Blog

  • Sangadangal theerkum sangadahara Homam

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு வருகிற 17.10.2019 வியாழக்கிழமை மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை சங்கடங்கள் தீருக்கும் சங்கடஹர கணபதி ஹோமமும், ஸ்ரீ விநாயக தன்வந்திரிக்கு பஞ்சதிரவிய அபிஷேகமும் நடைபெற உள்ளது.

    விநாயகரை வழிபடும் விசேஷ நாட்களில் மிகவும் சிறந்தது சங்கடஹர சதுர்த்தி நாள். சங்கட என்றால் துன்பம் ஹர என்றால் அழித்தல். துன்பங்களை அழிக்கும் விரதமே சங்கடஹர சதுர்த்தி. சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய இந்த சதுர்த்தி நாளில் விநாயக பெருமானை வழிபட்டால் வேண்டியது மட்டுமல்ல, நமக்குக் கிடைக்க வேண்டிய அத்தனை வரங்களும் நமக்கு கிடைத்து விடும். எல்லா காரியமும் தடையின்றி நடக்கும் என்று சொல்லப்படுகிறது. 

    இந்த விரதத்தால் தீராத நோய் தீரும். நிலையான இன்பம் கிட்டும். கல்வி அறிவு, புத்திக் கூர்மை, காரியங்களில் வெற்றி,  நீண்ட ஆயுள், நிலையான ஆரோக்கியம், நன்மக்கட்பேறு, பெருமைக்கு உரிய புகழ் என எல்லா நன்மைகளையும் அடைய முடியும், சனி தோஷங்கள் அகலும் என்று புராணங்கள் சொல்கின்றன.

    இத்தகைய சிறப்புகள் வாய்ந்த சங்கடஹர சதுர்த்தி நாளில் ஸ்ரீ விநாயக தன்வந்திரிக்கு சங்கடஹர கணபதி ஹோமத்துடன் பால், தயிர், மஞ்சள், சந்தனம், பன்னீர் போன்ற பஞ்ச திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று விசேஷ ஆராடனைகள் நடைபெற உள்ளது. பக்தர்கள் அனைவரும் இவ்வைபவங்களில் பங்கேற்று பயன் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    தொடர்புக்கு :
    ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
    அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை – 632 513.
    வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203

     

  • October 15 Rasi Palan

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – நற்செயல்
    ரிஷபம் – பக்தி
    மிதுனம் – ஓய்வு
    கடனம் – ஆர்வம்  
    சிம்மம் – நிம்மதி
    கன்னி –  பாராட்டு
    துலாம் –  வெற்றி 
    விருச்சிகம் – நலம்
    தனுசு –     நன்மை 
    மகரம் –  பகை 
    கும்பம் – லாபம் 
    மீனம் – வரம் 
    சந்திராஷ்டமம்    – சித்திரை,சுவாதி
     

  • October 15 Indraya Naal

    அக்டோபர் 15 – இன்றைய நாள்
    விகாரி வருடம் – புரட்டாசி 28
    15-அக்-2019 செவ்வாய்  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    3.00 – 4.30    
    குளிகை    :    12.00 – 1.30
    எமகண்டம்    :    9.00 – 10.30                          
    திதி    :    துவிதியை          
    திதி நேரம்    :    துவிதியை    அ.கா    5.40
    நட்சத்திரம்    :    அசுவினி    ம    1.23
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    சித்திரை,சுவாதி
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • Suba Horai 13/10/2019 – 20/10/2019)

    இங்கு கொடுக்கப்பட்டுள்ள சுபஹோரை.. நல்ல நேரம் சென்னையில் வசிக்கும் அன்பர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.சரியான ராகு காலம் ,எமகண்டம் (பகல் காலத்தில், இரவு காலத்தில் )போன்ற நேரங்கள் சென்னைக்கு கணித்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

    ஞாயிற்றுக்கிழமை உள்ள சுப ஓரையில் மருந்து உண்ண , பெரியோரை பேட்டி காண ,பிரயாணம் செய்ய ஆகிய சுப செயல்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் . திங்கட்கிழமை அன்று உள்ள சுப ஹோரையில் புது நகை வாங்கவும் புதிய ஆடை உடுத்தவும், புதிய கடை திறக்கவும் பயன்படுத்திக்கொள்ளலாம் .

