Tag: Sabari Malai

  • Sabari malai devotes notification

    தற்போது கொரோனா நோய்தொற்றின் காரணமாக உள்ள அசாதாரண சுகாதார நிலையை கருத்தில் கொண்டு தமிழகத்திலிருந்து சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்கள்  பின்வரும் கொரோனா  பாதுகாப்பு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றுமாறு இந்து சமய அறநிலையத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. 

    1. சபரிமலை யாத்திரை மேற்கொள்ளும்  தமிழக ஐயப்ப பக்தர்கள் கேரள காவல் துறையின்  மெய்நிகர் இணைய வழி ( Virtual Que Portal) தரிசன வரிசையில் ( (https://sabarimalaonline.org) பதிவு செய்ய வேண்டும்.

    2. முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் வார நாட்களில் நாள் ஒன்றுக்கு 1000 பக்தர்களுக்கும், வார இறுதி நாட்களில் நாள் ஒன்றுக்கு 2000 பக்தர்களுக்கும் மட்டுமே பதிவு செய்ய அனுமதிக்கப்படும்.

    3. சபரிமலை தரிசனத்திற்கு வரும் பக்தர்கள், தரிசனத்திற்கு முந்தைய 48 மணிநேரத்திற்குள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, தொற்று இல்லை என்று  கொரோனா எதிர்மறை சான்றிதழ் உள்ளவர்கள் மட்டுமே பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள். சுயவிருப்பத்தின் பேரில் கட்டணத்தின் அடிப்படையில் நோய் எதிர்ப்பு சக்தி சோதனையை பக்தர்கள் பரிசோதனை செய்து கொள்ள நுழைவு இடங்களில் தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். அந்த ஏற்பாட்டைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    4. 10 வயதுக்கு குறைவான மற்றும் 60-65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்களுக்கு தரிசனத்திற்கான அனுமதி இல்லை.  நோயால் உடல் நலம் குன்றிய பக்தர்களும்  சபரிமலை யாத்திரை மேற்கொள்ள தடைசெய்யப்பட்டுள்ளது.

    5. வறுமை கோட்டிற்கு  கீழ் உள்ளவர்களுக்கான அடையாள அட்டை, ஆயுஸ்மான் பாரத்   அடையாள அட்டை போன்றவற்றை வைத்துள்ளவர்கள் யாத்திரை பயணத்தின்போது அவற்றினை உடன் கொண்டு வருதல் வேண்டும். 

    6. நெய் அபிஷேகம், பம்பை ஆற்றில் நீராடல் மற்றும் இரவு நேரங்களில்  சன்னிதானம், பம்பை மற்றும் கணபதி திருக்கோயில்  ஆகிய இடங்களில் தங்குவதற்கு அனுமதி இல்லை.

    7. எருமேலி மற்றும் வடசேரிக்கரை வழியாக மட்டுமே பக்தர்கள் சபரிமலை யாத்திரை மேற்கொள்ள வேண்டும்.

  • Sabari malai Online booking

    புகழ்பெற்ற  சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் தரிசனம் செய்ய  ஆன்லைன் முன்பதிவு நாளை முதல் தொடங்குகிறது. சபரிமலை: மண்டல, மகரவிளக்கு பூஜைகளுக்காக, இந்த ஆண்டிற்கான ஆன்லைன் முன் பதிவு ( Virtual Q Booking Tickete ) நவம்பர்  1 (1/11/2020) முதல் தொடங்குகிறது !

    டிக்கெட்டுகள் நவம்பர் 1, 2020 முதல் ஜனவரி 14 / 2021 வரை மட்டுமே முன்பதிவு செய்யக் கிடைக்கும். பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவினை தனிநபராகவோ  அல்லது குழுவாகவோ பதிவு செய்து கொள்ளலாம்.

