Author: லிங்கேஷ்

  • May 4 Agni Natchathiram

    மே 4 – அக்னி நட்சத்திரம் ஆரம்பம்
    விகாரி வருடம் – சித்திரை 21
     அமாவாசை 
    அக்னி நட்சத்திரம் இரவு 02:15 ஆரம்பம்
    04-மே-2019 சனி  ஷாபான்28
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    9.00 – 10.30    
    குளிகை    :    6.00 – 7.30
    எமகண்டம்    :    1.30 – 3.00                          
    திதி    :    அமாவாசை          
    திதி நேரம்    :    அமாவாசை    அ.கா    5.07
    நட்சத்திரம்    :    அசுவினி    மா    4.24
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    சித்திரை,சுவாதி
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – பொறுமை 
    ரிஷபம் – பயம் 
    மிதுனம் – ஆதரவு
    கடனம் – எதிர்ப்பு 
    சிம்மம் – தடங்கல்
    கன்னி – ஆதாயம் 
    துலாம் –  சாதனை
    விருச்சிகம் – பக்தி
    தனுசு – பிரிவு
    மகரம் –   லாபம் 
    கும்பம் – மறதி 
    மீனம் – நன்மை 
    சந்திராஷ்டமம்    – சித்திரை, சுவாதி
     

  • Kallabiran Koil Chiittirai therottam

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் அமைந்துள்ள நவத்திருப்பதி கோவில்களில் முதலாவது கோவிலான சுவாமி கள்ளபிரான் கோயிலில் சித்திரை தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது. 

    இந்த கோயிலில் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.  ஏப்ரல் 29ம் தேதி 5ம் திருவிழாவை முன்னிட்டு காலையில் மங்களாசாசனமும் இரவில் கருடசேவையும் நடைபெற்றது.

     மே 3ம் தேதி வெள்ளிக் கிழமை 9ம் திருவிழாவை முன்னிட்டு இன்று காலையில் விஸ்வரூபம், நித்தியல் கோஷ்டி நடைபெற்றது.  சுவாமி கள்ளபிரான் தாயார்களுடன் திருத்தேரில் எழுந்தருளிய பின்னர் தீபாராதனை நடைபெற்றது. 

     பக்தர்கள்  கோவிந்தா… கோவிந்தா.. என்ற கோஷத்துடன் வடம் பிடித்து திருத்தேரை இழுந்தனர். சுவாமி கள்ளபிரான் எழுந்தருளிய திருத்தேரை தேரோடும் வீதிகளில் பக்தர்களும் பொது மக்களும் இழுத்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
     

  • Karaikal Mangani Thiruvizha

    காரைக்காலில் ஆண்டுதோறும் நடைபெறும் புகழ் பெற்ற மாங்கனித் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளது. 

    63 நாயன்மார்களில் ஒருவரும், அம்மையப்பன் இல்லாத இறைவன் சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்ட சிறப்பு பெற்றவருமான காரைக்காலம்மையாருக்கு காரைக்காலில்  கோயில் உள்ளது.  17ம் நூற்றாண்டு காலத்தில் வாழ்ந்ததாக கருதப்படும் அவரது  வாழ்க்கை வரலாற்றை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் ஒரு மாத காலத்திற்கு ' மாங்கனித் திருவிழா ' காரைக்காலில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். 

    இந்த ஆண்டு மாங்கனித் திருவிழாவையொட்டி  ஜூலை 14ம் தேதியன்று மாலை மாப்பிள்ளை அழைப்பும் அதனைத் தொடர்ந்து மறுநாள்  ஜூலை15ம் தேதி காலை காரைக்காலம்மையார்  திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. 

    முக்கிய நிகழ்ச்சியான மாங்கனி இரைத்தல்  ஜுலை மாதம் 16ம் தேதி நடைபெறுகிறது.   அன்றைய தினம் பரமசிவன் பிட் ஷாடண மூர்த்தியாக வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறும். மாங்கனித் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் இன்று பந்தக்கால் முகூர்த்தத்துடன் தொடங்கியுள்ளது. காரைக்காலம்மையாரிடம் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கலசம் கோயில் பிரகாரம் சுற்றி எடுத்து வரப்பட்டு பின்னர் பந்தக்காலில் புனித நீர் ஊற்றப்பட்டது. இதை தொடர்ந்து பந்தக்கால் நடப்பட்டு மாங்கனித் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன. 
     

