திருப்பதியில் அன்னமாச்சார்யாரின் சிலைகளுடன் மலை ஏறிய அன்னமாச்சார்யா திட்டத்தினர்.
திருப்பதியில் அன்னமாச்சார்யாரின் 515-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை படி உற்சவம் நடைபெற்றது.
நிகழ்ச்சியையொட்டி, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அன்னமாச்சார்யாரின் திட்டத்தினர் செவ்வாய்க்கிழமை காலை திருப்பதி மலையடிவாரத்தில் உள்ள அலிபிரி பாதாள மண்டபத்தில் அன்னமார்ச்சார்யாரின் சிலையை வைத்து, பஜனை பாடல்கள் பாடி சிறப்பு பூஜை செய்தனர்.
அதன்பின், அன்னமாச்சார்யாரின் சிலைகளுடன் அவர்கள் பஜனை பாடல்களை பாடிய படி திருப்பதி மலையில் ஏறி ஏழுமலையானை தரிசித்தார்.
Category: அவசியம் படிக்க
அவசியம் படிக்க
-
திருமலையில் படி உற்சவம்
-
பகவதி அம்மனுக்கு நள்ளிரவில் ஒடுக்கு பூஜை
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நள்ளிரவில் ஒடுக்கு பூஜை விமர்சையாக நடைபெற்றது. மாசி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான ஒடுக்கு பூஜையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். குமரி மாவட்டத்தில் பிரசித்த பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் இறுதி நாளான நேற்று அதிகாலை 2 மணிக்கு சாஸ்தா கோவிலில் இருந்து யானை மீது களப பவனி, அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல், அடியந்திரபூஜை, குத்தியோட்டம், சாயரட்சை தீபாராதனை, இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல் ஆகியவை நடந்தன. சிகர நிகழ்ச்சியான ஒடுக்கு பூஜை நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கியது. சாஸ்தா கோவிலில் இருந்து 21 வகையான உணவு பதார்த்தங்களை கோவில் பூசாரிகள் 9 மண்பானைகள் மற்றும் ஓலைப்பெட்டிகளில் வைத்து பவனியாக கொண்டு வந்தனர். மேலும் 2 குடம் தேனும் எடுத்து வரப்பட்டது. மண்பானைகளை சுமந்து வந்த பூசாரிகள் தங்களது வாயில் துணியால் முடியிருந்தனர். உணவு பதார்த்தங்கள் வெள்ளைத்துணியால் ஒரே சீராக போர்த்தப்பட்டிருந்தது. இந்த பவனி கோவிலுக்கு வந்து முடிவடைந்தது. ஒடுக்கு பவனியின்போது எந்த சத்தமும் கேட்காதபடி மக்கள் அமைதியாக இருந்தனர். ஒடுக்கு பவனி கோவிலை ஒரு முறை சுற்றி வந்ததும் உணவு பதார்த்தங்கள் ஒவ்வொன்றாக அம்மன் முன் இறக்கி வைக்கப்பட்டன. பின்னர் அவை அம்மனுக்கு படையலிடப்பட்டன. அதைத்தொடர்ந்து குருதி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதன்பிறகு ஒடுக்கு பூஜை தீபாராதனையும் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தீபாராதனை நடந்தபோதே திருவிழா திருக்கொடியும் இறக்கப்பட்டது.
-
திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயிலில் பங்குனி தேரோட்டம்
பஞ்சபூத ஸ்தலங்களில் திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் கோயில் நீர் ஸ்தலமாக திகழ்கிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் மண்டல பிரமோற்சவம் சிறப்பாக கொண்டாடப்படும். இந்தாண்டு மண்டல பிரமோற்சவம் கடந்த மாதம் 25ம் தேதி பெரிய கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழா வருகிற ஏப்ரல் 4ம் தேதி வரை நடைபெறும்.மண்டல பிரமோற்சவத்தின் முக்கியவிழா பங்குனி தேர் திருவிழாவாகும். இத்தேர்திருவிழா எட்டுத்திக்கும் கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. கோயிலின் 3 மற்றும் 4ம் பிரகாரங்களில் எட்டுத்திக்கிலும் உள்ள கொடிமரங்களில் கொடியேற்றும் நிகழ்ச்சி காலை 7.30 மணி முதல் 8.30 மணிவரை நடைபெற்றது. அதனையொட்டி, சோமாஸ்கந்தர் அம்பாளுடன் வெள்ளி ஏகசிம்மாசனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கொடியேற்றத்தை கண்டருளினார். 3ம் நாள் இரவு சுவாமி பூத வாகனத்திலும், அம்மன் காமதேனு வாகனத்திலும், 4ம் நாள் இரவு சுவாமி கைலாச வாகனத்திலும், அம்மன் கிளி வாகனத்திலும், 5ம் நாள் இரவு சுவாமி ரிஷப வாகனத்திலும், அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்திலும் 4ம் பிரகாரத்தில் வீதியுலா வந்து அருள்பாலிக்கின்றனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 19ம்தேதி நடக்கிறது. இதையொட்டி, சுவாமி, அம்பாள் தனித்தனி பெரிய தேரில் எழுந்தருளி 4ம் பிரகாரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். பங்குனி தேர்த் திருவிழா வருகிற 23ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து மௌனோத்சவம், சண்டிகேஸ்வரர் உற்சவமும், சொக்கர் உற்சவமும், ஏப்ரல் 2ம்தேதி பஞ்சப்பிரகார விழாவும் நடைபெறுகிறது. இதையொட்டி சுவாமி அம்பாள் வேடமிட்டும், அம்பாள் சுவாமி வேடமிட்டும் எழுந்தருளி 5ம் பிரகாரத்தில் வீதியுலா வந்து அருள்பாலிப்பர். ஏப்ரல் 4ம் தேதியுடன் மண்டல பிரமோற்சவ விழா நிறைவடைகிறது.
