மே 2 – பிரதோஷம்
விகாரி வருடம் – சித்திரை 19
subamugurthanaal சுபமுகூர்த்த நாள்
02-மே-2019 வியாழன் ஷாபான்26
சுபமுகூர்த்த நாள்(காலை 10.30 – 12.00)
நல்ல நேரம் : 10.30 – 12.00
ராகு : 1.30 – 3.00
குளிகை : 9.00 – 10.30
எமகண்டம் : 6.00 – 7.30
திதி : திரையோதசி
திதி நேரம் : திரையோதசி இ 3.57
நட்சத்திரம் : உத்திரட்டாதி ம 1.29
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : உத்திரம்,அஸ்தம்
சூலம் : தெற்கு
பரிகாரம் : தைலம்
Author: லிங்கேஷ்
-
May 2 Pradosham
-
Subeeksham Perukkum Valampuri Sangu
வாழை பழத்தை குலையாக தள்ளும் வாழை மரத்தை தேர்ந்தெடுத்து முகூர்த்த நாளில் சுபவேளையில் அதன் வேர்ப் பகுதியில் சிறு குழி எடுத்து வலம்புரி சங்கை கிழக்கு முகமாக புதைத்துவிட வேண்டும். பின்பு வாழை மரத்தின் வேர்பகுதியில் சங்கு இருக்கும் இடத்தில் தினம் சிறிது பாலை ஊற்றி நாற்பத்தியைந்து நாட்கள் வாழை மரத்திற்கு இஷ்ட தெய்வத்தை நினைத்து தூப தீபம் காட்டி பூஜித்து வரவேண்டும், பின்பு ஒரு முகூர்த்த நாளில் சுப வேளையில் சங்கை எடுத்து மூன்று வித அபிஷேகங்கள் செய்து தூப தீபம் காட்டி பூஜை அறையில் வைத்து வழிபட்டு வந்தோமானால் நாம் வேண்டிய காரியங்கள் விரைவில் நடைபெறும்.குடும்பம் சுபிட்ஷம் பெறும். பணம் வீண் விரையம் ஆகாது.தெய்வகுறைகள் விலகும். குல விருத்தி அடையும்.
வலம்புரி சங்கில் நெய் ,தேங்காய் எண்ணெய், மூன்று சொட்டு தேன் விட்டு பஞ்சு திரியிட்டு கிழக்கு நோக்கி விளக்கு ஏற்றி வந்தால் ஐஸ்வர்ய கடாசம் பெருகும்.சுபகாரியங்கள் நடை பெறும்.
இடம்புரி சங்கில் இலுப்பை என்னை ஊற்றி சிறிதளவு வேப்பமரத்து வேரை அதில் இட்டு சிகப்பு சேலை துண்டு திரியிட்டு கிழக்கு நோக்கி விளக்கு ஏற்றி வந்தால் துஷ்டசக்திகளும், தரித்திரங்களும் விலகும்.
வலம்புரி சங்கு வழிபாடு நமக்கு வளத்தை கொடுக்கும். இடம்புரி சங்கு வழிபாடு நமக்கு இடர்களை நீக்கி நன்மையை உண்டாக்கும்.
-
Rasi Palangal
இன்றைய ராசி பலன்கள்
மேஷம் – போட்டி
ரிஷபம் – நிம்மதி
மிதுனம் – கவலை
கடனம் – பக்தி
சிம்மம் – சினம்
கன்னி – பரிவு
துலாம் – யோகம்
விருச்சிகம் – சுகம்
தனுசு – பயம்
மகரம் – ஆக்கம்
கும்பம் – தாமதம்
மீனம் – தடை
சந்திராஷ்டமம் – பூரம், உத்திரம்
-
May 1 – May Day
மே 1 – மே தினம்
விகாரி வருடம் – சித்திரை 18
01-மே-2019 புதன்
நல்ல நேரம் : 9.00 – 10.30
ராகு : 12.00 – 1.30
குளிகை : 10.30 – 12.00
எமகண்டம் : 7.30 – 9.00
திதி : துவாதசி
திதி நேரம் : துவாதசி இ 2.38
நட்சத்திரம் : பூரட்டாதி கா 11.21
யோகம் : அமிர்த-சித்த யோகம்
சந்திராஷ்டமம் : பூரம்,உத்திரம்
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்
-
Gayathri Manthiram
ஓம் பூர்புவஸ்ஸுவ்:
ஓம் தத் ஸவிதுர்வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி!
