Tag: 108

  • varalatchumiku-ugandha-108-potri

    இன்று வரலட்சுமி விரதம் கடைபிடிக்கும் பெண்கள் லட்சுமி தேவிக்கு உகந்த இந்த 108 ஸ்ரீ லட்சுமி போற்றி உச்சரித்து வழிபாடு செய்து வந்தால் அனைத்து செல்வங்களும் கிட்டும்.

    சகல செல்வங்களுடன் முதலில் தோன்றிய ஆதிலட்சுமியை வணங்குவதால், நோய்கள் நீங்கும். அதற்காக அஷ்டமங்கலப் பொருட்களைத் தனது திருவடியின் கீழ் கொண்டு காட்சி தரும் வகையில் அமைந்து அருள் தருபவள் ஆதிலட்சுமி.

    ஓம்  திருவே  போற்றி
    ஓம்  திருவளர் தாயே போற்றி
    ஓம்  திருமாலின் தேவி  போற்றி
    ஓம்  திருவெலாம் தருவாய்  போற்றி
    ஓம்  திருத்தொண்டர் மணியே  போற்றி
    ஓம்  திருப்புக ழுடையாய்  போற்றி
    ஓம்  திருஞான வல்லி  போற்றி
    ஓம்  திருவருட் செல்வி  போற்றி
    ஓம்  திருமால் மகிழ்வாய்  போற்றி
    ஓம்  திருமார்பி லமர்ந்தாய்  போற்றி
    ஓம்  தினமெமைக் காப்பாய்  போற்றி
    ஓம்  தீபசோதியே  போற்றி
    ஓம்  தீதெலாம் தீர்ப்பாய்  போற்றி
    ஓம்  தூப ஜோதியே  போற்றி
    ஓம்  துயரம்தீர்த் தருள்வாய்  போற்றி
    ஓம்  திருப்பாற் கடலாய்  போற்றி
    ஓம்  திருவமு தருள்வாய்  போற்றி
    ஓம்  அன்னையே அருளே  போற்றி
    ஓம்  அழகெலாம் உடையாய்  போற்றி
    ஓம்  அயன்பெறு தாயே  போற்றி
    ஓம்  அனைவருக்கும் அருள்வாய்  போற்றி
    ஓம்  அமரர் குல விளக்கே  போற்றி
    ஓம்  அமரேசன் தொழுவாய்  போற்றி
    ஓம்  அன்பருக் கினியாய்  போற்றி
    ஓம்  அண்டங்கள் காப்பாய்  போற்றி
    ஓம்  ஆனந்த வல்லியே  போற்றி
    ஓம்  ஆருயிர்க் குயிரே  போற்றி
    ஓம்  ஆவிநல் வடிவே  போற்றி
    ஓம்  ஆக்கம் தருள்வாய்  போற்றி
    ஓம்  இச்சை கிரியை  போற்றி
    ஓம்  இருள்தனைக் கடிவாய்  போற்றி
    ஓம்  இன்பப் பெருக்கே  போற்றி
    ஓம்  இகபர சுகமே  போற்றி
    ஓம்  ஈகையின் பொலிவே  போற்றி
    ஓம்  ஈடிலா அன்னை  போற்றி
    ஓம்  எங்குமே நிறைந்தாய்  போற்றி
    ஓம்  எண்குண வல்லி  போற்றி
    ஓம்  ஓங்கார சத்தி  போற்றி
    ஓம்  ஒளிமிகு தேவி போற்றி
    ஓம்  கற்பக வல்லி  போற்றி 
    ஓம்  காமரு தேவி  போற்றி
    ஓம்  கனக வல்லியே  போற்றி
    ஓம்  கருணாம் பிகையே  போற்றி
    ஓம்  குத்து விளக்கே  போற்றி
    ஓம்  குலமகள் தொழுவாய்  போற்றி
    ஓம்  மங்கல விளக்கே  போற்றி
    ஓம்  மங்கையர் தொழுவாய்  போற்றி
    ஓம்  தூங்காத விளக்கே  போற்றி
    ஓம்  தூயவர் தொழுவாய்  போற்றி
    ஓம்  பங்கஜ வல்லி  போற்றி
    ஓம்  பாவலர் பணிவாய்  போற்றி
    ஓம்  பொன்னி அம்மையே  போற்றி
    ஓம்  புலவர்கள் புகழ்வாய்  போற்றி
    ஓம்  நாரணன் நங்கையே  போற்றி
    ஓம்  நாவலர் துதிப்பாய்  போற்றி
    ஓம்  நவரத்தின மணியே  போற்றி
    ஓம்  நவநிதி நீயே  போற்றி
    ஓம்  அஷ்ட லட்சுமியே  போற்றி
    ஓம்  அறம்பொருள் தருவாய்  போற்றி
    ஓம்  ஆதிலட்சுமியே  போற்றி
    ஓம்  ஆணவம் அறுப்பாய்  போற்றி
    ஓம்  கஜலட்சுமியே  போற்றி
    ஓம்  கள்ளமும் கரைப்பாய்  போற்றி
    ஓம்  தைரியலட்சுமியே  போற்றி
    ஓம்  தயக்கமும் தவிர்ப்பாய்  போற்றி
    ஓம்  தனலட்சுமியே  போற்றி
    ஓம்  தனதானியம் தருவாய்  போற்றி
    ஓம் விஜயலட்சுமியே  போற்றி
    ஓம்  வெற்றியைத் தருவாய்  போற்றி
    ஓம்  வரலட்சுமியே  போற்றி
    ஓம்  வரமெலாம் தருவாய்  போற்றி
    ஓம்  முத்துலட்சுமியே  போற்றி
    ஓம்  முக்தியை அருள்வாய்  போற்றி
    ஓம்  பூவேந்தர் தொழுவாய்  போற்றி
    ஓம்  முத்தமிழ் தருவாய்  போற்றி
    ஓம்  கண்ணே எம் கருத்தே  போற்றி
    ஓம்  கவலையை ஒழிப்பாய்  போற்றி
    ஓம்  விண்ணே எம் விதியே  போற்றி
    ஓம்  விவேகம் தருள்வாய்  போற்றி
    ஓம்  பொன்னேநன் மணியே  போற்றி
    ஓம்  போகம் தருள்வாய்  போற்றி
    ஓம்  பூதேவி தாயே  போற்றி
    ஓம்  புகழெலாம் தருவாய்  போற்றி
    ஓம்  சீதேவி தாயே  போற்றி
    ஓம்  சிறப்பெலாம் அருள்வாய்  போற்றி
    ஓம்  மதிவதன வல்லி  போற்றி
    ஓம்  மாண்பெலாம் தருவாய்  போற்றி
    ஓம்  நித்திய கல்யாணி  போற்றி
    ஓம்  நீதிநெறி அருள்வாய்  போற்றி
    ஓம்  கமலக்கன்னி  போற்றி
    ஓம்  கருத்தினி லமர்வாய்  போற்றி
    ஓம்  தாமரைத் தாயாய்  போற்றி
    ஓம்  தவநிலை அருள்வாய்  போற்றி
    ஓம்  கலைஞானச் செல்வி  போற்றி
    ஓம்  கலைஞருக் கருள்வாய்  போற்றி
    ஓம்  அருள்ஞானச் செல்வி  போற்றி
    ஓம்  அறிஞருக் கருள்வாய்  போற்றி
    ஓம்  எளியவர்க் கருள்வாய்  போற்றி
    ஓம்  ஏழ்மையைப் போக்குவாய்  போற்றி
    ஓம்  வறியவர்க் கருள்வாய்  போற்றி
    ஓம்  வறுமையை ஒழிப்பாய்  போற்றி
    ஓம்  வேத வல்லியே  போற்றி
    ஓம்  வேட்கையைத் தணிப்பாய்  போற்றி
    ஓம்  பிறர்பொருள் கவர எண்ணாப்
     பெரியர்க் கருள்வாய்  போற்றி
    ஓம்  நடுநிலை நீங்கிடாத நல்லவர்க்
     கருள்வாய்  போற்றி
    ஓம்  அறநெறி வழுவிலாத அடியவர்க்
     கருள்வாய்  போற்றி
    ஓம்  அனைத்துமே ஆனாய்  போற்றி
    ஓம்  அருள்மிகு லட்சுமிதாயே 
    போற்றி போற்றி போற்றி

