Tag: பகவான்

  • 2016-08-15-12-12-28

    பிராமணர் நலச்சங்கம் சார்பில், கிருஷ்ணகிரியில் ஆகஸ்டு 17 மற்றும் 18 ஆகிய நாட்களில், ஆவணி அவிட்ட நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிராமணர் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கிருஷ்ணகிரியில், இந்த ஆண்டுக்கான ஆவணி அவிட்ட நிகழ்ச்சியை முன்னிட்டு, ஆகஸ்டு 17 ம் தேதி காலை, 7 மணிக்கு, கிருஷ்ணகிரி புதுப்பேட்டை தேரடி தெருவில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவனத்தில், ஸ்ரீ வெங்கட்டரமணாச்சாரியாராலும், பழையபேட்டை பரவாசுதேவய்யர் தெருவில் உள்ள சீதாராம வீர ஆஞ்சநேயர் சமேத ராகவேந்திர சுவாமி ம்ருத்யுக பிருந்தாவனத்தில், கிருஷ்ணாச்சாரியாராலும் நடத்தி வைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

    18 ம் தேதி காலை 8 மணிக்கு, கிருஷ்ணகிரி புதுப்பேட்டை கிருஷ்ணன் கோவில் சன்னதி தெருவில் உள்ள ஜகத்குரு சங்கர மடத்தில், யஜூர் உபாகர்மா, ஏ.ஜி.கே.சாஸ்திரியாலும், தேரடி தெருவில் உள்ள ராகவேந்திரர் பிருந்தாவனத்தில், வெங்கட்டரமணாச்சாரியராலும் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பழையபேட்டை வீர ஆஞ்சநேய சுவாமி சமேத ராகவேந்திரர் பிருந்தாவனத்தில், கிருஷ்ணாச்சாரியராலும், வீட்டு வசதி வாரிய குடியிருப்பின் இரண்டாம் தொகுதியில் அமைந்துள்ள ஆஞ்சநேய சுவாமி சமேத வினை தீர்த்த விநாயகர் கோவிலில், காரிமங்கலம் நாகராஜா சாஸ்திரிகளாலும் நடத்தி வைக்கப்படுவதாகவும், 19 ம் தேதி, காயத்ரி ஜப கர்மா அனைத்து அந்தணர்களாலும் அனுஷ்டிக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

  • 2016-08-15-11-46-55

    பாலசமுத்திரம் அருள்மிகு அகோபில வரதராஜப் பெருமாள் கோயிலில் ஆவணி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதனை தொடர்ந்து பல்வேறு பூஜைகள், வாஸ்து ஹோமம், வாத்யங்களுக்கு பேரிபூஜை ஆகியன நடைபெற்றன.

    சங்கு, சக்கரம், திருநாமம், கருடாழ்வார், பூஜை பொருள்கள் ஆகியன பொறிக்கப்பட்ட மஞ்சள் நிறக்கொடிக்கு பூஜை நடத்தப்பட்டு கொடி ஏற்றப்பட்டது.
    தொடர்ந்து, கோயிலின் உள்ளே மூலவர் பூதேவி ஸ்ரீதேவி சமேதர் அகோபில வரதராஜப் பெருமாளுக்கும், உற்சவருக்கும் பூஜைகள் நடத்தப்பட்டன.

    ஆகஸ்டு 20 ஆம் தேதி திருக்கல்யாணமும், 21 ஆம் தேதி பாரிவேட்டையும், 22 ஆம் தேதி திருத்தேரோட்டமும் நடத்தப்பட்டு விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

  • 2016-08-14-11-31-06

    கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நெல்லை அருகன்குளம் எட்டெழுத்துப் பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவிற்காக அழகழகாய் ஓவியங்கள் வரையப்பட்ட 10 ஆயிரத்து எட்டு பானைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

    நெல்லை மாவட்டம் கூனியூரைச் சேர்ந்த சுடலை குடும்பத்தினர் சிறிய ரக 9 ஆயிரம் பானைகளை தயார் செய்யும் பணியில் ஈடுபடுகின்றனர். பரப்பாடியைச் சேர்ந்தவர்கள் 1008 பெரிய ரக பானைகள் தயார் செய்யும் பணியில் ஈடுபடுகின்றனர்.
    ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ண ஜெயந்தி விழா முடிந்த மறுநாளே அடுத்த ஆண்டிற்கான பானைகள் தயாரிக்கும் பணியை இவர்கள் துவங்குகின்றனர்.
    ஒவ்வொரு பானையையும் ஒவ்வொரு விதமாக தயாரிக்கப்படுகிறது. கடந்த 2004ம் ஆண்டு முதன் முறையாக 25 பானைகளை வைத்து நடைபெற்ற பூஜை பின்னர் 108, 1008, 3008, 5008, 7008 என்று அதிகரித்து வந்தது. இந்த ஆண்டு முதன்முறையாக 10 ஆயிரத்து 8 பானைகளைக் கொண்டு பூஜைகள் நடைபெறுகிறது. இந்தியாவிலேயே இக்கோயிலில் மட்டும்தான் வண்ணப்பானைகள் படைக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

  • 2016-08-14-10-44-44

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் தொடங்கியது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுக்கு 450 உற்சவங்கள் நடக்கின்றன.

