இன்றைய ராசிபலன்
மேஷம் – சுகம்
ரிஷபம் – லாபம்
மிதுனம் – நட்பு
கடகம் – பிரீதி
சிம்மம் – அன்பு
கன்னி – ஆசை
துலாம் – திடம்
விருச்சிகம் – புகழ்
தனுசு – நலம்
மகரம் – அமைதி
கும்பம் – உயர்வு
மீனம் – நற்சொல்
சந்திராஷ்டமம் – பூராடம், உத்திராடம்
Blog
-
September 12 2023 Rasipalan
-
September 12 2023 Pradhosham
செப்டம்பர் 12 – பிரதோஷம்
சோபகிருது வருடம் – ஆவணி 26
பிரதோஷம்
12-செப்-2023 செவ்வாய்
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 3.00 – 4.30
குளிகை : 12.00 – 1.30
எமகண்டம் : 9.00 – 10.30
திதி : திரையோதசி
திதி நேரம் : திரையோதசி அ.கா 4.1
நட்சத்திரம் : ஆயில்யம் ந.இ 1.27
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : பூராடம்,உத்திராடம்
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால் -
thiruchendur festival 8th day
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஆவணி திருவிழா 8-ம் திருநாளான இன்று சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்பாலித்தார்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறக்கூடிய முக்கிய விழாக்களில் ஒன்றான ஆவணி திருவிழா கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறக்கூடிய திருவிழாவில் 8-ம் நாள் திருவிழாவான இன்று பச்சை சாத்தி நடைபெற்றது.
இதனை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாரதனையும், ஆறு மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. பச்சை சாத்தியை முன்னிட்டு சுவாமி சண்முகர் வள்ளி, தெய்வானை அம்பாளுக்கு பால், தயிர், சந்தணம்,
தேன் மற்றும் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட , 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அலங்கார தீபாரனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பச்சைக் கடைசல் சப்பரத்தில் சுவாமி சண்முகர் வள்ளி தெய்வானை அம்பாளுடன் பச்சை சாத்திக் கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருட் பாலித்தார்.
அப்போது பக்தர்கள் பச்சை வண்ண மரிக்கொலுந்து மலர்களை தூவி அரோகரா பக்தி கோசங்கள் முழங்க சுவாமியை தரிசனம் செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட சுவாமி தரிசனம் செய்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 13-ம் தேதி நடைபெறுகிறது.
-
Garuda bagavan statue kumbabishegam
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மேப்புலியூர் கிராமத்தில் 21 அடி உயர கருட பகவான் சிலைக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது இதில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோஷம் முழங்க சாமி தரிசனம் செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மேப்புலியூர் கிராமத்தில் ஸ்ரீதேவி ஸ்ரீ பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது இந்த கோவிலில் பரிவார மூர்த்திகளாகவும் பெரிய திருவடியாகவும் விளங்கும் கருட பகவானுக்கு 21 அடி உயரம் உள்ள விஸ்வரூப கருட பகவான் தும்பிகை ஆழ்வார் மற்றும் நவக்கிரகங்கள் மிகவும் சிறப்பாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இதன் மகா கும்பாபிஷேகம் இன்றுகாலை நடைபெற்றது. இதையொட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை பகவத் அணுக்கரை, ஆச்சார்ய வர்ணம், அங்குரார்பணம், அக்னி பூஜை, வாஸ்து சாந்தி, திருமஞ்சனம் செய்யப்பட்டு முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்ற பின்பு தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது நேற்று இரவு இரண்டாம் கால யாகசாலை பூஜையும் இன்று அதிகாலை மூன்றாம் கால யாக பூஜை நடைபெற்றது தொடர்ந்து பெருமாள் ஸ்ரீதேவி பூதேவிக்கு சம்ரோஷணம், பிரம்மபூஜையும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்ட பின்பு புதிதாக கட்டப்பட்ட 21 அடி உயர விஸ்வரூப கருட பகவானுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் உளுந்தூர்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோஷம் முழங்க சாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து வேத திவ்ய பிரபந்த சாற்றுமுறை தீர்த்த பிரசாத விநியோகங்கள் மற்றும் அன்னதானமும் வழங்கப்பட்டது.v
-
September 11 2023 Rasipalan
இன்றைய ராசிபலன்
மேஷம் – அலைச்சல்
ரிஷபம் – நட்பு
மிதுனம் – சுகம்
கடகம் – உயர்வு
சிம்மம் – அமைதி
கன்னி – நலம்
துலாம் – திடம்
விருச்சிகம் – பிரீதி
தனுசு – ஆசை
மகரம் – எதிர்ப்பு
கும்பம் – வரவு
மீனம் – லாபம்
சந்திராஷ்டமம் – மூலம், பூராடம் -
September 11 2023 Subamuhurthanaal
செப்டம்பர் 11- சுபமுகூர்த்த நாள்
சோபகிருது வருடம் – ஆவணி 25
11-செப்-2023 திங்கள்
பாரதியார் நினைவு நாள்
சுபமுகூர்த்த நாள்(காலை 6.00 – 7.30)
நல்ல நேரம் : 6.00 – 7.30
ராகு : 7.30 – 9.00
குளிகை : 1.30 – 3.00
எமகண்டம் : 10.30 – 12.00
திதி : துவாதசி
திதி நேரம் : துவாதசி ந.இ 2.1
நட்சத்திரம்: பூசம் இ 10.56
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : மூலம்,பூராடம்
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர் -
maha shakthi mariamman koil festival
கிருஷ்ணகிரியில் உள்ள கிட்டம்பட்டியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மஹாசக்தி மாரியம்மன் மற்றும் குண்டி மாரியம்மன் திருக்கோவிலின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது.. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கிருஷ்ணகிரி வட்டம், கிட்டம்பட்டியில் ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன் மற்றும் குண்டு மாரியம்மன் கோவில் உள்ளது. பழமையான இந்த கோவில் தற்போது புனரமைக்கப்பட்டு ஜீர்ணோதாரன அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.
