Tag: 108

  • Gayathri devi 108 pottri

    ஸ்ரீ காயத்ரி அம்மன் 108 அஷ்டோத்ரம் போற்றி

    ஓம் ஸ்ரீம் உலக நாயகியே போற்றி
    ஓம் ஸ்ரீம் பிரபஞ்ச நாயகியே போற்றி
    ஓம் ஸ்ரீம் தேவமாதவே போற்றி
    ஓம் ஸ்ரீம் திகம்பரியே போற்றி
    ஓம் ஸ்ரீம் திவ்ய சொருபிணியே போற்றி
    ஓம் ஸ்ரீம் பஞ்ச முகியே போற்றி
    ஓம் ஸ்ரீம் பராசக்தியே போற்றி
    ஓம் ஸ்ரீம் பார்வதி தேவியே போற்றி
    ஓம் ஸ்ரீம் மீனாட்சி அம்மையே போற்றி
    ஓம் ஸ்ரீம் காமாட்சி அம்மையே போற்றி

    ஓம் ஸ்ரீம் விசாலாட்சி தாயே போற்றி
    ஓம் ஸ்ரீம் கர்ப்ப ரட்ச அம்பிகையே போற்றி
    ஓம் ஸ்ரீம் காத்தாயம்மா போற்றி
    ஓம் ஸ்ரீம் கருமாரி அம்மா போற்றி
    ஓம் ஸ்ரீம் சமயபுரத் தாயே போற்றி
    ஓம் ஸ்ரீம் முத்து மாரி அம்மா போற்றி
    ஓம் ஸ்ரீம் தில்லை மாகாளியே போற்றி
    ஓம் ஸ்ரீம் மதுரை மாகாளியே போற்றி
    ஓம் ஸ்ரீம் நடன காளியே போற்றி
    ஓம் ஸ்ரீம் கால ரூபிணியே போற்றி

    ஓம் ஸ்ரீம் அகில அண்ட ஈஸ்வரியே போற்றி
    ஓம் ஸ்ரீம் கன்யா குமாரியே போற்றி
    ஓம் ஸ்ரீம் பானுமதியே போற்றி
    ஓம் ஸ்ரீம் வக்ர காளியே போற்றி
    ஓம் ஸ்ரீம் அபிராமித் தாயே போற்றி
    ஓம் ஸ்ரீம் ராஜ ராஜேஸ்வரியே போற்றி
    ஓம் ஸ்ரீம் புவனேஸ்வரியே போற்றி
    ஓம் ஸ்ரீம் ப்ராம்மண்யே போற்றி
    ஓம் ஸ்ரீம் கௌமாரியே போற்றி
    ஓம் ஸ்ரீம் வாராகியே போற்றி

    ஓம் ஸ்ரீம் சித்தா தேவியே போற்றி
    ஓம் ஸ்ரீம் வைஷ்ணவியே போற்றி
    ஓம் ஸ்ரீம் மகேந்திரியே போற்றி
    ஓம் ஸ்ரீம் சாமுண்டீஸ்வரியே போற்றி
    ஓம் ஸ்ரீம் மகேஸ்வரியே போற்றி
    ஓம் ஸ்ரீம் குண்டாலினியே போற்றி
    ஓம் ஸ்ரீம் பாலாம்பிகையே போற்றி
    ஓம் ஸ்ரீம் மூகாம்பிகையே போற்றி
    ஓம் ஸ்ரீம் பாகவதியம்மா போற்றி
    ஓம் ஸ்ரீம் ஸ்ர்வ காமினீ போற்றி
    ஓம் ஸ்ரீம் விலாசினியே போற்றி

    ஓம் ஸ்ரீம் விஸ்வமாயா போற்றி
    ஓம் ஸ்ரீம் விஷ்ணு துர்கையே போற்றி
    ஓம் ஸ்ரீம் சிவ துர்கையே போற்றி
    ஓம் ஸ்ரீம் பிரம்ம துர்கையே போற்றி
    ஓம் ஸ்ரீம் மகிஷாஸுர மர்த்தினியே போற்றி
    ஓம் ஸ்ரீம் கால சம்ஹாரிணியே போற்றி
    ஓம் ஸ்ரீம் முக்கண்ணியே போற்றி
    ஓம் ஸ்ரீம் பிரம்ம சக்தியே போற்றி
    ஓம் ஸ்ரீம் விஷ்ணு சக்தியே போற்றி
    ஓம் ஸ்ரீம் சிவ சக்தியே போற்றி

    ஓம் ஸ்ரீம் இச்சா சக்தியே போற்றி
    ஓம் ஸ்ரீம் கிரியா சக்தியே போற்றி
    ஓம் ஸ்ரீம் ஞான சக்தியே போற்றி
    ஓம் ஸ்ரீம் நாத சக்தியே போற்றி
    ஓம் ஸ்ரீம் விந்து சக்தியே போற்றி
    ஓம் ஸ்ரீம் ப்ரணவ சக்தியே போற்றி
    ஓம் ஸ்ரீம் நந்தினியே போற்றி
    ஓம் ஸ்ரீம் மகாலட்சுமியே போற்றி
    ஓம் ஸ்ரீம் ஆதிலட்சுமியே போற்றி
    ஓம் ஸ்ரீம் அன்னலட்சுமியெ போற்றி

    ஓம் ஸ்ரீம் தனலட்சுமியே போற்றி
    ஓம் ஸ்ரீம் தான்யலட்சுமியே போற்றி
    ஓம் ஸ்ரீம் வித்யாலட்சுமியே போற்றி
    ஓம் ஸ்ரீம் சந்தானலட்சுமியே போற்றி
    ஓம் ஸ்ரீம் தைர்யலட்சுமியே போற்றி
    ஓம் ஸ்ரீம் வீரலட்சுமியே போற்றி
    ஓம் ஸ்ரீம் வைராக்கியலட்சுமியே போற்றி
    ஓம் ஸ்ரீம் ஜயலட்சுமியெ போற்றி
    ஓம் ஸ்ரீம் விஜயலட்சுமியே போற்றி
    ஓம் ஸ்ரீம் ஞானலட்சுமியே போற்றி

    ஓம் ஸ்ரீம் தீபலட்சுமியே போற்றி
    ஓம் ஸ்ரீம் மங்களலட்சுமியே போற்றி
    ஓம் ஸ்ரீம் குபேரலட்சுமியே போற்றி
    ஓம் ஸ்ரீம் ஐஸ்வர்யலட்சுமியே போற்றி
    ஓம் ஸ்ரீம் மோகனலட்சுமியே போற்றி
    ஓம் ஸ்ரீம் ரட்சகலட்சுமியே போற்றி
    ஓம் ஸ்ரீம் முக்திலட்சுமியே போற்றி
    ஓம் ஸ்ரீம் சித்தலட்சுமியே போற்றி
    ஓம் ஸ்ரீம் சாரதாம்பிகையே போற்றி
    ஓம் ஸ்ரீம் ஸரஸ்வதி தேவியே போற்றி

    ஓம் ஸ்ரீம் ஸப்த ஸ்வர ரூபினியே போற்றி
    ஓம் ஸ்ரீம் ஸ்ரீ வித்யா தேவியே போற்றி
    ஓம் ஸ்ரீம் கலைவாணியே போற்றி
    ஓம் ஸ்ரீம் சகல கலா வல்லியே போற்றி
    ஓம் ஸ்ரீம் வாக்தேவியே போற்றி
    ஓம் ஸ்ரீம் நாமகளே போற்றி
    ஓம் ஸ்ரீம் வேத ரூபினியே போற்றி
    ஓம் ஸ்ரீம் வேதாந்தமுடிவே போற்றி
    ஓம் ஸ்ரீம் மந்த்ர ரூபிணியே போற்றி
    ஓம் ஸ்ரீம் ஸ்ரீ தேவியே போற்றி

    ஓம் ஸ்ரீம் பூ தேவியே போற்றி
    ஓம் ஸ்ரீம் அன்ன வாகினியே போற்றி
    ஓம் ஸ்ரீம் சிம்மவாகினியே போற்றி
    ஓம் ஸ்ரீம் மாங்காளியம்மா போற்றி
    ஓம் ஸ்ரீம் சாந்தா தேவியே போற்றி
    ஓம் ஸ்ரீம் கங்கா தேவியே போற்றி
    ஓம் ஸ்ரீம் யமுனா தேவியே போற்றி
    ஓம் ஸ்ரீம் பாகிரதியே போற்றி
    ஓம் ஸ்ரீம் காவிரித் தாயே போற்றி
    ஓம் ஸ்ரீம் கர்பக விருட்சமே போற்றி

    ஓம் ஸ்ரீம் காமதேனுவே போற்றி
    ஓம் ஸ்ரீம் சிந்தாமணியே போற்றி
    ஓம் ஸ்ரீம் மனோன்மணியே போற்றி
    ஓம் ஸ்ரீம் சத்ய ரூபிணியே போற்றி
    ஓம் ஸ்ரீம் ஜகன் மாதாலலிதாம்பிகையே போற்றி
    ஓம் ஸ்ரீம் சாவித்ரி தேவியே போற்றி
    ஓம் ஸ்ரீம் காயத்ரி மாதாவே போற்றி
    ஓம் ஸர்வ மங்கள சம்பூர்ண மகாதேவிக்கு அஷ்டோத்ர சதநாம அர்ச்சனை ஸமர்ப்பயாமி
    ஓம் சாந்தி சாந்தி சாந்தி

  • Murug peruman 108 pootri

    1. ஓம் ஆறுமுகனே போற்றி
    2. ஓம் ஆண்டியே போற்றி
    3. ஓம் அரன்மகனே போற்றி
    4. ஓம் அபிஷேகப்பிரியனே போற்றி
    5. ஓம் அழகா போற்றி
    6. ஓம் அபயா போற்றி
    7. ஓம் ஆதிமூலமே போற்றி
    8. ஓம் ஆவினன் குடியோய் போற்றி
    9. ஓம் இறைவனே போற்றி
    10. ஓம் இளையவனே போற்றி
    11. ஓம் இடும்பனை வென்றவா போற்றி
    12. ஓம் இடர் களைவோனே போற்றி
    13. ஓம் ஈசன் மைந்தா போற்றி
    14. ஓம் ஈராறு கண்ணனே போற்றி
    15. ஓம் உமையவள் மகனே போற்றி
    16. ஓம் உலக நாயகனே போற்றி
    17. ஓம் ஐயனே போற்றி
    88. ஓம் ஐங்கரன் தம்பியே போற்றி
    19. ஓம் ஐயப்பன் தம்பியே போற்றி
    20. ஓம் ஒப்பிலாதவனே போற்றி
    21. ஓம் ஒங்காரனே போற்றி
    22. ஓம் ஓதுவார்க்கினியவனே போற்றி
    23. ஓம் அவ்வைக்கு அருளியவனே போற்றி
    24. ஓம் கருணாகரரே போற்றி
    25. ஓம் கதிர்வேலவனே போற்றி
    26. ஓம் கந்தனே போற்றி
    27. ஓம் கடம்பனே போற்றி
    28. ஓம் கவசப்பிரியனே போற்றி
    29. ஓம் கார்த்திகை மைந்தனே போற்றி
    30. ஓம் கிரிராஜனே போற்றி
    31. ஓம் கிருபாநிதியே போற்றி
    32. ஓம் குகனே போற்றி
    33. ஓம் குமரனே போற்றி
    34. ஓம் குன்றம் அமர்ந்தவனே போற்றி
    35. ஓம் குறத்தி நாதனே போற்றி
    36. ஓம் குணக்கடலே போற்றி
    37. ஓம் குருபரனே போற்றி
    38. ஓம் சங்கரன் புதல்வனே போற்றி
    39. ஓம் சஷ்டி நாயகனே போற்றி
    40. ஓம் சரவணபவனே போற்றி
    41. ஓம் சரணாகதியே போற்றி
    42. ஓம் சத்ரு சங்காரனே போற்றி
    43. ஓம் சர்வேஸ்வரனே போற்றி
    44. ஓம் சிக்கல்பதியே போற்றி
    45. ஓம் சிங்காரனே போற்றி
    46. ஓம் சுப்பிரமணியனே போற்றி
    47. ஓம் சரபூபதியே போற்றி
    48. ஓம் சுந்தரனே போற்றி
    49. ஓம் சுகுமாரனே போற்றி
    50. ஓம் சுவாமிநாதனே போற்றி
    51. ஓம் சுகம் தருபவனே போற்றி
    52. ஓம் சூழ் ஒளியே போற்றி
    53. ஓம் சூரசம்ஹாரனே போற்றி
    54. ஓம் செல்வனே போற்றி
    55. ஓம் செந்தூர் காவலனே போற்றி
    56. ஓம் சேவல் கொடியோனே போற்றி
    57. ஓம் சேவகனே போற்றி
    58. ஓம் சேனாபதியே போற்றி
    59. ஓம் சேனைத்தலைவனே போற்றி
    60. ஓம் சொற்பதம் கடந்தவனே போற்றி
    61. ஓம் சோலையப்பனே போற்றி
    62. ஓம் ஞானியே போற்றி
    63. ஓம் ஞாயிறே போற்றி
    64. ஓம் ஞாலம் காப்பவனே போற்றி
    65. ஓம் ஞான உபதேசியே போற்றி
    66. ஓம் தணிகாசலனே போற்றி
    67. ஓம் தயாபரனே போற்றி
    68. ஓம் தண்டாயுதாபாணியே போற்றி
    69. ஓம் தகப்பன் சுவாமியே போற்றி
    70. ஓம் திருவே போற்றி
    71. ஓம் திங்களே போற்றி
    72. ஓம் திருவருளே போற்றி
    73. ஓம் திருமலை நாதனே போற்றி
    74. ஓம் தினைப்புனம் புகுந்தோய் போற்றி
    75. ஓம் துணைவா போற்றி
    76. ஓம் துரந்தரா போற்றி
    77. ஓம் தென்பரங்குன்றனே போற்றி
    78. ஓம் தெவிட்டா இன்பமே போற்றி
    79. ஓம் தேவாதி தேவனே போற்றி
    80. ஓம் தேவை அருள்வாய் போற்றி
    81. ஓம் தேரேறி வருவோய் போற்றி
    82. ஓம் தேசத் தெய்வமே போற்றி
    83. ஓம் நாதனே போற்றி
    84. ஓம் நிலமனே போற்றி
    85. ஓம் நீறணிந்தவனே போற்றி
    86. ஓம் பரபிரம்மமே போற்றி
    87. ஓம் பழனியாண்டவனே போற்றி
    88. ஓம் பாலகுமரனே போற்றி
    89. ஓம் பன்னிரு கையனே போற்றி
    90. ஓம் பகை ஒழிப்பவனே போற்றி
    91. ஓம் பிரணவமே போற்றி
    92. ஓம் போகர் நாதனே போற்றி
    93. ஓம் போற்றப்படுவோனே போற்றி
    94. ஓம் மறைநாயகனே போற்றி
    95. ஓம் மயில் வாகனனே போற்றி
    96. ஓம் மகா சேனனே போற்றி
    97. ஓம் மருத மலையானே போற்றி
    98. ஓம் மால் மருகனே போற்றி
    99. ஓம் மாவித்தையே போற்றி
    100. ஓம் முருகனே போற்றி
    101. ஓம் யோக சித்தியே போற்றி
    102. ஓம் வயலூரானே போற்றி
    103. ஓம் வள்ளி நாயகனே போற்றி
    104. ஓம் விராலிமலையானே போற்றி
    105. ஓம் விநாயகன் சோதரனே போற்றி
    106. ஓம் வினைகளைக் களைவாய் போற்றி
    107. வேலவனே போற்றி
    108. ஓம் வேத முதல்வனே போற்றி போற்றி

  • Thirokovilur mahamariamman palkudam

    திருக்கோவிலூர் மகாமாரியம்மன் ஆலயத்தில்  பெண்கள் 108 பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்,

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் என்.ஜி.ஜி.ஒ நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் பெண்கள் 108 பால்குடம் எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். முன்னதாக பால் அபிஷேகம், மகாதீபஆராதனை, பல்வேறு வாசனை திரவ அபிஷேகம் நடைபெற்றது,

    இதை அடுத்து  மேளதாளங்கள் முழங்க முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலம் வெகு விமர்சையாக நடைபெற்றது, மாலை அம்மன்  அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் கலந்து தங்களது சுமங்களியை பாதுகாக்கும் வகையிலும் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும் என்பதை வேண்டி கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.

  • Hanuman 108 Potri

    ஓம் அனுமனே போற்றி
    ஓம் அஞ்சனை மைந்தனே போற்றி

    ஓம் அறக்காவலனே போற்றி
    ஓம் அவதார புருஷனே போற்றி

    ஓம் அறிஞனே போற்றி
    ஓம் அடக்கவடிவே போற்றி
    ஓம் அதிகாலை பிறந்தவனே போற்றி
    ஓம் அசோகவனம் எரித்தவனே போற்றி
    ஓம் அர்ஜுனக்கொடியில் நின்றவனே போற்றி
    ஓம் அமாவாசையில் பிறந்தாய் போற்றி
    ஓம் ஆனந்த வடிவே போற்றி

    ஓம் ஆரோக்கியம் தருபவனே போற்றி
    ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி
    ஓம் இகபர சுகமளிப்பவனே போற்றி
    ஓம் இசை ஞானியே போற்றி
    ஓம் இறை வடிவே போற்றி
    ஓம் ஒப்பிலானே போற்றி
    ஓம் ஓங்கி வளர்ந்தோனே போற்றி

    ஓம் கதாயுதனே போற்றி
    ஓம் கலக்கம் தீர்ப்பவனே போற்றி
    ஓம் களங்கமிலாதவனே போற்றி
    ஓம் கர்மயோகியே போற்றி
    ஓம் கட்டறுப்பவனே போற்றி
    ஓம் கம்பத்தருள்பவனே போற்றி
    ஓம் கடல் தாவியவனே போற்றி

    ஓம் கரை சேர்ப்பவனே போற்றி
    ஓம் கீதாபாஷ்யனே போற்றி
    ஓம் கீர்த்தியளிப்பவனே போற்றி
    ஓம் கூப்பிய கரனே போற்றி
    ஓம் குறுகி நீண்டவனே போற்றி
    ஓம் குழப்பம் தீர்ப்பாய் போற்றி
    ஓம் கவுண்டின்ய கோத்திரனே போற்றி

