Tag: Sabari Malai

  • Sabari malai bakthargal kavanthirku

    சபரிமலை ஐயப்பன் கோயிலின் சந்நிதானத்தை சுற்றியுள்ள இடங்களில் செல்போன் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. 

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் பாதுகாப்பு மிகுந்த சந்நிதானத்தின் புகைப்படங்கள் அண்மையில் சமூக வலைதளங்களில் வெளியாகின. இதைத் தொடா்ந்து, பதினெட்டாம் படிக்கு மேற்பகுதியிலும், சந்நிதானத்தை சுற்றியுள்ள பகுதியிலும் செல்லிடப்பேசி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 

    பதினெட்டாம் படிக்கு செல்லக் கூடிய பெரிய நடைப்பந்தல் பகுதியிலேயே பக்தா்கள், தங்களது செல்லிடப்பேசியை அணைத்துவைத்துவிட வேண்டும். அதை மீறி யாரேனும் செல்லிடப்பேசி பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபா் முதலில் எச்சரிக்கப்படுவார். அதே தவறை அவா் மீண்டும் செய்தால், செல்லிடப்பேசி பறிமுதல் செய்யப்படும்.

    அதேபோல சபரிமலையில் பக்தா்கள் பிளாஸ்டிக் பைகளையும், இதர பொருள்களையும் ஆங்காங்கே வீசுவதால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதையடுத்து, ‘சபரிமலை பசுமை திட்டம்’ என்ற பெயரில் புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, செங்கன்னூா் ரயில் நிலையத்தில் பக்தா்களுக்கு பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப் பைகளை வழங்கும் மையம் திறக்கப்பட்டுள்ளது. இதேபோல், விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகள் பக்தா்களுக்கு விநியோகிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
     
  • Sabari malai thanga angi orvalam

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜையை ஒட்டி வரும் 23 ஆம் தேதி தங்க அங்கி ஊர்வலம் தொடங்குகிறது. 

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டு மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நடை கடந்த மாதம் 16-ந்தேதி திறக்கப்பட்டது. மறுநாள் முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. தினமும் அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி அய்யப்பனுக்கு விசே‌ஷ பூஜை, நெய் அபிஷேகம், தீபாராதனை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

    வருகிற 27-ந்தேதி மண்டல பூஜை நடக்கிறது. மண்டல பூஜைக்கு முதல்நாளான 26-ந்தேதி சூரிய கிரகணம் என்பதால் அன்று காலை 7.30 மணி முதல் பகல் 11.30 மணி வரை கோவில் நடை சாத்தப்படும். பகல் 11.30 மணிக்கு பிறகு மீண்டும் நடை திறக்கப்பட்டு 1 மணி வரை பூஜைகள் நடைபெறும். அதன்பிறகு நடை அடைத்து மாலை 4 மணிக்கு நடை திறந்து வழக்கமான பூஜைகள் நடைபெறும்.

    மாலை 6 மணிக்கு சுவாமி ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து தீபாராதனை காட்டப்படும். பூஜைகளுக்கு பிறகு இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படும் சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஆரன்முளா பார்த்த சாரதி கோவிலில் வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த தங்க அங்கி வருகிற 23-ந்தேதி அங்கிருந்து ஊர்வலமாக சபரிமலைக்கு எடுத்து வரப்படும். 26-ந்தேதி பகல் பம்பையை இந்த ஊர்வலம் வந்தடையும். பம்பை கணபதி கோவிலில் பக்தர்களின் தரிசனத்திற்கு பிறகு தங்க அங்கி சன்னிதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும்.

    மறுநாள் 27-ந்தேதி அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுவாமி ஐயப்பனுக்கு விசே‌ஷ பூஜைகள் நடைபெறும். மாலை 6.30 மணிக்கு தங்க அங்கியில் ஜொலிக்கும் சுவாமி ஐயப்பனுக்கு சிறப்பு தீபாராதனையுடன் மண்டல பூஜை நடைபெறும். அன்று இரவு கோவில் நடை சாத்தப்படும்.

    மீண்டும் மகரவிளக்கு பூஜைக்காக ஜனவரி மாதம் 1-ந்தேதி கோவில் நடை திறக்கப்படும். 14-ந்தேதி மகர விளக்கு பூஜை நடைபெறும்.

