Tag: Sabari Malai

  • Sabari Malai Nadai May 14 Thirappu

    சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வைகாசி மாத பூஜைக்காக, வரும் 14-ந் தேதி திறக்கப்படுகிறது. 

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் நடை திறக்கப்படும். மாதத்தின் முதல்  5 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதன்படி வைகாசி மாத பூஜைக்காக, சபரிமலை ஐயப்பன் கோவிலில் 14-ந் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 

    கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை காட்டுவார். நடை திறக்கப்படும் மே 14 ஆம் தேதி மற்ற சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது.

    15-ந் தேதி அதிகாலை நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளுடன் நெய் அபிஷேகம், உதயாஸ்தமன பூஜை, களபாபிஷேகம், சகஸ்ர கலச பூஜை உள்பட அனைத்து பூஜைகளும் நடைபெறும். 5 நாட்கள் நடைபெறும் சிறப்பு பூஜைகளுக்கு பின் 19-ந் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.

     பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு ஜூன் 11-ந் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். 12-ந் தேதி பிரதிஷ்டை சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும். மீண்டும் ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை ஜூன் மாதம் 15-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். 20-ந் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

  • Sabari Malai Nadai thirappu

    விஷூ பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது.  கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை காட்டினார். இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளுடன் நெய் அபிஷேகம், உதயாஸ் தமன பூஜை, களபாபிஷேகம், சகஸ்ரகலச பூஜை உள்ளிட்ட பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றது.

     
    ஏப்ரல் 15- ந் தேதி விஷூ பண்டிகையை முன்னிட்டு, அதிகாலை நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து பக்தர்களுக்கு விஷூக்கனி காண ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பாரம்பரிய முறைப்படி, அன்றைய தினம் ஐயப்ப பக்தர்களுக்கு தந்திரி, மேல்சாந்தி ஆகியோர் விஷூ கை நீட்டமாக நாணயங்களை வழங்குவார்கள். 10 நாட்கள் நடைபெறும் சிறப்பு பூஜைகளுக்கு பின் ஏப்ரல் 19-ந் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.

    சபரிமலை தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக கேரள அரசின் சார்பில் சிறப்பு பஸ்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நிலக்கல்லுக்கு இயக்கப்படுகிறது. நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு பக்தர்கள், மாற்று பஸ்களில் கொண்டுவரப்படுவார்கள். தனியார் வாகனங்களில் வரும் பக்தர்களின் வாகனங்களை பார்க் செய்ய நிலக்கல்லில் விசாலமான இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

    வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை மே மாதம் 14- ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். 19- ந் தேதி வரை 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.

  • Sabari malai Nadai thirappu

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழாவையொட்டி மார்ச் 11-ஆம் தேதி நடைதிறக்கப்படுகிறது. 

    சபரிமலையில் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் நாள் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி ஐயப்பனுக்கு விசே‌ஷ பூஜைகள் நடைபெறும். மேலும் சித்திரை விஷூ, பங்குனி உத்திரம் போன்ற விழாக்களும் சபரி மலை கோவிலில் சிறப்புடன் நடைபெறும்.

     இந்த ஆண்டு சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி வருகிற 11-ந்தேதி மாலை 5.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. சபரிமலை கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல் சாந்தி வாசுதேவன் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைக்கிறார்.

    அன்று சுவாமி ஐயப்பனுக்கு தீபாராதனை மட்டும் காட்டப்படும். வேறு பூஜைகள் எதுவும் நடைபெறாது. மறுநாள் அதிகாலை 4 மணிக்கு மீண்டும் கோவில் நடை திறக்கப்படும்.

    7.30 மணிக்கு பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம் நடைபெறும். தொடர்ந்து 10 நாட்கள் சபரிமலை கோவில் நடை திறந்திருக்கும்.

    அப்போது சுவாமி ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் உள்பட விசே‌ஷ பூஜைகள் நடைபெறும். படி பூஜை, உதயாஸ்தமன பூஜை உள்பட பல்வேறு பூஜைகளும் நடத்தப்படும்.

    13-ந்தேதி முதல் 20-ந் தேதி வரை தினமும் ஸ்ரீபூதப்பலி, உற்சவபலி போன்றவை நடைபெறும். 20-ந்தேதி இரவு 10 மணிக்கு சரங்குத்தியில் பள்ளிவேட்டையும், மறுநாள் 21-ந்தேதி காலை 11 மணி அளவில் பம்பை ஆற்றில் சுவாமி ஐயப்பனுக்கு ஆராட் டும் நடைபெறும். அன்று மாலை கொடி இறக்கப்படும். இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும்.
     

  • Sabari malai Nadai thirappu

    மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை பிப்ரவரி 12 ஆம் தேதி திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மலையான மாதத்தின் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜை, வழிபாடுகள் நடத்தப்படும். 