தியோ யோ ந: ப்ரசோதயாத்!!ய: யார்ந:நம்முடைய திய:
அறிவை ப்ரசோதயாத்:தூண்டுகிறாரோ
தத்:அந்த தேவஸ்ய:சுடருடைய
ஸவிது:கடவுளின் வரேண்யம்:
மேலான பர்க: ஒளியை
தீமஹி தியானிப் போமாக" யார் நம் அறிவைத் தூண்டுகிறாரோ அந்த சுடர்க் கடவுளின் மேலான ஒளியைத் தியானிப்போமாக " இது தான் காயத்ரி மந்திரத்தின் தமிழாக்கம், " காயத்ரி மந்திரத்தை மற்றவர்களோடு கூடியிருந்து உரக்க உச்சரிக்கலாம். இறைவனுடைய நாம பஜனத்தை எல்லோரும் ஒன்று கூடியிருந்து உரக்க உச்சரிப்பது போன்று, காயத்ரி மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்…..
காலையிலும், மாலையிலும், நண்பகலிலும் ஆகிய மூன்று சந்தியா வேளைகளில் இந்த வழிபாட்டில் ஈடுபடுவது உசிதம். நண்பகலில் இதில் ஈடுபட இயலாவிடில், ஒரே ஒரு தடவை இந்த ஈடுபாட்டை ஞாபகத்திற்கு கொண்டு வந்தால் போதுமானது.
உடல்பயிற்சி உடலை உறுதிப்படுத்துவது போன்றும், கல்வி மனதைப் பண்படுத்துவது போன்றும், காயத்ரி மந்திரம் மனிதனுடைய ஆத்ம சொரூபத்தை ஊக்குவிக்கிறது. காயத்ரி மந்திரத்தை உரு ஏற்றுபவர்களுக்கு நன்மை உண்டாகிறது. ஆடவர், மகளிர் என்ற பாகுபாடின்றிப் பெரு வாழ்வை நாடும் பெரு மக்கள் எல்லோரும், இந்த சிறந்த வேத மந்திரத்தை நன்கு பயன்படுத்துவது உசிதம்.
-
OM Pranava Mandhiram
அமைதியை தேடி அலைகின்ற மனங்கள் ஜெபிக்க வேண்டிய மந்திரம் ஓம். ஒற்றைச் சொல்தான் என்றாலும் அதன் சக்தி சொற்களை கடந்தது. ஓம் எனும் மந்திரம் செய்யும் அற்புதங்கள் அனுபவ பூர்வமாக நாம் உணர வேண்டிய ஒன்று.
'ஓம்' என்று தொடர்ந்து உச்சரித்துக்கொண்டிருந்தால், உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்கிறது. 'ஓம்' என்று உச்சரித்துவர நாளடைவில் நம் எண்ணங்களின் மீது சுயக்கட்டுப்பாடு அதிகரிக்கிறது.
இதனால், தேவையற்ற சிந்தனைகள், எண்ணங்கள், உணர்வுகள் உருவாவது தடுக்கப்படுகிறது. தூயமையான எண்ணத்தோடு சாந்தமான ஆரோக்கியமான ஒரு வாழ்வு வாழ ஓம் என்று உச்சரிப்போம் உன்னத வாழ்வுதனை
-
Rasi Palangal
இன்றைய ராசி பலன்கள்
மேஷம் – வரவு
ரிஷபம் – பயம்
மிதுனம் – நன்மை
கடனம் – செலவு
சிம்மம் – ஆதாயம்
கன்னி – சுகம்
துலாம் – நேர்மை
விருச்சிகம் – கவலை
தனுசு – தாமதம்
மகரம் – லாபம்
கும்பம் – அச்சம்
மீனம் – பகை
சந்திராஷ்டமம் – பூரம்
-
April 30 – Indraya Naal Eppadi
ஏப்ரல் 30 – இன்றைய நாள் எப்படி?