  • Sabari Malai Iyappan Dhavam

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் “தத்துவமசி” எனும் தத்துவம் எழுதப்பட்டுள்ளது. தத்துவமசி என்றால், “நீ எதை நாடி வந்தாயோ, அது நீயாக உள்ளாய்” என்று பொருள்.

    அய்யப்பனின் படையில் சேனாதிபதியாக இருந்த கடுத்த சுவாமி (கருப்பசாமி) பதினெட்டுப் படிக்கு அருகில் பிரதிஷ்டை செய்துள்ளார். அவருக்கு முந்திரி, திராட்சை, சுருட்டு படைத்து வழிபட்டால் தோஷங்கள் விலகி நன்மை உண்டாகும்.

    சபரிமலையில் உள்ள பஸ்ம குளத்தில் குளித்தால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    திருப்பதி லட்டு, பழனி பஞ்சாமிர்தம் போல சபரிமலை அரவனை பாயசம் புகழ்பெற்றது. அரிசி, நெய், சர்க்கரை, ஏலக்காய் கலந்து அரவனைப் பாயசம் தயாரிக்கப்படுகிறது.

    சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகர சங்கராந்தியன்று தோன்றும் ஜோதியை அப்பாச்சிமேடு, பம்பை, பெரியானை வட்டம், புல்மேடு ஆகிய இடங்களில் இருந்தும் காணலாம். புல்மேடு பகுதியில்தான் இந்த ஜோதி நன்றாக தெரியும்.

    சபரிமலையில் தினமும் அதிகாலை 3 மணிக்கு கோவில் திறந்ததும் சுப்ரபாதம் பாடப்படும்.

    அய்யப்பனுக்கு தினமும் இரவு 8 மணிக்கு புஷ்பாஞ்சலி நடத்தப்படும். பக்தர்களே பூக்களை கூடையில் எடுத்து வந்து கொடுக்கலாம்.

    அய்யப்பனுக்கு விபூதி, சந்தனம், பால், பன்னீர், 108 ஒரு ரூபாய் நாணயம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர் ஆகிய எட்டும் கொண்டு செய்யப்படும் அபிஷேகத்துக்கு அஷ்டாபிஷேகம் என்று பெயர்.

    சபரிமலை அய்யப்பன் உற்சவர் ஆண்டுக்கு ஒரு தடவை பம்பை ஆற்றுக்கு கொண்டு வரப்பட்டு ஆராட்டு உற்சவம் நடைபெறும். பிறகு அய்யப்பனை அலங்கரித்து பம்பா விநாயகர் கோவில் முன்பு மக்கள் தரிசனத்துக்காக 3 மணி நேரம் வைப்பார்கள். சபரிமலை வர இயலாத 50 வயதுக்குட்பட்ட பெண்கள் இந்த சமயத்தில் அய்யப்ப உற்சவரை தரிசிக்கலாம்.

    சபரிமலை செல்லும் வழியில் ஒரு பள்ளிவாசல் உள்ளது. பக்தர்கள் இங்கு சென்று தாங்கள் விரதத்தையும், பிரம்மச்சர்யத்தையும் முழுமையாக கடைப்பிடித்தோம் என்று உறுதி செய்துவிட்டுத்தான் சபரிமலைக்கு செல்லவேண்டும் என்பது ஐதீகம்.

    ராமபிரான் தனது தந்தைக்காகவும், மூதாதையர்களுக்காகவும் பம்பைக்கரையில் தர்ப்பணம் செய்ததை அடிப்படையாக கொண்டே இப்போதும் பக்தர்கள் தங்களது மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    பரசுராமர் தர்மசாஸ்தாவின் கோயிலை சபரிமலையில் அமைத்தார். அப்போது மேற்கூரையோ, சுற்றுப்புற சுவர்களோ இல்லை. சாஸ்தாவின் சிலையை மட்டுமே பிரதிஷ்டை செய்தார். இதன்பிறகு மறு அவதாரம் எடுத்த தர்மசாஸ்தா பூமியில் ஐயப்பன் என்ற பெயரில் வளர்ந்து, தர்மசாஸ்தாவின் விக்கிரகத்தில் ஐக்கியமாக தவம் செய்தார். அப்போது சின்முத்திரையுடன் அமர்ந்தார். ஆத்மா, பரமாத்மாவுடன் இணை வதை சுட்டிக்காட்டுவதே சின்முத்திரையின் தத்துவமாகும்.

