Author: லிங்கேஷ்

  • Sri Rangam Chitirai Car Festival

    பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழா வருகிற 25-ந்தேதி தொடங்குகிறது.

    பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர் திருவிழா வருகிற 25 ஆம் தேதி தொடங்குகிறது. மே 5 ஆம் தேதி வரை நடைபெற இந்த விழாவுக்கு நாளை மறுநாள் காலை கொடி ஏற்றப்படுகிறது.

    28-ந்தேதி மாலை 6 மணிக்கு கருட வாகனத்தில் நம்பெருமாள் வீதி உலா வருகிறார். மே 2-ந்தேதி காலை 7 மணிக்கு வண்டுலூர் சப்பரத்திலும், மாலை 6.30 மணிக்கு மேல் தங்க குதிரை வாகனத்திலும் நம்பெருமாள் எழுந்தருளி சேவை சாதிக்கிறார். மே 3-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது. 5-ந்தேதி இரவு 8 மணிக்கு ஆளும் பல்லக்கில் நம்பெருமாள் வீதி உலா வருகிறார்.

    முன்னதாக சித்திரை திருநாளை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு ஆண்டு தோறும் வஸ்திர மரியாதை செய்யப்படுவது வழக்கம். இந்த ஆண்டு வஸ்திர மரியாதை செய்யும் நிகழ்ச்சி மே  2-ந்தேதி நடைபெற உள்ளது.
     

  • Thirupathy Rush

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தொடர் விடுமுறையின் காரணமாக சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் 26 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

     வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ்சில் 31 கம்பார்ட்மெண்டுகள் நிரம்பி சுமார் 3  கிலோ மீட்டர் தூரத்திற்கு  சந்திப்பு வரை பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். கூட்டம் காரணமாக பக்தர்கள், தங்கும் விடுதிகள் கிடைக்காமல் பூங்காக்களில் தங்கியிருந்தனர். அவர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் மோர், பால், தயிர்சாதம், குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டது.

    கூட்டம் காரணமாக இலவச தரிசனத்திற்கு 26 மணி நேரம் ஆனது. இதையடுத்து கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தேவஸ்தான அதிகாரிகள், திருமலை முழுவதும் உள்ள விடுதிகளுக்கு சென்று முன்பதிவு செய்த பக்தர்களிடம் கூட்டம் அதிகமாக இருப்பதால் 24 மணி நேரத்திற்குள் அறைகளை காலி செய்யும்படி கேட்டுக்கொண்டனர். 

    300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் ஆன்லைனில் முன்பதிவு செய்து வந்த பக்தர்கள் தரிசனத்திற்கு 4 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்தனர். ஆதார் அட்டை மூலமாக நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்ற சர்வ தரிசனம் பக்தர்கள், அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு மலைப்பாதையில் பாதயாத்திரையாக நடந்து சென்று திவ்ய தரிசனம் டிக்கெட் பெற்ற பக்தர்கள் தரிசனத்திற்கு சுமார் 6 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

  • Narasinga Perumal Car Festival

    தேனிமாவட்டம் ஆண்டிபட்டியருகே உள்ள 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த கதலி நரசிங்கப்பெருமாள் கோவில் சித்திரைதிருவிழா தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வடம்பிடித்து தேரை இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

  • April 20

    ஏப்ரல் 20
    விகாரி வருடம் – சித்திரை 7
    20-ஏப்-2019 சனி  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    9.00 – 10.30    
    குளிகை    :    6.00 – 7.30
    எமகண்டம்    :    1.30 – 3.00                          
    திதி    :    பிரதமை          
    திதி நேரம்    :    பிரதமை    மா    4.02
    நட்சத்திரம்    :    சுவாதி    இ    7.37
    யோகம்    :    அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    ரேவதி,அசுவினி
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – நன்மை 
    ரிஷபம் – பயம் 
    மிதுனம் – பாசம் 
    கடனம் – சிக்கல்
    சிம்மம் – ஆதரவு
    கன்னி – தோல்வி
    துலாம் – நோய்
    விருச்சிகம் – லாபம் 
    தனுசு – செலவு
    மகரம் –   சுகம்  
    கும்பம் – கவலை
    மீனம் – வெற்றி
    சந்திராஷ்டமம்    – ரேவதி, அசுவினி
     

