்று கூறி வழிபட்டால் மரண பயம் நீங்கும். ‘அடித்தகை பிடித்த பெருமாள்’ என்றொரு பெயரும் நரசிம்மருக்கு உண்டு. அதாவது ‘பக்தர்கள் உரிமையோடு அடித்து கேட்ட மறுவினாடியே உதவுபவன்’ என்று இதற்கு பொருள். நரசிம்மர் வீற்றிருக்கும் ஆலயங்களில் ஆஞ்சநேயர் நிச்சயம் இருப்பார். நரசிம்மரை வணங்கும் பக்தர்களுக்கு அவரும் அருள்புரிவார். நரசிம்மரை தொடர்ந்து வணங்கி வழிபட்டு வந்தால் 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும்.

    ராமருக்கும், கிருஷ்ணருக்கும் நம் நாட்டில் தனி ஆலயங்கள் ஏராளம் உள்ளன. அந்த அளவுக்கு நரசிம்மருக்கு அமைந்த ஆலயங்கள் குறைவே. தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடக மாநிலங்களில் அவருக்கு தனிக்கோவிலும், சிறப்பு வழிபாடுகளும் அதிகம்.

    வைகாசி மாதம் வளர்பிறை சதுர்த்தியன்று சூரியன் மறையும் நொடியில் (பகலுமின்றி, இரவுமின்றி) மாலை அந்திப்பொழுதில் நரசிம்மர் அவதரித்தார். இதுவே நரசிம்ம ஜெயந்தியாகும். சுவாதி நட்சத்திரத்தன்று அவரை வழிபடுவது நல்ல பலனை தரும்.