Tag: Mahara Rasi

  • Mahara Rasi Shakthi Online – May Monthly Prediction – 2024

    மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

    கிரகநிலை:

    தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி – தைரிய வீரிய ஸ்தானத்தில் புதன், ராஹூ, செவ்வாய்  – சுக ஸ்தானத்தில்  சூர்யன், குரு, சுக்ரன்   – பாக்கிய ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.

    கிரகமாற்றங்கள்:

    01-05-2024 அன்று குரு பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    07-05-2024 அன்று புதன் பகவான்  தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    13-05-2024 அன்று சூர்ய பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    20-05-2024 அன்று சுக்ர பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    24-05-2024 அன்று புதன் பகவான்  சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    31-05-2024 அன்று செவ்வாய் பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    பொருள் தேடும் வழியில் அருளையும் நாடிச் செயல்படும் எண்ணம் நிறைந்த மகர ராசி அன்பர்களே

    இந்த மாதம் சுபபலன்கள் மிகுதியாக நடைபெற வாய்ப்பு உள்ளது. கறாரான செயல்பாடுகளால் மட்டுமே பொருளாதார வரவுகளை பெற முடியும். இல்லையால் பலரது பரிகாசத்திற்கு ஆளாக நேரிடும். இப்பொழுது உள்ள கிரகநிலையில் சாந்தகுணம் பாதியும், உக்கிர குணம் பாதியுமாக கலந்திருக்கும். சூழ்நிலகளிக்கேற்ப எதை பயன்படுத்தினால் வெற்றி என்பதை உணர்ந்து செயலாற்றி தக்க புகழைப் பெறுங்கள்.

    குடும்பத்தில் வெகு காலமாக ஆண்பிள்ளை புத்திரப்பேறு எதிர்பார்ப்பில் உள்ள தம்பதியருக்கு குல தெய்வ அருளால் அனுகூல பலன் கிடைக்கும். பூமி, மனை, விவசாய நிலம் போன்றவைகளில் தகுந்த கவனம் செலுத்தி நல்ல வருமானம் பார்ப்பீர்கள். உடன் பிறந்தோரிடம் அனுசரனையாக இருப்பது எதிர்காலத்தில் எந்த ஒரு பிரச்சனையையும் வரவழைக்காது.

    உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகள் உங்களுக்கு தேவையான ஒன்றை வாங்கிக் கொடுத்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார்கள். சிலருக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் வரலாம். உடன் பணிபுரிபவர்கள், உங்களிடம் எதிரித் தனம் காட்டியவர்கள் சிலர் சமரச முயற்சிகளில் ஈடுபடுவார்கள். மறப்போம், மன்னிப்போம் பாணியில் நடந்து கொள்ளுங்கள்.

    தொழிலதிபர்கள் உங்கள் தொழிலிலும், செயல்பாட்டிலும் பிறரது குறுக்கீடு இல்லாமல் செயல்பட்டு தகுந்த வெற்றி பெறுவீர்கள். தந்தையின் பேச்சுக்கு ஏற்றபடி செல்வதும், மூத்த அனுபவசாலிகள் பேச்சுக்கு மரியாதை தருவதும் உங்கள் வெற்றிக்கு அடிகோலாய் அமையும். உங்களது உடல் நலத்தில் கவனம் செலுத்துவது இப்பொழுது மிக அவசியம்.

    பெண்கள் அரசு மற்றும் தனியார் துறை அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள், பிறரது குறுக்கீடு எதுவுமின்றி சுயமான சிந்தனையுடன் செயல்பட்டு அதிகாரிகளிடத்தில் நற்பெயர் பெறுவார்கள். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெ?ண்கள், வீட்டுக்குத் தேவையான அனைத்தையும் வாங்கி சிறந்த குடும்ப நிர்வாகியாக திகழ்வார்கள். ஆபரணச்சேர்க்கை சாதகமான நிலையில் உண்டு.

    கலைஞர்கள் ஓய்வில்லாமல் உழைத்து நல்ல புகழை பெற வேண்டிய கால கட்டம். உடன் இருப்பவர்களை கண் காணிக்க வேண்டி வரும். திறமை சாலிகள் உங்களைத் தேடிக் கொண்டு வருவார்கள். அவர்களுக்கு நல்ல மதிப்பு கொடுத்து உடன் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் எதிர்கால கனவுகளை நிறை வேற்ற துணை இருப்பார்கள்.

    அரசியல்வாதிகள் பிறர் பேச்சுகளை நம்பி ஏமார வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். எதிலும் கவனம் தேவை. அலைச்சல் அதிகம் ஏற்படக் கூடும் ஆகையால் நேரத்திற்கு உணவருந்தி ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். புதிய மாற்றங்களை ஓரிரு வாரங்களுக்கு ஒத்திப் போடுவது நிம்மதி அளிக்கும். பிரிந்து போனவர்கள் மறுபடியும் உங்களைச் சந்திக்க நேரலாம்.

    மாணவர்கள் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். முன்பு இருந்ததைக் காட்டிலும் இப்பொழுது முழுக்கவனம் படிப்பில் ஏற்படும். கலை, இசை, பரத நாட்டியம் போன்றவற்றில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் புதிய உத்வேகத்துடன் செயல்பட்டு வெற்றியை ஈட்டுவார்கள். தக்க சன்மானமும், புகழும் உண்டு.

    உத்திராடம் 2, 3, 4 பாதம்:

    இந்த மாதம் பிடித்தமான ஒருவரை சந்திக்க நேரலாம். அதனால் மனதிற்கு மகிழ்ச்சி உண்டாகும். சக பாகஸ்தர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. கூடியவரை வீண் விவாதங்களில் ஈடுபடாமலிருப்பது நல்லது.

    திருவோணம்:
    இந்த மாதம் சிக்கனமாக நடந்து கொள்வது அவசியமாகிறது. நெருங்கிய நண்பர்களுடன் சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.  பண உதவி எதையும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தால் கிடைப்பதற்கான சாத்தியக் கூறு அதிகம் உள்ளது.

    அவிட்டம் 1,2 பாதம்:

    இந்த மாதம் பிள்ளைகள் விவகாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். திருமண வயதில் பிள்ளைகள் இருந்தால் அவர்கள் திருமணம் நிச்சயிக்கப்படலாம். விரக்தி மனப் பான்மையை விட்டொழியுங்கள்.

    பரிகாரம்: அக்னி வீரபத்திரர், அகோர வீர பத்திரர் ஆகிய தெய்வங்களுக்கு வெண்ணெய் சார்த்தி வழிபடுவதால் குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை உருவாகும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் – சனி
    சந்திராஷ்டம தினங்கள்: 16, 17
    அதிர்ஷ்ட தினங்கள்: 09, 10

    -பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA

     

  • Mahara rasi March Monthly Prediction – Sakthi Online – 2024

    மகரம்:

    கிரகநிலை:

    ராசியில்  ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் –  தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில் சூர்யன், புதன், சனி –  தைரிய வீரிய  ஸ்தானத்தில் ராஹூ  – சுக  ஸ்தானத்தில் குரு  –  பாக்கிய ஸ்தானத்தில் கேது –  தொழில்  ஸ்தானத்தில் சந்திரன் என கிரக நிலைகள் உள்ளன.

    கிரகமாற்றங்கள்:

    14-03-2024 அன்று செவ்வாய் பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    13-03-2024 அன்று சூர்ய பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    08-03-2024 அன்று சுக்ர பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    02-03-2024 அன்று புதன் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    காரியத்தை கச்சிதமாக முடிக்கும் திறமையும், சாதித்தே தீர வேண்டும் என்ற பிடிவாதமும் கொண்ட மகர ராசி அன்பர்களே, நீங்கள் எந்த காரியத்தை கச்சிதமாக முடிக்கும் திறன் கொண்டவர்கள். இந்த மாதம் தடைபட்ட காரியங்கள் தடைநீங்கி நன்றாக நடந்து முடியும். வாக்குவன்மையால் நன்மைகள்  ஏற்படும். தெய்வ சிந்தனை அதிகரிக்கும். பண பிரச்சனை நீங்கும். நண்பர்கள் மூலம்  உதவிகள் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும்.

    தொழில் வியாபாரம் எதிர்பார்த்த வளர்ச்சி பெறும். பழைய பாக்கிகள் வசூலாகும். நீண்ட நாட்களாக நடந்து முடியாத காரியம் ஒன்று நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாக திறமை வெளிப்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். சக ஊழியர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

    குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே  விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை அதிகரிக்கும். பிள்ளைகள் எதிர்காலத்திற்காக சில பணிகளை மேற்கொள்வீர்கள். நண்பர்களால் இருந்து வந்த மனக்கிலேசங்கள் அகலும்.

    பெண்களுக்கு கொடுக்கல் வாங்கலில் இருந்த சிக்கல்கள் தீரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். இழுபறியாக இருந்த காரியம் நன்கு நடந்து முடியும்.

    அரசியல்வாதிகளின் பதவிகளுக்கு நெருங்கிய நண்பர்கள் மூலமாகவே சில இடையூறுகள் ஏற்படலாம். அதனால் எவரிடமும் மனம் திறந்து பேச வேண்டாம். மற்றபடி தொண்டர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பதால் உற்சாகமடைவீர்கள். உங்கள் செயல்களை நேர்த்தியாகச் செய்வீர்கள்.

    கலைத்துறையினர் சுமாரான வாய்ப்புகளையே பெறுவீர்கள். ரசிகர்களின் ஆதரவும் எதிர்பார்க்கும் அளவுக்கு இருக்காது. புகழைத் தக்க வைத்துக்கொள்ள சீரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

    மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். மற்றவர் பாராட்டும் கிடைக்கும்.

    உத்திராடம் 2, 3, 4 பாதம்:

    இந்த மாதம் ஊழியர்கள் நினைத்த இடத்திற்கு மாறுதல் பெறுவார்கள். தங்க நகை வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். அதேநேரம் பணியாளர்களிடம் கவனமாக இருக்கவேண்டும். வியாபாரிகள் நல்ல நிலையை அடைவார்கள். வேலைதேடும் இளைஞர்களுக்கு எதிர்பார்த்தபடி வேலைவாய்ப்புகள் வந்துசேரும்.

    திருவோணம்:

    இந்த மாதம் திருமணத்திற்கு வரன் தேடுவோர் வரக்கூடிய வரன்களை நன்றாக ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டும். தொழிலதிபர்கள் வெளிநாட்டு ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். லாபம் பெருகும். வியாபாரிகள் போட்டியின்றி வியாபாரம் செய்து லாபத்தைப் பெறுவார்கள்.

    அவிட்டம் 1,2 பாதம்:

    இந்த மாதம் பிரிந்துசென்ற தம்பதியினர் ஒன்றுசேர்வார்கள். நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் வருவாய் உண்டு. மருத்துவத் தொழில்புரிவோருக்கு அதிக வருவாய் வரும் நாள். சோதனைகள் வெற்றியாக மாறும்.

    பரிகாரம்: ஊனமுற்றவர்களுக்கு தொண்டு செய்வதும் பிரதோஷ காலத்தில் சிவனை வழிபடுவதும் கஷ்டங்களை நீக்கி வீண் விரயத்தை குறைக்கும். காரியத்தடை நீங்கும்.

    சந்திராஷ்டம தினங்கள்: 22, 23, 24

    அதிர்ஷ்ட தினங்கள்: 15, 16

    -பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

     

  • Mahara rasi Sakthi Online – Oct Monthly Prediction – 2023

    மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

    கிரகநிலை:

    ராசியில் சனி (வ) – சுக ஸ்தானத்தில் குரு(வ), ராகு – அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன்  – பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், புதன்- தொழில் ஸ்தானத்தில் கேது என கிரகநிலைகள் உள்ளது.