இன்று காலை அம்மன் மூல மந்திர ஜெப ஹோமத்துடன் துவங்கிய விழா, 108 மூலிகை யாகம், தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன், ஸ்ரீ மஹாசக்தி மாரியம்மனுக்கு 108 மூலிகை நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவில் கிட்டம்பட்டி, அவதானப்பட்டி, அகசிப்பள்ளி, மோட்டூர், கனகமுட்லு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 2,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மாரியம்மன் க்கு சிறப்பு பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்தனர்.
-
Karur mariamman koil kumbabishegam
கரூர் தீர்த்த மாரியம்மன் ஆலயத்தில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்ச்சையாக நடைபெற்றது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சின்னாண்டாங் கோவில் பகுதியில் தீர்த்த மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலை புனரமைத்து கும்பாபிஷேக விழா செய்வது என்று பொதுமக்கள் விழா கமிட்டியினர் முடிவு எடுத்து புணரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
தற்போது புனரமைப்பு பணிகள் நிறைவடைந்ததை அடுத்து கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்ச்சையாக நடைபெற்றது. முன்னதாக காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டது. புனித நீர் அடங்கிய கும்பத்தினை சிவாச்சாரியார்கள் யாக சாலையில் வைத்து மகா கணபதி பூஜை, விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜை, ரக்க்ஷா பந்தனம், திரவ்யாஹூதி பூர்ணாஹூதி, மகா தீபாரதனை உள்ளிட்ட 2 கால யாகவேள்வி பூஜைகளை நடைபெற்றது.
இன்று காலை 2ம் கால யாக வேள்வி பூஜை நிறை வடைந்ததும் சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கும்பத்தினை மேளதாளங்கள் முழங்க கோவிலைச் சுற்றி ஊர்வலமாக கொண்டு வந்தனர். கோபுர கலசத்தை வந்தடைந்த உடன் வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் புனித நீரை கலசத்திற்கு ஊற்றினர்.
கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்னர் செல்வ விநாயகர் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. இதில் கரூர் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் விழா கமிட்டியினர் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது.
-
September 10 2023 Rasipalan
இன்றைய ராசிபலன்
மேஷம் – தீரம்
ரிஷபம் – பக்தி
மிதுனம் – எதிர்ப்பு
கடகம் – பிரீதி
சிம்மம் – சுகம்
கன்னி – முயற்சி
துலாம் – வரவு
விருச்சிகம் – உயர்வு
தனுசு – நட்பு
மகரம் – லாபம்
கும்பம் – நலம்
மீனம் – அன்பு
சந்திராஷ்டமம் – கேட்டை, மூலம் -
September 10 2023 Subamuhurthanaal
செப்டம்பர் 10 – சுபமுகூர்த்த நாள்
சோபகிருது வருடம் – ஆவணி 24
10-செப்-2023 ஞாயிறு
சுபமுகூர்த்த நாள்(காலை 7.31 – 9.00)
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 4.30 – 6.00
குளிகை : 3.00 – 4.30
எமகண்டம் : 12.00 – 1.30
திதி : ஏகாதசி
திதி நேரம் : ஏகாதசி ந.இ 12.12
நட்சத்திரம் : புனர்பூசம் இ 8.35
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : கேட்டை,மூலம்
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்