Author: லிங்கேஷ்

  • March 22 2024 Pradhosham

    மார்ச் 22 – பிரதோஷம்
    சோபகிருது வருடம் – பங்குனி 9
    22-மார்-2024 வெள்ளி
    காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர்
    மதுரை தல்லாகுளத்தில் தேர்
    நல்ல நேரம் : 9.30 – 10.30
    ராகு : 10.30 – 12.00
    குளிகை : 7.30 -9.00
    எமகண்டம் : 3.00 – 4.30
    திதி : திரையோதசி
    திதி நேரம் : துவாதசி கா 7.16
    நட்சத்திரம் : ஆயில்யம் அ.கா 3.46
    யோகம் : மரண-சித்த
    சந்திராஷ்டமம் : பூராடம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

  • Thiruvarur aazhi ther

    உலகில் காணப்படும் தேர்களில் ஆழி என அடைமொழியோடு அழைக்கப்படும் ஒரே தேரான திருவாரூர் ஆழித்தேரில் ஸ்ரீதியாகராஜ சுவாமி அஜபாநடனத்துடன் நேற்று இரவு எழுந்தருளினார்.  அதனை தொடர்ந்து இன்று காலை 8.50 மணிக்கு வடம்பிடிக்கப்பட்டது. அப்போது திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ஆருரா தியாகேசா என பக்தி கோஷத்துடன் வடத்தை பற்றி ஆலய பிரதான வீதிகளில் வலம் வந்தனர்.

    சைவ சமயத்தின் தலைமைபீடமாகவும் கோவில்களின் கோவில் என போற்றப்படுவதும், பூமிக்குரிய ஸ்தலமாகவும் விளங்கும் திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயம் தொன்மை சிறப்புவாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க ஆலயம்.

    இவ்வாலயத்தின் வருடாந்திர திருவிழா பங்குனி பெருவிழாவாக அஸ்வினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திரங்களை அடிப்படையாக கொண்டு இவ்வாலயத்தின் திருவிழா நடைபெறுவது தனிச்சிறப்பு.  அதன்படி பங்குனி ஆயில்ய நட்சத்திர நாளான இன்று ஆழித்தேரோட்டம் ஆலய ஆகமவிதிபடி நடைபெற்றது.    

    96 அடி உயரமும், 450 டன் எடையும் கொண்ட பிரமாண்டமாக ஆழித்தேர் விதியினை ஆக்கிரமித்து நிற்க தேரின் முன்பக்கம் பிரமாண்ட வகையில் வடிவமைக்கப்பட்ட 4 குதிரைகள் 4 வேதங்களை மையமாககொண்டு கட்டப்பட்டு தேரையொட்டும் சாரதியாக பிரம்மா அமர்ந்து தேரை ஆலயத்தின் பிரதான 4 ராஜவீதிகளிலும் கொண்டு செல்வதாக ஐதீகத்தின்படி தேரில் காட்சிபடுத்தப்பட்டு தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது.

    சுமார் 450 டன் எடையளவு கொண்ட ஆழித்தேர் வீதிகளில் பக்தர்கள் பக்தி பரவசத்துட்ன இழுத்து செல்ல ஏதுவாக 4 டன் எடையளவு கொண்ட 500 அடி நீளம் கொண்ட 4 பிரமாண்டமான வடங்கள் கட்டப்பட்டுள்ளதோடு,  தேர் சக்கரங்களை உந்த செய்யும் வகையில் 2 புல்டோசர் இயந்திரங்களும் தேரோட்டத்தில் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

    பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், புல்டோசர் இயந்திரம் உள்ளிட்டவை தேரோட்டத்தில் பயன்படுத்தப்பட்டுவரும் நிலையில் தேர் வீதிகளில் சீராக செல்லும் வகையிலும், தேர் வீதிகளில் செல்லும்போது அதன் வேகத்தை முறைப்படுத்திடவும் தேரின் 4 இரும்பு சக்கரங்களிலும் ஹைட்ராலிக் பிரேக் பொறுத்தப்பட்டு உள்ளது.  தேரோட்டத்திற்கு நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டாலும், தேர் வீதியின் மையமாக செல்ல ஏதுவாக தேர்கொத்தனார்கள் மரத்திலான முட்டுகட்டைகளை தேர் சக்கரங்களின் அடியில் வைத்து முறைப்படுத்தினர்.

    ஆழித்தேரோட்டத்திற்கு முன்னதாக ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி தேர் வடம்பிடிக்கப்பட்டது.  ஆழித்தேருக்கு பின்னதாக அம்பாள் ஸ்ரீநீலோத்பலாம்பாள் தேரும், அதனை தொடர்ந்து ஸ்ரீசண்டிகேஸ்வர சுவாமி தேர் வடம்பிடிக்கப்பட்டு ஒரே நாளில் 5 தேர்கள் ஆலய வீதிகளில் வலம் வருவதை இலட்சக்கணக்கான பக்தர்கள்  கண்டுகளித்து தேர்களில் அருள்பாலிக்கும் இறைவனை வணங்கினர்.

