Author: லிங்கேஷ்

  • Temple Coconut

    கோயில்களில் பெரும்பாலும் இறைவனுக்கு தேங்காய் உடைப்பது வழக்கம். ஏன் தேங்காய் உடைக்கிறோம். இதில் என்ன தத்துவம் இருக்கிறது என்ற விவரம் நம்மில் பலருக்கு தெரியாது. ஏதோ சுவாமிக்கு அர்ச்சனை பண்ணினோம். தரிசனம் செய்தோம் என்றவாறே இதை நாம் தொன்றுதொட்டு செய்து வருகிறோம். அதைப் பற்றி ஒரு சிறிய தத்துவ தகவல்.

    தேங்காய் உடைப்பதில் ஒரு பெரிய உண்மை மறைந்து இருக்கிறது. தேங்காயின் மேல் கடுமையான ஓடும் அதனுள் மென்மையான பருப்புமாகிய காய்ப் பகுதியும் அதனுள் நீரும் உள்ளது.

    உருண்டையான புற ஓடு பிரபஞ்சத்தை ஒத்து இருக்கிறது. இரண்டும் கோள வடிவம் உடையது. இது உலக மாயையைக் குறிப்பது ஆகும். உள்ளே உள்ள வெண்ணிறமான பகுதி பரமாத்மாவை குறிக்கும்.

    இளநீர் அதனால் விளையும் பரமானந்த அமிர்தத்தை ஒத்து இருக்கின்றது. ஜீவாத்மா மாயையினால் பரமாத்மாவை உணராமல் பரமானந்த பிராப்தியையும் பெறாமல் நிற்கின்றது. அதுபோல் வெள்ளை பகுதியையும், நீரையும் காண முடியாமல் ஓடு மறை(க்)கின்றது.

    ஈசுவர சந்நிதியில் மாயையை அகற்றி தேஜோமய சுவரூபத்தை காட்டி அவர் அருளாள் பரமானந்த பேரமுதத்தை நுகரச் செய்யும் செயலையே இது காட்டுகிறது.

    இவ்வளவு உட்கருத்து இருப்பதால் தான் தேங்காயை இறைவழிபாட்டில் முக்கிய பொருளாக வைத்து நம்முன்னோர்கள் வழிபட்டு வந்துள்ளனர் என்கிற உண்மையை நாம் உணர வேண்டும்.

  • Thirupathy Anna Dhanam

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 30 லட்ச ரூபாய் காணிக்கை செலுத்தி பக்தர்களுக்கு அன்னதானம் அளிக்களாம் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு தினமும் 3 வேளை அன்னதானம் வழங்கப்படுகிறது. சாதாரண நாட்களில் 60 ஆயிரத்தில் இருந்து 70 ஆயிரம் பக்தர்களுக்கும், விழா நாட்களில் லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கும் இலவச உணவு வழங்கப்படுகிறது. அன்னதானத்துக்கு தினமும் 16 ஆயிரம் கிலோ அரிசி, 6 ஆயிரத்து 500 கிலோ காய்கறிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு முன்பு ஒருநாளைக்கு அன்னதானத்துக்கு ரூ.26 லட்சம் செலவாகியது. தற்போது விலைவாசி உயர்வால் ஒருநாளைக்கு ரூ.30 லட்சம் செலவாகிறது என தேவஸ்தான கணக்குத்துறை அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.

    எனவே திருமலையில் பக்தர்களுக்கு ஒருநாளைக்கு இலவசமாக அன்னதானம் செய்ய ரூ.26 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு அன்னதானம் செய்ய விரும்புவோர் ரூ.30 லட்சத்தை காணிக்கையாக செலுத்த வேண்டும். அவர்களின் பெயரில் பக்தர்களுக்கு 3 வேளை இலவசமாக உணவு வழங்கப்படும். ஒருநாளைக்கு செலவாகும் தொகையை செலுத்த முடியாதவர்கள் 3 வேளையில் ஏதேனும் ஒரு வேளை உணவை மட்டும் பக்தர்களுக்கு அளிக்கலாம்.

