Tag: Sabari Malai

  • Iyappa Bakthargal Viradha Murai

    ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொள்பவர்கள் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். ஐயப்பனுக்கு விரதம் மேற்கொள்ளும் போது ஒருசிலவற்றை மனதில் கொண்டு நடக்க வேண்டும். ஒரு மண்டலத்திற்கு விரதம் மேற்கொள்ளும் ஐயப்ப பக்தர்கள், எப்போதும் மனதை அமைதியாக வைத்து, ஐயப்பனையே நினைத்து, சரணம் சொல்லி வழிபட வேண்டும். 

    மாலை போட்டவர்கள், மெத்தை, தலையணை, போர்வை என்று எதையும் உபயோகிக்கக்கூடாது. வெறும் தரையில், ஒரு துணியை விரித்து மட்டுமே படுக்க வேண்டும். ஐயப்பனுக்கு மாலை போட்டவர்கள், மனதை அமைதியுடன் வைத்துக் கொள்ள வேண்டும். இக்காலத்தில் கோபம் மற்றும் மற்றவர்களின் மனம் புண்படும்படியான வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசக்கூடாது. சாந்தமுடன் இருக்க வேண்டியது அவசியம். 

    மாலை போட்டுவிட்டால், விரதம் முடிந்து மாலையை கழற்றும் வரை முடி வெட்டவோ, ஷேவிங் செய்யவோ, நகத்தை வெட்டவோ, அலங்காரம் செய்யவோ, செருப்பு அணியவோ அல்லது வாசனை திரவியங்களை தடவிக் கொள்ளவோ கூடாது. ஐயப்பனுக்கு விரதம் மேற்கொள்ளும் போது, பெண்களை சகோதரியாகவும், தாயாகவும் தான் பார்க்க வேண்டும். மேலும் வீட்டில் இருக்கும் மனைவி மற்றும் மற்ற பெண்களின் தொண்டும், பக்தியும் மிகவும் உயர்வானதும், போற்றக்கூடியதும் ஆகும். 

    ஒருவேளை கழுத்தில் அணிந்திருந்த மாலை அறுந்துவிட்டால், அதை சரிசெய்து மீண்டும் அணிந்து கொள்ளலாம். இதனால் எந்த ஒரு தவறும் இல்லை. மனம் வருந்த வேண்டிய அவசியமும் இல்லை. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி என்றால், அவர்களை காண்பதைத் தவிர்ப்பதோடு, வசதி இருந்தால், அவர்களை தனி அறையில் இருக்குமாறு கூறலாம். இல்லாவிட்டால், மாலை அணிந்திருப்பவர்கள் வெளியிடங்களில் தங்கிக் கொள்வது நல்லது. 

    எப்போதும் மாலைப் போடும் தருணத்தில், அச்சமோ, சந்தேகமோ, குற்ற உணர்ச்சியோ இருக்கக்கூடாது. ஒருவேளை மனதில் ஏதேனும் குழப்பமோ அல்லது மனம் ஏதேனும் சஞ்சலத்துடன் இருந்தால், மாலைப் போடுவதைத் தள்ளிப் போடுவது நல்லது.

    இருமுடி கட்டும் நிகழ்ச்சியை மற்ற இடங்களில் வைப்பதற்கு பதிலாக, வீட்டிலேயே நடத்துவது நல்லது. இதனால் வீடு மங்களகரமாகவும், தீய சக்திகள் அகன்றும் இருக்கும். மாலை போட்ட பின் மது, புகை, அசைவ உணவுகள் போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும். சொல்லப்போனால், புகைப்பழக்கத்தைக் கைவிட நினைப்பவர்கள் ஐயப்பனுக்கு மாலை போடுவது ஓர் சிறந்த வழியாக அமையும். 

    உங்கள் குருசாமி சபரிமலை சுவாமி ஐயப்பனுக்கு இணையானவர். எனவே அவருக்கு பணிவிடை செய்து, ஐயப்பனின் அருளைப் பெறுங்கள். எதிர்பாராமல் உங்கள் குடும்பத்தில் பிறப்பு அல்லது இறப்பு நிகழ்ந்தால், நீங்கள் அணிந்துள்ள மாலையை சுவாமி ஐயப்பன் முன் வைத்துவிடுங்கள். மேலும் ஒரு வருடம் கழித்து நீங்கள் உங்கள் யாத்திரையைத் தொடங்கலாம். 