    தற்போதுள்ள நிலையில் நாள் ஒன்றுக்கு 1000 பக்தர்களும், வார இறுதி நாட்களில் 2500 பக்தர்கள் அனுமதிக்க முடிவு செய்துள்ளது. குறிப்பு: (1000 பக்தர்கள் அனுமதிப்பது தொடர்பான நிலைபாடு மாற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது)

    முன் பதிவு செய்ய போட்டோஉடன் கூடிய அரசு ஆவணங்கள் தேவை என அறிவுருத்தப்பட்டுள்ளது. இதற்கு Aadhar Card, Pan card, voter ID, Driving licence இதில் ஒன்றை தேர்ந்தெடுத்து கொள்ள முடியும் விண்ணுயிர் செய்யமுடியும் 
    முன்பதிவுசெய்ய 
    www.sabarimalaonline.org  எண்ற இணையத்தில் மட்டும் முன்பதிவு செய்ய வேண்டும் !

    மண்டல பூஜை டிசம்பர் 26 ம் தேதியும், 41 நாள் மண்டலபூஜை நிறைவடைந்த பிறகு (யாத்திரை காலத்திற்குப் பிறகு ) டிசம்பர் 27 ஆம் தேதி கோயில் திருகோயில் நடை அடைக்கப்படும்.
    இது மகரவிளக்கு புனித யாத்திரைக்காக டிசம்பர் 30 ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும். மகரவிளக்கு 2021 ஜனவரி 14 ஆம் தேதி முடிவடைந்த பிறகு , கோயில் திருநடை ஜனவரி 20 ஆம் தேதி மூடப்படும். சபரிமலை நடை நவம்பர் 15 மாலை திறக்கப்படும்  பக்தர்கள் நவம்பர் 16 முதல் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Sabari malai Nadai thirappu

    மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 15-ஆம் தேதி திறக்கப்படுகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கொரோனா இல்லை என்ற மருத்துவ சான்று அவசியம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    நவம்பர் 16-ஆம் தேதி முதல் டிசம்பர் 26-ஆம் தேதி வரை மண்டல பூஜைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், டிசம்பர் 30ம் தேதி முதல் ஜனவரி 20 வரை மகர விளக்கு பூஜைக்கு, நடை திறந்திருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    டிசம்பர் 26-ஆம் தேதி தங்க அங்கியுடன் மண்டல பூஜை நடைபெறும் என்றும், ஜனவரி 14ம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாரத்தின் 5 நாட்கள் 1000 பக்தர்களுக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 2,000 பேருக்கும், மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை தினத்தன்று 5000 பக்தர்களுக்கும் அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
     

  • Sabari malai Nadai thirappu

    தமிழகத்துக்கு பொங்கல் பண்டிகையைப் போல கேரளாவில் வெகு விமர்சையாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது ஓணம். அந்த அடிப்படையில் இந்த ஆண்டு நாளை மறுநாள் திருவோணம் கொண்டாடப்பட உள்ளது.

    இந்நிலையில், ஓணம் பண்டிகைக்காக சபரிமலை அய்யப்பன் கோயில் நடை இன்று திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல் சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். இதை தொடர்ந்து 31-ந் தேதி திருவோண தின சிறப்பு வழிபாடு, 1-ந் தேதி அவிட்டம் நாள் சிறப்பு பூஜை, 2-ந் தேதி சதயம் நாள் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

    5 நாள் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு அன்றைய தினம் இரவு 7.30 மணிக்கு நடை அடைக்கப்படும். மீண்டும் புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை 16-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். தொடர்ந்து 21-ந் தேதி வரை புரட்டாசி மாத பூஜை நடைபெறும்.

    கொரோனா அச்சம் காரணமாக பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக, புரட்டாசி மாத பூஜைக்காக 16ம் தேதி மீண்டும் நடை திறக்கப்படுகிறது.
     

  • Sabari malai Nadai thirappu

    ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐய்யப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது.  5 நாட்கள் வரை திறந்திருக்கும் நிலையில் இன்று காலை தலைமை தந்திரி சுதீர் நம்பூதரி கோயிலைத் திறந்து பூஜைகளைத் தொடங்கினார். ஐந்து நாள் மாதாந்திர பிரார்த்தனைகள் மலையாள மாதமான சிங்கத்தில் நடைபெறுவது வழக்கம்.  மாத பூஜைக்குப் பிறகு ஆகஸ்ட் 21அன்று மாலை கோயில் மூடப்படும்.