    விழாக்களில் பூஜைகளை செய்யும் அர்ச்சகர்கள், அதில் பங்கேற்று சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் தெரிந்தும், தெரியாமலும் செய்த தவறுகளால் ஏற்படும் தோ‌ஷ நிவர்த்திக்காக ஆண்டுக்கு ஒரு முறை பவித்ரோற்சவம் நடப்பது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான பவித்ரோற்சவம் 14 ஆம் தேதி தொடங்கியது. தொடர்து 3 நாட்கள் இந்த பவித்ரோற்சவம் நடைபெறுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவில் பவித்ரமாக இருக்கவும், புனித தன்மையை பேணி காக்கவும் பவித்ரோற்சவம் நடத்தப்படுகிறது.
    காலை 9 மணியில் இருந்து பகல் 11 மணிவரை உற்சவ மூர்த்திகளுக்கு ஸ்நாபன திருமஞ்சனமும், மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணிவரை உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் மாடவீதிகளில் உலா வருதல் நடைபெறும். 15-ந்தேதி பவித்ர சமர்ப்பணமும், 16-ந்தேதி பூர்ணாஹூதியும் நடக்கிறது.

    பவித்ரோற்சவத்தையொட்டி மேற்கண்ட 3 நாட்களுக்கு கோவிலில் நடக்கும் விசே‌ஷ பூஜை, அஷ்டதல பாத பத்மாராதனை சேவை, கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், ஊஞ்சல் சேவை, வசந்த உற்சவம், சகஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் அர்ச்சனை சேவை, தோமால சேவை ஆகியவற்றில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடக்கிறது.

  • 2016-08-14-10-27-52

    நான்கு நாள் தொடர் விடுமுறையை அடுத்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    வாரத்தின் 2–வது சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் சுதந்திர தின விடுமுறை என நான்கு நாட்கள் தொடர் விடுமுறையால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பக்தர்கள் அதிகாலை முதலே தரிசன வரிசைகளில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய இரு மலைப்பாதைகளில் 21 ஆயிரம் திவ்ய தரிசன பக்தர்கள் நடந்து திருமலைக்கு வந்தனர். ஒரேநாளில் மொத்தம் 70 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இலவச தரிசனத்துக்கு 9 மணிநேரமும், திவ்ய தரிசனத்துக்கு 7 மணிநேரமும், பிரத்யேக பிரவேச தரிசனத்துக்கு 3 மணிநேரமும் ஆனது. ஒருநாள் உண்டியல் காணிக்கையாக ரூ.3 கோடியே 14 லட்சம் கிடைத்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

  • 2016-08-13-11-19-20

    ஆந்திர, தெலங்கானா மாநிலங்களில் கிருஷ்ணா ஆற்றில் தொடங்கி உள்ள புஷ்கர மேளா விழாவில் ஜயேந்திரர், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பங்கேற்று சிறப்பு பூஜைகள் செய்தனர்.
    புஷ்கர மேளா விழாவை விஜயவாடாவில் உள்ள துர்கா காட் அருகில் காஞ்சி மடாதிபதிகள் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புனித நீராடி தொடங்கி வைத்தனர்.

    அதன் பின் திருமலை தேவஸ்தானம் சார்பில் திருமலையிலிருந்து கொண்டு சென்ற மஞ்சள், குங்குமம், பட்டுப் புடவை, மலர்கள், பழங்கள் உள்ளிட்ட ஏழுமலையானின் சீர்வரிசைகளைக் கொண்டு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தம்பதியினர் கிருஷ்ணா ஆற்றுக்கு சிறப்பு பூஜை செய்தனர்.

    தொடர்ந்து 12 நாள்கள் நடைபெற உள்ள இந்த புஷ்கரத்தில் சுமார் 5 கோடி பேர் புனித நீராடுவர் என ஆந்திர அரசு கணக்கிட்டுள்ளது.

  • 2016-08-13-11-01-09

    ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆகஸ்டு 16ஆம் தேதி நடை திறக்கப்படுகிறது.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் தமிழ் மாதம் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. ஆகஸ்டு 8ஆம் தேதி ஐயப்பன் கோவிலில் நிறை புத்தரிசி பூஜை மிக விமரிசையாக நடைபெற்றது. ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆகஸ்டு 16-ந்தேதி நடை திறக்கப்படுகிறது. 16-ந் தேதி மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படும். தொடர்ந்து, 21-ந் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    17-ந் தேதி முதல் வழக்கமான பூஜைகள் தந்திரி கண்டரரு ராஜீவரு, மேல்சாந்தி சங்கரன் நம்பூதிரி ஆகியோர் தலைமையில் நடைபெறும். தினமும், சிறப்பு பூஜைகளான படிபூஜை, உதயாஸ்தமான பூஜை ஆகியவை நடத்தப்படும். 21-ந் தேதி இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்பட்டு ஆவணி மாத பூஜை நிறைவுபெறும்.

    மீண்டும், ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை செப்டம்பர் மாதம் 12-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். 13-ந் தேதி முதல் ஓணம், 14-ந் தேதி திருவோண தின சிறப்பு பூஜையும் நடக்கிறது.

  • 2016-08-13-10-53-03

    தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதை தொடர்ந்து ராமேஸ்வரம் கோயிலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக கடலோரப் பகுதிகளில் உள்ள முக்கிய இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    குறிப்பாக ராமேஸ்வரம் தீவுப் பகுதி, இலங்கை கடல் பகுதியின் அருகாமையில் அமைந்திருப்பதால் ராமேஸ்வரம் தீவு முழுவதற்கும் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பன்மடங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கோயிலுக்குள்ளும், வெளியிலும் ஆயுதம் தாங்கிய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோயிலுக்குள் செல்போன், கேமரா, கைப்பை என எந்த பொருளும் எடுத்து செல்ல கூடாது என பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    கோயில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு கம்பெனி ஆயுதப்படை போலீசார், 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.