    கிரக மாற்றங்கள்:

    04-10-2023 அன்று செவ்வாய் பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    08-10-2023 அன்று ராகு பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    08-10-2023 அன்று கேது பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    15-10-2023 அன்று புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    17-10-2023 அன்று சூரிய பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    எந்த காரியத்தையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து அதை நிதானமாக செய்து வெற்றி பெறும் மகர ராசியினரே நீங்கள் எப்போதும் நியாயத்தின் பக்கம் இருக்க விரும்புபவர்கள். இந்த மாதம் எல்லா வசதிகளும் உண்டாகும். நோய் நீங்கி ஆரோக்கியம் பெறுவீர்கள். மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் பிறக்கும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நண்பர்கள், உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தந்தையுடன் மனஸ்தாபம் ஏற்படலாம். எதிர்பாராத காரிய தடைகள் வரும். வாகனங்களில் செல்லும் போது மிகவும் கவனம் தேவை.

    தொழில் வியாபாரத்தில் சுமாரான போக்கு காணப்படும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நம்பிக்கையுடன் செயலாற்றுவதன் மூலம் நன்மை அடைவார்கள். அலுவலக பணிகளில் தாமதம் ஏற்படலாம்.

    குடும்பத்தினருக்கு தேவையான பொருள்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை காணப்படும். பிள்ளைகளின் கல்வி அவர்களது செயல்களில் கவனம் செலுத்துவீர்கள்.

    பெண்களுக்கு எதிலும் எதிர்பாராத தடைகள் உண்டாகலாம். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றி அடைவீர்கள்.

    கலைத்துறையினருக்கு நீண்டநாட்களாக இருந்த மன அழுத்தம் நீங்கும்படியான சூழல் உருவாகும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு இருக்கும். எனினும் கவனமுடன் செயல்படுவது நன்மை தரும்.

    அரசியல்வாதிகளுக்கு மனம் மகிழும்படியான சுழ்நிலை உருவாகும். வெளியூர் செல்ல நேரிடும். கட்சிப்பணிகள் மிக துரிதமாக நடப்பதற்கான சூழல் உருவாகும்.

    மாணவர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கி நம்பிக்கையுடன் பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும்.

    உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்:

    இந்த மாதம்  உறவினர் மூலம் நன்மை உண்டாகலாம். மனகுழப்பம் நீங்கி எதிலும் தெளிவான முடிவு எடுக்கும் மனநிலை ஏற்படும். காரிய தடைகள் விலகும். எதிர்பார்த்த பணம் வரலாம். காரிய அனுகூலம் உண்டாகும்.

    திருவோணம்:

    இந்த மாதம்  மாணவர்களுக்கு கல்வியில் எதிர் பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். விளையாட்டுகளில் ஈடுபாடு அதிகரிக்கும். உயர்வான எண்ணங்களுடன் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்களுடன் நட்பு கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

    அவிட்டம் 1,2 பாதங்கள்:

    இந்த மாதம்  கடன் பிரச்சனைகள் தொல்லை தராமல் இருக்கும். எதிர்பார்த்த பணவசதி கிடைக்கும்.  உங்களது செயல்களுக்கு இருந்த எதிர்ப்புகள் நீங்கும். வழக்கு விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும்.

    பரிகாரம்: சனிக்கிழமைகளில் சனி பகவானை வணங்கி காகத்திற்கு எள்சாதம் வைப்பது உடல் ஆரோக்கியத்தை தரும். கஷ்டங்கள் குறையும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் – வியாழன் – வெள்ளி

    சந்திராஷ்டம தினங்கள்: 10, 11, 12

    அதிர்ஷ்ட தினங்கள்: 3, 4, 5, 31

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA

     

  • Mahara Rasi June Month Rasipalan

    மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள் திருவோணம் அவிட்டம் 1,2 பாதங்கள்)

    கிரகநிலை:
    ராசியில் சனி(வ) – தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய், குரு – சுக ஸ்தானத்தில் புத, ராஹூ, சுக்ரன்  – பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன் – ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் – தொழில் ஸ்தானத்தில் கேது என கிரகநிலை உள்ளது.

    கிரகமாற்றங்கள்:
    06-06-2022 அன்று பகல் 01:59 மணிக்கு புதன் பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    18-06-2022 அன்று மாலை 05:55 மணிக்கு சுக்ர பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    25-06-2022 அன்று இரவு 12:24 மணிக்கு புதன் பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    27-06-2022 அன்று விடியற்காலை 05:32 மணிக்கு செவ்வாய் பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:
    பக்குவமாக எடுத்து சொல்லி எதிரில் இருப்பவர்களை திருப்தியடையச் செய்யும் குணமுடைய மகர ராசியினரே உங்களிடம் வாதத்திறமை இருக்கும்.  இந்த மாதம் பல வழிகளிலும் ஏற்பட்ட தொல்லைகள் குறையும். ஆனால் எந்த ஒரு வேலையிலும் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்து வதும் நல்லது. திடீர் இடமாற்றம் ஏற்பட்டாலும் அதன் மூலம் சாதகம் உண்டாகலாம். வீண் செலவுகள் கவுரவ குறைச்சல் ஏற்படலாம். மிகவும் கவனம் தேவை. தாய் தந்தையின் உடல் நிலையிலும் கவனம் செலுத்துவது நல்லது.