    வாழும் காலத்தில் நல்லவனாய் வாழ்ந்துவிட்டால் மீண்டும் இந்த பிறவிப் பெருங்கடலை நீந்தவேண்டாம் என்ற அரிய தத்துவங்களை உணர்த்தும் தலம் சபரிமலை.

    சபரி மலையில் ஐயப்பன் தவமிருக்கும்போது தனது வஸ்திரத்தை முழங்காலை சுற்றி கட்டிக்கொண்டு அமர்ந்தார். தியானத்தில் இருக்கும்போது தன்னை வளர்த்த தந்தை வந்தால்கூட தியானத்திலிருந்து எழக்கூடாது என்ற நோக்கத்திலேயே எழ முடியாத நிலையில் குத்துக்காலிட்டு அமர்ந்துள்ளார் என்று சொல்வதுண்டு.

    ஐயப்பன் சிவனின் உடுக்கையை படுக்கவைத்த நிலையில் உள்ள பீடத்தில், சிவனைப்போல் தியான கோலத்திலும் (முக்தி தருவது), விஷ்ணுவை போல் விழித்த நிலையிலும் (காத்தல் தொழில்) அருள்பாலிப்பது மிகவும் விசேஷமாகும்.

    ஐயப்பன் தன் வலது கையில் பரமாத்மாவுடன் ஜீவாத்மா கலக்கும் முத்திரையையும், இடது கையில் ஜீவாத்மா பரமாத்மாவின் பாதத்தை சரணடையும் தத்துவத்தையும் குறிக்கிறார். அதாவது, மனிதன் இறைவனை சரணடைந்தால் அவனுடன் கலந்து விடலாம் என்பதை ஐயப்பனின் முத்திரை குறிக்கிறது. இந்த ஆசனத்தை சாதாரண மனிதர்கள் செய்வது கடினம்.

    ஸ்ரீகிருஷ்ண அவதாரத்திற்குப் பிறகு இறைவன் மனித அவதாரம் எடுத்தது ஸ்ரீ ஐயப்பன் அவதாரம் தான் என்று ஆன்மிகப் பெரியோர் கூறுவர்.

    குளத்து புழா அய்யப்பன் கோவிலுக்குச் சென்று வழிபட்டு குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்தால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

  • Sabari malai Erumaikollai

    சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் எல்லோரும் ஒன்று கூடும் இடம் எருமேலி. இங்கு பந்தள மன்னன் ராஜசேகர பாண்டியனால் கட்டப்பட்ட தர்மசாஸ்தா கோயில் உள்ளது. வேட்டைக்குச் செல்ல அம்பும், வில்லும் ஏந்தி நிற்கின்ற உருவில் தர்மசாஸ்தா காட்சியளிக்கிறார்.

    வாபர் கோயில்:
    எருமேலியில் பேட்டை சாஸ்தா கோயில் எதிரில் ஐயப்பனின் முஸ்லிம் நண்பரான வாபரின் பள்ளி வாசல் உள்ளது. ஐயப்ப பக்தர்கள் வாபர் பள்ளி வாசலுக்கு சென்று வணங்கி அங்கு தரப்படும் விபூதி பிரசாதம் பெற்றுக் கொள்ளலாம்.

    பேட்டைதுள்ளல்:
    ஐயப்பன், எருமைத்தலை அரக்கி மகிஷியை கொன்ற தலம் இது. எருமைக்கொல்லி எனப்பட்ட இத்தலம், " எருமேலி' என மருவியது. இது மணிகண்டன் மகிஷியை வதம் செய்து அவள் பூதவுடல் மீது நர்த்தனம் செய்ததன் நினைவாக பக்தர்களால் நடத்தப்படும் ஓர் சடங்கு தான் பேட்டை துள்ளல் எனப்படுகிறது. 

    உடல் மீது வண்ணப்பொடிகளை பூசிக் கொண்டு, இலை, தழைகளை கட்டிக் கொண்டு மரத்தினாலான சரக்கோலுடன் மேளதாளத்துடன் சுவாமி திந்தக்கதோம், ஐயப்ப திந்தக்கதோம் என ஆடிப்பாடிக் கொண்டு வாபர் சன்னதியை வலம்வந்து பின் பேட்டை சாஸ்தா கோயிலிலிருந்து தர்மசாஸ்தாவின் சன்னதி வந்தடைந்து தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி வழிபட்டு விட்டு பெருவழிப்பாதையாத்திரையை தொடர வேண்டும்.

