Mahara Rasi Rahu Kedhu Peyarci Palangal

மகர ராசி அன்பர்களே, 

ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் சஞ்சாரம் செய்வதன் பலன்! 
ராகு பகவான், இப்பொழுது, உங்களது ராசியான மகரத்திற்கு ஐந்தாம் வீடான ரிஷப ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இது பொதுவாக உங்கள் வாழ்வைச் சிறக்கச் செய்யும் என எதிர்பார்க்கலாம். நீங்கள் தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். உங்கள் வளர்ச்சிக்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள், உங்களுக்குத் திருப்தி தருவதாக அமையும். 

உங்களிடம் அமைந்துள்ள பரந்த நுண்ணறிவு, இப்பொழுது உங்களுக்குப் பெரிதும் கை கொடுக்கும். இது, வாழ்க்கைச் சூழ்நிலைகளைச் சமாளிக்கும் திறனை மேம்படுத்தி, உங்களை, புத்தி சாதுர்யத்துடனும் செயல்படத் தூண்டும். உங்கள் கற்பனைத் திறன் மற்றும் படைப்புத் திறன் போன்றவையும், வழக்கத்தை விட இப்பொழுது சற்று கூடுதலாகவே இருக்கும். எனினும், நடைமுறை அம்சங்களைக் கருத்தில் கொண்டு செயல்பட மறந்து விடாதீர்கள். 

ஊக வணிகங்களில் ஈடுபட வேண்டாம். ஏனெனில் இவை நீங்கள் எதிர்பார்த்தது போல அமையாமல் போகலாம். உங்களில் சிலர், இந்த நேரத்தில், புதியவர்களுடனோ அல்லது தொலைதூரத்தில் உள்ளவர்களுடனோ நட்பு கொள்ளக்கூடும். ஒரு சிலர் நீண்ட தூர அல்லது வெளிநாட்டு சுற்றுலா செல்லும் வாய்ப்பும் உள்ளது. உங்கள் கடந்தகால செயல்களின் முடிவுகளையும் நீங்கள் இந்தக் காலக் கட்டத்தில் அனுபவிப்பீர்கள். 

இதன் மூலம் வாழ்க்கையில் சில முக்கியப் பாடங்களை நீங்கள் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். எனினும், குழந்தை பாக்கியத்திற்கான வாய்ப்பு குறைவாகவே காணப்படுகிரது. மொத்தத்தில், இந்தப் பெயர்ச்சி உங்களை உலக இன்பங்களை நோக்கி அழைத்துச் செல்லும் எனலாம். 

கேது உங்கள் ராசிக்குப் பதினொன்றாம் வீட்டில் சஞ்சாரம் செய்வதன் பலன்! 

கேது பகவான், இப்பொழுது, உங்கள் ராசியான மகரத்திற்குப் பதினொன்றாம் வீடான விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இதன் காரணமாக, வாழ்க்கையில் நீங்கள், ஓரளவு கடினமான தருணங்களைச் சந்திக்க நேரிடலாம். உங்கள் ஆசைகளும், நம்பிக்கைகளும் நிறைவேறாமல் போகலாம். இது பொதுவாக அதிருப்திக்கு வழி வகுக்கும். வேலை அல்லது தொழில் மூலம் நீங்கள் பெறும் லாபம் மற்றும் ஆதாயம், வழக்கத்தை விட குறைவாக இருக்கக் கூடும். 

உங்கள் மூத்த உடன்பிறப்புகளுடன் தவறான புரிதலுக்கான வாய்ப்புகளும் உள்ளன. அதே நேரம், உங்கள் அணுகுமுறை, பொதுவாக, உங்கள் நண்பர்களுடனும் சமூக வட்டங்களுடனும் உங்கள் நல்லுறவைப் பேணுவதற்கு ஏற்றதாக இல்லாமல் போகலாம். மற்றவர்களுடனான உங்கள் தொடர்பும் கூட, குறைவாகவே இருக்கக் கூடும். மேலும், இந்தப் பெயர்ச்சியின் பொழுது, குறைந்த அளவிலான நண்பர்களுடன் மட்டுமே, நீங்கள் தொடர்பில் இருக்க விரும்புவீர்கள்.  தொலை தூர உறவினர்களுடனான உங்கள் உறவுமுறைகளிலும், இதே நிலை தான் நீடிக்கும். உங்களில் சிலர், காது கேளாமை அல்லது காது தொடர்பான கோளாறுகளால் பாதிக்கப்படலாம். எனவே, கவனம் தேவை.

நாகை சுந்தர மூர்த்தி, சோதிட ஆய்வாளர்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *