Tag: rahu kedhu

  • Rahu kedhu peyarchi parigarangal

    மேஷம்….

    கீழ்க்கண்ட மந்திரத்தை தினமும் 108 முறை ஜபம் செய்யவும்
    ‘ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் சஹ ராஹவே நமஹ’
    ‘சிவபெருமான்’ மற்றும் ‘பைரவரை’ வழிபடவும்
    நீலம் மற்றும் கருப்பு நிற ஆடைகளை தானம் செய்யவும்
    வெள்ளி சங்கிலி அணியவும்
    வீட்டின் அருகிலுள்ள கருப்பு நாய்களுக்கு உணவளிக்கவும்
    முடியும் என்றால், சனிக்கிழமைகளில் உபவாசம் (உண்ணா நோம்பு) இருக்கவும்

    ரிஷபம்….

    கீழ்க்கண்ட மந்திரத்தை தினமும் 108 முறை ஜபம் செய்யவும்
    ‘ஓம் ஸ்ட்ரம் ஸ்ட்ரிம் ஸ்ட்ரௌம் சஹ கேதுவே நமஹ’
    செவ்வாய்க்கிழமைகள் மற்றும் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை வழிபடவும்
    ஏழைகளுக்கு சமையல் எண்ணெய் தானமாக அளிக்கவும் 
    உங்கள் கழுத்து அல்லது மணிக்கட்டில் நீல நிற நூலில் சந்தனத் துண்டு ஒன்றை கட்டி அணிந்து கொள்ளவும்
    மிச்சமாகிப் போன அல்லது கெட்டுப் போன பழைய ஆகாரங்களை உட்கொள்ளாமல் தவிர்த்து விடவும் 
    முடியும் என்றால், செவ்வாய்க்கிழமைகளில் உபவாசம் (உண்ணா நோம்பு) இருக்கவும்

    மிதுனம்….

    கீழ்க்கண்ட மந்திரத்தை தினமும் 108 முறை ஜபம் செய்யவும்
    ‘ஓம் நமசிவாய’
    அன்னை துர்கையை வணங்கி வழிபடவும் 
    சாம்பல் வண்ண ஆடைகளை ஏழைகளுக்கு தானம் அளிக்கவும் 
    உங்களுக்கு விருப்பம் இருந்தால் கருப்பு நிற நாயை வளர்க்கவும் 
    நீங்கள் குளிக்கும் பொழுது, தண்ணீரில் சில துளி சந்தன எண்ணெய் அல்லது சந்தனத் திரவியம் விட்டு குளிக்கவும்.
    வீட்டில் வளர்க்கும் மீன்கள், அல்லது குளம் ஆறு போன்ற இடங்களில் உள்ள மீங்களுக்கு உணவளிக்கவும்

    கடகம்….

    கீழ்க்கண்ட மந்திரத்தை தினமும் 108 முறை ஜபம் செய்யவும்
    ‘ஓம் ரும் ராஹவே நமஹ’
    விநாயகருக்கு பூஜை செய்து வழிபடவும் 
    தாகத்தில் தவிப்பவர்களுக்குத் தண்ணீர் அளிக்கவும் 
    இளநீர் குடிக்கவும், அல்லது எந்த வகையிலாவது தேங்காயை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளவும்  
    ஐந்து வகை தானியங்களை, எவ்வளவு முடியுமோ அவ்வளவு, பறவைகளுக்கு அளிக்கவும்
    மது மற்றும் போதை பொருட்களை உட்கொள்ளாமல் தவிர்க்கவும் 

    சிம்மம்….

    கீழ்க்கண்ட மந்திரத்தை தினமும் 108 முறை ஜபம் செய்யவும்
    ‘அர்த்தகாயம் மகாவீர்யம் சந்திராதித்ய விமர்தனம்
    சிம்ஹிகா கர்பசம்பூதம் தம் ராகும் பிரணமாம்யஹம்
    கீழ்க்கண்ட மந்திரத்தையும் தினமும் 108 முறை ஜபம் செய்யவும்
    ‘பலாச புஷ்ப சங்காசம் தாரா கிரஹ மஸ்தகம்
    ரௌத்ரம் ரௌத்ராத்மகம் தம் கேதும் பிரணமாம்யஹம்
     ஏழைகள் மற்றும் வீடற்றவர்களுக்கு ஒரே நிறமுடைய போர்வை கொடுத்து உதவவும் 
    ராகு காலத்தில் தியானம் மேற்கொள்ளவும்
    செவ்வாய்க்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் அதிக உப்பு சேர்த்துக் கொள்வதைத் தவிர்க்கவும்

    கன்னி….

    கீழ்க்கண்ட ராகு காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை ஜபம் செய்யவும்
    ‘ஓம் நாகத்வஜாய வித்மஹே
    பத்ம ஹஸ்தாய தீமஹீ
    தன்னோ ராகு ப்ரசோதயாத்’
    கீழ்க்கண்ட கேது காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை ஜபம் செய்யவும்
    ’ஓம் அஷ்வத்வஜாய வித்மஹே
    சூல ஹஸ்தாய தீமஹீ
    தன்னோ கேது ப்ரசோதயாத்’
    அனாதைக் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கவும்
    குதிரைக்குக் கொள்ளு தரவும்  
    மீன் தொட்டிகளிலோ, கடைகளிலோ இருக்கும் மீன்களை விடுவித்து, அவற்றைத் தண்ணீரில் விடவும்; மேலும், மீன்களுக்கு உணவும் அளிக்கவும் 

    துலாம்….

    கீழ்க்கண்ட கணபதி காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை ஜபம் செய்யவும்
    ‘ஓம் ஏகதந்தாய வித்மஹே, வக்ரதுண்டாய தீமஹீ, தன்னோ தந்தி ப்ரசோதயாத்‘
    கீழ்க்கண்ட கணபதி மந்திரத்தை தினமும் 108 முறை ஜெபம் செய்யவும்
    ‘ஓம் கம் கணபதயே நமஹ’
    சர்க்கரை, நெய், வெல்லத்தால் செய்யப்பட்ட இனிப்புகள் அல்லது நிலக்கடலை போன்ற நிலத்தடியில் வளரும் பொருட்களை தானம் செய்யவும் 
    செவ்வாய்க்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் ஆன்மீகத் தலங்கள், தொண்டு  நிறுவனங்கள் அல்லது மக்களுக்கு, ஏழு வகை தானியங்களை தானம் செய்யவும்
    கல்வியில் சிறந்து விளங்க, மற்ற மாணவர்களுடன் சேர்ந்து குழுவாகப் படிப்பதைத் தவிர்க்கவும்
    குறுக்கு வழியில் சென்றால் வெற்றி கிட்டும் என்ற நினைப்பைத் தவிர்க்கவும்

    விருச்சிகம்….

    கீழ்க்கண்ட துர்கா காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை ஜபம் செய்யவும்
    ‘ஓம் காத்யாயநாய வித்மஹே கன்ய குமாரி தீமஹீ 
    தன்னோ துர்கி ப்ரசோதயாத்’
    கீழ்க்கண்ட ராகு மந்திரத்தை தினமும் 108 முறை ஜபம் செய்யவும்
    ‘ஓம் ரும் ராஹவே நமஹ’
    கீழ்க்கண்ட கேது மந்திரத்தை தினமும் 108 முறை ஜபம் செய்யவும் 
    ‘ஓம் கெம் கேதவே நமஹ’
    அன்னை துர்கா தேவியை வழிபடவும்  
    நெற்றியில் சந்தனம் பூசிக் கொள்ளவும்  
    சனிக்கிழமைகளில் சிவப்பு துவரையை ஏழைகளுக்கு தானம் செய்யவும்
    சிந்தூரத்தை நெற்றியில் இட்டுக் கொள்ளவும்; அல்லது, குங்குமப்பூ அல்லது சிந்தூரத்தை உணவில் சேர்த்துக் கொள்ளவும்

    தனுசு….

    கீழ்க்கண்ட ராகு சாந்தி மந்திரத்தை தினமும் 108 முறை ஜபம் செய்யவும்
    ‘ஓம் ராஹுவே தேவயே சாந்திம், ராஹுவே கிருபாயே கரோதி
    ராகுவே சமாயே அபிலாஷத் ஓம் ராஹுவே நமோ நமஹ’
    கீழ்க்கண்ட கேது சாந்தி மந்திரத்தை தினமும் 108 முறை ஜபம் செய்யவும்
    ‘ஓம் கேதும் கர்னவான் கேதவே பேஷோமயம் அபேஷசே, சமுஷ்த்விராஜயதஹ’
    மேலே குறிப்பிடப்பட்டுள்ள மந்திரங்களை தொடர்ந்து 21 நாட்கள் பாராயணம் செய்வது மிகச் சிறந்த பலன்களைத் தரும் 
    உங்கள் ஆடை மற்றும் அணிகலன்களில் சிவப்பு நிறத்தைத் தவிர்க்கவும்

    மகரம்….

    கீழ்க்கண்ட நரசிம்ம காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை ஜபம் செய்யவும்
    ‘ஓம் வஜ்ரநகாய வித்மஹே
    தீக்ஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹே
    தன்னோ நரசிம்ம ப்ரசோதயாத்’
     கீழ்க்கண்ட நரசிம்ம மகா மந்திரத்தை தினமும் 108 முறை ஜபம் செய்யவும்
    ‘உக்ரம் வீரம் மகா விஷ்ணும் ஜ்வலந்தம் சர்வதோ முகம்
    ந்ருஸிம்மம் பீஷணம் பத்ரம் மிருத்யுர் மிருத்யும் நமாம்யஹம்’
    தேங்காய், கடுகு எண்ணெய் மற்றும் போர்வைகளை தானம் செய்யவும்
    மேலும், கோயில்களிலும், ஆன்மீகத் தலங்களிலும் கருப்பு எள் தானம் செய்யவும் 
    கேதுவின் பாதக விளைவுகளைத் தவிர்க்க, மற்றவர்களை எளிதில் நம்பி எதையும் செய்யாமல் இருக்கவும் 
    ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொள்ளவும். ஆன்மீக நடவடிக்கைகளில் அதிக நேரம் செலவிடவும்  

    கும்பம்….

    ராகுவிற்கான கீழ்க்கண்ட வேத மந்திரத்தை தினமும் 108 முறை ஜபம் செய்யவும்
    ‘ஓம் க்யான்ஷ்சித்ர ஆபுவ்த்வதி சதா வ்ருத் சகா
    க்யா ஸ்சின்ஷ்த்யா வ்ரித ஓம் ராகவே நமஹ’
    கேதுவிற்கான கீழ்க்கண்ட வேத மந்திரத்தை தினமும் 108 முறை ஜபம் செய்யவும்
    ‘ஓம் கேதும் க்ரின்வன் கேதவே பேஷோ மர்யா அபேஷ்ஸே
    சமுஷ்ட்பிர்ஜா யதா ஓம் கேதவே நமஹ’
    சிவாலயங்களுக்குப் பழம் மற்றும் பால் வழங்கி, வழிபடவும்  
    அமாவாசை நாட்களில் ஆலயங்களுக்கு 4 தேங்காய்களை அளிக்கவும் 
    வீதியில் சுற்றித் திரியும் நாய்களுக்கு உணவு அளித்துப் பராமரிக்கவும் 
    சூரிய அஸ்தமனம் ஆகி ஒரு மணி நேரத்திற்குள் இரவு உணவை முடித்துக் கொள்வது நல்லது

    மீனம்….

    கீழ்க்கண்ட ஆஞ்சநேயர் காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை ஜபம் செய்யவும் 
    ‘ஓம் ஆஞ்சனேயாய வித்மஹே வாயுபுத்ராய தீமஹீ  தன்னோ ஹனுமத் ப்ரசோதயாத்’
    கீழ்க்கண்ட ‘மனோஜவம் மாருத துல்யவேகம்’ மந்திரத்தை தினமும் 108 முறை ஜபம் செய்யவும் 
    ‘மனோஜவம் மாருத துல்யவேகம் ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்
    வாதத்மஜம் வானரயுத முக்யம் ஸ்ரீ ராம தூதம் சரணம் ப்ரபத்யே’  
    ஆலயம் சென்று வினாயகர், நரசிம்மர், சிவன் மற்றும் துர்கையை வழிபடவும்
    நெற்றியில் சிந்தூரம் இட்டுக் கொள்ளவும்  
    உங்கள் குரு, மத குருமார்கள், ஆலய அர்ச்சகர்கள் மற்றும் அந்தணர்களின் ஆசிகளைப் பெறவும் 
    ஏழை மக்களுக்கு நீலம், கருப்பு அல்லது ஆழ்ந்த நிற ஆடைகளை தானம் செய்யவும் 
    உங்கள் குடும்பத்தில் இருக்கும் பெரியவர்களுக்கும்,  அலுவலகத்தில் மேலதிகாரிகளுக்கும் உரிய மரியாதை அளிக்கவும் 

  • Meena Rasi Rahu Kedhu Peyarchi Palangal

    மீன ராசி அன்பர்களே, 
    ராகு உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் சஞ்சாரம் செய்வதன் பலன்! 
    ராகு பகவான், இப்பொழுது, உங்களது மீன ராசிக்கு மூன்றாம் வீடான ரிஷப ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இந்தப் பெயர்ச்சி உங்களுக்கு நன்மையையும், தீமையையும் கலந்து அளிக்கும் எனலாம்.  எந்தவொரு சூழ்நிலையையோ, சிக்கலையோ எதிர்கொள்ளும் பொழுது நீங்கள் தைரியத்துடன் செயல்படுவீர்கள். இப்பொழுது உங்கள் தகவல் தொடர்புத் திறனும் சிறந்து விளங்கும். இதன் காரணமாக, நீங்கள் புதிய  அறிமுகங்களை விரைவாகப் பெறுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். 