விகாரி வருடம் – சித்திரை 17
30-ஏப்-2019 செவ்வாய்
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 3.00 – 4.30
குளிகை : 12.00 – 1.30
எமகண்டம் : 9.00 – 10.30
திதி : ஏகாதசி
திதி நேரம் : ஏகாதசி இ 12.59
நட்சத்திரம் : சதயம் கா 8.55
யோகம் : மரண யோகம்
சந்திராஷ்டமம் : பூரம்
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்
-
Shakthi Peedangal thondriya varalaru
சிவ பெருமான் சக்தியின் உடலை தூக்கி நடனம் ஆடி உடலை 51 பாகங்களாக துண்டுகளாக அகண்ட பாரதத்தில் வீழ்ந்த இடங்களே சக்தி பீடங்கள்!
பிரம்ம புத்திரனான தட்சன் ஆயிரம் ஆண்டுகள் கடும் தவம் புரிந்து, சிவபெருமானிடம் 'பிரஜாபதி பட்டத்துடன், ஈரேழு உலகங்களை ஆளும் வல்லமையையும்' வரமாகப் பெற்றான்'. மேலும் ஜகன் மாதாவான அம்பிகையைப் புதல்வியாக அடையும் வரத்தையும் வேண்டிப் பெற்றான்.
இப்படி எண்ணற்ற ஆண்டுகள் அனைத்து உலகங்களையும் ஆட்சி செலுத்திய மமதையால் அகங்காரம் மேலிட, தானே ஈஸ்வரன் என்று எண்ணத் துவங்கினான். தர்ம நெறிகளில் இருந்து முற்றிலும் விலகி செயல்படவும் துவங்கினான். வரமளித்த இறைவனிடமே குரோதம் கொண்டு, சிவபெருமானை அவமதிக்கும் பொருட்டு ஒரு யாகமும் தொடங்கினான்.
ஹரித்வாரில் அமைந்துள்ள 'கனகல்' என்னும் தலத்தில் யாகம் தொடங்கப் பட்டது. அன்னை சதி தேவி தட்சனுக்கு அறிவு புகட்ட எண்ணி…. யாக சாலையில் தோன்றி அருள, தட்சனோ தேவியை அவமதித்ததோடு நில்லாமல் ஈசனையும் நிந்தித்துப் பேசினான். சிவ நிந்தனை பொறுக்காத அன்னை, ஹோம குண்டத்தில், யோகத் தீயினால் உடலை மாய்த்துக் கொண்டார்.
இந்நிகழ்வுக்குப் பின், சிவபெருமானின் கோபத்தால் தட்சனும், அவன் யாக சாலையும், சர்வ நாசத்துக்கு உள்ளானதை சிவபுராணம் விரிவாகப் கூறுகிறது.சிவபெருமான், சதி தேவியின் திருவுடலைச் சுமந்த படி உக்கிர தாண்டவம் ஆடத் துவங்க, மகா பிரளயம் உருவாகும் அபாயம் தோன்றியது. ஸ்ரீமகா விஷ்ணு, சர்வேஸ்வரரை அமைதியுறச் செய்யும் பொருட்டு, தன் சுதர்சன சக்கிரத்தால் தேவியின் திருவுடலை பல்வேறு துண்டுகளாக அகண்ட இப்புவியில் சிதறும் வண்ணம் செய்தருள, அவை 51 சக்தி பீடங்களாக உருப்பெற்றன.
இதோ 51 சக்தி பீடங்கள்.
1 மூகாம்பிகை-கொல்லூர்-(அர்த்தநாரி பீடம்), கர்நாடகா
2. காமாட்சி-காஞ்சிபுரம்-(காமகோடி பீடம்), தமிழ்நாடு
3. மீனாட்சி-மதுரை-(மந்திரிணி பீடம்), தமிழ்நாடு
4. விசாலாட்சி-காசி- (மணிகர்ணிகா பீடம்), உ.பி.
5. சங்கரி-மகாகாளம்- (மகோத்பலா பீடம்), ம.பி.