  • Eeri Kaatha Ramar

    காஞ்சிபுரம் மாவட்டம் ஏரிகள் மாவட்டமாக பெயர் பெற்றது. அவற்றில் மிகப்பெரிய ஏரி என்றால் அதுமதுராந்தகம்ஏரிதான். சின்ன கடல் போல மழைக்காலங்களில் ததும்பி நிற்பதை பார்க்கவும், கலங்கல் நிறைந்து வழிந்தோடுவதை பார்க்கவும் வண்டிகட்டிக்கொண்டு குடும்பம் குடும்பமாக வருவார்கள். அந்த காலத்தில் தண்ணீர் பெருகி கிளியாற்றில் ஓடுவதை காண்பது மிகுந்த மகிழ்ச்சிக்குரிய ஒன்றாக இருந்தது. 

    அப்படி ஒரு காலம். 1825ஆம்ஆண்டு ஏரி மழையில் நிறைந்து ததும்புகிறது. தண்ணீரின் வேகத்திற்கு கரைகள் ஈடுகொடுக்கவில்லை. எத்தனை முறை அடைத்தாலும் கரைஒருபக்கம் உடைந்துகொண்டே இருக்கிறது. அப்போது கிழக்கிந்திய அதிகாரி லயனல் பிளேஸ் பொறுப்பில் இருக்கிறார். கரை உடைபடுவதை தடுக்க வழி தேடி அவர் தவித்தபோது, ஒருவர் சொல்கிறார். இங்குள்ள கோதண்டராமர் மிகவும் சக்தி வாய்ந்தவர், பாழ்பட்டு இருக்கும் ஜனகவல்லி தாயார் சன்னதியை சரிசெய்து கொடுப்பதாக வேண்டிக்கொள்ளுங்கள் என்கிறார். அவரை எள்ளி நகையாடி அனுப்பிவிட்டாலும் லயனல் பிளேசுக்கு உள்ளூர ஒரு நப்பாசை. வேண்டிக்கொள்கிறார். 


    வேண்டிக்கொண்ட நாளில் இடி, மின்னல், மழை..மனம் பதைக்கிறது. ஏரி உடைந்தால் மதுராந்தகம் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களும் மூழ்கிவிடும். எத்தனை உயிர் போகுமோ? நினைக்கவே பதறியது. குதிரையில் ஏறி கிளம்புகிறார். மழை கொஞ்சம் கூட விடுவதாக இல்லை. பதற்றத்தோடு கரையை நெருங்குகிறார். தூரத்தில் கரையோரம் இரண்டு பேர் நின்றிருக்கிறார்கள். நல்ல உயரம்.. கருநிற வைரமாய் ஜொலிக்கும் ஒருவரின் கைகளில் வில் ஏந்தி நிற்கிறார்,பக்கத்தில் அவருக்கு ஈடு கொடுத்து மற்றொருவரும் வில்லேந்தி நிற்கிறார். இருவரும் கரையோரம் நடக்கிறார்கள். லயனல் பிளேசுக்கு பதற்றம் உண்டாகிறது. எப்போது வேண்டுமானாலும் உடையலாம் என்றிருக்கும் கரை மேல் நிற்கிறார்களே. அருகில் போக நினைக்கிறார். போக முடியவில்லை. ஒரு ஒளிப்பிழம்பாக அவர்கள் இருவரும் கரையில் நடந்தபடியே இருக்கிறார்கள். 

    விடிகிறது. அத்தனை மழைக்கும் கரை உடையவில்லை. லயனல் பிளேஸ் ஆச்சரியத்தில் உறைகிறார். வந்தது இதோ இந்த ஏரி காத்த ராமரும் லட்சுமணரும் தான் என்று உணர்ந்து மெய்சிலிர்த்துபோகிறார். பிறகு வேண்டியபடி அவர் ஜனகவல்லித்தாயார் சன்னதியை சீரமைத்துதருகிறார். அதற்கான ஆதாரங்கள் கோவிலில் இன்றும் இருக்கின்றன.