    இந்த நேரத்தில் நீங்கள் குறுகிய காலப் பயணங்களையும் அடிக்கடி மேற்கொள்ள வேண்டியிருக்கும். குறிப்பாக இவை, நீங்கள் இது வரை சென்றறியாத இடங்களுக்கான பயணங்களாக இருக்கலாம். உங்கள் இளைய உடன்பிறப்புகள் மற்றும் சக ஊழியர்களுடன் உங்களுக்குக் கருத்து வேறுபாடுகள் ஏற்படவும், இப்பொழுது வாய்ப்பு உள்ளது. எனவே கவனம் தேவை. உங்களில் சிலர் கற்பனையான எண்ணங்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படக் கூடும், இந்த விஷயத்தில் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். 

    உங்கள் கற்பனை, உங்கள் கண்களிலிருந்து நடைமுறை அம்சங்களை மறைத்து விடக்கூடும். எனவே யதார்த்தம் அறிந்து நீங்கள் செயல்பட வேண்டிய காலகட்டம் இது. உங்கள் மனதில் லட்சியத்தை வளர்த்துக் கொள்வதில் தவறில்லை. ஆனால், இப்பொழுது குறுகிய கால இலக்குகளை அடைய முயற்சி செய்வதே நல்லது. உங்களில் சிலர் இந்த நேரத்தில் மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்கள் பலவற்றை வாங்க விரும்புவீர்கள். ஆனால் உங்கள் பொருளாதாரம் அதற்கு இடம் அளிக்குமா என நீங்கள் யோசிக்க வேண்டியிருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை தோள்கள் மற்றும் கைகளில் நீங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியிருக்கும், எனவே, இந்தப் பகுதிகளில் பாதிப்பு வராமல் பார்த்துக் கொள்வது அவசியம். 

    கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் சஞ்சாரம் செய்வதன் பலன்! 

    கேது பகவான், இப்பொழுது, உங்கள் ராசியான மீனத்திற்கு ஒன்பதாம் வீடான விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இந்தப் பெயர்ச்சி பெரும்பாலும், உங்கள் ஆன்மீக நாட்டத்தைக் குறிப்பதாகவே அமையக்கூடும். தனிப்பட்ட முறையிலும் சரி, பொது வாழ்க்கையிலும் சரி, நீங்கள் மிகவும் நேர்மையாகவும், நெறிமுறைகளை அனுசரித்தும் செயல்பட முனைவீர்கள். இது உங்கள் ஆன்மீக வளர்ச்சிக்குக் நன்கு உதவக்கூடும். உங்களில் பலர், தங்கள் ஆன்மீகப் பயணத்தையும், இறை நாட்டத்தையும், இப்பொழுது புதிதாக ஆரம்பிக்கும் வாய்ப்பும் உள்ளது. 

    நீங்கள் யாரைக் குறித்தும், வெறுப்பையோ, தவறான எண்ணங்களையோ வளர்த்துக் கொள்ள மாட்டீர்கள். உங்களின் இந்த உயர்ந்த பண்பு, மற்றவர்களுடைய மரியாதையையும், நன் மதிப்பையும் உங்களுக்குப் பெற்றுத் தரும். உங்களில் சிலருக்கு, குருக்கள் அல்லது ஆன்மீக வழிகாட்டிகள் போன்றவர்கள் கிடைக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. நீங்கள் இந்தக் காலகட்டத்தில், உங்கள் பெற்றோர் மற்றும் பெரியவர்களின் ஆசீர்வாதங்களை நாடலாம். 

    அவர்களின் ஆசி உங்களுக்கு உற்சாகத்தை அளித்து, உங்கள் மனதில் உன்னத எண்ணங்கள் தோன்ற உதவி புரியும். யோகா, தியானம் போன்ற உள்ளம் மற்றும் உடல் ஆற்றலைப் பெருக்கும் பயிற்சி முறைகளைக் கற்றுக்கொள்ள விரும்புவோருக்கு இது பொன்னான தருணம் என்று கூறலாம். எனவே, மெய்ஞானம் காண்பதற்கு இது மிக உகந்த நேரமாக அமையும். 

     

    நாகை சுந்தர மூர்த்தி, சோதிட ஆய்வாளர்

  • Mahara Rasi Rahu Kedhu Peyarci Palangal

    மகர ராசி அன்பர்களே, 

    ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் சஞ்சாரம் செய்வதன் பலன்! 
    ராகு பகவான், இப்பொழுது, உங்களது ராசியான மகரத்திற்கு ஐந்தாம் வீடான ரிஷப ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இது பொதுவாக உங்கள் வாழ்வைச் சிறக்கச் செய்யும் என எதிர்பார்க்கலாம். நீங்கள் தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். உங்கள் வளர்ச்சிக்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள், உங்களுக்குத் திருப்தி தருவதாக அமையும். 