    பேரூர்தோடு:
    பெருவழிப்பாதையில் முதலில் வரும் இடம் பேரூர்த்தோடு. இது ஓர் சிறிய ஆறு ஆகும். எருமேலியிலிருந்து சுமார் 2 மைல் கிழக்கே இருக்கிறது. பக்தர்கள் இந்த ஆற்றில் நீராடி, சிறிது இளைப்பாறி சுவாமியை வழிபட்டுத் தங்கள் பயணத்தை தொடரலாம்.

  • Sabari Malai Periyapadhai

    ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து சபரிமலை யாத்திரை செல்வார்கள். ஒரு காலத்தில், சபரிமலை ஐயப்பனை தரிசிக்க செல்ல எருமேலியிலிருந்து செல்லும் காட்டுப்பாதை மட்டுமே பயன்பட்டதாக கூறுவர். 

    இந்தப்பாதையில் சென்று ஐயப்பனை தரிசிப்பதே முறையானதாகும். எருமேலியில் ஆரம்பித்து சபரிமலை வரையில் 56 கி.மீ., தூரம் உள்ள இந்த பாதை தான் பெருவழிப்பாதை என அழைக்கப்படுகிறது. இந்த பெருவழிப்பாதை வழியாகச் சென்றால் உடலும், உள்ளமும் தூய்மையடையும். 

    பந்தளராஜா, ஐயப்பனைக் காணச் சென்ற வழியும் இதுவே. இந்தப் பாதை வழியே ஐயப்பனைத் தரிசிப்பதே சிறந்தது என பக்தர்கள் நினைக்கின்றனர்

  • Sabari malai 18 Steps

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரதான வழிபாடு படி பூஜையாகும். 18 மலைகளால் சூழப்பட்ட புண்ணிய சேத்திரமான சபரிமலைக்குப் போகும் முன்பாக சில முக்கிய கோவில்களில் தரிசனம் செய்து விட்டு போக வேண்டும் என்பது ஒரு ஐதீகம்.

    சபரிமலையில் இருமுடி சுமந்து செல்லும் பக்தர்கள் அனைவரும் 18 படியேறி ஐயப்பனை தரிசிப்பர். இந்த 18 படிக்கும் மகத்துவம் உண்டு. 18 வன தேவதைகள் 18 படியில் குடி கொண்டிருக்கின்றன. 18 தேவதைகளையும் படியில் ஆவாஹனம் செய்து அவர்களை பூஜிப்பதுதான் படி பூஜை.

    சபரிமலையில் பிரத்யேக வழிபாடு உதயாஸ்தமன பூஜை, எல்லா மாதங்களிலும் இப்பூஜை நடத்தப்படுகிறது. உதயம் முதல் அஸ்தமனம் வரை செய்யப்படும் பூஜைகளான 18 பூஜைகள் உஷ பூஜை முதல் அத்தாழ பூஜை வரை மொத்தம் செய்யப்படும் 18 பூஜைகள் உதயாஸ்தனமான பூஜை. அந்த 18 பூஜைகளையும் நடத்தும் பக்தர்கள் தரிசிக்கலாம்.

    இதனால் பிரத்யேக ஐஸ்வர்யம் கிடைக்கும். ஒரு நாளைக்கு மூன்று பூஜைகள் சபரிமலையில் செய்து வரப்படுகின்றன. உஷ பூஜை, உச்ச பூஜை, அத்தாழ பூஜை, இந்த மூன்று பூஜைகளும் சேர்ந்தது 18 பூஜைகள். இந்த பூஜைக்கு பக்தர்கள் முன்பாகவே பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு பூஜைக்கும் பிரத்யேக நைவேத்தயங்கள் உண்டு.
     