    ஐயப்பனுக்கு மாலை போட்டுவிட்டால், தலைக்கு எண்ணெய் வைக்கவோ அல்லது எண்ணெய் குளியலோ மேற்கொள்ளக்கூடாது. ஐயப்ப பக்தர்கள் பகல் நேரத்தில் தூங்கக்கூடாது. ஒருவேளை தூங்கினால், மீண்டும் குளித்த பின்னரே எந்த ஒரு செயலையும் மேற்கொள்ள வேண்டும். ஐயப்ப பக்தர்கள் வீட்டைத் தவிர, கடைகளிலோ அல்லது வெளியிடங்களிலோ எங்கும் உண்ணக்கூடாது. 

    மாலை அணிந்தவர்கள், காலையில் சூரியன் உதிப்பதற்கு முன் பச்சைத்தண்ணீரில் குளிக்க வேண்டும். குளித்துமுடித்த பின் விபூதி இட்டு, விளக்கு ஏற்றி ஐயப்பனின் 108 சரணத்தையும் சொல்லி வணங்க வேண்டும். இதேப் போல் மாலையில் சூரிய அஸ்தமனத்திற்கு பின் குளித்து, காலையில் செய்ததைப் போலவே செய்ய வேண்டும்.
     

  • Sabari Malai Maalai aniyum murai

    கார்த்திகை மாதம் முதல் தேதியன்று சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிய வேண்டும். அன்று நாள், கிழமை பார்க்க வேண்டிய அவசியமில்லை.54 அல்லது 108 மணிகள் உள்ள துளசி மணிமாலையை ஏதேனும் ஒரு கோவிலில், குரு சுவாமியின் திருக்கரங்களால் அணிந்து கொள்ள வேண்டும்.

    குரு சுவாமி இல்லாத பட்சத்தில் கோவிலுக்குச் சென்று அர்ச்சகரை குருவாக ஏற்று மாலை அணிந்து கொள்ளலாம் அல்லது வீட்டிலேயே பூஜை செய்து தாயின் கரத்தால் மாலை அணிந்து கொள்ளலாம். மாலை அணிந்த பக்தர்கள் ஐயப்பமார்கள் என்றே அழைக்கப்படுவார்கள்.

    மாலை அணிந்தபின் என்ன செய்ய வேண்டும்?

    மாலை அணிந்தபின் கடுமையான பிரம்மசர்ய விரதத்தை கடைபிடிக்க வேண்டியது அவசியம், விரத நாட்களில் புறத்தூய்மை அவசியம்.  ஒரு மண்டலம் (48 நாட்கள்) விரதம் கடைபிடிக்க வேண்டும். தினமும் காலையிலும், மாலையிலும் குளிர்ந்த நீரில் நீராடி, ஐயப்பனைத் தொழுது ஐயப்பன் பாடல்களை பாடலாம். நாள்தோறும் ஆலயம் சென்று இறைவனை தொழுது, பஜனை வழிபாடு செய்ய வேண்டும். ஐயப்பனை நினைத்து விரதத்தை மேற்கொண்டால் சகல துன்பங்களையும் நீக்கி நம்மை காத்தருள்வார்.

  • Sabari Malai Mandala Poojai

    சபரிமலை நடை திறப்புக்கு சில நாட்களே உள்ள நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.

    பிரசித்திபெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜையின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.

    இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக கோவில் நடை திறக்க இன்னும் சில நாட்களே உள்ளன. இதனால் மண்டல பூஜைக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

    மண்டல பூஜையையொட்டி சபரிமலையில் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

    சபரிமலையில் உள்ள புனித நதியான பம்பை நதி தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சபரிமலைக்கு செல்லும் பெருவழி பாதை உள்பட 17 சாலைகள் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. போதுமான மின்விளக்கு வசதிகள், கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தும் பணியும் நிறைவடைந்து உள்ளது.

  • Sabari Malai Dharshan

    சபரிமலை ஐய்யப்பன் கோயில் மண்டல மற்றும் மகர விலக்கு பூஜைக்காக வரும் 16 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. இந்தநிலையில் பக்தர்கள் வசதிக்காக சபரி மலையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. பக்தர்களின் வருகை அதிகமானால், தரிசனத்திற்கு வசதியாக கோவில் நடை திறக்கப்படும் நேரங்களில் மாறுதல் செய்யப்படும்.

    ஆண்டுதோறும் அதிகரித்து வரும் பக்தர்களின் வருகையை கருத்தில் கொண்டு, சபரிமலையில் இந்த ஆண்டு கூடுதலாக அரவணை மற்றும் தேவைக்கு ஏற்றவாறு அப்பம் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. அதேபோல் பம்பை, சன்னிதானத்தில் ஐயப்ப பக்தர்களுக்கு குடிநீர் உள்பட அடிப்படை வசதிகளை திருவிதாங்கூர் தேவஸ்தானம் செய்து வருகிறது.