    ஓம் சிரஞ்சீவி ஆனவனே போற்றி
    ஓம் சலியாத மனம் படைத்தாய் போற்றி
    ஓம் சஞ்சலம் தீர்ப்பாய் போற்றி
    ஓம் சிரஞ்சீவி கொணர்ந்தவனே போற்றி
    ஓம் சிந்தூரம் ஏற்பவனே போற்றி
    ஓம் சீதாராம சேவகனே போற்றி
    ஓம் சூராதி சூரனே போற்றி
    ஓம் சுக்ரீவக் காவலனே போற்றி

    ஓம் சொல்லின் செல்வனே போற்றி
    ஓம் சூரியனின் சீடனே போற்றி
    ஓம் சோர்வில்லாதவனே போற்றி
    ஓம் சோக நாசகனே போற்றி
    ஓம் தவயோகியே போற்றி
    ஓம் தத்துவஞானியே போற்றி
    ஓம் தயிரன்னப் பிரியனே போற்றி
    ஓம் துளசியில் மகிழ்வோனே போற்றி

    ஓம் தீதழிப்பவனே போற்றி
    ஓம் தீயும் சுடானே போற்றி
    ஓம் நரஹரியானவனே போற்றி
    ஓம் நாரத கர்வ பங்கனே போற்றி
    ஓம் நொடியில் அருள்பவனே போற்றி
    ஓம் நொடித்தோர் வாழ்வே போற்றி
    ஓம் பண்டிதனே போற்றி
    ஓம் பஞ்சமுகனே போற்றி
    ஓம் பக்தி வடிவனே போற்றி
    ஓம் பக்த ரட்சகனே போற்றி
    ஓம் பரதனைக் காத்தவனே போற்றி

    ஓம் பக்த ராமதாசரானவனே போற்றி
    ஓம் பருதியைப் பிடித்தவனே போற்றி
    ஓம் பயம் அறியாதவனே போற்றி
    ஓம் பகையை அழிப்பவனே போற்றி
    ஓம் பவழமல்லிப் பிரியனே போற்றி
    ஓம் பிரம்மச்சாரியே போற்றி
    ஓம் பீம சோதரனே போற்றி
    ஓம் புலனை வென்றவனே போற்றி
    ஓம் புகழ் சேர்ப்பவனே போற்றி
    ஓம் புண்ணியனே போற்றி
    ஓம் பொட்டிட மகிழ்பவனே போற்றி
    ஓம் மதி மந்திரியே போற்றி
    ஓம் மனோவேகனே போற்றி

    ஓம் மாவீரனே போற்றி
    ஓம் மாருதியே போற்றி
    ஓம் மார்கழியில் பிறந்தவனே போற்றி
    ஓம் மணம் கூட்டுவிப்பவனே போற்றி
    ஓம் மூலநட்சத்திரனே போற்றி
    ஓம் மூப்பில்லாதவனே போற்றி
    ஓம் ராமதாசனே போற்றி
    ஓம் ராமநாமப் பிரியனே போற்றி
    ஓம் ராமதூதனே போற்றி
    ஓம் ராம சோதரனே போற்றி
    ஓம் ராமபக்தரைக் காப்பவனே போற்றி

    ஓம் ராமனுயிர் காத்தவனே போற்றி
    ஓம் ராமனை அணைந்தவனே போற்றி
    ஓம் ராமஜெயம் அறிவித்தவனே போற்றி
    ஓம் ராமாயண நாயகனே போற்றி
    ஓம் ராமாயணப் பிரியனே போற்றி
    ஓம் ராகவன் கண்மணியே போற்றி
    ஓம் ருத்ர வடிவனே போற்றி
    ஓம் லட்சியப் புருஷனே போற்றி
    ஓம் லட்சுமணனைக் காத்தவனே போற்றி
    ஓம் லங்கா தகனனே போற்றி
    ஓம் லங்காவை வென்றவனே போற்றி
    ஓம் வஜ்ர தேகனே போற்றி
    ஓம் வாயுகுமாரனே போற்றி
    ஓம் வடைமாலைப் பிரியனே போற்றி
    ஓம் வணங்குவோரின் வாழ்வே போற்றி
    ஓம் விஷ்ணுஸ்வரூபனே போற்றி
    ஓம் விளையாடும் வானரனே போற்றி
    ஓம் விஸ்வரூபனே போற்றி
    ஓம் வியாசராஜருக்கு அருளியவனே போற்றி

    ஓம் வித்தையருள்பவனே போற்றி
    ஓம் வைராக்கிய மூர்த்தியே போற்றி
    ஓம் வைகுண்டம் விரும்பாதவனே போற்றி
    ஓம் வெண்ணெய் உகந்தவனே போற்றி
    ஓம் வெற்றிலைமாலை ஏற்பவனே போற்றி
    ஓம் வெற்றியளிப்பவனே போற்றி

  • perumukkal sivan koil sangabeshegam

    பெருமுக்கல் சிவன் கோவிலில் மூன்றாவது சோமவாரம் முன்னிட்டு 108 சங்காபிஷேகம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த பெருமுக்கல் கிராமத்தில் மலை உட்சியில் அமைந்துள்ளது.

    மிகவும் பிரசித்தி பெற்ற முதலாம் குலத்துங்க மன்னன் கட்டிய ஶ்ரீ முக்தியாஜல ஈஷ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு கார்த்திகை மாத விழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

     இந்நிலையில் மூன்றாவது சோமவாரம் விழாவை முன்னிட்டு 108 சங்கு அபிஷேகம் நடைபெற்றது முன்னதாக நவதானியங்கள் மற்றும் பழவகைகள் கொண்டு அக்னி குண்டத்தில் யாகம் வளர்க்கப்பட்டது.

  • 108 varalakshmi amman potri

    வரலட்சுமி 108 போற்றியை தினமும் பக்தியுடன் படிப்போருக்கு செல்வம் கொழிக்கும். மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். ஸ்ரீ அம்பாளின் பரிபூரண ஆசிர்வாதத்தில் அனைவருக்கும் சர்வ ஐஸ்வர்யம் கிட்டும்…

    1. ஓம் அகில லட்சுமியே போற்றி
    2. ஓம் அன்ன லட்சுமியே போற்றி
    3. ஓம் அலங்கார லட்சுமியே போற்றி
    4. ஓம் அமிர்த லட்சுமியே போற்றி
    5. ஓம் அமர லட்சுமியே போற்றி
    6. ஓம் அம்ச லட்சுமியே போற்றி
    7. ஓம் அபூர்வ லட்சுமியே போற்றி
    8. ஓம் அரவிந்த லட்சுமியே போற்றி
    9. ஓம் அனந்த லட்சுமியே போற்றி
    10. ஓம் அஷ்ட லட்சுமியே போற்றி

    11. ஓம் ஆதி லட்சுமியே போற்றி
    12. ஓம் ஆத்ம லட்சுமியே போற்றி
    13. ஓம் ஆனந்த லட்சுமியே போற்றி
    14. ஓம் இஷ்ட லட்சுமியே போற்றி
    15. ஓம் இன்ப லட்சுமியே போற்றி
    16. ஓம் இதய லட்சுமியே போற்றி
    17. ஓம் ஈகை லட்சுமியே போற்றி
    18. ஓம் உதய லட்சுமியே போற்றி
    19. ஓம் உத்தம லட்சுமியே போற்றி
    20. ஓம் உபாசன லட்சுமியே போற்றி

    21. ஓம் ஐஸ்வர்ய லட்சுமியே போற்றி
    22. ஓம் ஓங்கார லட்சுமியே போற்றி
    23. ஓம் ஒளஷத லட்சுமியே போற்றி
    24. ஓம் கருணா லட்சுமியே போற்றி
    25. ஓம் கனக லட்சுமியே போற்றி
    26. ஓம் கபில லட்சுமியே போற்றி
    27. ஓம் கமல லட்சுமியே போற்றி
    28. ஓம் கற்பக லட்சுமியே போற்றி
    29. ஓம் கஜ லட்சுமியே போற்றி
    30. ஓம் கஸ்தூரி லட்சுமியே போற்றி

    31. ஓம் காருண்ய லட்சுமியே போற்றி
    32. ஓம் குண லட்சுமியே போற்றி
    33. ஓம் குரு லட்சுமியே போற்றி
    34. ஓம் கோமள லட்சுமியே போற்றி
    35. ஓம் கோமேதக லட்சுமியே போற்றி
    36. ஓம் சந்தான லட்சுமியே போற்றி
    37. ஓம் சங்கு லட்சுமியே போற்றி
    38. ஓம் சக்கர லட்சுமியே போற்றி
    39. ஓம் சர்வ லட்சுமியே போற்றி
    40. ஓம் சந்தோஷ லட்சுமியே போற்றி

    41. ஓம் சகல லட்சுமியே போற்றி
    42. ஓம் சாந்த லட்சுமியே போற்றி
    43. ஓம் சிங்கார லட்சுமியே போற்றி
    44. ஓம் சிந்தாமணி லட்சுமியே போற்றி
    45. ஓம் சீதா லட்சுமியே போற்றி
    46. ஓம் செல்வ லட்சுமியே போற்றி
    47. ஓம் சொர்ண லட்சுமியே போற்றி
    48. ஓம் சுந்தர லட்சுமியே போற்றி
    49. ஓம் சுப லட்சுமியே போற்றி
    50. ஓம் ஜெய லட்சுமியே போற்றி

    51. ஓம் ஜோதி லட்சுமியே போற்றி
    52. ஓம் ஞான லட்சுமியே போற்றி
    53. ஓம் தங்க லட்சுமியே போற்றி
    54. ஓம் தயா லட்சுமியே போற்றி
    55. ஓம் தர்ம லட்சுமியே போற்றி
    56. ஓம் தன லட்சுமியே போற்றி
    57. ஓம் தவ லட்சுமியே போற்றி
    58. ஓம் தான லட்சுமியே போற்றி
    59. ஓம் தான்ய லட்சுமியே போற்றி
    60. ஓம் தாமரை லட்சுமியே போற்றி

    61. ஓம் தெய்வ லட்சுமியே போற்றி
    62. ஓம் தீப லட்சுமியே போற்றி
    63. ஓம் தீர்த்த லட்சுமியே போற்றி
    64. ஓம் திவ்ய லட்சுமியே போற்றி
    65. ஓம் நாக லட்சுமியே போற்றி
    66. ஓம் நித்ய லட்சுமியே போற்றி
    67. ஓம் நிர்மல லட்சுமியே போற்றி
    68. ஓம் நீல லட்சுமியே போற்றி
    69. ஓம் பதும ராக லட்சுமியே போற்றி
    70. ஓம் பவள லட்சுமியே போற்றி

    71. ஓம் பக்த லட்சுமியே போற்றி
    72. ஓம் பத்ம லட்சுமியே போற்றி
    73. ஓம் பங்கஜ லட்சுமியே போற்றி
    74. ஓம் பராக்கிரம லட்சுமியே போற்றி
    75. ஓம் பாற்கடல் லட்சுமியே போற்றி
    76. ஓம் பாக்கிய லட்சுமியே போற்றி
    77. ஓம் பால லட்சுமியே போற்றி
    78. ஓம் புண்ணிய லட்சுமியே போற்றி
    79. ஓம் புவன லட்சுமியே போற்றி
    80. ஓம் புனித லட்சுமியே போற்றி

    81. ஓம் பொன் லட்சுமியே போற்றி
    82. ஓம் போக லட்சுமியே போற்றி
    83. ஓம் மகா லட்சுமியே போற்றி
    84. ஓம் மதன லட்சுமியே போற்றி
    85. ஓம் மதுர லட்சுமியே போற்றி
    86. ஓம் மங்கள லட்சுமியே போற்றி
    87. ஓம் மாதவ லட்சுமியே போற்றி
    88. ஓம் மகா லட்சுமியே போற்றி
    89. ஓம் மகுட லட்சுமியே போற்றி
    90. ஓம் மரகத லட்சுமியே போற்றி

    91. ஓம் மாணிக்க லட்சுமியே போற்றி
    92. ஓம் மாதா லட்சுமியே போற்றி
    93. ஓம் முத்து லட்சுமியே போற்றி
    94. ஓம் மோட்ச லட்சுமியே போற்றி
    95. ஓம் யோக லட்சுமியே போற்றி
    96. ஓம் ரத்தின லட்சுமியே போற்றி
    97. ஓம் ராம லட்சுமியே போற்றி
    98. ஓம் ராஜ்ய லட்சுமியே போற்றி
    99. ஓம் வரலட்சுமியே போற்றி
    100. ஓம் வித்யா லட்சுமியே போற்றி

    101. ஓம் விஜய லட்சுமியே போற்றி
    102. ஓம் விமல லட்சுமியே போற்றி
    103. ஓம் விஷ்ணு லட்சுமியே போற்றி
    104. ஓம் வீர லட்சுமியே போற்றி
    105. ஓம் வேங்கட லட்சுமியே போற்றி
    106. ஓம் வேணு லட்சுமியே போற்றி
    107. ஓம் வைடூர்ய லட்சுமியே போற்றி
    108. ஓம் வைரலட்சுமியே போற்றி போற்றி!
     

  • Budhan bagavan 108 potri

    ஒன்பது கிரகங்களிலும் மிகவும் வித்தியாசமான கிரகமாக புதன் விளங்குகிறது. புதன் பகவானுக்கு உகந்த 108 போற்றியை பார்க்கலாம்.

    புதன் 108 போற்றிகள்…. 

    ஓம் அழகனே போற்றி
    ஓம் அருளாகரனே போற்றி
    ஓம் அறிவிற்கு உவமையே போற்றி

     ஓம் அனைவருக்கும் காவலே போற்றி
    ஓம் அறிவுருவே போற்றி
    ஓம் அழகுருவே போற்றி
    ஓம் அம்பு பீடனே போற்றி
    ஓம் அலிக்கிரகமே போற்றி

    ஓம் அலங்காரனே போற்றி
    ஓம் ஆனந்தனே போற்றி
    ஓம் ஆயில்ய நாதனே போற்றி
    ஓம் ஆலவாயில் அருள்பவனே போற்றி
    ஓம் இரு வாகனனே போற்றி

    ஓம் இளை நாதனே போற்றி
    ஓம் இம்மை நலமளிப்பவனே போற்றி
    ஓம் இளன் சாபந்தீர்த்தவனே போற்றி
    ஓம் உயர்ந்தவனே போற்றி
    ஓம் உகந்தவனே போற்றி

    ஓம் உவர்ப்புச் சுவையனே போற்றி
    ஓம் உடலிற் தோலானவனே போற்றி
    ஓம் கலைவாணனே போற்றி
    ஓம் கல்வியருள்பவனே போற்றி
    ஓம் கருணாகரனே போற்றி

    ஓம் கன்னிராசி அதிபதியே போற்றி
    ஓம் கவியரசே போற்றி
    ஓம் கவிஞனாக்குபவனே போற்றி
    ஓம் கிரஹபதியே போற்றி
    ஓம் கிரகபீடாஹரனே போற்றி

    ஓம் கிழக்கு நோக்கனே போற்றி
    ஓம் கீர்த்தி வாய்த்தவனே போற்றி
    ஓம் குஜன் பகைவனே போற்றி
    ஓம் குதிரை வாகனனே போற்றி
    ஓம் கேடயதாரியே போற்றி

    ஓம் கேட்டை நாதனே போற்றி
    ஓம் சசி சுதனே போற்றி
    ஓம் சந்திர குலனே போற்றி
    ஓம் சத்வ குணனே போற்றி
    ஓம் சாந்த மூர்த்தியே போற்றி

    ஓம் சிவனடியானே போற்றி
    ஓம் சிவனால் கிரகமானவனே போற்றி
    ஓம் சிங்க வாகனனே போற்றி
    ஓம் சிங்கக் கொடியோனே போற்றி
    ஓம் சுந்தரனே போற்றி

    ஓம் சுப கிரகமே போற்றி
    ஓம் சுகமளிக்க வல்லவனே போற்றி
    ஓம் சொக்கருள் இணைந்தவனே போற்றி
    ஓம் ஞானியே போற்றி
    ஓம் ஞான நாயகனே போற்றி

    ஓம் தவசீலனே போற்றி
    ஓம் தவயோகியே போற்றி
    ஓம் தயாகரனே போற்றி
    ஓம் தனிக்கோயிலானே போற்றி
    ஓம் தாரை மகனே போற்றி

    ஓம் தரித்ர நாசகனே போற்றி
    ஓம் திருவுருவனே போற்றி
    ஓம் திருவெண்காட்டில் அருள்பவனேபோற்றி
    ஓம் துதிக்கப்படுபவனேபோற்றி
    ஓம் திருக்காளீஸ்வரத்தருள்பவனேபோற்றி

    ஓம் தேவனேபோற்றி
    ஓம் தேரேறி வருபவனேபோற்றி
    ஓம் நட்சத்ரேசனேபோற்றி
    ஓம் நல்லுரு அருள்பவனேபோற்றி
    ஓம் நாற்கரனேபோற்றி

    ஓம் நாயுருவி சமித்தனேபோற்றி
    ஓம் நான்காமவனேபோற்றி
    ஓம் நாரணன் ப்ரத்யதிதேவதையனேபோற்றி
    ஓம் பயிர்க் காவலனேபோற்றி
    ஓம் பசும்பயறு விரும்பியேபோற்றி

    ஓம் பச்சை வண்ண கிரகமேபோற்றி
    ஓம் பதினேழாண்டாள்பவனேபோற்றி
    ஓம் பித்தளை உலோகனேபோற்றி
    ஓம் பின் னகர்வுடையோனேபோற்றி
    ஓம் பிரமனருள் பெற்றவனேபோற்றி

    ஓம் புராணத் தேவனேபோற்றி
    ஓம் புலவர் பிரானேபோற்றி
    ஓம் புலமையளிப்பவனேபோற்றி
    ஓம் பூங்கழலடியனேபோற்றி
    ஓம் புண்ணியனேபோற்றி

    ஓம் புரூரவன் தந்தையேபோற்றி
    ஓம் புகழ் சேர்ப்பவனேபோற்றி
    ஓம் பொன்னணியனேபோற்றி
    ஓம் பொற்கொடியோனேபோற்றி
    ஓம் பொன்மேனியனேபோற்றி