  • Sabari Malai Bakthargal Kootam

    மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, சனிக்கிழமை மாலை திறக்கப்பட்டது. கார்த்திகை மாதம் முதல்நாளான நேற்று சாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் குவிந்ததால் சபரிமலையில் கூட்டம் அலைமோதியது. தற்போது வரை 70,000 பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இரண்டாவது நாளாக இன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஐயப்பனை தரிசித்து செல்கின்றனர். வரும் நாட்களில் பக்தர்களின் வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு செய்ய வேண்டிய வசதிகள் குறித்து அதிகாரிகளுடன், தேவஸ்வம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

    உண்டியல், நெய் அபிஷேகம் உள்ளிட்ட இனங்களில் முதல் நாளான நேற்று 3 கோடியே 32 லட்சம் ரூபாய் வருமானம் என தேவசம் போர்டு தகவல் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு மண்டல பூஜை  முதல் நாள் வருமானத்தை விட 1.28 கோடி அதிகம்.. கடந்த ஆண்டை விட  அதிக பக்தர்களின் வருகையால் வருமானம் அதிகரித்துள்ளது.

  • Sabari Malai Thagavalgal

    சபரிமலை அய்யப்பன் கோவில் சுயம் புலிங்க பூமி, யாக பூமி, பலி பூமி, யோக பூமி, தபோ பூமி, தேவ பூமி, சங்கமம் பூமி என்ற 7 சிறப்புகளைக் கொண்டது.

    ஓம் சுவாமியே சரணம் அய்யப்பா என்றால் நம் பாவங்களை அழித்து ஞானத்தைப் பெற அய்யப்பனை சரண் அடைகிறோம் என்று பொருள்.

    சபரிமலைக்கு முதன் முதலில் மாலை அணிந்து செல்பவர்கள் 48 மைல் கொண்ட பெரிய பாதையில் செல்ல வேண்டும் என்பது மரபு.

    சபரிமலையை அடைந்ததும் சரணம் கூறியபடி செல்ல வேண்டும். உங்கள் கழுத்தில் உள்ள மாலை நெஞ்சில் அடிபடும் போதெல்லாம் அய்யப்பன் உங்கள் மனசாட்சியை தட்டிக் கொண்டே இருக்கிறார் என்பதை மறந்து விடாதீர்கள்.

    மகிஷியை வதம் செய்த மணிகண்டன் அவன் உடல் வளர்ந்து பூமிக்கு மேல் வரக்கூடாது என்பதற்காக கனமான கல்லை வைத்ததாக வரலாறு.

    இதை நினைவு கூறும் வகையில் அழுதையில் எடுத்த கற்களை கல்லிடும் குன்று பகுதியில் பக்தர்கள் போடுகிறார்கள்.

    நம்மிடம் உள்ள ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று அகந்தைகளையும் விரட்டவே சபரிமலை பதினெட்டாம் படியில் மூன்று கண்களை உடைய தேங்காயை உடைக்கிறார்கள்.

    பதினெட்டாம் படியில் ஏறும் போது பக்தர்கள் தங்கள் கோரிக்கையை அய்யப்பனிடம் வைக்க வேண்டும் என்பது ஐதீகமாகும். படியில் ஏறும் போது, நெரிசல் ஏற்படும் பட்சத்தில் உங்கள் கவனம் சிதறி விடக்கூடாது. எனவே பதினெட்டாம் படிகளில் இருமுடியுடன் ஏறும் போது, என்னதான் நெரிசல் ஏற்பட்டாலும் உங்கள் வேண்டுதலை விட்டு விடாதீர்கள். இது ரொம்ப முக்கியம்.

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் “தத்துவமசி” எனும் தத்துவம் எழுதப்பட்டுள்ளது. தத்துவமசி என்றால், “நீ எதை நாடி வந்தாயோ, அது நீயாக உள்ளாய்” என்று பொருள்.

    அய்யப்பனின் படையில் சேனாதிபதியாக இருந்த கடுத்த சுவாமி (கருப்பசாமி) பதினெட்டுப் படிக்கு அருகில் பிரதிஷ்டை செய்துள்ளார். அவருக்கு முந்திரி, திராட்சை, சுருட்டு படைத்து வழிபட்டால் தோஷங்கள் விலகி நன்மை உண்டாகும்.

    சபரிமலையில் உள்ள பஸ்ம குளத்தில் குளித்தால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    திருப்பதி லட்டு, பழனி பஞ்சாமிர்தம் போல சபரிமலை அரவனை பாயசம் புகழ்பெற்றது. அரிசி, நெய், சர்க்கரை, ஏலக்காய் கலந்து அரவனைப் பாயசம் தயாரிக்கப்படுகிறது.

    சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகர சங்கராந்தியன்று தோன்றும் ஜோதியை அப்பாச்சிமேடு, பம்பை, பெரியானை வட்டம், புல்மேடு ஆகிய இடங்களில் இருந்தும் காணலாம். புல்மேடு பகுதியில்தான் இந்த ஜோதி நன்றாக தெரியும்.

    சபரிமலையில் தினமும் அதிகாலை 3 மணிக்கு கோவில் திறந்ததும் சுப்ரபாதம் பாடப்படும்.

    அய்யப்பனுக்கு தினமும் இரவு 8 மணிக்கு புஷ்பாஞ்சலி நடத்தப்படும். பக்தர்களே பூக்களை கூடையில் எடுத்து வந்து கொடுக்கலாம்.

    அய்யப்பனுக்கு விபூதி, சந்தனம், பால், பன்னீர், 108 ஒரு ரூபாய் நாணயம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர் ஆகிய எட்டும் கொண்டு செய்யப்படும் அபிஷேகத்துக்கு அஷ்டாபிஷேகம் என்று பெயர்.

    சபரிமலை அய்யப்பன் உற்சவர் ஆண்டுக்கு ஒரு தடவை பம்பை ஆற்றுக்கு கொண்டு வரப்பட்டு ஆராட்டு உற்சவம் நடைபெறும். பிறகு அய்யப்பனை அலங்கரித்து பம்பா விநாயகர் கோவில் முன்பு மக்கள் தரிசனத்துக்காக 3 மணி நேரம் வைப்பார்கள். சபரிமலை வர இயலாத 50 வயதுக்குட்பட்ட பெண்கள் இந்த சமயத்தில் அய்யப்ப உற்சவரை தரிசிக்கலாம்.

    சபரிமலை செல்லும் வழியில் ஒரு பள்ளிவாசல் உள்ளது. பக்தர்கள் இங்கு சென்று தாங்கள் விரதத்தையும், பிரம்மச்சர்யத்தையும் முழுமையாக கடைப்பிடித்தோம் என்று உறுதி செய்துவிட்டுத்தான் சபரிமலைக்கு செல்லவேண்டும் என்பது ஐதீகம்.

    ராமபிரான் தனது தந்தைக்காகவும், மூதாதையர்களுக்காகவும் பம்பைக்கரையில் தர்ப்பணம் செய்ததை அடிப்படையாக கொண்டே இப்போதும் பக்தர்கள் தங்களது மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    பரசுராமர் தர்மசாஸ்தாவின் கோயிலை சபரிமலையில் அமைத்தார். அப்போது மேற்கூரையோ, சுற்றுப்புற சுவர்களோ இல்லை. சாஸ்தாவின் சிலையை மட்டுமே பிரதிஷ்டை செய்தார். இதன்பிறகு மறு அவதாரம் எடுத்த தர்மசாஸ்தா பூமியில் ஐயப்பன் என்ற பெயரில் வளர்ந்து, தர்மசாஸ்தாவின் விக்கிரகத்தில் ஐக்கியமாக தவம் செய்தார். அப்போது சின்முத்திரையுடன் அமர்ந்தார். ஆத்மா, பரமாத்மாவுடன் இணை வதை சுட்டிக்காட்டுவதே சின்முத்திரையின் தத்துவமாகும்.

    வாழும் காலத்தில் நல்லவனாய் வாழ்ந்துவிட்டால் மீண்டும் இந்த பிறவிப் பெருங்கடலை நீந்தவேண்டாம் என்ற அரிய தத்துவங்களை உணர்த்தும் தலம் சபரிமலை.

    சபரி மலையில் ஐயப்பன் தவமிருக்கும்போது தனது வஸ்திரத்தை முழங்காலை சுற்றி கட்டிக்கொண்டு அமர்ந்தார். தியானத்தில் இருக்கும்போது தன்னை வளர்த்த தந்தை வந்தால்கூட தியானத்திலிருந்து எழக்கூடாது என்ற நோக்கத்திலேயே எழ முடியாத நிலையில் குத்துக்காலிட்டு அமர்ந்துள்ளார் என்று சொல்வதுண்டு.

    ஐயப்பன் சிவனின் உடுக்கையை படுக்கவைத்த நிலையில் உள்ள பீடத்தில், சிவனைப்போல் தியான கோலத்திலும் (முக்தி தருவது), விஷ்ணுவை போல் விழித்த நிலையிலும் (காத்தல் தொழில்) அருள்பாலிப்பது மிகவும் விசேஷமாகும்.