    அதில் காலை ஒரு வேளை மட்டும் உணவளிக்க ரூ.7 லட்சத்தை காணிக்கையாக செலுத்தலாம். மதியம் ஒரு வேளை மட்டும் உணவளிக்க ரூ.11½ லட்சத்தை காணிக்கையாக செலுத்த வேண்டும். இரவு ஒரு வேளை மட்டும் உணவளிக்க ரூ.11½ லட்சத்தை காணிக்கையாக செலுத்தலாம். ஒருநாளைக்கு பக்தர்களுக்கு உணவளிக்க ரூ.30 லட்சத்தை காணிக்கையாக செலுத் தும் திட்டம் இந்த மாதம் (மே) 1-ந் தேதியில் இருந்து அமலுக்கு வந்துள்ளது.

    ஸ்ரீவெங்கடேஸ்வரா நித்ய அன்னதானத்திட்ட அறக்கட்டளைக்கு இதுவரை 4 லட்சத்து 76 ஆயிரம் பேர் காணிக்கை வழங்கி உள்ளனர். அதன் மூலம் இதுவரை ரூ.1,071 கோடி காணிக்கையாக பெறப்பட்டுள்ளது. அந்த காணிக்கை தொகை, அரசு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அதில் கிடைக்கும் வட்டி தொகையில் இருந்து தான் தினமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

  • Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – மகிழ்ச்சி 
    ரிஷபம் – லாபம் 
    மிதுனம் – முயற்சி
    கடனம் – உயர்வு
    சிம்மம் – நன்மை 
    கன்னி – வரவு 
    துலாம் –  வெற்றி
    விருச்சிகம் – சுகம் 
    தனுசு – விவேகம் 
    மகரம் –   பெருமை 
    கும்பம் – நற்செய்தி 
    மீனம் – பாராட்டு
    சந்திராஷ்டமம்    – கேட்டை, மூலம்
     

  • May 8 subamugurthanaal

    மே 8 சுபமுகூர்த்த நாள்
    விகாரி வருடம் – சித்திரை 25
     subamugurthanaal 
    08-மே-2019 புதன்  
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 9.00 – 10.30)
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    12.00 – 1.30    
    குளிகை    :    10.30 – 12.00
    எமகண்டம்    :    7.30 – 9.00                          
    திதி    :    சதுர்த்தி          
    திதி நேரம்    :    சதுர்த்தி    இ    1.28
    நட்சத்திரம்    :    மிருகசீரிடம்    மா    4.31
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    கேட்டை,மூலம்
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • Varam Tharum Vayalur Murugan

    குன்றுதோறும் குமரன் இருப்பது வழக்கம். அப்படி ஒரு குன்றுமீதுதான் ஏற இருக்கிறோம் என்ற எதிர்பார்ப்போடு எங்களின் வயலூர் பயணம் இருந்தது. திருச்சியில் இருந்து மேற்கே 12 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது வயலூர். அந்த ஊருக்கு இட்டுச் செல்லும் பாதையும் வயல்கள் நிறைந்ததாகவே இருக்கிறது. நெல்லும், வாழையும், தென்னையுமாக செழித்து நிற்கிறது ஊர்.. நாங்கள் காரில் சென்று கொண்டிருந்தோம். போகப் போக…. பசுமை கண்களை குளிர்வித்துக்கொண்டே வந்தது. ரசித்துக்கொண்டே சென்றபோது …என்ன இன்னும் எந்த குன்றையும் காணவில்லையே தப்பான வழியில் போகிறோமோ என்று சந்தேகம் வேறு.. இதோ வந்தேவிட்டது வயலூர்..

    வழக்கமாக குன்றின்மேல் குடியிருக்கும் முருகன் இங்கு குன்றில்லாத சமவெளியில் குடியிருக்கிறான். அழகான ஆலயம். 

    இனி கோயிலை பற்றி…

     

    இந்த திருத்தலத்தின்பெருமை ஞானம் விளையும் திருத்தலம் என்பது.  ஆ என்ற காமதேனுவும், சோமன் வழிபட்ட சோமரசம்பேட்டையும் சூழ இருக்கிறது வயலூர். இங்கு கந்தன் தனது வேலால் குத்தி ஒரு திருக்குளத்தை உருவாக்கி தந்தையாகிய சிவபெருமானை வழிபட்டதாக கூறுகிறது புராணம்.  அக்னித்தீர்த்தம் என்று அழைக்கப்படும் அந்த தீர்த்தம் அக்னித்தேவனும் வழிபட்டதால் ஆலயத்தின் சிவபெருமான் அக்னீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். தேவி முன்னிலை நாயகி என்று அழைக்கப்படுகிறார்.

    உறையூரை தலைநகராக கொண்டு சோழர்கள் ஆட்சி செய்த காலம் அது.. வேட்டைக்குச்சென்ற சோழ மன்னன் தாகத்தோடு ஓரிடத்தில் அமர, அங்கு 3 கிளைகளுடன் காட்சி தந்ததாம் ஒரு கரும்பு. அதனை ஒடித்தபோது ஒரு கரும்பில் இருந்து ரத்தம் கொட்ட பதறிப்போனான் மன்னன். உடனடியாக அந்த இடத்தைத் தோண்ட அங்கு லிங்க ரூபத்தில் எழுந்தருளினார் சிவபெருமான். அவருக்கு கோயில் கட்ட நினைத்த மன்னனின் ஆசை ஈடேறவில்லை. அதன் பின்னர் சிறு கோயிலாக எழுந்தது இந்த ஆலயம்..

    ‘அருளில் சீர் பொய்யாத கணபதி

    திருவக் கீசன் வாழும் வயலியில்

    அழகு கோயில் மீதில் மருவிய பெருமானே ’

    இந்த பாடலின் அழகும் அருணகிரி நாதரின் வாக்கும் இனிமையே இங்குள்ள முருகனைப்போல. வயலூரின் சிறப்பே, அருணகிரிநாதருக்கு முருகன் மயில் மீது அமர்ந்து காட்சி கொடுத்து திருப்புகழ் பாட வைத்ததுதான். சும்மா இரு. சொல்லற என்று சொல்லி, வா என் புகழ் பாடு என அருள் சுரந்து அருணகிரிநாதருக்கு முன்மொழிந்து தந்த இடம் வயலூர் என்கிறது இந்த கோயிலின் தல வரலாறு. அவர் இங்கு நீண்டகாலம் தங்கியிருந்து முருகப்பெருமானை வழிபட்டு, பாடி பரவசப்பட்ட இடம் இந்த வயலூர்.

    அருணகிரிநாதர் மட்டுமல்ல, ஞானவரோதயர் என்ற அடியாருக்கு அருள் புரிந்த திருத்தலம். இந்த ஞானவரோதயர், கந்தபுராணத்தில் 7 ஆவது காண்டமாகிய உபதேச காண்டம் பாடியவர். விராலிமலைத் தலப்புராணமும் இவர் பாடியிருக்கிறார்.

    தாய், தந்தையை வழிபட்டு அனைவருக்கும் வழிகாட்டுகிறான் இந்த வயலூர் முருகன்.  அதனால் கோயிலுக்குள் சென்றதும் நாம் எதிர்கொள்வது சிவ சொரூபமே.

    .பிள்ளையாரப்பாவுக்கு இல்லாத முதல் வணக்கமா? இந்த திருத்தலத்தில் உள்ள கணபதி பொய்யாக்கணபதியாக பெயர் கொண்டுள்ளார். இவரிடம் வேண்டினால் பொய்க்காது என்பது வாக்கு. இவர் சந்நிதிக்கு அருகே அருணகிரி நாதருக்கு பீடம் அமைக்கப்பட்டு இருக்கிறது.

    எதிர்புறம் கல்லால மரத்தடியில் தட்சிணாமூர்த்தியின் தவக்கோலக்காட்சி. பொய்யாக்கணபதி சந்நிதியை அடுத்து முத்துகுமார சாமி. மயில் மீது அமர்ந்த திருக்கோலத்தில் உள்ள முருகனைக்காண கண் கோடி போதுமோ? இந்த ஜென்மம்தான் தீருமோ?

    அடுத்து முத்துகுமார சுவாமியை தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை சகிதமாக காட்சியளிக்கிறார். வடபுற மூலையில் மகாலட்சுமி அருள்பாலிக்கிறார். வயலூர் முருகனை தரிசிப்பவருக்கு எனது அருள் கண்டிப்பாக உண்டு என்பதுபோல காட்சி தருகிறாள் மகாலட்சுமி..

    கோயிலின் வெளியே கல்லால மரத்தடியில் வேல் வடிவில் உள்ள தோற்றத்தை இடும்பன் கோயில் என்றும், கிராம தேவதைக்கோவில் என்றும் சொல்கிறார்கள். முருகன் கை வேலின் வடிவமாகிய தேரடியான் கோயிலும் வந்தோர்க்கு வளம் தரும் அம்சமாக காட்சியளிக்கிறது.

