Author: லிங்கேஷ்

  • Palani therottam

    பழனி பங்குனி உத்திரத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான பங்குனித் தேரோட்டம் இன்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து வழிபட்டனர்.

    அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனி முருகன் கோவிலில்  பங்குனி உத்திரத்திருவிழா கடந்த 18ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்து நாட்கள் தொடர்ந்து நடைபெறும் திருவிழாவின் ஆறாம் நாளான நேற்று முத்துகுமாரசுவாமி ,வள்ளி,தெய்வானை திருக்கல்யாணமும்,  திருவிழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி உத்திரத் தேரோட்டம் இன்றும் நடைபெற்றது. இன்று மாலை 4.மணிக்கு மேல் அருள்மிகு முத்துக்குமாராசாமி-வள்ளி,தெய்வானையுடன், அலங்கரிக்கப்பட்ட  திருத்தேரில் பழனி அடிவாரம் வடக்குகிரிவீதியில் இருந்து நான்கு கிரிவீதிகளிலும் வலம் வந்து அருள்பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து திருத்தேரை இழுக்க, அருள்மிகு முத்துக்குமாரசாமி-வள்ளி தெய்வயானை சமேதராக‌ தேரில்  எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    தேரோட்டத்தில் பழனி கோவில் இணைஆணையர் மாரிமுத்து, அறங்காவலர் தலைவர் சந்திரமோகன் ,அறங்காவலர் குழுவினர், கோட்டாட்சியர் சரவணன், திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் பிரதீப் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். வருகின்ற 27 ஆம் தேதி கொடி இறக்க நிகழ்ச்சியுடன் பங்குனி உத்திர திருவிழா நிறைவடைகிறது.

  • March 24 2024 Subamuhurthanaal

    மார்ச் 24 – சுபமுகூர்த்த நாள்
    சோபகிருது வருடம் – பங்குனி 11
    மார் 24, 2024 ஞாயிறு
    பவுர்ணமி
    ஹோலி,
    கழுகுமலை,
    கங்கைகொண்டான்,
    திருச்சுழியில் தேர்
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள் (காலை 7.31 – 9.00)
    நல்ல நேரம் : 7.30 – 8.30
    ராகு : 4.30 – 6.00
    குளிகை : 3.00 – 4.30
    எமகண்டம் : 12.00 – 1.30
    திதி : பவுர்ணமி
    திதி நேரம் : சதுர்த்தசி கா 11.24
    நட்சத்திரம் : பூரம் கா 8.46
    யோகம் : சித்த-அமிர்த
    சந்திராஷ்டமம் : திருவோணம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

  • March 24 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     – லாபம்
    ரிஷபம்         – பயம்  
    மிதுனம்     – நலம்
    கடகம்         –  ஆக்கம்
    சிம்மம்         –   இன்பம்
    கன்னி         –    நன்மை
    துலாம்         –     பகை
    விருச்சிகம்     –  வரவு
    தனுசு         –     புகழ்
    மகரம்         –    பரிசு
    கும்பம்         –      பரிவு
    மீனம்         –      இன்பம்  
    சந்திராஷ்டமம்    –       திருவோணம்

  • Palani thiru kalyanam

    பழனியில் பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண வைபவம் விமர்சையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத்திருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் பங்குனி உத்திரத்திருவிழாவை முன்னிட்டு கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து, பாதயாத்திரையாக வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகனுக்கு தீர்த்தம் செலுத்தி வழிபடுகின்றனர். இந்நிலையில்‌ திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் ஆறாம் நாள் திருவிழாவான இன்று நடைபெற்றது.

    திருஆவினன்குடி கோவிலில் நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் அருள்மிகு முத்துக்குமாரசாமி- வள்ளி,தெய்வானைக்கு திருமணம் நடைபெற்றது. முன்னதாக அருள்மிகு முத்துக்குமாரசாமி‌-வள்ளி,தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றன.தொடர்ந்து  அருள்மிகு முத்துக்குமாரசாமி-வள்ளி, தெய்வானையுடன் மணக்கோலத்தில் வெள்ளித்தேரேறி நான்கு கிரிவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    திருமண நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோசம் எழுப்பியபடி சாமி தரிசனம் செய்தனர். பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை ஞாயிற்றுகிழமை மாலை  நடைபெறவுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பிற்காக 2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

  • Kumari thooka nerchai

    குமரி இட்டகவேலி ஶ்ரீ நீலகேசி அம்மன் கோவிலில் 151 பச்சிளம் குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை திருவிழா இன்று நடைபெற்றது.

    குமரி மாவட்டத்தில் பச்சிளம் குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நடத்தப்படும் கோவில்களில் ஒன்றான இட்டகவேலி ஶ்ரீ நீலகேசி அம்மன் கோவில் தூக்கத்திருவிழா கடந்த 17 ம் தேதி கோலாகலமாக கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்நிலையில் விழாவின் 7ஆம் திருவிழா நாளான இன்று  பச்சிளம் குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை திருவிழா நடத்தப்பட்டது.