-
எல்லையம்மனுக்கு 2007 இளநீர் அபிஷேகம்.
பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடியில் பிரசித்தி பெற்ற ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் 7-ம் ஆண்டு கும்பாபிஷேக விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும், விஷேச பூஜைகளும் நடைபெற்றது. முன்னதாக பூந்தமல்லி வரதராஜ பெருமாள் கோவிலிலிருந்து ஏராளமான பக்தர்கள் 2007 இளநீரை தலையில் சுமந்தபடி டிரங்க் சாலையில் குமணன்சாவடி ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக நடந்து வந்தனர். உடன் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் ஊர்வலம் வந்தது. பின்னர் பக்தர்கள் கொண்டு வந்த இளநீரால் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு பூஜைகளும், 5 ஆயிரம் பேருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. மாலையில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.
-
கோடை விடுமுறை… திருமலையில் கூடுதல் தரிசன டிக்கெட்டுகள்….
கோடை விடுமுறையை முன்னிட்டு திருமலை தேவஸ்தான இணையதளத்தில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வாரத்துக்கு கூடுதலாக 17 ஆயிரம் தரிசன டிக்கெட் வெளியிடப்படுகின்றன. ஏழுமலையான் தரிசனத்தை எளிமையாக்க தேவஸ்தானம் இணையதளம் வாயிலாக ரூ. 300 விரைவு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை ஏற்படுத்தியது. இதன் மூலம் தினந்தோறும் 18 ஆயிரம் டிக்கெட் வரை முன்பதிவு செய்யப்படுகின்றன. பக்தர்கள் தங்கள் விடுமுறை நாள் மற்றும் நேரம் உள்ளிட்டவற்றை தேர்ந்தெடுத்து 90 நாள்களுக்கு முன்பாக திருமலை பயணத்தை முன்பதிவு செய்கின்றனர். இந்த தரிசன டிக்கெட் பெற்றவர்கள் 2 மணி நேரத்தில் ஏழுமலையானைத் தரிசிக்க முடிவதால் வாடகை அறைகளும் அவர்களுக்கு தேவைப்படுவதில்லை. இந்நிலையில் தேவஸ்தான இணையதளத்தில் இதுவரை தேவஸ்தானம், ஏப்ரல் மாத கோட்டாவை வெளியிடவில்லை. ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் கோடை விடுமுறை காரணமாக பக்தர்களின் வருகை அதிகம் இருக்கும். அதனால் இந்த தரிசன டிக்கெட்டின் எண்ணிக்கையை உயர்த்தி, ஒரு வாரத்துக்கு கூடுதலாக 17 ஆயிரம் டிக்கெட்டை இணைத்து இன்னும் 3 நாள்களில் ஏப்ரல், மே மாத கோட்டாக்கள் இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
பழநி கோயிலில் வரும் 24ல் கொடியேற்றம்
முருகக் கடவுளின் விழாக்களில் பங்குனி உத்திரம் திருவிழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக பழனி கோவிலில் பங்குனி உத்திரம் விழா சிறப்பு வாய்ந்ததாக பக்தர்களால் கருதப்படுகிறது. பங்குனி உத்திர விழாவின்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து வருவார்கள். பழநி தண்டாயுதபாணி சாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா வரும் 24ம் தேதி காலை 11 – 12 மணிக்குள் திருஆவினன்குடி கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. முக்கிய நிகழ்வான திருக்கல்யாண நிகழ்ச்சி வரும் 29ம் தேதி நடக்கிறது. அன்றிரவு 7 – 8.30 மணிக்குள் திருக்கல்யாண நிகழ்ச்சியும், முத்துக்குமாரசாமி மற்றும் வள்ளி-தெய்வானை மணக்கோலத்தில் வெள்ளி ரதத்தில் உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறும். பங்குனி உத்திர தேரோட்டம் வரும் 30ம் தேதி நடக்கிறது.
