இன்றைய ராசி பலன்
மேஷம் – கவனம்
ரிஷபம் – ஆர்வம்
மிதுனம் – நன்மை
கடனம் – வெற்றி
சிம்மம் – பக்தி
கன்னி – முயற்சி
துலாம் – ஜெயம்
விருச்சிகம் – பரிவு
தனுசு – நிறைவு
மகரம் – ஆக்கம்
கும்பம் – யோகம்
மீனம் – மகிழ்ச்சி
சந்திராஷ்டமம் – கேட்டை, மூலம்
Blog
-
October 19 Rasi Palan
-
October 19 Indraya Naal Eppadi
அக்டோபர் 19 – இன்றைய நாள் எப்படி?
விகாரி வருடம் – ஐப்பசி 2
19-அக்-2019 சனி
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 9.00 – 10.30
குளிகை : 6.00 – 7.30
எமகண்டம் : 1.30 – 3.00
திதி : சஷ்டி
திதி நேரம் : சஷ்டி அ.கா 4.43
நட்சத்திரம் : மிருகசீரிடம் மா 4.07
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : கேட்டை, மூலம்
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
-
Aipasi month Viseshangal
ஐப்பசி 1, அக்டோபர் 18, வெள்ளி – துலா ஸ்நானம் ஆரம்பம்
ஐப்பசி 2, அக்டோபர் 19, சனி – கிருஷ்ணபட்ச சஷ்டி
ஐப்பசி 3,அக்டோபர் 20, ஞாயிறு- கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நதி எதிரில் ஸ்ரீஹனுமாருக்குத் திருமஞ்சன சேவை.
ஐப்பசி 4, அக்டோபர் 21, திங்கள் – பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு
ஐப்பசி 5 ,அக்டோபர் 22, செவ்வாய் – சோளிங்கபுரம் ஸ்ரீ அமிர்தவல்லித் தாயார் பக்தோதிசிகப் பெருமாள் திருக்கல்யாண வைபவம்.
ஐப்பசி 6 ,அக்டோபர் 23, புதன் – திருநெல்வேலி ஸ்ரீகாந்திமதியம்மன் ரதோற்ஸவம்.
ஐப்பசி 7, அக்டோபர் 24, வியாழன் – கிருஷ்ணபட்ச ஸர்வ ஏகாதசி.
ஐப்பசி 8, அக்டோபர் 25, வெள்ளி – கிருஷ்ணபட்ச மஹா பிரதோஷம்.
ஐப்பசி 9 , அக்டோபர் 26, சனி – மாஸ சிவராத்ரி, திதித்வயம், (நட்சத்திர) அமாவாசை.
ஐப்பசி 10, அக்டோபர் 27, ஞாயிறு – ஸர்வ அமாவாசை. தீபாவளி நோன்பு கேதார கௌரீ விரதம்.
ஐப்பசி 11, அக்டோபர் 28, திங்கள் – கந்த சஷ்டி ஆரம்பம்.
ஐப்பசி 12, அக்டோபர் 29, செவ்வாய் – கார்த்திக சுத்தப்ரதமை
ஐப்பசி 13, அக்டோபர் 30, புதன் – பூண்டி மகான் ஆற்று சுவாமிகள் குருபூஜை.
ஐப்பசி 14, அக்டோபர் 31, வியாழன் – சுக்லபட்ச சதுர்த்தி. நாகசதுர்த்தி.
ஐப்பசி 15, நவம்பர் 01, வெள்ளி – ஐயடிகள் காடவர்கோன்.
ஐப்பசி 16, நவம்பர் 02, சனி – சுக்லபட்ச சஷ்டி, திருச்செந்தூர் கந்த சஷ்டி சூரஸம்ஹாரம்.
ஐப்பசி 17, நவம்பர் 03, ஞாயிறு – திருச்செந்தூர் தெய்வானை திருக்கல்யாணம்.
ஐப்பசி 18, நவம்பர் 04, திங்கள்- ச்ரவண விரதம். பொய்கையாழ்வார், சிரவண விரதம்.
ஐப்பசி 19, நவம்பர் 05, செவ்வாய் – பூதத்தாழ்வார், கோஷ்டாஷ்டமி.
ஐப்பசி 20, நவம்பர் 06, புதன் – பேயாழ்வார். திருகோஷ்டியூர் ஸ்ரீசௌமிய நாராயணப் பெருமாள் ஊஞ்சல் உற்சவம் சேவை.
ஐப்பசி 21, நவம்பர் 07, வியாழன் – மாயவரம் மயூரநாதர் கடைமுக உற்சவ ஆரம்பம்.
ஐப்பசி 22, நவம்பர் 08, வெள்ளி – சுக்லபட்ச சர்வ உத்தான ஏகாதசி.
ஐப்பசி 23, நவம்பர் 09, சனி- சுக்லபட்ச மஹாபிரதோஷம். சாதுர்மாஸ்ய விரத பூர்த்தி. சனிப் பிரதோஷம்.