    ஓம் பொன்னாடையனேபோற்றி
    ஓம் போகமளிப்பவனேபோற்றி
    ஓம் மணிமுடியனேபோற்றி
    ஓம் மரகதப் பிரியனேபோற்றி
    ஓம் மனோகரனேபோற்றி

    ஓம் மஞ்சள் சந்தனப்பிரியனேபோற்றி
    ஓம் மதுரையில் பூசித்தவனேபோற்றி
    ஓம் ரவி மித்ரனேபோற்றி
    ஓம் ரவிக்கருகிருப்பவனேபோற்றி
    ஓம் ரேவதிக் கதிபதியேபோற்றி

    ஓம் ரிக் ஐந்தின் அதிகாரியேபோற்றி
    ஓம் வள்ளலேபோற்றி
    ஓம் வல்லபிரானேபோற்றி
    ஓம் வாட்கரனேபோற்றி
    ஓம் வடகீழ் திசையனேபோற்றி

    ஓம் வாக்கானவனேபோற்றி
    ஓம் வாழ்வளிப்பவனேபோற்றி
    ஓம் வித்தகனேபோற்றி
    ஓம் விஷ்ணுரூபனேபோற்றி
    ஓம் விஷ்ணு அதிதேவதையனேபோற்றி

    ஓம் விதி மாற்றுபவனேபோற்றி
    ஓம் வெண்காந்தமலர்ப் பிரியனேபோற்றி
    ஓம் ‘ஜம்’ பீஜ மந்திரனேபோற்றி
    ஓம் புத பகவானே போற்றிபோற்றி

     புதன்  பகவான் திருவடிகளே போற்றி
    திருவெண்காடு புதன் திருவடிகளே போற்றி

  • 108 Lakshmi pootri

    வரலட்சுமி விரதம் கடைபிடிக்கும் பெண்கள் லட்சுமி தேவிக்கு உகந்த இந்த 108 ஸ்ரீ லட்சுமி போற்றி உச்சரித்து வழிபாடு செய்து வந்தால் அனைத்து செல்வங்களும் கிட்டும். சகல செல்வங்களுடன் முதலில் தோன்றிய ஆதிலட்சுமியை வணங்குவதால், நோய்கள் நீங்கும். அதற்காக அஷ்டமங்கலப் பொருட்களைத் தனது திருவடியின் கீழ் கொண்டு காட்சி தரும் வகையில் அமைந்து அருள் தருபவள் ஆதிலட்சுமி.

    ஓம்  திருவே  போற்றி
    ஓம்  திருவளர் தாயே போற்றி
    ஓம்  திருமாலின் தேவி  போற்றி
    ஓம்  திருவெலாம் தருவாய்  போற்றி
    ஓம்  திருத்தொண்டர் மணியே  போற்றி
    ஓம்  திருப்புக ழுடையாய்  போற்றி
    ஓம்  திருஞான வல்லி  போற்றி
    ஓம்  திருவருட் செல்வி  போற்றி
    ஓம்  திருமால் மகிழ்வாய்  போற்றி
    ஓம்  திருமார்பி லமர்ந்தாய்  போற்றி

    ஓம்  தினமெமைக் காப்பாய்  போற்றி
    ஓம்  தீபசோதியே  போற்றி
    ஓம்  தீதெலாம் தீர்ப்பாய்  போற்றி
    ஓம்  தூப ஜோதியே  போற்றி
    ஓம்  துயரம்தீர்த் தருள்வாய்  போற்றி
    ஓம்  திருப்பாற் கடலாய்  போற்றி
    ஓம்  திருவமு தருள்வாய்  போற்றி
    ஓம்  அன்னையே அருளே  போற்றி
    ஓம்  அழகெலாம் உடையாய்  போற்றி
    ஓம்  அயன்பெறு தாயே  போற்றி

    ஓம்  அனைவருக்கும் அருள்வாய்  போற்றி
    ஓம்  அமரர் குல விளக்கே  போற்றி
    ஓம்  அமரேசன் தொழுவாய்  போற்றி
    ஓம்  அன்பருக் கினியாய்  போற்றி
    ஓம்  அண்டங்கள் காப்பாய்  போற்றி
    ஓம்  ஆனந்த வல்லியே  போற்றி
    ஓம்  ஆருயிர்க் குயிரே  போற்றி
    ஓம்  ஆவிநல் வடிவே  போற்றி
    ஓம்  ஆக்கம் தருள்வாய்  போற்றி
    ஓம்  இச்சை கிரியை  போற்றி

    ஓம்  இருள்தனைக் கடிவாய்  போற்றி
    ஓம்  இன்பப் பெருக்கே  போற்றி
    ஓம்  இகபர சுகமே  போற்றி
    ஓம்  ஈகையின் பொலிவே  போற்றி
    ஓம்  ஈடிலா அன்னை  போற்றி
    ஓம்  எங்குமே நிறைந்தாய்  போற்றி
    ஓம்  எண்குண வல்லி  போற்றி
    ஓம்  ஓங்கார சத்தி  போற்றி
    ஓம்  ஒளிமிகு தேவி போற்றி
    ஓம்  கற்பக வல்லி  போற்றி 

    ஓம்  காமரு தேவி  போற்றி
    ஓம்  கனக வல்லியே  போற்றி
    ஓம்  கருணாம் பிகையே  போற்றி
    ஓம்  குத்து விளக்கே  போற்றி
    ஓம்  குலமகள் தொழுவாய்  போற்றி
    ஓம்  மங்கல விளக்கே  போற்றி
    ஓம்  மங்கையர் தொழுவாய்  போற்றி
    ஓம்  தூங்காத விளக்கே  போற்றி
    ஓம்  தூயவர் தொழுவாய்  போற்றி
    ஓம்  பங்கஜ வல்லி  போற்றி

    ஓம்  பாவலர் பணிவாய்  போற்றி
    ஓம்  பொன்னி அம்மையே  போற்றி
    ஓம்  புலவர்கள் புகழ்வாய்  போற்றி
    ஓம்  நாரணன் நங்கையே  போற்றி
    ஓம்  நாவலர் துதிப்பாய்  போற்றி
    ஓம்  நவரத்தின மணியே  போற்றி
    ஓம்  நவநிதி நீயே  போற்றி
    ஓம்  அஷ்ட லட்சுமியே  போற்றி
    ஓம்  அறம்பொருள் தருவாய்  போற்றி
    ஓம்  ஆதிலட்சுமியே  போற்றி

    ஓம்  ஆணவம் அறுப்பாய்  போற்றி
    ஓம்  கஜலட்சுமியே  போற்றி
    ஓம்  கள்ளமும் கரைப்பாய்  போற்றி
    ஓம்  தைரியலட்சுமியே  போற்றி
    ஓம்  தயக்கமும் தவிர்ப்பாய்  போற்றி
    ஓம்  தனலட்சுமியே  போற்றி
    ஓம்  தனதானியம் தருவாய்  போற்றி
    ஓம் விஜயலட்சுமியே  போற்றி
    ஓம்  வெற்றியைத் தருவாய்  போற்றி
    ஓம்  வரலட்சுமியே  போற்றி

    ஓம்  வரமெலாம் தருவாய்  போற்றி
    ஓம்  முத்துலட்சுமியே  போற்றி
    ஓம்  முக்தியை அருள்வாய்  போற்றி
    ஓம்  பூவேந்தர் தொழுவாய்  போற்றி
    ஓம்  முத்தமிழ் தருவாய்  போற்றி
    ஓம்  கண்ணே எம் கருத்தே  போற்றி
    ஓம்  கவலையை ஒழிப்பாய்  போற்றி
    ஓம்  விண்ணே எம் விதியே  போற்றி
    ஓம்  விவேகம் தருள்வாய்  போற்றி
    ஓம்  பொன்னேநன் மணியே  போற்றி

    ஓம்  போகம் தருள்வாய்  போற்றி
    ஓம்  பூதேவி தாயே  போற்றி
    ஓம்  புகழெலாம் தருவாய்  போற்றி
    ஓம்  சீதேவி தாயே  போற்றி
    ஓம்  சிறப்பெலாம் அருள்வாய்  போற்றி
    ஓம்  மதிவதன வல்லி  போற்றி
    ஓம்  மாண்பெலாம் தருவாய்  போற்றி
    ஓம்  நித்திய கல்யாணி  போற்றி
    ஓம்  நீதிநெறி அருள்வாய்  போற்றி
    ஓம்  கமலக்கன்னி  போற்றி

    ஓம்  கருத்தினி லமர்வாய்  போற்றி
    ஓம்  தாமரைத் தாயாய்  போற்றி
    ஓம்  தவநிலை அருள்வாய்  போற்றி
    ஓம்  கலைஞானச் செல்வி  போற்றி
    ஓம்  கலைஞருக் கருள்வாய்  போற்றி
    ஓம்  அருள்ஞானச் செல்வி  போற்றி
    ஓம்  அறிஞருக் கருள்வாய்  போற்றி
    ஓம்  எளியவர்க் கருள்வாய்  போற்றி
    ஓம்  ஏழ்மையைப் போக்குவாய்  போற்றி
    ஓம்  வறியவர்க் கருள்வாய்  போற்றி

    ஓம்  வறுமையை ஒழிப்பாய்  போற்றி
    ஓம்  வேத வல்லியே  போற்றி
    ஓம்  வேட்கையைத் தணிப்பாய்  போற்றி
    ஓம்  பிறர்பொருள் கவர எண்ணாப்
     பெரியர்க் கருள்வாய்  போற்றி
    ஓம்  நடுநிலை நீங்கிடாத நல்லவர்க்
     கருள்வாய்  போற்றி
    ஓம்  அறநெறி வழுவிலாத அடியவர்க்
     கருள்வாய்  போற்றி
    ஓம்  அனைத்துமே ஆனாய்  போற்றி
    ஓம்  அருள்மிகு லட்சுமிதாயே 
    போற்றி போற்றி போற்றி
     

  • subramanya astothram

    1. ஓம் ஸ்கந்தாய நம: – {மேகத்திலிருந்து மின்னல் வெளிபடுவது போல்} சிவ ஜோதியிலிருந்து ஆறு பொறிகளாக வெளிப்பட்டு பிறகு ஒன்று சேர்ந்து ஒரு வடிவம் கொண்டதால் “ஸ்கந்தன்” என்று பெயர் அந்த ஸ்கந்தனுக்கு நமஸ்காரம்.

    2. ஓம் குஹாய நம: – பக்தர்களின் இரு தயமாகிய குகையில் ஆத்ம சொரூபமாக இருக்கும் குகனுக்கு வணக்கம்.

    3. ஓம் ஷண்முகாய நம: {தாமரை போன்ற} ஆறுமுகங்களுடைய கடவுளுக்கு வணக்கம்.

    4. ஓம் பாலநேத்ரஸுதாய நம: – சிவனின் கண்களிலிருந்து தீப்பிழம்பாக வந்ததால் சிவனின் பிள்ளை.

    5. ஓம் பிரபவே நம: – அனைத்தையும் அடக்கி ஆள்பவர்.

    6. ஓம் பிங்களாய நம: – பொன்னிறம் கலந்த சிவப்பு நிறம் கொண்டவர்.

    7. ஓம் க்ருத்திகாஸூநவே நம: – கிருத்திகை தேவதைகள் {கார்த்திகை பெண்கள்} என்ற ஆறுபேர் அவரை எடுத்து பாலூட்டினார்கள். எனவே கிருத்திகை பெண்களின் புதல்வன்.

    8. ஓம் சிகி வாஹநாய நம: – மயிலை வாகனமாக உடையவர்.

    9. ஓம் த்விஷட்புஜாய நம: – பன்னிரண்டு {வலிமை பொருந்திய} தோள்களை உடையவர்.

    10. ஓம் த்விஷண்ணேத்ராய நம: – பன்னிரண்டு விதமான தெய்வீக குணங்களைத் தமது பக்தர்களுக்கு அருளும் மகிமை பெற்ற பன்னிரண்டு கண்களை உடையவர்.

    11. ஓம் சக்திதராய நம :- பராசக்தியின் ஞான சொரூபமாகிய வேல் என்ற ஆயுதத்தைக் கையில் ஏந்தியவர்.

    12. ஓம் பிசிதாச-பிரபஞ்ஜனாய நம: – பிசாசு, நரமாமிசம் உண்ணும் அரக்கர்கள் போன்றவர்களின் பலத்தைத் தகர்த்து எறிந்து அழிப்பவர்.

    13. ஓம் தாரகாஸூர-ஸம் ஹாராய நம: – தாரகன் என்ற அசுரனை அழித்தவர்.

    14. ரக்ஷோபல விமர்த்தனாய நமஹ: – ராக்ஷஸ சேனையின் பலத்தை அழித்தவர்.

    15. ஓம் மத்தாய நமஹ: – மதம் பிடித்தவர் போல் யுத்தம் செய்பவர்.

    16. ஓம் ப்ரமத்தனாய நமஹ: – மிகவும் வெறி பிடித்தவர் போல் பயங்கரமாக யுத்தம் செய்து எதிரி சேனைகளை அழித்தவர்.{தன்னிடம் சரண் புகுந்தவர்களின் பக்தியில் சிறிதேனும் ஊக்க குறைவு ஏற்பட்டால் அவர்களை காப்பாற்றி கைத்தூக்கிவிடும் இயல்புடையவர்.

    17. ஓம் உன்மத்தாய நமஹ: – தனது பராக்கிரமத்தில் மிகவும் தன்னம்பிக்கையுடன் போர் புரிபவர்.அல்லது {யோக நிஷ்டையில் யோகேஸ்வர்ராக இருப்பவர்.}

    18. ஓம் ஸுர ஸைன்ய ஸுரக்ஷகாய நமஹ: – தேவர்களின் சேனையை நன்றாக காப்பாற்றியவர்.

    19. ஓம் தேவசேனாபதயே நமஹ: – தேவசேனையின் {தெய்வானையின்} கணவர்.

    20. ஓம் ப்ராஜ்ஞாய நமஹ: – ஆத்ம ஞானத்தின் வடிவமாக இருப்பவர்.

    21. ஓம் கிருபானவே நமஹ: – பெரிதும் தயையும் கருணையும் மிக்கவர்.

    22. ஓம் பக்தவத்ஸலாய நமஹ: – பக்தர்களிடம் பெரிதும் அன்புள்ளவர்.

    23. ஓம் உமாஸுதாய நமஹ: – உமாதேவியின் புதல்வர்.

    24. ஓம் சக்திதராய நமஹ: – சிவசக்தி ஜோதியில் பிறந்து அசுரர்களை கொல்லும் வலிமைக்கும், ஞானத்திற்கும் இருப்பிடமானவர்.

    25. ஓம் குமாராய நமஹ: – சிவனுக்கும் பார்வத்க்கும் மத்தியில் செல்லக் குழந்தையாக இருப்பதால் குமாரன் எனப்படுவர்.

    26. ஓம் க்ரௌஞ்சதாரணாய நமஹ: – க்ரௌஞ்ச மலையைப் பிளந்தவர்.

    27. ஓம் ஸேனான்யே நமஹ: – தேவர்களின் படைத் தலைவர்.
    28. ஓம் அக்னி ஜன்மனே நமஹ: – அக்கினிச் சுடராக பிறந்தவர்.
    29. ஓம் விசாகாய நமஹ: – விசாக நக்ஷத்திரத்தில் உதித்தவர்.
    30. ஓம் சங்கராத்மஜாய நமஹ: – எல்லோருக்கும் மங்களத்தைக் கொடுக்கும் ஈசனின் புதல்வர்.

    31. ஓம் சிவஸ்வாமிநே நமஹ: – தந்தையாகிய சிவனுக்கு உபதேசம் செய்ததால் சிவஸ்வாமி என பெயர் பெற்றவர்.

    32. ஓம் கணஸ்வாமிநே நமஹ: – சிவ கணங்களை கொண்ட சேனையின் தலைவர்.

    33. ஓம் ஸர்வஸ்வாமிநே நமஹ: – ஜீவர்கள், ஜடப்பொருள்கள் உட்பட உலகம் முழுவதையும் தமது சொத்தாக்க் கொண்டிருப்பவர். எல்லோருக்கும் அருள் புரிபவர், எல்லோருக்கும் அருள் புரியும் உயர்ந்த தெய்வம் என்று கொண்டாடப்படுபவர். ஏற்ற தாழ்வு இல்லாத ஸர்வஸ்வாமி {உலக அதிபதி} என பெயர் பெற்றவர்.

    34. ஓம் ஸநாதனாய நமஹ: – மிகவும் பழமையானவர்.
    35. ஓம் அனந்த சக்தயே நமஹ: – அளவற்ற ஆற்றல் படைத்தவர்.

    36. ஓம் அக்ஷோப்பியாய நமஹ – விருப்பு-வெறுப்பு போன்றவைகளால் {அல்லது எதிரிகளால் சலனமடையாதவர்.}

    37. ஓம் பார்வதி ப்ரிய நந்தனாய நமஹ: – பார்வதியின் அன்புக்குரிய செல்லக் குழந்தை.

    38. ஓம் கங்காஸுதாய நமஹ: – சிவனின் கண்களிலிருந்து தோன்றி தீப்பொறிகள் கங்கையச் சென்றடைந்ததால் கங்கையின் மைந்தன் என்று பெயர்.

    39. ஓம் சரோத்பூதாய நமஹ: – சரவணப் பொய்கையில் பிறந்தவர்.
    40. ஓம் ஆஹுதாய நமஹ: – யாகங்களால் போற்றப்படுபவர்.

    41. ஓம் பாவகாத்மஜாய நமஹ: – அக்கினியின் புத்திரர்.

    42. ஓம் ஜ்ரும்பாய நமஹ: – எங்கும் நிறைந்திருப்பவர்.

    43. ஓம் ப்ரஜ்ரும்பாய நமஹ: – பக்தர்களின் உள்ளத்தில் புகுந்து உயர்ந்த எண்ணங்களைத் தோற்றுவித்து மலரச் செய்பவர்.

    44. ஓம் உஜ்ஜ்ரும்பாய நமஹ: – பக்தர்களுக்கு நல்ல புத்தியையும் {உலக விசயங்களில் நல்ல அனுபவங்களையும்} முக்தியையும் ஞானத்தையும் அருளி அவர்களை வளரச் செய்பவர்.

    45. ஓம் கமலாஸன-ஸம்ஸ்துதாய நமஹ: – தாமரையில் வீற்றிருக்கும் பிரம்மாவாலும் துதிக்கப்படுபவர்.

    46. ஓம் ஏக வர்ணாய நமஹ: – ஒரே தத்துவமாகிய பரம்பொருள்.

    47. ஓம் த்விவர்ணாய நமஹ: – சிருஷ்டிக்குக் காரணமான பிரகிருதியாகவும்,புருஷனாகவும் திகழ்பவர்.

    48. ஓம் த்ரிவர்ணாய நமஹ: – சத்வம்,ரஜஸ்,தமஸ் என்ற மூன்று குணங்களுக்கும் அதிபதியாக விளங்குபவர்.

    49. ஓம் ஸுமனோஹராய நமஹ: – அளவு கடந்த ஆனந்த வடிவமாக மனதை கவர்பவர்.

    50. ஓம் சதுர் வர்ணாய நமஹ: – மனம்,புத்தி,சித்தம்,அகங்காரம் என்ற நாங்கு உருவங்களாக இருப்பவர்.

    51. ஓம் பஞ்ச வர்ணாய நமஹ: – பஞ்ச பூதங்களின் வடிவமானவர்.

    52. ஓம் ப்ரஜாபதயே நமஹ: – உயிர்த் தொகுதிகளுக்குத் தலைவர்.அல்லது உலக ஸ்ருஷ்டிக்குக் காரணமாக இருப்பவர்.

    53. ஓம் அஹஸ்பதயே நமஹ: – பகலை உண்டாக்கும் சூரியனைப்போல் மிகுந்த ஒளியுடன் விளங்குபவர்.

    54. ஓம் அக்னிகர்ப்பாய நமஹ: – அக்னியில் பிறந்தவர்.

    55. ஓம் சமீ கர்ப்பாய நமஹ: – எரியும் கட்டையிலிருந்து நெருப்புப் பொறிகள் கிளம்புவது போல் சிவனின் கண்களிலிருந்து கிளம்பிய பொறிகளிலிருந்து தோன்றியவர்.

    56. ஓம் விஸ்வ ரேதஸே நமஹ: – உலகத்திற்கு வித்தாகிய பரம்பொருள்.

    57. ஓம் ஸுராரிக்னே நமஹ: – தேவர்களின் பகைவர்களை அழிப்பவர்.

    58. ஓம் ஹரித்வர்ணாய நமஹ: – மஞ்சள் நிறமாகவும் பொன்னிறமாகவும் காணப்படுபவர்.

    59. ஓம் சுபகராய நமஹ: – பக்தர்களுக்கு நன்மையே செய்பவர்.

    60. ஓம் வடவே நமஹ: – பிரம்மசாரி விரதம் பூண்டு ஆண்டியானவர்.

    61. ஓம் படுவேஷப்ருதே நமஹ: – எதிரிகளிடம் மிகவும் கொடுமையானவர் போல் நடிப்பவர்.

    62. ஓம் பூஷ்ணே நமஹ: – எல்லோரையும் பாதுகாப்பவர்.

    63. ஓம் கபஸ்தயே நமஹ: – ஒளி வீசும் சூரியன் போல் பிரகாசிப்பவர்.

    64. ஓம் கஹானாய நமஹ: – மற்றவர்களால் அறிய இயலாத ஸ்வரூபமும் சக்தியையும் செயல்களும் கொண்டவர்.

    65. ஓம் சந்திர வர்ணாய நமஹ: – பூரண சந்திரனைப் போன்ற நிறமுள்ளவர்.

    66. ஓம் கலாதராய நமஹ: – சந்திரனின் கலைகளைப் போல் குளிர்ந்த சுபாவமுள்ளவர்.

    67. ஓம் மாயாதராய நமஹ: – மாயையை அடக்கியாள்பவர்.

    68. ஓம் மஹாமாயினே நமஹ: – பக்தர்களுக்கு மாயையைக் கொடுப்பவரும் நீங்குபவருமான ஈஸ்வரன்.

    69. ஓம் கைவல்யாய நமஹ: – ஒன்றேயாகிய கைவல்யம் என்ற முக்தியை அளிப்பவர்.

    70. ஓம் சங்கராத்மஜாய நமஹ: – பரமேஸ்வரனிடம் ஜோதிமயமான ஆத்மாவாக பிறந்தவர்.

    71. ஓம் விஸ்வ யோனயே நமஹ: உலகம் அனைத்திற்கும் பிறப்பிடம்.

    72. ஓம் அமேயாத்மனே நமஹ: – அளவிட இயலாத மகிமையுள்ளவர்.

    73. ஓம் தேஜோ நிதயே நமஹ; – ஒளியின் பொக்கிஷம் என்று சொல்லும் வகையில் ஒளி பொருந்தியவர்.

    74. ஓம் அனாமயாய நமஹ: – வினைப்பயனால் உள்ளும் புறமும் பீடிக்கும் நோய்களால் பீடிக்கப் படாதவர் பிறவிப்பிணி இல்லாதவர்.

    75. ஓம் பரமேஷ்டினே நமஹ: – தந்தைக்குப் பிரணவ உபதேசம் செய்த ஆச்சாரியனாக இருந்தவர்.

    76. ஓம் பரப்ரஹ்மணே நமஹ: – பரம்பொருளாக இருப்பவர்.

    77. ஓம் வேத கர்ப்பாய நமஹ: – வேதங்களின் தலைவர்.

    78. ஓம் விராட்ஸுதாய நமஹ: – விராட் சொரூபமான பரமேஸ்வரினனின் புதல்வன்.

    79. ஓம் புலிந்த கன்யா பர்த்ரே நமஹ: – வேடன் மகளான வள்ளி தேவியின் கணவர்.

    80. ஓம் மஹா ஸாரஸ்வதாவ்ருதாய நமஹ: – அழகாகவும்,இனிமையாகவும் பேசுவதயே விரதமாக இருப்பவர்.

    81. ஓம் ஆஸ்ரிதாகிலதாத்தே நமஹ: – தன்னைச் சரணைந்தடைவர்களுக்கு எல்லா நலங்களையும் வழங்குபவர்.

    82. ஓம் சோரக்னாய நமஹ: – பக்தர்களின் பிறப்பு இறப்பு என்ற நோயைத் தவிர்ப்பவர்.

    83. ஓம் ரோக நாசனாய நமஹ: – விலிப்பு, குஷ்டரோகம், க்ஷயரோகம் போன்ற மிகப் பெறிய வியாதிகளையும் நாசம் செய்து பக்தர்களுக்கு அருள் புரிபவர்.

    84. ஓம் அன்ந்த மூர்த்தயே நமஹ: – இடம் காலம் போன்ற எல்லைக் கடந்த ஸ்வரூபமானவர்.

    85. ஓம் ஆனந்தாய நமஹ: – ஆனந்தமே வடிவானவர்
    .86. ஓம் சிகண்டினே நமஹ: – சேவற்கொடி உடையவர்
    .
    87. ஓம் டம்பாய நமஹ: – {குழந்தைக் கடவுள் என்று சொல்லப்பட்டாலும்} பகைவர்களை பயமுறுத்தித் துன்புறுத்தும் சாமர்தியம் உள்ளவர்.

    88. ஓம் பரம டம்பாய நமஹ: – எதிரிகளிடம் போர் செய்வதில் நிகரற்ற சாமர்த்தியமும் வலிமையும் உள்ளவர்.

    89. ஓம் மஹா டம்பாய நமஹ: – மிகுந்த உறுதியும் ஆற்றலும் திறமையும் கொண்டு போர் செய்பவர்.

    90. ஓம் விருஷாகபயே நமஹ: – எல்லா உடல்களிலும் உயிராக இருந்து செயல் புரிபவர்.

    91. ஓம் காரணோபாத்த தேஹாய நமஹ: – மற்றவர்களால் வெல்ல முடியாத அசுரர்களை அழிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக உடல் எடுத்தவர்.

    92. ஓம் காரணாதீத விக்ரஹாய நமஹ: – காரணம் கடந்த பிரம்ம ஸ்வரூபமானவர்.

    93. ஓம் அநீஸ்வராய நமஹ: – தன்னை விட உயர்ந்தவர் எவரும் இல்லாதவர்.

    94. ஓம் அம்ருதாய நமஹ: – அழிவற்றவர்.
    95. ஓம் ப்ராயணாய நமஹ: – எல்லோரிடமும் உயிருக்கு உயிரானவர்.

    96. ஓம் ப்ராணாயம பராயணாய நமஹ: – ப்ராணாயாம்ம் போன்ற யோக சாதனைகளுக்குப் புகலிடமாக இருப்பவர்.

    97. ஓம் விருத்த ஹந்த்ரே நமஹ: – விரோதம் செய்பவர்களை அழிப்பவர்.

    98. ஓம் வீரக்னாய நமஹ: – சூர பத்மன்,தரகாசுரன் போன்ற அசுரர்களை கொன்றவர்.

    99. ஓம் ரக்த ஸ்யாமகலாய நமஹ: – கரும் சிவப்பான கழுத்தை உடையவர்.

    100. ஓம் சுப்ரமண்யாய நமஹ: – சிறப்பான பிரம்ம ஸ்வரூபம் பெற்று உலகம் முழுவதற்கும் ஞான செல்வம் அருளும் ஸ்வாமி.