  • selvam-arulum-guberan-108-potri

    செல்வ கடவுளான குபேரனை வணங்கி இந்த  போற்றிகளை உச்சரித்து வழிபட்டால் செல்வ நிலை உயரும் வாழ்வில் சுபிட்சம் பெருகும்

     அளகாபுரி அரசே போற்றி
    ஆனந்தம் தரும் அருளே போற்றி
    இன்பவளம் அளிப்பாய் போற்றி
    ஈடில்லாப் பெருந்தகையே போற்றி
    உகந்து அளிக்கும் உண்மையே போற்றி
    ஊக்கம் அளிப்பவனே போற்றி
    எளியோனுக்கு அருள்பவனே போற்றி
    ஏழ்மை நிலை அகற்றுவாய் போற்றி
    ஐஸ்வர்யம் அளிப்பவனே போற்றி
    ஒன்பது நிதி பெற்றவனே போற்றி
    ஓங்கார பக்தனே போற்றி
    கருத்தில் நிறைந்தவனே போற்றி
    கனகராஜனே போற்றி
    கனகரத்தினமே போற்றி 
    காசு மாலை அணிந்தவனே போற்றி
    கிந்நரர்கள் தலைவனே போற்றி
    கீர்த்தி அளிப்பவனே போற்றி
    கீரிப்பிள்ளைப் பிரியனே போற்றி
    குருவாரப் பிரியனே போற்றி
    குணம் தரும் குபேரா போற்றி
    குறை தீர்க்கும் குபேரா போற்றி
    கும்பத்தில் உறைபவனே போற்றி
    குண்டலம் அணிந்தவனே போற்றி
    குபேர லோக நாயகனே போற்றி
    குன்றாத நிதி அளிப்பாய் போற்றி
    கேடதனை நீக்கிடுவாய் போற்றி
    கேட்டவரம் அளிப்பவனே போற்றி
    கோடி நிதி அளிப்பவனே போற்றி
    சங்க நிதியைப் பெற்றவனே போற்றி
    சங்கரர் தோழனே போற்றி
    சங்கடங்கள் தீர்ப்பவனே போற்றி
    சமயத்தில் அருள்பவனே போற்றி
    சத்திய சொரூபனே போற்றி
    சாந்த சொரூபனே போற்றி
    சித்ரலேகா பிரியனே போற்றி
    சித்ரலேகா மணாளனே போற்றி
    சிந்தையில் உறைபவனே போற்றி
    சிந்திப்போர்க்கு அருள்பவனே போற்றி
    சீக்கிரம் தனம் அளிப்பாய் போற்றி
    சிவபூஜை பிரியனே போற்றி
    சிவ பக்த நாயகனே போற்றி
    சிவ மகா பக்தனே போற்றி
    சுந்தரர் பிரியனே போற்றி
    சுந்தர நாயகனே போற்றி
    சூர்பனகா சகோதரனே போற்றி
    செந்தாமரைப் பிரியனே போற்றி
    செல்வ வளம் அளிப்பவனே போற்றி
    செம்மையான வாழ்வளிப்பாய் போற்றி
    சொர்ணவளம் அளிப்பவனே போற்றி
    சொக்கநாதர் பிரியனே போற்றி
    சௌந்தர்ய ராஜனே போற்றி
    ஞான குபேரனே போற்றி
    தனம் அளிக்கும் தயாபரா போற்றி
    தான்ய லெட்சுமியை வணங்குபவனே போற்றி
    திகட்டாமல் அளித்திடுவாய் போற்றி
    திருவிழி அழகனே போற்றி
    திருவுரு அழகனே போற்றி
    திருவிளக்கில் உறைவாய் போற்றி
    திருநீறு அணிபவனே போற்றி
    தீயவை அகற்றுவாய் போற்றி
    துன்பம் தீர்த்திடுவாய் போற்றி
    தூயமனம் படைத்தவனே போற்றி
    தென்னாட்டில குடி கொண்டாய் போற்றி
    தேவராஜனே போற்றி
    பதுமநிதி பெற்றவனே போற்றி
    பரவச நாயகனே போற்றி
    பச்சை நிறப் பிரியனே போற்றி
    பவுர்ணமி நாயகனே போற்றி
    புண்ணிய ஆத்மனே போற்றி
    புண்ணியம் அளிப்பவனே போற்றி
    புண்ணிய புத்திரனே போற்றி
    பொன்னிற முடையோனே போற்றி
    பொன் நகை அணிபவனே போற்றி
    புன்னகை அரசே போற்றி
    பொறுமை கொடுப்பவனே போற்றி
    போகம்பல அளிப்பவனே போற்றி
    மங்கல முடையோனே போற்றி
    மங்களம் அளிப்பவனே போற்றி
    மங்களத்தில் உறைவாய் போற்றி
    மீன லக்னத்தில் உதித்தாய் போற்றி
    முத்து மாலை அணிபவனே போற்றி
    மோகன நாயகனே போற்றி
    வறுமை தீர்ப்பவனே போற்றி
    வரம் பல அருள்பவனே போற்றி
    விஜயம் தரும் விவேகனே போற்றி
    வேதம் போற்றும் வித்தகா போற்றி
    வைர மாலை அணிபவனே போற்றி
    வைகுண்டவாசப் பிரியனே போற்றி
    நடராஜர் பிரியனே போற்றி
    நவதான்யம் அளிப்பவனே போற்றி
    நவரத்தினப் பிரியனே போற்றி
    நித்தியம் நிதி அளிப்பாய் போற்றி
    நீங்காத செல்வம் அருள்வாய் போற்றி
    வளம் யாவும் தந்திடுவாய் போற்றி
    ராவணன் சோதரனே போற்றி
    வடதிசை அதிபதியே போற்றி
    ரிஷி புத்திரனே போற்றி
    ருத்திரப் பிரியனே போற்றி
    இருள் நீக்கும் இன்பனே போற்றி
    வெண்குதிரை வாகனனே போற்றி
    கைலாயப் பிரியனே போற்றி
    மனம் விரும்பும் மன்னவனே போற்றி
    மணிமகுடம் தரித்தவனே போற்றி
    மாட்சிப் பொருளோனே போற்றி
    யந்திரத்தில் உறைந்தவனே போற்றி
    யௌவன நாயகனே போற்றி
    வல்லமை பெற்றவனே போற்றி
    ரத்தின மங்கலத்தில் உறைந்தானே போற்றி
    குபேரா போற்றி போற்றி

  • keralavil-ulla-108-amman-koil

    கேரளாவில் அம்மன் கோயில்கள் அதி க அளவில் இருக்கின்றன. இந்தக் கோயில்களிலும் பராசக்தியின் வடிவமான பகவதியம்மன் என்கிற பெயரில்தான் அதிகமான கோயில்கள் இருக்கின்றன. தமிழ் நாட்டில் காளி, துர்க்கையம்மன் என்று அழைக்கப்படும் கோயில்களை ப் போல்தான் இவை இருக்கின்றன. கேரளாவில் மிகப் பிரபலமடைந்த 108 துர்க்கை கோயில்கள் இருக்கின்றன. இந்த 108 துர்க்கை கோயில்களின் பட்டி யல் இங்கு தொகுத்துத் தரப்பட்டுள்ள து.