  • Ramachandra perumal Car fest … Vedio

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த நெடுங்குணம் ஸ்ரீ சீதா லஷ்மண அனுமந்த சமேத ஸ்ரீ ராமச்சந்திர பெருமாள் பிரம்மோற்சவ திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்…. வீடியோ காட்சி

  • Thirupalthy Thanga Therottam

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர வசந்தோற்சவத்தை முன்னிட்டு தங்கத்தேரோட்டம் நடந்தது. 

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர வசந்தோற்சவம் வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 2-வதுநாளான நேற்று காலை 7 மணியில் இருந்து 8 மணிவரை தங்கத்தேரோட்டம் நடந்தது.

    உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் தங்கத்தேரில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு வடம்பிடித்து இழுத்து, தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து  பக்தர்கள் கோவிந்தா… கோவிந்தா… எனப் பக்தி கோஷம் எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
     

  • Kallazhagar Thiruvizha

    பக்தர்கள் கோவிந்தா முழக்கம் விண்ணை பிளக்க பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர். 

    மதுரை மாவட்டம் அழகர்கோவில் சுந்தர்ராஜப் பெருமாள், கள்ளழகர் வேடமிட்டு வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக நேற்று முன்தினம் தங்கப் பல்லக்கில் புறப்பட்டார். நேற்று காலை மூன்றுமாவடிக்கு வந்த கள்ளழகரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து தரிசித்தனர். வழிநெடுகிலும் அமைக்கப்பட்டிருந்த ஏராளமான மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்த கள்ளழகர், இரவில் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலுக்கு வந்தார். அங்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையுடன் பக்தர்களுக்கு அவர் காட்சியளித்தார்.

    இன்று அதிகாலை, தல்லாகுளம் கருப்பண சுவாமி கோவிலில் வெட்டிவேர், ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளிய பின், பக்தர்கள் புடைசூழ கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கப் புறப்பட்டார். அவரை வெள்ளிக்குதிரை வாகனத்தில் வந்த வீரரராகவ பெருமாள் வரவேற்றார். சரியாக 5.47 மணிக்கு பச்சைப் பட்டுடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கியபோது, வைகையின் இருபுறமும் கடலென திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்திப் பரவசத்துடன் முழக்கமிட்டனர்.
     

  • Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –  வரவு
    ரிஷபம் – சிக்கல் 
    மிதுனம் – நோய்
    கடனம் – எதிர்ப்பு
    சிம்மம் – வெற்றி    
    கன்னி – போட்டி
    துலாம் – பயம் 
    விருச்சிகம் – நட்பு
    தனுசு – தடங்கல்
    மகரம் –   மகிழ்ச்சி 
    கும்பம் – ஆதாயம்  
    மீனம் – சுகம் 
    சந்திராஷ்டமம்    – உத்திரட்டாதி,ரேவதி
     

  • April 19 Chitira paurnami

    விகாரி வருடம் – சித்திரை 6
     பவுர்ணமி 
    புனித வெள்ளி, சித்ரா பவுர்ணமி, மதுரையில் கள்ளழகர் எழுந்தருளல்
    19-ஏப்-2019 வெள்ளி  
    கரிநாள்
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    10.30 – 12.00    
    குளிகை    :    7.30 -9.00
    எமகண்டம்    :    3.00 – 4.30                          
    திதி    :    பவுர்ணமி          
    திதி நேரம்    :    பவுர்ணமி    மா    5.20
    நட்சத்திரம்    :    சித்திரை    இ    8.10
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    உத்திரட்டாதி,ரேவதி
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்