-
திருமலையில் 13ம் தேதி ஆழ்வார் திருமஞ்சனம்
யுகாதி பண்டிகையை யொட்டி, வரும் 13ம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடப்பதால் அன்று 6 மணி நேரம் தரிசனம் நிறுத்தப்படுகிறது.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி, யுகாதி, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம் ஆகிய விசேஷங்களுக்கு முன்னதாக வரும் செவ்வாய்க்கிழமைகளில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி வரும் 18ம் தேதி யுகாதி பண்டிகையான தெலுங்கு வருட பிறப்பையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. இதற்காக 13ம் தேதி (செவ்வாய்க்கிழமை) கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது. அன்று காலை 6 மணிக்கு கருவறையில் உள்ள மூலவருக்கு பட்டு வஸ்திரத்தால் மூடப்பட்டு, கருவறை முதல் கோயில் அனைத்து சன்னதிகளும், மண்டபங்களும் சுத்தம் செய்து பச்சை கற்பூரம், சிலிகட்டை, மஞ்சள், குங்குமம் மற்றும் திரவியம் கலந்து மூலிகை கலவையை கோயில் முழுவதும் தெளிக்கப்பட உள்ளது.இதையொட்டி அன்று காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை பக்தர்கள் தரிசனம் நிறுத்தப்படும். இப்பணிகள் முடிந்ததும் 12 மணிக்கு பிறகு பக்தர்கள் வழக்கம்போல் ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்படுவர் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
-
சென்னையில் ஸ்ரீ பத்மாவதி தாயார் கோயில்….
திருப்பதி, தமிழகத்தில் கன்னியாகுமரி, அரியானா மாநிலத்தில் குருஷேத்ரா ஆகிய இடங்களில் இந்த ஆண்டு மே மாதத்துக்குள் திருப்பதி வெங்டேஸ்வரா கோயில் திறக்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கன்னியாகுமரியிலும், அரியானா மாநிலம் குருஷேத்ராவிலும் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதி வெங்கடேஸ்வரா கோயில் கட்டப்பட்டு வருகிறது. இந்தக் கோயில் வரும் கோடை காலத்துக்குள் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படும். கன்னியாகுமரியில் ரூ.22.60 கோடியில் கட்டப்பட்டுவரும் கோயில், வரும் மே மாதம் திறக்கப்படும். அரியானாவில் ரூ.34.60 கோடியில் கட்டப்பட்டு வரும் வெங்கடேஸ்வரா கோயில் பணிகள் முடிந்து, ஏப்ரல் மாதம் திறக்க முடிவு செய்துள்ளோம். மேலும், சென்னையில் ரூ.7 கோடி செலவில் ஸ்ரீ பத்மாவதி தாயார் கோயிலும் கட்டுவதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. மேலும், ஒடிசா மாநிலம், புவனேஷ்வர் நகரிலும் ரூ. 7 கோடி செலவில் வெங்கடேஷ்வரா கோயில் கட்டும் பணியும் தொடங்கப்பட உள்ளது. இவ்வாறு அனில் குமார் சிங்கால் தெரிவித்தார்.
-
காஞ்சி சங்கரமடத்தின் 70வது மடாதிபதியாக விஜயேந்திரர் பொறுப்பேற்றார்
காஞ்சி சங்கரமடத்தின் மடாதிபதியாக விஜயேந்திரர் பொறுப்பேற்றார் என்று மடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யர் தெரிவித்துள்ளார். காஞ்சி காமகோடி பீடத்தின் 69-வது மடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கடந்த மாதம் 28-ந்தேதி காலையில் முக்தியடைந்தார். இந்த மாதம் 1-ந்தேதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காஞ்சி காமகோடி பீடத்தின் 70-வது மடாதிபதியாக பொறுப்பு ஏற்றுள்ளார். முக்தியடைந்த ஜெயேந்திரரின் முதலாவது ஆராதனை வருகிற 13-ந்தேதி காஞ்சி சங்கரமடத்தில் வைதீக முறைப்படி நடைபெறும். இது தவிர நாடு முழுவதும் உள்ள மடத்தின் கிளைகளில் ஜெயேந்திரரின் படங்கள் வைக்கப்பட்டு தினமும் நாம சங்கீர்த்தனை நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.
-
கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் தேரோட்டம்….
மாசிமகத்தை முன்னிட்டு கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. 108 திவ்ய மங்களப் பொருள்களால் அலங்காரம் செய்யபட்டு சாரங்கபாணி கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது. சாரங்கபாணி கோயிலில் இந்த ஆண்டு மாசிமக விழா கடந்த 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. 108 திவ்ய மங்களப் பொருள்களால் அலங்காரம் செய்யப்பட்ட தேரை ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து இழுத்தனர். இந்தத் தேரில் சாரங்கபாணி உற்சவர் அலங்கரிக்கப்பட்டு ஏற்பட்டதோடு அவருக்கு தீபாராதனை காட்டப்பட்ட பிறகு பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.