    1. அந்திக்காடு கார்த்தியாயினி கோயில்
    2. ஆய்குன்னு துர்கா
    3. அய்ரூர் பிசாரிக்கல் துர்கா
    4. அய்யந்தோல் கார்த்தியாயினி
    5. ஆவனம்காட்டு பகவதி
    6. அழகம் தேவி
    7. ஆழியூர் பகவதி
    8. ஆட்டூர் கார்த்தியாயினி
    9. பக்திசாலா
    10. சாமுண்டிக்காவு
    11. சாத்தன்னூர்
    12. செம்புக்காவு கார்த்தியாயினி
    13. சென்கண்ணூர்
    14. சூரக்கோடு பகவதி
    15. செங்கனம் குன்னு பகவதி
    16. செங்கலத்துக்காவு தேவி
    17. செந்திட்டா தேவி
    18. செருக்குன்னு அனுபூர்னேஸ்வரி
    19. சேர்தலா கார்த்தியாயினி
    20. செர்பு பகவதி
    21. சேரநெல்லூர் பகவதி
    22. ஏலம்பரா
    23. எடக்குன்னி துர்கா
    24. எடப்பள்ளி
    25. எடநாடு துர்கா
    26. எடையன்னூர்
    27. இங்காயூர்
    28. இரிங்கோலம்
    29. கடலாயில்
    30. கடலுண்டி
    31. கடப்புறு
    32. கண்ணனூர் பகவதி
    33. காமாட்சி
    34. கருமபுரம்
    35. கருவாலயம்
    36. காட்டூர் துர்கா
    37. கடம்புழா பகவதி
    38. கன்யாகுமரி
    39. காரமுக்கு பகவதி
    40. காராயில்
    41. காட்டாலும்
    42. காவீடு பகவதி
    43. கிடங்கேது
    44. கீழக்கனிக்காடு
    45. கீழாதூர் துர்கா
    46. குட்டநெல்லூர் பகவதி
    47. குமாரநல்லூர் தேவி
    48. குறிஞ்சிக்காவு துர்கா
    49. குறிங்கார்சிரா
    50. குளம்பு
    51. கோரட்டிக்காடு புவனேஸ்வரி
    52. கொத்தகுளங்கரா பகவதி
    53. மாங்கடூர்
    54. மாவத்தூர்
    55. மடிப்பேட்டை பகவதி
    56. மறவன்சேரி
    57. மருதூர் கார்த்தியாயினி
    58. மங்கலதேவி
    59. மாணிக்யமங்கலம் கார்த்தியாயினி
    60. மேழக்குன்னத்து
    61. முக்கோள பகவதி
    62. மூகாம்பிகா சரஸ்வதி
    63. நிஞ்சங்காத்திரி பகவதி
    64. நெல்லூர் பகவதி
    65. நெல்லுவாயில் பகவதி
    66. பதியூர் துர்கா
    67. பன்னியம்காரா துர்கா
    68. பந்தல்லூர் பகவதி
    69. பாலரிவோட்டம் தேவி
    70. பீச்செங்கன்னூர்
    71. புதுக்கோடு அன்னபூர்னேஸ்வரி
    72. புதூர் துர்கா
    73. புன்னாரியம்மா
    74. பூவதுசேரி துர்கா
    75. பேரந்தூர் துர்கா
    76. பேரூர்காவு துர்கா
    77. போத்தனூர் துர்கா
    78. ரூநன்நாராயணம்
    79. சால பகவதி
    80. சிரசில் தேவி
    81. தாதபள்ளி துர்கா
    82. திருக்குளம்
    83. திருவள்ளத்தூர்
    84. திரிக்காவு துர்கா
    85. திரிச்சாம்பரம் பகவதி
    86. திரிக்கனிக்காடு பகவதி
    87. திரிப்பிளேரி பகவதி
    88. தெச்சிக்காட்டுக்காவு துர்கா
    89. தேவலக்கோடு பகவதி
    90. தைக்காட்டுசேரி துர்கா
    91. தொட்டப்பள்ளி பகவதி
    92. தொழுவனூர் பகவதி
    93. உளியன்னூர் தேவி
    94. உண்ணனூர் தேவி
    95. ஊரக்காத்தம்மா திருவடி
    96. உழலூர் தேவி
    97. வாரக்கல் துர்கா
    98. வள்ளூர் துர்கா
    99. வள்ளோட்டிக்குன்னு துர்கா
    100. வயல்புரம்
    101. விழக்கோடி தேவி
    102. விழப்ப தேவி
    103. விரங்காட்டூர் தேவி
    104. வெளியெண்ணூர் பகவதி
    105. வெளியம்கோடு
    106. வெள்ளத்தாட்டு பகவதி
    107. வெள்ளிக்குன்னு பகவதி
    108. வெங்கனூர் துர்கா

  • kalvi-kalaigalil-mempada-budhan-108-pottrigal

    கல்வி, கலை, வித்தைகளுக்கு அதிபதியான புதன். எந்த ஒரு விஷயத்தையும் கண்ணால்பார்த்தவுடன் அதை கையால் செய்வதற்கு புதன் அனுக்ரகம் வேண்டும். நம் வாழ்க்கைக்கு அடிப்படையான கல்விச் செல்வத்தை வழங்குபவர் புதன். சொல்லாற்றல், மதிநுட்பம், சமயோஜித பேச்சு, வழக்குரைத்தல், கணக்கு, பத்திரிகை, ஜோதிடம், வான சாஸ்திரம் ஆகிய துறைகளுக்கும் மூளை, நரம்பு மண்டலம் போன்ற மிக முக்கிய உறுப்புகளையும் கட்டுப்படுத்துபவர் புதன் பகவான். அத்தகைய சிறப்புமிக்க புதன் பகவானை மனதார நினைத்து 108 போற்றியை உச்சரித்தால் எண்ணிய நல்லவை யாவும் ஈடறும்.

