Blog

  • September 07 2023 Indrayanaal

    செப்டம்பர் 7 – இன்றைய நல்லநேரம்…
    சோபகிருது வருடம் – ஆவணி 21
    07-செப்-2023 வியாழன்
    நல்ல நேரம் : 10.30 – 12.00
    ராகு : 1.30 – 3.00
    குளிகை : 9.00 – 10.30
    எமகண்டம் : 6.00 – 7.30
    திதி : அஷ்டமி
    திதி நேரம் : அஷ்டமி மா 6.14
    நட்சத்திரம் : ரோகிணி ம 3.59
    யோகம் : மரணயோகம்
    சந்திராஷ்டமம் : சுவாதி,விசாகம்
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்

     

  • Thirupathy 2 crores golden flower

    திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரூ. 2  கோடி மதிப்புள்ள 108 தங்க தாமரை நன்கொடையாக வழங்கிய பக்தர்.

    ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த டாக்டர் ராஜீவ் ரெட்டி ரூ. 2  கோடி மதிப்புள்ள தங்க தாமரை மலர்களை காணிக்கையாக வழங்கினார். ஏழுமலையானுக்கு ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் அஷ்டதள பாத பத்ம ஆரதனை சேவைக்காக 108 தங்க தாமரை மலர்களை  லலிதா ஜூவல்லர்ஸில் பிரத்யேகமாக வேலைபாடுகளுடன் தயாரிக்கப்பட்டன.

    இந்த தங்க தாமரை மலர்களை நன்கொடையாளர் ராஜீவ் ரெட்டி   லலிதா ஜுவல்லரி நிறுவன தலைவர் கிரண் குமாருடன் இணைந்து  ஏழுமலையான்  கோயிலிலுக்கு  வி.ஐ.பி. தரிசனத்தில் சென்று வழிப்பாடு செய்தனர். பின்னர்  அர்ச்சகர்களால் தங்க தாமரை மலர்கள்  சுவாமியின் பாதத்தில் வைக்கப்பட்டு ஆசி பெற்ற பின்னர் கோயிலில் உள்ள ரங்கநாதர்  மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகளிடம் வழங்கினர்.

  • Krishnar chutties

    தென்காசி  காசி விசுவநாதர் கோயில் முன்பு நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருஷ்ணர் ராதை வேடமிட்டு கலந்து கொண்டனர்.

    தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கிருஷ்ண ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டத்தில் தென்காசி காசி விசுவநாதர் கோயில் முன்பு கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருஷ்ணர் ராதை சிவன் முருகன் உள்ளிட்ட பல்வேறு வேடங்கள் அணிந்து வந்தனர்.

    பெரிய கோயில் முன்பிருந்து பேரணியாக சென்றனர் கோயில் முன்பு தொடங்கிய இந்த பேரணி ரத வீதியை சுற்றி மீண்டும் கோயில் முன்பு நிறைவு பெற்றது இதில் குழந்தைகள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

  • Drupathiamman car fesival

    தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம், வேப்பம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ திரௌபதியம்மன் 6-ஆம் ஆண்டு திருத்தேர் விழா  வெகு விமர்சையாக நடைபெற்றது. வேப்பம்பட்டியில் அருள்பாலிக்கும் தர்மபத்தினி குருச்சேத்திரப் காபலி  ஸ்ரீ திரௌபதியம்மன் தேர்த்திருவிழா கடந்த எட்டாம் தேதி தொடங்கி வருகின்ற எட்டாம் தேதி வரை நடைபெறுகிறது. தேர் திருவிழாவை முன்னிட்டு மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டார் ஒன்று கூடி ஸ்ரீ திரௌபதியம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது.

    இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு மாவிளக்கு எடுத்தல் கூழ் ஊற்றுதல் கரகாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பிறகு ஸ்ரீ திரௌபதியம்மன் திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

    தேரோட்ட நிகழ்வில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை வணங்கி வழிபட்டனர். திரௌபதி அம்மனின் தேர்த்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பெண்கள் ஆண்கள் என கலந்து கொண்டதால் தேர் திருவிழா கலை கட்டியது.

  • September 06 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம் –  தாமதம்
    ரிஷபம் –    களிப்பு  
    மிதுனம் –   நட்பு  
    கடகம் –    பயம்
    சிம்மம் –   சிக்கல்
    கன்னி –    சுகவீனம்
    துலாம் –     வரவு
    விருச்சிகம் – சுகம்
    தனுசு –     திறமை
    மகரம் –    கவலை
    கும்பம் –     வெற்றி  
    மீனம் –      எதிர்ப்பு  
    சந்திராஷ்டமம்    – சித்திரை, சுவாதி

     

  • September 06 2023 Krishna Jayanthi

    செப்டம்பர் 6 – கிருஷ்ண ஜெயந்தி
    சோபகிருது வருடம் – ஆவணி 20
    06-செப்-2023 புதன்
    கிருஷ்ண ஜெயந்தி,
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 12.00 – 1.30
    குளிகை : 10.30 – 12.00
    எமகண்டம் : 7.30 – 9.00
    திதி : சப்தமி
    திதி நேரம் : சப்தமி இ 9.13
    நட்சத்திரம்: கார்த்திகை ம 3.24
    யோகம் : அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : சித்திரை,சுவாதி
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