     

    சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஆவணி மாத பூஜைக்காக திறக்கப்பட்ட அற்புத காட்சி…..

    Posted by shakthionline.com on Monday, August 17, 2020

    முன்னதாக, இந்த ஆண்டிற்கான பக்தர்கள் வருகை செயல்முறை குறித்த உயர்மட்டக் கூட்டம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி நடைபெற்றது. சபரிமலை கோயிலுக்கு இந்த ஆண்டு வரும் பக்தர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொண்டு, கோவிடுக்கு எதிர்மறையான சான்றிதழை கண்டிப்பாகக் கொண்டிருக்க வேண்டும் என உயர்மட்டக் கூட்டத்திற்குப் பிறகு தெரிவிக்கப்பட்டது. ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மேலும் காவல்துறையின் மெய்நிகர் வரிசை மேலாண்மை அமைப்பு மூலம் நுழைவு கட்டுப்படுத்தப்படும். இதனால் அதிக அளவு கூட்டம் கூடுவது தவிர்க்கப்படும்.
     

  • Sabari malai Dharisanam

    சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் நடப்பாண்டின் மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி நவம்பர் 16-ந் தேதி நடை திறக்கப்படுகிறது. இது தொடர்பாக அமைச்சர் கடகம் பள்ளி சுரேந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், நடப்பு மண்டல மகர விளக்கு சீசனில் சபரிமலையில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

    கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுக்குட்பட்டு அனைத்து வழிபாட்டு நடைமுறைகளும் பின்பற்றப்படும். இணையதளம் வழியாக முன்பதிவு செய்து வருபவர்களுக்கு மட்டுமே தரிசன அனுமதி அளிக்கப்படும். கொரோனாவை முன்னிட்டு சன்னிதானம், பம்பை நிலக்கல் ஆகிய இடங்களில் கூடுதல் மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டு சிறப்பான மருத்துவ வசதிகள் பக்தர்களுக்கு கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

    சபரிமலை தரிசனம்: புதிய விதிமுறைகள் 

    ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

    பம்பாவிற்கும் நிலக்கல்லுக்கும் இடையே அதிக KSRTC பேருந்துகள் இயக்கப்படும்.

    சபரிமலை கோயிலுக்கு இந்த ஆண்டு வரும் பக்தர்கள் COVID-19 பரிசோதனை செய்துகொண்டு, கோவிடுக்கு எதிர்மறையான சான்றிதழை கண்டிப்பாகக் கொண்டிருக்க வேண்டும்.
     

  • Sabari Malai Nadai Thiruappu

    மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறக்கப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக  பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்று திருவாங்கூர் தேவஸ்தானம் போர்டு அறிவித்துள்ளது. நாளை திறக்கப்படும் சபரிமலை நடை, ஜூன் 19ஆம் தேதி இரவு 10 மணிக்கு அடைக்கப்பட உள்ளது.

    இந்த காலகட்டத்தில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. ஆனால் நித்திய கால பூஜைகள் ஐயப்பனுக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக தினசரி காலை 4 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கவும், ஒரு மணி நேரத்திற்கு தலா 200 பேர் வீதம் தினமும் 16 மணி நேரத்தில் 3,200 பேர் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படவும் அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், கொரோனா பரவலை தடுக்கும்விதாமாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. 

    அதேபோல, 19 ஆம் தேதி துவங்கி 28ம் தேதிவரை சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறவிருந்த ஆராட்டு விழாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

  • Sabari malai Nadai adaippu

    மண்டல பூஜை மற்றும் மகரஜோதிக்குப் பிறகு சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயில் நடை நேற்று அடைக்கப்பட்டது.

    தலைமைத் தந்திரி மகேஷ் மோகனரு மேற்பாா்வையில் அஷ்ட திரவிய கணபதி ஹோமம், அபிஷேகம் உள்ளிட்ட சடங்குகள் செவ்வாய்க்கிழமை காலை மேற்கொள்ளப்பட்டன. அதனைத் தொடா்ந்து நடை அடைக்கப்பட்டது.