    பிளாஸ்டிக் பாட்டில்களில் வினியோகம் செய்யப்படும் குடிநீருக்கு சபரிமலை, பம்பை, நிலக்கல் ஆகிய பகுதிகளில் தடை விதிக்கப்பட்டு உள்ளதால், இப்பகுதிகளில் பக்தர்களின் வசதிக்காக தினசரி 3½ லட்சம் லிட்டர் சுத்தமான குடிநீரும், 1½ லட்சம் லிட்டர் சுக்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தீவிரமாக நடக்கிறது. 

    சபரிமலையில் பெண்கள் தரிசனத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளதால், அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க கடந்த ஆண்டை போல், 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று கேரள டி.ஜி.பி. லோக்நாத் பெக்ரா தெரிவித்து உள்ளார்.

  • Sabari Malai Mandala Poojai

    நடப்பு ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 16 ஆம் தேதி திறக்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும் என்று தேவசம் போர்டு அறிவித்து இருக்கிறது. 

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு கார்த்திகை மாதம் 1 ஆம் தேதி முதல் 60 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும். 

    நடப்பு மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 16 ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. பின்னர் மறுநாள் அதிகாலை முதல் வழக்கமான பூஜைகள் நடைபெறும். பூஜையின் சிகர நிகழ்ச்சியான மண்டல பூஜை டிசம்பர் 27 ஆம் தேதியும், ஜனவரி 15 ஆம் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெறும்.
     

     நடை திறக்கப்படும் நாளான 16-ந் தேதி அன்று தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார். தொடர்ந்து 18-ம் படிக்கு கீழ் உள்ள நெருப்பு ஆழியில் கற்பூரம் வைத்து தீ மூட்டப்படும்.

    தொடர்ந்து, புதிய மேல்சாந்திகள் பதவி ஏற்பு நிகழ்ச்சி சன்னிதானத்தில் நடைபெறும். முன்னதாக சபரிமலை ஐயப்பன் கோவில் மேல்சாந்தியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சுதீர் நம்பூதிரி, மாளிகப்புரம் கோவில் மேல்சாந்தியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பரமேஸ்வரன் நம்பூதிரி ஆகியோர் இருமுடி கட்டி 18 படிகளுக்கு கீழ் மேளதாளம் முழங்க அழைத்து வரப்படுவார்கள். இருமேல் சாந்திகளையும் படியிறங்கும் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி 18-ம் படி வழியாக அழைத்து செல்வார்.

    6.30 மணிக்கு புதிய மேல்சாந்திகள், தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மூல மந்திரம் சொல்லி பதவி ஏற்றுக்கொள்வார்கள். மேலும் அவர்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு அபிஷேகம் நடத்தப்படும். தொடர்ந்து 18-ம் படிக்கு கீழ் காத்திருக்கும் பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள். அன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. பக்தர்களின் தரிசனத்திற்கு பின் இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட்டு, கோவில் சாவி புதிய மேல் சாந்தி சுதீர் நம்பூதிரியிடம் ஒப்படைக்கப்படும்.

    17-ந் தேதி அதிகாலை முதல், புதிய மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறந்து வைத்து பூஜைகள் செய்வார்.

    அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், தொடர்ந்து 11.30 மணி வரை நெய் அபிஷேகம், உச்ச பூஜைக்கு பிறகு மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும்.

    மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை, இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம், அத்தாள பூஜைக்கு பின்பு இரவு 10.30 மணிக்கு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு நடை அடைக்கப்படும். 
     

  • Sabari malai nadai october 17 thirappu

     ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அக்டோபர் மாதம்  17-ந்தேதி திறக்கப்படுகிறது. மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டு குத்துவிளக்கு ஏற்றி தீபாராதனை நடைபெறும். 

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை மிகவும் பிரசித்தி பெற்றவை.

    இந்த நாட்களில் கேரளா மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.

     இதுதவிர, ஒவ்வொரு மலையாள மாதத்தின் (நிகரான தமிழ் மாதம்) முதல் 5 நாட்களிலும், விஷு, ஓணம் பண்டிகை, பங்குனி உத்திரம் திருவிழா நாட்களிலும் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு, பல்வேறு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும். இந்த நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

    இந்த நிலையில் ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 17-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றி தீபாராதனை நடத்துவார்.

    18-ந் தேதி முதல் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெறும். படி பூஜை உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. 22-ந் ேததி இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும்.

  • Sabari malai Nadai thirappu

    புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடையை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி வாசு தேவன் நம்பூதிரி திறந்து வைத்தார்.

    ஓணம் பண்டிகைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 9- ந் தேதி திறக்கப்பட்டது. 11- ந்தேதி திருவோண தினத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் கோவில் நடை 13- ந்தேதி இரவு அடைக்கப்பட்டது.