  • Krishnar butter

    கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி தினத்தில் கண்ணனுக்கு படைப்பதற்கு நாம் முறுக்கு, சீடை, வெண்ணெய் என்று நிவேதனம் செய்வோம். கண்ணனுக்கு ஏன் வெண்ணைய் நிவேதனம் செய்யப்படுகிறது தெரியுமா? மக்கள் ஸ்ரீகிருஷ்ணனுக்கு வெண்ணெய் மிகவும் பிடித்தமானது என்று நினைத்து அதனை நிவேதனமாக செய்கின்றனர். உண்மை என்னவென்றால் கொடுங்கோல் மன்னனான கம்சன் மக்களுக்கு அதிக வரி விதித்தான். இந்த வரியை கட்ட முடியாமல் தவித்த மக்கள் தங்கள் வீட்டில் உள்ள நெய், வெண்ணெய் விற்று வரி கட்டினார்கள்.

    கம்சனை கண்ணன் கொன்ற பிறகு அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் விதமாக அந்த ஊரைச் சேர்ந்த மக்கள் அவர்களிடம் இருந்த வெண்ணெய் அனைத்தையும் கண்ணனுக்கு பரிசாக அளித்தனர். கிருஷ்ணருக்கு வெண்ணெய் படைப்பதற்கு மற்றொரு காரணமும் உண்டு. கண்ணன் ராஜா வீட்டுப் பிள்ளை என்பதால் அவரது தாயார் தினமும் கண்ணனுக்கு வெண்ணெய் ஊட்டி ஊட்டி வளர்த்தார். அதனால் வெண்ணையின் ருசி மிகவும் பிடித்துப்போக தன் வீடு மட்டுமல்லாமல் பலர் வீடுகளில் இருக்கும் வெண்ணெயை திருடி நண்பர்களுடன் மகிழ்ச்சியாக உண்டான் கண்ணன்.

    சில சமயங்களில் உரிய அடித்தும், பானையை உடைத்து தயிர் வெண்ணெய் என எதையும் விட்டு வைக்காமல் உண்டார். இருந்தாலும் கண்ணனின் அழகில் மயங்கிய கோகுல வாசிகள் அவரை அடிக்க மனமில்லாமல், திட்டவும் மனமில்லாமல் தவிர்த்தனர். இந்நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து கோகுலாஷ்டமி அடுத்த நாள் தயிர் நிறைந்த பானையைத் தொங்கவிட்டு உடைப்பது பல மாநிலங்களில் வழக்கமாக உள்ளது. இதனால்தான் கோகுலாஷ்டமி அன்று கண்ணனுக்கு பிடித்தமான வெண்ணையை வைத்து வழிபாடு செய்கின்றனர்.

  • Krishnar slogam

    ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரத்தன்று கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு செப்டம்பர் 6 ஆம் தேதி வரும் திதியானது கோகுலாஷ்டமி என்று போற்றப்படுகிறது. அத்தகைய சிறப்புமிக்க இத்திருநாளில் கிருஷ்ணருக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து கிருஷ்ண பரமாத்மாவை வழிபட்டால் சகல நன்மைகளும் கிடைக்கப்பெறும்.

    ஸமஸ்த கோபநதனம் ஹ்ருதம்புஜைகமோஹனம்
    நமாமி குஞ்ஜமத்யகம் ப்ரஸன்ன பானுசோபனம்
    நிகாமகாம தாயகம் த்ருகந்தசாருஸாயகம்
    ரஸாலவேணுகாயகம் நமாமி குஞ்ஜநாயகம்
    ஆதிசங்கரரின் க்ருஷ்ணாஷ்டகம்

    எல்லா மக்களுக்கும் ஆனந்தத்தை அளிப்பவரே, கிருஷ்ணா நமஸ்காரம். தாமரை போன்ற இதயத்தில் மோகத்தை உண்டாக்குப வரே, சூரியனைப் போல பிரகாசிப்பவரே, பக்தர்கள் விரும்பியதை உடனே அளிப்பவரே, கடைக்கண்ணால் எங்களைக் கடைத்தேற்று பவரே, இனிமை யாக வேணுகானம் செய்பவரே, கிருஷ்ணா நமஸ்காரம்.

  • September 05 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம் –  வரவு
    ரிஷபம் –    தாமதம்
    மிதுனம் –   அச்சம்   
    கடகம் –    பயம்
    சிம்மம் –   செலவு
    கன்னி –    சுகம்
    துலாம் –     நன்மை
    விருச்சிகம் – எதிர்ப்பு  
    தனுசு –     அன்பு
    மகரம் –    லாபம்
    கும்பம் –     கவலை
    மீனம் –      சுகவீனம்
    சந்திராஷ்டமம்    – அஸ்தம், சித்திரை

  • September 05 2023 Karthigai

    செப்டம்பர் 5 – கார்த்திகை
    சோபகிருது வருடம் – ஆவணி 19
    கார்த்திகை
    05-செப்-2023 செவ்வாய்
    ஆசிரியர் தினம்
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 3.00 – 4.30
    குளிகை : 12.00 – 1.30
    எமகண்டம் : 9.00 – 10.30
    திதி : சஷ்டி
    திதி நேரம் : சஷ்டி இ 9.41
    நட்சத்திரம்: பரணி ம 3.20
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : அஸ்தம்,சித்திரை
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்