    ஓம் அழகனே போற்றி
    ஓம் அருளாகரனே போற்றி
    ஓம் அறிவிற்கு உவமையே போற்றி
    ஓம் அனைவருக்கும் காவலே போற்றி
    ஓம் அறிவுருவே போற்றி
    ஓம் அழகுருவே போற்றி
    ஓம் அம்பு பீடனே போற்றி
    ஓம் அலிக்கிரகமே போற்றி
    ஓம் அலங்காரனே போற்றி
    ஓம் ஆனந்தனே போற்றி
    ஓம் ஆயில்ய நாதனே போற்றி
    ஓம் ஆலவாயில் அருள்பவனே போற்றி
    ஓம் இரு வாகனனே போற்றி
    ஓம் இளை நாதனே போற்றி
    ஓம் இம்மை நலமளிப்பவனே போற்றி
    ஓம் இளன் சாபந்தீர்த்தவனே போற்றி
    ஓம் உயர்ந்தவனே போற்றி
    ஓம் உகந்தவனே போற்றி
    ஓம் உவர்ப்புச் சுவையனே போற்றி
    ஓம் உடலிற் தோலானவனே போற்றி
    ஓம் கலைவாணனே போற்றி
    ஓம் கல்வியருள்பவனே போற்றி
    ஓம் கருணாகரனே போற்றி
    ஓம் கன்னிராசி அதிபதியே போற்றி
    ஓம் கவியரசே போற்றி
    ஓம் கவிஞனாக்குபவனே போற்றி
    ஓம் கிரஹபதியே போற்றி
    ஓம் கிரகபீடாஹரனே போற்றி
    ஓம் கிழக்கு நோக்கனே போற்றி
    ஓம் கீர்த்தி வாய்த்தவனே போற்றி
    ஓம் குஜன் பகைவனே போற்றி
    ஓம் குதிரை வாகனனே போற்றி
    ஓம் கேடயதாரியே போற்றி
    ஓம் கேட்டை நாதனே போற்றி
    ஓம் சசி சுதனே போற்றி
    ஓம் சந்திர குலனே போற்றி
    ஓம் சத்வ குணனே போற்றி
    ஓம் சாந்த மூர்த்தியே போற்றி
    ஓம் சிவனடியானே போற்றி
    ஓம் சிவனால் கிரகமானவனே போற்றி
    ஓம் சிங்க வாகனனே போற்றி
    ஓம் சிங்கக் கொடியோனே போற்றி
    ஓம் சுந்தரனே போற்றி
    ஓம் சுப கிரகமே போற்றி
    ஓம் சுகமளிக்க வல்லவனே போற்றி
    ஓம் சொக்கருள் இணைந்தவனே போற்றி
    ஓம் ஞானியே போற்றி
    ஓம் ஞான நாயகனே போற்றி
    ஓம் தவசீலனே போற்றி
    ஓம் தவயோகியே போற்றி
    ஓம் தயாகரனே போற்றி
    ஓம் தனிக்கோயிலானே போற்றி
    ஓம் தாரை மகனே போற்றி
    ஓம் தரித்ர நாசகனே போற்றி
    ஓம் திருவுருவனே போற்றி
    ஓம் திருவெண்காட்டில் அருள்பவனேபோற்றி
    ஓம் துதிக்கப்படுபவனேபோற்றி
    ஓம் திருக்காளீஸ்வரத்தருள்பவனேபோற்றி
    ஓம் தேவனேபோற்றி
    ஓம் தேரேறி வருபவனேபோற்றி
    ஓம் நட்சத்ரேசனேபோற்றி
    ஓம் நல்லுரு அருள்பவனேபோற்றி
    ஓம் நாற்கரனேபோற்றி
    ஓம் நாயுருவி சமித்தனேபோற்றி
    ஓம் நான்காமவனேபோற்றி
    ஓம் நாரணன் ப்ரத்யதிதேவதையனேபோற்றி
    ஓம் பயிர்க் காவலனேபோற்றி
    ஓம் பசும்பயறு விரும்பியேபோற்றி
    ஓம் பச்சை வண்ண கிரகமேபோற்றி
    ஓம் பதினேழாண்டாள்பவனேபோற்றி
    ஓம் பித்தளை உலோகனேபோற்றி
    ஓம் பின் னகர்வுடையோனேபோற்றி
    ஓம் பிரமனருள் பெற்றவனேபோற்றி
    ஓம் புராணத் தேவனேபோற்றி
    ஓம் புலவர் பிரானேபோற்றி
    ஓம் புலமையளிப்பவனேபோற்றி
    ஓம் பூங்கழலடியனேபோற்றி
    ஓம் புண்ணியனேபோற்றி
    ஓம் புரூரவன் தந்தையேபோற்றி
    ஓம் புகழ் சேர்ப்பவனேபோற்றி
    ஓம் பொன்னணியனேபோற்றி
    ஓம் பொற்கொடியோனேபோற்றி
    ஓம் பொன்மேனியனேபோற்றி
    ஓம் பொன்னாடையனேபோற்றி
    ஓம் போகமளிப்பவனேபோற்றி
    ஓம் மணிமுடியனேபோற்றி
    ஓம் மரகதப் பிரியனேபோற்றி
    ஓம் மனோகரனேபோற்றி
    ஓம் மஞ்சள் சந்தனப்பிரியனேபோற்றி
    ஓம் மதுரையில் பூசித்தவனேபோற்றி
    ஓம் ரவி மித்ரனேபோற்றி
    ஓம் ரவிக்கருகிருப்பவனேபோற்றி
    ஓம் ரேவதிக் கதிபதியேபோற்றி
    ஓம் ரிக் ஐந்தின் அதிகாரியேபோற்றி
    ஓம் வள்ளலேபோற்றி
    ஓம் வல்லபிரானேபோற்றி
    ஓம் வாட்கரனேபோற்றி
    ஓம் வடகீழ் திசையனேபோற்றி
    ஓம் வாக்கானவனேபோற்றி
    ஓம் வாழ்வளிப்பவனேபோற்றி
    ஓம் வித்தகனேபோற்றி
    ஓம் விஷ்ணுரூபனேபோற்றி
    ஓம் விஷ்ணு அதிதேவதையனேபோற்றி
    ஓம் விதி மாற்றுபவனேபோற்றி
    ஓம் வெண்காந்தமலர்ப் பிரியனேபோற்றி
    ஓம் ‘ஜம்’ பீஜ மந்திரனேபோற்றி
    ஓம் புத பகவானே போற்றிபோற்றி

  • mana-valimai-tharum-108-kaali-potri

    காளிதேவியை மனதில் நினைத்து இந்த போற்றியை கூறி காளியை வழிபட்டால் மனபலம் கூடும். கோயில்களில் காளி, துர்க்கை சந்நிதிக்கு முன்பு விளக்கேற்றி இந்த போற்றியை கூறிவந்தால் நன்மை பெருகும் நினைத்தது கைகூடும்.

     