    101. ஓம் குஹாய நமஹ: – மாயையால் எல்லாவற்றையும் மறைப்பவர்.

    102. ஓம் ப்ரீதாய நமஹ: – பக்தகளிட்த்தில்  மிகவும் அன்பாக இருப்பவர்

    103. ஓம் ப்ரம்மண்யாய நமஹ: – தவத்திற்கும் வேதத்திற்கும் சான்றோர்களுக்கும் அனுகூலமாக இருப்பவர்.

    104. ஓம் ப்ராஹ்மண ப்ரியாய நமஹ: – ப்ராம்னர்க்களுக்கு பிரியமுள்ளவர்.

    105. ஓம் வம்ச விருத்தி கராய நமஹ: – பக்தர்களின் வம்சத்தை விருத்தி செய்து அருள் புரிபவர்.

    106. ஓம் வேத வேத்யாய நமஹ: – எல்லா வேதங்களையும் நன்கு அறிந்தவர்.

    107. ஓம் அக்ஷயபல ப்ரதாய நமஹ: – பக்தர்களுக்குக் குறைவற்ற நலங்களை தருபவர்.

    108. ஓம் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஓம் ஸ்ரீ சுப்ரமண்யாய நமஹ: – வள்ளி தேவசேனையுடன் எழுந்தருளியிருக்கும் சுப்ரமண்ய ஸ்வாமிக்கு நமஸ்காரம்⚜

    ஓம் செபம் சரவணபவ

  • Vetri tharum biravar pootri

    பைரவர் வழிபாடு செய்வது பயத்தைப் போக்கி, வாழ்வில் தன்னம்பிக்கையைத் தரும். மாலை 4.30- 6 மணிக்குள் திருவிளக்கேற்றி வீட்டிலேயே இந்த போற்றியைச் சொல்லலாம். பைரவர் சன்னதி முன்பு கூட்டாக அமர்ந்து, ஒருவர் சொல்ல மற்றவர்கள் திருப்பிச் சொல்லலாம்.இந்த 108 போற்றியை சொல்லி பைரவர் வழிபாடு செய்தால் கஷ்டங்கள் படிப்படியாக குறையும். அந்த 108 போற்றியை கீழே பார்க்கலாம்.

    01. ஓம் பைரவனே போற்றி
    02. ஓம் பயநாசகனே போற்றி
    03. ஓம் அஷ்டரூபனே போற்றி
    04. ஓம் அஷ்டமித் தோன்றலே போற்றி
    05. ஓம் அயன்குருவே போற்றி

    06. ஓம் அறக்காவலனே போற்றி
    07. ஓம் அகந்தையழிப்பவனே போற்றி
    08. ஓம் அடங்காரின் அழிவே போற்றி
    09. ஓம் அற்புதனே போற்றி
    10. ஓம் அசிதாங்க பைரவனே போற்றி

    11. ஓம் ஆனந்த பைரவனே போற்றி
    12. ஓம் ஆலயக்காவலனே போற்றி
    13. ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி
    14. ஓம் இடுகாட்டில் இருப்பவனே போற்றி
    15. ஓம் உக்ர பைரவனே போற்றி

    16. ஓம் உடுக்கை ஏந்தியவனே போற்றி
    17. ஓம் உதிரம் குடித்தவனே போற்றி
    18. ஓம் உன்மத்த பைரவனே போற்றி
    19. ஓம் உறங்கையில் காப்பவனே போற்றி
    20. ஓம் ஊழ்வினை தீர்ப்பவனே போற்றி

    21. ஓம் எல்லை தேவனே போற்றி
    22. ஓம் எளிதில் இரங்குபவனே போற்றி
    23. ஓம் கபாலதாரியே போற்றி
    24. ஓம் கங்காளமூர்த்தியே போற்றி
    25. ஓம் கர்வ பங்கனே போற்றி

    26. ஓம் கல்பாந்த பைரவனே போற்றி
    27. ஓம் கதாயுதனே போற்றி
    28. ஓம் கனல்வீசும் கண்ணனே போற்றி
    29. ஓம் கருமேக நிறனே போற்றி
    30. ஓம் கட்வாங்க தாரியே போற்றி

    31. ஓம் களவைக் குலைப்போனே போற்றி
    32. ஓம் கருணாமூர்த்தியே போற்றி
    33. ஓம் கால பைரவனே போற்றி
    34. ஓம் காபாலிகர் தேவனே போற்றி
    35. ஓம் கார்த்திகையில் பிறந்தவனே போற்றி

    36. ஓம் காளாஷ்டமிநாதனே போற்றி
    37. ஓம் காசிநாதனே போற்றி
    38. ஓம் காவல்தெய்வமே போற்றி
    39. ஓம் கிரோத பைரவனே போற்றி
    40. ஓம் கொன்றைப்பிரியனே போற்றி

    41. ஓம் சண்ட பைரவனே போற்றி
    42. ஓம் சட்டை நாதனே போற்றி
    43. ஓம் சம்ஹார பைரவனே போற்றி
    44. ஓம் சங்கடம் தீர்ப்பவனே போற்றி
    45. ஓம் சிவத்தோன்றலே போற்றி

    46. ஓம் சிவாலயத்து இருப்போனே போற்றி
    47. ஓம் சிக்ஷகனே போற்றி
    48. ஓம் சீர்காழித்தேவனே போற்றி
    49. ஓம் சுடர்ச்சடையனே போற்றி
    50. ஓம் சுதந்திர பைரவனே போற்றி

    51. ஓம் சிவ அம்சனே போற்றி
    52. ஓம் சுவேச்சா பைரவனே போற்றி
    53. ஓம் சூலதாரியே போற்றி
    54. ஓம் சூழ்வினை அறுப்பவனே போற்றி
    55. ஓம் செம்மேனியனே போற்றி

    56. ஓம் க்ஷேத்ரபாலனே போற்றி
    57. ஓம் தட்சனை அழித்தவனே போற்றி
    58. ஓம் தலங்களின் காவலனே போற்றி
    59. ஓம் தீது அழிப்பவனே போற்றி
    60. ஓம் துர்சொப்பன நாசகனே போற்றி

    61. ஓம் தெற்கு நோக்கனே போற்றி
    62. ஓம் தைரியமளிப்பவனே போற்றி
    63. ஓம் நவரச ரூபனே போற்றி
    64. ஓம் நரசிம்ம சாந்தனே போற்றி
    65. ஓம் நள்ளிரவு நாயகனே போற்றி

    66. ஓம் நரகம் நீக்குபவனே போற்றி
    67. ஓம் நாய் வாகனனே போற்றி
    68. ஓம் நாடியருள்வோனே போற்றி
    69. ஓம் நிமலனே போற்றி
    70. ஓம் நிர்வாணனே போற்றி

    71. ஓம் நிறைவளிப்பவனே போற்றி
    72. ஓம் நின்றருள்வோனே போற்றி
    73. ஓம் பயங்கர ஆயுதனே போற்றி
    74. ஓம் பகையளிப்பவனே போற்றி
    75. ஓம் பரசு ஏந்தியவனே போற்றி

    76. ஓம் பலிபீடத்து உறைவோனே போற்றி
    77. ஓம் பாபம் தீர்ப்பவனே போற்றி
    78. ஓம் பால பைரவனே போற்றி
    79. ஓம் பாம்பணிந்த தெய்வமே போற்றி
    80. ஓம் பிரளயகாலனே போற்றி

    81. ஓம் பிரம்ம சிரச்சேதனே போற்றி
    82. ஓம் பூஷண பைரவனே போற்றி
    83. ஓம் பூதங்களின் நாதனே போற்றி
    84. ஓம் பெரியவனே போற்றி
    85. ஓம் பைராகியர் நாதனே போற்றி

    86. ஓம் மல நாசகனே போற்றி
    87. ஓம் மகோதரனே போற்றி
    88. ஓம் மகா பைரவனே போற்றி
    89. ஓம் மலையாய் உயர்ந்தவனே போற்றி
    90. ஓம் மகா குண்டலனே போற்றி

    91. ஓம் மார்த்தாண்ட பைரவனே போற்றி
    92. ஓம் முக்கண்ணனே போற்றி
    93. ஓம் முக்தியருள்வோனே போற்றி
    94. ஓம் முனீஸ்வரனே போற்றி
    95. ஓம் மூலமூர்த்தியே போற்றி

    96. ஓம் யமவாதனை நீக்குபவனே போற்றி
    97. ஓம் யாவர்க்கும் எளியவனே போற்றி
    98. ஓம் ருத்ரனே போற்றி
    99. ஓம் ருத்ராட்சதாரியே போற்றி
    100. ஓம் வடுக பைரவனே போற்றி

    101. ஓம் வடுகூர் நாதனே போற்றி
    102. ஓம் வடகிழக்கு அருள்வோனே போற்றி
    103. ஓம் வடைமாலைப் பிரியனே போற்றி
    104. ஓம் வாரணாசி வேந்தே போற்றி
    105. ஓம் வாமனர்க்கு அருளியவனே போற்றி

    106. ஓம் விரும்பியதை அருள்வோனே போற்றி
    107. ஓம் விபீஷண பைரவனே போற்றி
    108. ஓம் வீழாமல் காப்பவனே போற்றி போற்றி!