  • Thiruvalangadu car festival

    திருவலாங்காடு வடாரண்யேஸ்வர சுவாமி திருக்கோயில் பங்குனி உத்திர திருத்தேர் சாமி உலா புறப்பாடு நடைபெற்றது.

    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் உடன் இணைந்த திருவலாங்காடு அருள்மிகு வடாரண்யேஸ்வர சுவாமி திருக்கோயில் ஆடல் வள்ளல் நடராஜப்பெருமானின் ஐம்பெரும் சபைகளில் முதல் சபை திருக்கோயில் ஆகும்.

    இந்த திருக்கோயில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு கமல தேர் புஷ்பத்தால் அலங்காரம் செய்யப்பட்டு மங்கள வாத்தியங்கள் முடங்க சுவாமி ஊர்வலமாக அழைத்துவரப்பட்டு கமலத் தேரில் எழுந்தருளினார் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்பு திருக்கோயில் சார்பில் பச்சைக்கொடி காட்டப்பட்டு வடம் பிடித்து தேரை தொடங்கி வைத்தனர் திருக்கோயில் நிர்வாகத்தினர்.

    இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து திருக்கோயில் மாடவீதியில் புறப்பாடு நடைபெற்றது ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர். பக்தர்கள் பாதுகாப்புக்காக திரளான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

  • Thirupathy theporchavam 2nd day

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பாக நடைபெற்று வரும் தெப்போற்சவம். இரண்டாம் நாள் உற்சவத்தில்  தெப்பத்தில் வலம் வந்த ருக்மணி சமேத ஸ்ரீ கிருஷ்ணர்

    திருமலையில் வருடாந்திர தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தில் முதல் நாள் சீதாலக்ஷ்மண அனுமன் சமேத ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி குளத்தில் தெப்பத்தில் வலம் வந்தார்.

    இதனைத் தொடர்ந்து இரண்டாம் நாளன்று ருக்மணி சமேத ஸ்ரீகிருஷ்ணரை மலர்கள் தங்க ஆபரணங்கள் அலங்கரித்து வீதிகளில் வலம் வரச் செய்து தெப்பத்தில் எழுந்தருள செய்தனர். தொடர்ந்து கோலாகலமாக தெப்பஉற்சவம் நடைபெற்றது பக்தர்கள் திருக்குளத்தின் படிகளில் அமர்ந்திருந்து ஆரத்தி சமர்ப்பித்து ருக்மணியுடன் வலம் வந்த கிருஷ்ணரை தரிசித்து மகிழ்ந்தனர்.

  • March 21 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     – நலம்
    ரிஷபம்         – புகழ்
    மிதுனம்     – உதவி
    கடகம்         –  ஜெயம்
    சிம்மம்         –   ஆர்வம்
    கன்னி         –    சினம்  
    துலாம்         –     நட்பு
    விருச்சிகம்     –  தோல்வி  
    தனுசு         –     வெற்றி
    மகரம்         –    தனம்
    கும்பம்         –      நன்மை
    மீனம்         –      கவனம்
    சந்திராஷ்டமம்    –       மூலம்

     

  • March 21 2024 Indrayanaal

    மார்ச் 21 – இன்றைய நல்லநேரம்
    சோபகிருது வருடம் – பங்குனி 8
    21-மார்-2024 வியாழன்
    நல்ல நேரம் : 10.30 – 12.00
    ராகு : 1.30 – 3.00
    குளிகை : 9.00 – 10.30
    எமகண்டம் : 6.00 – 7.30
    திதி : துவாதசி
    திதி நேரம் : ஏகாதசி அ.கா 5.26
    நட்சத்திரம் : பூசம் அ.கா 1.39
    யோகம் : சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம் : மூலம்
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்

     

  • Nandiyamperuman thirukalyanam

    அரியலூர் மாவட்டம் திருமழபாடி கொள்ளிடம் ஆற்றில் அமைந்துள்ளது வைத்தியநாதசுவாமி ஆலயம். மூவரால் பாடல்பெற்ற திருத்தலமாகும். உலகமெங்கும் எழுந்தருளும் சிவபெருமானுக்கு காவலனாக உள்ள நந்தியம்பெருமானுக்கு திருக்கல்யாணம் ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் புனர்பூசம் நாளில் கொண்டாடப்பட்டு வருகின்றது.