6. பர்வதவர்த்தினி-ராமேஸ்வரம்(சேது பீடம்), தமிழ்நாடு
7. அகிலாண்டேஸ்வரி-திருவானைக்கா(ஞானபீடம்), தமிழ்நாடு
8. அபீதகுஜாம்பாள்-திருவண்ணாமலை(அருணை பீடம்), தமிழ்நாடு
9. கமலாம்பாள்-திருவாரூர்(கமலை பீடம்), தமிழ்நாடு
10. பகவதி-கன்னியாகுமரி(குமரி பீடம்), தமிழ்நாடு
11. மகாகாளி-உஜ்ஜையினி-(ருத்ராணி பீடம்), ம.பி.
12. மங்களாம்பிகை-கும்பகோணம்-(விஷ்ணு சக்தி பீடம்), தமிழ்நாடு
13. வைஷ்ணவி-ஜம்மு-(வைஷ்ணவி பீடம்), காஷ்மீர்
14. நந்தா தேவி-விந்தியாசலம்- (விந்தியா பீடம்), மிர்ஜாப்பூர்
15. பிரம்மராம்பாள்-ஸ்ரீ சைலம்-(சைல பீடம்), ஆந்திரா
16. மார்க்கதாயினி-ருத்ரகோடி-(ருத்ரசக்தி பீடம்), இமாசலபிரதேஷ்.
17. ஞானாம்பிகை-காளஹஸ்தி-(ஞான பீடம்), ஆந்திரா
18. காமாக்யா-கவுகாத்தி-(காமகிரி பீடம்) அஸ்ஸாம்
19. சம்புநாதேஸ்வரி-ஸ்ரீநகர்- (ஜ்வாலாமுகி பீடம்) காஷ்மீர்
20. அபிராமி-திருக்கடையூர்-(கால பீடம்), தமிழ்நாடு
21. பகவதி-கொடுங்கலூர்-(மகாசக்தி பீடம்), கேரளா
22. மகாலட்சுமி-கோலாப்பூர்-(கரவீரபீடம்) மகாராஷ்டிரம்
23. ஸ்தாணுபிரியை-குரு÷க்ஷத்ரம்-(உபதேசபீடம்)ஹரியானா
24. மகாகாளி-திருவாலங்காடு-(காளி பீடம்) தமிழ்நாடு
25. பிரதான காளி-கொல்கத்தா-(உத்ர சக்தி பீடம்) மேற்கு வங்காளம்
26. பைரவி-பூரி- (பைரவி பீடம்) ஒரிசா
27. மாணிக்காம்பாள்-திராக்ஷõராமா-(மாணிக்க பீடம்) ஆந்திரா
28. அம்பாஜி-துவாரகை-, பத்ரகாளி- (சக்தி பீடம்) குஜராத்
29. பராசக்தி-திருக்குற்றாலம்-(பராசக்தி பீடம்), தமிழ்நாடு
30. முக்தி நாயகி-ஹஸ்தினாபுரம்(ஜெயந்தி பீடம்) ஹரியானா
31. லலிதா-ஈங்கோய் மலை,குளித்தலை(சாயா பீடம்) தமிழ்நாடு
32. காயத்ரி-ஆஜ்மீர் அருகில் புஷ்கரம்-(காயத்ரிபீடம்) ராஜஸ்தான்
33. சந்திரபாகா-சோமநாதம்-(பிரபாஸா பீடம்) குஜராத்
34. விமலை, உலகநாயகி-பாபநாசம்(விமலை பீடம்), தமிழ்நாடு
35. காந்திமதி-திருநெல்வேலி-(காந்தி பீடம்), தமிழ்நாடு
36. பிரம்மவித்யா-திருவெண்காடு-(பிரணவ பீடம்), தமிழ்நாடு
37. தர்மசம்வர்த்தினி-திருவையாறு-(தர்ம பீடம்), தமிழ்நாடு
38. திரிபுரசுந்தரி-திருவொற்றியூர்-(இஷீபீடம்), தமிழ்நாடு
39. மகிஷமர்த்தினி-தேவிபட்டினம்-(வீரசக்தி பீடம்), தமிழ்நாடு
40. நாகுலேஸ்வரி-நாகுலம் -(உட்டியாணபீடம்) இமாசல பிரதேசம்
41. திரிபுர மாலினி-கூர்ஜரம் அருகில் ஜாலந்திரம் (ஜாலந்திர பீடம்) பஞ்சாப்
42. திரியம்பக தேவி-திரியம்பகம்- (திரிகோணபீடம்) மகாராஷ்டிரம்