    தொழில் வியாபாரத்தில் மெத்தன போக்கு காணப்பட்டாலும் குரு பார்வையால் தேவையான பணவரத்து இருக்கும். புதிய முயற்சிகளில் தாமதமான நிலை காணப்படும். நீண்ட நாட்களாக முடங்கிக் கிடந்த காரியங்கள் வேகம் பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சல் காரியங்களில் இழுபறி என்ற நிலையை காண்பீர்கள். பேச்சை குறைத்து செயலில் ஈடுபடுவது நன்மையை தரும். சக ஊழியர்கள் ஆதரவுடன் எடுத்துக் கொண்ட காரியங்கள் சுமூகமாக முடியும். 

    குடும்பத்தில் சுமூகமான நிலை காணப்படும். ஆனாலும் மனதில் குடும்பம் தொடர்பான கவலை, பிள்ளைகள் பற்றிய கவலை இருந்து வரும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. வாக்குவாதத்தை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

    பெண்களுக்கு தொல்லைகள் குறையும். வீண் செலவுகள் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

    கலைத்துறையினருக்கு உங்கள் கடமைகளைச் சரிவர செய்தால் நன்மைகள் அதிகமாக கிடைக்கும். அறிவாற்றலும் செயல்திறமையும் கூடும். பொருளாதாரத்தில் அபிவிருத்தி காணலாம். உழைப்பு வீண் போகாது.

    அரசியல் துறையினருக்கு நற்பெயர் கிட்டும். சுகம் பெருகும். மகிழ்ச்சி கூடும். பொருள் வரவு அதிகரிக்கும். பழைய பாக்கிகள் எளிதில் வசூலாகும். புகழ் தேடி வரும். ஒரு பெரிய புள்ளியின் அனுகூலம் கிடைக்கப் பெறுவீர்கள்.

    மாணவர்களுக்கு கல்வியில் மெத்தன போக்கு ஏற்படாமல் தீவிர கவனத்துடன் பாடங்களை படிப்பது வெற்றிக்கு வழி வகுக்கும்.

    உத்திராடம் 2, 3, 4 பாதம்:
    இந்த மாதம் தான் உண்டு தன்வேலை உண்டு என்று இருப்பது நல்லது. எதிர்பாரத செல்வ சேர்க்கை உண்டாகும். அதே நேரத்தில் மனதில் வீண்கவலையும் ஏற்படலாம். எதிலும் ஒரு வேகம் உண்டாகும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடும் போது கவனம் தேவை. உல்லாச பயணங்கள் செல்ல நேரலாம் தொழில் வியாபாரத்தில் இருந்த மெத்தன போக்கு நீங்கி வேகம் பிடிக்கும். தொழில் விஷயமாக வெளியூர் செல்ல நேரலாம். எதிர்பார்த்த ஆர்டர் கிடைக்க தாமதம் ஏற்படலாம். 

    திருவோணம்:
    இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்க பெற்று அதனால் நன்மை அடைவார்கள். குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதால் செலவு ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே  இருந்த மனவருத்தம் நீங்கி நெருக்கம் ஏற்படும்.  பிள்ளைகளுடன் மனதுக்கு பிடித்த இடத்திற்கு சென்று பொழுதை கழிப்பீர்கள்.

    அவிட்டம் 1,2 பாதம்:
    இந்த மாதம் எதிர்பார்த்த செல்வ சேர்க்கை உண்டாகும். மனதில் வீண் கவலை ஏற்படலாம். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியை பற்றிய மனக்கவலை உண்டாகும். பயணங்கள் மகிழ்ச்சிகரமாக இருக்கும். வீண் அலைச்சல் காரியதடை ஏற்படலாம் கவனம் தேவை. எதிர்ப்புகள் விலகும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். மனதில் நிம்மதி உண்டாகும். உதவி என்று வருபவர்களுக்கு  தயங்காமல் உதவிகளை செய்வீர்கள். இரவில் நல்ல உறக்கம் வரும்.

    பரிகாரம்: ஊனமுற்றவர்களுக்கு தொண்டு செய்வதும் பிரதோஷ காலத்தில் சிவனை வழிபடுவதும் கஷ்டங்களை நீக்கி வீண் விரயத்தை குறைக்கும். காரியத்தடை நீங்கும்.
    அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி
    சந்திராஷ்டம தினங்கள்: ஜூன் 6, 7
    அதிர்ஷ்ட தினங்கள்: ஜூன் 26, 27
     

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA
     

  • Mahara rasi bilava andu rasi palan

    (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)
    மகர  ராசி அன்பர்களே இந்த ஆண்டு மனகுழப்பம் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். ஆக்கபூர்வமான யோசனைகள் தோன்றும். ஆனால் மற்றவர்களிடம் பழகும் போது கவனமாக இருப்பது நல்லது. சமூகத்தில் கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும். மற்றவர்களின் நலனுக்காக தன் நலனை பாராமல் உழைப்பீர்கள். எதிர்பார்த்த படி காரியங்கள் நடந்து முடியாமல் காரிய தாமதம் உண்டாகலாம். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். வீண் வாக்குவாதத்தால் பகை உண்டாகலாம். பயணத்தில் தடங்கல், வீண் செலவு போன்றவை ஏற்படும்.  எனினும் நன்மைகள் உண்டாகும்.  பணவரத்து இருக்கும். வாகன யோகம் உண்டு. பெரியோர்களின் உதவி கிடைக்கும்.  மனதில் தைரியம் உண்டாகும். எதிலும் தயக்கமோ, பயமோ ஏற்படாது.

    தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி அவற்றை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.  வியாபாரம் தொடர்பான பயணங்கள் லாபம் தருவதாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள்  மேல் அதிகாரிகள் கொடுத்த வேலைகளை  கவனமாக செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள்.  செயல் திறமை அதிகரிக்கும். வாக்குவன்மையால் லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன்தரும். புதிய பதவிகள் கூடுதல் பொறுப்பு கிடைக்கப்பெறுவார்கள். அலுவலக பணிகளை வெற்றிகரமாக செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும்.

