Thirupathy theporchavam 2nd day

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பாக நடைபெற்று வரும் தெப்போற்சவம். இரண்டாம் நாள் உற்சவத்தில்  தெப்பத்தில் வலம் வந்த ருக்மணி சமேத ஸ்ரீ கிருஷ்ணர்

திருமலையில் வருடாந்திர தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தில் முதல் நாள் சீதாலக்ஷ்மண அனுமன் சமேத ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி குளத்தில் தெப்பத்தில் வலம் வந்தார்.

இதனைத் தொடர்ந்து இரண்டாம் நாளன்று ருக்மணி சமேத ஸ்ரீகிருஷ்ணரை மலர்கள் தங்க ஆபரணங்கள் அலங்கரித்து வீதிகளில் வலம் வரச் செய்து தெப்பத்தில் எழுந்தருள செய்தனர். தொடர்ந்து கோலாகலமாக தெப்பஉற்சவம் நடைபெற்றது பக்தர்கள் திருக்குளத்தின் படிகளில் அமர்ந்திருந்து ஆரத்தி சமர்ப்பித்து ருக்மணியுடன் வலம் வந்த கிருஷ்ணரை தரிசித்து மகிழ்ந்தனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *