Tag: Murugan

  • Palani murugan

     தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு நான்கு விதமான அபிஷேக பொருட்கள் மட்டும் தான் உபயோகிக்கபடுகிறது. அவை, நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி என்பவை. பன்னீர் மார்கழி மாதத்தில் மட்டும் உபயோகபடுத்தபடுகிறது. இவையில் சந்தனம், பன்னீர் தவிர மற்றவை எல்லாம் தண்டாயுதபாணியின் சிரசில் வைத்து, உடனே அகற்றபடுகிறது. முடி முதல், அடி வரை அபிஷேகம் என்கிற முழு அபிஷேகம் சந்தனத்துக்கும், பன்னீரும் மட்டும் தான். இதில் சிரசுவிபூதி என்பது சித்தர் உத்தரவால் பக்தர்களுக்கு வழங்க படுகிற ஒரு பிரசாதம். கிடைப்பது மிக புண்ணியம்.

    ஒரு நாளைக்கு ஆறு முறை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யபடுகிறது.

    இது ஐந்து முதல் ஏழு நிமிடத்துக்குள் முடிந்துவிடும்.

    அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்துவிட்டால், பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ, பூக்களால் அர்ச்சனை செய்வதோ கிடையாது.

    இரவில் முருகனின் மார்பில் மட்டும் வட்ட வடிவில் சந்தன காப்பு சார்த்தபடுகிறது. விக்ரகத்தின் புருவங்களுக்கிடையில் ஒரு பொட்டு அளவுக்கு சந்தானம் வைக்க படும். முன் காலத்தில் சந்தன காப்பை முகத்திலும் சார்த்தி கொண்டிருந்தனர். பின்னர் இந்த முறை மாற்றப்பட்டது.

    தண்டாயுதபாணி விக்ரகம் மிகுந்த சூடாக இருக்கும். ஆதலால் இரவு முழுவதும், அந்த விக்கிரகத்திலிருந்து நீர் வெளிப்படும். இந்த நீரை அபிஷேக தீர்த்ததுடன் கலந்து, காலை அபிஷேகம் நடக்கும் போது, அங்கு இருக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகம் செய்கிறார்கள்.

    தண்டாயுதபாணி சிலையில், நெற்றியில் ருத்ராக்ஷம், கண், மூக்கு, வாய், தோள்கள், கை, விரல்கள் போன்றவை மிக அற்புதமாக உளியால் செதுக்கபட்டது போல் தெளிவாக இருக்கும். இது போகரின் கை வண்ணம்.

    அந்த சிலையை சுற்றி எப்போதும் ஒரு வித சுகந்த மணம் (இதுவரை ஒரு போதும் வெளியே உணர்ந்திராத) பரவி நிற்கும்.

    இந்த சிலையை செய்ய போகர் எடுத்துக்கொண்ட நாட்கள் – ஒன்பது வருடம்.

    அம்பாள், முருகர், அகத்தியர் இவர்களுடைய உத்தரவுக்கு பின் தான் போகர் இப்படி ஒரு சக்தி வாய்ந்த சிலையை செய்ய முயற்ச்சியே எடுத்தார்.

    இதற்காக 4000 மேற்பட்ட மூலிகைகளை பல இடங்களிலும் சென்று தெரிவு செய்து கொண்டு வந்தார்.

    81 சித்தர்கள் இந்த நவபாஷாணத்தை போகர் சொற்படி தயார் பண்ணினர்.

     இது பொது நல எண்ணத்துடன் செய்யப்பட்டதால் காலமும், இயற்கையும் தன் சீற்றத்தை குறைத்துக்கொண்டு சித்தர்களுக்கு உதவி செய்ததாக ஒரு தகவல்.

    அகத்தியர் உத்தரவால், ஒரு அசுரன், இரு மலைகளை காவடி போல் சுமந்து பொதிகை நோக்கி கொண்டு செல்ல, முருகர் அவனை தடுத்து நிறுத்தி, போரில் தோற்கடித்து, இரண்டு குன்றையும் இப்போது இருக்கும் இடத்தில் வைக்க செய்தார் என்று புராண தகவல்.

    போகர், இகபரத்தில் இருக்கும் போது தன் மனைவிக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற, முருகனை மேற்கு திசை நோக்கி பிரதிஷ்டை செய்தார். இதனால், மலை நாட்டில் உள்ளவர்களுக்கு பழனி முருகன் குல தெய்வம் ஆனார். 

