ஏப்ரல் 27 இன்றைய நாள்
விகாரி வருடம் – சித்திரை 14
27-ஏப்-2019 சனி
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 9.00 – 10.30
குளிகை : 6.00 – 7.30
எமகண்டம் : 1.30 – 3.00
திதி : அஷ்டமி
திதி நேரம் : அஷ்டமி மா 6.07
நட்சத்திரம் : திருவோணம் இ 3.51
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : பூசம்
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
Author: லிங்கேஷ்
-
April 27 Indraya Naal
-
Thirupathy Temple Yearly Income
திருப்பதி கோவில் ஆண்டு வருமானம் ரூ.3,100 கோடியாக அதிகரித்துள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் சிலவற்றில் வைப்பு வைக்கப்பட்டுள்ள தொகையின் மதிப்பு ரூ.12,000 கோடியைத் தாண்டியுள்ளது. அவற்றிலிருந்து ஆண்டு தோறும் சுமார் ரூ.845 கோடி வட்டியாக கிடைத்து வருவதா திருப்பதி திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
கோவிலின் ஆண்டு வருமானம் ரூ.3,100 கோடியாக அதிகரித்துள்ளதாகவும். இந்த ஆண்டு இதுவரை கோவிலுக்கு 2.5 கோடி பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக வழங்கிய வகையில் 8.7 டன் தங்கம், கற்கள் பதிக்கப்பட்ட 550 கிலோ தங்க ஆபரணங்கள் தேவஸ்தானம் வசம் உள்ளன. அதில் ஆபரண தங்கம் உருக்கப்பட்டு சொக்கத் தங்கமாக மாற்றப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
காணிக்கையாக கிடைத்த 8.7 டன் தங்கத்தில், 5,387 கிலோ பாரத ஸ்டேட் வங்கியிலும், 1,938 கிலோ இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலும் வைப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
-
Rasi Palangal
இன்றைய ராசி பலன்கள்
மேஷம் – தாமதம்
ரிஷபம் – சுகம்
மிதுனம் – வரவு
கடனம் – சிக்கல்
சிம்மம் – முயற்சி
கன்னி – எதிர்ப்பு
துலாம் – வெற்றி
விருச்சிகம் – கவலை
தனுசு – பயம்
மகரம் – நட்பு
கும்பம் – தடங்கல்
மீனம் – களிப்பு
சந்திராஷ்டமம் – திருவாதிரை, புனர்பூசம்
-
April 26 – subamugurthanaal
விகாரி வருடம் – சித்திரை 13
26-ஏப்-2019 வெள்ளி ஷாபான்20
சுபமுகூர்த்த நாள்(காலை 9.00 – 10.30)
நல்ல நேரம் : 9.00 – 10.30
ராகு : 10.30 – 12.00
குளிகை : 7.30 -9.00
எமகண்டம் : 3.00 – 4.30
திதி : சப்தமி
திதி நேரம் : சப்தமி மா 5.22
நட்சத்திரம் : உத்திராடம் இ 1.28
யோகம் : சித்த-மரண யோகம்
சந்திராஷ்டமம் : திருவாதிரை,புனர்பூசம்
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
-
Rasi Palangal
இன்றைய ராசி பலன்கள்
மேஷம் – சோதனை
ரிஷபம் – அலைச்சல்
மிதுனம் – இன்பம்
கடனம் – புகழ்
சிம்மம் – உதவி
கன்னி – தாமதம்
துலாம் – நிம்மதி
விருச்சிகம் – நட்பு
தனுசு – அச்சம்
மகரம் – மேன்மை
கும்பம் – போட்டி
மீனம் – தடங்கல்
சந்திராஷ்டமம் – மிருகசீரிடம், திருவாதிரை
-
April 25 – Indraya Naal Eppadi
ஏப்ரல் 25 – இன்றைய நாள் எப்படி?
விகாரி வருடம் – சித்திரை 12
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி தேர்
25-ஏப்ரல்-2019 வியாழன்
நல்ல நேரம் : 10.30 – 12.00
ராகு : 1.30 – 3.00
குளிகை : 9.00 – 10.30
எமகண்டம் : 6.00 – 7.30
திதி : சஷ்டி
திதி நேரம் : சஷ்டி ம 3.57
நட்சத்திரம் : பூராடம் இ 11.21
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : மிருகசீரிடம்,திருவாதிரை
சூலம் : தெற்கு
பரிகாரம் : தைலம்
-
Kanchipuram Kachabeswarar Velli ther
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை மாத உற்சவம் பத்தாம் நாள் ஒட்டி வெள்ளி ரதம் வெகுவிமர்சையாக நடைபெற்றது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளி தேரை வடம்பிடித்து சாமி தரிசனம் செய்தனர்.