    உங்களிடம் அமைந்துள்ள பரந்த நுண்ணறிவு, இப்பொழுது உங்களுக்குப் பெரிதும் கை கொடுக்கும். இது, வாழ்க்கைச் சூழ்நிலைகளைச் சமாளிக்கும் திறனை மேம்படுத்தி, உங்களை, புத்தி சாதுர்யத்துடனும் செயல்படத் தூண்டும். உங்கள் கற்பனைத் திறன் மற்றும் படைப்புத் திறன் போன்றவையும், வழக்கத்தை விட இப்பொழுது சற்று கூடுதலாகவே இருக்கும். எனினும், நடைமுறை அம்சங்களைக் கருத்தில் கொண்டு செயல்பட மறந்து விடாதீர்கள். 

    ஊக வணிகங்களில் ஈடுபட வேண்டாம். ஏனெனில் இவை நீங்கள் எதிர்பார்த்தது போல அமையாமல் போகலாம். உங்களில் சிலர், இந்த நேரத்தில், புதியவர்களுடனோ அல்லது தொலைதூரத்தில் உள்ளவர்களுடனோ நட்பு கொள்ளக்கூடும். ஒரு சிலர் நீண்ட தூர அல்லது வெளிநாட்டு சுற்றுலா செல்லும் வாய்ப்பும் உள்ளது. உங்கள் கடந்தகால செயல்களின் முடிவுகளையும் நீங்கள் இந்தக் காலக் கட்டத்தில் அனுபவிப்பீர்கள். 

    இதன் மூலம் வாழ்க்கையில் சில முக்கியப் பாடங்களை நீங்கள் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். எனினும், குழந்தை பாக்கியத்திற்கான வாய்ப்பு குறைவாகவே காணப்படுகிரது. மொத்தத்தில், இந்தப் பெயர்ச்சி உங்களை உலக இன்பங்களை நோக்கி அழைத்துச் செல்லும் எனலாம். 

    கேது உங்கள் ராசிக்குப் பதினொன்றாம் வீட்டில் சஞ்சாரம் செய்வதன் பலன்! 

    கேது பகவான், இப்பொழுது, உங்கள் ராசியான மகரத்திற்குப் பதினொன்றாம் வீடான விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இதன் காரணமாக, வாழ்க்கையில் நீங்கள், ஓரளவு கடினமான தருணங்களைச் சந்திக்க நேரிடலாம். உங்கள் ஆசைகளும், நம்பிக்கைகளும் நிறைவேறாமல் போகலாம். இது பொதுவாக அதிருப்திக்கு வழி வகுக்கும். வேலை அல்லது தொழில் மூலம் நீங்கள் பெறும் லாபம் மற்றும் ஆதாயம், வழக்கத்தை விட குறைவாக இருக்கக் கூடும். 

    உங்கள் மூத்த உடன்பிறப்புகளுடன் தவறான புரிதலுக்கான வாய்ப்புகளும் உள்ளன. அதே நேரம், உங்கள் அணுகுமுறை, பொதுவாக, உங்கள் நண்பர்களுடனும் சமூக வட்டங்களுடனும் உங்கள் நல்லுறவைப் பேணுவதற்கு ஏற்றதாக இல்லாமல் போகலாம். மற்றவர்களுடனான உங்கள் தொடர்பும் கூட, குறைவாகவே இருக்கக் கூடும். மேலும், இந்தப் பெயர்ச்சியின் பொழுது, குறைந்த அளவிலான நண்பர்களுடன் மட்டுமே, நீங்கள் தொடர்பில் இருக்க விரும்புவீர்கள்.  தொலை தூர உறவினர்களுடனான உங்கள் உறவுமுறைகளிலும், இதே நிலை தான் நீடிக்கும். உங்களில் சிலர், காது கேளாமை அல்லது காது தொடர்பான கோளாறுகளால் பாதிக்கப்படலாம். எனவே, கவனம் தேவை.

    நாகை சுந்தர மூர்த்தி, சோதிட ஆய்வாளர்

  • Dhanusu Rasikku Rahu kedhu peyarchi

    தனுசு ராசி அன்பர்களே, 

    ராகு உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் சஞ்சாரம் செய்வதன் பலன்! 
    ராகு பகவான், இப்பொழுது, உங்களது தனுசு ராசிக்கு ஆறாம் வீடான ரிஷப ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இது உங்களுக்கு, வரவேற்கத்தக்க ஒரு காலமாக இருக்கும். நீங்கள் உங்கள் முழுத் திறமையுடன் பணியாற்றி, அதிக உற்பத்தித் திறனை ஈட்டுவீர்கள். இது, நீங்கள் இன்னும் ஆர்வமுடனும் பணியாற்ற உதவும். எனவே, இப்போது உங்கள் தொழிலிலும், பணியிலும் நீங்கள் நல்ல முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். இருப்பினும், பணியிடத்தில் நீங்கள் சில சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால், உங்களது சரியான முடிவு எடுக்கும் திறன், இந்த சவால்களை நீங்கள் திறமையாகக் கையாள உதவும். இது போன்ற உங்கள் செயல்திறன் மற்றும் சாதனைகளுக்காக, வேலையில் நீங்கள் அங்கீகாரம் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. 