    ஐயப்பன் தன் வலது கையில் பரமாத்மாவுடன் ஜீவாத்மா கலக்கும் முத்திரையையும், இடது கையில் ஜீவாத்மா பரமாத்மாவின் பாதத்தை சரணடையும் தத்துவத்தையும் குறிக்கிறார். அதாவது, மனிதன் இறைவனை சரணடைந்தால் அவனுடன் கலந்து விடலாம் என்பதை ஐயப்பனின் முத்திரை குறிக்கிறது. இந்த ஆசனத்தை சாதாரண மனிதர்கள் செய்வது கடினம்.

    ஸ்ரீகிருஷ்ண அவதாரத்திற்குப் பிறகு இறைவன் மனித அவதாரம் எடுத்தது ஸ்ரீ ஐயப்பன் அவதாரம் தான் என்று ஆன்மிகப் பெரியோர் கூறுவர்.

    குளத்து புழா அய்யப்பன் கோவிலுக்குச் சென்று வழிபட்டு குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்தால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

  • Sabari Malai Nadai Thirappu

    மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டுள்ளது. சுவாமியே சரணம் அய்யப்பா என்ற சரணகோஷம் முழங்க, சபரிமலை நடை திறக்கப்பட்டது. 

    கார்த்திகை முதல் தேதி துவங்கி 41 நாட்கள் தொடர்ச்சியாக பூஜை நடைபெறும் காலம் மண்டல காலம். இந்த பூஜைக்காக இன்று சபரிமலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி சரணகோஷம் முழங்க, நடை திறந்து விளக்கேற்றினார்.  நடைதிறப்பையொட்டி சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளுக்குப் பிறகு 18-ம் படிக்கு கீழே உள்ள நெருப்பு ஆழியில் கற்பூரம் வைத்து தீ மூட்டப்பட்டது. 

    நாளை காலை 3:00 மணிக்கு புதிய மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடை திறந்து விளக்கேற்றியதும் மண்டலகாலம் தொடங்கும். தந்திரி கண்டரரு மகஷே் மோகனரரு நெய்யபிஷேகத்தை தொடங்கி வைப்பார். பின்னர் கணபதி ஹோமம் நடைபெறும். தொடர்ந்து உச்சபூஜை, புஷ்பாபிஷேகம், தீபாராதனை, அத்தாழ பூஜைகள் நடைபெறும். மதியம் உச்சபூஜைக்கு முன்னோடியாக களபாபிஷேகம் நடைபெறும்.
     
  • Sabari Malai Online Ticket booking

    சபரிமலை ஐயப்பன் கோவில் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில், தரிசனத்துக்கான தேதி மற்றும் நேரத்தை ஆன்லைன் மூலம் பதிவுசெய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மகர விளக்கு பூஜைக்காக வரும் 16-ம் தேதி கோயில் நடை திறக்கப்படுகிறது. இதையொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள கேரள போலீஸார் முடிவு செய்துள்ளனர். 

    இதேபோல, தரிசனத்துக்கு ஆன்லைன் முறையில் முன்பதிவு செய்யும் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. www.sabarimalaq.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம். இதேபோல, நிலக்கல் பகுதியிலிருந்து பம்பை-க்கு பேருந்து சேவைக்கும் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதற்காக வலைதளத்தில் லாக்கின் செய்து தங்களது பெயர், வயது, முகவரி ஆகிய தகவல்களுடன் புகைப்படத்தையும் சேர்க்க வேண்டும்.

    ஒருவர் அதிகபட்சம் 10 டிக்கெட்டுகளை முன்பதிவுசெய்ய முடியும். டிக்கெட்டை பிரின்ட் அவுட் எடுத்து வர வேண்டும் என்று கேரள போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். முன்பதிவு செய்யும் பேருந்து டிக்கெட்டுகள், பம்பையிலிருந்து நிலக்கல் திரும்பி வருவதற்கு 48 மணிநேரத்துக்கு செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் வாகனங்கள், நிலக்கல் பகுதிவரை மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும், பக்தர்கள் கேஎஸ்ஆர்டிசி பேருந்து மூலம் பம்பை-க்கு செல்லலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.