    ஓம் காளியே போற்றி

    ஓம் அனுக்கிரகம் அருள்பவளே போற்றி

    ஓம் அல்லல் தீர்ப்பவளே போற்றி

    ஓம் அஷ்டபுஜம் கொண்டவளே போற்றி

    ஓம் அகநாசினியே போற்றி

    ஓம் அளத்தற்கு அரியவளே போற்றி

    ஓம் அங்குசம் ஏந்தியவளே போற்றி

    ஓம் ஆதாரசக்தியே போற்றி

    ஆலகாலத் தோன்றலே போற்றி

     ஓம் இளங்காளியே போற்றி

     ஓம் இடுகாட்டில் இருப்பவளே போற்றி

     ஓம் இஷ்டதேவதையே போற்றி

     ஓம் இடர் களைபவளே போற்றி

     ஓம் ஈறிலாளே போற்றி

     ஓம் ஈரெண் முகத்தாளே போற்றி

     ஓம் உயிர்ப்பிப்பவளே போற்றி

     ஓம் உக்ரகாளியே போற்றி

     ஓம் உஜ்ஜைனி காளியே போற்றி

     ஓம் உதிரம் ஏற்பவளே போற்றி

     ஓம் ஊழிசக்தியே போற்றி

     ஓம் எழுதலைக்காளியே போற்றி

     ஓம் எலுமிச்சை பிரியையே போற்றி

     ஓம் ஓங்காரியே போற்றி

     ஓம் கருங்காளியே போற்றி

     ஓம் காருண்யதேவியே போற்றி

     ஓம் கபாலதாரியே போற்றி

     ஓம் கல்யாணியே போற்றி

     ஓம் காக்கும் அன்னையே போற்றி

     ஓம் காளராத்ரியே போற்றி

     ஓம் காலபத்னியே போற்றி

     ஓம் குங்குமகாளியே போற்றி

     ஓம் குலம் காத்தருள்வாய் போற்றி

     ஓம் சமரில் வெல்பவளே போற்றி

     ஓம் சத்திய தேவதையே போற்றி

     ஓம் சம்ஹார காளியே போற்றி

     ஓம் சண்டமுண்ட சம்ஹாரிணியே போற்றி

     ஓம் சிம்ம வாகினியே போற்றி

     ஓம் சிறுவாச்சூர் தேவியே போற்றி

     ஓம் சிவசக்தியே போற்றி

     ஓம் சீற்றம் கொண்டவளே போற்றி

     ஓம் சுடலைக்காளியே போற்றி

     ஓம் சுந்தர மாகாளியே போற்றி

     ஓம் சூலம் கொண்டவளே போற்றி

     ஓம் செங்காளியே போற்றி

     ஓம் செல்வம் தருபவளே போற்றி

     ஓம் சேர்வாரை காப்பாய் போற்றி

     ஓம் சொர்க்கம் தருவாய் போற்றி

     ஓம் சோமகாளியே போற்றி

     ஓம் சோகம் தீர்ப்பவளே போற்றி

     ஓம் தனகாளியே போற்றி

     ஓம் தட்சிணகாளியே போற்றி

     ஓம் தசமுகம் கொண்டவளே போற்றி

     ஓம் தாண்டவமாடினாய் போற்றி

     ஓம் தாருகனை அழித்தாய் போற்றி

     ஓம் திரிபுரசுந்தரியே போற்றி

     ஓம் தில்லைக்காளியே போற்றி

     ஓம் தீமையை அழிப்பாய் போற்றி

     ஓம் தீயவர் பகைவியே போற்றி

     ஓம் நல்லவர் துணைவியே போற்றி

     ஓம் நலன்கள் தருவாய் போற்றி

     ஓம் நவக்கிரக நாயகியே போற்றி

     ஓம் நம்பிக்கை நட்சத்திரமே போற்றி

     ஓம் நாளெலாம் அருள்வாய் போற்றி

     ஓம் நால்திசையும் காப்பாய் போற்றி

     ஓம் நாடாளும் தேவியே போற்றி

     ஓம் நாகாபரணம் அணிந்தாய் போற்றி

     ஓம் நிர்மலமாய் நின்றாய் போற்றி

     ஓம் நித்தியகாளியே போற்றி

     ஓம் நிக்ரஹ காளியே போற்றி

     ஓம் பல்பெயர் கொண்டாய் போற்றி

     ஓம் பராசக்தி தாயே போற்றி

     ஓம் பஞ்சகாளியே போற்றி

     ஓம் பஞ்சம் தீர்ப்பாய் போற்றி

     ஓம் பயங்கரவடிவே போற்றி

     ஓம் பத்ரகாளியே போற்றி

     ஓம் பாதாளகாளியே போற்றி

     ஓம் பாசாங்குசம் ஏந்தினாய் போற்றி

     ஓம் பாலபிஷேகம் ஏற்பாய் போற்றி

     ஓம் பாரெல்லாம் காப்பாய் போற்றி

     ஓம் பூதகாளியே போற்றி

     ஓம் பூவாடைக்காரியே போற்றி

     ஓம் பூக்குழி ஏற்பவளே போற்றி

     ஓம் பெருங்கண்ணியே போற்றி

     ஓம் பேராற்றலே போற்றி

     ஓம் பொன்வளம் தருவாய் போற்றி

     ஓம் பொல்லாரை அழிப்பாய் போற்றி

     ஓம் மதுரகாளியே போற்றி

     ஓம் மடப்புரத்தாளே போற்றி

     ஓம் மகாகாளியே போற்றி

     ஓம் மகாமாயையே போற்றி

     ஓம் மங்களரூபியே போற்றி

     ஓம் மந்திரத்தாயே போற்றி

     ஓம் மருந்தாய் வருவாய் போற்றி

     ஓம் மாற்றம் தருவாய் போற்றி

     ஓம் முக்கண்ணியே போற்றி

     ஓம் மும்மூர்த்தி தலைவியே போற்றி

     ஓம் மூவுலகம் ஆள்வாய் போற்றி

     ஓம் மோகம் தீர்ப்பாய் போற்றி

     ஓம் மோட்சம் தருவாய் போற்றி

     ஓம் வளம் தரும் தேவியே போற்றி

     ஓம் வரங்கள் அருள்வாய் போற்றி

     ஓம் விரிசடையாளே போற்றி

     ஓம் விண்ணகத்தலைவியே போற்றி

     ஓம் வீரபத்ரகாளியே போற்றி

     ஓம் வீணரை அழிப்பாய் போற்றி

     ஓம் வெக்காளியே போற்றி

     ஓம் வேதனை களைவாய் போற்றி

     ஓம் காளி ஜெய் காளி ஓம் காளி

    ஜெய்காளி ஓம்காளி ஜெய்காளி போற்றி போற்றி! 

  • vettrigalaitharum-108-anuman-potri

    அனைத்து காரியங்களிலும் வெற்றி பெற சனிக்கிழமைகளில் ஜெபிக்க வேண்டிய 108 அனுமன் போற்றி…        

    ஓம் அனுமனே போற்றி
    ஓம் அஞ்சனை மைந்தனே போற்றி

    ஓம் அறக்காவலனே போற்றி
    ஓம் அவதார புருஷனே போற்றி 

    ஓம் அறிஞனே போற்றி
    ஓம் அடக்கவடிவே போற்றி
    ஓம் அதிகாலை பிறந்தவனே போற்றி
    ஓம் அசோகவனம் எரித்தவனே போற்றி
    ஓம் அர்ஜுனக்கொடியில் நின்றவனே போற்றி
    ஓம் அமாவாசையில் பிறந்தாய் போற்றி
    ஓம் ஆனந்த வடிவே போற்றி
    ஓம் ஆரோக்கியம் தருபவனே போற்றி
    ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி
    ஓம் இகபர சுகமளிப்பவனே போற்றி
    ஓம் இசை ஞானியே போற்றி
    ஓம் இறை வடிவே போற்றி
    ஓம் ஒப்பிலானே போற்றி
    ஓம் ஓங்கி வளர்ந்தோனே போற்றி
    ஓம் கதாயுதனே போற்றி
    ஓம் கலக்கம் தீர்ப்பவனே போற்றி
    ஓம் களங்கமிலாதவனே போற்றி
    ஓம் கர்மயோகியே போற்றி
    ஓம் கட்டறுப்பவனே போற்றி
    ஓம் கம்பத்தருள்பவனே போற்றி
    ஓம் கடல் தாவியவனே போற்றி
    ஓம் கரை சேர்ப்பவனே போற்றி
    ஓம் கீதாபாஷ்யனே போற்றி
    ஓம் கீர்த்தியளிப்பவனே போற்றி
    ஓம் கூப்பிய கரனே போற்றி
    ஓம் குறுகி நீண்டவனே போற்றி
    ஓம் குழப்பம் தீர்ப்பாய் போற்றி
    ஓம் கவுண்டின்ய கோத்திரனே போற்றி

    ஓம் சிரஞ்சீவி ஆனவனே போற்றி
    ஓம் சலியாத மனம் படைத்தாய் போற்றி
    ஓம் சஞ்சலம் தீர்ப்பாய் போற்றி
    ஓம் சிரஞ்சீவி கொணர்ந்தவனே போற்றி
    ஓம் சிந்தூரம் ஏற்பவனே போற்றி
    ஓம் சீதாராம சேவகனே போற்றி
    ஓம் சூராதி சூரனே போற்றி
    ஓம் சுக்ரீவக் காவலனே போற்றி
    ஓம் சொல்லின் செல்வனே போற்றி
    ஓம் சூரியனின் சீடனே போற்றி
    ஓம் சோர்வில்லாதவனே போற்றி
    ஓம் சோக நாசகனே போற்றி
    ஓம் தவயோகியே போற்றி
    ஓம் தத்துவஞானியே போற்றி
    ஓம் தயிரன்னப் பிரியனே போற்றி
    ஓம் துளசியில் மகிழ்வோனே போற்றி
    ஓம் தீதழிப்பவனே போற்றி
    ஓம் தீயும் சுடானே போற்றி
    ஓம் நரஹரியானவனே போற்றி
    ஓம் நாரத கர்வ பங்கனே போற்றி
    ஓம் நொடியில் அருள்பவனே போற்றி
    ஓம் நொடித்தோர் வாழ்வே போற்றி
    ஓம் பண்டிதனே போற்றி
    ஓம் பஞ்சமுகனே போற்றி
    ஓம் பக்தி வடிவனே போற்றி
    ஓம் பக்த ரட்சகனே போற்றி
    ஓம் பரதனைக் காத்தவனே போற்றி
    ஓம் பக்த ராமதாசரானவனே போற்றி
    ஓம் பருதியைப் பிடித்தவனே போற்றி
    ஓம் பயம் அறியாதவனே போற்றி
    ஓம் பகையை அழிப்பவனே போற்றி
    ஓம் பவழமல்லிப் பிரியனே போற்றி
    ஓம் பிரம்மச்சாரியே போற்றி
    ஓம் பீம சோதரனே போற்றி
    ஓம் புலனை வென்றவனே போற்றி
    ஓம் புகழ் சேர்ப்பவனே போற்றி
    ஓம் புண்ணியனே போற்றி
    ஓம் பொட்டிட மகிழ்பவனே போற்றி
    ஓம் மதி மந்திரியே போற்றி
    ஓம் மனோவேகனே போற்றி
    ஓம் மாவீரனே போற்றி
    ஓம் மாருதியே போற்றி
    ஓம் மார்கழியில் பிறந்தவனே போற்றி
    ஓம் மணம் கூட்டுவிப்பவனே போற்றி
    ஓம் மூலநட்சத்திரனே போற்றி
    ஓம் மூப்பில்லாதவனே போற்றி
    ஓம் ராமதாசனே போற்றி
    ஓம் ராமநாமப் பிரியனே போற்றி
    ஓம் ராமதூதனே போற்றி
    ஓம் ராம சோதரனே போற்றி
    ஓம் ராமபக்தரைக் காப்பவனே போற்றி

    ஓம் ராமனுயிர் காத்தவனே போற்றி
    ஓம் ராமனை அணைந்தவனே போற்றி
    ஓம் ராமஜெயம் அறிவித்தவனே போற்றி
    ஓம் ராமாயண நாயகனே போற்றி
    ஓம் ராமாயணப் பிரியனே போற்றி
    ஓம் ராகவன் கண்மணியே போற்றி
    ஓம் ருத்ர வடிவனே போற்றி
    ஓம் லட்சியப் புருஷனே போற்றி
    ஓம் லட்சுமணனைக் காத்தவனே போற்றி
    ஓம் லங்கா தகனனே போற்றி
    ஓம் லங்காவை வென்றவனே போற்றி
    ஓம் வஜ்ர தேகனே போற்றி
    ஓம் வாயுகுமாரனே போற்றி
    ஓம் வடைமாலைப் பிரியனே போற்றி
    ஓம் வணங்குவோரின் வாழ்வே போற்றி
    ஓம் விஷ்ணுஸ்வரூபனே போற்றி
    ஓம் விளையாடும் வானரனே போற்றி
    ஓம் விஸ்வரூபனே போற்றி
    ஓம் வியாசராஜருக்கு அருளியவனே போற்றி
    ஓம் வித்தையருள்பவனே போற்றி
    ஓம் வைராக்கிய மூர்த்தியே போற்றி
    ஓம் வைகுண்டம் விரும்பாதவனே போற்றி
    ஓம் வெண்ணெய் உகந்தவனே போற்றி
    ஓம் வெற்றிலைமாலை ஏற்பவனே போற்றி
    ஓம் வெற்றியளிப்பவனே போற்றி

  • sri-gayathri-ashtothram

    ஸ்ரீ காயத்ரி அஷ்டோத்ரம் (108 அம்மன் போற்றி)