    நீங்கள் போட்டிகளிலும் வெற்றி பெற்று விருதுகளைப் பெறக்கூடும். இப்போது எதிரிகளையோ அல்லது போட்டியாளர்களையோ நீங்கள் எதிர்கொள்ள நேர்ந்தாலும், அவர்களையும் வென்று வெற்றி நடைபோடுவீர்கள். இந்தக் காலகட்டத்தில் உங்கள் ஆரோக்கியத்தில் எந்தக் குறைபாடும் ஏற்படும் வாய்ப்பில்லை. தவிர, இப்பொழுது உங்கள் அனைத்துக் கடன்களையும் திருப்பிச் செலுத்தி, நீங்கள் அவற்றை அடைத்து விடும் வாய்ப்புள்ளது. 

    ஆனால் அதே நேரம், நீங்கள் சில புதிய கடன்களையும் வாங்க நேரிடலாம். மேலும், இந்தக் காலகட்டத்தில், நீங்கள் தன்னலமற்ற சேவையில் ஈடுபடுவதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. உங்கள் வாழ்க்கைத் துணையுடன் ஏதாவது மனஸ்தாபங்கள் ஏற்பட்டிருந்தாலும், அவர்றைச் சரி செய்து, நல்லிணக்கம் காணவும் இது சரியான நேரமாகும். எனவே, இந்தப் பெயர்ச்சி, வாழ்க்கையின் பல துறைகளிலும் உங்களுக்குச் சாதகமாக அமையும் எனலாம். 

    கேது உங்கள் ராசிக்குப் பன்னிரண்டாம் வீட்டில் சஞ்சாரம் செய்வதன் பலன்! 

    கேது பகவான், இப்பொழுது, உங்கள் தனுசு ராசிக்குப் பன்னிரண்டாம் வீடான விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இதன் காரணமாக, இவர் ஆன்மீக நாட்டத்தைத் தூண்டி, உங்களை ஆன்மீகப் பாதையில் அழைத்துச் செல்லக்கூடும். எனவே, ஆன்மீக ஆர்வம் உள்ளவர்களுக்கும், மோட்சம், வீடுப்பேறு ஆகியவற்றில் நாட்டம் கொண்டவர்களுக்கும், இந்தப் பெயர்ச்சி, அவர்களது ஆன்மீக நோக்கங்களுக்குச் சாதகமாக அமையும். 

    இருப்பினும், நன்கொடை அளிப்பது, தொண்டு அல்லது பரோபகாரம் செய்வது போன்றவற்றில், அளவிற்கு அதிகமாக ஈடுபட வேண்டாம். ஏனெனில், பிறருக்கு உதவுவதற்காக உங்கள் பணத்தை அதிகம் செலவு செய்தால், பின்னர் உங்களுக்குத் தேவைப்படும் பொழுது, பணப் பற்றாக்குறை ஏற்பட்டு விடலாம். எனவே, ‘தனக்கு மிஞ்சி தான் தான தருமம்’ என்பதை மனதில் கொண்டு எச்சரிக்கையுடனும், விழிப்புடனும் இருப்பது நல்லது. எனினும், வெளிநாடு செல்ல விரும்புபவர்களுக்கு இந்தக் கால கட்டம், சாதகமாக இருக்கும். 

    எனவே உங்கள் திட்டங்களைச் செயல்படுத்த இந்த நேரத்தை நீங்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், உங்களில் சிலருக்கு இப்பொழுது, தூக்கமின்மைப் பிரச்சினை ஏற்படும் வாய்ப்புள்ளது. தவிர, இந்த நேரத்தில், பொதுவாக உங்கள் மனதில் ஏதோ ஒரு வகையான விரக்தி மனப்பான்மை தோன்றலாம். 

    இது உங்கள் ஆன்மீக வேட்கையை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. எனினும், ‘அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு’ என்பது போல, உங்கள் ஆன்மீக நாட்டத்தையும் ஒரு வரையறைக்குள் இருக்குமாறு பார்த்துக் கொள்வது நல்லது. இல்லாவிட்டால், குடும்பம் மற்றும் சமூகத்தின் முன் உங்கள் மதிப்பு, மரியாதைக்கு பாதிப்பு ஏற்படலாம்.