    சென்னையில் இருந்து 85 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மதுராந்தகத்தில் மையத்தில் அமைந்திருக்கிறது கோயில். இக்கோயிலின் சிறப்பம்சங்களை  சொல்லிக்கொண்டே போகலாம். இத்தலம் ஆழ்வார்களில் ஒருவரான திருமழிசை ஆழ்வார் முக்தி அடைந்த தலம்.அதுமட்டுமா பெரும் புரட்சியாளரான ராமானுஜருக்கும் மதுராந்தகத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

    தீட்சைபெற பெரிய நம்பியை காண நடந்தே காஞ்சி விரைகிறார் ராமானுஜர். ராமானுஜரை காண காஞ்சியில் இருந்து வருகிறார் பெரிய நம்பி.இருவரும் சந்தித்துக்கொண்ட இடம் மதுராந்தகம். தீட்சை பெற தவித்துக்கொண்டிருந்த ராமானுஜர் கோதண்டராமர் கோவிலிலேயே தீட்சை பெற விழைந்தார். அவருக்கு பஞ்ச சம்ஸ்காரம் எனப்படும் வைஷ்ணவ தீட்சை அளித்தார் அவரது குருவான பெரிய நம்பி.

    இங்கு கோதண்டராமராக வில்லேந்தி சீதை லட்சுமணர் சகிதமாக காட்சியளிக்கிறார் பெருமாள். சீதையின் கைத்தலம் பற்றியபடி ராமர் காட்சிதருகிறார். 

    இதற்கும் ஒரு புராணம்இருக்கிறது.
    விபண்டக மகரிஷி, கிளியாற்றின் கரையோரம் தவத்தில் இருக்கிறார். அப்போது வனவாசம் முடித்துவிட்டு புஷ்பக விமானத்தில் ராமரும், சீதையும் லட்சுமணரும் திரும்பிக்கொண்டிருக்கிறார்கள். விபண்டக மகரிஷி தவமிருந்த இடத்தை கடக்கும்போது ஞானகிரி மலையால் விமானத்தின் பயணம் தடைபடுகிறது. அப்போதுசீதைக்கு விபண்டகரின் தவம் ஞாபகத்திற்கு வருகிறது. ராமருக்கு சீதை நினைவுபடுத்த, விபண்டகருக்கு தரிசனம் அளிக்க விமானத்தில் இருந்து இறங்கும்போது சீதையின் கரம் பற்றி இறங்க உதவுகிறார் ஸ்ரீராமர். அந்த கரிசனமும் அக்கறையும் கோயிலில் வெளிப்படுகிறது.இங்கு கோதண்டராமர் மூலவராக இருந்தாலும், ராம அவதாரத்தில் அவரே பூஜித்த கருணாகர பெருமாளுக்கு அனைத்து விதமான பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெறுவது வழக்கம்.

    கருவறையில் சீதையின் கைத்தலம் தனது வலக்கரத்தால் பற்றியபடியும் மறுகரத்தில் வில்லேந்தியும் ராமர் நிற்க, அவருக்கு அருகில் லட்சுமணர் நிற்கிறார். விபண்டக முனிவரும், பெரியநம்பிகள் வழிபட்ட கிருஷ்ணரும் கருவறையில் சேவை சாதிக்கிறார்கள்.


    கருவறைக்கு வெளியே உள்ள தூண்களை ஒட்டியபடி கீழே ஒரு சுரங்கப்பாதை மூடப்பட்ட நிலையில் இருக்கிறது. இங்கிருந்து மதுராந்தகம் ஏரிக்கு செல்ல முடியும் என்கிறார்கள்.

    கோயிலின் இடப்பக்கம் லயனல் பிளேஸ் சீரமைத்துத்தந்த ஜனகவல்லிதாயார் சன்னதி அமைந்துள்ளது. அன்னையை வழிபட்டு சுற்றிவந்தால் கண்ணெதிரே தெரியும் மண்டபம்தான் ஸ்ரீராமானுஜருக்கு வைணவ தீட்சை அளித்த மண்டபம். மண்டபத்தை தரிசித்துவிட்டு வந்தால் ஆண்டாள் சன்னதியை தரிசிக்கலாம். ஆண்டாளின் அருகில் பெரியநம்பிகள் சன்னதியை பார்க்கலாம்.ஆண்டாள் சன்னதி எதிர்புறம் ராமானுஜர், ஸ்ரீநரசிம்மமூர்த்தி சன்னதிகள் இருக்கின்றன. 