    கல்லில் சிலை செய்து பிரதிஷ்டை செய்து கட்டிய எத்தனையோ கோயில்கள் சிதிலமடைந்து போயும், நவபாஷணத்தில் சிலை செய்த இந்த கோயில் மேலும் மேலும் வளர்ந்து கொண்டிருப்பதன் காரணம் … சித்தர் தான் என்று பலரின் எண்ணம்.

    தண்டாயுதபாணி சிலைக்கு இடது பக்கத்தில் ஒரு சின்ன மரகத லிங்கம் உள்ளது. அவரை தரிசிக்க வலதுபக்கமாக சென்றால், தீபம் காட்டினால் மட்டும் தான் அதை பார்க்க முடியும்.

    பழனியில் இரண்டு மரகத லிங்கம் உள்ளது. ஒன்று முருகர் சன்னதியில், இன்னொன்று போகர் சமாதியின் மேல். இரண்டுமே போகர் பூஜை செய்ததாக தகவல்.

    திருவாவினன்குடி சிறக்கும் குருபரா குமரா குழந்தை வேலாயுதா
    சரவணை சண்முகா சதாசிவன் பாலா இரவலர் தயாபரா 
    ஏழைபங்காளா பரமேஸ்வரிக்குப் பாலா தயாபரா 
    வரமெனக் (கு) அருள்வாய் வாமனன் மருகா.

    ஸ்ரீ பழநி மலை முருகப் பெருமானுக்கு அரகரா.. அரகரா.. அரகரா.. அரோகரா..

  • Murugan Mandiram

    ஓம் முருகா, குரு முருகா, 

    அருள் முருகா, ஆனந்த முருகா

    சிவசக்தி பாலகனே 

    ஷண்முகனே சடாக்ஷ்ரனே

    என் வாக்கிலும் நினைவிலும் 

    நின்று காக்க

    ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க சுவஹா

    முருகனின் ஆறெழுத்து  மந்திரப் பிரயோகம்….

    சகல ஜன வசீகரமாம் சஹாரத்தாலே

    தன முதல் அழைத்து வரும் ரஹாரத்தாலே

    பகை பிணி நோய் தீர்த்து வைக்கும் ஹகாரத்தாலே

    பகைத்தவரைக் கொல்ல வைக்கும் ணகாரத்தாலே

    சகலமுமே மோஹிக்கும் பகாரத்தாலே

    சகலரையும் ஸ்தம்பிக்கும் வகாரத்தாலே

    அகங்குளிர ஓதிய ஆறெழுத்தின் பெருமை

    ஆரறிவார் மகிதலத்தில் சொன்னேன் கேளே

    மேற்கண்ட  மந்திரம் அகஸ்தியர்  அருளியது  

    எந்த காரியத்திற்காக கிளம்பும் முன் இதை ஜெபித்து 

    திருநீறு  அணிந்து செல்ல கரிய வெற்றி உண்டாகும்.

  • Sivan Amman Murugan Thai Poosam

    சந்திரன் கடகத்தில் தனது சொந்த வீட்டில் ஆட்சி பலத்துடன் பூச நட்சத்திரத்தில் இருந்து மகர ராசியில் இருக்கும் சூரியனை பார்க்கும் நாளே தைப்பூசம். சக்தியின் வெளிப்பாடும், தெய்வாம்சமும் பொருந்திய காலம் தை மாதம். தைப்பூச நாள் சிவன், அம்பாள், முருகனுக்கு உகந்த நாளாகும். 

    தினசரி கோயிலுக்கு சென்றாலும், செல்லாவிட்டாலும் வீட்டில் காலை, மாலை இரு வேளையும் காமாட்சியம்மன் விளக்கு அல்லது குத்துவிளக்கு ஏற்றி வைத்து அந்த ஜோதியை வணங்குவது பல காலமாக உள்ள சாஸ்திர சம்பிரதாய வழக்கம். ஆலயத்தில் இறைவனை தரிசித்த பின்னர் கற்பூர ஜோதியை வணங்கி கண்களில் ஒற்றிக் கொள்வது ஆலய வழிபாடுகளின் முக்கிய அம்சம்.

    தைப்பூசத்தின் சிறப்புகள் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் சிவபெருமான் தனியாக நடனம் புரிவார்.நடன நிலையில் உள்ள சிவனை, நடராஜர் என வணங்குகிறோம். தைப்பூசத்தன்று உமாதேவியுடன் இணைந்து நடனம் ஆடுகிறார். இந்த நிலையை உமா மகேஸ்வரர் என்றழைக்கிறோம். ஆகவே இந்த தைப்பூச திருநாள் சிவசக்திக்கு உகந்த நாளாகும். 