43. சாமுண்டீஸ்வரி-மைசூர்-(சம்பப்பிரத பீடம்) கர்நாடகா
44. ஸ்ரீலலிதா-பிரயாகை-(பிரயாகை பீடம்) இமாசலப்பிரதேசம்
45. நீலாம்பிகை-சிம்லா-(சியாமள பீடம்) இமாசலப்பிரதேசம்
46. பவானி-துளஜாபுரம்-(உத்பலா பீடம்) மகாராஷ்டிரா
47. பவானி பசுபதி-காட்மாண்ட்-(சக்தி பீடம்) நேபாளம்
48. மந்த்ரிணி-கயை- (திரிவேணிபீடம்) பீகார்
49. பத்ரகர்ணி-கோகர்ணம்- (கர்ணபீடம்) கர்நாடகா
50. விரஜை ஸ்தம்பேஸ்வரி-ஹஜ்uபூர்- (விரஜாபீடம்) உ.பி.
51. தாட்சாயிணி-மானஸரோவர்-(தியாகபீடம்) திபெத்.
-
Irudhayaleeswarar
திருநின்றவூர்… திருமால் நின்ற ஊர்…. 108 திவ்யஸ்தளங்களில் ஒன்றாக விலங்கும் பக்தவச்சல பெருமாள் கோயில் உள்ளதால் இந்த ஊர் திருநின்றவூர் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஊரில் இது மட்டும் விசேஷம் இல்லை… இந்த ஊரில் தான் இருதயத்தை காக்கும், இருதய நோய் உள்ளவர்களுக்குப் பரிகாரத் தலமாக விளங்குகிறது இருதயாலீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு லிங்க ரூபமாய்க் காட்சி அளிக்கும் சிவபெருமான் அருள்பாலிப்பதாகக் கூறுகிறது ஸ்தல புராணம்.
சிவன் இங்கு மட்டும் இருதயத்தைக் காப்பதாகக் கூறுவதற்கு ஓர் சுவையான புராணக் கதை உள்ளது.
சிவன் இருதயாலீஸ்வராக எழுந்தருளியிருக்கும் கருவறையின் மேற்கூரையில் நான்கு பிரிவுகளுடன் இதய வடிவம் செதுக்கப்பட்டுள்ளது. இதய நோயால் துன்புற்றிருப்பவர்கள் இவ்விறைவனை மனமுருக வேண்டிப் பிரார்த்தனை செலுத்தினால் அந்நோய்களிலிருந்து விடுபடுகிறார்கள் என்பது ஐதீகம்.
சிவபக்தர் ஒருவர் உடல் முழுவதும் திருநீறைத் தொடர்ந்து பூசிவந்ததால் பூசலார் என்று அன்புடன் மக்கள் அழைத்து வந்தனர். சிவனுக்கு ஒர் கோவிலைத் திருநின்றவூரில் அமைக்க வேண்டும் என்று அவருக்கு ஆவல் ஏற்றப்பட்டது. எனவே அவரது சிந்தையில் உதித்த சிவனுக்கு கற்பனையாலேயே திருக்கோவிலைக் கட்டத் தொடங்கினார்.
பின்னர் தியானத்தில் அமர்ந்த அவர், ஆகம விதிகளின்படி ஆலயம் அமைய வேண்டும் என்பதால் பாவனையிலேயே கோவில் அமைக்கும் ஸ்தபதிகளை வரவழைத்துக் கலை நயம் மிக்க சிற்பங்களை உருவாக்கினார். பிராகாரங்களை எழுப்பினார். தச்சர்களை வரவழைத்து ஆலயத்தின் கதவுகளைக்கூடச் சிந்தனையிலேயே செதுக்கினார்.இரவு, பகல் பாராமல் இருதயத்திலேயே கோயில் எழுப்பும் இனிய பணியில் ஈடுபட்டார். இறுதியில் கும்பாபிஷேகத்துக்கான நாள் குறித்து, கையிலைநாதனை அங்கே குடியேறுமாறு மனம் உருக வேண்டினார்.