ஐப்பசி 24, நவம்பர் 10, ஞாயிறு – திருகோஷ்டியூர் ஸ்ரீசௌமிய நாராயணப்பெருமாள் ஊஞ்சல் உற்சவ சேவை.
ஐப்பசி 25, நவம்பர் 11, திங்கள் – பௌர்ணமி, அன்னாபிஷேகம்.
ஐப்பசி 26, நவம்பர் 12, செவ்வாய் – நெடுமாறானார். கார்த்திககௌரி விரதம்
ஐப்பசி 27, நவம்பர் 13, புதன் – கார்த்திகை பஹூள பிரதமை, (இடங்கழியார்). கிருத்திகை விரதம்.
ஐப்பசி 28, நவம்பர்14, வியாழன் – திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீராமர் மூலவருக்குத் திருமஞ்சன சேவை.
ஐப்பசி 29, நவம்பர் 15, வெள்ளி – திருவஹிந்திரபுரம் ஸ்ரீசுவாமி தேசிகர் டோலோற்சவம். சங்கடஹரசதுர்த்தி.
ஐப்பசி 30, நவம்பர் 16, சனி – சதுர்த்தி விரதம். கடைமுகம் தீர்த்தம்.
-
Thiruchendur soorasamhara preparations
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி திருவிழா வருகின்ற 28 ஆம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 3 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நவம்பர் 2ஆம் தேதி நடைபெறுகிறது.
தமிழகம் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும் இந்த திருவிழாவின் பக்தர்களுக்காக அடிப்படை வசதிகள் செய்யும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது இது பற்றி கோவில் செயல் அலுவலர் அம்ரித் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.
கந்த சஷ்டி திருவிழாவின் போது விரதமிருந்து பக்தர்களுக்கு 9 இடங்களில் தற்காலிக கொட்டைகள் அமைக்கப்படுகிறது. தற்போது 5 இடங்களில் கொட்டைகள் அமைக்கும் பணிகள் மும்மரமாக நடைபெற்றுவருகிறது.
இதில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் கழிப்பிடம் வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது என தெரிவித்தார், மேலும் கோவிலில் உள்ள 7 விடுதிகளிலும் பாராமரிப்பு பணிகள் முழு விச்சில் நடைபெறுவதாகவும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து அவர் கூறியதாவது..
பக்தர்களின் கோரிக்கை ஏற்று சூரசம்ஹாரம் நடைபெற்ற பின்பு ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கூடுதலாக கார் பார்கிங் வசதி அமைத்து சூரசம்ஹாரம் நடைபெற்ற பின்பு வாகனங்கள் தனியே செல்வதற்கு தனி வழிகள் ஏற்படுத்துவதாக தெரிவித்தார்.
மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் சுகாதார பணியில் தற்போது 350 தற்காலிக பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர் திருவிழாவின் போது கூடுதலாக 100 பணியாளர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள் என தெரிவித்தார். மேலும் கந்த சஷ்டி திருவிழாவின் போது பக்தர்களுக்குகான குடிநீர், கழிப்பிடம் போன்ற வசதிகள் மிகவும் சிறப்பாக செய்யப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.
-
aippasi month muhurtha natkal
ஐப்பசி 7 – 24-அக்-2019 – வியாழன்கிழமை – ஏகாதசிதிதி – மகம் நட்சத்திரம்
ஐப்பசி 13 – 30-அக்-2019 – புதன்கிழமை – திரிதியைதிதி – அனுஷம் நட்சத்திரம்
ஐப்பசி 15 – 01-நவ-2019 – வெள்ளிகிழமை – பஞ்சமிதிதி – மூலம் நட்சத்திரம்
ஐப்பசி 17 – 03-நவ-2019 – ஞாயிறுகிழமை – சப்தமிதிதி – உத்திராடம் நட்சத்திரம்
ஐப்பசி 24 – 10-நவ-2019 – ஞாயிறுகிழமை – திரையோதசி – ரேவதி நட்சத்திரம்
ஐப்பசி 29 – 15-நவ-2019 – வெள்ளி கிழமை – திரிதியை – மிருகசீரிடம் நட்சத்திரம் -
October 18 Rasi Palan
இன்றைய ராசி பலன்கள்
மேஷம் – யோகம்
ரிஷபம் – சாந்தம்
மிதுனம் – உயர்வு
கடனம் – நற்சொல்
சிம்மம் – இன்பம்
கன்னி – உழைப்பு
துலாம் – சாதனை
விருச்சிகம் – முயற்சி
தனுசு – சுகம்
மகரம் – சுபம்
கும்பம் – விருத்தி
மீனம் – உற்சாகம்
சந்திராஷ்டமம் – அனுஷம், கேட்டை
-
October 18 Aipassi 1
அக்டோபர் 18 – ஐப்பசி 1
விகாரி வருடம் – ஐப்பசி 1
18-அக்-2019 வெள்ளி
நல்ல நேரம் : 9.00 – 10.30
ராகு : 10.30 – 12.00
குளிகை : 7.30 -9.00
எமகண்டம் : 3.00 – 4.30
திதி : பஞ்சமி
திதி நேரம் : சதுர்த்தி கா 6.04
நட்சத்திரம் : ரோகிணி மா 4.06
யோகம் : மரண-சித்த யோகம்
சந்திராஷ்டமம் : அனுஷம்,கேட்டை
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
-
Thiruparankundram Kandhasasti
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா வருகிற 28-ந் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்க உள்ளது.