    ஓம் ஸ்ரீம் உலக நாயகியே போற்றி
    ஓம் ஸ்ரீம் பிரபஞ்ச நாயகியே போற்றி
    ஓம் ஸ்ரீம் தேவமாதவே போற்றி
    ஓம் ஸ்ரீம் திகம்பரியே போற்றி
    ஓம் ஸ்ரீம் திவ்ய சொருபிணியே போற்றி
    ஓம் ஸ்ரீம் பஞ்ச முகியே போற்றி
    ஓம் ஸ்ரீம் பராசக்தியே போற்றி
    ஓம் ஸ்ரீம் பார்வதி தேவியே போற்றி
    ஓம் ஸ்ரீம் மீனாட்சி அம்மையே போற்றி
    ஓம் ஸ்ரீம் காமாட்சி அம்மையே போற்றி
    ஓம் ஸ்ரீம் விசாலாட்சி தாயே போற்றி
    ஓம் ஸ்ரீம் கர்ப்ப ரட்ச அம்பிகையே போற்றி
    ஓம் ஸ்ரீம் காத்தாயம்மா போற்றி
    ஓம் ஸ்ரீம் கருமாரி அம்மா போற்றி
    ஓம் ஸ்ரீம் சமயபுரத் தாயே போற்றி
    ஓம் ஸ்ரீம் முத்து மாரி அம்மா போற்றி
    ஓம் ஸ்ரீம் தில்லை மாகாளியே போற்றி
    ஓம் ஸ்ரீம் மதுரை மாகாளியே போற்றி
    ஓம் ஸ்ரீம் நடன காளியே போற்றி
    ஓம் ஸ்ரீம் கால ரூபிணியே போற்றி
    ஓம் ஸ்ரீம் அகில அண்ட ஈஸ்வரியே போற்றி
    ஓம் ஸ்ரீம் கன்யா குமாரியே போற்றி
    ஓம் ஸ்ரீம் பானுமதியே போற்றி
    ஓம் ஸ்ரீம் வக்ர காளியே போற்றி
    ஓம் ஸ்ரீம் அபிராமித் தாயே போற்றி
    ஓம் ஸ்ரீம் ராஜ ராஜேஸ்வரியே போற்றி
    ஓம் ஸ்ரீம் புவனேஸ்வரியே போற்றி
    ஓம் ஸ்ரீம் ப்ராம்மண்யே போற்றி
    ஓம் ஸ்ரீம் கௌமாரியே போற்றி
    ஓம் ஸ்ரீம் வாராகியே போற்றி
    ஓம் ஸ்ரீம் சித்தா தேவியே போற்றி
    ஓம் ஸ்ரீம் வைஷ்ணவியே போற்றி
    ஓம் ஸ்ரீம் மகேந்திரியே போற்றி
    ஓம் ஸ்ரீம் சாமுண்டீஸ்வரியே போற்றி
    ஓம் ஸ்ரீம் மகேஸ்வரியே போற்றி
    ஓம் ஸ்ரீம் குண்டாலினியே போற்றி
    ஓம் ஸ்ரீம் பாலாம்பிகையே போற்றி
    ஓம் ஸ்ரீம் மூகாம்பிகையே போற்றி
    ஓம் ஸ்ரீம் பாகவதியம்மா போற்றி
    ஓம் ஸ்ரீம் ஸ்ர்வ காமினீ போற்றி
    ஓம் ஸ்ரீம் விலாசினியே போற்றி
    ஓம் ஸ்ரீம் விஸ்வமாயா போற்றி
    ஓம் ஸ்ரீம் விஷ்ணு துர்கையே போற்றி
    ஓம் ஸ்ரீம் சிவ துர்கையே போற்றி
    ஓம் ஸ்ரீம் பிரம்ம துர்கையே போற்றி
    ஓம் ஸ்ரீம் மகிஷாஸுர மர்த்தினியே போற்றி
    ஓம் ஸ்ரீம் கால சம்ஹாரிணியே போற்றி
    ஓம் ஸ்ரீம் முக்கண்ணியே போற்றி
    ஓம் ஸ்ரீம் பிரம்ம சக்தியே போற்றி
    ஓம் ஸ்ரீம் விஷ்ணு சக்தியே போற்றி
    ஓம் ஸ்ரீம் சிவ சக்தியே போற்றி
    ஓம் ஸ்ரீம் இச்சா சக்தியே போற்றி
    ஓம் ஸ்ரீம் கிரியா சக்தியே போற்றி
    ஓம் ஸ்ரீம் ஞான சக்தியே போற்றி
    ஓம் ஸ்ரீம் நாத சக்தியே போற்றி
    ஓம் ஸ்ரீம் விந்து சக்தியே போற்றி
    ஓம் ஸ்ரீம் ப்ரணவ சக்தியே போற்றி
    ஓம் ஸ்ரீம் நந்தினியே போற்றி
    ஓம் ஸ்ரீம் மகாலட்சுமியே போற்றி
    ஓம் ஸ்ரீம் ஆதிலட்சுமியே போற்றி
    ஓம் ஸ்ரீம் அன்னலட்சுமியெ போற்றி
    ஓம் ஸ்ரீம் தனலட்சுமியே போற்றி
    ஓம் ஸ்ரீம் தான்யலட்சுமியே போற்றி
    ஓம் ஸ்ரீம் வித்யாலட்சுமியே போற்றி
    ஓம் ஸ்ரீம் சந்தானலட்சுமியே போற்றி
    ஓம் ஸ்ரீம் தைர்யலட்சுமியே போற்றி
    ஓம் ஸ்ரீம் வீரலட்சுமியே போற்றி
    ஓம் ஸ்ரீம் வைராக்கியலட்சுமியே போற்றி
    ஓம் ஸ்ரீம் ஜயலட்சுமியெ போற்றி
    ஓம் ஸ்ரீம் விஜயலட்சுமியே போற்றி
    ஓம் ஸ்ரீம் ஞானலட்சுமியே போற்றி
    ஓம் ஸ்ரீம் தீபலட்சுமியே போற்றி
    ஓம் ஸ்ரீம் மங்களலட்சுமியே போற்றி
    ஓம் ஸ்ரீம் குபேரலட்சுமியே போற்றி
    ஓம் ஸ்ரீம் ஐஸ்வர்யலட்சுமியே போற்றி
    ஓம் ஸ்ரீம் மோகனலட்சுமியே போற்றி
    ஓம் ஸ்ரீம் ரட்சகலட்சுமியே போற்றி
    ஓம் ஸ்ரீம் முக்திலட்சுமியே போற்றி
    ஓம் ஸ்ரீம் சித்தலட்சுமியே போற்றி
    ஓம் ஸ்ரீம் சாரதாம்பிகையே போற்றி
    ஓம் ஸ்ரீம் ஸரஸ்வதி தேவியே போற்றி
    ஓம் ஸ்ரீம் ஸப்த ஸ்வர ரூபினியே போற்றி
    ஓம் ஸ்ரீம் ஸ்ரீ வித்யா தேவியே போற்றி
    ஓம் ஸ்ரீம் கலைவாணியே போற்றி
    ஓம் ஸ்ரீம் சகல கலா வல்லியே போற்றி
    ஓம் ஸ்ரீம் வாக்தேவியே போற்றி
    ஓம் ஸ்ரீம் நாமகளே போற்றி
    ஓம் ஸ்ரீம் வேத ரூபினியே போற்றி
    ஓம் ஸ்ரீம் வேதாந்தமுடிவே போற்றி
    ஓம் ஸ்ரீம் மந்த்ர ரூபிணியே போற்றி
    ஓம் ஸ்ரீம் ஸ்ரீ தேவியே போற்றி
    ஓம் ஸ்ரீம் பூ தேவியே போற்றி
    ஓம் ஸ்ரீம் அன்ன வாகினியே போற்றி
    ஓம் ஸ்ரீம் சிம்மவாகினியே போற்றி
    ஓம் ஸ்ரீம் மாங்காளியம்மா போற்றி
    ஓம் ஸ்ரீம் சாந்தா தேவியே போற்றி
    ஓம் ஸ்ரீம் கங்கா தேவியே போற்றி
    ஓம் ஸ்ரீம் யமுனா தேவியே போற்றி
    ஓம் ஸ்ரீம் பாகிரதியே போற்றி
    ஓம் ஸ்ரீம் காவிரித் தாயே போற்றி
    ஓம் ஸ்ரீம் கர்பக விருட்சமே போற்றி
    ஓம் ஸ்ரீம் காமதேனுவே போற்றி
    ஓம் ஸ்ரீம் சிந்தாமணியே போற்றி
    ஓம் ஸ்ரீம் மனோன்மணியே போற்றி
    ஓம் ஸ்ரீம் சத்ய ரூபிணியே போற்றி
    ஓம் ஸ்ரீம் ஜகன் மாதாலலிதாம்பிகையே போற்றி
    ஓம் ஸ்ரீம் சாவித்ரி தேவியே போற்றி
    ஓம் ஸ்ரீம் காயத்ரி மாதாவே போற்றி
    ஓம் ஸர்வ மங்கள சம்பூர்ண மகாதேவிக்கு அஷ்டோத்ர சதநாம அர்ச்சனை ஸமர்ப்பயாமி
    ஓம் சாந்தி சாந்தி சாந்தி