    செவ்வாய்க்கிழமை அன்று உள்ள சுப ஓரையில் ஆப்பரேஷன் சிகிச்சை செய்ய ,ஆயுதம் செய்ய ,இயந்திரம் தயாரிக்க பயன்படுத்திக் கொள்ளலாம்.

     புதன் கிழமையில் வரும் சுப ஓரையில் கலை பயில, கணித ஆரம்பம் செய்ய ,பொன் உருக்க ,,வித்தியாரம்பம் செய்ய, நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.

     வியாழக்கிழமை வரும் சுப ஓரையில் பெரியோரை காண்பதற்கும், வாங்கிய கடன் தீர்ப்பதற்கும் ,புதிய வஸ்திரம் வாங்குவதற்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

     வெள்ளிக்கிழமையில் வரும்    சுப ஓரையில் புதிய தொழில் செய்வதற்கும், சுபமான செயல்களை பேசுவதற்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

     சனிக்கிழமை வரும்  சுப ஓரையில்ஆயுதம் பழகுவதற்கும், யாத்திரை செல்வதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.


    தொகுத்தவர் :  ஜோதிடர் பிரேம்குமார் . M.G.online astrologer. 

    போன் 8754 76 3832

  • Thiruverkadu Karumari amman

    சென்னையை அடுத்த திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் ஆலயத்தில் நிறைமணி வைபவ உற்சவவத்தை முன்னிட்டு  2 டன் காய், கனிகளால் அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார்.
     
    தமிழகத்தில் உலக பிரசித்தி பெற்ற ஆலயங்களில் திருவேற்காடு கருமாரியம்மன் ஆலயம் ஒன்று. இங்கு  ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பவுர்ணமியில் நிறைமனி உற்சவ வைபவம் நடைபெறும்.உலக ஜீவ ராசிகளின் பஞ்சத்தை போக்க அம்மன் தன் சரிரத்த்தில் அனைத்து விதமான காய்,கனி,தானியங்களை உற்பத்தி செய்து அனுக்கரித்தாக ஐதீகம். 

    இதனை எடுத்துரைக்கும் வகையில் ஒவ்வொரு புரட்டாசி மாதம் பவுர்ணமி  அன்றும் திருவேற்காடு கருமாரியம்மன் ஆலயத்தில் நிறைமனி உற்சவ வைபவம் நடைபெறும் அந்த வகையில் இன்று நடைபெற்ற நிறைமணி உற்சவவத்தில் அம்மன் 2 டன் காய்,கனி,தானியங்கள், இனிப்புகளால் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார்.

    முன்று நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்த்தில் கடைசி நாளில் இங்கு அலங்கரிக்கப்பட்ட பொருட்களை கொண்டு கூட்டாஞ்சோறு செய்து அம்மனுக்கு படைக்கப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்படும்.அம்மனின் நிறைமணி அலங்காரத்தை காண ஆலயத்திற்கு  பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.

  • Thirupathiyil Sarva dharshan cancel

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி மாதம் மற்றும்  வார விடுமுறையையோட்டி  பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து இருப்பதால் நாளை திங்கட்கிழமையும் சர்வ தரிசனம் மற்றும் திவ்ய தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி மாதம் மற்றும் விடுமுறையையொட்டி கடந்த இரண்டு நாட்களாக பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. சாதாரணமாக நாளொன்றுக்கு திருமலைக்கு 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பக்தர்கள் வருவது வழக்கம் ஆனால் புரட்டாசி மாதம் என்பதாலும் தொடர் விடுமுறை காரணத்தாலும் அதிக அளவில் பக்தர்கள் குவிந்துள்ளனர். திருமலைக்கு வரும் பக்தர்கள் தங்கும் விடுதிகளுக்காக 5 மணி நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. 

    அதே போல் தலை முடி காணிக்கை செலுத்த 3  மணி நேரம் வரிசையில் காத்திருக்கின்றனர். அதேபோல் இலவச தரிசனத்திற்காக 24 மணி நேரமும் ஆன்லைன் மூலம் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட பெற்ற பக்தர்கள் 5 மணி நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. தொடர்ந்து மழை மற்றும் குளிர் காற்று வீசி வரும் நிலையில் குழந்தைகள் மூத்த குடிமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். 

    தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் இருப்பதால் நாளை திங்கட்கிழமையும் மலைப்பாதையில் நடந்து வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் திவ்ய தரிசனம், ஆதார் அடையாள அட்டை மூலம் வழங்கப்படும் சர்வ தரிசன டிக்கெட் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சனிக்கிழமை ஒரே நாளில் ஒரு லட்சத்து 1371 பேர் சுவாமி தரிசனம் செய்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை 64 ஆயிரத்து 654 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இன்று எண்ணப்பட்ட உண்டியல் காணிக்கையில் ரூ 3.44 கோடி பக்தர்கள் செலுத்தி இருந்தனர்.

  • Ayya Vaikunda Dharmapathy Koil Car Fest

    சென்னையை  அடுத்து மணலி புதுநகரில் மும்மூர்த்திகளின் வடிவான அய்யா வைகுண்ட தர்மபதி கோயிலில் 10ம் நாள் உற்சவம் நிறைவு நாளான இன்று தேர் திருவிழா   வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் தேரை   வடம்பிடித்து தேர் இழுத்தனர். 

    மணலி புதுநகரில்  அய்யா கோவிலில் கடந்த 4 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய பிரமோற்சவதின்  கடைசி நாளான 10 ம்  நாள் உற்சவத்தில்   திருத்தேர் விழா  நடைபெற்றது தினம் ஒரு நிகழ்வாக  பத்து நாட்களும்  அய்யா வைகுண்ட தர்மபதி காளை வாகனம் ,அன்ன வாகனம்,  கருட வாகனம், மயில் வாகனம், அஞ்சநேயர், குதிரை வாகனம்,  உள்ளிட்ட  வாகனங்களில் அலங்கரிக்கப்பட்டு சாமி ஊர்வலமாக வீதி உலா நடைபெற்றது. 

    இதனையடுத்து கடைசி நாளான இன்று    36 டன் எடை  36 அடி உயரமுள்ள தேரில் அய்யா வைகுண்ட தர்மபதியை  வாசனை புஷ்பத்தினால் அலங்கரிக்கப்பட்டு  பக்தர்கள் புடைசூழ  மணலி புதுநகர் முழுவதும் வீதி உலா நடைபெற்றது. 

    இந்த பிரமாண்ட தேரை    சமத்துவ மக்கள் கழக  தலைவர் நாராயணன்  வடம் பிடித்து தொடங்கி வைத்தார் . இதனையடுத்து அய்யா உண்டு என்ற நாமத்தை பாடியபடி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர் 

    அய்யா கோவில் பிரமோற்வத்தின்  கடைசி   நாளான தேர் திருவிழாவை காண சென்னை புறநகர் பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் வாகனங்களில் வந்து  குவிந்ததால் மணலி புதுநகர் முழுவதுமே திருவிழா கோலம் பூண்டுள்ளது 

    அய்யா வைகுண்ட தர்மபதி  கோவில் அமைந்த இடங்களிலேயே மிகப்பெரிய தேர் இருக்கும் இடம் என்ற சிறப்பைபெற்ற மணலி புதுநகர் என்பதனால் தேர் திருவிழாவை காண வெளி மாவட்டங்களில் இருந்து நேற்று இரவே தங்கி   எராளமான பக்தர்கள் குவிந்ததால் பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.  
     