நவம்பர் மாதம் மூன்றாம் தேதி வரை 7 நாட்களுக்கு இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
அக்டோபர் 28 ஆம் தேதி காலை 9.30 மணி அளவில் கோவிலுக்குள் உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் எழுந்தருளும் சுப்பிரமணியசாமிக்கும், சண்முகர் சன்னதியில் எழுந்தருளும் தெய்வானை மற்றும் வள்ளி சமேத சண்முகப்பெருமானுக்கும் காப்புக்கட்டுதல் நடக்கிறது.விழாவையொட்டி கோவிலுக்குள் தினமும் காலை 11 மணி அளவிலும், மாலை 5 மணி அளவிலும் சண்முகார்ச்சனை நடைபெறும். இதேபோல் தினமும் இரவு 7 மணி அளவில் உற்சவர் சன்னதியில் இருந்து தெய்வானையுடன் முருகப்பெருமான் புறப்பட்டு திருவாட்சி மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக அடுத்த மாதம் 1-ந்தேதி இரவு 7 மணி அளவில் கோவிலுக்குள் ஆலய பணியாளர் திருக்கண்ணில் வேல் வாங்குதல் நிகழ்ச்சியும், மறுநாள் 2-ந்தேதி மாலை 5.30 மணி அளவில் சன்னதி தெருவில் சொக்கநாதர் கோவில் முன்பு சூரசம்கார லீலையும் நடைபெறும்.
-
Indra Egasasi Viradham
மாதந்தோறும் வரும் ஏகாதசி நாள் சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகின்றன. ஆனால், ஐப்பசி மாதத்தில் வரும் ஏகாதசிகள் சிறப்பு வாய்ந்தவை. ஐப்பசி தேய்பிறையில் வரும் ஏகாதசியை ‘இந்திர ஏகாதசி’ என்று அழைக்கிறார்கள்.
ஐப்பசி மாத ஏகாதசி தோன்றிய கதை…
இந்த ஏகாதசியை நாரதர் வெளிப்படுத்தினார். மாஹிஷ்மதி என்ற நகரை இந்திரசேனன் என்ற மன்னன் நல்ல முறையில் ஆட்சி செய்து வந்தான். ஒரு நாள் அவனுடைய அரசவைக்கு நாரத முனிவர் வந்தார். மாமுனியைப் பார்த்ததும், இந்திரசேனன் மிகுந்த மரியாதையுடன் அவரை வரவேற்று உயர்ந்த ஒரு ஆசனத்தில் அமரச் செய்தான்.பின்னர் நாரதர் வருகையின் நோக்கத்தை மன்னன் கேட்டான். அப்போது நாரதர், ‘மன்னா! நான் இப்போது எமலோகத்தில் இருந்து வருகிறேன். அங்கு உன் தந்தை நரகத்தில் கடுந்துயரை அனுபவித்து வருகிறார். அவர், ‘என் மகனிடம் சொல்லி, இந்திர ஏகாதசி விரதத்தைச் செய்யச் சொல்லுங்கள். அவன் பூலோகத்தில் இந்த விரதத்தைக் கடைபிடித்தால், நான் இங்கு நரகத்தில் இருந்து விடுதலை பெறுவேன். என்னை கரையேற்றும்படி என் பிள்ளையிடம் சொல்லுங்கள்’ என்று என்னிடம் சொல்லி அனுப்பினார். அதைச் சொல்வதற்காகவே தற்போது நான் வந்தேன்’ என்று கூறினார்.
தன் தந்தை நரகத்தில் படும் துயரைக் கேட்டு இந்திரசேனன் மனம் வருந்தினான். இருப்பினும் தந்தை விடுதலைப் பெறுவதற்கு ஒரு வழி இருக்கிறது என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தான். இந்திர ஏகாதசியை கடைபிடிக்கும் வழிமுறையையும் நாரதரிடம் கேட்டறிந்தான். அவர் கூறியபடியே விரதத்தை செய்து முடித்தான். அதன் பலனாக இந்திரசேனனின் தந்தை நரகத்தில் இருந்து விடுதலை ஆகி, சொர்க்கத்தை சென்றடைந்தார்.
பல குடும்பங்களில் வசதி இருந்தும் நிம்மதி இருக்காது. இதற்கு பித்ருக்களின் சாபமே காரணம். அப்படிப்பட்டவர்கள் இந்திர ஏகாதசி விரதத்தை கடைபிடித்தால், நரகத்தில் இடர்படும் நமது முன்னோர்களும் விடுதலையாகி நலம் பெறுவார்கள்; நாமும் நலம் அடையலாம்.