    முன்னதாக, பந்தளம் அரசக் குடும்பத்தைச் சோ்ந்த பிரதிநிதி சுவாமி ஐயப்பனை தரிசித்தாா். இது வழக்கமாக கடைப்பிடிக்கப்பட்டுவரும் நடைமுறையாகும்.

    மகரஜோதியையொட்டி, பந்தளம் அரண்மனையிலிருந்து ஊா்வலமாகக் கொண்டுவரப்பட்ட சுவாமி ஐயப்பனின் திருவாபரணங்கள் அடங்கிய பெட்டி மீண்டும் அரண்மனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

    மேல்சாந்தி ஏ.கே.சுதீா் நம்பூதிரி பஸ்பாபிஷேகம் செய்த பிறகு, ஹரிவராசனம் பாடலுடன் நடை அடைக்கப்பட்டது.

    மாத பூஜைக்காக பிப்ரவரி 13-ஆம் தேதி நடை மீண்டும் திறக்கப்படும். 

  • Sabari Malai Thiruvabaran Petti

    மகர விளக்கு பூஜைக்காக பந்தளம் அரண்மனையில் இருந்து சபரிமலைக்கு திருவாபரணப் பெட்டி ஊர்வலம் தொடங்கியது.  சபரிமலை அய்யப்பனுக்கு நடைபெறும் பிரசித்தி பெற்ற பூஜைகளில் மகர விளக்கு பூஜையும் ஒன்று. இந்த ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி அன்று மாலை 6.45 மணிக்கு மகர விளக்கு பூஜை நடைபெறுகிறது. 

    மகர விளக்கு பூஜை யின்போது, சுவாமி அய்யப்பனுக்கு பந்தளம் அரண்மனையில் இருந்து கொண்டு வரப்படும் தங்க, வைர ஆபரணங்கள் அணிவிக்கப்படும். இந்த ஆபரண பெட்டி ஊர்வலம் இன்று பந்தளம் அரண்மனையில் இருந்து தொடங்கியது. மேளதாளம் முழங்க நடைபெறும் இந்த ஊர்வலம் 15 ஆம் தேதி மாலையில் சபரிமலை சன்னிதானத்தை சென்றடையும். 

    அதன்பிறகு 18 ஆம் படி வழியாக திருவாபரணப் பெட்டி கொண்டு செல்லப்பட்டு சுவாமி அய்யப்பனுக்கு அணிவிக்கப்பட்டு மகர விளக்கு பூஜை நடைபெறும். மகர விளக்கு பூஜையின்போது அங்குள்ள பொன்னம்பல மேட்டில் மகர ஜோதிதரிசனம் நடைபெறும். 
     

  • Sabari Malai Nadai Thirappu

    மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மாலை திறக்கப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டலகால பூஜைகளுக்காக கடந்த நவம்பர் மாதம் 16 ஆம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. இதையடுத்து 17 ஆம் தேதி முதல் மண்டல கால பூஜைகள் தொடங்கின. 41 நாட்கள் நடந்த மண்டல காலம் கடந்த 27ம் தேதி மண்டல பூஜையுடன் நிறைவடைந்தது. தொடர்ந்து அன்று இரவு 10 மணியளவில் கோயில் நடை சாத்தப்பட்டது. 28, 29, ஆகிய தேதிகளில் நடை சாத்தப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் மகர விளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை மீண்டும் திறக்கப்பட்டது. மாலை 5 மணி அளவில் தந்திரி கண்டரர் மகேஷ் மோகனர் முன்னிலையில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். இன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. நாளை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு நெய்யபிஷேகம், உஷபூஜை உள்பட பூஜைகள் தொடங்கும். ஜனவரி 15 ஆம் தேதி மிகவும் சிறப்பு பெற்ற மகர விளக்கு பூஜை நடைபெறுகிறது. அன்று மாலை பொன்னம்பல மேட்டில் மகர விளக்கு தரிசனம் நடை பெறும்.

    ஜனவரி 19 ஆம் தேதியுடன் மண்டல, மகர விளக்கு கால நெய்யபிஷேகம் நிறைவடையும். 20 ஆம் தேதி இரவு வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். ஜனவரி 21ம் தேதி காலை 6.30 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும்.