    முன்னதாக கோவிலில் வழிபடும் அம்மன்கள் மூன்று பேரும் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பந்தலில் எழுந்தருளினர்.தொடர்ந்து தூக்க தேரில் பொருத்தப்பட்டிருந்த வில்லுகளில் நான்கு தூக்கக்காரர்கள் பச்சிளம் குழந்தைகளை தூக்கி வானுயுர உயர்ந்தபடி நிற்கும் தேரை பக்தர்கள் கூடி இழுத்து கோவிலை சுற்றி ஒருமுறை வலம் வைத்து தூக்க நேர்ச்சையை முடித்து வைத்தனர்.

    இந்த வருடம் 151 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நடத்தப்பட்டது. இதில் தமிழகம் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் ஆசி பெற்று சென்றனர்.

  • Thirupathy theporchavam day 4

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோலாகலமாக நடைபெற்று வரும் வருடாந்திர தெப்போற்சவம். தெப்பத்தில் வலம் வந்து காட்சியளித்த ஸ்ரீதேவி பூதேவி  சமேத ஸ்ரீ ஸ்ரீனிவாசர்.

    ஆண்டுதோறும் ஐந்து நாட்கள்   வருடாந்திர   தெப்போற்சவம் நடத்துவது வழக்கம் அந்த வகையில் இந்த ஆண்டு மார்ச் 21ஆம் தேதி தெப்போற்சவம் சிறப்பாக துவங்கி நடைபெற்று வருகிறது அந்த வகையில் நான்காம் நாளான இன்று ஸ்ரீதேவி பூதேவி சமேதராக ஸ்ரீ சீனிவாச பெருமாளை அலங்கரித்து மாட வீதிகளில் வலம் வர செய்தனர்.

    தொடர்ந்து வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில்  உற்சவ மூர்த்திகளை எழுந்தருள செய்து  திருக்குளத்தில் வலம் வரச் செய்தனர் நான்காம் நாளான இன்று ஐந்து சுற்றுகள் திருக்குளத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு பெருமாள் தாயார்கள் காட்சியளித்தனர் .

  • March 23 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     – ஆசை
    ரிஷபம்         – உயர்வு
    மிதுனம்     – நஷ்டம்  
    கடகம்         –  ஜெயம்   
    சிம்மம்         –   மறதி
    கன்னி         –    அச்சம்
    துலாம்         –     பக்தி
    விருச்சிகம்     –  சுகம்    
    தனுசு         –     நன்மை
    மகரம்         –    வெற்றி
    கும்பம்         –      சாந்தம்
    மீனம்         –      லாபம்
    சந்திராஷ்டமம்    –       உத்திராடம்

  • March 23 2024 Indrayanaal

    மார்ச் 23 – இன்றைய நல்லநேரம்
    சோபகிருது வருடம் – பங்குனி 10
    மார் 23, 2024 சனி
    நல்ல நேரம் : 7.30 – 8.30
    ராகு : 9.00 – 10.30
    குளிகை : 6.00 – 7.30
    எமகண்டம் : 1.30 – 3.00
    திதி : சதுர்த்தசி
    திதி நேரம் : திரையோதசி கா 9.12
    நட்சத்திரம் : மகம் கா 6.08
    யோகம் : சித்த
    சந்திராஷ்டமம் : உத்திராடம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

  • Thanjai periya koil abishegam

    பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெருவுடையார் கோயில் மஹாநந்தியம் பெருமானுக்கு பால், சந்தனம், திரவியப்பொடி உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்று வருகிறது. ஏராளமானவர்கள் நந்தியம் பெருமானை வழிபட்டு வருகின்றனர்

    உலகப் பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோவிலில் மூலவர் சன்னதிக்கும், கொடிமரத்துக்கும், முன்பு நந்தி மண்டபம் அமைந்துள்ளது.  

    பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் எழுந்தருளி இருக்கும் மஹா நந்தியம் பெருமானுக்கு பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட விபூதி, மஞ்சள், அரிசிமாவு, பஞ்சாமிர்தம், எலுமிச்சம்பழம், பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெறறு வருகிறது.


     
    அருகம்புல், வில்வ இலை, பூக்களால் நந்தியம் பெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாரதனை காட்டப்படுகிறது. பிரதோஷம் அன்று நந்தியும் பெருமானை வழிப்பட்டால் சகல ஐஸ்வர்யங்கள் கிட்டும், தோஷங்கள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருப்பதால் ஏராளமானவர்கள் நந்தியம் பெருமானை வழிப்படடு வருகின்றனர்.

  • March 22 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     – வெற்றி
    ரிஷபம்         – நட்பு
    மிதுனம்     – பணிவு  
    கடகம்         –  பெருமை  
    சிம்மம்         –   சாந்தம்
    கன்னி         –    இன்பம்
    துலாம்         –     உதவி
    விருச்சிகம்     –  தெளிவு   
    தனுசு         –     அமைதி  
    மகரம்         –    பகை
    கும்பம்         –      அசதி
    மீனம்         –      பயம்
    சந்திராஷ்டமம்    –       பூராடம்