    வயலூர் முருகனை வழிபட்டு இறவாப்புகழை பெற்றார் அருணகிரிநாதர் என்ற ஒன்று போதும் இந்த தலத்தின் பெருமைக்கு சான்று. பழனி, திருச்செந்தூருக்கு வேண்டுதல் வைத்தவர்கள் இந்த கோயிலில் வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தலாம். ஆனால், வயலூரானுக்கு வைத்த வேண்டுதலை வேறு கோயிலில் செலுத்த முடியாது அசலோடு வசூலித்துவிடுவான் இந்த வடிவேலன் என்பது இந்த ஊர் மக்களின் சொல்லாக இருக்கிறது.

    தத்து திருப்புதல் என்ற நேர்த்திக்கடன் இந்த கோயிலின் வழக்கமாக இருக்கிறது. தோஷம் உள்ள குழந்தைகளை குறிப்பிட்ட காலம் வரை கோயிலுக்கு தத்து கொடுத்தலும், உரிய காலம் முடிந்ததும் தத்து திருப்புதலும் செய்கிறார்கள்.

    திருமண பரிகார தலமாகவும் வயலூர் இருக்கிறது. வரம் தருவான் வயலூரான் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாகவும், பெரும்பாலான நேரங்களில் நிஜமாகவும் இருக்கிறது. இந்த கோயிலில் வைகாசி விசாகம், கார்த்திகை திருவிழா, சஷ்டி விழா என  வழக்கமான விழாக்களும் வெகு விமரிசையாக நடக்கின்றன.

    இந்த கோயிலுக்கும், கிருபானந்த வாரியருக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. இந்த கோயில் கோபுரம் அமைக்க வாரியார் நிதி திரட்ட பெரும் முயற்சி செய்தார். இதனால் கோயில் அறக்கட்டளைக்குழுவில் கிருபானந்தவாரியார் இருந்தார்.

    கடன்தொல்லையோ, பிள்ளைகளுக்கான வேண்டுதல்களோ, திருமண பரிகாரங்களோ எதுவானாலும் வந்தவர்களின் மனம் குளிர வைக்கிறான் இந்த வயலூர் முருகன். வைத்த கண் வாங்காமல் பார்க்க வைக்கும் இந்த வடிவேலனை, வயலூர் நாயகனை கண்குளிர பார்த்துவிட்டு வந்தவர்களின் மனங்களையும் இவர் ஆட்சிகொண்டு விடுகிறான். அந்த அனுபவம் பெற்றது பெரும் பேறு.

  • Thirupathyku kidaikum Aandu Vaddi

    திருமலை திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு வங்கிகளில் இருப்பு தொகையை டெபாசிட் செய்துள்ளது. இதன் மதிப்பு தற்போது 12,000 கோடி ரூபாயை தாண்டிவிட்டது.   இது குறித்து தேவஸ்தான அதிகாரி ஒருவர் கூறுகையில், தேசிய மையமாக்கப்பட்ட சில வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் சிலவற்றிலும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் டெபாசிட் செய்யப்பட்ட இருப்பு தொகை 12,000 கோடியை தாண்டியுள்ளது. 

    இதிலிருந்து சுமார் 845 கோடி ரூபாய் வட்டி ஆண்டுக்கு கிடைத்து வருகிறது. ஆண்டு வருமானம் 31 பில்லியன் இதோடு கோவிலின் ஆண்டு வருமானம் சுமார் 31 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில் இது வரை 2.5 கோடி பக்தர்கள் திருப்பதிக்கு வருகை தந்துள்ளனர். இதில் பக்தர்கள் உண்டியலில் கணிக்கையாக வழங்கிய வகையில் 8.7 டன் தங்கம், கற்கள் பதிக்கப்பட்ட 550 கிலோ தங்க ஆபரணங்களையும் அளித்துள்ளனர். காணிக்கையாக கிடைத்த 8.7 டன் தங்கம் இவ்வாறு காணிக்கையாக கிடைத்த 8.7 டன் தங்கத்தில் 5387 கிலோ தங்கத்தை பாரத ஸ்டேட் வங்கியிலும், 1938 கிலோ தங்கத்தை இந்தியன் ஒவர்சீஸ் வங்கியிலும் வைக்கப்பட்டுள்ளன. 

    பழங்கால சிலைகளும் & மதிப்புமிக்க ஆபரணமும் உண்டு மிக முக்கிய தளமான மலை கோவிலான வெங்கடேஸ்வர கோவிலினுள் பழங்கால மதிப்புமிக்க விலையுயர்ந்த சிலைகளும், மிக அதிக மதிப்புள்ள பழங்கால ஆபரணங்களும் உள்ளன. 