    இதையடுத்து புரட்டாசி மாத பூஜைக்காக கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி வாசு தேவன் நம்பூதிரி நேற்று மாலை 5 மணிக்கு நடையை திறந்து வைத்தார். இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.

     தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். தொடர்ந்து, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய்யபிஷேகம், உஷ பூஜை, மாலை 6 மணிக்கு தீபாராதனை, புஷ்பாபிஷேகம் போன்றவை நடைபெறும். 5 நாட்கள் நடைபெறும் சிறப்பு பூஜைகளுக்கு பின் 21- ந் தேதி இரவு 10.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.

  • Sabari malai Nadai thirappu

    ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைகளுக்காக சரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. வருடந்தோறும் ஓணம் பண்டிகை நாளில் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நாளை ஓணம் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து நேற்று சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. 

    சபரிமலையில் இன்று முதல் 4 நாட்களுக்கு தினமும் மகா கணபதி ஹோமம், உஷ பூஜை உட்பட வழக்கமான பூஜைகள் நடக்கும். நாளை திருவோண சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அன்று கோயில் வரும் பக்தர்களுக்கு திருவிதாங்கூர் தேவசம்போர்டு சார்பில் தலைவாழை இலை போட்டு ஓண விருந்து வழங்கப்படுகிறது. 13ம் தேதி இரவு 10 மணிக்கு அரிவராசனம் பாடி கோயில் நடை அடைக்கப்படுகிறது. புரட்டாசி மாத பூஜைகளுக்காக வரும் 16ம் தேதி மாலை மீண்டும் நடை திறக்கப்படுகிறது.

  • September 9 Sabari Malai Nadai thirappu

    திருவோண பூஜை வழிபாட்டிற்காக சபரிமலை கோயில் சேப்டம்பர்  9 ஆம் தேதி நடை திறக்கப்பட இருக்கிறது. 
     
    சபரிமலை ஐயப்பன் கோயில் ஒவ்வொரு மலையாள மாதத்தின் கடைசிநாள் திறக்கப்படும். அன்று மாலை 5மணிக்கு திறக்கப்பட்டு ஐயப்பன் மீது உள்ள விபூதிக் காப்பு எடுக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். மறுநாள் காலை 5 மணியில் இருந்து கணபதி ஹோமம், சந்தன அபிஷேகம், நெய் அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகள் நடைபெறும்.

    5 நாட்கள் பூஜை நடைபெற்ற பின்னர் இரவு 10 மணிக்கு ஹரிவராசனம் எனும் தாலாட்டுப்பாடலுடன் நடை சாத்தப்படும். இதேபோல பங்குனிஉத்திரம், சித்திரை விஷூ, பிரதிஷ்டை தினவிழா, திருஓணம் பண்டிகை உள்ளிட்ட நாட்களிலும் நடை திறக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெறும்.

    ஓணம் பண்டிகை வரும் 11-ம் தேதி நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து திருவோணபூஜை வழிபாட்டிற்காக வரும் 9-ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது. தொடர்ந்து 13-ம் தேதி வரை சபரிமலையில் பல்வேறு வழிபாடுகள், பூஜைகள் நடைபெறும்.

    ஓணம் பண்டிகைக்காக கேரளாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 13 அன்று நடை சாத்தப்பட்டு புரட்டாசி மாத பூஜைக்காக மீண்டும் 16-ம் தேதி நடை திறக்கப்பட உள்ளது.
     

  • Sabari Malai Nadai Thirappu

    ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை திறக்கப்பட்டது. இன்று சந்திரகிரகணத்தை ஒட்டி காலையில் நடை தாமதமாக திறக்கப்படுகிறது. நேற்று மாலை, 5:30 மணிக்கு மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். 

    18ம் படி வழியாக சென்ற மேல்சாந்தி, ஆழிகுண்டத்தில் நெருப்பு வளர்த்த பின், பக்தர்கள் படி வழியாக ஏறி ஐயப்பனை தரிசனம் செய்தனர்.கடந்த ஆண்டு ஆகஸ்டில், கேரளாவில் பெய்த பெருமழையால், பம்பை உருக்குலைந்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக, தனியார் வாகனங்கள் நிலக்கல் வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் சிரமப்பட்டனர்.

    இந்நிலையில், கார் போன்ற சிறிய வாகனங்களில் வரும் பக்தர்கள், பம்பை வரை செல்ல அனுமதித்து கேரள ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பக்தர்கள் பம்பை வந்து இறங்கிய பின், கார்களை நிலக்கல் அனுப்பி விட வேண்டும்.தரிசனம் முடிந்து திரும்பும் பக்தர்கள், கேரள அரசு பஸ்களில் நிலக்கல் சென்று, ஊர் திரும்ப வேண்டும்.