    ராமானுஜருக்கு தீக்ஷை அளிக்க பயன்படுத்திய கோல் போன்றவையும் இன்றும் பராமரிக்கப்படுகின்றன.
    கோயிலின் எதிரில் ஸ்ரீராம பக்த அனுமன் சன்னதி அமைந்துள்ளது. அருகில் தீர்த்தக்குளம்.
    ஆனித்தேரோட்டம் மிகுந்த விசேஷமான நிகழ்வு. தேரடியும் முக்கிய சாலையிலேயே அமைந்துள்ளது. 
    இன்றளவும் ஏரியை காத்துக்கொண்டு சீதை கைத்தலம் பற்றி காட்சி கொடுக்கும் ஸ்ரீராமரை வழிபட்டால், கணவன்-மனைவி உறவு பலப்படும் என்பதும், துன்பங்கள் வழிவிட்டு விலகும் என்பதும் இங்கு வந்து வழிபட்டு சென்றவர்களுக்கு விளங்கும்.

    சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியே அமைந்துள்ளது ஏரிகாத்த ராமர் கோயில். ஊருக்குள் சென்றாலும், நகரின் மையமாக கோயில் கோபுரம் தென்படும். பைபாஸ் சாலையில் படிகளில் இறங்கிச்சென்றால் சில அடிகளிலேயே கோயில் தென்படும்.
    ஒருமுறை வந்து வழிபட்டுப்பாருங்கள். பிறகு இந்த ஸ்ரீராமரின் கருணையையும் அன்பையும் உணர்வீர்கள்.

    ஓம்நமோ நாராயணாய.
    –    எழுத்தாளர் பாமா

     

  • May 3 Sri Rangam Car Festival

    மே 3 – ஸ்ரீரங்கம் தேர்
    விகாரி வருடம் – சித்திரை 20
    03-மே-2019 வெள்ளி  
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    10.30 – 12.00    
    குளிகை    :    7.30 -9.00
    எமகண்டம்    :    3.00 – 4.30                          
    திதி    :    சதுர்த்தசி          
    திதி நேரம்    :    சதுர்த்தசி    அ.கா    4.45
    நட்சத்திரம்    :    ரேவதி    ம    3.08
    யோகம்    :    அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    அஸ்தம்,சித்திரை
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – வெற்றி
    ரிஷபம் – நலம் 
    மிதுனம் – பணிவு
    கடனம் – மறதி 
    சிம்மம் – நிம்மதி  
    கன்னி – வரவு
    துலாம் –  பெருமை
    விருச்சிகம் – தேர்ச்சி
    தனுசு – புகழ்
    மகரம் –   நற்செயல்
    கும்பம் – கவனம் 
    மீனம் – எதிர்ப்பு
    சந்திராஷ்டமம்    – அஸ்தம்,சித்திரை
     

  • Pradhosham Endraal Enna?

    சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும். மாதந்தோறும் இருமுறை – வளர்பிறை, தேய் பிறை திரயோதசி ( 13 ம் நாள் ) நாட்கள் பிரதோஷ தினங்களாகும். இந்நாட்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான நேரம் பிரதோஷ காலமாகும். இந்த நேரத்தில் பரமசிவனை வணங்கி வழிபட்டால் மற்ற நாட்களில் ஏற்படும் துன்பங்கள் நீங்கி இன்பம் பெறலாம் என்பது நம்பிக்கை. 

    பிரதோஷம் என்றால் என்ன? சிவபெருமான் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டனானது இந்தப் பிரதோஷ நேரத்தில் தான். தேவர்களும், அசுரர்களும் போட்டி போட்டுக் கொண்டு பாற்கடலைக் கடைந்தபோது திருமகள், ஐராவதம், காமதேனு, கற்பகத்தரு, சிந்தாமணி, கௌஸ்துப மணி முதலியவை ஒவ்வொன்றாகத் தோன்றின. லட்சுமியைத் திருமால் ஏற்றுக் கொண்டார். மற்ற பொருட்களை இந்திராதி தேவர்கள் ஏற்றுக் கொண்டனர்.

    ஆனால் கூடவே கொடிய ஆலகால விஷமும் வெளிப்பட்டது. இதைக்கண்டு தேவர்களும், முனிவர்களும் பெரிதும் நடுங்கினர். உயிர்களைக் காப்பாற்ற பரமசிவன் அந்த ஆலகால விஷத்தை உண்டார். தன் கணவரின் உடலில் விஷம் பரவுவதைக்கண்ட பார்வதி தேவி தன் தளிர்க்கரங்களால் அவரைத் தொட விஷம் சிவனின் நெஞ்சுக் குழியிலேயே நின்றுவிட்டதால் இறைவன் நீலகண்டனானார். இந்த நேரம் தான் பிரதோஷ காலம் என்று வணங்கப்படுகிறது.