  • Akshaya thirudiyai Salt

    அட்சய திருதியை நாளில் ஒரு கைப்பிடி உப்பை வாங்கி வைத்து வழிபட்டால் நமது வீட்டில் ஐஸ்வர்யம் குடிகொள்ளும். அன்றைய தினத்தில் ஒரு உப்பு  பாக்கெட்டை வாங்கி பூஜை அறையில் வைத்துவிட்டு, அதன் பிறகு பூஜையை துவங்க வேண்டும்.
     


    இறைவனுக்கு தீப தூபம் காட்டுகையில் உப்பிற்கும் காட்ட வேண்டும். அதன் பிறகு அந்த உப்பை எடுத்து உப்பு டப்பாவில் கொட்டி அதை யன்படுத்திக் கொள்ளலாம். இப்படி செய்வதன் மூலம் லட்சுமி தேவியின் அருள் நமக்கு கிடைக்கும். உப்பு வழிபாட்டை இன்று செய்வதன் மூலம் நமது கடன் சுமைகள்  விரைவில் நீங்கும். வீட்டில் பண வரவு அதிகரிக்கும். அட்சய திருதியை நாளில் தானம் செய்வது நமக்கு அமோக பலனை தரும்.
     
    இந்த மந்திரத்தை 108 முறை சொல்லி வந்தால் குபேரன் மற்றும் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். இதனால் வீட்டில் செல்வம் சேர தொடங்கும்.
    அட்சய திருதியை நாளில் சொல்ல வேண்டிய மந்திரம்: 
    ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் ஞானாயை கமலதாரிண்யை
    சக்தியை சிம்ஹ வாஹின்யை பலாயை ஸ்வாஹா!
    ஓம் குபேராய நமஹ ஓம் மகாலட்சுமியை நமஹ
     

  • Akshaya Thiruthiyai Poojai

    அட்சய திருதியை பூஜையில் தொழில் ஆவணங்கள், பணம், தங்கம் வைத்து மந்திரங்களையும் உச்சரித்து பால் போன்றவை வைத்து சாமிக்கு நிவேதனம் செய்ய வேண்டும்.

    அன்றைய தினம் அதிகாலையிலேயே எழுந்து நீராடிவிட்டு, பூஜை அறையில் கோலமிட்டு அதன் மேலே கலசம் வைக்கவும். வீட்டில் லட்சுமி நாராயணர் படம் இருந்தால் அதனையும் வைக்கவும். பின்னர் நீங்கள் புதிதாக வாங்கிய பொருளை கலசத்தின் முன்பாக வைக்கவும்.

    முதலில் விநாயகரை வேண்டிக் கொள்ளுங்கள். பின்னர் கலசத்தில் மகாலட்சுமியை எழுந்தருளும்படி பிரார்த்தியுங்கள். உங்களுக்குத் தெரிந்த விஷ்ணு-லட்சுமி, சிவன்-பார்வதி, குபேரன், துதிகளைச் சொல்லுங்கள். பின்னர் தீப ஆராதனைகள் செய்யுங்கள்.

  • Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – தனம் 
    ரிஷபம் – நலம் 
    மிதுனம் – ஊக்கம் 
    கடனம் – புகழ் 
    சிம்மம் – லாபம் 
    கன்னி – பெருமை 
    துலாம் –  சலனம் 
    விருச்சிகம் – மகிழ்ச்சி 
    தனுசு – கவனம் 
    மகரம் –   மறதி
    கும்பம் – இன்பம் 
    மீனம் – இரக்கம் 
    சந்திராஷ்டமம்    – அனுஷம், கேட்டை
     

  • May 7 Akshaya thirudiyai

    மே 7 அட்சய திரிதியை
    விகாரி வருடம் – சித்திரை 24
    அட்சய திரிதியை
    07-மே-2019 செவ்வாய்  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    3.00 – 4.30    
    குளிகை    :    12.00 – 1.30
    எமகண்டம்    :    9.00 – 10.30                          
    திதி    :    திரிதியை          
    திதி நேரம்    :    திரிதியை    இ    3.01
    நட்சத்திரம்    :    ரோகிணி    மா    5.10
    யோகம்    :    அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    அனுஷம்,கேட்டை
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்