    குடும்பத்தில் சுகமும், நிம்மதியும் இருக்கும். குடும்பத்திற்கு  அதிகப்படியான வருமானமும் கிடைக்கும். மகிழ்ச்சி இருக்கும். நீண்ட நாட்களாக  இருந்த குடும்பம் தொடர்பான  பிரச்சனைகள் சாதகமாக முடியும். கணவன், மனைவிக்கிடையே  சகஜ நிலை காணப்படும். கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகள் கல்விக்காக பாடுபட வேண்டி இருக்கும்.  குழந்தைகள்  திறமையை கண்டு அவர்களை பாராட்டுவீர்கள். உறவினர் வருகை இருக்கும். யாரிடம் பேசும் போதும்  நிதானமாக பேசுவது நன்மை தரும்.

    பெண்கள் எதிலும் மிகவும் கவனமாக  ஈடுபடுவது நன்மை தரும். திட்டமிட்டு செயல்படுவது வெற்றிக்கு உதவும். பயணங்களால் செலவு ஏற்படும். துணிச்சலுடன் எதிலும் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள்.

    கலைத்துறையினருக்கு செலவுகள் ஏற்படும். பயண சுகம் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் கிடைப்பது தாமதப்படும். வாகன வசதி உண்டாகும். அடுத்தவர்களிடம் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். கவனம் தேவை. கிடைக்கும் வாய்ப்புகளுக்காக அயராது உழைத்தால் வெற்றி நிச்சயம்.

    அரசியலில் உள்ளவர்களுக்கு தேவையான பணஉதவி கிடைக்கலாம். நீண்ட தூர தகவல்கள் நல்லவையாக இருக்கும். எதிலும் நிதானம் தேவை. அதிக கோபத்தால் வீண்பகை உண்டாகலாம்.  மேலிடத்தில் வரும் உத்தரவுகளை தாமதிக்காமல் செய்து முடிப்பது உங்களுக்கு நன்மை தரும்.

    மாணவர்கள் உயர்கல்வி தொடர்பான சந்தேகங்களை மற்றவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வீர்கள்.  கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். விளையாட்டில் கவனம் செலுத்துவீர்கள்.

    உத்திராடம்:
    இந்த ஆண்டு தாயின் உடல்நிலையில் கவனம் அவசியம்.  திட்டமிட்டபடி காரியங்களை செய்ய முடியாமல் தடங்கல்கள் ஏற்படலாம். எதிர்பாராத செலவு உண்டாகும். மருத்துவச் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல்நலத்தில் கவனம் தேவை.

    திருவோணம்:
    இந்த ஆண்டு தொழில் வியாபாரத்தில் கவனமாக இருப்பது  லாபம் அதிகரிக்க செய்யும். பணவரத்து இருக்கும். உத்தியோகத்தில்  இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உழைப்புக்கு ஏற்ற பலன் தாமதமாக கிடைக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது.

    அவிட்டம்:
    இந்த ஆண்டு குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் வருகை இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து  செல்வது நல்லது.  பிள்ளைகளின் முன்னேற்றத்தில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

    பரிகாரம்: வியாழக்கிழமையில் ஆஞ்சனேயரை வெண்ணெய் சாற்றி வணங்கி வர துன்பமும், தொல்லையும்  நீங்கும். மனோதைரியம் அதிகரிக்கும். 
    அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: செவ்வாய், வியாழன்; தேய்பிறை: செவ்வாய், புதன், வெள்ளி;

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

  • Mahara Rasi October month predictions

    (உத்திராடம் 2, 3, 4 பாதம்,  திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

    மகர ராசியினரே இந்த மாதம் மனதில் புதிய உற்சாகம் உண்டாகும். சூரியன் சஞ்சாரம் மனதில் தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்யும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. செவ்வாய் சஞ்சாரத்தால் கெட்ட கனவுகள் தோன்றலாம். நட்பாக இருந்தவர்கள் பிரிந்து செல்லலாம். 

    தொழில் வியாபாரம் வழக்கம்போல் நடக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.

    குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவது நன்மை தரும். பிள்ளைகளுக்காக சில பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும். அவர்களை அன்புடன் நடத்துவது நல்லது.

    பெண்களுக்கு நீங்கள் எடுக்கும் முயற்சி களில் சாதகமான பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணவரத்து திருப்தி தரும்.

    கலைத்துறையினருக்கு புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. வீண் அலைச்சலும் காரிய தாமதமும் ஏற்படலாம். கவனம் தேவை.
    அரசியல்துறையினருக்கு பல தடைகளை தாண்டி செயல்பட வேண்டி இருக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். செயல் திறமை வெளிப்படும். சுதந்திரமாக செயல்படும் வாய்ப்பு கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும்.
    மாணவர்களுக்கு  கல்வி தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். மனதில் இருந்த கவலை நீங்கும்.

    உத்திராடம் – 2, 3, 4:
    இந்த மாதம் மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள். புத்திசாதூரியம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும் பாராட்டு கிடைக்கும். மனகவலை ஏற்படும். உடல்சோர்வு உண்டாகும்.
    திருவோணம்:
    இந்த மாதம் தொழில் வியாபாரம் முன்னேற்றம் காண புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்க கூடிய சூழ்நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பார்கள். புதிய பதவி அல்லது பொறுப்புகள்  கிடைக்கும்.
    அவிட்டம் – 1, 2:
    இந்த மாதம் கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்துடன் விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். குழந்தைகள் உற்சாகமாக காணப்படுவார்கள். மனதிருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பயணம் செல்ல நேரலாம்.