    சிவபெருமான் கைலாயத்தில் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் திருநடம் புரிந்து காட்சியளிக்கிறார். அப்பொழுது கலைமகள் வீணை வாசிக்க, அலை மகளான லட்சுமி தேவி பாடுகிறாள், திருமால் மிருதங்கம் வாசிக்க இந்திரன் புல்லாங்குழல் ஊதுகிறார். பிரம்மதேவர் தாளமிட தேவர்கள் முனிவர்கள் யாவரும் கைலாயம் வந்து இறைவனை வணங்குகிறார்கள் என்பது புராதன வரலாறு.

    ஒவ்வொரு மாதமும் அமாவசைக்குப் பின், பௌர்ணமிக்குப் பின் என்று இரண்டு பிரதோஷ நாட்களிலும் சிவாலயங்களில் குறித்த நேரத்தில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. சிவனுக்குப் பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்த பின் தீபாராதனை நடைபெறும்.

    இறைவனுடன் கூடவே அவருடைய வாகனமான நந்தி தேவருக்கும் அபிஷேகம் நடைபெறும். இவருக்கு எண்ணெய், பால், தயிர், சந்தனம், இளநீர் போன்றவற்றை அபிஷேகத்திற்காகத் தரலாம். பின் அருகம் புல், பூ சாற்றிய பின் வில்வத்தால் அர்ச்சனை செய்வது வழக்கம். நந்தி தேவரது தீபாராதனைக்குப் பின் மூலவரான லிங்கத்திற்கு நடக்கும் தீபாராதனையை நந்தியின் இரண்டு கொம்புகளுக்கிடையே பார்த்து தரிசிக்க நம் தோஷங்கள் நீங்கி நன்மையுண்டாகும்.

    இனி பிரதோஷ விரதமிருப்பது பற்றிப் பார்ப்போம். இந்த நாட்களில் அதிகாலை எழுந்து நீராடி, சிவாலயம் சென்று வழிபட வேண்டும். அன்று முழுவதும் உணவின்றி உபவாசம் இருந்து திருமுறைகளைப் படிக்க வேண்டும். பிரதோஷ நேரமான மாலை 4.30 மணிக்கு சிவாலயம் சென்று உள்ளம் உருகி ஐந்தெழுத்தை (சிவாய நம) ஓதி வழிபட வேண்டும்.

    எல்லா பிரதோஷங்களையும் விட சனிக்கிழமை வரும் பிரதோஷம் 'சனிப் பிரதோஷம்' என்று சிறப்பாகக் கூறப்படுகிறது. அதுவே கிருஷ்ணபட்சத்தில் (தேய் பிறை) சனிக்கிழமையில் வந்தால் 'மஹாப் பிரதோஷம்' என்று வழங்கப்படுகிரது. சாதாரண பிரதோஷ வேளைகளில் சிவாலயம் சென்று வழிபட்டால் ஒரு வருடம் ஆலயம் சென்று இறைவழிபாடு செய்த பலனும், சனிப் பிரதோஷத்தன்று அவ்வாறு வழிபடும் போது ஐந்து வருடம் ஆலய வழிபாடு செய்த பலனும் கிடைக்கும் என்பதெல்லாம் ஆண்டாண்டு காலமாக இருந்து வரும் நம்பிக்கை.

    பிரதோஷ காலத்தில் பார்வதியுடன் கூடிய சந்திரசேகரன் ரிஷப வாகனத்தில் ஆலயத்தை மூன்று முறை வலம் வருவதைப் பார்க்கலாம். முதல் சுற்றில் செய்யப்படும் வேதபாராயணத்தையும், இரண்டாம் சுற்றில் செய்யப்படும் திருமுறை பாராயணத்தையும், மூன்றாம் சுற்றில் நாதஸ்வர இன்னிசையையும் உடன் வலம் வந்தபடி கேட்க வேண்டும்.
     

  • Pasiyudan Irrukkum Thiruvarpu Krishnana

    திருவார்பு கிருஷ்ணா கோயில்…. இது உலகிலேயே மிகவும் அசாதாரணமான கோயில் ஆகும். தினமும் இந்த கோயில் 23 மணி நேரம் 58  நிமிடங்கள் திறந்து இருக்கும். அதாவது இந்த கோயில் 2 நிமிடங்கள் மட்டுமே மூடப்படுகிறது. 

