Tag: பகவான்

  • 2016-08-11-10-44-32

    நீடாமங்கலம் சதுர்வேத விநாயகர் மகாமாரியம்மன் கோயிலில் ஆடி கடைவெள்ளி பெருவிழா ஆகஸ்டு 12 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

    இதையொட்டி, மகா மாரியம்மனுக்கு பக்தர்கள் பால்குடம் எடுப்பர்; சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். பிற்பகலில் அன்னதானமும், மாலையில் சுமங்கலி திருவிளக்கு பூஜையும் நடைபெற உள்ளது. .
    ஆகஸ்டு 12 ஆம் தேதி காலை 9 மணியளவில் பால்குடமும் மதியம் 12 மணியளவில் அபிஷேக ஆராதனையும் அன்னதானமும் மாலை 5 மணியளவில் சுமங்கலி திருவிளக்கு பூஜையும் நடைபெறவுள்ளது. சிறப்பு நாகசுர இன்னிசையுடன் அன்றிரவு அம்பாள் வீதியுலா காட்சியும் நடைபெறவுள்ளது.
    விழா ஏற்பாடுகளை நீடாமங்கலம் மகாமாரியம்மன் ஆலய நலச் சங்கத்தினர் மற்றும் நகரவாசிகள் செய்துள்ளனர்.

  • 2016-08-11-08-45-19

    திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சுந்தரர் குருபூஜை நடைபெற்றது.

    திருக்கோயிலில் சண்முகர் சன்னதியில் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் ஆகிய நால்வரின் சன்னதிகள் உள்ளன. ஆடி சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, சுந்தரர் குருபூஜை நடைபெற்றது.

    இதையொட்டி, காலையில் நால்வருக்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, சுந்தரர் சிறப்பு அலங்காரத்தில் கோயில் கம்பத்தடி மண்டபத்தை 3 முறை வலம் வந்து, உற்சவர் சன்னதியில் சேர்த்தியானார். விழா ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் செய்திருந்தது.

  • Ninaitha Kariyam Idera

    சிறுவாபுரி கோயில்களின் பெருமைகள் பல. அதில் முருகம்மையார் கை தழைக்கச் செய்தது, தேவர் இருந்து அமுதுண்டது, தேவேந்திர பட்டணம் கிடைத்தது, இந்திரனுக்கு பதவி உயர்வு கிடைத் தது, லவன், குசன் ராமனின் அசுவத்தை கட்டிய இடம், மரகதப் பச்சை கல்லில் செய்யப்பட்ட தெய்வத் திருவுருவங்கள் அமைந்த தலம் என 12 சிறப்பம்சங்களை கொண்டது இத்திருத்தலம். 

    சிறுவாபுரிக்கு வரும் பக்தர்கள் வேண்டியபடி வீடு, வாகனம், தொழில், திருமணம் என குடும்பம் சிறக்க சிங்காரவேலன் அருள்பாலிக்கிறார். 6 வாரங்களுக்கு செவ்வாய் தோறும் சிறுவாபுரியில் உள்ள ஆறுமுருகனை வணங்கினால் நினைத்த காரியம் ஈடேறுமென பக்தர்கள் கூறுகின்றனர்.

    சென்னைக்கு வடமேற்கே சென்னை,கொல்கத்தா நெடுஞ்சாலையில் சிறுவாபுரி பாலசுப்ரமணிய பெருமான் ஆலயம் உள்ளது. வால்மீகி முனிவரின் ஆசிரமத்தில் வளர்ந்து வந்த ராமனின் குழந்தைகளான லவனும், குசனும் ராமனின் குதிரையை கட்டிப்போட்டனர். ராமனே நேரில் வந்து சிறுவர்களுடன் போரிட்டு வென்று குதிரையை மீட்டு சென்றதாக ராமாயணம் கூறுகிறது. இப்படி ராமனிடம் லவனும் குசனும் சண்டை செய்த இடமே சிறுவாபுரி என்பது வரலாறு.