    இதனையடுத்து பங்குனி மாதம் புனர்பூச நாளான நேற்று இரவு நந்தியம்பெருமானுக்கும், சுயசாம்பிகை தேவிக்கும் திருமணம் நடைபெற்றது. திருவையறு ஐயாறப்பர் கோவிலிருந்து திருமண சீர்களுடன் சுயசாம்பிகை தேவியார் பல்லாக்கில் எழுந்தருளி ஆற்றை கடந்து வைத்தியநாதசுவாமி ஆலயத்தை வந்தடைந்த பின்னர் நந்தியம்பெருமானுக்கும் சுயசாம்பிகை தேவியாருக்கும் பல்வேறு திரவிய பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் மற்றும் மேளதாளங்கள் முழங்க நந்தி திருமணம். அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிவனே போற்றி என முழக்கம் செய்தனர்.  நந்தி திருமணம் கண்டால் முந்தி திருமணம் நடக்கும் என்ற ஐதீகத்தால் திருணமாகாத ஆண்கள் பெண்கள் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

  • Thirupathy bramorchavam day 1

    ஐந்து நாள் உற்சவத்தில் முதல் நாளில் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி பரிவாரங்களுடன் தெப்பத்தில் பவனி திருமலை ஏழுமலையான் ஆலயத்தில் வருடாந்திர தெப்போற்சவம் வைபவமாக துவங்கியது. மார்ச் 20 முதல் 24 ஆம் தேதி வரை நடைபெற உள்ள தெப்போற்சவத்தை  முன்னிட்டு ஆலய கருவறையில் உள்ள ஸ்ரீ  ராமச்சந்திர  சமேத லக்ஷ்மண சீதா உற்சவ மூர்த்திகள் ஸ்ரீ ருக்மணி ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி நாள்தோறும் வலம் வருவர்.

     

    அந்த வகையில்  முதல் நாளில் மாட வீதிகளில் வலமாக வரச் செய்து ஆலய திருக்குளத்தில் தெப்பத்தில் எழுந்தருள செய்தனர் தொடர்ந்து உற்சவமூர்த்திகள் அலங்காரம் மின் விளக்குகளுடன் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் திருக்குளத்தை மூன்று முறை வலம் வர செய்தனர் திருக்குளத்தில் படித்துறையில் காத்திருந்த பக்தர்கள் கற்பூர ஆரத்தி சமர்ப்பித்து  சுவாமியை வழிபட்டனர். ஐந்து நாட்கள் தெப்போற்சவத்தின்  முதல் நாள் உற்சவம் வைபவமாக நடைபெற்றது

  • Kalvi Selvam Peruga

    சரஸ்வதி
    (கல்வியும், விவேகமும் பெருக)
     
    ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே
    விரிஞ்சிபத்ன்யை ச தீமஹி
    தன்னோ வாணீஹ் ப்ரசோதயாத்
     
    ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே
    ஸர்வ ஸித்தீச தீமஹி
    தன்னோ வாணீஹ் ப்ரசோதயாத்
     
    ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே
    பிரஹ்மபத்ன்யை ச தீமஹி
    தன்னோ வாணீஹ் ப்ரசோதயாத்
     
     ஓம் யேயே சர்வபிரியவாக் வித்மஹே
    ப்ரீம் வாகீஸ்வரீ தீமஹி
    தன்னோ சக்திஹ் ப்ரசோதயாத்
     
    ஓம் ஐம் வாக்தேவ்யை ச வித்மஹே
    காமராஜாய தீமஹி
    தன்னோ தேவீ ப்ரசோதயாத்
     
    ஓம் சரஸ்வத்யை ச வித்மஹே
    பிரஹ்ம பத்ன்யை ச தீமஹி
    தன்னோ தேவீ ப்ரசோதயாத்
     
    ஓம் வாகீஸ்வர்யை ச வித்மஹே
    பிரஹ்ம பத்ன்யை ச தீமஹி
    தன்னோ வாணீ ப்ரசோதயாத்
     
    லட்சுமி
    (சகல செல்வங்களையும் அடைய)
     
    ஓம் மஹாலக்ஷ்மை ச வித்மஹே
    விஷ்ணுபத்ன்யை ச தீமஹி
    தன்னோ லக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்
     
    ஓம் லக்ஷ்மிர் பூர்புவஹ் லக்ஷ்மி
    ஸ்வஹ் காலகம் தீமஹி
    தன்னோ மஹாலக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்
     
    ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
    விஷ்ணுபந்தாய ச தீமஹி
    தன்னோ லக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்
     
    ஓம் பூ ஸக்யைச வித்மஹே
    விஷ்ணுபத்னீ ச தீமஹி
    தன்னோ லக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்
     
    ஓம் அமிர்தவாசினி வித்மஹே
    பத்மலோசனீ தீமஹி
    தன்னோ லக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்

     

  • March 20 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     – ஆர்வம்
    ரிஷபம்         – நட்பு
    மிதுனம்     – வெற்றி   
    கடகம்         –  கவனம்  
    சிம்மம்         –   நலம்  
    கன்னி         –    ஜெயம்
    துலாம்         –     பரிவு
    விருச்சிகம்     –  தோல்வி
    தனுசு         –     உதவி  
    மகரம்         –    சுகம்
    கும்பம்         –      சிக்கல்
    மீனம்         –      மறதி  
    சந்திராஷ்டமம்    –       அனுஷம், கேட்டை