    இது தவிர மண்டல, மகர விளக்கு சீசன், விஷு மற்றும் ஓணம் பண்டிகை நாட்களிலும், கோவில் நடை திறக்கப்பட்டு பூஜை, வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நாட்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.

    இந்த நிலையில், மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி திறக்கப்படுகிறது. மாலை 5.30 மணிக்கு  மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துவார். நிகழ்ச்சியில், தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலை வகிக்கிறார். அன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் நடைபெறாது. பக்தர்களின் தரிசனத்திற்கு பின் இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும். மறுநாள் 13-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    5 நாட்கள் நடைபெறும் சிறப்பு பூஜைகளுக்கு பின் 17 ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு அத்தாழ பூஜைக்கு பின் அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு, கோவில் நடை அடைக்கப்படும்.

  • Sabari Malai Nadai Adaippu

    மகர விளக்கு பூஜைகளுக்கு பிறகு சபரிமலை நடை அடைக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு பூஜை  பிரசித்தி பெற்றது. மகரவிளக்கு பூஜை கடந்த 14ம் தேதி நடந்தது. பொன்னம்பலமேட்டில் தோன்றிய மகர ஜோதியை லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு ரசித்துள்ளனர். ஜனவரி 20ஆம் தேதி மண்டல, மகர விளக்கு காலம் நிறைவடைந்தது. இதனை அடுத்து சபரி மலையில் நடை அடைக்கப்பட்டுள்ளது. 

  • Thiruvabaran Oorvalam Started

    சபரிமலையில் உள்ள ஐ யப்பன் கோவிலில் மண்டல பூஜை, மகர விளக்கு திரு விழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. சபரிமலையில் கடந்த மாதம் 27-ந்தேதி மண்டல பூஜை விழா நிறைவடைந்தது. அடுத்து மகர விளக்கு பூஜைக்கான விழா தொடங்கியது.

    வருகிற 14-ந்தேதி மாலையில் மகர விளக்கு பூஜை நடக்கிறது. அன்று சபரிமலை பொன்னம்பல மேட்டில் ஐயப்பன் ஜோதி வடிவில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். இதை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை வருவார்கள்.

     சபரிமலையில் மகர விளக்கு பூஜை நடக்கும் போது ஐயப்பனுக்கு தங்க அங்கி சார்த்தி சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திரு வாபரணங்கள் பந்தளம் அரண்மனையில் இருக்கும். விழாக்காலங்களில் திருவா பரணங்கள் பந்தளம் அரண்மனையில் இருந்து சபரிமலைக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும்.

    அதன்படி மகர விளக்கு பூஜைக்காக திருவாபரணங்கள் ஊர்வலம் பந்தளத்தில் இருந்து இன்று தொடங்கியது. வலியகோயிக்கல் சாஸ்தா கோவிலில் இருந்து இந்த ஊர்வலம் தொடங்கியது.

    திருவாபரண ஊர்வலத்தில் பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதிகள் பங்கேற்பது வழக்கம். இந்த முறை சபரிமலையில் போராட்டங்கள் நடந்ததால் ஊர்வலத்திற்கு போலீசார் கடும் கட்டுப்பாடுகள் விதித் துள்ளனர். சபரிமலை போராட்டத்தில் பங்கேற்றவர்கள் யாரும் இதில் கலந்து கொள்ளக்கூடாது என்றும் கூறியுள்ளனர். இதனால் சபரிமலையில் பரபரப்பு ஏற்பட்டது. 
     

  • Sabari Malai Nadai Thirappu

    மகர விளக்கு பூஜைக்காக, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. 

    நடப்பு மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த நவம்பர் 16-ந்தேதி திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வந்தது. மண்டல பூஜை நேற்று முன்தினம் நடந்தது. இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

    மகர விளக்கு பூஜையை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்பட்டது.  மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்துவைத்தார். தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. இரவு 11 மணிக்கு நடை சாத்தப்பட்ட பின் கோவிலை சுத்தம் செய்யும் பணி நடைபெறும்.

    31-ந்தேதி (திங்கள்கிழமை) அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளான நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய்யபிஷேகம் போன்றவை நடைபெறும். பிரசித்திப்பெற்ற மகர சங்கிரம பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் ஜனவரி 14-ந்தேதி மாலையில் நடைபெறுகிறது.

    இதையொட்டி, மகர விளக்கு தினத்தில் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் வருகிற 12-ந் தேதி பந்தளம் வலிய கோயிக்கல் கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது. முன்னதாக 11-ந்தேதி அம்பலப்புழை மற்றும் ஆலங்காடு ஐயப்ப பக்தர் குழுவினரின் எருமேலி பேட்டை துள்ளல் நடைபெறும்.

    16-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை இரவு 7 மணிக்கு படி பூஜை நடைபெறும். 20-ந்தேதி பந்தளம் கொட்டாரம் ராஜ பிரதிநிதியின் தரிசனத்திற்கு பின் கோவில் நடை அடைக்கப்படும்.