    நாகை சுந்தர மூர்த்தி, சோதிட ஆய்வாளர்

     

  • midhunam rahu kedhu peyarchi palangal

    ராகு கேது பெயர்ச்சி 2020

    நவகிரகங்களில் நிழல் கிரகங்கள் என்று கூறப்படும், சர்ப்ப கிரகங்களான ராகு மற்றும் கேது, முறையே மிதுனம் மற்றும் தனுசு ராசிகளில் இருந்து, ரிஷபம் மற்றும் விருச்சிக ராசிகளுக்கு பெயர்ச்சி அடைகின்றன. இந்தப் பெயர்ச்சி 23 செப்டம்பர், 2௦2௦ புதன்கிழமை அன்று நடைபெறுகிறது. அன்றிலிருந்து அடுத்த 18 மாதங்களுக்கு, அதாவது 12 ஏப்ரல் 2௦22 செவ்வாய்க்கிழமை வரையிலான ஒன்றரை ஆண்டு காலம், ராகு ரிஷப ராசியிலும், கேது விருச்சிக ராசியிலும் சஞ்சாரம் செய்வார்கள். 

    மிதுன ராசியினரைப் பொறுத்தவரை, இதன் மூலம் ராகு, உங்கள் ராசிக்குப் பன்னிரண்டாம் வீட்டிலும், கேது ஆறாம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வார்கள். இவற்றில் பன்னிரண்டாம் வீடு  என்பது மோட்சம் அல்லது வீட்டுப் பேறு, தூக்கம், தொண்டு, முதலீடு மற்றும் செலவுகள் முதலியவற்றையும்; ஆறாம் வீடு, தன்னலமற்ற சேவை, அன்றாட நடவடிக்கைகள், தொழில்முறை வேலைகள், கட்டாயக் கடமைகள், சுகாதாரம், நோய்கள், கடன்கள் மற்றும் போட்டிகள் போன்ற அம்சங்களையும் குறிக்கின்றன.

    நவகிரகங்களில் மற்ற கிரகங்களைப் போல, ராகு மற்றும் கேது கிரகங்களுக்கு பௌதிக வடிவம் கிடையாது. உண்மையில் இவை, சூரியன் மற்றும் சந்திரனின் சுற்று வட்டப் பாதைகளின் குறுக்கு வெட்டுப் புள்ளிகள் அல்லது முடிச்சுகள் ஆகும். இவற்றில் வடக்குப் புள்ளி அல்லது முடிச்சு ராகு எனவும், தெற்குப் புள்ளி அல்லது முடிச்சு கேது எனவும் அழைக்கப்படுகின்றன. 

    எனவே தான், இந்த இரண்டு கிரகங்களும் நிழல் கிரகங்கள் என்று பெயரிடப்பட்டுள்ளன. இவை இரண்டும், நமது பூர்வ ஜன்ம கர்ம வினைகளையும், அவற்றை நாம் இந்த ஜன்மத்தில் எவ்வாறு அனுபவிப்போம் என்பதையும் சுட்டிக் காட்டும் கிரகங்களாகத் திகழ்கின்றன. மனித வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், இவை, ஜோதிட சாஸ்திரத்தில், அசுப கிரகங்கள் என்றே கருதப்படுகின்றன. மேலும், ராகு உலக சுக போகங்கள் மற்றும் பொருள் சார்ந்த இன்பங்களில் ஆர்வத்தை உண்டாக்கும் கிரகமாகவும், கேது, தொண்டு புரியும் மனநிலை, ஆன்மீகத் தேடல்கள் போன்றவற்றை மேம்படுத்தும் கிரகமாகவும் விளங்குகின்றன. 

    ஒருவரது ஜாதகத்தில் இந்த இரு கிரகங்களும் ஆற்றலுடன் விளங்கும் பொழுது, அவரது எண்ணம், உணர்வு ஆகியவற்றை மாற்றியமைக்கும் வல்லமை படைத்தவையாகவும், இவை திகழ்கின்றன. எங்களது ராகு கேது பெயர்ச்சி 2020 பரிகார சேவைகளில் பங்கு பெற்று இந்த கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறும் நாளில், விசேஷ அர்ச்சனை, பூஜை செய்து இவர்களை வழிபடுவது,நாக வடிவங்களாகக் கருதப்படும் இந்த சர்ப கிரகங்களால் ஏற்படும் பாதிப்புக்களைக் குறைத்து, வாழ்க்கையில் முன்னேற உதவும்.
                  
    மிதுன ராசி அன்பர்களே, 
    ராகு உங்கள் ராசிக்குப் பன்னிரண்டாம் வீட்டில் சஞ்சாரம் செய்வதன் பலன்! 
    ராகு பகவான், இப்பொழுது, உங்களது ராசியான மிதுனத்திற்குப் பன்னிரண்டாவது வீடான ரிஷப ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இதன் காரணமாக, உங்களுக்கு நன்மையையும் தீமையும் கலந்த பலன்கள் காத்திருக்கின்றன எனலாம். இதுவரை இருந்த குழப்பம் விலகி, உங்கள் எண்ணங்களில் ஒரு தெளிவு ஏற்படும். உங்களில் சிலர், இந்தக் காலகட்டத்தில், வெளிநாடுகள் செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். இருப்பினும், தூக்கம் தொடர்பான பிரச்சினைகள் உங்களுக்கு எழலாம். 