  • 2016-08-10-14-25-21

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆன்லைன் மூலம் தங்கும் அறைகள் முன்பதிவுக்கு இனி முன் பணம் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி அறை வாடகை மட்டும் செலுத்தினால் போதும். இந்த திட்டம் அகஸ்டு 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

    திருமலைக்கு வரும் பக்தர்களின் வசதிகளை மேம்படுத்தும்விதமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதில் 4வது யாத்ரீக சமுதாயக்கூடத்தில் பக்தர்கள் தங்கவும், தங்களது உடமைகளை அங்கேயே வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும், வரும் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் தங்கும் அறைகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கும், நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கும், அறை முன்பதிவின்போது, செலுத்தப்படும் முன்பணம் ரத்து செய்யப்படுகிறது. அதன்படி, அவர்கள் அறைவாடகை மட்டும் செலுத்தினால் போதும்.

  • 16-60

    காளஹஸ்தி சிவன் கோயிலில் காணிக்கை தலைமுடி 16 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது.
    காளஹஸ்தீஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்கள், தங்கள் தலைமுடியை காணிக்கையாகச் செலுத்தி வருகின்றனர். பக்தர்கள் செலுத்தும் தலை முடியைப் பாதுகாத்து ஆண்டுக்கு ஒருமுறை கோயில் நிர்வாகம் ஒப்பந்தப்புள்ளியுடன் கூடிய ஏலம் மூலம் விற்பனை செய்து வருகிறது.

    அதன்படி கடந்த 1.4.2016 முதல் வரும் 31.3.2017 வரையிலான காலத்துக்கு உள்பட்ட தலைமுடி விற்பனைக்கான ஒப்பந்தப்புள்ளியுடன் கூடிய ஏலத்தை கோயில் நிர்வாகம் கடந்த சனிக்கிழமை நடத்தியது.

    அதில் சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ரூ. 16.60 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது.
    ஆனால் இது கடந்த ஆண்டை விட 17 லட்சம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு சுமார் 33 லட்ச ரூபாய்கு ஏலம் விடப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ஏலத்தில் கலந்து கொண்ட அனைத்து நிறுவனங்களும் 16 லட்சத்துக்கு குறைவாகவே கேட்டிருந்தன. சென்னையை சேர்ந்த நிறுவனம் ஒன்று ரூ.16.60 லட்சத்துக்கு ஏலம் கேட்டிருந்ததால் அந்நிறுவனத்துக்கு டென்டர் வழங்கப்பட்டது.

  • 2016-08-10-05-56-54

    ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹேடன், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டர்.

    தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் சென்னை, மதுரை உள்ளிட்ட 8 நகரங்களை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ளது. இந்தத் தொடரை பிரபலப்படுத்தும் வகையில், ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹேடன் மதுரை சென்றார்.

    மதுரை கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மற்றும் இளம் கிரிக்கெட் வீரர்களுடன் கலந்துரையாடிய அவர், மதியம்.12.30 மணியளவில், மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்றார்.

    கோயிலுக்கு வந்த அவருக்கு அர்ச்சகர்கள் மற்றும் கோயில் நிர்வாகிகள் மாலை அணிவித்து வரவேற்பளித்தனர். பின்னர் கோயிலுக்கு உள்ளே ஹேடனுக்காக, சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து கோயில் முழுவதையும் ஹேடன் சுற்றிப் பார்த்தார். அர்ச்சகர்கள், ஹேடனுக்கு மீனாட்சி அம்மன் கோயிலின் பெருமைகளை விளக்கிக் கூறினர்.

  • 2016-08-10-05-28-03

    ஆகஸ்டு 12 ஆம் தேதி வெள்ளி கிழமை சுமங்கலிகளுக்கான மிக முக்கியமான பண்டிகை வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஆவணி மாதம் கொண்டாடப்படும் இப்பண்டிகை இந்த ஆண்டு ஆடி மாதம் வருவதே ஒரு அபூர்வம் தான். இந்த விரதம் மாமியார் தொடங்கிக் கொடுக்க மருமகள் தொடர்ந்து செய்வது வழக்கம். பின்னர் அந்த மருமகள் எடுத்துக் கொடுக்க அடுத்து வரும் மருமகள் தொடர்ந்து பூஜை செய்ய வேண்டும். அவரவர்களும் தனித்தனியே தாயார் திருமுகம் வைத்துக்கொள்ள வேண்டும்.