  • murugan-108-potrigal

    1. ஓம் ஆறுமுகனே போற்றி
    2. ஓம் ஆண்டியே போற்றி
    3. ஓம் அரன்மகனே போற்றி
    4. ஓம் அபிஷேகப்பிரியனே போற்றி
    5. ஓம் அழகா போற்றி
    6. ஓம் அபயா போற்றி
    7. ஓம் ஆதிமூலமே போற்றி
    8. ஓம் ஆவினன் குடியோய் போற்றி
    9. ஓம் இறைவனே போற்றி
    10. ஓம் இளையவனே போற்றி
    11. ஓம் இடும்பனை வென்றவா போற்றி
    12. ஓம் இடர் களைவோனே போற்றி
    13. ஓம் ஈசன் மைந்தா போற்றி
    14. ஓம் ஈராறு கண்ணனே போற்றி
    15. ஓம் உமையவள் மகனே போற்றி
    16. ஓம் உலக நாயகனே போற்றி
    17. ஓம் ஐயனே போற்றி
    88. ஓம் ஐங்கரன் தம்பியே போற்றி
    19. ஓம் ஐயப்பன் தம்பியே போற்றி
    20. ஓம் ஒப்பிலாதவனே போற்றி
    21. ஓம் ஒங்காரனே போற்றி
    22. ஓம் ஓதுவார்க்கினியவனே போற்றி
    23. ஓம் அவ்வைக்கு அருளியவனே போற்றி
    24. ஓம் கருணாகரரே போற்றி
    25. ஓம் கதிர்வேலவனே போற்றி
    26. ஓம் கந்தனே போற்றி
    27. ஓம் கடம்பனே போற்றி
    28. ஓம் கவசப்பிரியனே போற்றி
    29. ஓம் கார்த்திகை மைந்தனே போற்றி
    30. ஓம் கிரிராஜனே போற்றி
    31. ஓம் கிருபாநிதியே போற்றி
    32. ஓம் குகனே போற்றி
    33. ஓம் குமரனே போற்றி
    34. ஓம் குன்றம் அமர்ந்தவனே போற்றி
    35. ஓம் குறத்தி நாதனே போற்றி
    36. ஓம் குணக்கடலே போற்றி
    37. ஓம் குருபரனே போற்றி
    38. ஓம் சங்கரன் புதல்வனே போற்றி
    39. ஓம் சஷ்டி நாயகனே போற்றி
    40. ஓம் சரவணபவனே போற்றி
    41. ஓம் சரணாகதியே போற்றி
    42. ஓம் சத்ரு சங்காரனே போற்றி
    43. ஓம் சர்வேஸ்வரனே போற்றி
    44. ஓம் சிக்கல்பதியே போற்றி
    45. ஓம் சிங்காரனே போற்றி
    46. ஓம் சுப்பிரமணியனே போற்றி
    47. ஓம் சரபூபதியே போற்றி
    48. ஓம் சுந்தரனே போற்றி
    49. ஓம் சுகுமாரனே போற்றி
    50. ஓம் சுவாமிநாதனே போற்றி
    51. ஓம் சுகம் தருபவனே போற்றி
    52. ஓம் சூழ் ஒளியே போற்றி
    53. ஓம் சூரசம்ஹாரனே போற்றி
    54. ஓம் செல்வனே போற்றி
    55. ஓம் செந்தூர் காவலனே போற்றி
    56. ஓம் சேவல் கொடியோனே போற்றி
    57. ஓம் சேவகனே போற்றி
    58. ஓம் சேனாபதியே போற்றி
    59. ஓம் சேனைத்தலைவனே போற்றி
    60. ஓம் சொற்பதம் கடந்தவனே போற்றி
    61. ஓம் சோலையப்பனே போற்றி
    62. ஓம் ஞானியே போற்றி
    63. ஓம் ஞாயிறே போற்றி
    64. ஓம் ஞாலம் காப்பவனே போற்றி
    65. ஓம் ஞான உபதேசியே போற்றி
    66. ஓம் தணிகாசலனே போற்றி
    67. ஓம் தயாபரனே போற்றி
    68. ஓம் தண்டாயுதாபாணியே போற்றி
    69. ஓம் தகப்பன் சுவாமியே போற்றி
    70. ஓம் திருவே போற்றி
    71. ஓம் திங்களே போற்றி
    72. ஓம் திருவருளே போற்றி
    73. ஓம் திருமலை நாதனே போற்றி
    74. ஓம் தினைப்புனம் புகுந்தோய் போற்றி
    75. ஓம் துணைவா போற்றி
    76. ஓம் துரந்தரா போற்றி
    77. ஓம் தென்பரங்குன்றனே போற்றி
    78. ஓம் தெவிட்டா இன்பமே போற்றி
    79. ஓம் தேவாதி தேவனே போற்றி
    80. ஓம் தேவை அருள்வாய் போற்றி
    81. ஓம் தேரேறி வருவோய் போற்றி
    82. ஓம் தேசத் தெய்வமே போற்றி
    83. ஓம் நாதனே போற்றி
    84. ஓம் நிலமனே போற்றி
    85. ஓம் நீறணிந்தவனே போற்றி
    86. ஓம் பரபிரம்மமே போற்றி
    87. ஓம் பழனியாண்டவனே போற்றி
    88. ஓம் பாலகுமரனே போற்றி
    89. ஓம் பன்னிரு கையனே போற்றி
    90. ஓம் பகை ஒழிப்பவனே போற்றி
    91. ஓம் பிரணவமே போற்றி
    92. ஓம் போகர் நாதனே போற்றி
    93. ஓம் போற்றப்படுவோனே போற்றி
    94. ஓம் மறைநாயகனே போற்றி
    95. ஓம் மயில் வாகனனே போற்றி
    96. ஓம் மகா சேனனே போற்றி
    97. ஓம் மருத மலையானே போற்றி
    98. ஓம் மால் மருகனே போற்றி
    99. ஓம் மாவித்தையே போற்றி
    100. ஓம் முருகனே போற்றி
    101. ஓம் யோக சித்தியே போற்றி
    102. ஓம் வயலூரானே போற்றி
    103. ஓம் வள்ளி நாயகனே போற்றி
    104. ஓம் விராலிமலையானே போற்றி
    105. ஓம் விநாயகன் சோதரனே போற்றி
    106. ஓம் வினைகளைக் களைவாய் போற்றி
    107. வேலவனே போற்றி
    108. ஓம் வேத முதல்வனே போற்றி போற்றி

  • 108

    திருத்தணி முருகன் கோயிலின் உபகோயிலான கோட்ட ஆறுமுக சுவாமி கோயிலின் மண்டலாபிஷேக நிறைவு விழா, 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.
    நந்தி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள இக்கோயிலின் மகா குடமுழுக்கு விழா கடந்த மாதம் 10-ஆம் தேதி விமரிசையாக நடைபெற்றது.
    இதைத்தொடர்ந்து, தினமும் மண்டலாபிஷேகம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.
    மண்டலாபிஷேக நிறைவு விழாவையொட்டி, கோயில் வளாகத்தில் யாக சாலை, 5 கலசங்கள் வைத்து, சிறப்பு ஹோமம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. மேலும், 108 சங்காபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
    இதில், திருத்தணி பெரிய தெரு பஜனை குழுவினர் பங்கேற்று, முருகன் பக்தி பாடல்களை பாடினர். இதைத்தொடர்ந்து கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.