    இது உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும்; எனவே எச்சரிக்கை தேவை. சில முதலீடுகளைச் செய்யவேண்டும் என்ற ஆவலும், எண்ணமும் கூட, உங்கள் மனதில் எழலாம். இந்த நேரத்தில் இது உங்களுக்குப் புத்திசாலித்தனமாகத் தோன்றினாலும், கானல் நீர் போல, இது உங்களுக்கு ஏமாற்றத்தையே தரக் கூடும். உங்களில் சிலருக்கு, வெளிநாட்டு நண்பர்கள், அறிமுகங்கள் மூலம் சில அன்பளிப்புகள் வந்து சேரலாம். நாம் பிறருக்கு ஏதாவது கொடுத்தால், அல்லது தானம் செய்தால், அது போல ஏதாவது ஒன்றை அவர்கள் நமக்குத் திருப்பி அளிப்பார்கள், இதன் மூலம் நமக்கு ஆதாயம் கிடைக்கும் என்று நீங்கள் நினைக்கலாம். 

    ஆனால் இது உங்களைப் பொறுத்தவரை உண்மையாக இருக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களில் சிலர், சில ரகசிய அல்லது மறைமுக நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய நிலை உருவாகலாம். ஆனால் இது, உங்கள் சமூக அந்தஸ்து, பொது வாழ்க்கையில் நீங்கள் ஈட்டியுள்ள நற்பெயர் போன்றவற்றை பாதித்து விடும். எனவே, இந்தக் காலகட்டத்தில் முடிந்தவரை  வெளிப்படையாக இருப்பதே சாலச் சிறந்தது. உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கால்கள், கணுக்கால்கள் போன்றவற்றில் பிரச்சினை, ஏற்பட வாய்ப்புள்ளதால் சிறிது கவனமாக இருப்பது நல்லது. 

    கேது உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் சஞ்சாரம் செய்வதன் பலன்! 

    கேது பகவான், இப்பொழுது, உங்களது ராசியான மிதுனத்திற்கு ஆறாம் வீடான விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இது உங்களுக்கு வரவேற்கத்தக்க மாற்றமாக இருக்காது எனலாம். உங்களில் சிலர், சிறு உடல்நலப் பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம், இதனை நீங்கள் மற்றவர்களுக்குத் தெரிவிக்க விரும்பாமலும் இருக்கலாம். எனவே, மற்றவர்களின் உதவியின்றி, நீங்களே இந்தச் சிக்கல்களைத் தீர்க்க முயற்சிப்பீர்கள். தவிர, சிலரது ஆரோக்கியம் கவலை தரும் வகையிலும் இருக்கக் கூடும். இதன் காரணத்தை, மருத்துவ நிபுணர்கள் கூட, துல்லியமாகக் கண்டறிய இயலாமல் போகலாம். எனினும், உங்கள் தொப்புள், குடல், வயிறு போன்ற பகுதிகளில் கவனம் செலுத்துவது நல்லது. அலுவலகத்தில் கூட, உங்கள் அன்றாட நடவடிக்கைகளில் சில தொந்தரவுகள், சச்சரவுகள் போன்றவை எழக்கூடும். 

    பணியிடத்தில், வழக்கமான அமைதி இல்லாமல் போகலாம். எனவே மற்றவர்களுடன் சுமுகமாக, அனுசரித்து நடப்பதே புத்திசாலித்தனம். வாழ்க்கைப் பாதையில் கூட, உங்கள் முன்னேற்றத்திற்குத் தடைகள் மற்றும் தாமதங்கள் எழலாம். இந்த காலகட்டத்தில் உங்கள் மனதில் சில சந்தேக எண்ணங்களும் தலைதூக்கக் கூடும். இது வெளிப்பட்டால், இது நாள் வரை நீங்கள் பாடுபட்டு சம்பாதித்த நற்பெயருக்குக் களங்கம் ஏற்படலாம். மற்றவர்கள் பார்வையில் நீங்கள் தாழ்ந்து விடவும் நேரிடலாம். ஒட்டுமொத்தமாக, இந்தக் காலக் கட்டங்களில் பொருள் இன்பங்களைத் தேடுவதை விட ஆன்மீகத் துறையில் நீங்கள் அதிக ஆர்வம் காட்டக்கூடும்.

    நாகை சுந்தர மூர்த்தி, சோதிட ஆய்வாளர்