    இங்கே இருக்கும் கிருஷ்ணருக்கு எப்பொழுதும் பசித்துக் கொண்டே இருக்குமாம்.. 1500 ஆண்டுக்கும் மேல் பழமையான இந்த கோவில் கேரள மாநிலம்,  கோட்டயம் மாவட்டம்  திருவார்புவில் இக் கோயில் அமைந்துள்ளது.

    இங்கு கிருஷ்ணர் எப்போதும் பசியாக இருப்பதால், 23.58 மணி நேரமும், 365 நாட்களும் கோவில் திறந்திருக்கும். கோயில் 2 நிமிடங்களுக்கு மட்டுமே மூடப்பட்டுள்ளது. 11.58 மணி முதல் 12 மணி வரை மட்டுமே கோயில் மூடப்படும். 

    இந்த கோவிலின் இன்னொரு தனிச்சிறப்பு என்னவென்றால்,  கோவில் நடை சாத்தி அடுத்த இரண்டாவது நிமிடம் மீண்டும் கோவில் நடை திறக்க தந்திரியின் கைகளில் ஒரு கோடாரியும் கொடுக்கப்படுகிறது. 

    கிருஷ்ணா பசியை சகித்துக் கொள்ள முடியாது என்று நம்புவதால், ஏதாவது ஒரு காரணத்தால் கதவு திறக்கப்படுவதற்கு தாமதம் ஏற்பட்டால் கோடாரி உதவியுடன் கதவைத் திறக்க அனுமதிக்கப்படுகிறது.

    கம்சனைக் கொன்ற பிறகு கிருஷ்ணர் மிக உஷ்ணமாக இருந்தார். அந்த நிலையில் இருந்த  கிருஷ்ணரே இக்கோவில் மூலவர் சிலை  என்று மக்கள் நம்புகின்றனர். அபிஷேகம் முடிந்தபின் மூலவரின் தலையை முதலில் உலர்த்தியபின், நைவேத்திம் அவருக்குப் படைக்கப்படும், பின்னர் அவருடைய உடல் உலர்த்தப்படும்.

    இந்த கோயிலின் இன்னொரு தனிச்சிறப்பு என்னவென்றால்,  கிரகணத்தின் போது கூட கோயில் மூடப்படுவதில்லை. அப்படி மூடினால் இந்தக் கிருஷ்ணர் பசி தாங்க மாட்டார் என்று மக்கள் நம்புகிறார்கள்.

    ஒருமுறை கோயில் கிரகணத்தின் போது மூடப்பட்டது. கதவைத் திறந்தபோது ​​ஆண்டவரின் இடுப்புப் பட்டை  வீழ்ச்சியடைந்ததைக் கண்டார்கள். அந்த சமயத்தில் வந்த ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார்,  கிருஷ்ணர் மிகவும் பசியாக இருப்பதால் தான் அவ்வாறு நடந்ததுஎன்று சொன்னார்.

    அப்போதிருந்து கிரகணத்தின் போதும் அக்கோவில் மூடப்படுவதில்லை. கிருஷ்ணா தூங்கும் நேரம் தினமும் 11.58 மணி முதல் 12 மணி வரை 2 நிமிடங்கள் மட்டுமே.

    அதேபோ இந்த கோயிலில் பிரசாதம் பெறாமல் பக்தர்கள்  செல்ல அனுமதி இல்லை. தினமும் 11.58 மணி பூசாரி சத்தமாக, "இங்கு யாராவது பசியாக உள்ளீர்களா?"  என அழைப்பார். மற்றொரு முக்கிய விஷயம், நீங்கள் பிரசாதம் சுவைத்தால்,  நீங்கள் அதன்பிறகு பசியால் வாட மாட்டீர்கள். உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு உணவுப்பிரச்சனை இருக்காதாம். 

    கோயில் எங்கு இருக்கிறது :
    திருவார்பு கிருஷ்ணா கோயில்,
    திருவார்பூ – 686020, 
    கோட்டையம் மாவட்டம்,
    கேரள மாநிலம்..

  • Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – உழைப்பு 
    ரிஷபம் – மேன்மை 
    மிதுனம் – நட்பு
    கடனம் – புகழ்
    சிம்மம் – நன்மை  
    கன்னி – தெளிவு
    துலாம் –  நலம் 
    விருச்சிகம் – பரிசு
    தனுசு – லாபம் 
    மகரம் –   போட்டி
    கும்பம் – ஓய்வு
    மீனம் – ஆதரவு
    சந்திராஷ்டமம்    – உத்திரம், அஸ்தம்