  • October 14 Rasi Palan

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – பிரயாணம் 
    ரிஷபம் – இன்பம்
    மிதுனம் – விவேகம் 
    கடனம் – ஜெயம் 
    சிம்மம் – பயம் 
    கன்னி –  சுகம்  
    துலாம் –  ஆதாரம் 
    விருச்சிகம் – குழப்பம் 
    தனுசு –     நஷ்டம் 
    மகரம் –  உற்சாகம் 
    கும்பம் – ஆர்வம் 
    மீனம் – ஜெயம்
    சந்திராஷ்டமம்    – அஸ்தம், சித்திரை
     

  • October 14 Indraya Naal Eppadi

    அக்டோபர் 14 – இன்றைய நல்ல நேரம்
    விகாரி வருடம் – புரட்டாசி 27
    14-அக்-2019 திங்கள்  
    நல்ல நேரம்    :    6.00 – 7.30    
    ராகு    :    7.30 – 9.00    
    குளிகை    :    1.30 – 3.00
    எமகண்டம்    :    10.30 – 12.00                          
    திதி    :    பிரதமை          
    திதி நேரம்    :    பிரதமை    அ.கா    4.39
    நட்சத்திரம்    :    ரேவதி    கா    11.32
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    அஸ்தம்,சித்திரை
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்

  • Homa Mahorchavam

    திருப்பதியில் உள்ள கபிலேஸ்வரா் கோயிலில் வரும் 29-ஆம் தேதி முதல் நவ. 26-ஆம் தேதி வரை ஹோம மகோற்சவம் நடைபெற உள்ளது. 

    திருப்பதியில் கபிலதீா்த்தக்கரையில் எழுந்தருளியுள்ள கபிலேஸ்வரா் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தை முன்னிட்டு, அந்த மாதம் முழுவதும் தேவஸ்தானம் ஹோம மகோற்சவ விழாவை நடத்தி வருகிறது. 

    அதன்படி, முதலில் அக்டோபர் 29 முதல் 31 தேதி வரை கணபதிஹோமம், நவ. 1, 2 தேதிகளில் ஸ்ரீசுப்ரமணிய சுவாமி ஹோமம், நவ. 2-இல் முருகன் திருக்கல்யாணம், 3-இல் நவ கிரஹ ஹோமங்கள், 4-இல் தட்சிணாமூா்த்தி ஹோமம், 5-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை காமாட்சி அம்மன் ஹோமம் (சண்டி யாகம்), 14-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை கபிலேஸ்வர சுவாமி ஹோமம் (ருத்ரயாகம்), 25-ஆம் தேதி காலபைரவா் ஹோமம், 26-இல் சண்டிகேஸ்வர சுவாமி ஹோமம் அதைத் தொடா்ந்து திரிசூல ஸ்நானம், பஞ்சமூா்த்திகள் திருவீதியுலா உள்ளிட்டவை நடைபெறஉள்ளன.

    இதில் கலந்து கொள்ள விரும்பும் பக்தா்கள் ரூ. 500 செலுத்தி (இருவா்) ஒரு நாள் ஹோமத்தில் கலந்து கொள்ளலாம். அவா்களுக்கு ஒரு உத்திரியம், ஒரு ரவிக்கை துணி, அன்ன பிரசாதம் உள்ளிட்டவை வழங்கப்படும். ஹோமத்தில் கலந்து கொள்ள வரும் பக்தா்கள் கட்டாயம் சம்பிரதாய உடைகளை அணிய வேண்டும். இந்த ஹோமங்கள் நடைபெறும் நாள்களில் கோயில் வளாகத்தில் இந்து தா்ம பிரசார பரிஷத் சாா்பில், ஹரிகதா காலட்சேபம், பஜனைகள், பக்திப் பாடல்கள் உள்ளிட்ட ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெறஉள்ளன.