காஞ்சிபுரம் அருள்மிகு சுந்தராம்பாள் சமேத ஸ்ரீ கச்சபேஸ்வரர் சுவாமி திருக் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பிரம்மோற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு சித்திரை மாதம் பிரம்மோற்சவம் கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து பத்தாம் நாளான இன்று வெள்ளித் தேர் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வெள்ளி ரதத்தை வடம் பிடித்து சாமி தரிசனம் செய்தனர். ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை பிரம்மோற்சவம் பத்து நாள் வெள்ளி ரதம் உற்சவம் மிக முக்கியமான ஒன்றாகும்.
இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சிறப்பு ஆராதனையும் பிரசாதமும் வழங்கப்பட்டது. மூன்றடுக்கு உற்சவ குடை மூலம் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். வெள்ளி ரத உற்சவம் தை ஒட்டி சிறப்பு வானவேடிக்கையும் ஏற்பாடு செய்யப்பட்டு பக்தர்கள் கண்டு மகிழ்ந்தனர்.
-
Samayapuram Mari amman Koil thiruvizha
நிறைவு நாளில் அம்மன் தங்க கமல வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்ககு அருள்பாலித்தார். திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் கடந்த 16 ந்தேதி சித்திரை தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது பல்வேறு நேர்த்தி கடன்களை செலுத்தி அம்மனை வழிபட்டு சென்றனர். அதன் தொடர்ச்சியாக அம்மன் காமதேனு வாகனம், முத்து பல்லக்கு,தெப்பத்தேரில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இந்நிலையில் சித்திரை தேரோட்டத்தின் நிறைவு நாளான இன்று மாலை அம்மனுக்கு அபிஷேகம் கண்டருளி இரவு தங்க கமல வாகனத்தில் வீதி் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து மூலஸ்தானம் சென்றடைந்தது.இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.
இவ்விழாவினை கோயிலின் இனை ஆணையர் அசோக்குமார், அலுவலக பணியாளர்கள்,கோயில் ஊழியர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
-
Thiruninravur Bakthavachala Perumal Thiruvooral
திருநின்றவூரில் உள்ள பக்தவத்சல பெருமாளுக்கு திருவூறல் உற்சவம் விமர்சையாக நடைபெற்றுள்ளது..
திருவிழாக்கள் இல்லாத நாளில், சுவாமி ஆற்றங்கரையில் ஓய்வு எடுத்து திரும்பும் நிகழ்வு, திருவூறல் உற்சவம் எனப்படுகிறது.அந்த வகையில் திருநின்றவூர் பக்தவச்சல பெருமாள் ஆலயத்தில் திருவுறல் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருநின்றவூரில் இருந்து கூவம் ஆற்றங்கரை வந்த பக்தவத்சல பெருமாளுக்கு பக்தர்கள் முன்னிலையில் பால் ,தயிர்,சந்தனம்,பன்னீர், தேன்,இளநீர் என பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றன.
அதன் பின்னர் பல்லாக்கில் பக்தவத்சல பெருமாள் ஆற்றங்கரையில் இருந்து மீண்டும் ஆலயத்திற்கு சென்றார்.இந்த உற்சவத்ததில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
-
1008 Paal Kudam
சென்னை போருர் அருகே ஸ்ரீ துர்கையம்மன் ஆலயத்தில் சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு 1008 பெண்கள் பால் குடம் ஏந்தி ஊர்வலமாக சென்று பால் அபிஷேகம் செய்தனர்.
சென்னை போருர் அடுத்த அயப்பந்தாங்களில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ துர்கை ஆம்மன் ஆலயத்தில் சித்திரா பவுர்ணமி விழா கொண்டாப்பட்டது.விழாவை முன்னிட்டு 1008 பெண்கள் மஞ்சள் மற்றும் சிவப்பு நிற உடை அணிந்து பால் குடம் ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
அயன்பந்தாங்கள் பேருந்து நிலையத்தில் உள்ள அம்மன் கோவிலில் புறப்பட்ட பால் குட ஊர்வலமாக மங்கள வாத்தியங்கள் முழங்க பூவிருந்தவல்லி ட்ரங்க் சாலை வழியாக ஆயத்தை வந்தடைந்து. பின்னர் துர்கை அம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது.
இதனை துர்கை அம்மனுக்கு சிறப்பு அலங்கார ஆராதனை நடைபெற்றது.இந்த விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.