இது இப்படி இருக்க அதே காலகட்டத்தில் காஞ்சியில் சிவனுக்கு ஒரு கோயிலைச் சிறப்புறக் கட்டி முடித்திருந்தான் ராஜசிம்ம பல்லவன். மன்னன் அமைத்த கோவில் அல்லவா? இத்திருக்கோவிலின் கும்பாபிஷேகத்திற்காக நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.இந்த கும்பாபிஷேக நாளுக்கு முதல் நாள் இரவு மன்னனின் கனவில் தோன்றிய சிவபெருமான், தான் அதே தினத்தில் திருநின்றவூரில் பூசலார் என்ற பக்தர் எழுப்பியுள்ள ஆலயத்தில் எழுந்தருளப் போவதால், வேறொரு நாளில் பல்லவன் கும்பாபிஷேகம் நடத்திக் கொள்ளலாம் என்று கூறி மறைந்தார்.
கண் விழித்த பல்லவ மன்னனுக்கு ஆச்சரியம்… பல ஆண்டுகள் இரவு பகல் பாராது தான் நிர்மாணித்த ஆலயத்தைவிட திருநின்றவூர் ஆலயத்தின் சிறப்பை அறிய விரும்பினான்.
பின்னர் தான் நிர்மாணித்த ஆலய கும்பாபிஷேகத்தை நிறுத்திவிட்டு மந்திரி பிரதானிகள் புடைசூழ திருநின்றவூரை அடைந்தான் பல்லவமன்னன்.
ஊரோ பரபரப்பு ஏதுமின்றி அமைதியாக இருந்தது. மன்னன் திடீரென்று வந்ததால் ஊர் மக்கள் கூடினர்.அவர்களிடம் பூசலார் குறித்தும் அவர் நிர்மாணித்த திருக்கோவில் குறித்தும் விசாரித்தான் மன்னன். ‘‘பூசலாரா? அவர் சிவனேன்னு மரத்தடி யில் உட்கார்ந்து தியானம் பண்ணிட்டிருக்காரே தவிர, கோயில் ஏதும் கட்டின மாதிரி தெரியலையே ’’ என்று பதில் கிடைத்தது.
பூசலார் இருந்த மரத்தடியை அடைந்த மன்னனும் மற்றையோரும் அங்கு ஓர் அதிசயக் காட்சியைக் கண்டனர். கண்மூடி அமர்ந்திருந்த பூசலாரின் இதயப் பகுதியில் தெய்வீக ஒளி வீசியது. அங்கே மானசீகமாக நிர்மாணிக்கப்பட்டிருந்த ஆலயத்தில் வேள்வியும், மற்ற மங்கலச் சடங்குகளும் மனதளவில் நடந்தேறுவதை அனைவராலும் காண முடிந்தது. நல்ல நேரத்தில் தனக்கான சந்நிதியில் சிவன் அனைவரும் பார்க்கக் குடியேறினான். கைலாசநாதனைக் கண்குளிரத் தரிசிக்கும் பாக்கியத்தினை மன்னனுடன், ஊர் மக்கள் கண்டனர். பல்லவ மன்னனோ, அவர் இதயத்தில் எழுப்பிய அதே கோயிலை நிலவுலகில் நிர்மாணிக்க அனுமதி கோரினான். பூசலார் சம்மதித்ததால் இததிருக்கோவிலை மன்னன் நிர்மாணித்தான்.இருதயாலீஸ்வரர் திருக்கோயில் சென்னையிலிருந்து சுமார் 30 கி.மீ. தூரத்தில் திருநின்றவூரில் அமைந்துள்ளது. பூசலாரின் இதயத்தில் எழுந்தருளிய காரணத்தால் சிவனுக்கு இருதயாலீஸ்வரன் என்று பெயர். அம்பாள் திருநாமம் மரகதாம்பிகை.