    தேவ குருவான பிரகஸ்பதிக்கு பூசம் நட்சத்திரம் என்பதால் அன்றைய தினம் குரு வழிபாடு செய்வதும் சிறப்பு. பூச நட்சத்திர நாள் காவடி பிரியன் கந்தனுக்கு மிகவும் விசேஷமான நாள். இந்நாளில்தான் முருகப் பெருமான் வள்ளியை மணமுடித்தார். தாரகாசுரனை வதம் செய்ய தாய் பார்வதியிடம் வேல் வாங்கிய நாள். இந்நாளில் அனைத்து முருகன் ஸ்தலங்களிலும் விசேஷ பூஜைகள் நடைபெறும். 

    தைப்பூச நாளை காணிக்கை செலுத்தும் நாளாக முருக பக்தர்கள் கொண்டாடுகிறார்கள். பழங்கள், நெல், காய்கறிகள் எது விளைந்தாலும் அதை இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்பதற்காகவே காவடிகளில் அவற்றை வைத்து எடுத்து செல்வார்கள்.இந்த நாளில் உடலை வருத்தி நடைபயணம் மேற்கொண்டு முருகப் பெருமானை தரிசிப்பார்கள். தமிழகத்தில் உள்ள அறுபடை வீடுகளிலும், மருதமலை, சிக்கல், வயலூர், குன்றக்குடி, வல்லக்கோட்டை, திருப்போரூர், குன்றத்தூர், வடபழனி என அனைத்து முருகன் கோயில்களிலும் அபிஷேக ஆராதனைகள் விமரிசையாக நடைபெறும். 
     

  • Murugan Gayathri mandiram

    ஒருவரின் அறிவையும் ஆற்றலையும் ஒளிரச்செய்யும் முருகன் காயத்ரி மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் 108 முறை என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) ஜெபிப்பதன் பலனாக முருகப்பெருமானின் அருள் பறி பூரணமாக கிடைக்கும். அதோடு குரு பகவானின் அருளும் கிடைக்கும். இந்த மந்திரத்தை தினமும் ஜபிக்க முடியாதவர்கள் செவ்வாய் கிழமைகளில் ஜெபிக்கலாம். இந்த மந்திரத்தை தினமும் 108 முறை என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) ஜெபிப்பதன் பலனாக முருகப்பெருமானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

    முருகப்பெருமான் காயத்ரி மந்திரம்
    முருகப்பெருமான்
    ஓம் தத்புருஷாய வித்மஹே
    மஹாஸேனாய தீமஹி
    தன்ன: ஷண்முக ப்ரசோதயாத்

    பொது பொருள்: தேவர்களுக்கெல்லாம் சேனாதிபதியாக விளங்கும் மகா சேனாதிபதியாகிய முருகப்பெருமானே உங்களை வணங்குகிறேன். அடியேனை ஆட்கொண்டு என்னையும் வழி நடத்த உங்களை வேண்டுகிறேன்.

  • Thiruthani murugan koil Thiruppadi Thiruvizha

    புத்தாண்டை முன்னிட்டு திருத்தணி முருகன் கோயிலில், நாளை காலை 8 மணி முதல் திருப்படி திருப்புகழ் திருவிழா தொடங்கி, மறுநாளான ஜனவரி 1 ஆம் தேதி தேதி காலை வரை தொடா்ந்து திருப்புகழ்பாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    ஒரு வருடத்தை குறிக்கும் விதமாக திருத்தணி முருகபெருமான் கோயிலில் 365 திருப்படிகள் உள்ளன. ஆங்கில புத்தாண்டு தொடங்கும் நாளுக்கு முதல் நாள் இங்கு படிப்பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி திருத்தணி முருகன் மலைக்கோயிலில் நடப்பாண்டுக்கான திருப்படித் திருவிழா நாளை காலை 8 மணிக்கு சரவணப்பொய்கை அருகே திருப்படி பூஜையுடன் தொடங்குகிறது. அப்போது பஜனை குழுவினரை வரவேற்று பக்தி பாடல் நிகழ்ச்சி தொடங்கப்படுகிறது.

    தொடா்ந்து, நூற்றுக்கணக்கான பஜனை குழுவினா், மறுநாள் ஜனவரி 1-ஆம் தேதி காலை வரை தொடா்ந்து பக்தி பாடல்களைப் பாடியவாறு மலைக் கோயிலுக்குச் சென்று வழிபடுவா். மேலும், 31-ஆம் தேதி நண்பகல் 11 மணிக்கு உற்சவா் வெள்ளி மயில் வாகனத்தில் மாட வீதியில் திருவீதியுலா வருகிறார்.

    ஜன.1-ஆம் தேதி புத்தாண்டு சிறப்பு தரிசனமும், இரவு 8 மணிக்கு உற்சவா் வெள்ளி நாக வாகனத்தில் திருவீதியுலா வந்து அருள்பாலிக்கிறார். 

  • Pazhanai murugan dec 2 kumbabishegam

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3 ஆம் படைவீடான பழனி முருகன் கோவிலில் வரும் டிசம்பர் 3 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

    புகழ்பெற்ற பழனி முருகன் கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்த கோவிலில் கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். ஆனால் 12 ஆண்டுகள் நிறைவடைந்தும் பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் நடைபெறவில்லை. 

    இந்தநிலையில் பக்தர்களின் கோரிக்கைக்கு இணங்க வருகிற 2 ஆம் தேதி குமபாபிஷேகம்  நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கோவில் அதிகாரி ஒருவர் கூறுகையில், வருகிற 2-ந்தேதி பாலாலய பூஜை நடைபெற்று, அதன்பின்பு மலைக்கோவிலில் உள்ள அனைத்து இடங்களிலும் திருப்பணிகள் தொடங்கப்படும்.

    இந்துசமய அறநிலையத்துறை திருப்பணிக்குழு ஸ்தபதிகள், பொறியாளர்கள், தொல்லியல் துறை அதிகாரிகள் கோவிலில் திருப்பணிகளை மேற்கொள்வார்கள் என்றார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ஜெயச்சந்திர பானு ரெட்டி, துணை ஆணையர் செந்தில்குமார் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர். 

  • Thiruthani murugan pushpanjali

    திருத்தணி, முருகன் கோயில் கந்த சஷ்டி விழாவில் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ஆறுமுக சுவாமியை வழிபட்டனர்.

    திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ள ஆறுபடை வீடுகளில் 5ஆம் படைவீடாக திகழும் திருத்தணி முருகன் கோயில் கந்த சஷ்டி விழா கடந்த 28 ஆம் தேதி தொடங்கி 7 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. 

    ஆறுபடை வீடுகளில் முருகன் கோவில்களில் கடைசி நாளான இன்று சூரசம்ஹாரம் நடைபெறும், ஆனால் திருத்தணி கோவிலில் மட்டும் புஷ்பாஞ்சலி நடக்கும். காலை 11 மணிக்கு மலைக்கோயில் உள்ள மூலவ முருகப்பெருமானுக்கு தங்க கவசமும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்று சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. 

    மாலை 4.30 மணிக்கு முருகன் கோயிலின் உபக்கோயிலான அருள்மிகு ஸ்ரீ சுந்தர விநாயகர் திருக்கோயில் இருந்து பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட மலர்களை கோயில் ஊழியர்கள் மற்றும் முருக பக்தர்கள் ஊர்வலமாக சரவணப்பொய்கை வழியாக மலைக்கோயிலுக்கு கொண்டுவந்தனர். 

    பின்னர் காவடி மண்டபத்தில் எழுந்தருளியிருந்த சண்முக பெருமானுக்கு அனைத்து வகையான மலர்களால் புஷ்பாஞ்ச- மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. விழாவில் ஆந்திரா, சென்னை, அரக்கோணம், திருவள்ளூர், திருத்தணி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.
     

  • World biggest murugan temple

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே புத்திரகவுண்டன்பாளையத்தில் 145 அடி உயரத்தில் முருகன் சிலை மிக பிரமாண்டமான அளவில் கடந்த 3 ஆண்டுகளாக மேலாக கட்டும் பணி உருவாகி வருகிறது இந்த சிலை மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள  பத்து மலை முருகன் கோயில் உள்ளது அதன் நுழைவாயிலில் உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை என்று அமைக்கப்பட்டுள்ளது அதன் உயரம் 140 அடி ஆகும்.