    பரிகாரம்: ஆஞ்சநேயரை வியாழக்கிழமையில் வெற்றிலை மாலை போட்டு வணங்க எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும். மனதில் தைரியம் கூடும்.
    அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், புதன், வியாழன்; தேய்பிறை: புதன், வியாழன்;
    சந்திராஷ்டம தினங்கள்: 13, 14
    அதிர்ஷ்ட தினங்கள்: 6, 7, 8
     

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

  • Mahara Rasi September Rasi palan

    மகரம்
    (உத்திராடம் 2, 3, 4 பாதம்,  திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)
    வாக்குவாதத்தில் திறமையுடைய அதே வேளையில் மனசாட்சிக்கும் இடம் கொடுத்து நடக்கும் மகர ராசி அன்பர்களே இந்த மாதம் எடுத்துக் கொண்ட முயற்சிகளில் காரிய தடை தாமதம் ஏற்படலாம். சூரியன் சஞ்சாரம் ராசிக்கு 8ல் இருப்பது உஷ்ண சம்பந்தமான நோய் ஏற்படுத்தும்.  வீண்பயம் ஏற்படும். ஏற்கனவே  செய்த காரியங்களுக்கான பலனை அடைய வேண்டி இருக்கும். சிலர் வீட்டை விட்டு வெளியில் சென்று தங்க நேரிடலாம். வீண் வழக்கு விவகாரங்கள் வரலாம்  எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. சுக்கிரன் சஞ்சாரத்தால் வெளிநாட்டு பயண வாய்ப்புகள் வரலாம். சிலர் வெளியூர் பயணம் செல்வார்கள். எதிர்பாலினத்தாருடன் பழகும் போது கவனம் தேவை.

    தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். பார்ட்னர்களுடன் சேர்ந்து தொழில் செய்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. கடன் தொல்லை தலைதூக்கலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை, இடமாற்றம், அலைச்சல் போன்றவை இருக்கக்கூடும். தடைபட்டிருந்த பணம் கைக்கு வந்து சேரும்.

    குடும்பத்தில் அமைதி நிலவ குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது நல்லது.  கணவன், மனைவிக்கிடையே மனவருத்தம் உண்டாகலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவது நல்லது.  வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

    பெண்களுக்கு எதிலும் தேவையற்ற வீண் கவலை உண்டாகும். பயணங்கள் செல்ல நேரிடலாம். கடன் விஷயங்களில் கவனம் தேவை. 

    கலைத்துறையினருக்கு யோககாரகன் சுக்கிரன் ராசிநாதன் சனிக்கு கேந்திரம் பெறுவதால்  எதையும் சாதிக்கும் திறமை அதிகமாகும். நினைத்த காரியத்தை நினைத்தபடி நடத்தி முடிக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். நண்பர்கள் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் தாமதம் ஏற்படலாம். 

    அரசியல்துறையினருக்கு மனம் வருந்தும்படியான சூழ்நிலை ஏற்படும். மேலிடம் நீங்கள் சொல்வதை காதில் வாங்காதவர் போல் இருப்பார்கள். எனவே எல்லோரையும் அனுசரித்து செல்வதால் நன்மை உண்டாகும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் இருக்கும். நினைத்த காரியத்தை செய்து முடிக்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் மனக்கவலை உண்டாகும். 

    மாணவர்களுக்கு  மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது அவசியம். சக மாணவர்களுடன் நிதானமாக பழகுவது நல்லது. 

    உத்திராடம்:
    இந்த மாதம் குடும்பத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் உங்களது சொல்படி நடப்பது மனதுக்கு இதம் அளிக்கும். செயல்திறன் அதிகரிக்கும். சில நேரங்களில் உங்கள் வார்த்தைகளால் பிரச்சனை வரலாம். 

    திருவோணம்:
    இந்த மாதம் எந்த சூழ்நிலையிலும் பிறர் மனம் நோகும்படியான வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள். யாருக்காவது ஏதேனும் வாக்குறுதிகள் கொடுத்திருந்தால் அவைகளை உடனடியாக நிறைவேற்றுங்கள். திருமணத்திற்கு நல்ல வரனாக அமையும். தொழில் வியாபாரம் சுறுசுறுப்படையும். 

    அவிட்டம்:
    இந்த மாதம் உங்கள் வியாபார விரிவாக்கம் செய்வது பற்றி ஆலோசனை மேற்கொள்வீர்கள். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். முதலீடு செய்வதற்குண்டான பணவசதி வந்து சேரும். கடன் தொல்லை கொஞ்ச கொஞ்சமாக குறையும். கூட்டுத்தொழில் செய்பவர்கள் தங்கள் பங்காளிகளிடம் பரிவுடன் நடந்து கொள்ளவும். 

    பரிகாரம்: ஆஞ்சநேயரை வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். மன குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும். 
    அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி
    சந்திராஷ்டம தினங்கள்: 16, 17
    அதிர்ஷ்ட தினங்கள்: 9, 10
    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
     

  • Mahara Rasi Rahu Kedhu Peyarci Palangal

    மகர ராசி அன்பர்களே, 

    ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் சஞ்சாரம் செய்வதன் பலன்! 
    ராகு பகவான், இப்பொழுது, உங்களது ராசியான மகரத்திற்கு ஐந்தாம் வீடான ரிஷப ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இது பொதுவாக உங்கள் வாழ்வைச் சிறக்கச் செய்யும் என எதிர்பார்க்கலாம். நீங்கள் தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். உங்கள் வளர்ச்சிக்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள், உங்களுக்குத் திருப்தி தருவதாக அமையும். 

    உங்களிடம் அமைந்துள்ள பரந்த நுண்ணறிவு, இப்பொழுது உங்களுக்குப் பெரிதும் கை கொடுக்கும். இது, வாழ்க்கைச் சூழ்நிலைகளைச் சமாளிக்கும் திறனை மேம்படுத்தி, உங்களை, புத்தி சாதுர்யத்துடனும் செயல்படத் தூண்டும். உங்கள் கற்பனைத் திறன் மற்றும் படைப்புத் திறன் போன்றவையும், வழக்கத்தை விட இப்பொழுது சற்று கூடுதலாகவே இருக்கும். எனினும், நடைமுறை அம்சங்களைக் கருத்தில் கொண்டு செயல்பட மறந்து விடாதீர்கள். 