    கணவனுக்கு நீண்ட ஆயுள் வேண்டியும், குழந்தைகள் பிறந்து குலம் தழைக்கவும், அஷ்ட ஐஸ்வரியம் கிடைக்கவும் வேண்டி சுமங்கலிப் பெண்கள் இப்பண்டிகையைக் கொண்டாடுவார்கள். அன்றைய தினம் பூஜையில் வைத்த மஞ்சள் சரடைப் பூஜைக்காக இல்லம் வரும் அனைத்துப் பெண்களும் கட்டிக் கொள்வார்கள்.
    இந்த விரதம் பிறந்த கதை என்ன…. மகத ராஜ்ஜியத்தில், குணதினபுரம் என்ற ஒரு நகரம் இருந்தது. அங்கு சாருமதி என்கிற பெண்ணும் அவளது கணவனும் வசித்துவந்தனர். அவள் தன் குடும்பத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டவள்.

    சிறந்த பக்தி உடைய அவளின் கனவில் வந்த லட்சுமி, தன்னை வரலட்சுமியாக வழிப்பட்டால் அவளுக்கு அனைத்து செல்வங்களும் கிடைக்கும் என்று கூறினாள். தாயாரே எடுத்துக் கொடுத்ததாக எண்ணிய சாருமதி அதன் பிறகு வெள்ளிக்கிழமை அன்று வரலட்சுமி அம்மனை வழிபட்டாள். வரலட்சுமியை வழிபட்டு அவளின் வாழ்வின் தரம் உயர்வதைக் கண்ட பிற பெண்களும், சாருமதியிடம் தங்களுக்கும் இப்பூஜையை எடுத்துத் தருமாறு கூறி, அதன் பின்னர் வரலட்சுமி விரதத்தை அவர்களும் கடைப்பிடித்தனர்.

    வரலட்சுமி விரதத்தன்று வரலட்சுமி தாயாரை மனதால் வேண்டினால், ஆதி லட்சுமி, தனலட்சுமி, தானியலட்சுமி, வித்யா லட்சுமி, வீர லட்சுமி, கஜ லட்சுமி, சந்தான லட்சுமி, விஜய லட்சுமி ஆகிய அஷ்டலட்சுமிகளையும் வேண்டிய பலன் ஒரு சேரக் கிடைக்கும் என்பது ஐதீகம். இவர்கள் அனைவரும் வரலட்சுமி விரதத்தன்று ஒரே தாயாரான வரலட்சுமியில் ஐக்கியம் ஆவதாக நம்பிக்கை.

    வரலட்சுமி விரதம் வழிபடும் முறை….. அழகிய தாம்பாளத்தின் மீது தலை வாழை இலை இட்டு அதன் மீது அரிசி பரப்ப வேண்டும். பின்னர் இதன் மீது கலசம் வைக்க வேண்டும். இக்கலசத்தினுள் கால் பங்கு அரிசியை நிரப்பி, காதோலைக் கருக மணி, கரும் புள்ளி இல்லாத மஞ்சள் நிற எலுமிச்சம் பழம், தங்கக் காசு, வெள்ளிக் காசு, சிறிய கண்ணாடி, மரச் சீப்பு, இரண்டு வெற்றிலைப் பாக்கு ஆகியவற்றை இட்டு நிரப்ப வேண்டும். கலசத்தின் அகன்ற வாய் பகுதியின் மீது தேங்காயின் குடுமிப் பகுதி மேல்புறம் இருக்குமாறு வைக்க வேண்டும்.

    அத்தேங்காய்க்கு மஞ்சள் குங்குமம் இட வேண்டும். பின்னர் ஆண்டுதோறும் தாயார் முகமாக வைக்கப்படும் திருமுகத்தை, தேங்காயின் குடுமிப் பகுதி மறையுமாறு செருக வேண்டும். தாயாருக்குப் பொட்டு இட்டு, அதில் ஜொலிக்கும் கற்களைப் பதிக்கலாம். பின் பகுதியில் பூச்சரமும், பூ ஜடையும் வைத்தால் அழகாக இருக்கும். தாயாருக்கும், கலசத்திற்குமாக அழகிய ஆடை அணிய வேண்டும். அழகிய முத்து மாலை உள்ளிட்ட நகைகளைத் தாயாருக்கு அணிவிக்க வேண்டும்.