    இந்நிலையில் சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே புத்திரகவுண்டன்பாளையத்தில்  உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை அமைக்கும் பணி கடந்த மூன்றாண்டு காலமாக நடைபெற்று வரும் நிலையில் இந்த முருகன் சிலை  145 அடி உயரம் கொண்டு உள்ளது சிலை மட்டும் 126 அடியும் பீடத்துடன் சேர்ந்த மொத்தம் 145 அடியில் உலகில் மிக உயரமான முருகன் சிலை சிலையாக இது அமைகிறது என்று கோவில் சிலையை நிறுவி வரும் ஸ்ரீதர் என்பவர் தெரிவித்தார் 

    கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த பத்துமலை முருகன் சிலையை ஆரம்பித்து அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது அடுத்த ஆண்டு அதாவது 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார் 

    மலேசியாவில் உள்ள முருகன் சிலையை வடிவமைத்த தமிழகத்தைச் சேர்ந்த திருவாரூர்  தியாகராஜன் சபதி தலைமையிலான குழுவினர் இந்த சிலையையும் தற்போது வடிவமைத்து முழுவீச்சில் வேலைப்பாடு செய்து வருகின்றனர் 

    சேலம் உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் வாழப்பாடி அருகே புத்திரகவுண்டன்பாளையம் இந்த சிலை கோவில் அமைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது

  • Murugan Mandiram

    மனதில் ஏற்படும் சஞ்சலங்கள் நீங்க, முருகப்பெருமானுக்கு உகந்த இந்த மந்திரத்தை தினமும் அல்லது முருகனுக்கு உகந்த நாட்களில் சொல்லி வரலாம்.

    மனோவியாதியை குணமாக்கும் முருகப்பெருமான் மந்திரம்
    வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயமில்லை என்பார்கள். மனதில் ஏற்படும் சஞ்சலங்கள் நீங்க, முருகப்பெருமான் கை வேலை வணங்கி வரலாம்.

    ஸக்தே பஜே த்வாம் ஜகதோ ஜனித்ரீம்

     ஸுகஸ்ய தாத்ரீம் ப்ரணதார்த்திஹந்த்ரீம்
    நமோ நமஸ்தே குஹஹஸ்தபூஷே
    பூயோ நமஸ்தே ஹ்ருதி ஸன்னிதத்ஸ்வ

    பொருள் :

    ஓம் சக்தியான வேலே, இவ்வுலகத்திற்கு தாயானவளே, அனைத்து சுகத்தையும் கொடுப்பவளே, உன்னை வணங்குபவரின் மனோவியாதியை போக்குபவளே உன்னை ஆராதிக்கிறேன்.

  • Aadi Pooram Thiruthani murugan Palabishegam

    திருத்தணி முருகன் கோவிலில் ஆடிப்பூரத் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால் காவடி  புஷ்ப காவடி மயில் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர் . பக்தர்கள் முன்னிலையில் பாலபிஷேகம் நடைபெற்றது.

    ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாகத் திகழும் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் ஒவ்வொரு வருடமும் ஆடிப்பூரத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.

     சென்னை வண்ணாரப்பேட்டை, வியாசர்பாடி, ராயபுரம், கல்மண்டபம் என பல்வேறு பகுதியிலிருந்து ஒரு நாள் முன்னதாகவே திருத்தணி முருகன் கோயிலின்  அடிவாரத்தில் தங்கி இன்று அதிகாலை 500 க்கும் மேற்பட்டோர் பால் குடங்களுடன் மலைக்கோயில் வழியாக முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம் செய்ய பால்குடங்கள் எடுத்து வந்தனர்.

    காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை தாயாருடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.  பக்தர்கள் எடுத்து வந்த பால் குடங்கள் பக்தர்கள் முன்னிலையில் பால் அபிஷேகம் செய்யப்பட்டது  மேலும் இன்று அதிகாலை மூலவர் முருகப்பெருமானுக்கு பால் பழம் பஞ்சாமிர்தம் தேன் இளநீர் ஆகிய பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு தங்க கவச அலங்காரம் முருகப்பெருமானுக்கு செய்யப்பட்டது . 

    இதில் சென்னையை சேர்ந்த பக்தர்கள் மயில் காவடி பால் காவடி புஷ்ப காவடி உடல் முழுவதும் அலகு குத்திக்கொண்டு ஆணி செருப்பு என்று சொல்லப்படும் பாதரட்சை அணிந்துகொண்டு மலைக் கோயிலை வலம் வந்தனர் .