    ஊக வணிகங்களில் ஈடுபட வேண்டாம். ஏனெனில் இவை நீங்கள் எதிர்பார்த்தது போல அமையாமல் போகலாம். உங்களில் சிலர், இந்த நேரத்தில், புதியவர்களுடனோ அல்லது தொலைதூரத்தில் உள்ளவர்களுடனோ நட்பு கொள்ளக்கூடும். ஒரு சிலர் நீண்ட தூர அல்லது வெளிநாட்டு சுற்றுலா செல்லும் வாய்ப்பும் உள்ளது. உங்கள் கடந்தகால செயல்களின் முடிவுகளையும் நீங்கள் இந்தக் காலக் கட்டத்தில் அனுபவிப்பீர்கள். 

    இதன் மூலம் வாழ்க்கையில் சில முக்கியப் பாடங்களை நீங்கள் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். எனினும், குழந்தை பாக்கியத்திற்கான வாய்ப்பு குறைவாகவே காணப்படுகிரது. மொத்தத்தில், இந்தப் பெயர்ச்சி உங்களை உலக இன்பங்களை நோக்கி அழைத்துச் செல்லும் எனலாம். 

    கேது உங்கள் ராசிக்குப் பதினொன்றாம் வீட்டில் சஞ்சாரம் செய்வதன் பலன்! 

    கேது பகவான், இப்பொழுது, உங்கள் ராசியான மகரத்திற்குப் பதினொன்றாம் வீடான விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இதன் காரணமாக, வாழ்க்கையில் நீங்கள், ஓரளவு கடினமான தருணங்களைச் சந்திக்க நேரிடலாம். உங்கள் ஆசைகளும், நம்பிக்கைகளும் நிறைவேறாமல் போகலாம். இது பொதுவாக அதிருப்திக்கு வழி வகுக்கும். வேலை அல்லது தொழில் மூலம் நீங்கள் பெறும் லாபம் மற்றும் ஆதாயம், வழக்கத்தை விட குறைவாக இருக்கக் கூடும். 

    உங்கள் மூத்த உடன்பிறப்புகளுடன் தவறான புரிதலுக்கான வாய்ப்புகளும் உள்ளன. அதே நேரம், உங்கள் அணுகுமுறை, பொதுவாக, உங்கள் நண்பர்களுடனும் சமூக வட்டங்களுடனும் உங்கள் நல்லுறவைப் பேணுவதற்கு ஏற்றதாக இல்லாமல் போகலாம். மற்றவர்களுடனான உங்கள் தொடர்பும் கூட, குறைவாகவே இருக்கக் கூடும். மேலும், இந்தப் பெயர்ச்சியின் பொழுது, குறைந்த அளவிலான நண்பர்களுடன் மட்டுமே, நீங்கள் தொடர்பில் இருக்க விரும்புவீர்கள்.  தொலை தூர உறவினர்களுடனான உங்கள் உறவுமுறைகளிலும், இதே நிலை தான் நீடிக்கும். உங்களில் சிலர், காது கேளாமை அல்லது காது தொடர்பான கோளாறுகளால் பாதிக்கப்படலாம். எனவே, கவனம் தேவை.

    நாகை சுந்தர மூர்த்தி, சோதிட ஆய்வாளர்

  • mahara rasikku june month rasi palan

    (உத்திராடம் 2, 3, 4 பாதம்,  திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)
    இந்த மாதம் நீண்ட நாட்களாக காத்திருந்தவர்களுக்கு திருமணம் கைகூடும். குழந்தைபாக்கியமும் கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்திருந்தவர்கள் உங்களை வந்து சேருவார்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் திரும். பிரச்சனை கொடுத்தவர்கள் தானாக விலகி உங்களுக்கு வர வேண்டியதை கொடுக்கும் சூழல் உருவாகும். 

    குடும்பத்தில் நிம்மதி இருக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். உறவினர்களுடன் கேளிக்கை விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சந்தோஷம் அடைவீர்கள். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் இனிதே நடைபெறும். கோவில் சார்ந்த பணிகளில் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்கள். மனதில் இருந்த குழப்பங்கள் மாறி நிம்மதி இருக்கும்.

    தொழில் – வியாபாரம் நினைத்ததை விட சிறப்பாக இருக்கும். லாபமும் இரட்டிப்பாகவே கிடைக்கும். பெண்களால் உங்கள் தொழிலில் முன்னேற்றம் உண்டு. புதிய முயற்சிகளை உங்கள் குடும்ப பெண்களைக் கொண்டு தொடங்குவது சிறப்பாக இருக்கு.

    உத்யோகஸ்தர்களுக்கு சில இடர்பாடுகள் இருந்தாலும் அவை உங்கள் சாமர்த்தியத்தால் அகலும். எனவே கவலை இல்லாமல் துணிவுடன் செயல்படலாம்.

    பெண்களுக்கு வேலை செய்யும் இடத்தில் சலுகைகள் கிடைக்கும். அவற்றை உரிய முறையில் பயன்படுத்தினால் உங்கள் முன்னேற்றதிற்கு உதவும்.

    மாணவர்களுக்கு இதுவரை இருந்த சோம்பல், உடல் உபாதைகள் போன்றவை மாறி சுறு சுறுப்பாக காணப்படுவீர்கள். இதனால் படிப்பில் சிறந்து விளங்குவீர்கள்.

    கலைத்துறையில் இருப்பவர்கள் ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்து சேரும். எதிர்பார்த்த   ஏற்றங்கள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் மூலமாக அனைத்து விதமான நன்மைகளும் கிடைக்கும். 

    அரசியல்வாதிகள் அரசு சார்ந்த விசயங்களில் கையெழுத்து இடும்பொழுது கவனம் தேவை. வீடு, மனை வாகன விசயங்களில் ஒப்பந்தங்களில் நல்ல முடிவுகள் ஏற்படும். மற்ற விசயங்களில்  சாதகமான சூழ்நிலை நிலவும். முக்கிய முடிவுகள் வெற்றியைத் தரும்.