    முதல் நாளான வியாழன் இரவே தாயார் தயாராகிவிடுவார். ஒரு வருடமாக பூஜை அறையில் பெட்டிக்குள் இந்தத் தாயார், கண் திறக்கும் நேரத்தில் உணவு படைக்க வேண்டும். முன்னதாக வெண்பொங்கல் தயாரித்து வைத்துக்கொள்ள வேண்டும். வெற்றிலை பாக்கு, பழம் ஆகியவற்றைத் தட்டில் வைத்து, தீபாராதனை, ஆரத்தி போன்றவற்றைத் தயார் நிலையில் வைத்துவிட வேண்டும். புதிய கண் மை எடுத்துத் தாயார் திருமுக மண்டலத்தில், கண்களுக்கு இட வேண்டும். இதனையே தாயார் கண் திறத்தல் என்று சொல்வார்கள். பின்னர் தாயாருக்குப் படைத்த பிரசாதத்தையே நோன்பு நோற்கும் பெண் சாப்பிட வேண்டும்.
    மறுநாள் விடியற்காலை இந்தத் தாயாரை இல்லத்திற்குள் வருமாறு அழைக்க வேண்டும். பக்கத்திற்கு ஒருவராக இரு சுமங்கலிப் பெண்கள் அலங்கரித்து வைத்துள்ள தாயாரைத் தாம்பாளத்துடன் தூக்கி வந்து முன்னதாகத் தயாரிக்கப்பட்ட சிறிய மண்டபத்தினுள் வைக்க வேண்டும். அந்த மண்டபத்தின் இரு புறமும் வாழைக்கன்றுகளைக் கட்டி, மாவிலை, தென்னை இலை தோரணங்களால் அலங்கரிக்க வேண்டும். மண்டபத்துக்கும் மஞ்சள், குங்குமம் இட வேண்டும்.
    முதலில் விநாயகர் பூஜையைச் செய்துவிட்டு பிறகு மகாலட்சுமி அஷ்டோத்திரம் பாடி வழிபட வேண்டும். நோன்புச் சரடுக்குத் தனியாகப் பூஜை செய்ய வேண்டும். பூஜை முடிந்தபின்பு தாயாருக்குப் பருப்பு பாயாசம், தேங்காய், உளுந்துக் கொழுக்கட்டை, பால், தயிர், வெற்றிலைப் பாக்கு, பழம் இவை அனைத்தையும் நைவேத்தியம் செய்ய வேண்டும். பிறகு பெரியோர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிய பின்னர் நோன்புச் சரடை வலது கையில் கட்டிக்கொள்ள வேண்டும். குடும்பத்தில் சுபிட்சத்தை ஏற்படுத்தும் பூஜை, ஸ்ரீவரலட்சுமி பூஜை. தாயாரை வழிபட்டு தனம் பெற்று வாழ்வோம்.

  • 2016-08-09-12-04-35

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், ராஜகோபுரத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை சரி செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும், கோபுரத்தில், 13 நிலைகளில் சேதமடைந்துள்ள படிகளை சீரமைக்க, இரும்பு தூண் பொருத்தும் பணி நடந்து வருகிறது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக பணி, 25 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வருகிறது. இதில், 13 நிலைகளுடன், 217 அடி உயரமுள்ள ராஜகோபுரம், 86 லட்சம் ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்படுகிறது. பணியின் போது, ராஜகோபுரத்தில் மா அருணை விநாயகருக்கு எதிரே உள்ள, நான்காவது தூணில், மேற்கூரையில், பத்து டன் எடை கொண்ட பீமில், நான்கு அடி தூர விரிசல் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

    கோபுரத்தில் விரிசல் அபாயகரமான இடத்தில் உள்ளதால், ‘ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்’ மூலம் ஒட்டி சீர் செய்ய வேண்டும் என பரிந்துரைத்துரைக்கப்பட்டது. மேலும் கோபுரத்தின், 13 நிலைகளிலும் ஏறி ஆய்வு செய்தபோது, அங்கு பொருத்தப்பட்டுள்ள தேக்கு மரத்திலான படி சேதமடைந்தது தெரிந்தது. இதையடுத்து, இந்த நிலைப்படியை மாற்றுவதற்கு பொருத்தப்பட வேண்டிய இரும்பு தூண், நேற்று கொண்டு வரப்பட்டது. இதை ஒவ்வொரு நிலைப்படியிலும் பொருத்தி, புதிய தேக்கு மரத்தால் ஆன நிலைப்படி பொருத்தப்பட உள்ளது. இதற்கான பணி துவங்கி நடந்து வருகிறது.