    உத்திராடம் 2, 3, 4 பாதம்:
    இந்த மாதம் உங்கள் நம்பிக்கைக்கு உகந்த ஆளாக ஒருவரை நீங்கள் தேர்வு செய்து அவருடன் மனம் விட்டு பேச முயலுவீர்கள்.  தொழில் புரிவோருக்கு இருந்து வந்த மந்த நிலை மறையும். படிப்படியாக லாபம் அதிகரித்துக் கொண்டே இருக்கும். 

    திருவோணம்:
    இந்த மாதம் புதிய தொழில் தொடங்குவதற்கான வேலைகளுக்கு அரசாங்க அனுகூலம் கிடைக்கும். சிறு தொழில் நடத்துபவர்களுக்கு அரசிடம் இருந்து கிடைக்க வேண்டிய உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

    அவிட்டம் 1,2 பாதம்:
    இந்த மாதம் நீங்கள் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற சிறிது போராட வேண்டி வரலாம். தொழில் புரியும் பெண்கள் நல்ல ஆதாயத்தை எதிர்பார்க்கலாம். சேமிப்புகள் அதிகரிக்கும். ஓய்வில்லாமல் உழைத்தாலும் உங்களுக்கு குடும்பத்தில் கிடைக்க வேண்டிய ஆறுதல்கள் கிடைக்கும்.

    சந்திராஷ்டம தினங்கள்: 26, 27
    அதிர்ஷ்ட தினங்கள்: 19, 20
    அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் – புதன்
    பரிகாரம்: சனிபகவானுக்கு எள் சாதம் நைவேத்யம் செய்து அனைவருக்கும் விநியோகம் செய்யலாம்.
     

  • Mahara Rasiku May month Rasi palan

    மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)
    எத்தனை தடைவந்தாலும் எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் பின்வாங்காத மகர ராசியினரே இந்த மாதம் நன்மை வரும். எல்லாவகையிலும் நல்லதே நடக்கும். சுக்கிரன் சஞ்சாரம் அனுகூலமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். எதிர்ப்புகள் விலகும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். விரும்பிய காரியங்களை செய்து சாதகமான பலன் கிடைக்க பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். 

    தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள்  சாதகமாக நடந்து முடியும். வியாபார போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். தொழில் விரிவாக்கத்திற்கு தேவையான பண உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்க பெறுவார்கள். பணி நிமித்தமாக வெளிநாடு செல்ல வேண்டி வரும்.

    குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு திருப்தி தரும். உறவினர்கள் – நண்பர்கள் மூலம் நன்மை நடக்கும்.
    பெண்களுக்கு பணவரத்து எதிர்பார்த்த படி இருக்கும். எடுத்த காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.
    அரசியல்வாதிகள் எதிர்ப்புகளையும் மீறி முன்னேறுவர். சகாக்கள் மத்தியில் ஆதரவு பெருகும். வீண், வறட்டு கௌரவத்துக்காக சேமிப்புகளை கரைத்துக்கொள்ள வேண்டாம்.

    கலைத்துறையினரின் படைப்புத் திறன் வளரும். பொது நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குமளவுக்குப் பிரபலமாவார்கள். நல்ல வாய்ப்புகள் வரும். உங்கல் முன்னேற்றத்திற்கு பாதை வகுக்கும் காலமாக இருக்கும்.
    மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள். 

    உத்திராடம்:
    இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுக பிரச்சனைகள் தீரும். தொடங்கிய வேலையை திட்டமிட்டபடி செய்ய முடியாமல் இழுபறியாக இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் நீங்கள் கூறுவதை ஏற்காமல் தங்களது விருப்பப்படி எதையும் செய்வார்கள். அரசியல்வாதிகளுக்கு சாதகமான சூழ்நிலையே உண்டு.அரசாங்க பணிகள் அனைத்தும் தொய்வு இல்லாமல் நடைபெறும். 

    திருவோணம்:
    இந்த மாதம் கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை இருக்கும். பிள்ளைகளுக்காக  செலவு செய்ய வேண்டி இருக்கும். அடுத்தவர் கூறும் கருத்துக்களை  அப்படியே  ஏற்றுக்கொள்ளாமல் அதில் உள்ள நல்லது கெட்டதை யோசிப்பது நல்லது. பண விவகாரங்களில் கவனம் தேவை. மூத்த கலைஞர்களின் வழிகாட்டலால் வெற்றி பெறுவீர்கள்.தொடந்து வரும் சவால்களைச் சந்தித்த பின்னரே வெற்றி கிட்டும்.

    அவிட்டம்:
    இந்த மாதம் எதையும் நன்கு யோசித்து பின்னர் செய்வது நன்மை தரும். மாணவர்கள் நிதானமாக ஆழ்ந்த கவனத்துடன்  பாடங்களை படிப்பது நல்லது. மனகஷ்டம், பணகஷ்டம் நீங்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.  கலைத்துறையினருக்கு ஏற்ற காலமிது. ரசனையைப் புரிந்து கொண்டு உங்கள் திறமையை காட்டுவீர்கள்.எதிர்பார்த்த பணம் வரும். பெண்கள் உடல் நலத்தில் மிகவும் கவனமாக இருத்தல் அவசியம். 

    பரிகாரம்: சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வணங்கி வர கஷ்டங்கள் நீங்கும். ஆரோக்கியம் உண்டாகும்.
    அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு – செவ்வாய் – வெள்ளி
    சந்திராஷ்டம தினங்கள்: 2, 3, 29, 30, 31
    அதிர்ஷ்ட தினங்கள்: 23, 24
     

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் 
    Mobile/WhatsApp: +91 7845119542